கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 6 ஏப்ரல், 2013

அகராதி-அ

அரத்தம் குருதி ; சிவப்பு ; செம்பஞ்சு ; அரக்கு ; செங்குவளை ; செம்பரத்தை ; நீலோற்பலம் ; தாமரை ; நெற்றித்திலகம் ; பவளம் ; பொன் ; கடுக்காய் ; ஒத்த காதல் .
அரத்தன் செவ்வாய்க் கோள் .
அரத்தை ஒரு மருந்துச் செடிவகை ; முடக்கொற்றான் ; குறிஞ்சியாழிசை .
அரத்தோற்பலம் செங்குவளைக் கொடி ; காண்க : செவ்வாம்பல் .
அரசச்சின்னம் அரசாங்க அடையாளம் .
அரசண்மை பகையரசன் அணித்தாக இருக்கை .
அரசநீதி அரசியல் கூறும் நூல் ; அரசியல் கோட்பாடு .
அரசப்பிரதட்சிணம் அரசமரத்தை வலம்வருகை .
அரசம் சுவையில்லாதது ; மூலநோய் .
அரசமரம் மரவகையுள் ஒன்று .
அரசமுல்லை அரசன் தன்மை கூறும் புறத்துறை .
அரசர் அறுகுணம் அரசனின் வெளிநாட்டுக் கொள்கையில் ஆறு தன்மைகள் ; அவை : நட்பு , பகை , செலவு , இருக்கை , கூடினரைப் பிரித்தல் , கூட்டல் .
அரசர் அறுதொழில் அரசர்க்குரிய ஆறு தொழில்கள் ; அவை : ஓதல் , வேட்டல் , ஈதல் , படைக்கலம் பயிறல் , பல்லுயிரோம்பல் , பகைத்திறம் தெறுதல் .
அரசர்பா காண்க : ஆசிரியப்பா .
அரசவாகை அரசன் இயல்பு கூறும் புறத்துறை .
அரசவாரியன் குதிரை நடத்துவோரில் சிறந்தவன் .
அரசவிலை முருகு காதணிவகை .
அரசளித்தல் காண்க : அரசாளுதல் .
அரசன் நாடாள்வோன் ; துருசு ; வன்னியன் ; வியாழன் ; பூவரசு ; கோவைக்கொடி .
அரசன்விருத்தம் நூல்வகை .
அரசன்விரோதி கோவைக்கொடி ; பூவரசமரம் .
அரசாங்கம் அரச உறுப்பு ; அரசியல் துறைகள் ; அரசாட்சி .
அரசாட்சி அரசு நிருவாகம் .
அரசாணி அரசங்கொம்பு ; மணப்பந்தலில் அரசங்கால் நடும் மேடை ; அரசி ; அம்மி .
அரசாணிக்கால் அரசங்கொம்பு .
அரசாணிமேடை அரசங்கால் நட்ட திருமணமேடை .
அரசாளுதல் அரசு செய்தல் .
அரசானம் அரசமரம் ; அரத்தைப் பூண்டு .
அரசி அரசன் மனைவி ; அரசாளுபவள் .
அரசிகன் சுவையறியாதவன் .
அரசியல் அரசாளும் முறை ; காண்க : அரசங்கம் .
அரசிருக்கை அரசன் வீற்றிருக்கும் அவை ; அரியணை .
அரசிலை அரசமரத்தின் இலை ; விலங்குகளுக்கு இடும் அரசிலைக்குறி ; அரைமூடி .
அரசிறை அரசாங்க வரி ; அரசர்க்கு அரசன் .
அரசு அரசன் ; இராச்சியம் ; அரசியல் , அரசாட்சி ; அரசமரம் ; திருநாவுக்கரச நாயனார் .
அரசுகட்டில் அரியணை .
அரசுவா பட்டத்து யானை .
அரசோனம் காண்க : வெள்ளைப்பூண்டு .
அரட்சி மனக்குழப்பம் .
அரட்டடக்கி செருக்குள்ளவர்களை அடக்குபவன் .
அரட்டம் பாலைநிலம் ; பொழுதுவிடிகை .
அரட்டமுக்கி காண்க : அரட்டடக்கி ; குறும்பர்களை ஒடுக்குபவன் ; திருமங்கையாழ்வார் .
அரட்டல்புரட்டல் நோய் முற்றலால் நிகழும் நோவு .
அரட்டன் குறும்பன் ; சிற்றரசன் ; மிடுக்கன் ; கொள்ளையடிப்பவன் ; வீண்பேச்சுப் பேசுவோன் .
அரட்டி அச்சம் .
அரட்டு ஆணவம் ; மிடுக்கு ; குறும்பர் ; குறும்பு ; அச்சம் .
அரட்டுதல் அச்சுறுத்தல் .
அரட்டையடித்தல் வீண்பேச்சுப் பேசுதல் .
அரண் பாதுகாப்பு , காவல் ; கோட்டை ; சுற்றுமதில் ; காவற்காடு ; கவசம் ; வேலாயுதம் ; செருப்பு ; அழகு ; அச்சம் .
அரண்மணை மதிலால் காவல் செய்யபட்ட மாளிகை ; அரசன் இருப்பிடம் .
அரணம் அரண் , கொத்தளம் ; பாதுகாப்பு , காவல் ; கவசம் ; செருப்பு ; கருஞ்சீரகம் ; மஞ்சம் தொடுதோல் .
அரணம்வீசுதல் கவசம் அணிதல் .
அரணி முன்னைமரம் ; தீக்கடைகோல் ; நெருப்பு ; சூரியன் ; கவசம் ; கோட்டைமதில் ; வேலி ; காடு .
அரணித்தல் காவல் செய்தல் ; அலங்கரித்தல் ; கடினப்படுதல் .
அரணியம் காடு .
அரணியன் காட்டிலிருப்பவன் ; அடைக்கலமானவன் .
அரணியா காட்டுக் கருணைக்கிழங்கு .
அரணை பல்லி போன்ற ஓர் உயிர்வகை , பாம்பரணை .
அரத்தகம் செம்பஞ்சு .
அரங்க முழுதும் .
அரங்கநாதன் அவைத்தலைவன் ; திருவரங்கத்தில் வீற்றிருக்கும் திருமாலின் பெயர் .
அரங்கபூசை இடவழிபாடு ; போர் , பந்தயம் , நாடகம் ஆகியன தொடங்கும்போது செய்யும் பூசை .
அரங்கபூமி போர்க்களம் ; திரையரங்கம் , நாடக மேடை .
அரங்கம் நாடகமேடை ; போர்க்களம் ; சூதாடும் இடம் ; படைக்கலக் கொட்டில் ; அவை : ஆற்றிடைக்குறை ; திருவரங்கம் ; தரா .
அரங்கமேடை நாடக மேடை ; சொற்பொழிவு மேடை .
அரங்கன் காண்க : அரங்கநாதன் .
அரங்கி வஞ்சகம் உடையவள் ; நடிகை .
அரங்கு அரங்கம் ; கருப்பம் ; உள்வீடு .
அரங்குதல் தைத்தல் ; அழிதல் ; அழுந்துதல் ; வருத்துதல் ; உருகுதல் .
அரங்கவீடு உள்ளறை .
அரங்கேசன் காண்க : அரங்கநாதன் .
அரங்கேற்றம் புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை .
அரங்கேற்று புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபைக்குக் காட்டும் செய்கை .
அரங்கேற்றுதல் புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச் செய்தல் .
அரசங்கம் அரசனுக்குத் துணைசெய்யும் அமைப்பு . 
அரளி அலரி ; பீநாறிமரம் .
அரளுதல் பிரமித்தல் , திகைத்தல் ; மிக அஞ்சுதல் .
அரற்றல் அரற்றுதல் ; யாழ்நரம்போசை .
அரற்று புலம்பல் ; குறிஞ்சி யாழ்த்திறவகை .
அரன் பதினோர் உருத்திரருள் ஒருவரின் பெயர் ; எப்பொருட்கும் இறை ; அழிப்போன் ; அரசன் ; நெருப்பு ; மஞ்சள் .
அரன்தோழன் சிவனின் தோழனான குபேரன் .
அரன்நாள் சிவனுக்குரிய நாள் , திருவாதிரை .
அரன்மகன் முருகக் கடவுள் ; விநாயகன் ; வீரபத்திரன் .
அரன்வெற்பு சிவபெருமான் வீற்றிருக்கும் கைலாயமலை .
அரனிடத்தவள் சிவபெருமானின் இடப்பக்கத்திலிருக்கும் உமை
அரனெறி திருவாரூரில் உள்ள ஒரு சிவாலயம் .
அரா பாம்பு ; ஆயிலியநாள் ; நாகமல்லி .
அராக்கோள் இராகு கேதுக்கள் .
அராகம் கலிப்பாவின் ஓர் உறுப்பு ; தக்கராகம் ; பாலையாழ்த்திற வகை ; ஆசை ; சிவப்பு ; பொன் .
அராகித்தல் இடையறாது கடுகிச் செல்லுதல் .
அராசகம் நாட்டில் அரசியல் இல்லாக் காலத்தில் நிகழும் குழப்பம் .
அராட்டுப்பிராட்டு போதியதும் போதாததுமானது .
அராத்துதல் அராவுதல் , மிண்டுதல் .
அராதி பகைவன் .
அராந்தானம் சமணப்பள்ளி .
அராநட்பு வேண்டாவெறுப்பு .
அராபதம் வண்டு .
அராமி கொடியன்(ள்) .
அராமுனிவர் பதஞ்சலிமுனிவர் .
அராவாரம் காண்க : கொடிமுந்திரி .
அரதனம் இரத்தினம் ; மிருதபாடாணம் .
அரதனாகரம் கடல் ; தனுக்கோடிக்குக் கிழக்கேயுள்ள கடல் .
அரதி வேண்டாமை ; துன்பம் .
அரதேசி உள்நாட்டுப் பிச்சைக்காரன் .
அரந்தை துன்பம் , வருத்தம் ; குறிஞ்சிப்பண் ; நீர்நிலை .
அரப்பிரியை சிவனுக்கு விருப்பமான உமை .
அரப்பு எண்ணெய்க் குளியலுக்குத் தேய்த்துக் கொள்ளும் சிகைக்காய் முதலியன .
அரப்பொடி இரும்புத்தூள் .
அரபி காண்க : கடுக்காய் ; ஒரு நாடு ; ஒரு மொழி .
அரபுத்தமிழ் அரபுச் சொற்களைத் தமிழில் எழுதிய குரான் ; அரபுச் சொற்கள் கலந்து வழங்கும் தமிழ் .
அரம் இரும்பைத் தேய்க்கப் பயன்படும் கருவி ; விரைவு ; வண்டி ; பாதலம் ; தோல் .
அரம்பன் குறும்பு செய்வோன் .
