கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

யசோதர காவியம்-14

மன்னவன் மனமாற்ற மடைதல்


60நின்றவர் தம்மை நோக்கி நிலைதளர்ந் திட்டு மன்னன்(கொல்
மின்றிகழ் மேனி யார்கொல் விஞ்சையர் விண்ணுளார்
அன்றியில் வுருவம் மண்மே லவர்களுக் கரிய தென்றால்
நின்றவர் நிலைமை தானு நினைவினுக் கரிய தென்றான்


அச்சமின்மை, நகைத்தல் ஆகிய இவற்றின் காரணம் வினாவிய வேந்தனுக்கு இளைஞர் விடையிறுத்தல்


61இடுக்கண்வந் துறவு மெண்ணா தெரிசுடர் விளக்கி னென் [கொல்
நடுக்கமொன் றின்றி நம்பா னகுபொருள் கூறு கென்ன
அடுக்குவ தடுக்கு மானா லஞ்சுதல் பயனின் றென்றே
நடுக்கம தின்றி நின்றாம் நல்லறத் தௌ¤வு சென்றாம்.


இதுவுமது


62முன்னுயி ருருவிற் கேத முயன்றுசெய் பாவந் தன்னா
லின்னபல் பிறவி தோறு மிடும்பைக் டொடர்ந்து வந்தோம்
மன்னுயிர்க் கொலையி னாலிம் மன்னன்வாழ் கென்னு
என்னதாய் விளையு மென்றே நக்கன மெம்மு ளென்றான்.


அங்குக் குழுமியுள்ள நகரமாந்தர் வியத்தல்


63கண்ணினுக் கினிய மேனி காளைதன் கமல வாயிற்
பண்ணினுக் கினிய சொல்லைப் படியவர் முடியக் கேட்டே
அண்ணலுக் கழகி தாண்மை யழகினுக் கமைந்த தேனும்
பெண்ணினுக் கரசி யாண்மை பேசுதற் கரிய தென்றார்.


மன்னனும் வியத்தல்


64மன்னனு மதனைக் கேட்டே மனமகிழ்ந் தினிய னாகி
என்னைநும் பிறவி முன்ன ரிறந்தன பிறந்து நின்ற
மன்னிய குலனு மென்னை வளரிளம் பருவந் தன்னில்
என்னைநீ ரினைய ராகி வந்தது மியம்பு கென்றான்.


அபயருசியின் மறுமொழி


65அருளுடை மனத்த ராகி யறம்புரிந் தவர்கட் கல்லால்
மருளுடை மறவ ருக்கெம் வாய்மொழி மனத்திற்சென்று
பொருளியல் பாகி நில்லா புரவல கருதிற் றுண்டேல்
அருளியல் செய்து செல்க ஆகுவ தாக வென்றான்.


வேந்தன், கருணைக்குப் பாத்திரனாகி மீண்டும் வினவல்


66அன்னண மண்ணல் கூற வருளுடை மனத்த னாகி
மன்னவன் றன்கை வாளு மனத்திடை மறனு மாற்றி
என்னினி யிறைவனீயே யெனக்கென விறைஞ்சிநின்று
பன்னுக குமர நுங்கள் பவத்தொடு பரிவு மென்றான்.


அபயருசியின் அறவுரை


67மின்னொடு தொடர்ந்து மேகம் மேதினிக் கேதம் நீங்கப்
பொன்வரை முன்னர் நின்று புயல்பொழிந் திடுவதேபோல்
அன்னமென் னடையி னாளு மருகணைந் துருகும் வண்ண
மன்னவ குமரன் மன்னற் கறமழை பொழிய லுற்றான்


இதுமுதல் மூன்றுகவிகளால் இவ்வற வுரையின் பயன் கூறுகின்றார்.


68எவ்வள விதனைக் கேட்பா ரிருவினை கழுவு நீரார்
அவ்வள வவருக் கூற்றுச் செறித்துட னுதிர்ப்பை யாக்கும்
மெய்வகை தெரிந்து மாற்றை வெருவினர் வீட்டையெய்துஞ்
செவ்விய ராகச் செய்து சிறப்பினை நிறுத்தும் வேந்தே.


