கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 9 மார்ச், 2012

நீலகேசி-6

‘உயிர் முதலிய உள்பொருள்களை மனம் மற்றும் பொறிகளால் காணுதல்; நினைவு, மீட்டுணர்வு, ஊகம், கருத்து, நூல் என்னும் அளவைகளால் உணர்தல்,  இவை நன்ஞானம், உலக மூடம், பாசண்டி மூடம், தெய்வ மூடம் இவற்றை அழித்து, காமம், அச்சம், அவா, உலகியல், பிற சமயக்கணக்கர், போலித் தலைவர் இவற்றை நீக்கி, ஞானம், பூசை, குலம், சாதி, பலம், இருத்தல், தவம், உடல் இவற்றால் தோன்றும் எட்டுவகைச் செருக்கை நீக்கி, நிலைத்தல், நற்காட்சி. நன்ஞானம், நற்காட்சியோடு நன்றின்பால் செல்வது நல்ஒழுக்கம்.

இவ்வாறு சமண அறம் உரைத்த முனிச்சந்திர முனிவர் இந்நல் அறங்களை உலகிற்குப் பரப்புமாறு நீலகேசியைப் பணிக்கிறார். அவளும் அவ்வண்ணமே காம்பிலி நாடு சென்று பௌத்த சமயக் கொள்கையில் நிறைந்த புலமையும் சிறந்த வாதத் திறமையும் கொண்ட குண்டலகேசியுடன் சமய வாதம் செய்து, பௌத்த சமயக் கொள்கை ஏற்றுக்கொள்ளத் தக்கதன்று; ஜின தருமமே உயர்ந்தது என நிலைநாட்டிக் குண்டலகேசியைத் தன் சமயக் கொள்கையை ஏற்கச் செய்கிறாள். அடுத்துக் குண்டலகேசியின் ஆசிரியர் அருக்க சந்திரனை உஞ்சை மாநகரில் சந்தித்து அவரையும் வாதில் வெல்கிறாள். பின் அருக்க சந்திரனின் ஆசிரியர் மொக்கலனைப் பதுமபுரத்தில் சந்தித்து வாதிட்டு வெல்கிறாள். அவர் நீலகேசியை ஞானாசிரியராகக் கொண்டு சமண சமயத்தைத் தழுவுகிறார். இறுதியாகக் கபிலபுரம் சென்று பௌத்த சமயத்தை நிறுவிய புத்தரையே சந்தித்து வெல்கிறாள். இவ்வாறு நூலின் பாதிக்கு மேற்பட்ட பகுதி பௌத்த சமய மறுப்பாகவே அமைகிறது. புத்த சாதகக் கதைகளிலுள்ள குறைபாடு, சமயத் தத்துவத்தில் காணப்படும் முரண்பாடு மற்றும் பௌத்த சமயத் துறவிகளின் ஆடம்பரமான வாழ்க்கை ஆகியவற்றைச் சுட்டியே சமய வாதம் நிகழ்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;