கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 19 அக்டோபர், 2011

சிறுபாணாற்றுப்படை-6

வறுமையிலும் செம்மை
1) உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி முதலான பொருட்கள் இல்லாது அடுக்களை வெறிச்சோடிக் கிடந்தது. இதனால் அடுப்புப் பற்ற வைத்து வெகு நாட்களாகி விட்டது. இதனை அடுப்பளை ஆம்பிப் பூத்தது என்று சிறுபாணாற்றுப்படை கூறுகிறது.

2) பாணன் வீட்டில் வளர்ந்த நாய் குட்டிகளை ஈன்றிருந்தது. அக்குட்டிகள் இன்னும் கண்களைக் கூட திறக்கவில்லை. அவை பால் குடிப்பதற்காகத் தாயை நாடின. ஆனால் வறுமையில் வாடிய அந்நாய் பால் சுரக்காமையால் தன் குட்டிகளுக்குப் பால் கொடுக்காது துரத்தியது. அதனையும் மீறி குட்டிகள் தாயின் பால் மடியைப் பற்றி இழுத்தன. வலி தாங்காத அந்தத் தாய் நாய் அலறித் துடித்தது.

3) அவனது வீடும் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பழமையானது - சிதிலமடைந்தது - இடிந்த சுவர்களை உடையது - சுவரில் ஆங்காங்கே பாம்புப் புற்றுகள் கிளம்பி இருந்தன - வீட்டுக் கூரையில் இருந்த மூங்கில் கழிகள் கட்டுகள் அறுந்து கீழே விழும் நிலையில் இருந்தன - கூரையில் கீற்றுகள் இருந்தும் இல்லாதது போல தோன்றியது.

4) பாணனின் மனைவியும் வறுமையில் வாடினாள். அவள் தோற்றத்தைப் பாருங்கள்: பசியால் இளைத்த உடல். ஒட்டிய வயிறு. கைகளில் வளையல்களைத் தவிர வேறு அணிகலன்கள் எதுவும் இல்லை. இத்தகைய வறுமையிலும் கூட கற்பு நெறி பிறழாதவளாக பாணினியர் இருந்தனர்.

5) அவர்கள் அன்றாட உணவிற்கே மிகுந்த அல்லலுக்கு உள்ளானார்கள். அவர்கள் உணவு உண்டு வெகுநாட்களாகி விட்டன. பசியோ கட்டுக்கடங்கவில்லை. எனவே பசித்துன்பம் வாட்டியதால் தன் வீட்டுக் குப்பையில் முளைத்த வேளைக் கீரையைப் பறித்து வந்தாள். தன் கை நகங்களினால் கிள்ளி வேக வைத்தாள். பணச் செலவு இல்லாமல் கிடைத்த அந்தக் கீரைக்கு இட வேண்டி உப்புக்கூட அந்த வீட்டில் இல்லை. எனவே, உப்பில்லாமலேயே அந்தக் கீரையை உண்பதற்கு வலுடன் பலர் காத்திருந்தனர்.

வறுமையிலும் செம்மை என்பது போல தன் குடும்ப வறுமை வெளியில் தெரியாமல் இருப்பதற்காக வீட்டு வாயில் கதவைத் தாழிட்டு மூடினாள். உப்பில்லாமல் சமைத்த வேளைக் கீரையை அனைவரும் உண்டனர். இவ்வாறு "வெந்ததைத் தின்று விதி வந்தால் சாவோம்" என்ற வறிய சூழலில் பாணனின் குடும்பம் இருந்தாலும் வறுமையிலும் செம்மை நிலைப் பிறழாது வாழ்ந்ததைக் காண முடிகிறது.ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்கில்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சிநாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்
அழிபசி வருத்தம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;