அரம்பு குறும்பு ; விரும்பியதை நிறைவேற்றும் ஆற்றல் .
அரம்பை காண்க : ஓமம் ; வாழைமரம் ; தேவருலகத்துள்ள நாடகமகளிருள் ஒருத்தி
அரம்பையர் தெய்வமகளிர் .
அரமகள் தெய்வப்பெண் .
அரமனை காண்க : அரண்மனை .
அரமாதர் தெய்வப்பெண்டிர் .
அரமாரவம் காண்க : நாயுருவி .
அரமி கடுக்காய் .
அரமியம் அரண்மனை ; நிலாமுற்றம் ; பிரமிப்பூண்டு ; நாயுருவி .
அரயன் அரசன் .
அரரி கதவு .
அரலை கழலைக்கட்டி ; கடல் ; மரற்செடி ; கற்றாழை ; விதை ; கொடுமுறுக்கு ; பொடிக்கல் ; கனி ; குற்றம் ; கோழை .
அரவக்கிரி வேங்கடமலை .
அரவக்கொடியோன் துரியோதனன் .
அரவங்கலக்கம் சாகுங் காலத்துண்டாகும் அறிவுத் தெளிவு ; முகப்பொலிவு .
அரவணிந்தோன் பாம்புகளை அணிந்திருக்கும் சிவன் .
அரவணை பாம்புப் படுக்கை ; திருமால் கோயில்களில் இரவில் படைக்கும் சருக்கரைப் பொங்கல் .
அரவணைச்செல்வன் பாம்புப் படுக்கையில் பள்ளிகொள்ளும் திருமால் .
அரவணைத்தல் தழுவுதல் ; ஆதரித்தல் .
அரவணையான் காண்க : அரவணைச் செல்வன் .
அரவதண்டம் யமதண்டனை .
அரவப்பகை பாம்புக்குப் பகையான கருடன் .
அரவம் பாம்பு ; ஆயிலிய நாள் ; இராகுகேதுக்கள் ; ஆரவாரம் ; பரலுள்ள சிலம்பு ; படையெழுச்சி ; பதஞ்சலிமுனிவர் ; குங்குமம் ; அதிமதுரம் ; மரமஞ்சள் ; வில்லின் நாண் .
அரவன் பாம்புகளை அணிந்துள்ள சிவன் .
அரவாட்டிப்பச்சை தொழுகண்ணிச்செடி .
அரவாபரணன் காண்க : அரவன் .
அரவாய்க் கடிப்பகை அரம் போன்ற விளிம்புடைய வேப்பிலை .
அரவித்தல் ஒலியெழுப்பல் .
அரவிந்தப்பாவை தாமரையில் வீற்றிருக்கும் திருமகள் .
அரவிந்தம் தாமரை ; இரசம் .
அரவிந்தராகம் பதுமராகம் .
அரவிந்தலோசனன் தாமரைக் கண்ணன் , திருமால் .
அரவிந்தன் தாமரையிலிருந்து தோன்றிய பிரமன்
அரவிந்தை காண்க : அரவிந்தப்பாவை .
அரவு பாம்பு ; ஒலி ; உடைப்பு அடைக்கும் வைக்கோல் பழுதை ; நாகமரம் ; ஆயிலியம் ; தொழிற்பெயர் விகுதி .
அரவுயர்த்தோன் காண்க : அரவக்கொடியோன் .
அரவுரி பாம்புத்தோல் ; பாம்புச் சட்டை .
அரவுருட்டுதல் வைக்கோற் புரியை உடைப்பிற் செலுத்துதல் 
அரிசம் அமாவாசை மிகுதியாகவும் பிரதமை குறைவாகவும் கூடியிருக்கும் நாள் ; மகிழ்ச்சி ; மிளகு .
அரிசயம் சரக்கொன்றை ; எலுமிச்சை .
அரிசலம் சரக்கொன்றை ; எலுமிச்சை .
அரிசனம் காண்க : மஞ்சள் ; தாழ்த்தப்பட்டோர் .
அரிசா பெருங்குமிழமரம் .
அரிசி உமி நீக்கப்பட்ட தானியவகை ; தானியமணி ; மூங்கிலரிசி முதலியன ; மஞ்சள் ; கடுக்காய் .
அரிசிக்கம்பு கம்புப் பயிர்வகை .
அரிசிக்காடி புளித்த கஞ்சி .
அரிசிப்பல் சிறுபல்
அரிசிப்புல் செஞ்சாமை ; காண்க : மந்தங்காய்ப்புல் .
அரிசு மிளகு ; வேம்பு .
அரிட்டம் கேடு ; பிள்ளை பெறும் இடம் ; நன்மை ; சாக்குறி ; மிளகு ; வெள்ளுள்ளிப் பூண்டு ; கடுகுரோகிணிப் பூண்டு ; வேப்பமரம் ; மோர் ; கள் ; முட்டை ; காகம் .
அரிட்டித்தல் கொல்லல் .
அரிட்டை தீங்கு ; கடுகுரோகிணிப் பூண்டு .
அரிடம் காண்க : அரிட்டம் .
அரிணம் மான் ; யானை ; பொன் ; சந்தனம் ; வெண்மை ; சிவப்பு .
அரிணி அழகிய பெண் ; பெண்மான் ; அப்சரசுகளுள் ஒரு சாரார் ; பச்சை நிறத்தினள் ; வஞ்சிக்கொடி .
அரிணை கள் .
அரித்தல் தினவெடுத்தல் ; மேய்தல் ; கொழித்தெடுத்தல் ; தூசு போக்கல் ; கூட்டுதல் ; நீர் அறுத்துச் செல்லுதல் ; நீரில் கழுவிப் பிரித்தல் ; பூச்சி தின்னுதல் ; வருத்துதல் ; இடைவிடுதல் ; சிறிது சிறிதாகக் கவர்தல் .
அரித்திரம் மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் .
அரித்திராபம் மஞ்சள் ; பொன்னிறம் ; சுக்கான் .
அரித்து பசுமை ; பசும்புல் ; பசும்புரவி ; சிங்கம் ; சூரியன் .
அரித்தை நடுக்கம் ; துன்பம் .
அரித்தை (வி) அரித்தாய் எனப் பொருள்படும் ஒரு முன்னிலை வினைமுற்று .
அரிதகி காண்க : கடுக்காய் .
அரிதட்டு சல்லடை .
அரிதம் பசும்புரவி ; மஞ்சள் ; பூமி .
அரிதல் அறுத்தல் .
அரிதாட்புள்ளி கதிர் அறுத்த தாளைக்கொண்டு கணிக்கும் தானிய மதிப்பு .
அரிதாரம் தாளகபாடாணம் ; கத்தூரி ; மஞ்சள் ; திருமகள் .
அரிதாலம் பொன்னரிதாரம் ; மஞ்சள் நிறமான ஒருவகைப் புறா .
அரிதாள் கதிரறுத்த தாள் ; திருமால் திருவடி .
அரிதாளம் நவதாளத்துள் ஒன்று ; பொன்னரி தாரம் .
அரிதினம் ஏகாதசி .
அரிது அருமை ; பசுமை .
அரிதொடர் தொட்டால் கையை அரியும் சங்கிலிப் பொறி .
அரிந்தமன் பகைவரையடக்குவோன் ; திருமால் .
அரிநூற்பொறி தொட்ட கையை அறுக்கும் நூற்பொறி .
அரிப்பரித்தல் கொழித்து எடுத்தல் .
அரிப்பறை செவிப்பறையைத் தாக்கும் ஒலியையுடைய பறை .
அரிப்பன் காண்க : அரிப்புக்காரன் .
அரிப்பனி இடைவிட்ட துளி .
அரிப்பிரியம் கடம்பு ; கடுகுரோகிணி ; சங்கு .
அரிப்பிரியை திருமாலால் விரும்பப்பட்டவள் , திருமகள் .
அரிப்பு பிரித்தெடுக்கை ; குற்றம் ; சினம் ; தினவு .
அரிப்புக்காரன் அரித்துப் பொருள் தேடுவோன் .
அரிப்புக்கூடை சல்லடை .
அரிப்புழுக்கல் அரிசிச்சோறு .
அரிப்பெட்டி சல்லடை .
அரிபாலுகம் தக்கோலச்செடி .
அரிமஞ்சரி குப்பைமேனிப் பூண்டு .
அராவுதல் அரத்தால் தேய்த்தல் ; உராய்தல் ; மாறுபடுதல் .
அராவைரி கருடன் ; மயில் ; கீரி .
அராளகடகாமுகம் நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று .
அராளம் காண்க : இருவாட்சி ; குங்கிலியம் ; இணையா வினைக்கை வகை .
அரி வண்டு ; மென்மை ; கண்வரி ; கண் ; சிலம்பினுட்பரல் ; சிலம்பு ; உள்துளை ; மூங்கில் ; சோலை ; தேர் ; மக்கள் துயிலிடம் ; கட்டில் ; கடல் ; தகட்டு வடிவு ; கூர்மை ; வலிமை ; மரவயிரம் ; அரியப்பட்ட கைப்பிடிக் கதிர் ; அரிசி ; கள் ; குற்றம் ; நீர்த்திவலை ; ஆயுதம் ; பகை ; நிறம் ; அழகு ; பொன்னிறம் ; திருமால் ; சிவன் ; இந்திரன் ; யமன் ; காற்று ; ஒளி ; சூரியன் ; சந்திரன் ; சிங்கம் ; குதிரை ; குரங்கு ; பாம்பு ; தவளை ; கிளி ; திருவோணம் ; துளசி ; நெல் ; நெற்கதிர் .
அரிக்கஞ்சட்டி அரிசி களையும் சட்டி .
அரிக்கண்சட்டி அரிசி களையும் சட்டி .
அரிக்காரன் தூதன் ; கட்டியங் கூறுவோன் .
அரிகண்டம் கழுத்தில் மாட்டப்படும் ஓர் இரும்பு வட்டம் ; ஒருவித வேடம் ; தொல்லை .
அரிகண்டம் பாடுதல் கழுத்தில் கத்தியைக் கட்டிக்கொண்டு எதிரி கொடுக்கும் குறிப்புக்கு ஏற்பப் பாடுதல் .
அரிகயிறு தொட்ட கையை அரியும் நூற்பொறி .
அரிகரகுமரன் ஐயனார்
அரிகரபுத்திரன் ஐயனார்
அரிகரன் திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி .
அரிகல் மேருமலை .
அரிகால் காண்க : அரிதாள் .
அரிகிணை மருதநில வாத்தியம் .
அரிகுரல் கரகரத்த குரல் .
அரிகூடம் கோபுரவாயில் மண்டபம் .
அரிகேசரி பாண்டிய மன்னரின் பட்டப்பெயர் .
அரிச்சாவி காண்க : அரிசா .
அரிச்சிகன் சந்திரன் .
