வாகுவலியின் தவநிலைமை
கழலணிந் திலங்கு பாதங் கலந்தன கருங்கட் புற்றத் தழலணிந் தெழுந்த வைவா யருமணி யாடு நாகம் பொழிலணிந் தெழுந்த வல்லி புதைந்தன பூமி நாதன் குழலணிந் தெழுந்த குஞ்சி குடைந்தன குருவிக் கூட்டம் | 549 |
அருமுடி யரசர் தாழ்ந்த வடிமிசை யரவ மூரக் கருவடி நெடுங்க ணல்லார் கலந்த தோள் வல்லி புல்ல மருவுடை யுலகம் பாடல் வனத்திடைப் பறவை பாடத் திருவுடை யடிக ணிண்ற திறமிது தெரிய லாமோ | 550 |
வெண்டவாங் குவளைக் கண்ணி மன்னர்தம் மகுட கோடி விண்டவாம் பிணைய லுக்க விரி மதுத் துவலை மாரி உண்டவான் கழல்கள் சூழ்ந்த திருவடி யரவ மூரக் கண்டவா றிங்க ணார்க்குங் கருதுவ தரிது கண்டாய் | 551 |
அடுக்கிய வனிச்சப் பூவி னளிமே லரத்தச் செவ்வாய் வடிக்கயல் நெடுங்க ணார்தம் வளிக்கையால் வளித்த மார்பில் தொடுக்கிய தொடுத்த போலுந் துறுமலர்க் கத்தி மாதர் கொடிக்கையா லிடுக்க றன்மேல் கொற்றவன் குலவப் பட்டன் | 552 |
புல்லிய பொலங்கொம் பொப்பார் புலவியுட் கலவி சென்று மெல்லிய மாலை தம்மால் விசித்தலை விடுத்து மீட்டு மல்லுய ரலர்ந்த மார்பின் மாதவிப் பேதை யார்த்த வல்லிகள் விடுக்க மாட்டா மனத்தினன் மன்ன னானான் | 553 |
வாகுவலி தேவரினும் உயர்நிலை யடைதல்
ஓவலில் குணங்க ளென்னு மொளிர்மணிக் கலங்க டாங்கித் தேவர்க ளுலக மெல்லாஞ் செழுமண மயர்ந்து கூட்டக் கேவலப் பெண்ணென் பாளோர் கிளரரொளி மடந்தை தன்னை ஆவியு ளடக்கிப் பின்னை யமரர்க்கு மரிய னானான் | 554 |
வாகுவலியின் வழித்தோன்றலே பயாபதி மன்னன் என்றல்
எங்கள்கோ னிவன்க ணின்று மிக்குயர் குலத்து வேந்தர் தங்களோர் புறஞ்சொல் வாராத் தன்மையா லுலகங் காத்தார் அங்கவர் வழிக்கண் தோன்றி யகலிடம் வணங்க நின்ற இங்கிவன் பெருமை நீயுமறிதியா லேந்த லென்றான் | 555 |
மருசி மேலுங் கூறத்தொடங்குதல்
குடித்தொட ரிரண்டுங் கேட்டே குறுமயி ரெறிந்து கண்ணுள் பொடித்தநீர்த் திவலை சிந்தப் புகழ்ந்தன ரிருந்த வேந்தர் அடுத்தெரி யலர்ந்த செம்பொ னணிமணி முடியி னானங் கெடுத்துரை கெடாத முன்னக் கேசர னிதனைச் சொன்னான் | 556 |
வாகுவலி கச்சனுக்கு மருமகன் என்று கூறுதல்
இப்படித் தாயிற் பண்டை யிசைந்தது சுற்ற மென்னை அப்படி யரிய செய்த வடிகளெம் மரச னாய கைப்புடை யிலங்கு செவ்வேற் கச்சற்கு மருக னாரென் றொப்புடைப் புராண நன்னூ லுரைப்பதியா னறிவ னென்றான் | 557 |
மன்னவன் மனத்தி னாற்ற மிறைவனை வணங்கி வாழ்த்திப் பின்னவன் ரன்னை நோக்கிப் பேசினன் பிறங்கு தாரோய் முன்னிய வுலக நூலுங் குலங்களு முறையு முள்ளிட் டின்னவா றறியு நீரோ ரில்லை நின் போல வென்றான் | 558 |
அரசாட்சிப் பொறிக்கு வாய் தூதுவர் என்றல்
மந்திரக் கிழவர் கண்ணா மக்கடன் றாள்க ளாகச் சுந்தர வயிரத் திண்டோ டோ ழராச் செவிக ளொற்றா அந்தர வுணர்வ நூலா வரசெனு முருவு கொண்ட எந்திர மிதற்கு வாயாத் தூதுவ ரியற்றப் பட்டார் | 559 |
சிறந்த தூதுவன் சிறப்பு
ஆதிநூ லமைச்சர்க் கோது மாண்பொலா மமைந்து நின்றான் தூதனாச் சொல்லிற் சொல்லாச் சூழ்பொரு ளில்லை போலா மேதிலார்க் காவ துண்டோ வின்னன புகுந்த போழ்திற் கோதிலாக் குணங்க டேற்றிக் கொழித்துரை கொளுத்த லென்றான் | 560 |
பயாபதி மரிசியைப் பாராட்டல்
மற்றிம்மாண் புடைய நின்னை யுடையவம் மன்னர் மன்னன் எற்றைநூற் றெய்த மாட்டா னிதன்றிற நிற்க வெம்மைச் சுற்றமா நினைந்து நின்னைத் தூதனா விடுத்துச் செல்லப் பெற்றியாம் பிறவி தன்னாற் பெறும்பயன் பெற்ற தென்றான் | 561 |
பயாபதி மன்னன் மருசியை நோக்கிச் சில கூறுதல்
இன்றியா னின்னை முன்வைத் தினிச்சில வுரைக்கல் வேண்டா ஒன்றியா னுரைக்கற் பால வுரையையு முணர்த்தி நீயே வென்றியால் விளங்கு தானை விஞ்சையங் கிழவன் கண்ணா நின்றியான் வாழ்வ தல்லா னினைப்பினி யில்லை மன்னோ | 562 |
கொற்றவன் குறிப்பி தாயிற் கூவித்த னடியன் மாரை உற்றதோர் சிறுகுற் றேவற் குரியராய்க் கருதித் தானே அற்றமி லலங்கல் வேலோ னறிந்தருள் செய்வ தல்லான் மற்றியா னுரைக்கு மாற்ற முடையனோ மன்னற் கென்றான் | 563 |
மருசிக்குச் சிறப்புச் செய்தல்
தூதன்மற் றதனைக் கேட்டே தொழுதடி வணங்கிச் செங்கோல் ஏதமில் புகழி னாயானடிவலங் கொள்வ னென்னப் போதுசே ரலங்க லானும் பொலங்கலம் பொறுக்க லாகாச் சோதிய சுடரச் சேர்த்திப் பெருஞ்சிறப் பருளிச் செய்தான் | 564 |
மருசிக்கு நாடகங் காட்டி மறுநாள் அனுப்புதல்
அற்றைநா ளங்குத் தாழ்ப்பித் தகனகர்ச் செல்வந் தன்னோ டுற்றவ னுவப்பக் கூறி யுரிமைநா டகங்கள் காட்டிப் பிற்றைநாட் குரவர் தம்மைப் பின்சென்று விடுமி னென்று மற்றவர்க் கருளிச் செய்தான் மருசியுந் தொழுது சென்றான் | 565 |
மருசி தனது நகரத்தை அடைதல்
