கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

சிறுபாணாற்றுப்படை-4

சிறுபாணாற்றுப்படையில் மானிட மாண்புகள்
சிறுபாணாற்றுப்படையில் காணலாகும் மானிட மாண்புகளைக் கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தி உரைக்கலாம்.பாணர்கள் வழி அறியலாகும்

மானிட மாண்புகள்
1.நல்லியக்கோடன் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
2.கடையெழு வள்ளல்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
3.பொதுமக்கள் வழி அறியலாகும் மானிட மாண்புகள்
4.பாணர்களின் வழி அறியலாகும் மானிட மாண்புகள்

தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்னும் உயர்ந்த குணம்
வறுமையிலும் செம்மை
பகிர்ந்தளிக்கும் பாங்கு
தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் சிறுபாணர்களின் வாழ்க்கை வறுமை நிறைந்தது. எனினும் அவர்களின் சிந்தனை வளமானது - பிறருக்கு உதவும் மனப்பான்மை மிக்கது. தாங்கள் இன்னாரிடம் சென்றோம்; அவர் தங்களுக்கு இன்னின்ன பொருள்களைப் பரிசிலாகத் தந்தார்; எனவே தங்களைப் போல வறுமையில் வாடுகின்ற பாணர்கள் தங்களைப் போலவே பரிசில்கள் பல பெற்று வறுமை நீங்கி வளமுடன் வாழ வேண்டும் என்று பாணர்கள் விழைந்ததனை - தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற பாணர்களின் பரந்த உள்ளத்தை சிறுபாணாற்றுப்படை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;