கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 15 டிசம்பர், 2011

பழமொழி நானூறு-4

செய்யுட்கள் முத்தகச் செய்யுட்களாதலால், ஒவ்
வொரு செய்யுளின் பொருளும் தனியே நின்று 
அந்தச்செய்யுளிலே முடிந்துவருகின்றது. எனவே, 
ஒவ்வொரு செய்யுளாக மனப்பாடம் செய்து, ஒவ்
வொரு கருத்தாக உளமேற்றி, ஒவ்வொருவரும் 
உயர்வதற்கு இந்நூல் உதவியாக அமைந்துள்ளது. 
 முன்றுறை அரையனார் பலப்பல காலங்களில் 
தம்முடைய மாணவர்கட்கு அறிவுறுத்திக் கூறிய 
 செய்யுட்களின் தொகுப்பாக அமைந்ததே இந்நூல் 
என்றும் கருதலாம். அறிவாளர்கள், தாம் சொல்லக் 
கருதும் உண்மைகளை விளக்குவதற்கு வழக்கிலுள்ள
 முதுமொழிகளை எடுத்துப் பயன்படுத்துவது 
இயல்பே என்பதையும் இந்நூலாற் காணலாம்.

இந்நூலுக்குரிய பால் இயல் அதிகாரப் பகுப்புக்கள்

 போன்றவற்றை முன்னோர் செய்துள்ளதாகத் 
தெரியவில்லை. இந் நூலை அச்சிட்ட பிற்காலத்
 தமிழறிஞர்களே இந்த பகுப்பு முறைகளைச் செய்து
ள்ளனர் என்று தெரிகின்றது.

முதன் முதலாக, இந்தப் பழமொழி நானூறை அச்

சேற்றி வெளியிட்டவர்கள் சோடசாவதானம் 
சுப்பராயச் செட்டியார் அவர்களாவர் (1874). இதனை
யடுத்து நி.சு. ஆறுமுக நயினார் அவர்களின் பதிப்பு 
வெளிவந்தது (1954). இதனையடுத்துக் கி.பி. 1914இல் 
திருமணம் செல்வக் கேசவராய முதலியார்
 அவர்களின் பதிப்பு வெளிவந்தது. ஏட்டுப் பிரதிகளில் 
கண்ட வரிசையை மாற்றாமல் வெளியிட்ட ஆறுமுக 
நயினார் அவர்களின் பதிப்பும், திருநாராயண 
அய்யங்கார் அவர்களின் (200 பாடல்கள் மட்டும்) 
பதிப்பும் (கி.பி. 1918-1922) இந் நூலின் செழுமையைத் 
தமிழ் அன்பர்களிடம் பரப்பின.

திருமணம் செல்வக் கேசவராய முதலியாரவர்கள் 

பத்து பத்துப் பாடல்கள் கொண்ட அதிகாரப் பகுப்பு
க்களையும் பால் இயல் என்னும் பகுப்புக்களையும் 
 செய்து, சிறந்த உரையுடன் இந்நூலை அருமையாக 
வெளியிட்டு உதவினார்கள்.

இந்த நிலையிலே, பழமொழிகளுக்கே முதன்மை 

தரவேண்டும் என்னும் எண்ணத்துடன், இந்நூலிலே 
பயின்று வரும் பழமொழிகளைத் தொகுத்து அகர
வரிசைப்படுத்திக் கொண்டு, அந்த அகர வரிசைக்கு 
ஏற்றபடி செய்யுட்களையும் வரிசைப்படுத்திக் 
கொண்டு, இந்தப் பதிப்பைத் தெளிவுரையுடன் நான் அமைத்திருக்கின்றேன்.

பழமொழிகளை உளத்தில் பதிக்கவும், மீண்டும் 

மீண்டும் நினைக்கவும், அவை அமைந்த செய்யுட்
களை நினைவு படுத்திப் பயன் பெறவும், இந்த புதிய
 அமைப்பு உதவும் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;