| மருவினியன மதுவிரிவன மலரணிவன வகுளம் திருமருவிய செழுநிழலன செங்குழையன தேமா வரிமருவிய மதுகரமுண மணம்விரிவன நாகம் பொரிவிரிவன புதுமலரென புன்குதிர்வன புறனே | 425 |
சந்தனம் சண்பகம் குரா அசோகம் ஆகிய மரங்கள்
| நிழனகுவன நிமிர்தழையன நிறைகுளிர்வன சாந்தம் எழினகுவன விளமலரென வெழுசண்பக நிகரம் குழனகுவன மதுகரநிரை குடைவனபல குரவம் அழனகுவன வலர்நெரிதர வசை நிலையவ சோகம் | 426 |
இரதம் இருப்பை தாழை புன்னை ஆகியவை
| எழுதுருவின வெழுதளிரென விணரணிவன விரதம் இழுதுருவின கொழுமலரிடை யெழில்பொலிவன மதுகம் கழுதுருவின கஞலிலையன கழிமடலின் கைதை பொழுதுருவின வணிபொழிலின பொழி தளிரென புன்னை | 427 |
மல்லிகை முல்லை முதலிய கொடி வகைகளின் மாண்பு
| வளர்கொடியன மணம்விரிவன மல்லிகையொடு மெளவல் நளிர்கொடியன நறுவிரையக நறுமலரன நறவம் குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி ஒளிர்கொடியன வுயர்திரளினோ டொழு கிணரன வோடை | 428 |
கோங்கு முதலியன
| குடையவிவன கொழுமலரின் குளிர்களின கோங்கம் புடையவிழ்வன புதுமலரன புன்னாகமொ டிலவம் கடியவிழ்வன கமழ் பாதிரி கலிகளிகைய சாகம் இடையவிழ்வன மலரளவில விதுபொழிலின தியல்பே | 429 |
பொழிலில் வாழும் வண்டு ,புள் முதலியவற்றின் சிறப்பு
| மதுமகிழ்வன மலர்குடைவன மணிவண்டொடு தும்பி குதிமகிழ்வன குவிகுடையன நுகிகோதுபு குயில்கள் புதுமகிழ்வன பொழிலிடையன புணர்துணையன பூவை விதிமகிழ்பவர் மதிமகிழ்வுற விரவுற்றன விரிவே | 430 |
மரீசி பூங்காவில் உள்ள பொய்கைக்கரையை அடைதல்
| அதுவழகுத கைமகிழ்வுற வலர்தாரவ னடைய இதுவழகிய திவண்வருகென வெழுபுள்ளொலி யிகவா விதிவழகுடை விரியிலையிடை வெறிவிரவிய வேரிப் பொதியவிழ்வன புதுமலரணி பொய்கைக்கரை புக்கான் | 431 |
பொய்கைக்கரை மரீசியை வரவேற்றல்
| புணர்கொண்டெழு பொய்கைக்கரை பொரு திவலைகள் சிதறாத் துணர்கொண்டன கரைமாநனி தூறுமலர்பல தூவா வணர்கொண்டன மலலுற்றலை வளர்வண்டின மெழுவா இணர்கொண்டெதி ரெழுதென்றலி னெதிர்கொண்டதவ் விடமே | 432 |
விஞ்சையர் தூதுவனாகிய மரீசி அசோகமரம் ஒன்றைக் காணுதல்
| புனல்விரவிய துளிர்பிதிர்வது புரிமுத்தணி மணல்மேல் மினல்விரவிய சுடர்பொன்னொளிர் மிளிர்வேதிகை மிகையொண் கனல்விரவிய மணியிடைகன கங்கணியணி திரளின் அனல்விரவிய வலரணியதொ ரசோகம்மது கண்டான் | 433 |
மரீசி அசோகமரத்தின் நிழலையடைந்ததும், துருமகாந்தன் கல்லிருக்கையைக் காட்ட மரீசி
திகைத்தல்
திகைத்தல்
| அதனின்னிழ லவனடைதலு மதுகாவல னாவான் பொதியின்னவிழ் மலர்சிதறுபு பொலிகென் றுரை புகலா மதீயின்னொளி வளர்கின்றதொர் மணியின்சிலை காட்ட இதுவென்னென இதுவென்னென வினையன்பல சொன்னான் | 434 |
வேறு - நிலாநிழற்கல்லில் அமர்ந்திருக்குமாறு துருமகாந்தன் மரீசியை வேண்டிக்கொள்ளுதல்
| மினற்கொடி விலங்கிய விலங்கன்மிசை வாழும் புனற்கொடி மலர்த்தொகை புதைத்தபொலி தாரோய் நினக்கென வியற்றிய நிலாநிழன் மணிக்கல் மனக்கினிதி னேறினை மகிழ்ந்திருமி னென்றான் | 435 |
இதுபொழிற்கடவுளுக்காக ஆக்கப் பெற்ற பொன்னிடம் அன்றோ? என்று மரீசி கேட்டல்
| அழற்கதி ரியங்கற வலங்கிண ரசோகம் நிழற்கதிர் மரத்தகைய தாக நினை கில்லேன் பொழிற்கடவுள் பொன்னிடமி தென்னைபுகு மாறென் றெழிற்கதிர் விசும்பிடை யிழிந்தவன் மொழிந்தான் | 436 |
துருமாந்தகன் மரீசிக்குப் பதிலுரத்தல்
| நிலாவளர் நிழற்கதிர் நிமிர்ந்தொளி துளும்பும் சிலாதல மிதற்குரிய தெய்வமெனல் வேண்டா அலாதவ ரிதற்குரிய ரல்லரவ ராவிர் உலாவிய கழற் றகையி னீரென வுரைத்தான் | 437 |
