கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 13 மார்ச், 2012

வேற்றுமை


பெயர்ச்சொல்லின் பொருளை வேறுபடுத்திக் காட்டுவது வேற்றுமை ஆகும். பொருளை வேறுபடுத்திக் காட்டும் உறுப்பு வேற்றுமை உருபு எனப்படும். வேற்றுமை எட்டு வகைப்படும். முதல் வேற்றுமை (எழுவாய் வேற்றுமை), எட்டாம் வேற்றுமை (விளிவேற்றுமை) ஆகிய இரண்டு வேற்றுமைகளுக்கும் உருபுகள் இல்லை. இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரையிலான ஆறு வேற்றுமைகளுக்குத் தனித்தனியே உருபுகள் உண்டு. இந்த ஆறு வேற்றுமைகளும் அவற்றிற்கு உரிய பொருள்களின் பெயரால் வழங்கப்படும். முதல் வேற்றுமையின் உருபு மாற்றமில்லாத பெயர் ஆகும். இது, வினையையும், பெயரையும், வினாவையும் கொண்டு முடியும். இவற்றிற்குக் கருத்தாவாய் நிற்பதே இதன் பொருள் ஆகும். இரண்டாம் வேற்றுமையின் உருபு ‘ஐ’ மட்டுமே. ‘ஐ’ உருபின் பொருள்கள் ஆறு. மூன்றாம் வேற்றுமையின் உருபுகள் ஆல், ஆன், ஒடு, ஓடு என்பன. ஒடு, ஓடு என்னும் உருபுகள் தம்மையேற்ற பெயர்ப் பொருளை உடனிகழ்ச்சிப் பொருளாக வேறுபடுத்தும். நான்காம் வேற்றுமையின் உருபு ‘கு’ மட்டுமே. இதற்குரிய பொருள்களை நோக்கும்போது ‘இதற்கு இது பொருள்’ என்பது போல வருவதால் நான்காம் வேற்றுமையின் பொருள் ‘ஏற்றுக் கொள்ளுதல்’ என்பர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;