அரிச்சுவடி அகரச் சுவடி என்பதன் மரூஉ ; பிள்ளைகளின் தொடக்க நூல் ; எழுத்துக் கற்பிக்கும் புத்தகம் ; அரிவரியேடு ; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம் .
அரிசந்தனம் தேவருலக ஐந்து மரங்களுள் ஒன்று ; செஞ்சந்தனம் ; தாமரைப் பூந்தாது ; மஞ்சள் ; நிலவு . 
அருகுதல் குறைதல் ; அருமையாதல் ; கிட்டல் ; பெருகுதல் ; அறிதல் ; குறிப்பித்தல் ; நோவுண்டாதல் ; அஞ்சுதல் .
அருங்கதி வீடுபேறு .
அருங்கலச்செப்பு அணிகலப்பேழை ; ஒரு சமணநூல் .
அருங்கலம் அணிகலன் ; அழகு செய்யும் பொருள் ; நற்காட்சி , நல்லறிவு , நல்லொழுக்கம் என்னும் மும்மணிகள் .
அருங்கலைவிநோதன் நூலாராய்ச்சியையே பொழுதுபோக்காக உடையவன் .
அருங்கிடை கடும்பட்டினி ; நோய்வாய்ப்பட்டிருக்கை .
அருங்கு அருமை .
அருங்கோடை கடுவெயிற்காலம் ; முதுவேனில் ; வறட்சிக்காலம் .
அருச்சகன் கோயில்பூசை செய்வோன் , பூசாரி .
அருச்சனை காண்க : அர்ச்சனை .
அருச்சி பூசி ; ஒளி ; தீக்கொழுந்து ; கதிர் .
அரிமுகவம்பி சிங்கமுக ஓடம் .
அரிய அருமையான .
அரியகம் காற்சரியென்னும் அணி ; கொன்றை மரம் .
அரியசம் காண்க : சரக்கொன்றை .
அரியசாரணை மாவிலிங்கமரம் .
அரியணை சிங்காதனம் .
அரியணைச்செல்வன் அருகன் .
அரியம் வாத்தியம் .
அரியமா பன்னிரு ஆதித்தருள் ஒருவர் ; சூரியன் .
அரியமான் பிதிரர் தலைவன் .
அரியல் அரிதல் ; கள் .
அரியாசம் ஒரு மணப்பொருள் .
அரியாசனம் காண்க : அரியணை .
அரியாயோகம் அரைப்பட்டிகை ; மருந்து .
அரியுண்மூலம் கோரைக்கிழங்கு .
அரியெடுப்பு ஊர்த் தொழிலாளருக்குக் களத்தில் கொடுக்கும் இருகை அளவுத் தானியம் .
அரியேறி சிங்கத்தை ஊர்தியாகவுடைய கொற்றவை .
அரியேறு ஆண்சிங்கம் .
அரில் பிணக்கம் ; பின்னல் ; குற்றம் ; குரல் ; கூந்தல் ; சிறுகாடு ; மூங்கில் ; பாயல் ; பலா ; பரல் .
அரிவரி காண்க : நெடுங்கணக்கு .
அரிவருடம் ஒன்பது கண்டங்களுள் ஒன்று .
அரிவாள் வெட்டறுவாள் ; நெல் முதலியன அரியும் கருக்கறுவாள் .
அரிவாள்மணை காய்கறிகளை அரியும் கருவி .
அரிவாள்முனைப்பூண்டு ஒருவகைப் பூண்டு .
அரிவிமயிர் வீரர் வேல்நுனியில் அணியும் பறவை மயிர் .
அரிவை இருபது முதல் இருபத்தைந்து ஆண்டு வரை உள்ள பெண் .
அரீடம் கடுகுரோகிணிப் பூண்டு .
அரு உருவமற்றது ; கடவுள் ; மாயை ; சித்தபதவி ; அட்டை ; புண் .
அருக்கம் எருக்கஞ்செடி ; நீர்க்காக்கை ; சுக்கு ; செம்பு ; பளிங்கு ; சூரியன் ; சுருக்கம் .
அருக்களித்தல் அஞ்சுதல் ; அருவருத்தல் .
அருக்களிப்பு அருவருப்பு .
அருக்கன் சூரியன் ; இந்திரன் ; தமையன் ; எருக்கு ; சுக்கு
அருக்காணி அருமை ; அழுத்தம் .
அருக்கு காண்க : அருமை ; எருக்கு ; அருக்காணி ; அஞ்சுகை .
அருக்கு (வி) அருக்கு என் ஏவல் .
அருக்குதல் சுருக்குதல் ; காய்ச்சுதல் ; விலக்குதல் ; அருமை பாராட்டுதல் ; அழித்தல் .
அருகசரணம் அருகனைச் சரண்புகுதல் .
அருகசனி பேரேலப்பூண்டு .
அருகனி பிரண்டைக்கொடி .
அருகணை நுழைவாயிலின் பக்கம் .
அருகந்தர் அருக சமயத்தார் .
அருகந்தாவத்தை முத்திநிலை .
அருகம் சமணசமயம் ; தகுதி ; பக்குவம் ; அகில் ; அண்மை ; சீந்தில் .
அருகர் அருகசமயத்தவர் ; பக்குவ நிலையிலுள்ளவர் ; நிலையாமை ; அண்மை .
அருகல் அருகு ; அருமை ; குறைதல் ; சாதல் ; அணைதல் .
அருகன் அருகக் கடவுள் ; சமணசமயத்தான் ; தக்கவன் ; தோழன் ; பக்குவி .
அருகன் எண்குணம் கடையிலா அறிவு , கடையிலாக் காட்சி , கடையிலா ஆற்றல் , கடையிலா இன்பம் , பெயர் இன்மை , குலம் இன்மை , ஆயுவின்மை , அழியாவியல்பு .
அருகன் எண்சிறப்பு அருகதேவனுக்குரிய எட்டு மங்கலப் பொருள்கள் ; அவை : தூபதீபக் காட்சி , தேவதுந்துபி , தெய்வத்துவனி , சிங்காதனம் , பிண்டி , வெண்சாமரை , புட்பமாரி , மும்மைக்குடை .
அருகனைத்தரித்தாள் தருமதேவதை .
அருகாழி கால்விரல் மோதிரம் .
அருகி கள் .
அருகி (வி) சிறிது சிறிதாகி , குறைந்து .
அருகியரத்தம் பூனைக்காலிப் பூண்டு .
அருகியல் சாதிப் பெரும்பண்வகை .
அருகியவழக்கு குறைந்த வழக்கு , மிகுதியாய்ப் பயன்படுத்தப்படாதது .
அருகு அண்மை ; பக்கம் ; ஓரம் ; இடம் ; தீவட்டி .
அருகு (வி) அருகு என் ஏவல் ; குறை .
அருகுகால் கதவு நிலை .
அரிமணல் நுண்மணல் .
அரிமணி மரகதம் .
அரிமந்திரம் சிங்கம்வாழ் குகை .
அரிமருகன் கணபதி ; முருகக்கடவுள் .
அரிமா சிங்கம் .
அரிமாநோக்கம் சிங்கத்தின் பார்வை ; முன்னும் பின்னும் பார்த்தல் ; சூத்திர நிலையுள் ஒன்று .       
அருந்ததி வசிட்டரின் மனைவி ; ஒரு நட்சத்திரம் .
அருந்தல் அருமை ; பருகுதல் .
அருந்திறல் அரிய திறமை உடையவன் ; அரிய திறமை .
அருந்துதல் உண்ணுதல் ; குடித்தல் ; விழுங்குதல் ; அனுபவித்தல் .
அருந்துதன் வேதனை செய்வோன் .
அருந்துதி காண்க : அருந்ததி .
அருநிலை கடந்து செல்லற்கரிய நிலை ; ஆழமான நீர்நிலை .
அருநெல்லி சிறுநெல்லிமரம் .
அருநெறி செல்லுதற்கரிய வழி ; மனைவாயில் ; நரகம் ; பாலைவனம் .
அருப்பம் அருமை ; அற்பம் ; துயரம் ; ஒரு நோய் ; திண்மை ; வழுக்குநிலம் ; மருதநிலத்தூர் ; மலைஅரண் ; காட்டரண் ; சோலை ; நெற்கதிரின் கரு ; தொடரிச் செடி ; கள் ; மோர் ; மா ; முதலில் முளைக்கும் மீசை ; பனி .
அருப்பலம் அனிச்சமரம் .
அரும்பதம் சிறந்த உணவு ; அரிய செவ்வி ; விளங்கற்கு அரிய சொல் .
அரும்பதவுரை கடின சொல்லுக்குத் தரப்படும் உரை .
அரும்பர் காண்க : அரும்பு .
அரும்பல் முளைத்தல் .
அரும்பாடு கடினமான உழைப்பு .
அரும்பாலை பாலைப்பண் வகை .
அரும்பாவி மிகக் கொடியவன் .
அரும்பிஞ்சு மிக இளங்காய் .
அரும்பித்தல் தோன்றுதல் .
அரும்பு மொட்டு ; அணிகளின் அரும்பு வேலை ; முகத்தில் தோன்றும் இளமயிர் ; அரிசி .
அரும்புதல் சிறிதாகத் தோன்றுதல் ; முகிழ்த்தல் .
அரும்புவளையம் உருத்திராக்கம் முதலியவற்றின் இடையிலே கோக்கப்படும் வளையம் .
அரும்பூட்டு வருந்திப் பூட்டுவது ; இயல்பிலாத் தொடர்ச்சி .
அரும்பெறல் பெறுதற்கு அரியது .
அரும்பொருள் முயன்று உணரும் இயல்புடைய சொற்பொருள் ; பெறுதற்கு அரிய பொருள் .
அருமணவன் ஒரு தீவு ; அருமணத் தீவின் யானை ; அகில்வகை .
அருமதாளம் ஒன்பது தாளத்துள் ஒன்று .
அருமந்த அருமையான .
அருமந்தன்ன அருமையான .
அருமருந்து பெறுவதற்கு அரிய மருந்து ; அமிழ்தம் .
அருமவதி பண்வகை .
அருமிதம் அளவின்மை .
அருச்சிக்கை காண்க : அருச்சித்தல் .
அருச்சிகன் சந்திரன் .
அருச்சித்தல் பூசித்தல் ; கடவுளின் திருப்பெயர் சொல்லி மலர் முதலியன இடுதல் .
அருச்சுனம் எருக்கஞ்செடி ; மருதமரம் ; புல் ; பொன் ; பந்து ; வெள்ளையரிசியோடு அறுகையும் சேர்த்து இடுகை ; வெண்மை ; மயில் .
அருச்சுனன் ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ; நெல் வகை ; பஞ்சபாண்டவருள் ஒருவன் ; கார்த்த வீரியன் .
அருச்சுனி பசு ; உஷாதேவி ; ஓர் ஆறு ; அடிமைப் பெண் .
அருச்சை பூசை .