உலனல னடுதிண்டோ ளூழிவே லோடை யானைச் சலநல சடியென்பேர்த் தாமரைச் செங்க ணான்றன் குலநல மிகுசெல்கைக் கோவொடொப் பார்கள் வாழு நலனமர் நளிசும்மைத் தொன்னகர் நண்ணி னானே | 566 |
7.சீயவதைச் சருக்கம்
மரீசி சடி மன்னனைக் காண்டல்
மற்ற மாநகர் மருசி புக்கபின் கொற்ற வேலவன் கோயின் மாநெதி முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன் சுற்று வார்கழ றெழுது துன்னினான் | 567 |
விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக் கலந்து மாமணிக் கடக மின்செய அலங்கல் வேலினா னங்கை யாலவற் கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான் | 568 |
சடிமன்னன் மரீசியின் கருத்தைக் குறிப்பாலுணர்தல்
தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன் வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத் தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன் முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான் | 569 |
இதுவுமது
தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க் காது வேலினான் கரும முற்றுற ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது கோதில் கேள்வியான் றொழுது கூறினான் | 570 |
இதுமுதல் உஅ செய்யுள்கள் மரீசியின் கூற்று
வெல்க வாழிநின் வென்றிவார்கழல் செல்க தீயன சிறக்க நின்புகழ் மல்க நின்பணி முடித்து வந்தனன் பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய் | 571 |
இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும் அங்கு வேந்தனை யணைந்த வாயிலும் பொங்கு தானையான் புகன்ற மாற்றமுந் தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா | 572 |
அள்ளி லைச்செழும் பலவி னார்சுளை முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக் கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும் | 573 |
முள்ள ரைப்பசு முளரி யந்தடத் துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம் கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப் புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும் | 574 |
நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய் பத்தி சித்திரப் பலகை வேதிகை சித்தி ரங்களிற் செறிந்து காமனார் அத்தி ரம்மென அசோகங் கண்டதும் | 575 |
தன்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான் மன்ணி ழற்கொள மருங்கு சுற்றிய வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங் கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும் | 576 |
சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன் எரிந்த பூணின னிலங்கு தாரினன் வரிந்த கச்சைய னொருவன் வந்துவண் டிரிந்து பாயவிங் கேறு கென்றதும் | 577 |
மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங் கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர் உற்ற மங்கலக் கலங்க ளோடுடன் முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும் | 578 |
பங்கய யத்தலர்ச் செங்கண் மாமுடித் திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப் பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும் அங்கு வந்தது மவர்கள் சொற்றதும் | 579 |
நற்பு றத்தன நாற்ப தாம்வய திப்பு ரத்தன விளங்க ருங்கைம்மா மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ டப்பு றத்தர சவைய டைந்ததும் | 580 |
மன்ன வன்கழல் வணங்கி நின்றதும் பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும் பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந் துன்னி வாசகந் தொழுது கொண்டதும் | 581 |
ஓட்டி றானையா னோலை வாசகங் கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியான் மீட்டொர் சொற்கொடா விம்மி தத்தனா யீட்டு மோனியா யிருந்த பெற்றியும் | 582 |
இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும் வருந்தி மற்றவன் மறுத்த வன்ணமும் புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியு மருந் தகைத் தொடர் பமைந்த வாக்கமும் | 583 |
பின்னை மன்னவன் பேணி நன்மொழி சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும் பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள வின்ன கைச்சிறப் பருளி யீந்ததும் | 584 |
அருங்கல லக்குழாத் தரசன் றேவிமார் பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டது மொருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையுஞ் சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான் | 585 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.