அங்கத நிமித்திகன் கூறியவற்றைக் கூறத்தொடங்குதல்
| என்னவிது வந்தவகை யென்னினிது கேண்மின் நன்னகரி தற்கிறைவன் முன்னநனி நண்ணித் தன்னிகரி கந்தவ னங்கத னெனும் பேர்ப் பொன்னருவி நூல்கெழுபு ரோகித னுரைத்தான் | 438 |
தூதன் வருவான் என்று கூறியதைச் சொல்லுதல்
| மின்னவிர் விளங்குசுடர் விஞ்சையுல காளும் வின்னவி றடக்கைவிறல் வேலொருவன் வேண்டி மன்னநின் மகற்கொரு மகட்கரும முன்னி இன்னவ னினைப்பகலு ளீண்டிழியு மென்றான் | 439 |
அச்சுவக்கிரீவனைக் கொல்வான் என்று அங்கத நிமித்திகன் கூறியதாகக் கூறல்
| மடங்கலை யடுந்திற னெடுந்தகைதன் மாறாய் அடங்கல ரடங்கவடு மாழியஃ தாள்வான் உடங்கவ னுடன்றெரி துளும்பவரும் வந்தால் நடந்தவ னடுங்கவடு நம்பியிவ னென்றான் | 440 |
தன்னை அரசன் அங்கு இருக்குமாறு அமர்த்தியதைக் கூறுதல்
| ஆங்கவன் மொழிந்தபி னடங்கலரை யட்டான் தேங்கமழ் பொழிற்றிகழ் சிலாதலமி தாக்கி ஈங்கவ னிழிந்தபி னெழுந்தெதிர்கொ ளென்ன நீங்கல னிருந்தன னெடுந் தகையி தென்றான் | 441 |
மரீசி தூது வந்து பொழிலில் தங்கியுள்ளமையை யுணர்ந்த அரசன் தூதுவனின் வழிப்பயணத்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
துன்பை மாற்றுமாறு நான்கு நங்கையரை அனுப்புதல்
| என்றவன் மொழிந்தபி னருந்தன னிருப்பச் சென்றவன் வழிச் சிரமை தீர்மினென நால்வர் பொன்றவழ் பொருந்திழை யணங்கினனை யாரை மின்றவழ் விளங்குகொடி வேந்தனும் விடுத்தான் | 442 |
பயாபதி மன்னன் விடுத்த பாவையர் புட்பமாகரண்டப் பூங்காவை நோக்கிப் புறப்படுதல்
| பொன்னவிர் மணிக்கலை சிலம்பொடு புலம்ப மின்னவிர் மணிக்குழை மிளிர்ந்தொளி துளும்பச் சின்னமலர் துன்னுகுழ றேறலொடு சோர அன்னமென வல்லவென வன்னண நடந்தார் | 443 |
| நலங்கனி மடந்தையர் நடத்தொறு மிணர்ப்போ தலங்கலள கக்கொடி யயற்சுடர வோடி விலங்குபுரு வக்கொடி முரிந்துவெரு வெய்த மலங்கின விலங்கின மதர்த்தவவர் வாட்கண் | 444 |
| அலத்தக மலைத்தன வடித்தல மரற்றும் கலைத்தலை மலைத்து விரி கின்றகடி யல்குல் முலைத்தலை முகிழ்த்தொளி துளும்பி யுள முத்தம் மலைத்தலை மயிற்கண் மருட்டுவர் சாயல் | 445 |
வண்டுகள் ஒலித்தல்
| கணங்கெழு கலாவமொளி காலுமக லல்குல் சுணங்கெழு தடத்துணை முலைசுமை யிடத்தாய் வணங்கியும் நுணங்கியும் வருந்திய மருங்கிற் கிணங்குதுணை யாய்ஞிமி றிரங்கின வெழுந்தே | 446 |
இடையின் வருத்தங் கண்டு வண்டுகள் இரங்கியெழுந்தனவென்க
| முலைத்தொழில் சிலைத்தொழிலி னாருயிர் முருக்கும் நிலைத்தொழில் வென்றுள நினைத்தொழுக வின்பக் கலைத்தொழில்கள் காமனெய் கணைத்தொழில்க ளெல்லாம் கொலைத்தொழில்கொள் வாட்கணி னகத்தகுறி கண்டீர் | 447 |
| துடித்ததுவர் வாயொடுது ளும்புநகை முத்தம் பொடித்தவியர் நீரொடுபொ லிந்தசுட ரோலை அடுத்ததில கத்தினொட ணிந்தவள கத்தார் வடித்தசிறு நோக்கொடுமு கத்தொழில்வ குத்தார் | 448 |
வண்டுகள் மயக்கம்
| பூவிரிகு ழற்சிகைம ணிப்பறவை போகா வாவிகொள கிற்புகையுள் விம்மியவ ரொண்கண் காவியென வூதுவன கைத்தலம் விலங்க மேவியிவை காந்தளென வீழமிக நொந்தார் | 449 |
| சுரும்பொடு கழன்றுள குழற்றொகை யெழிற்கை கரும்பொடு கலந்துள களித்தவவர் தீம்பண் நரம்பொடு நடந்துள விரற்றலை யெயிற்றேர் அரும்பொடு பொலிந்ததுவர் வாயமிர்த மன்றே | 450 |
| கணங்குழை மடந்தையர் கவின்பிற ழிருங்கண் அணங்குர விலங்குதொ றகம்புலர வாடி மணங்கம ழலங்கலுடை மைந்தர்த மனந்தாழ் வணங்கிடை வணங்குதொ றணங்கென வணங்கும் | 451 |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.