அருசி சுவையின்மை ; விருப்பின்மை .
அருஞ்சிறை கடுங்காவல் ; நரகம் .
அருஞ்சுரம் நிழலற்ற ; நீளிடம் .
அருஞ்சோதி ஒருவகை நெல் .
அருட்குடையோன் அருள் தன்மையைக் குடையாக உடையவன் ; அருகன் ; கடவுள் .
அருட்குறி சிவலிங்கம் .
அருட்சித்தி பாதரசம் .
அருட்செல்வம் கருணையாகிய செல்வம் ; இரக்க உணர்வு ; கடவுளின் அருள் .
அருட்சோதி கடவுள் ; கௌரிபாடாணம் .
அருட்டம் கடுகுரோகிணி ; வேம்பு ; மிளகு .
அருட்டி அச்சம் ; நடுக்கம் .
அருட்டுதல் எழுப்புதல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் .
அருட்பா கடவுளின் அருள்பெற்றோர் பாடிய பாடல்கள் ; இராமலிங்க அடிகள் அருளிய பாடல்களின் தொகுதி .
அருட்புரி குறிஞ்சியாழ்த் திறவகை .
அருணகிரி திருவண்ணாமலை ; அருணகிரிநாதர் .
அருணம் சிவப்பு ; பொன் ; செவ்வானம் ; சிந்தூரம் ; ஒரு மொழி ; ஒரு நாடு ; எலுமிச்சை ; முதிராத மாதுளை ; செம்மறி ஆடு ; யானை ; மான் ; நீர் ; செங்குட்டநோய் ; வெண்மை .
அருணமணி மாணிக்கம் .
அருணவம் கடல் .
அருணவூரி இந்திரகோபப் பூச்சி .
அருணன் சூரியன் ; சூரியனின் தேர்ப்பாகன் ; புதன் .
அருணாசலம் திருவண்ணாமலை .
அருணி மான்சாதிப் பெண் .
அருணினம் நன்னாரி ; திருநாமப்பாலைக் கொடி .
அருணை காண்க : அருணாசலம் .
அருணோதயம் சூரியனின் தோற்றம் ; விடியற்காலம் .
அருத்தபாகம் பாதிப் பங்கு .
அருத்தபாகை வேத நூற்பொருள் வகை .
அருத்தம் சொற்பொருள் ; கருத்து ; சாத்திரம் ; செல்வப் பொருள் ; பொன் ; விவகாரம் ; காரணம் ; முறை ; நீக்கல் ; பயன் ; பாதி ; குங்கிலியம் .
அருத்தயாமம் காண்க : அர்(ரு)த்தசாமம் ; நடு இரவு .
அருத்தலக்கணை காண்க : விட்டும் விடாத இலக்கணை .
அருத்தி ஆசை ; விருப்பப் பொருள் ; செல்வன் ; இரவலன் ; பணியாளன் ; உண்பி ; கள் ; கூத்து .
அருத்தித்தல் இரத்தல் ; வேண்டுதல் ; பாதியாக்கல் .
அருத்தியன் விருப்பம் உடையவன் .
அருத்து சொற்பொருள் .
அருத்துதல் உண்பித்தல் ; நுகரச் செய்தல் .       
அருளரசி வெட்பாலை மரம் ; குடசப்பாலை .
அருளல் பெருங்கொடை ; காத்தல் ; கொடுத்தல் ; படைத்தல் ; இரங்குதல் .
அருளவம் அழிஞ்சில்மரம் ; பெருமரம் .
அருளறம் அருளாகிய அறம் .
அருளாழி அறச்சக்கரம் .
அருளாழிவேந்தன் அருகன் ; கடவுள் .
அருளாளன் அருளை உடையவன் .
அருளிச்செய்தல் சொல்லுதல் .
அருளிச்செயல் கட்டளை ; அடியார் பாடல் .
அருளிப்பாடு அருளப்பட்ட ஆணை ; ஆணை ; கட்டளை .
அருளுறுதி வேம்பு .
அருளொடுநீங்கல் உலகின் துயரைக் கண்டு பற்று நீங்கும் புறத்துறை .
அரூபம் உருவம் இன்மை ; அருவம் .
அரூபமாதல் பாழடைதல் .
அரூபி உரு இல்லாதது ; கடவுள் ; சிவன் ; அசரீரி ; கருப்பூரம் .
அரேசகண்டு கருணைக்கிழங்கு .
அரேசிகம் வாழைமரம் .
அரேணு குலப்பெண் ; வால்மிளகு ; கடலை .
அரேணுகம் காண்க : வால்மிளகு ; காட்டுமிளகு ; கடுமரவேர் .
அரை பாதி ; இடம் ; இடை ; தொடையின் மேற்பாகம் ; வயிறு ; அல்குல் ; ஒரு மரம் ; மரத்தின் அடிப்பக்கம் ; தண்டு ; அரசியல் .
அரைக்கச்சு இடையில் அணியும் சிறப்பு உடை .
அரைக்காசுத்தொண்டன் மிகவும் எளியவன் .
அரைக்காணி ஓர் அளவை ; நூற்றறுபதில் ஒரு பங்கு .
அரைக்கால் ஓர் அளவை ; எட்டில் ஒரு பங்கு .
அரைகல் அம்மி .
அரைகுலையத் தலைகுலைய மிக விரைவாய் .
அரைகுறை முற்றுப்பெறாமை .
அரைச்சதங்கை குழந்தைகளின் இடைஅணி .
அரைசிலை அம்மி .
அரைசெலவு கறிக்கூட்டுப் பொருள் .
அரைஞாண் இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை .
அரைநாண் இடுப்பில் கட்டும் கயிறு ; வெள்ளிக் கயிறு ; கிணற்றின் செங்கல் வரை .
அரைத்தல் மாவாக்கல் ; தேய்த்தல் ; கொட்டை நீக்குதல் ; அழித்தல் .
அரைதல் தேய்த்தல் ; அரைபடல் .
அரைநாள் பாதிநாள் ; நடுநாள் ; நள்ளிரவு .
அரைப்பட்டிகை மாதர் இடையில் கட்டும் அணிவகை .
அரைப்படிப்பு நிரம்பாக் கல்வி .
அரைப்பணம் அல்குல் ; பாதிக்காசு .
அரைப்பை இடுப்பில் கட்டும் நீண்ட பணப்பை ; அல்குல் .
அரைமதியிரும்பு பாதித் திங்களைப் போன்ற ஒருவகை அங்குசம் .
அரைமனிதன் பெருமை குறைந்தவன் .
அரைமூடி பெண்குழந்தைகளின் அரையில் கட்டும் அரசிலை வடிவ அணி .
அரையர் திருமால் திருக்கோயில்களில் திவ்வியப் பிரபந்தம் பாடித் தொண்டு செய்பவர் .
அரையன் அரசன் ; ஒரு பழைய பட்டம் .
அரையாப்பு தொடையிடுக்கில் உண்டாகும் கட்டி .
அரையிருள் நள்ளிரவு .
அரைவட்டம் வட்டத்தில் பாதி ; காண்க : அரைமூடி .
அரைவடம் காண்க : அரைஞாண் .
அரைவாசி பாதி .
அரைவாய் குறைபட்ட வாய் .
அரைவைரக்கண் தட்டார் கருவியுள் ஒன்று .
அரோ ஓர் அசைச்சொல் .
அரோகதிடகாத்திரம் சுகமும் வலிமையுமுள்ள உடல் .
அருமை அரிய தன்மை ; பெருமை ; கடினம் ; எளிதிற் கிட்டாமை ; சிறுமை ; இன்மை .
அருமைசெய்தல் பேராண்மை காட்டுதல் ; அருமை பாராட்டுதல் .
அருவம் உருவமின்மை ; அருமை .
அருவர் தமிழர் .
அருவருத்தல் மிக வெறுத்தல் .
அருவருப்பு மிகுவெறுப்பு .
அருவல் துன்பம் ; ஒருவகை நோய்
அருவா அருவாநாடு ; கொடுந்தமிழ் நாடு பன்னிரண்டனுள் ஒன்று .
அருவாட்டி அருவாநாட்டுப் பெண் .
அருவாணம் செப்புத் தட்டு ; கோயில் பிரசாதம் .
அருவாவசு கதிரவன் கதிர்களுள் ஒன்று .
அருவாளர் ஒரு சாதியார் .
அருவி மலைவீழ் நீர் ; நீரூற்று ; கழிமுகம் ; நீர் ; ஒழுங்கு ; உருவமில்லாதது ; பயிரின் தாள் ; தினைத் தாள் ; அறுத்த ஒருபிடிக் கதிர் ; ஆறு ; மலை .
அருவுடம்பு நுண்ணுடல் , சூக்குமவுடல் .
அருவுதல் அறுத்தொழுகுதல் ; மெல்லெனச் செல்லுதல் ; கிட்டுதல் ; துன்பப்படுத்துதல் .
அருவுருவம் அரு என்றும் உறு என்றும் சொல்லத்தகாதது .
அருள் சிவசக்தி ; கருணை ; பொலிவு ; முதிர்ந்த மாதுளை மரம் ; நல்வினை ; ஏவல் .
அருள்வாக்கு இறைவன் அருள் பெற்றவரின் வாக்கு .
அருள்தல் காண்க : அருளல் ; கருணை காட்டுதல் ; கொடுத்தல் ; பணித்தல் ; மகிழ்தல் ; அச்சமுறுதல் .
அருளுதல் காண்க : அருளல் ; கருணை காட்டுதல் ; கொடுத்தல் ; பணித்தல் ; மகிழ்தல் ; அச்சமுறுதல் .
அருளகம் வெள்ளெருக்கஞ்செடி .
அருளம் பொன் .       
அல்வழிப் புணர்ச்சி வேற்றுமை அல்லாத நிலையில் சொற்கள் சேரும் நிலை ; அவை 14 : வினைத்தொகை , பண்புத்தொகை , உவமைத்தொகை , உம்மைத்தொகை , அன்மொழித்தொகை , எழுவாய்த்தொடர் , விளித்தொடர் , தெரிநிலை வினைமுற்றுத் தொடர் , குறிப்பு வினைமுற்றுத் தொடர் , பெயரெச்சத் தொடர் , வினையெச்சத் தொடர் , இடைச் சொற்றொடர் , உரிச் சொற்றொடர் , அடுக்குத்தொடர் .
அல்வான் வண்ணத்துணி .
அலக்கண் துன்பம் .
அலக்கலக்காய் தனித்தனியாய் .
அலக்கழித்தல் அலைத்து வருத்துதல் ; கெடுத்தல் ; அழகு காட்டுதல் .
அலக்கழிதல் வருந்துதல் .
அலக்கு வரிச்சு ; துறட்டுக்கோல் ; தனிமை ; எலும்பு ; கிளை ; கோட்டை .
