நூலாசிரியர் தோலாமொழித் தேவர். இது இவரது இயற்பெயர் என்று தோன்றவில்லை. இவரது இயற்பெயர் ஸ்ரீவர்த்த தேவர் எனக் கருதுகிறார் து.அ. கோபிநாதராவ். கன்னட நாட்டிலுள்ள சிரவண பெல்கொளாவில் உள்ள வடமொழிக் கல்வெட்டு, ‘சூடாமணி என்பது காவியங்களுக்கெல்லாம் சூடாமணி போன்றது; இதைக் கீர்த்திபெறத் தக்க புண்ணியம் செய்த ஸ்ரீவர்த்த தேவர் இயற்றினார்’ எனக் குறிப்பிடுகிறது. இங்கு ஸ்ரீவர்த்த தேவர் என்பார் ‘ஸ்ரீவர்த்தமான தேவரே’ என்பர். இவர் சொல்லில் தோற்காதவர்; வெல்லும் சொல் வல்லார் என்பதால் தோலாமொழித் தேவர் என அழைக்கப் பெற்றார் என்று கருதுகின்றனர். இவர் தரும தீர்த்தங்கரரிடத்து ஈடுபாடு கொண்டவர். கார்வெட்டி அரையன் என்ற தலைவன் ஆதரவுடன் வடமொழி மகாபுராணத்தில் உள்ள ‘சிரேயாம்ச சுவாமி சரிதத்தின்’ ஒரு பகுதியான பிரசாபதி அரசன் வரலாற்றைப் பாடுவதே சூளாமணிக் காப்பியமாகும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.