69மலமலி குரம்பை யின்கண் மனத்தெழு விகற்பை மாற்றும்
புலமவி போகத் தின்கண் ணாசையை பொன்று விக்கும்
கொலைமலி கொடுமை தன்னைக் குறைத்திடு மனத்திற் கோ
சிலைமலி நுதலி னார்தங் காதலிற் றீமை செப்பும்.


70‘புழுப் பிண்ட மாகி புறஞ் செய்யுந் தூய்மை
விழுப் பொருளை வீறழிப்பதாகி - அழுக் கொழுகும்
ஒன்பது வாயிற்றா மூன்குரம்பை மற்றிதனா
வின்பமதா மென்னா திழித் துவர்மின்‘


71பிறந்தவர் முயற்சி யாலே பெறுபய னடைவ ரல்லா
லிறந்தவர் பிறந்த தில்லை யிருவினை தானு மில்லென
றறைந்தவ ரறிவி லாமை யதுவிடுத் தறநெ றிக்கட்
சிறந்தன முயலப் பண்ணுஞ் செப்புமிப் பொருண்மை


இளைஞர் தம் பழம் பிறப்பு முதலியன அறிந்த வரலாறு கூறல்


72அறப்பொருள் விளைக்குங் காட்சி யருந்தவ ரருளிற் றன்றிப்
பிறப்புணர்ந் ததனின் யாமே பெயர்த்துணர்ந் திடவும் பட்ட
திறப்புவ மிதன்கட் டேற்ற மினிதுவைத் திடுமி னென்றான்
உறப்பணிந் தெவ முள்ளத் துவந்தனர் கேட்க லுற்றார்.



இரண்டாவது சருக்கம்


உஞ்சயினியின் சிறப்பு


73 வளவயல் வாரியின் மலிந்த பல்பதி
அளவறு சனபத மவந்தி யாமதின்
விளைபய னமரரும் விரும்பு நீர்மைய
துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே.


அசோகன் சிறப்பு


74கந்தடு களிமத யானை மன்னவன்
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன்
சந்திர மதியெனு மடந்தை தன்னுடன்
அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள்


இக்காப்பியத் தலைவனான யசோதரன் பிறப்பு


75இந்துவோ ரிளம்பிறை பயந்த தென்னவே
சந்திர மதியொரு தனயற் றந்தனள்
எந்துயர் களைபவ னெசோத ரன்னென
நந்திய புகழவ னாம மோதினான்.


யசோதரன் மணம்


76இளங்களி றுழுவையி னேத மின்றியே
வளங்கெழு குமரனும் வளர்ந்து மன்னனாய்
விளங்கிழை யமிழ்தமுன் மதியை வேள்வியால்
உளங்கொளப் புணர்ந்துட னுவகை யெய்தினான்.


யசோமதியின் பிறப்பு


77இளையவ ளெழினல மேந்து கொங்கையின்
விளைபய னெசோதரன் விழைந்து செல்லுநாள
கிளையவ ருவகையிற் கெழும வீன்றனள்
வளையவ ளெசோமதி மைந்தன் றன்னையே.


இதுமுதல் நான்கு கவிகளால் அசோகன் துறவெண்ணம்நிறைதல் கூறுகின்றார்.


78மற்றோர்நாள் மன்னவன் மகிழ்ந்து கண்ணடி
பற்றுவா னடிதொழ படிவ நோக்குவான்
ஒற்றைவார் குழன்மயி ருச்சி வெண்மையை
யுற்றுறா வகையதை யுளைந்து கண்டனன்.


இளமை நிலையாமை


79வண்டளிர் புரைதிரு மேனி மாதரார
கண்டக லுறவரு கழிய மூப்பிது
உண்டெனி லுளைந்திக லுருவ வில்லிதன்
வண்டுள கணைபயன் மனிதர்க் கென்றனன்.


துறவின் இன்றியமையாமை


80இளமையி னியல்பிது வாய வென்னினிவ்
வளமையி லிளமையை மனத்து வைப்பதென்
கிளைமையு மனையதே கெழுமு நம்முளத
தளைமையை விடுவதே தகுவ தாமினி.