அலக்குத்தடி வேலி அடைக்கும் மரக்கிளை ; துறட்டுக்கோல் .
அலக்குதல் அசைத்தல் ; துணி முதலியன வெளுத்தல் .
அல் இரவு ; இருள் ; மாலை ; சூரியன் ; வெயில் ; மதில் ; சுக்கு ; மெய்யெழுத்து ; மயக்கம் ; எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி ; வியங்கோள் விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; ஒரு சாரியை ; ஆண்பால் பெயர் விகுதி ; எதிர்மறைக் குறிப்பு வினைப்பகுதி ; எதிர்மறை ஏவல் ஒருமை விகுதி ; எதிர்மறை வினை இடைநிலை .
அல்கந்தி அந்திப்பொழுது .
அல்கல் தங்குகை ; குறைதல் ; வருமை ; இரவு ; நாள் .
அல்கா இழிவான ; குதிரைச் சேணத்தில் கழுத்து வளையத்துக்குக் கீழிடும் மெத்தை .
அல்கு இரவு ; பிற்பகல் ; தங்குகை .
அல்குகழி உப்பங்கழி ; சிற்றாறு .
அல்குதல் அல்கல் ; தங்குதல் ; நிலைத்து நிற்றல் ; சேருதல் ; அழிதல் ; சேமித்து வைத்தல் .
அல்குல் பக்கம் ; அரை ; பெண்குறி ; நிதம்பம் .
அல்பொருள் பாவம் ; உவமானம் .
அல்லகண்டம் துன்பம் .
அல்லகம் உற்பலம் ; செந்தாமரை ; கோவணம் .
அல்லகுறி தலைமகனால் அன்றிப் பிறிதொன்றினால் நிகழும் குறி ;
அல்லகுறிப்படுதல் இரவுக் குறியிடத்துக் குறியல்லாத குறியில் மயங்குதல் .
அல்லங்காடி மாலைக்கடை .
அல்லது தீவினை ; தவிர .
அல்லதூஉம் அல்லாமலும் .
அல்லதேல் அல்லாமற்போனால் .
அல்லதை அல்லாமல் .
அல்லம் காண்க : இஞ்சி .
அல்லல் துன்பம் .
அல்லவை தீயவை ; பயனின்மை .
அல்லறைசில்லறை மிச்சத்தொகை ; சிறு துன்பங்கள் .
அல்லா வருத்தம் ; மகமதியர் வழிபடும் கடவுளின் பெயர் .
அல்லாட்டம் அலைச்சல் .
அல்லாடுதல் அலைதல் ; தொல்லைப்படுதல் .
அல்லாத்தல் துன்பம் அடைதல் ; மகிழ்தல் .
அல்லாத மாறான ; மாறானவை .
அல்லாதார் ஒழிந்த பிறர் ; தீயார் .
அல்லாப்பண்டிகை இசுலாமியரின் விழாக்களுள் ஒன்றான மொகரம் .
அல்லாப்பு வருத்தம் .
அல்லாமல் தவிர .
அல்லாமலும் மேலும் .
அல்லாமை தீக்குணம் .
அல்லாரி வெள்ளாம்பல் ; சுவரின் ஆரல் தாங்கும் முளை ; அடர்த்தியின்மை .
அல்லால் அல்லாமல் .
அல்லி ஆம்பல் ; வெள்ளாம்பல் ; தாமரை ; காயாம்பூ ; அகவிதழ் ; பூந்தாது ; அல்லியரிசி ; இளவேர் ; இரவு ; அலி .
அல்லிகம் பேய்க்கொம்மட்டிக் கொடி .
அல்லித்தாமரை செங்கழுநீர்க் கொடி .
அல்லித்தாள் அகவிதழ் உறுப்புவகை .
அல்லிப்பாவை அல்லியக்கூத்தில் ஆட்டும் பொம்மை .
அல்லிப்பிஞ்சு இளம்பிஞ்சு .
அல்லிமாதர் திருமகள் .
அல்லிமூக்கு சில்லிமூக்கு ; இரத்தம் ஒழுகும் மூக்கு .
அல்லியம் மாயோன் ஆடலுள் ஒன்று ; இடையர் ஊர் ; கலப்பை ; அழகின்மை .
அல்லியரிசி அல்லிப்பூவின் உட்கொட்டையிலுள்ள சிறு விதை .
அல்லியன் தன் குழுவைப் பிரிந்த யானை .
அல்லியாமரம் படகு வலிக்கும் தண்டு .
அல்லியான் பிரமன் .
அல்லிருள் இரவில் இருளின் செறிவு ; இரவின் செறிந்த இருள் .
அல்லுச்சில்லுப்படுதல் சிறிது சிறிதாகக் கெடுதல் .
அல்லுதல் முடைதல் ; பின்னிக்கொள்ளுதல் .
அல்லும்பகலும் இரவும் பகலும் , எப்பொழுதும் .
அல்லுழி அல்லாத இடத்து .
அல்லூரம் வில்வமரம் .
அல்லை அல்லிக்கொடி ; தாய் .
அல்லைதொல்லை மிக்க துன்பம் .
அல்லோலகல்லோலம் பேராரவாரம் .
அல்லோன் சந்திரன் ; ஒழிந்தோன் .
அல்வழக்கு தகாத ஒழுக்கம் .
அல்வழி நெறி அல்லாத நெறி ; தகாத வழி ; அல்வழிப் புணர்ச்சி .
அரோகம் நோயின்மை .
அரோகி நோய் இல்லாதவன் ; சகமுடையவன் .
அரோசகம் பசியின்மை ; அருவருப்பு .
அரோசிகம் பசியின்மை ; அருவருப்பு .
அரோசனம் அருவருப்பு .
அரோசித்தல் அருவருத்தல் .       
அலங்காரப்பேச்சு சிங்காரப்பேச்சு ; புனைவுரை .
அலங்காரபஞ்சகம் வெண்பா , கலித்துறை , அகவல் , விருத்தம் , சந்தவிருத்தம் ஆகிய இவ்வைந்தும் அந்தாதியாக வரப் பாடப்படும் நூல் .
அலங்காரம் சிங்காரம் ; அழகு ; அணிகலன் ; செய்யுள் அணி ; சங்கீத உறுப்புவகை ; பெருமாள் கோயில்களில் படைக்கப்படும் சோறு , குழம்பு முதலிய உணவு ; வெடிகாரம் .
அலங்காரி அழகு செய்யப்பெற்றவள் .
அலங்கிருதம் சிங்காரம் .
அலங்கிருதி சிங்காரம் .
அலங்குதல் அசைதல் ; மனம் தத்தளித்தல் ; இரங்குதல் ; ஒளிசெய்தல் .
அலங்கை துளசி .
அலங்கோலம் சீர்கேடு .
அலசடி துன்பம் .
அலசம் ஒரு மரம் ; சோம்பு ; மந்தம் ; கால்விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப்புண் .
அலசல் இழை விலகியிருக்கை ; இழை நெருக்கமில்லாத ஆடை ; சிதறுண்ட பொருள் ; பயனற்ற வேலை ; சோம்பல் .
அலசி நத்தைவகை .
அலசுதல் அலைதல் ; சோர்தல் ; வெட்கும்படி பலபடப் பேசுதல் ; வருந்துதல் ; நீரில் கழுவுதல் .
அலஞ்சரம் மட்குடுவை .
அலட்சியம் கவனமின்மை ; மதிப்பின்மை .
அலட்டு வீண் சொற்களை மேன்மேலும் கூறுகை ; தொந்தரை ; பிதற்றுகை .
அலட்டுச்சன்னி பிதற்றுங் குணமுடைய சன்னிநோய் .
அலட்டுதல் பிதற்றுதல் ; அங்கலாய்த்தல் ; தொந்தரை செய்தல் .
அலத்தகம் செம்பஞ்சுக்குழம்பு ; செம்பருத்தி .
அலத்தம் செம்பருத்தி ; சூரியகாந்தி .
அலத்தல் அலைதல் ; ஆசைப்படுதல் ; துன்பப்படுதல் .
அலத்தி மின்மினி ; நுளம்பு .
அலதரன் கலப்பையைக் கொண்டவன் ; உழவன் ; பலராமன் .
அலதிகுலதி அலங்கோலம் .
அலந்தம் மெய்யீறு .
அலந்தல் மயிலடிக் குருந்து ; செங்கத்தாரிப்பூண்டு .
அலந்தலை துன்பம் ; கலக்கம் .
அலந்தை துன்பம் ; நீர்நிலை .
அலந்தோன் துன்பமுற்றோன் .
அலப்படை கலப்பை ஆயுதம் .
அலப்பல் உளறுதல் ; பிதற்றல் ; கலப்புக்கட்டோசை .
அலப்பன் வீண்பேச்சுக்காரன் .
அலப்பாட்டுதல் மனம் சுழலுதல் .
அலப்பு மனக்கலக்கம் .
அலப்புதல் வீண்பேச்சுப்பேசுதல் ; உளறுதல் ; அலைத்தல் .
அலபதுமம் நிருத்தக்கை முப்பதனுள் ஒன்று .
அலம் துன்பம் ; தேள் ; விருச்சிகராசி ; அமைவு ; போதும் ; திருப்தி ; கலப்பை ; நீர் .
அலக்குப்போர் சேவகர் ஈட்டிகளை ஒன்றோடொன்று எதிர்த்து வைக்கை .
அலக்கைச்சுரம் கீழ்க்காய்நெல்லி .
அலக்கொடுத்தல் ஊறு செய்தல் .
அலக்கொடுப்பு ஊறு .
அலகம் காண்க : ஆனைத்திப்பிலி ; வேப்பலகு .
அலகம்பு அம்புவகை .
அலகரி பெரிய அலை .
அலகிடல் அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் .
அலகிடுதல் அளவிடுதல் ; செய்யுளில் அசை ; சீர் பிரித்துக் காட்டல் ; துடைப்பத்தால் பெருக்குதல் .
அலகின்மாறு துடைப்பம் ; விளக்குமாறு .
அலகு எண் ; அளவு ; அளவுகருவி ; பலகறை ; மகிழம் விதை ; நென்மணி ; பயிர்க்கதிர் ; ஆயுதம் ; ஆயுதத்தினலகு ; கூர்மை ; பறவைமூக்கு ; தாடை ; உயிர்களின் கொடிறு ; கைம்மரம் ; நூற்பாவின் அலகு ; துடைப்பம் ; பொன்னாங்காணி ; அறுகு ; நுளம்பு ; இலட்சம் பாக்கு ; ஆண்பனை ; அகலம் ; குற்றம் .
அலகுகட்டுதல் மந்திரத்தால் வாயைக்கட்டுதல் ; வாளின் வெட்டை மந்திரத்தால் வீணாக்குதல் ; கணக்குத் தீர்த்தல் .
அலகுகட்டை வண்டிச்சக்கர வட்டை .
