கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

உதயண குமார காவியம்,-13

பிங்கலனும் கடகனும் உதயணனை அடைதல்


பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும்
தங்குபன்னீ ராயிரந் தானையுடை வீரரும்
அங்குவந்தவ் வண்ணலை அடிவணங்கிக் கூடினர்
பொங்குபுரங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர்.
178


வருடகாரனிடம் உதயணன் தன் சூழ்ச்சி உரைத்தல்


வருடகாரனை அழைத்து வத்தவனியம்புமிப்
பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம்
திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப்
பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர்.
179


உதயணன் ஆருணி அரசன் போர்


அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச்
சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும்
அமைந்த நாற் படையுடனமர்ந்துவந் தெதிர்த்தனன்
அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே.
180


போர்க் காட்சிகள்


விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுவ வேறவும்
பரிந்து பேய்க்கண மாடவும் பல நரிபறைந் துண்ணவும்
முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும்
வரிந்த வெண்சிலை மன்னவன் வத்த வன்கண்கள் சிவந்தவே.
181


உதயணன் ஆருணி மன்னனைக் கொல்லுதல்


மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படையார்த்திடத்
தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால்
மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யில்விருந் தார்கென
ஏற்ற வகையினி லிட்டனனிலங்கு வத்தவ ராசனே.
182


உதயணன் கோசம்பி நகருக்குள் புகுதல்


பகையறவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென
வகையறவேபடுகளங்கண்டு நண்ணிய மற்றது
தொகையுறுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன்
நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன்.
183


உதயணன் அரண்மனை புகுதல்


மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்
கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்
ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன்.
184


உதயணன் திருமுடி சூடுதல்


படுகளத்தி னொந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்
இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்
தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட
முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள்.
185



வத்தவ காண்டம்


உதயணன் அரசு வீற்றிருத்தல்


மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்
பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாசனத்தில்
தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையினீழல்
மின்சொரி தரள வேந்தன் வீற்றிருந்த போழ்தின்
186


உதயணனின் கொடை


மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப
ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே
ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக்
கோற்றொழினடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லுகின்றான்.
187


உதயணன் பத்திராபதி என்னும் யானைக்கு மாடம் கட்டுதலும் உருவம் செய்தலும்


மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய
பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்லத்
துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப்
பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தானன்றே.
188


உதயணன் கோடபதி யாழை மீண்டும் பெறுதல்


அருமறை யோதி நாம மருஞ்சனனந்த ணன்றான்
திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு
வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு
பொருந்தவே கொண்டு வந்து புரலலற் கீந்தானன்றே.
189


பதுமாவதி யாழ் கற்க விரும்புதல்


மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி
பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும்
மதியின்வா சவதத்தைதன் வண்கையினதனைப் போல
விதியினான் வீணை கற்க வேந்த நீ யருள்க வென்றாள்.
190


உதயணன் வாசவதத்தையை நினைத்து வருந்துதல்


பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன்
ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய
வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து
கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான்.
191


உதயணன் முனிவரிடம் கனவு பலன் கேட்டல்


கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார்
அங்கயற் கண்ணி தானு மாரழல் வீந்தா ளல்லள்
கொங்கைநற் பாவை தன்னைக் கொணர நீ பெறுவை யின்பம்
இங்குல கெங்கு மாளு மெழிற்சுதற் பெறுவ ளென்றார்.
192


உதயணன் கனவுப் பயன் கேட்டு மகிழ்தல்


வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம்
தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன
ஒள்ளிய தலத்தின் மிக்கேர ருறுதவ ருரைத்த சொல்வை
வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கினானே.
193


அமைச்சர் உருமண்ணுவா விடுதலை


என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சின் கடிபணிந்து
சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னோடு
ஒன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு
வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டிருந்தான்.
194


உருமண்ணுவா உதயணனை அடைதல்


மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்
காண்டறி வாளனென்றே காவலன் புல்லிக் கொண்டு
மாண்டவன் வந்த தொய்ய வரிசையின் முகமன் கூறி
வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரசூடனின்புற்றானே.
195


வாசவதத்தையை யூகி கௌசாம்பிக்கு கொணர்தல்


வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும்
ஊரணி புகழினான யூகியு மற்றுள் ளாகும்
தாரணி கொடியி லங்குஞ் சயந்தியினின்றும் போந்து
பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார்.
196


உதயணன் யூகி, வாசவதத்தை ஆகியோர் இணைதல்


நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள்
வயந்தகனுரைப்பக் கேட்டு வத்தவன் காவு சேரப்
பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் தழுவிக் கொண்டு
வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை.
197


யூகியின் உரை


இருநில முழுதும் வானு மினிமையிற் கூடினாலும்
திருநில மன்னரன்றிச் செய்பொரு ளில்லை யென்று
மருவுநூல் நெறியினன்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்
அருளுடன் பொறுக்க வென்றான் அரசனு மகிழ்வுற் றானே.
198


உதயணன் வாசவதத்தையுடன் இன்புற்றிருத்தல்


ஆர்வமிக் கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச்
சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனை புகுந்தே
ஏர்பெறும் வாசவெண்ணெ யெழிலுடன் பூசி வாச
நீர்மிக வாடி மன்னனேரிழை மாதர்க் கூட.
199


பதுமாவதியின் வேண்டுகோள்


யூகியு நீரினாடி யுற்றுடனடிசி லுண்டான்
நாகதேர் கால மன்னனன்குடனிருந்த போழ்தின்
பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள்
ஏகுக செவ்வித் தத்தை யெழின் மனைக் கெழுக வென்றான்.
200


வாசவதத்தையின் ஊடல்


என்றவள் சொல்ல நன்றென்றெழின்முடி மன்னன் போந்து
சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தில்
வென்றிவேற் கண்ணினாளும் வெகுண்டுரை செப்புகின்றாள்
கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள்.
201


உதயணன் ஊடலைப் போக்குதல்


பாடக மிலங்கும் பாதப் பதுமையினோடு மன்னன்
கூடிய கூட்டந் தன் போற் குணந்தனை நாடி யென்ன
ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்
நாடியுன் றனக்கன்னாடானந்திணை யல்ல ளென்றான்.
202

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;