கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 10 மே, 2013

அகராதி, இ

சொல்
அருஞ்சொற்பொருள்
இனமாற்றல் ஓரினக் கணக்கை மற்றோரினக் கணக்காக மாற்றுகை .
இனமுறை ஒத்த சாதி .
இனமொழி எண்வகை விடைகளுள் ஒன்று .
இனமோனை இனவெழுத்தால் வரும் மோனை .
இனவழி மரபுவழி , வமிச பரம்பரை .
இனவழிக் கணக்கு பேரேடு .
இனவாரி இனம் இனமாய் .
இனவெதுகை இனவெழுத்தால் வரும் எதுகை ,
இனவெழுத்து தானம் , முயற்சி , அளவு , பொருள் , வடிவு முதலிய ஏதுக்களினால் ஒரு வகைப்பட்டுவரும் எழுத்துகள் ; முயற்சிவகையால் ஒன்றற்கொன்று இனமான எழுத்துகள் .
இனன் சூரியன் ; உறவினன் ; ஒத்தவன் ; ஆசிரியர் .
இனாப்பித்தல் துன்பமுண்டாக்குதல் .
இனாம் பயனோக்கா ஈகை ; நன்கொடை ; மானியம் .
இனாம்தார் மானிய நிலத்துக்குரியவர் .
இனி இப்பொழுது ; இனிமேல் ; பின்பு ; இப்பால் ; இதுமுதல் .
இனித்தல் தித்தித்தல் ; இன்பமாதல் .
இனிது இன்பந்தருவது ; நன்மையானது ; நன்றாக .
இனிப்பு இனிமை ; தித்திப்பு ; மகிழ்ச்சி
இனிப்புக்காட்டுதல் ஆசைகாட்டுதல் ; சுவையாதல் .
இனிமேல் இதற்குப் பிற்பாடு ; இதுமுதல் ; வருங்காலத்து .
இனிமை இனிப்பு , தித்திப்பு ; இன்பம் .
இனியர் இன்பம் தருபவர் ; மகளிர் .
இனும் இன்னும் .
இனை இன்ன ; இத்தனை ; வருத்தம் .
இனைத்தல் வருத்துதல் ; கெடுத்தல் .
இனைத்து இத்தன்மைத்து ; இவ்வளவினது .
இனைதல் வருந்துதல் ; இரங்குதல் ; அஞ்சுதல் .
இனைய இத்தன்மைய ; இதுபோல்வன .
இனைவரல் வருந்துதல் , இரங்குதல் .
இனைவு வருத்தம் ; இரக்கம் .
இன்று இலை ; இந்த நாள் ; ஓரசைச்சொல் .
இன்றைக்கு இந்த நாளுக்கு .
இன்றையதினம் இந்த நாள் .
இன்ன இத்தன்மையான ; இப்படிப்பட்டவை ; ஓர் உவமவுருபு .
இன்னணம் இன்ன வண்ணம் என்பதன் மரூஉ ; இவ்விதம் , இவ்வாறு .
இன்னது இத்தன்மையது ; இது .
இன்னம் இத்தன்மையுடையேம் ; காண்க : இன்னும் ; இனிமேலும்
இன்னமும் காண்க : இன்னும் .
இன்னயம் உபசார மொழி .
இன்னர் இத்தன்மையர் ; உற்பாதம் .
இன்னல் துன்பம் ; தீமை ; குற்றம் .
இன்னன் இப்படிப்பட்டவன் ,இத்தன்மையன் .
இன்னா துன்பம் ; தீங்கு தருபவை ; கீழ்மையான ; இகழ்ச்சி ; வெறுப்பு .
இன்னாங்கு தீமை ; துன்பம் ; கடுஞ்சொல் .
இன்னாங்கோசை கடுமையான ஓசை .
இன்னாது தீது ; துன்பு .
இன்னாப்பு துன்பம் .
இன்னாமை இனியவாகாமை ; துன்பம் , துயரம் ; தீமை .
இன்னார் பகைவர் .
இன்னாரினியார் பகைவரும் நண்பரும் .
இன்னாரினையார் இத்தன்மை உடையவர் .
இன்னாலை இலைக் கள்ளிமரம் .
இன்னாவிசை செய்யுட் குற்றம் இருபத்தேழனுள் ஒன்று .
இன்னான் இத்தன்மையன் ; துன்பம் செய்பவன் .
இன்னிசை இன்ப ஓசை ; பண் ; ஏழு நரம்புள்ள வீணை ; இனிய பாட்டு ; இன்னிசை வெண்பா .
இன்னிசைக்காரர் இசைபாடுவார் , பாணர் .
இன்னிசை வெண்பா நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா .
இன்னிசை வெள்ளை நான்கடியாய்த் தனிச்சீர் இன்றிவரும் வெண்பா .
இன்னியம் இசைக்கருவிகள் .
இன்னியர் பாணர் .
இன்னிலை இல்லற நிலை ; பதினெண் கீழ்க் கணக்கு நூலுள் ஒன்று என்ப .
இன்னினி இப்பொழுதே .
இன்னும் இவ்வளவு காலம் சென்றும் ; மறுபடியும் ; மேலும் ; அன்றியும் .
இன்னுமின்னும் மேன்மேலும் .
இன்னுழி இன்ன இடத்து .
இன்னே இப்பொழுதே ; இவ்விடத்தே ; இவ்விதமாகவே .
இன்னோன் இப்படிப்பட்டவன்
இனக்கட்டு பந்துக்கட்டு ; உறவினர்களிடையே உள்ள நெருக்கம் , இனக் கூட்டம் ; முறைமை .
இனங்காப்பார் கோவலர் , ஆயர் .
இனஞ்சனம் உற்றார் உறவினர் .
இனத்தான் உறவினன் .
இனம் வகை ; குலம் ; சுற்றம் ; சாதி ; கூட்டம் ; திரள் ; அரசர்க்கு உறுதிச்சுற்றம் ; அமைச்சர் ; உவமானம் .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;