அலகுகழித்தல் கணிதத்தில் விதை முதலியவற்றைக் கொண்டு தொகை குறைத்தல் .
அலகுகிட்டுதல் சன்னியால் பல்லுக் கிட்டுதல் .
அலகுசோலி காண்க : அறுகு .
அலகுஞ்சம் மின்மினி ; நுளம்பு .
அலகுநிறுத்தல் திரௌபதியின் விழாவிற்குமுன் வாள் நாட்டும் சடங்கு .
அலகுபருப்பு பட்டாணிக்கடலை .
அலகுபனை ஒருவகை மடற்பனை .
அலகுபூட்டு வேண்டுதலுக்கென்று இடப்படும் வாய்ப்பூட்டு .
அலகுபோடுதல் வேண்டுதலுக்காக நா முதலிய உறுப்புகளில் வேற்கம்பிகளைக் குத்திக் கொள்ளுதல் .
அலகை பேய் ; பேய்க்கொம்மட்டிக் கொடி ; காட்டுக் கற்றாழை ; அளவு .
அலகைக்கொடியாள் பேய் உருவம் பொறித்த கொடியையுடைய காளி .
அலகைத்தேர் பேய்த்தேர் .
அலகைமுலையுண்டோன் பேயின் முலைப்பாலுடன் அவளுயிரை மாய்த்த கண்ணபிரான் .
அலங்கடை அல்லாதவிடத்து .
அலங்கம் அரண் ; கொத்தளம் ; ஆற்றிடைக்குறை .
அலங்கமலங்க பொறிகலங்க .
அலங்கரணம் ஒப்பனை .
அலங்கரித்தல் அழகுபடுத்துதல் .
அலங்காரித்தல் அழகுபடுத்துதல் .
அலங்கல் பூமாலை ; மயிர்ச்சூட்டு மாலை ; தளிர் ; அசையுங்கதிர் ; துளசி ; ஒழுங்கு ; ஒளி ; அசைதல் ; மனங்கலங்கல் .
அலங்கனாரி முத்துச்சிப்பி
அலங்காரசாத்திரம் அணியிலக்கண நூல் .
அலங்காரப்படுத்தல் ஒப்பனை செய்தல் .
அலங்காரப்பிரியன் திருமால் .       
அலருதல் மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல் .
அலர்மகள் திருமகள் .
அலர்மேல்மங்கை திருமகள் .
அலரவன் பிரமன் .
அலரி பூ ; ஒரு பூச்செடி ; நீர்வாவி ; கண்வரி ; அழகு ; சூரியன் ; தீ ; தேனீ ; கோதுமை ; கோமாரி ; ஆற்றுப்பாலை .
அலரோன் காண்க : அலரவன் .
அலவர் உழுதொழிலாளர் ; உழவர் .
அலவல் இழை விலக்கமாய் நெய்யப்பட்டது ; அலமரல் ; கந்தைச்சீலை ; விபச்சாரம் .
அலவலை ஆராயாது செய்வது ; விடாது பேசுவோன் ; மனச் சஞ்சலம் .
அலவன் நண்டு ; ஆண்நண்டு ; பூனை ; கற்கடகராசி ; நிலா .
அலவாங்கு கடப்பாரை .
அலவாட்டு வழக்கம்
அலவான் பல்லாங்குழியாட்டத்தில் கூடும் காய்கள் .
அலவு மனத்தடுமாற்றம் .
அலவுதல் வருந்துதல் ; சிந்துதல் .
அலவை அல்லவை ; விடாது பிதற்றுபவள் ; விபச்சாரம் .
அலற்றுதல் இடைவிடாமலும் முறையில்லாமலும் பேசுதல் .
அலறல் புலம்புதல் , கதறுதல் .
அலறுதல் அலறல் ; மிக்கொலித்தல் ; மாடு , ஆந்தை முதலியன கதறுதல் ; உரத்தழுதல் ; வருந்துதல் ; விரிதல் ; காய்தல் .
அலன் கலப்பைப் படையையுடைய பலராமன் .
அலன்றல் சாவு .
அலாதம் கடைக்கொள்ளி ; மரம்சுட்ட கரி .
அலாதி தனியானது .
அலாது தனியானது .
அலாபத்திரம் இணையா வினைக்கை வகை .
அலாபம் இலாபமின்மை ; தீது .
அலாயுதன் காண்க : அலன் .
அலாரிதா அலரிச்செடி .
அலாரிப்பு நாட்டிய ஆரம்பத்தில் பாடும் சொற்கட்டு .
அலாவு சுரைக்கொடி .
அலி ஆண்பெண் அல்லாதது ; பலராமன் ; யமன் ; உழவன் ; காகம் ; குயில் ; தேன் ; விருச்சிகராசி ; நறுவிலிமரம் ; வயிரம் இல்லாமரம் ; தீ ; சோறு .
அலிக்கிரகம் சனி , புதன் என்னுங் கோள்கள் ,
அலிக்கை அலிச்செயல் காட்டும் அபிநயக்கை .
அலிகம் நெற்றி .
அலிப்பேடு அல்லியம் என்னும் கூத்து .
அலிபகம் கருவண்டு ; தேள் ; நாய் .
அலிமரம் வயிரமில்லாத மரம் ; பாலும் நாரும் முள்ளும் உள்ள மரம் .
அலியன் கடுக்காய்மரம் .
அலியெழுத்து ஆய்தவெழுத்து .
அல¦கன் தலை .
அலுக்குத்து முகமதியப் பெண்கள் காதணி .
அலுக்குதல் சிறிது அசைத்தல் ; பிலுக்குப்பண்ணல் ; பகட்டித் திரிதல் ; ஆடம்பரங்காட்டி மயக்குதல் .
அலுசிலும்பல் குழப்பம் .
அலுப்தசத்தி பேரருளுடைமை .
அலுத்தசத்தி பேரருளுடைமை .
அலுத்தல் சோர்தல் ; தளர்தல் ; களைத்தல் .
அலுத்தன் பற்றற்றவன் .
அலுப்பு தளர்வு ; சோர்வு ; களைப்பு .
அலுவல் தொழில் .
அலுவீகம் வில்வமரம் .
அலேகம் எழுதப்படாத வெள்ளேடு ; உலோகமணல் .
அலை நீர்த்திரை ; கடல் ; திரையடித்தொதுக்கிய கருமணல் ; நிலம் ; மது ; கண்டனம் ; வருத்துகை ; மிகுதி ; கொலை .
அலைக்கழித்தல் அலைத்து வருத்துதல் .
அலைக்கழிதல் அலைந்து வருந்துதல் .
அலைக்கழிவு உலைவு ; அலைந்து வருந்தும் வருத்தம் .
அலைகாற்று பெருங்காற்று .
அலைகுலையாக்குதல் நிலைகுலையச் செய்தல் .
அலைச்சல் திரிகை ; தொந்தரவு .
அலம்பல் ஆரவாரம் ; எதிர்பாரா விளம்பரம் ; இடையூறு ; கொள்ளைநோய் ; அலக்குத்தடி ; வளார் .
அலம்பு பத்து நாடிகளுள் ஒன்று .
அலம்புடை பத்து நாடிகளுள் ஒன்று .
அலம்புதல் ஒலித்தல் ; ததும்புதல் ; தவறுதல் ; அலைதல் ; கழுவுதல் ; அலைத்தல் ; கலத்தல் .
அலம்வருதல் அமைவுண்டாதல் ; மனம் சுழலுதல் .
அலமரல் சுழற்சி ; மனச்சுழற்சி ; வருத்தம் ; அச்சம் .
அலமருதல் சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் .
அளமருதல் சுழலுதல் ; மனம் சுழலுதல் ; அஞ்சுதல் ; வருந்துதல் ; அசைதல் .
அலமலத்தல் அங்கலாய்த்தல் ; கலங்குதல் .
அலமலத்துதல் கலக்கமுறச் செய்தல் .
அலமாப்பு துன்பம் .
அலமாரி பேராசையுள்ளவன் ; சுவர் அடுக்குமாடம் ; நிலைப்பேழை .
அலமுகம் கலப்பை நுனி ; கொழுமுனை .
அலமுகவிரும்பு கலப்பைக்கொழு .
அலர் பழிச்சொல் ; மலர்ந்த பூ ; மகிழ்ச்சி ; நீர் ; மஞ்சள் ; மிளகுகொடி .
அலர்த்துதல் மலரச்செய்தல் .
அலர்தல் மலர்தல் ; பரத்தல் ; பெருத்தல் ; விளங்குதல் ; சுரத்தல்
அவசானம் எல்லை ; முடிவு ; இறப்பு .
அவசித்தாந்தம் தவறான முடிவு .
அவசியம் இன்றியமையாமை ; கட்டாயம் ; உறுதி .
அவடி இடுதிரை .
அவிடி இடுதிரை .
அவடு பிடர் ; குழி ; கிணறு .
அவண் அவ்விடம் ; அவ்விதம் .
அலைத்தல் அசைத்தல் ; அலையச் செய்தல் ; நீரைக் கலக்குதல் ; வருத்துதல் ; அடித்தல் ; நிலைகெடுத்தல் ; உருட்டுதல் ; அலைமோதுதல் .
அலைத்திடல் காண்க : அலைத்தல் .
அலைதரல் அலைதல் ; அலையச் செய்தல் .
அலைதல் திரிதல் ; வருந்துதல் ; சோம்புதல் ; ஆடுதல் .
அலைதாங்கி அலையைத் தடுக்கும் செய்கரை .
அலைதாடி ஆடுமாடுகளின் கழுத்தில் புடைத்துத் தொங்கும் தசை .
அலைநீர் கடல் .
அலைப்படுதல் வருந்துதல் .
அலைப்பு அசைக்கை ; வருத்தம் .
அலைமகள் திருமகள் .
அலையல் திரிகை ; சோர்வு ; சோம்பல்
அலைவாய் கடல் ; திருச்செந்தூர் .
அலைவு அசைகை ; கலக்கம் .
அலோகம் காணப்படாத உலகம் .
அலௌகிகம் உலகநடைக்கு மாறானது .
அவ் சுட்டுச்சொல் ; அவை .
அவ்வது அவ்வாறு .
அவ்வாய் அழகிய இடம் .
அவ்வாறு அப்படி ; தனித்தனி ஆறு .
அவ்விடம் அங்கு .
அவ்வித்தல் பொறுமை இழத்தல் ; மனம் கோணச்செய்தல் .
அவ்விதழ் அழகிய பூவிதழ் .
அவ்வியக்தம் அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா .
அவ்வியத்தம் அறியப்படாத எண் ; நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று ; மூலப்பிரகிருதி ; பீடத்தோடுகூடிய சிவலிங்கம் ; ஆன்மா .
அவ்வியத்தன் கடவுள் ; அறிவிலி .
