கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நான்மணிக்கடிகை-1

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதுவாகும்
அத்துடன் இது ஒரு நீதி நூல் ஆகும் இது விளம்பி
நாகனார் என்னும் புலவரால் இயற்றப்பட்டது ஆகும்
இந் நூல் நூற்றியொரு பாடல்களைத் தன்னகத்தே
கொண்டுள்ளது ஒவ்வொரு பாடலும் நான்கு அடிகளால்
ஆனது. இந் நூற் பாடல்கள் ஒவ்வொன்றிலும் நான்கு
மணியான கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.
இதனாலேயே இது நான்மணிக்கடிகை எனப் பெயர்
பெற்றது அத்துடன் நான்மணிக்கடிகை என்பது நான்கு
இரத்தினத் துண்டங்கள் என்னும் பொருளைத் தரும்.
ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக்
கூறுவதால் இப் பெயர் பெற்றது. இதனை இயற்றியவர்
விளம்பி நாகனார் என்பவர். விளம்பி என்பது ஊரைக்
குறிப்பதாகக் கொள்ளலாம். இந் நூலில் உள்ள கடவுள்
வாழ்த்துச் செய்யுட்கள் இரண்டும் மாயவனைப்
பற்றியவை. எனவே, நூல் ஆசிரியர் வைணவ
சமயத்தினர் என்று கொள்ளலாம். கடவுள் வாழ்த்து
நீங்கலாக 101 செய்யுட்கள் உள்ளன. 'மதி என்னும்
மாயவன்' என்ற கடவுள் வாழ்த்தும், 'கற்ப, கழிமடம்
 அஃகும்' (27), 'இனிது உண்பான் என்பான்' (58), என்னும்
செய்யுட்களும் பஃறொடை வெண்பாக்கள். ஏனைய
அனைத்தும் நேரிசை, இன்னிசை, அளவியல்
வெண்பாக்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;