81முந்துசெய் நல்வினை முளைப்ப வித்தலை
சிந்தைசெய் பொருளொடு செல்வ மெய்தினாம்
முந்தையின் மும்மடி முயன்று புண்ணிய
மிந்திர வுலகமு மெய்தற் பாலாதே.


யசோதரனுக்கு முடி சூட்டுதல்


82இனையன நினைவுறீஇ யசோதர னெனுந்
தனையனை நிலமகட் டலைவ னாகெனக
கனை மணி வனைமுடி கவித்துக் காவலன
புனைவளை மதிமதி புலம்பப் போயினான்.


யசோதரன் அரசியல்


அசோகன் துறவு


83குரைகழ லசோகன் மெய்க் குணதரற் பணிந்
தரைசர்க ளைம்பதிற் றிருவர் தம்முடன
உரைசெய லருந்தவத் துருவு கொண்டுபோய்
வரையுடை வனமது மருவி னானரோ.


84எரிமணி யிமைக்கும் பூணா னிசோதர னிருநி லத்துக்
கொருமணி திலதம் போலு முஞ்சயி னிக்கு நாதன்
அருமணி முடிகொள் சென்னி யரசடிப் படுத்து யர்ந்த
குருமணி குடையி னீழற் குவலயங் காவல் கொண்டான்.


மன்னனின் மனமாட்சி


85திருத்தகு குமரன் செல்வச் செருக்கினால் நெருக்குப்பட்டு
மருத்தெறி கடலிற் பொங்கி மறுகிய மனத்த னாகின்றி
உருத்தெழு சினத்திற் சென்ற வுள்ளமெய் மொழியோடொ
அருத்திசெய் தருத்த காமத் தறத்திற மறத் துறந்தான்.


86அஞ்சுத லிலாத வெவ்வ ரவியமே லடர்த்துச் சென்று
வஞ்சனை பலவு நாடி வகுப்பன வகுத்து மன்னன்
புஞ்சிய பொருளு நாடும் புணர்திறம் புணர்ந்து நெஞ்சில்
தஞ்சுத லிலாத கண்ணன் றுணிவன துணிந்து நின்றான்


87தோடலார் கோதை மாதர் துயரியிற் றொடுத் தெடுத்தப் கால்
பாடலொ டியைந்த பண்ணி னிசைச்சுவைப் பருகிப்பல்
ஊடலங் கினிய மின்னி னொல்கிய மகளி ராடும
நாடகம் நயந்து கண்டும் நாள்சில செல்லச் சென்றான்.


யசோதரன் பள்ளியறை சேர்தல்


88மற்றோர்நாள் மன்னர் தம்மை மனைபுக விடுத்துமாலைக
கொற்றவே லவன்றன் கோயிற் குளிர்மணிக் கூடமொன்றிற
சுற்றுவார் திரையிற் றூமங் கமழ்துயிர் சேக்கை துன்னி
கற்றைவார் கவரி வீசக் களிசிறந் தினிதி ருந்தான்.


அமிர்தமதியும் பள்ளியறை சேர்தல்


89சிலம்பொடு சிலம்பித் தேனுந் திருமணி வண்டும் பாடக்
கலம்பல வணிந்த வல்குற் கலையொலி கலவி யார்ப்ப
நலம்கவின் றினிய காமர் நறுமலர்த் தொடைய லேபோல்
அலங்கலங் குழல்பின் றாழ வமிழ்தமுன் மதிய ணைந்தாள்.


இருவரும் இன்பம் நுகர்தல்


90ஆங்கவ ளணைந்த போழ்தி னைங்கணைக் குரிசி றந்த
பூங்கணை மாரி வெள்ளம் பொருதுவந் தலைப்பப் புல்லி
நீங்கல ரொருவ ருள்புக் கிருவரு மொருவ ராகித்
தேங்கம ழமளி தேம்பச் செறிந்தனர் திளைத்துவிள்ளா£.¢


இதுவுமது.


91மடங்கனிந் தினிய நல்லாள் வனமுலைப் போக மெல்லாம
அடங்கல னயர்ந்து தேன்வா யமிர்தமும் பருகி யம்பொற்
படங்கடந் தகன்ற வல்குற் பாவையே புணைய தாக
விடங்கழித் தொழிவி லின்பக் கடலினுண் மூழ்கி னானே.