அவ்வியம் மனக்கோட்டம் ; பொறாமை , வஞ்சகம் ; தேவர்க்கிடும் பலி ; காண்க : அவ்வியயம் .
அவ்வியயம் அழியாதது ; இடைச்சொல் .
அவ்வியயன் அழிவில்லாதவன் ; கடவுள் .
அவ்வை தாய் ; கிழவி ; தவப்பெண் ; காண்க : ஔவை .
அவ்வோன் அவன் .
அவ கீழ் முதலிய பொருள்களைக் குறித்து வரும் ஒரு வடமொழி முன்னொட்டு ; எதிர்மறை முதலியவற்றைக் குறிக்க வரும் ஒரு வடமொழி முன்னொட்டு .
அவக்கவக்கெனல் விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு .
அவக்கிரகம் தடை ; மழையின்மை ; யானை நெற்றி .
அவக்கிரசம் காடி .
அவக்குறி கேடு காட்டும் குறி .
அவக்கொடை தகுதியற்றவர்க்குத் தரும் பொருள் ; பயனற்ற அறம் .
அவகடம் வஞ்சகம் ; தீச்செயல் ; தீவினை .
அவகதவாய் கீழக்காய்நெல்லிப் பூண்டு .
அவகதி தாழ்ந்தநிலை .
அவகாசம் சமயம் ; இடம் ; திராணி ; உரிமை .
அவகாசமுறி பாகபத்திரம் .
அவகாயம் வானம் .
அவகாரம் முதலை ; போர் முதலியவற்றில் இளைப்பாறுகை ; சூது ; களவு ; கொள்ளை ; பொருள் ; அழைப்பு .
அவகிருத்தியம் கெட்ட செய்கை .
அவகீதம் பலர் பழித்தது ; அபவாதம் ; வசைப்பாட்டு .
அவகீர்த்தி புகழ்க்கேடு .
அவகுண்டனம் மூடுகை ; முகத்தை மறைக்கும் துணி .
அவகுணம் தீக்குணம் .
அவகேசி பூத்தும் காயாத மரம் .
அவகேடு பெருந்தீங்கு .
அவச்சாவு காண்க : அகாலமிருத்து .
அவச்சின்னம் குறிப்பிட்டு வேறுபடுத்தப்பட்டது .
அவச்சுழி தீவினை .
அவச்சேதகம் வேறுபடுத்தும் தன்மை .
அவச்சொல் பழிச்சொல் .
அவசகுனம் தீநிமித்தம் .
அவசங்கை அவமரியாதை .
அவசத்தம் அமங்கல ஒலி ; பிழைச் சொல் .
அவசம் தன்வசப்படாமை .
அவசர்ப்பிணி வாழ்நாள் ; போகம் முதலியவை சுருங்கும் காலம் .
அவசரக்குடுக்கை பதற்றக்காரன் .
அவசரம் சமயம் ; விரைவு ; இன்றியமையாமை ; கோலம் ; மழை ; ஆண்டு ; அரசாங்கப் பதவிகளுள் ஒன்று .
அவசன் தன்வசம் இழந்தவன் .
அலைசடி சோர்வு .
அலைசடை சோர்வு .
அலைசல் அலைகை ; துன்பம் ; சோம்பல் .
அலைசுதல் ஆடை முதலியவற்றை நீரில் அலைத்துக் கழுவுதல் ; குலுக்குதல் ; கலக்குதல் ; சோம்புதல் .
அலைசோலி அலைச்சல் ; தொந்தரவு . 
அவபிருதம் வேள்வி முடிவில் நீராடுகை .
அவபுத்தி கெடுமதி .
அவம் வீண் ; பயனின்மை ; கேடு ; ஆணை ; அழைப்பு ; வேள்வி ; ஆகாயத்தாமரை .
அவமதி அவமானம் ; நிந்தனை ; இகழ்ச்சி .
அவமதிச்சிரிப்பு இகழ்ச்சி நகை .
அவமதித்தல் இகழ்தல் .
அவமதிப்பு இகழ்ச்சி .
அவமரணம் காண்க : அகாலமிருத்து .
அவமரியாதை மரியாதைக் குறைவு .
அவமழை கேடு விளைக்கும் மழை .
அவமாக்குதல் வீணாக்குதல் .
அவமானம் காண்க : அவமதிப்பு .
அவமானித்தல் இகழுதல் .
அவமிருத்து காண்க : அகாலமிருத்து .
அவயங்காத்தல் காண்க : அடைகாத்தல் .
அவயம் அடைக்கலம் புகுவோன் ; புகலிடம் ; அடைகாக்கை ; வெட்டிவேர் ; இரைச்சல் .
அவயவம் உடலின் உறுப்பு ; அங்கம் ; இலாமிச்சைச் செடி .
அவயவி உறுப்புள்ளது ; உடல் ; அவை உறுப்பினன் .
அவயோகம் தீய நிகழ்ச்சி .
அவர் அவன் , அவள் என்பதன் பன்மைச் சொல் ; ஒருவரைக் குறிக்கும் பன்மைச் சொல் .
அவர்கள் காண்க : அவர் ; ஒருவர் பெயரை அடுத்து வழங்கும் மரியாதைச் சொல் .
அவர்ணியம் உவமானம் .
அவர்வயின்விதும்பல் பிரிவின்கண் தலைமகனும் தலைமகளும் வேட்கை மிகுதியால் ஒருவரிடம் ஒருவர் செல்ல விரைதல் .
அவரகாத்திரம் கால் .
அவணம் இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு .
அவணன் திண்ணியன் ; செல்வாக்குடையவன் .
அவணி நன்மை .
அவத்தம் காண்க : அபத்தம் ; பயனற்றது ; கேடு ; நாய்வேளைப் பூண்டு .
அவத்தன் பயனற்றவன் .
அவத்தியம் குற்றம் .
அவத்திரியம் ஆபத்து , கேடு .
அவத்துறை தீயவழி .
அவத்தை நிலை ; வேதனை ; மனநிலை ; ஆன்மாவுக்குண்டாகும் சாக்கிர முதலியநிலை ; பாலிய முதலிய மானிடப் பருவங்கள் .
அவத்தைப்பிரயோகம் அறுபத்து நான்கு கலையுள் சூனியம் வைத்துக் கொல்லும் வித்தை .
அவதஞ்சம் செவிமலர்ப்பூ ; தலைமாலை .
அவதந்திரம் சூழ்ச்சி ; சதியோசனை .
அவதரம் சமயம் .
அவதரித்தல் பிறத்தல் ; தங்குதல் .
அவதாதம் தூய்மை ; பொன்மை ; வெண்மை அழகு .
அவதாரணம் அவதாரம் ; தேற்றம் ; உறுதி ; முகவுரை .
அவதாரம் இறங்குகை ; உயர்பிறப்பு ; பிரிக்கை ; தீர்த்தத்துறை .
அவதாரிகை முகவுரை ; முன்னுரை .
அவதானம் மேன்மைச் செயல் ; கவனம் ; நினைவாற்றல் ; சாதுரியம் ; பிரிவு ; ஒரே சமயத்தில் பல பொருள்களைக் கவனிக்கை ; வரம்பு மீறுகை ; மனஒருமைப்பாடு ; முடிவு .
அவதானி கருத்துள்ளவன் ; வேதங்களில் தேர்ச்சியுள்ளவன் ; அவதானம் செய்வோன் .
அவதி துன்பம் ; எல்லை ; தவணை ; அளவு ; கணக்கு ; ஐந்தாம் ; வேற்றுமை ; எல்லைப்பொருள் ; அவதிஞானம் ; பரிச்சேதம் ; காலம் ; குழி ; விடுமுறை .
அவதிகத்தம் கடல்நுரை .
அவதிகாரகம் நீக்கப் பொருளைக் காட்டும் உருபுடைப் பெயர் .
அவதிஞானம் முற்பிறப்பை அறியும் அறிவு : சேய்மையில் உள்ளவற்றைப் பொறி உதவியின்றி உணரும் உணர்ச்சி ; முக்காலத்தையும் அறியும் அறிவு .
அவதும்பரம் அத்திப்பழம் .
அவதூதம் நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று முழுத் துறவு அம்மணம் .
அவதூதன் முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி .
அவதூதி முற்றத் துறந்தவன் நிர்வாண சன்னியாசி .
அவதூறு பழிச்சொல் .
அவந்தரை சீர்கேடு பயனின்மை ; அநாத நிலை .
அவந்தன் பயனற்றவன் .
அவந்தி முக்திநகர் ஏழனுள் ஒன்றாகிய உச்சயினி ; காடி ; கிளி ; பிள்ளை பெற்றவள் ; காய்க்கும் மரம் ; ஈற்றுப்பசு கோவைக்கொடி .
அவந்திக்கண்ணி வெருகஞ்செடி .
அவந்திகை உச்சயினி ; கிளி .
அவந்திசோமம் காடி ; புளித்த கஞ்சி .
அவந்தன் தலைகுனிந்து வணங்குவோன் .
அவநாசி கலைமகள் .
அவநியாயம் அநியாயம் , நீதியின்மை .
அவநீதன் நீதியற்றவன் .
அவநுதி ஒன்றன் தன்மையை மறுத்துவேறொன்றன் தன்மையை ஏற்றிக் கூறும் அணி புகழ்தல் .
அவநெறி தீயவழி , பாவவழி .
அவப்படுதல் பயனின்றாதல் .
அவப்பலம் தீப்பயன் .
அவப்பிரசவம் ஆறு மாதத்துக்குமேல் நிகழும் கரு அழிவு .
அவப்பிரஞ்சம் ஒருவகைப் பிராகிருத மொழி ; இழிசினர் பேசும் வடமொழி .
அவப்பிரஞ்சனம் ஒருவகைப் பிராகிருத மொழி ; இழிசினர் பேசும் வடமொழி .
அவப்பேர் இகழ்மொழி .
அவப்பொழுது வீண்காலம் .
அவபத்தி பத்தி இன்மை ; மூடபத்தி .
அவபத்தியம் பத்தியக்கேடு .
அவபிரதம் வேள்வி முடிவில் நீராடுகை .       
அவா எனக்கு இது வேண்டும் என்னும் எண்ணம் ; பெருவிருப்பம் ; இறங்குகை .
அவாச்சியம் சொல்ல முடியாதது .
அவாச்சியன் குறிப்பிடத்தகாதவன் .
அவாசி தென்திசை .
அவாசீனம் தென்திசை .
அவாதிதம் கண்டிக்கப்படாதது .
அவாந்தரப்பிரளயம் இடையில் உண்டாகும் உலக அழிவு .
அவாந்தரம் இடையில் உள்ளது ; வெறுவெளி ; உதவியின்மை ; அழிவு .
அவாந்தரபேதம் உட்பிரிவு .
அவாந்தரவெளி வெட்டவெளி .
