178 | சொல்லியவந் நான்மைமேற்றுணிவினையுந் தான்பெயர்த்து நல்லவையை மனங்கொளீஇநான்மையின் முதல்வைத்த வெல்லையில் குணத்தலைவரிலக்கணமென் றெடுத்ததன்மேற் பல்வகைய பெருங்குற்றம் பதம்பதமாயக் கேளென்றாள். |
179 | முன்னெனப் படுவதுதான்முதலில்லாத் தடுமாற்றம் அன்ன தன்கட் பெரியனேலறங்கொண்ட தவமாகும் பின்னதன்கட் பெரியனேற்பிறழ்வெய்துங் காலச்சொ லென்னென்றான் பெரியவாறிருமையினுந் திரிந்தென்றாள். |
180 | பெருமைமுன் பெற்றனனேற்பின்னைத்தான் முடிப்பதோர் கருமமிங் கெவனாகுங்காட்டுதியேற் பெற்றிலன்முன் றருமந்தான் கருதிநீசொன்னாயேற் றலைவரே யொருமையா லறந்தெளிந்தவுழப்புலையர் முதலானார். |
181 | தான்கெடினுந் தக்கார்கே டெண்ணற்க வென்பதனை யூன்கொடுமை யுரைத்தான்·துணர்ந்திலனே யாகாதோ தான்கெடு மளவெல்லாநினைந்துரைத்த தத்துவந்தான் மான்கடியு நோக்கினாய்வழியறக்கெட் டொழிவதோ. |
182 | வழிவாழக் கெடுகின்றார்மாந்தருள் மேலாயார் பழிபாவ மோராதான்பற்றினார்ப் பாழ்செய்வான் ஒழிபாவி தலைவனென்றுரைப்பதனை யுலகத்தார் கிழியோடு மாறாக்காசென்றான்சொற் கேட்பவோ. |
183 | நுனைத்தலைய நுண்மயிரைநுனியுறீஇ விதிர்த்திட்டா லனைத்துணைய தடங்கலுமறக்கிடந்த பிறந்துழப்பு நினைக்குங்காற் பிறர்க்கேயாமென்றியா னீயன்னா யனைத்துணைய பெரும்பாவமவன் செய்தா னாகானோ. |
184 | துன்பந்தான் றீவினையின் வழித்தோன்றுந் துன்பேயா மென்பதனை நுமரேடீ யெப்பொழுது முரைப்பவாற் பின்புந்தான் பிறர்பிறர்க்குப் பிறந்துழப்பே யாக்கினா லன்பினான் முன்செய்த தருவினையே யாகாதோ. |
185 | தனக்கொன்றும் பயனின்றித்தளையாளென் றான்வருந்தி யெனைப்பெருங் குப்பையுமெருச்சுமப்பாற் கண்டக்கால் நினைப்பதொன் றுடைத்தவன்செய்நெடும்பாவ நிச்சலும் மனக்கினிதா வவன்றன்னையாள்வார்மாண் புரையாயோ |
186 | அவ்வகையா லுழக்கின்றா னயலார்கள் படுகின்ற வுய்வகையில் போ¢டரையொழிப்பதன் பொருட்டாக விவ்வகையா லருள்செய்யு மென்பதனை யெடுத்துரைத்தாள் கொவ்வையந் துவர்ச் செவ்வாய்க்குண்டலமா கேசியே. |
187 | அருளினாற் பிறர்க்குழக்குமனனென்ற வவ்வுரையைப் புரளல்நீ பிறப்பொழியும்பொழுதின்க ணவ்வருளைப் பொருளன்மை கண்டானோபுற்கலர்தா முலர்ந்தாரோ தெருளநீ யுரைத்துக்காண்டிருந்தவையா ரிடையென்றாள். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.