ஆரியர் வருகைக்கு முன்பே இந்தியா முழுவதும்
பேசப்பட்டுவந்த தொல்திராவிட மொழிக்கும் மூத்த
உறுப்பினராகத் தமிழ்விளங்குகின்றது. இந்தியா
முழுவதும் பேசப்பட்ட பழந்தமிழையே தொல்திரா
விட மொழி என்று மொழியறிஞர்கள் குறிக்கின்றனர்.
கோலாமி, பர்ஜி, நாய்க்கி, கோந்தி,கூய்,குவி,கோண்டா,
மால்டா, ஒரொவன், கட்பா,குரூக்,பிராகூய் என்று பற்பல
பெயர்களுடன் இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும்
தமிழோடுஉறவுடைய திராவிட மொழிகள் வழங்கி
வருகின்றன.சதுமறை ஆரியம் வருமுன் சகமுழுதும்
நினதாயின்அரியதுனது இலக்கணம் என்று அறைகுவதும்
வியப்பாமே
என்று பெ. சுந்தரம்பிள்ளை பாராட்டுவது சரியானதே. வடஇந்திய
மொழிகளில் தமிழின் செல்வாக்கு மிகுந்துள்ளதையும், தமிழின்
தொடர் அமைப்பு வடநாட்டு ஆரியமொழிகளில் செலுத்துகின்ற
செல்வாக்கினையும் மிகப்பெரிய மொழியறிஞர்கள் சுட்டிக்
காட்டுகின்றனர்.
திராவிட மொழிகளில் வழங்கும் சொற்கள் பலவும் தமிழில்
வழங்குகின்றன. கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகள் வழங்கும்
நாடுகளின் மிகப் பழைய கல்வெட்டுகள் வடமொழியில் உள்ளன.
ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அவை தூய தமிழில் உள்ளன.
கி.பி. 7, 8 - ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட மலையாள மொழிக்
கல்வெட்டுகளில் தமிழ் இலக்கணச் செல்வாக்கு மிகுந்துள்ளது.
தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், வடமொழியின்
செல்வாக்கால் தமிழிலிருந்து வேறுபட்டு விட்டன. ஆனால்
தமிழ்மட்டும், சிற்சில சொற்களைக் கடன் வாங்குவதோடு தன்
உறவை மட்டுப் படுத்திக் கொண்டு, தனித்து நிற்கும் பண்பை
நிலைநாட்டி வருகின்றது. சிந்து சமவெளி நாகரிகத்தின்
அழிபாடுகளில் கிடைக்கும் எழுத்து வடிவம் தமிழோடு நெருங்கிய
ஒற்றுமை உடையது என்ற ஈராசு அடிகள் கருத்தும்
எண்ணத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.