அவாய்நிலை ஒன்றை வேண்டிநிற்கும் நிலை , ஒரு சொல் தன்னோடு பொருந்திப் பொருள் முடிதற்குரிய மற்றொரு சொல்லை வேண்டி நிற்கும் நிலை .
அவாயம் காண்க : அபாயம் .
அவாரபாரம் கடல் .
அவாரி சிறுநீர் ; தடையின்மை .
அவாவல் காண்க : அவாவுதல் .
அவாவறுத்தல் ஆசையை ஒழித்தல் .
அவாவன் ஆசை உடையவன் .
அவாவுதல் விரும்புதல் , பற்றுச்செய்தல் ; ஒன்றை வேண்டி நிற்றல் .
அவி வேள்வித்தீயில் இடும் கடவுளர்க்குரிய உணவு ; உணவு ; சோறு ; நெய் ; நீர் ; ஆடு ; கதிர் ; கதிரவன் ; காற்று ; மேகம் ; மலை ; மதில் ; பூப்பினள் .
அவி (வி) தணி ; அழி .
அவிக்கனம் இடையூறு இன்மை .
அவிக்கை அவித்தல் .
அவிகம் வைரம் .
அவிகாரம் விகாரம் அற்றது , மாறாதது ; கடவுள் .
அவிகாரன் கடவுள் ; ஆட்டுக்காரன் .
அவிகாரி விகாரம் அற்றது ; மாறாதவன் ; கடவுள் .
அவிச்சன் தந்தை .
அவிச்சின்னம் இடைவிடாமை ; பிரிக்கப்படாமை .
அவிச்சை காண்க : அவித்தை .
அவிசல் அவிந்துபோனது .
அவரசன் தம்பி .
அவரசை தங்கை .
அவரம் பிந்தியது ; யானையின் பின்னங்காற் புறம் .
அவராகம் இச்சையின்மை .
அவராத்திரி வீணான இரவு .
அவரூபம் உருவக்கேடு , விகாரவடிவம் .
அவரை அவரைக்கொடி .
அவரைப்பிராயம் குழந்தைப்பருவம் .
அவரோகணம் இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை .
அவரோகம் இறங்குகை ; விழுது ; இசை முறையில் வரும் கமகம் பத்தனுள் ஒன்று ; வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை .
அவரோகி ஆலமரம் .
அவரோதம் அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை .
அவரோதனம் அந்தப்புரம் ; அரண்மனை ; மறைவு ; வேலி ; முற்றுகை .
அவரோபணம் இறக்குதல் ; வேரோடு பிடுங்கல் .
அவல் நெல் இடியல் ; விளைநிலம் ; பள்ளம் ; குளம் .
அவலச்சுவை ஒன்பான் சுவைகளுள் ஒன்று , துன்பச்சுவை .
அவலச்சுழி தீவினை .
அவலட்சணம் அழகின்மை .
அவலம் துன்பம் ; வறுமை ; பலவீனம் ; கவலை ; கேடு ; குற்றம் ; நோய் ; அழுகை ; அவலச்சுவை ; மாயை ; பயன்படாது ஒழிதல் ; இடப்பக்கம் .
அவலம்பம் சார்பு ; பற்றுக்கோடு .
அவலம்பித்தல் சார்ந்து நிற்றல் ; பற்றுதல் .
அவலன் குற்றமுள்ளவன் ; பயனற்றவன் .
அவலி பூனைக்காலிச் செடி .
அவலிடி வரிக்கூத்துவகை .
அவலித்தல் வருந்துதல் ; அழுதல் ; பதறுதல் .
அவலுப்பு அவுரியினின்று எடுக்கும் உப்பு .
அவலேசம் அற்பம் ; அவமானம் .
அவலை கடுப்பு ; காடு .
அவலோகம் பார்வை .
அவலோகனம் பார்வை .
அவலோகித்தல் நோக்குதல் .
அவவாதம் காண்க : அபவாதம் ; ஆணை ; நம்பிக்கை .
அவவு காண்க : அவா .
அவள் பெண்பால் சுட்டுப் பெயர் .
அவளம் தீமை .
அவளைதுவளை கதம்ப உணவு .
அவற்கம் கஞ்சி .
அவன் ஆண்பால் சுட்டுப் பெயர் .
அவனி உலகம் , பூமி .
அவனிகேள்வன் நிலமகளின் கணவனான திருமால் .
அவனிகை இடுதிரை .
அவனிபன் அரசன் .
அவனிபாரகன் அரசன் .
அவனிபாலகன் அரசன் .
அவனிபாலன் அரசன் .       
அவிர் ஒளி .
அவிர்தல் ஒளிர்தல் ; பீறுதல் .
அவிர்ப்பாகம் காண்க : அவிப்பாகம் .
அவிரதம் என்றும் , எப்பொழுதும் .
அவிருகம் அதிவிடயப் பூண்டு .
அவிருத்தம் பகையில்லாதது .
அவிரோதம் மாறு இன்மை ; நட்பு .
அவிவாதம் மாறுபாடு இல்லாமை ; இசைவு .
அவிவு ஒழிவு .
அவிவேகம் பகுத்தறிவு இன்மை .
அவிவேகி பகுத்தறிவு இல்லாதவன் .
அவிழ் பருக்கை , சோறு .
அவிழ்த்தல் கட்டு நீக்குதல் ; மலரச்செய்தல் ; விடுகதைப் பொருளை விடுத்தல் .
அவிழ்த்துக் கொடுத்தல் சொந்தப் பொருளிலிருந்து எடுத்துக் கொடுத்தல் .
அவிழ்தம் மருந்து , ஔடதம் .
அவிழ்தல் நெகிழ்தல் ; மலர்தல் ; உதிர்தல் ; சொட்டுதல் ; இளகுதல் ; பிரிதல் .
அவிழிகம் மலர்ந்த பூ .
அவின் காண்க : அபின் .
அவினயம் அடக்கம் இல்லாமை .
அவினாபாவம் விட்டு நீங்காத உடன் நிகழும் தன்மை .
அவினாபாவி பிரிக்க முடியாதது .
அவினாபூதம் நீக்கமீன்றி இருப்பது .
அவீசி தூமகேதுவகை ; திரை இல்லாதது .
அவீரை பிள்ளை இல்லாக் கைம்பெண் .
அவுக்கவுக்கெனல் காண்க : அவக்கவக்கெனல் .
அவுசனம் காண்க : ஔசனம் ; உசனம் .
அவுசு ஒழுங்கு .
அவுசுக்காரன் ஆடையில் விருப்பமுள்ளவன் .
அவுண் அசுரசாதி .
அவுணன் அசுரன் .
அவுத்திரி காண்க : ஔத்திரி .
அவுதா அம்பாரி .
அவுரி நீலச்செடி ; மீன்வகை .
அவுரிச்சால் வாயகன்ற பெரிய சால் .
அவுரிப்பச்சை பச்சைக் கருப்பூரம் .
அவுல்தார் சிறுபடைக்குத் தலைவன் .
அவுனியா வவ்வால் மீன் .
அவுனுதம் பித்தநோய்வகை ; கிரந்திநோய்வகை .
அவேத்தியன் அறியப்படாதவன் .
அவை மாந்தர் கூட்டம் ; அறிஞர் கூட்டம் ; சபா மண்டபம் ; புலவர் ; நாடக அரங்கு ; பன்மைச்சுட்டு ; அப்பொருள்கள் .
அவைக்களம் சபை கூடும் இடம் .
அவைத்தல் நெல் முதலியவற்றைக் குற்றுதல் ; கையால் குத்துதல் ; அவித்தல் ; நெரித்தல் .
அவைப்பரிசாரம் சபை வணக்கம் .
அவைப்பு குற்றப்பட்ட அரிசி .
அவையடக்கம் சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை .
அவையடக்கு சபையோர்க்கு வழிபடு கிளவி கூறுகை .
அவையம் அறிஞர் கூட்டம் ; நியாயம் உரைக்கும் சபையோர் ; அவைக்களம் ; இலாமிச்சை .
அவையம்போடுதல் சத்தமிடுதல் .
அவிசல்நாற்றம் அழுகிய காய் முதலியவற்றின் தீநாற்றம் .
அவிசற்பல் சொத்தைப்பல் .
அவிசாரம் ஆராய்ச்சியில்லாமை ; கவலை இல்லாமை ; காண்க : அபிசாரம் .
அவிசாரி விபசாரி ; கவலையற்றவன் (ள்) .
அவிசு வேள்வித்தீயில் தேவர்க்கும் கொடுக்கும் உணவு ; நெய் ; கஞ்சிவடியாது சமைத்த சோறு .
அவிசுவாசம் நம்பிக்கையின்மை ; நன்றி இன்மை .
அவிஞ்சன் அறியாமை உடையோன் , போதிக்கப்படாதவன் .
அவிஞ்சை காண்க : அவித்தை .
அவிட்டம் இருபத்துமூன்றாம் நட்சத்திரம் .
அவித்தல் வேகச்செய்தல் ; அணைத்துவிடுதல் ; அடக்குதல் ; கெடுத்தல் ; துடைத்தல் ; நீக்குதல் .
அவித்துருமம் இருப்பை மரம் .
அவித்துவையல் பச்சடி .
அவித்தை அறியாமை ; மாயை ; ஆணவம் ; ஜவகைத் துன்பங்களுள் ஒன்று ; மோகம் .
அவிதல் பாகமாதல் ; இறுக்கத்தால் புழுங்குதல் ; ஒடுங்குதல் ; ஓய்தல் ; அணைந்துபோதல் ; குறைதல் ; பணிதல் ; அழிதல் ; காய்கனி முதலியன சூட்டால் வெதும்புதல் ; சாதல் .
அவிதா ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் .
அவிநயக்கூத்து பாடற்பொருளைக் கையால் காட்டி ஆடும் கூத்து .
அவிநயம் காண்க : அபிநயம் ; ஓர் யாப்பிலக்கணம் .
அவிநயர் கூத்தர் ; அவிநய யாப்பிலக்கண நூலின் ஆசிரியர் .
அவிநாசவாதி பொருள் அழியாதது என்னும் கொள்கையை உடையவன் .
அவிநாசி கடவுள் .
அவிப்பலி தேவர்க்குக் கொடுக்கும் உணவு ; வீரன் சூளுரைத்துத் தன்னைத் தீக்குப் பலி கொடுக்கை .
அவிப்பாகம் தேவர் உணவின் பங்கு .
அவிப்பிணம் உவர்மண்ணை எடுத்துக் காய்ச்சும் உப்பு .
அவிபக்த குடும்பம் பிரிக்கப்படாத சொத்துள்ள குடும்பம் .
அவிபாகம் பிரிக்கப்படாதது .
அவிமுத்தம் காசி நகரம் .
அவியல் பாகஞ் செய்கை ; உணவு ; கறிவகை ; வெப்பம் ; புழுக்கம் ; வாய்ப்புண் .        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;