கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

நாககுமார காவியம், -6

வேறு

118  முத்துஇலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்துஅடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்உலகம் ஆண்டுவந்து
இத்தலமும் முழுதுஆண்டு இருங்களிற்று எருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்காது இருப்பவரே.


119  கமலமலர் மீதுஉறையும் காட்சிக்கு இனிமூர்த்தி
அமலமலர்ப் பொன்சரணை அன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்கள் உலகத்து இந்திரராய்ப் போய்உதுதித்து
இமையவர்கள் வந்துதொழ இன்புற்று இருப்பாரே.


120  அரியாசனத்தின்மிசை அமர்ந்த திருமூர்த்தி
பரிவாக உன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோகமும்தொழவே தேவாதி தேவருமாய்
எரிபொன் உயிர்விளங்கி இனியமுத்தி சேர்பவரே.

வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி

121  இணைஇலா இறைவனை ஏத்திஇவ்வகையினால்
துணைஇனிய தோழன்மார் சூழ்ந்¢து உடன்இருந்தபின்
கணைசிலை பிடித்துஒருவன் கண்டுஒர்ஓலை முன்வைத்து
இணைகரமும் கூப்பிநின்று இனிதுஇறைஞ்சிக் கூறுவான்.


122  வற்சைஎனும் நாட்டின்உள் வான்புகழும் கௌசம்பி
செற்றவரினும்மிகு சூரன்சுபசந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகாவதிஎனும் நாமம்இனிது ஆயினாள்.


123  அன்னவர்தம் புத்திரிகள் ஆனஏழு பேர்களாம்
நன்சுயம்பிரபையும் நாகசுப்பிரபையும்
இன்பநல் பிரபையும் இலங்குசொர்ணமாலையும்
நங்கைநல் பதுமையும் நாகதத்தை என்பரே.


124  வெள்ளியின் மலையில் மேகவாகனன்துரந்திடக்
கள்அவிழ் மாசுகண்டன்அவன் வந்துஉடன்
கிள்ளைஅம் மொழியினாரைக் கேட்டுஉடன் பெறுகிலன்
வெள்ளைஅம் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.


125  வேந்தனுக்கு இளையன்உன்னை வேண்டிஓலையேதர
சேர்ந்தவன் அளித்தஓலை வாசகம் தௌ¤ந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துஉடன்
போந்தவனைக் கொன்றனன் பூஅலங்கல் மார்பனே.

நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்

126  அபிசந்திரன்தன்புரம் அத்தினாகம் ஏகியே
சுபமுகூர்த்த நல்தினம் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் தன்மகளாம்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியால் செல்வன்எய்தி இன்புற்றான்.


127  நங்கைமார்கள் தன்உடன் நாகநல் குமரனும்
இங்கிதக் களிப்பினால் இசைந்துஇனிப் புணர்ந்துஉடன்
பொங்குநகர்ப் புறத்தினில் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன்றினும் சேர்ந்துஇனிது ஆடுநாள்.

அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்

128  அவந்திஎன்னும் நாட்டினுள் ஆனஉஞ்சை நீள்நகர்
உவந்தமன்னன் நாமமும் ஓங்கும்செய சேனனாம்
அவன் தனன் மனைவியர் ஆனநல் செயசிரீ¢யாம்
சிவந்தபொன் நிறமகள் சீருடைய மேனகி.


129  பாடலீ புரத்துஇருந்த பண்புமாவியாளனும்
நாடிவந்து இருந்தனன் நன்குஉஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டுஅவள்
நாடிஅவள் போயினள் நன்நிதிப் புரிசையே.


130  அந்நகர்விட்டு ஏகினன் ஆனமாவியாளனும்
சென்றுதன் தமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கினன் நாகநல் குமரனை
இன்றிலன்தான் யார்என என்தம்பிஅவன் என்னலும்.


131  மின்னின்இடை நேர்இழை மேனகி எனஒரு
மன்மதனை இச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரில் செல்லலும் அரிவையர் தரித்திட
மன்னன்அம்பு வேள்வியால் மன்னிநல் புணர்ந்தனன்.

மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று நாககுமாரன் பெறுதல்

132  மற்றும்ஒன்று உரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றுஇருந்த சிரீமதி ஓர்ந்துநாடகம்தனில்
வெற்றிமுழவு ஏழ்இயம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன் அவள்பதியாம் பார்மிசைமேல் என்றனன்.

மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட அதிசயம் இயம்பக் கேட்டல்

133  அங்குசென்றுஅவ் அண்ணலும் அவளைவென்று கொண்டனன்
பொங்கும்இக் குழலியர்ப் புணர்ந்துஉடன் இருந்தபின்
வங்கமீது வந்தஓர் வணிகனை வினவுவான்
எங்குஉள அதிசயம் இயம்புகநீ என்றனன்.

வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்

134  பொங்கும்ஆழியுள்ஒரு பூதிலகமாபுரம்
புங்கவன்தன் ஆலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமார் ஐஞ்நூற்றுவர் நாள்தொறும் ஒலிசெய்வார்
அங்குஅதற்குக் காரணம் யான்அறியேன் என்றனன்.

நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை

135  தனதுவித்தை தன்னையே தான்நினைக்க வந்தபின்
மனத்துஇசைந்த தோழரோடு வள்ளல்தீ பஞ்சுஎன்றுநல்
கனகமய ஆலையங் கண்டுவலங் கொண்டுஉடன்
சினன்அடி பணிந்துமுன் சிறந்துமிக்கு இருந்தனர்.

ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற, அதன் காரணம் குமாரன் வினாவுதல்

136  ஒருநிரையாய் மங்கையர் ஓசைசெய்யக் கேட்டபின்
திருஅலங்கல் மார்பினான் சேரஅழைத்து அவர்களை
அருகன்ஆலையத்துமுன் அலறும்நீங்கள் யார்எனத்
தரணிசுந்தரியவள் அவன்கு இதுஎன்று கூறுவாள்.

ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள் நிலையெடுத்துரைத்தல்

137  அரியவெள்ளி மாமலை ஆடும்கொடி யேமிடை
பிரிதிவி திலகம்எங்கள் பேருடைய நன்நகர்
வரதிரட்சகன்எமர் தந்தையை மருகனுக்குக்
கருதிஎம்மைக் கேட்டனன் கண்ணவாயுவேகனே.


138  எந்தையும் கொடாமையால் எரிஎன வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து எங்களையும் பற்றியே
இந்தநல் வனத்துஇருந்தான் என்றவளும் கூறலும்
அந்தவாயுவேகனை அண்ணல்வதை செய்தனன்.

வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர் ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்

139  அஞ்சுநூற்று மங்கையரை அண்ணல்வேள்வியால்எய்தி
நெஞ்சில்அன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்
அஞ்சுநூற்றுவர்படர்கள் ஆளர்ஆகி வந்தனர்
தஞ்சமாய் அவர்தொழுது அகமகிழ்ந்து செல்லுநாள்.

கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை நாககுமாரன் கூடி மகிழ்தல்

140  கலிங்கம்என்னும் நாட்டின்உள் கனகமய இஞ்சிசூழ்ந்து
இலங்குரத்னபுரம் இந்நகர்க்கு மன்னவன்
துலங்குசந்திரகுப்தன் தோகைசந்திரம்மதி
பெலங்கொள்இவர் நன்மகள் பேர்மதனமஞ்சிகை.


141  நாகநல் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்
வாகனம் இனிதின்இன்று மதன்மஞ்சிகையொடும்
தாகமிக்கு உடையனாய்த் தான்லயப் பருகினான்
நாகநல் புணர்ச்சிபோல் நன்குஉடன் இருந்துஅரோ.

கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன் பெற்றுப் போகந் துய்த்தல்

142  கங்கைநீர் அணிந்துஇலங்கும் கங்காளநன் நாட்டின்உள்
திங்கள்தவழ் மாடம்நல் திலகபுர மன்னவன்
பொங்குமகுடம் முடி பொற்புவிசையந்தரன்
இங்கித மனைவிபேர் இயல்விசையை என்பளே.


143  இலக்கணை எனும்மகள் இலக்கணம் உடையவள்
மிக்கஅண்ண லும்சென்று மெய்ம்மைவேள்வி தன்மையால்
அக்கணத்து அவன்எய்தி அவள்தன்போகம் துய்த்தபின்
தொக்ககாவு தன்உளே தொல்முனிவர் வந்துஅரோ.

நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்

144  ஊற்றினைச் செறித்திடும் உறுதவனுடைச் சாரணை
நாற்றமிக் குமரனும் நன்புறப் பணிந்தபின்
ஏற்றஅறங் கேட்டுஉடன் இருந்துஇலக்கணையின்மேல்
ஏற்றமோகம் என்என இயன்முனி உரைப்பரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;