கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 30 ஜனவரி, 2012

குறுந்தொகை-29

90. குறிஞ்சி

எற்றோ வாழி?-தோழி!-முற்றுபு
கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
மங்குல் மா மழை வீழ்ந்தென, பொங்கு மயிர்க்
கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி,
வரை இழி அருவி உண்துறைத் தரூஉம்
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே.

வரைவு நீட்டித்தவழி ஆற்றாளாகிய தலைமகட்கு, தலைமகன் சிறைப்புறமாகத் தோழி கூறியது
மதுரை எழுத்தாளன் சேந்தன் பூதன்




91. மருதம்

அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி
குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம்
தண்துறை ஊரன் பெண்டினை ஆயின்,
பல ஆகுக, நின் நெஞ்சில் படரே!
ஓவாது ஈயும் மாரி வண்கை,
கடும்பகட்டு யானை, நெடுந் தேர், அஞ்சி
கொன் முனை இரவு ஊர் போலச்
சில ஆகு, நீ துஞ்சும் நாளே!

பரத்தையர்மாட்டுப் பிரிந்த தலைமகன் வாயில் வேண்டிப் புக்கவழி, தன்வரைத் தன்றி அவன் வரைத்தாகித் தன் நெஞ்சு நெகிழ்ந்துழி தலைமகள் அதனை நெருங்கிச் சொல்லியது; பரத்தையிற் பிரிந்து வந்த வழி வேறுபட்ட கிழத்தியைத் தோழி கூறியதூஉம் ஆம்
ஒளவையார்



92. நெய்தல்

ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து-
அளியதாமே-கொடுஞ் சிறைப் பறவை,
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த
பிள்ளை உள்வாய்ச் செரீஇய
இரை கொண்டமையின், விரையுமால் செலவே.

காமம் மிக்க கழிபடர் கிழவியால், பொழுது கண்டு சொல்லியது
தாமோதரன்



93. மருதம்

நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,
இன்உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?

வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது
அள்ளூர் நன்முல்லையார்



94. முல்லை

பெருந் தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே;
யானே மருள்வென்?-தோழி!-பானாள்
இன்னும் தமியர் கேட்பின், பெயர்த்தும்
என் ஆகுவர்கொல், பிரிந்திசினோரே?-
அருவி மா மலைத் தத்தக்
கருவி மா மழைச் சிலைதரும் குரலே.

பருவங் கண்டு ஆற்றாள் எனக் கவன்ற தோழிக்கு 'ஆற்றுவல்' என்பதுபடத் தலை மகள் சொல்லியது
கதக்கண்ணன்



95. குறிஞ்சி

மால் வரை இழிதரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரற்
சிறுகுடிக் குறவன் பெருந் தோட் குறுமகள்
நீர் ஓரன்ன சாயல்
தீ ஓரன்ன என் உரன் அவித்தன்றே.

தலைமகன் பாங்கற்கு உரைத்தது
கபிலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;