கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 19 மார்ச், 2012

நான்காம் வேற்றுமை


நான்காம் வேற்றுமையின் உருபு கு ஒன்றே ஆகும். 

இதன் பொருள் கோடல்பொருள் என்பதாம். 

கோடல்பொருள் என்பது கொடுப்பதை 
ஏற்றுக் கொள்ளுதலாகும். 

 இவ்வேற்றுமையின் பொருள் கொடை, 
பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, 
முறை என்னும் ஏழு வகைப்படும். 

 எடுத்துக்காட்டு 
 அதியமான் ஒளவைக்கு நெல்லிக்கனி 
கொடுத்தான் - கொடை

 கருடன் பாம்பிற்குப் பகை - பகை 

கபிலர் பாரிக்கு நண்பர் - நட்பு 

கம்பளி குளிருக்கு ஏற்றது - தகுதி 

தோசைக்கு மாவு அரைத்தான் - அதுவாதல்

 கஞ்சிக்குக் காற்றாய்ப் பறக்கிறான் - பொருட்டு 
(காரணம்) 

மாதவிக்கு மகள் மணிமேகலை - முறை (உறவு) 

மேலே காட்டிய சான்றுகள் இன்னதற்கு இது என 
வருவதை அறிகிறோம். இதனைக் கோடல்பொருள்
 என்பர். இவை முறையே, கொடை, பகை, நட்பு, 
தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை முதலிய 
கோடல் பொருள்களாக வந்தன. சொல்லுருபுகள் 
நான்காம் வேற்றுமைக்கு, ‘பொருட்டு’, ‘நிமித்தம்’, 
‘ஆக’ என்னும் சொல் உருபுகளும் உண்டு. ‘ஆக
’ என்ற சொல் உருபு மட்டும் ‘கு’ உருபோடு சேர்ந்து
தான் வரும். எடுத்துக்காட்டு கூலியின் பொருட்டு 
வேலை செய்தான் பொருட்டு கல்வியின் பொருட்டுச் 
சென்றான் கூலியின் நிமித்தம் உழைத்தான் நிமித்தம் 
உணவின் நிமித்தம் உழைத்தான் ஊருக்காக
 உழைத்தான் ஆக கூலிக்காக உழைத்தான் ஆக 
என்ற சொல்லுருபு மட்டும் கூலிக்கு + ஆக, 
ஊருக்கு + ஆக என, ‘கு’ உருபை ஒட்டியே வந்ததை 
அறியலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;