கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

நீலகேசி-20

78இயங்கு வனவு மிருபொறி யையறி வெல்லையவாய்
மயங்கியிம் மத்திம நல்லுல கத்தின மற்றிவற்று
ணயம்படு நாவின் மூக்கில நந்து முரண்முதலா
வயங்கியங் கோடிய வாயிரண்டாய அறிவினவே.


79உண்ணி முகுட்டை எறும்பெறி தேண்முத லாவுடைய
வெண்ணில் பல்கோடிய வாயவ் விரண்டொடு மூக்குடைய
கண்ணிய மூவறி வாமவை பெற்றாற் கருணமிலா
நண்ணிய வண்டொடு தேனீ யனையவு நாலறிவே.


80இறப்பப்பல் காலின வெட்டி னிரண்டிரண் டேயிழிந்த
பறப்ப நடப்ப தவழ்வன வூர்வன பற்பலவாச்
சிறப்புடை யிந்திய மைந்தென வந்த செவியுடைய
மறப்பில் கடலொடு தீவினு மல்கிய பல்விலங்கே.


81வெப்பமுந் தட்பமு மிக்கு விரவிய யோனியவாய்ச்
செப்புவ செப்பில் செய்கைக ளாற்றம செய்வினையைத்
துப்பன போர்த்தும் பொடித்தும் பொரித்து முன்றோன்றுவன
வொப்பவு மொப்பிலுடம்புடம் பேகொண் டுழல்வனவும்.


82நல்லவர் தீயவர் திப்பிய ரொப்பில் குமானுயரோ
டல்லவ ருள்ளுறுத் தாடவ ரைவரு ளாதியினார்
சொல்லுக தன்மையென் பாயெனிற்சொல்லுவன் பல்வகையாற்
புல்லிய போகப் பெருநிலந் தன்னைப் பொருந்தினரே.


83தீமா னுயர்திறந் தேற்றிடிற் றீவின் சிறுநிலத்தார்
கோமான் முதலார் குணங்களிற் குன்றிய குற்றத்தராய்த்
தாமாம் பெரிய தவந்தலை நிற்பினுந் தன்மைபெறா
ராமான் மடப்பிணை யன்னமென் னோக்கி யவரதிறமே.


84திப்பிய ரென்னப் படுபவர் தீர்த்தந் திறப்பவரு
மப்பிய புண்ணியத் தாழிய ராழிய ரையவரும்
வெப்பிய வான் செலவ் விஞ்சையரெஞ்சலில் வெள்ளியரும்
பப்பிய ரேயவர் பான்மை வினவினும் பைந்தொடியே.


85கோலமி னோன்றற் குமானுயர் தம்மையுங் கூறுவன்கேள்
வாலமுங் கோடும் வளைபல்லும் பெற்ற வடிவினராய்ச்
சீலமுங் காட்சியுந் தீண்டலு ரந்தரத் தீவிலுள்ளார்
நீலமும் வேலுங் கயலு நிகர்த்த நெடுங்கண்ணினாய்.


86மானுய ரென்னப் படுபவர் தாமா விதையமென்னுங்
கானுயர் சோலைக் கரும நிலத்தார் கருவினை போய்த்
தானுய ரின்பந் தவத்தாற் றலைப்படுந் தன்மையினார்
வானுயர் தோன்றல் வளர்பிறை யேசிய வாணுதலாய்.


87தூமாண் பவணர் வியந்தரர் சோதிடர் கற்பருப்பால்
வேமானியரென வைவரித் தேவர் விரித்துரைப்பிற்
றீமாண்குமரரோ டீரைவர் முன்னவ ரன்னவர்பின்
பூமாண் புனைகுழ லாய்க்கினிச்சொல்லற் பொல்லா துகொல்லாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;