இருவரும் இன்பம் நுகர்ந்தபின் கண் உறங்கல்.


92இன்னரிச் சிலம்புந் தேனு மெழில்வளை நிரையு மார்ப்ப
பொன்னவிர் தாரோ டாரம் புணர்முலை பொருகு பொங்க்
மன்னனு மடந்தை தானு மதனகோ பத்தின் மாறாய்த்றே
தொன்னலந் தொலைய வுண்டார் துயில்கொண்ட விழிகளன்


பண்ணிசையைக் கேட்ட அரசி துயிலெழல்


93ஆயிடை யத்தி கூடத் தயலெழுந் தமிர்த மூறச்
சேயிடைச் சென்றோர் கீதஞ் செவிபுக விடுத்த லோடும
வேயிடை தோளி மெல்ல விழித்தனள் வியந்த நோக்காத்
தீயிடை மெழுகி னைந்த சிந்தையி னுருகினாளே.


அரசி மதிமயங்குதல்


94பண்ணினுக் கொழுகு நேஞ்சிற் பாவையிப் பண்கொள் செவ்
அண்ணலுக் கமிர்த மாய வரிவையர்க்¢ குரிய போகம்
விண்ணினுக் குளதென் றெண்ணி வெய்துயிர்த் துய்தல் செல்
மண்ணினுக் கரசன் றேவி மதிமயக் குற்றிருந் தாள்.
பெண்மையின் புன்மை


95மின்னினு நிலையின் றுள்ளம் விழைவுறின் விழைந்த யாவுந
துன்னிடும் மனத்தின் தூய்மை சூழ்ச்சியு மொழிய நிற்கும்
பின்னுறு பழியிற் கஞ்சா பெண்ணுயிர் பெருமை பேணா
என்னுமிம் மொழிகட் கந்தோ விலக்கிய மாயி னாளே


குணவதி என்னுந் தோழி அரசியை உற்றத வினாவுதல்


96துன்னிய விரவு நீங்கத் துணைமுலை தமிய ளாகி
யின்னிசை யவனை நெஞ்சத் திருத்தின ளிருந்த வெல்லை
துன்னின டொழி துன்னித் துணைவரிற் றமிய ரேபோன்
றென்னிது நினைந்த துள்ளத் திறைவிநீ யருளு கென்றாள்.


அரசி தன் கருத்தினைக் குறிப்பாகத் தெரிவித்தல்


97தவழுமா மதிசெய் தண்டார் மன்னவன் றகைமை யென்னுங்
கவளமா ரகத்தென் னுள்ளக் கருங்களி மதநல் யானை
பவளவய் மணிக்கை கொண்ட பண்ணிய றோட்டி பற்றித்
¢துவளுமா றொருவ னெல்லி தொடங்கின னோவ வென்றாள்.


தோழி அறிந்தும் அறியாள் போலக் கூறல்.


98அங்கவ ளகத்துச் செய்கை யறிந்தன னல்லளே போல்
கொங்கவிழ் குழலி மற்றக் குணவதி பிறிது கூறும்
நங்கைநின் பெருமை நன்றே நனவெனக் கனவிற் கண்ட
¢பங்கம துள்ளி யுள்ளம் பரிவுகொண்டனையென் னென்றாள்.


அரசி மீண்டும் தன் கருத்தை வெளிப்படையாகக் கூற, தோழி அஞ்சுதல்.


99என்மனத் திவரு மென்னோ யிவணறிந் திலைகொ லென்றே
தன்மனத் தினைய வட்குத் தானுரைத் திடுத லோடும்
நின்மனத் திலாத சொல்லை நீபுனைந் தருளிற் றென்கொல்
சின்மலர்க் குழலி யென்றே செவிபுதைத் தினிது சொன்னாள்.


அரசி ஆற்றாமையால் உயிர்விடுவேன் என்றல்.


100மாளவ பஞ்ச மப்பண் மகிழ்ந்தவ னமுத வாயிற்
கேளல னாயி னாமுங் கேளல மாது மாவி
நாளவ மாகி யின்னே நடந்திடு நடுவொன் றில்லை
வாளள வுண்கண் மாதே மறுத்துரை மொழியி னென்றாள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;