பிறவிக் கடலகத்து ஆராய்ந்து உணரின் தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை அறவகை ஓரா விடக்கு மிசைவோர் குறைவு இன்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர். |
19 |
உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்து உண்ணன்மின் செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்துஒரீஇக் கதிகள் நல்லுருக் கண்டனர் கைதொழு மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர். |
20 |
பொருளொடு போகம் புணர்தல் உறினும் அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின் இருளில் கதிச்சென்று இனிஇவண் வாரீர் தெருளல் உறினும் தெருண்மின் அதுவே. |
21 |
தவத்தின் மேல் உரை தவத்திறை தனக்குஅலது அரிதே மயக்கு நீங்குதல் மனம்மொழி யொடும்செயல் செறிதல் உவத்தல் காய்தலொடு இலாதுபல் வகைஉயிர்க்கு அருளை நயத்து நீங்குதல் பொருள்தனை அனையதும் அறிநீ. |
22 |
எண்ணின்றி யேதுணியும்; எவ்வழி யானும் ஓடும்; உள்நின்று உருக்கும்; உரவோர்உரை கோடல் இன்றாம் நண்ணின்றி யேயும்; நயவாரை நயந்து நிற்கும்; கண்ணின்று காமம் நனிகாமுறு வாரை வீழ்க்கும். |
23 |
சான்றோர் உவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார்; ஆன்றுஆங்கு அமைந்த குரவர்மொழி கோடல் ஈயார்; வான்தாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர்; காமன் தான்தாங்கி விட்ட கணைமெய்ப்படும் ஆயி னக்கால். |
24 |
மாஎன்று உரைத்து மடல்ஏறுப மன்று தோறும்; பூஎன்று எருக்கின் இணர்சுடுப; புன்மை கொண்டே பேய்என்று எழுந்து பிறர்ஆர்ப்பவும் நிற்பர்; காம நோய்நன்கு எழுந்து நனிகாழ்க் கொள்வதாயி னக்கால். |
25 |
நக்கே விலாசிறுவர்; நாணுவர்; நாணும் வேண்டார்; புக்கே கிடப்பர்; கனவும்நினை கையும் ஏற்பர்; துற்றூண் மறப்பர்; அழுவர்; நனி துஞ்சல் இல்லார்; நற்றோள் மிகைபெ ரிதுநாடுஅறி துன்பம் ஆக்கும். |
26 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.