கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 31 மே, 2012

நீலகேசி,-25

128
வண்டவாம் வார்குழலும் வாளெயிறும் பூண்முலையும்
தொண்டைவாய் நன்னலமுந் தோளுந் துடியிடையும்
கண்டவாங் காமுகரும் யாமுங் கணநரியும்
விண்டவாக் கொண்டுணரின் வேறுவே றாமன்றோ.

129
கரையவா வாங்குங் கயமகன் கைத்தூண்டி
லிரையவாப் பன்மீ னிடருறுவ தேபோல்
நுரையவா நுண்டுகிலு மேகலையுஞ் சூழ்ந்த
வரையவாய்ப் பட்டார்க்கு மாழ்துயரே கண்டீர்.

130
மட்டார் மலர்புனைவும் வாணெடுங்கண் மையணிவும்
பட்டார் கலையுடையும் பல்வளையும் பைந்தோடு
நட்டாரை யெல்லா நரகுக்கே யுய்க்கு நாய்க்
கொட்டார்த்தார் செய்யும் கோலங்கள் வண்ணம்.

131
ஆடினாய் நான மணிந்தாய் கலன்மாலை
சூடினா யேனுஞ் சுணங்கார் வனமுலையா
யூடினா யாக வொழுக் கூற்றைப் பல்பண்டம்
மூடினாய் தோலின் முகமனுரை யேனே.

132
மின்போ னுடங்கிடையும் வேயேய் திரடோளு
மென்றே யிவை மகிழ்ந்தீங் கென்முன்னே வந்தாயாற்
புன்றோலும் பல்லென்பும் போர்த்த புறங்காட்டு
ளன்றே யுறைவ னவற்றான் மருள்வேனோ.

133
மெழுகுருகு மண்பாவை மேதையான் காய்த்தி
யொழுகுருகு செம்பொன்னா லுண்ணிறைந்த தேபோல்
புழுகுருகு மெய்காட்டிப் பொல்லாத போக்கி
யழகுருவு கொண்டா ளறவமிர்த முண்டாள்.

134
காய்வ செயினுங் குழவிக்கட்கவன்று கழிகண் ணோட்டத்தாற்
றாய்தன் முலையி லமுதூட்டுந்தகைய னறவோன் றானென்று
மாய வுருவ மாறித்தன்மற்றை யுருவ மேகொண்டு
பேயேன் செய்த பிழையெல்லாம்பெரும பொறுவென் றிறைஞ்சினான்.

135
முழங்கு முந்நீர் வையத்து முனிதக் கார்தம் முன்னின்று
வழங்க வாட்ட மொழிவர்நமன்னும் பொறாத வகையுண்டோ
வழுங்க லென்ற வறவோன்றனலர்கொள் பாதம் பெரிதேத்தித்
தொழுங்கை யாளக் குணக்குன்றைத்துதிப்ப னென்று தொடங்கினாள்.

136
வெள்ள மாரி தரித்தோய்நீவினையின் வாயி லடைத்தோய்நீ
யுள்ள மாட்சி யுடையோய்நீயுயப்போம் வண்ண முரைத்தோய்நீ
நள்ளென் யாமத் தியான்செய்தநவைக ளெல்லா நனிகண்டு
மெள்ள லில்லாப் பெரியோய்நின்னிணையில் பாத மணைவல்யான்.

137
மூட மூன்று முரைத்தோய் நீமுரண்செய் தோற்ற முனிந்தோய் நீ
வீடுங் கட்டும் விரித்தோய் நீவினையி னின்பம் வெறுத்தோய் நீ
காடு கிளர்ந்து காட்டியான் கலக்க வொன்றுங் கலங்காத
பாடற் கரிய பெரியோய்நின்பழிப்பில் பாதம் பணிவல்யான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;