கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 23 ஜனவரி, 2012

அகநானுறு-25


28. தோழி கூற்று

     மெய்யின் தீரா மேவரு காமமொடு
     எய்யாய் ஆயினும், உரைப்பல் தோழி!
     கொய்யா முன்னும், குரல் வார்பு, தினையே
     அருவி ஆன்ற பைங் கால் தோறும்
5   இருவி தோன்றின பலவே. நீயே,
     முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணி,
     பரியல் நாயொடு பல் மலைப் படரும்
     வேட்டுவற் பெறலொடு அமைந்தனை; யாழ நின்
     பூக் கெழு தொடலை நுடங்க, எழுந்து எழுந்து,
10  கிள்ளைத் தெள் விளி இடைஇடை பயிற்றி,
     ஆங்கு ஆங்கு ஒழுகாய்ஆயின், அன்னை,
     'சிறு கிளி கடிதல் தேற்றாள், இவள்' என,
     பிறர்த் தந்து நிறுக்குவள் ஆயின்,
     உறற்கு அரிது ஆகும், அவன் மலர்ந்த மார்பே.


தலைமகன் சிறைப்புறத்தானாக, தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது
குறிஞ்சி
பாண்டியன் அறிவுடைநம்பி


29. தலைவன் கூற்று

     "தொடங்கு வினை தவிரா, அசைவு இல் நோன் தாள்,
     கிடந்து உயிர் மறுகுவது ஆயினும், இடம் படின்
     வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த
     தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்ப,
5   செய்வினைக்கு அகன்ற காலை, எஃகு உற்று
     இரு வேறு ஆகிய தெரி தகு வனப்பின்
     மாவின் நறு வடி போல, காண்தொறும்
     மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண்
     நினையாது கழிந்த வைகல், எனையதூஉம்,
10  வாழலென் யான்" எனத் தேற்றி, பல் மாண்
     தாழக் கூறிய தகைசால் நல் மொழி
     மறந்தனிர் போறிர் எம்' எனச் சிறந்த நின்
     எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க
     வினவல் ஆனாப் புனைஇழை! கேள் இனி
15  வெம்மை தண்டா எரி உகு பறந்தலை,
     கொம்மை வாடிய இயவுள் யானை
     நீர் மருங்கு அறியாது, தேர் மருங்கு ஓடி,
     அறு நீர் அம்பியின் நெறிமுதல் உணங்கும்
     உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அருங் கடத்திடை,
20  எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு
     நாணுத் தளை ஆக வைகி, மாண் வினைக்கு
     உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை,
     மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே!


வினை முற்றி மீண்ட தலைமகன், 'எம்மையும் நினைத்தறிதிரோ?' என்ற தலைமகட்குச் சொல்லியது
பாலை
வெள்ளாடியனார்


30. தோழி கூற்று

     நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
     கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
     துணை புணர் உவகையர் பரத மாக்கள்
     இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
5   உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
     ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
     அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
     பெருங் களம் தொகுத்த உழவர் போல,
     இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
10  பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
     கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
     பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
     மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
     தண் நறுங் கானல் வந்து, 'நும்
15  வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?


பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது
நெய்தல்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;