கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 23 ஜூன், 2012

நீலகேசி, -36

251உரைப்ப பேரரு ளுண்பன மீனொடூன்
றிரைப்ப மெல்லனை செய்வ விழுத்தவம்
கரைப்ப தீவினை கண்டது சூனியம்
புரைப்பின் மார்க்கம் பொருத்த முடைத்தரோ.


252எல்லா மசுசியு மென்ப வனவா
லல்லா லழுக்குற் றவனடிக் கேத்தலர்
சொல்லார் சுகமுஞ் சுகத னவனென்று
பல்லார் வருத்தம் பழுதெனப் பண்ணுப.


253நிலையா வெனெச்சொல்லி நேர்ப்ப பொருடூயே
மலையோ ரனையந்ன் மாட மெடுப்ப
விலையே யுயிரென் றிறந்த நினைப
புலைசே யமர்ந்தவர் புத்தியின் வண்ணமே


254மயித்திரம் பாவித்து மற்றவற் றூனை
யசிப்பன வேபோ லமர்ந்ததிருந்த துண்ணுஞ்
சயித்தியங் காணித் தலையினை முட்டும்
பயித்தியங் கொண்டவர் பண்புமா· தொக்கும்


255புத்த ருருவுக்கும் போலிக்கும் போலியை
மத்தகத் தேத்தி வணங்கி வழிபடுஞ்
செத்த பொழுதினச் செந்தடி மென்றிடு
மத்த னுடைய வருள்வகை வண்ணம்.


256பேனறாக் கூறை பெருமுடுகுநாறுமேற் றுக்கந் துக்கம்
மானறா நோக்கி மணற்சுமையுந்தான்பெரிதாற் றுக்கந் துக்கந்
கூனிறாக் கண்டாலுங் கொள்ளமுடியாதேற் றுக்கந் துக்கந்
தானறாப் ப·றொழிலுந் தான்றுக்கமாதலாற் சருவ்வந் துக்கம்.


257பொய்பொத்திச் சொல்லினவும்போங்கூலி கொண்டனவும்
வையத்தஞ் சுட்டனவும்வாழ்மருது கொன்றனவும்
கையத்தி னூனுக்கேகன்றிக் கலாய்த்தனவு
மையத்தை யின்றியடுப வாலோவழல்நரகத் துள்ளேயடுப வாலோ.


258பற்றே மிகப்பெருக்கிப் ப·றொடர்ப்பா டேயாக்கி
யற்றீர் போற் காட்டி யடைக்கலமே வவ்வுநீர்
பெற்றீரே பேயுடம் பன்றேற் பெரும்பாலு
மெற்றே யிருணரகிற் கீர்க்கு மாலோ
விரக்கமொன் றில்லீரை யீர்க்கு மாலோ.


259ஆங்கவ ளறங்கூறக்கேட்ட வவாச்சியன்றான்
றேங்கம ழொலிகோதாய்சித்தமே யல்லதில்லை
தீங்கொழுக் கென்றதெல்லாந்தீவினையென் னல்வேண்டார்
பூங்கமழ் காராடைபோர்த்தவெம் புத்தரென்றான்


260துத்தலே வேண்டிநின்றுதோந்தொடர்ப் பாடுநீக்காய்
சித்தமே நல்லதென்றாற்றேற்றலு மாவதுண்டோ
கத்திகொண்டில் லில்வாழ்பேய்காறலை வேறுசெய்து
குத்தவதின் னும்போழ்திற்கூடுமோகன் மையேடா.


261உள்ளமும் பாயிரம்மு மொக்குமேல் வீடுமுண்டாம்
கொள்ளுமேற் குற்றம·தாக் கூடுமே பற்றுமாங்கண்
விள்ளுமேல் வேறதாய வேடமு மன்னதேயாங்
கள்ளமே சொல்லிநின்று கன்றினாற் காட்டலாமோ.


262புனைந்துநீ சொல்லும் வீடும்போகவுண் டாக தந்தே
நினைந்துநாங் காணி னெல்லாநின்றதொன் றில்லை யென்றாற்
றுனைந்துதா னுண்மை நன்றுசூனிய மாதற் கென்றாட்
கினைந்தினைந் தேங்கி நல்லாயென்செயற் பால தென்றான்.


263செத்தவ ரப்பொழுதே தேவருட் செல்பவேனு
மத்தலை யின்பநோக்கா ரஞ்சுவ மாக்களந்தோ
தொத்துள வாகவென்னான் சூனிய வீடுசொன்ன
புத்தனை நோதுமத்த புலம்பனீ போகவென்றாள்.


264புன்னெறி யவைகளெல்லாம்போக்கிய பாக்கியத்தாய்
நன்னெறி நன்ஞானங்காட்சியு நன்குகொண்டென்
சொன்னெறி திரிவாயேற்சோர்வில்பே ரின்பமெய்தி
மன்னுதி யென்றுமற்றுங்கூறினாண் மாதராளே.


265காட்டுழல் களிநல் யானைகால்கையி னோர்ப்பித் தேறித்
தோட்டியிட் டூர்வ தேபோற்சூரிய சோமன் றானும்
வாட்டடங் கண்ணி நல்லாள்வாக்கெனுந் தூக்க யிற்றாற்
பூட்டுபு கொள்ளப் பட்டான்போதியார்க் காதி யன்னான்.


266அருக்கமா சந்திரனையறங்கொளீஇ யாங்கவனை
யிருக்கும்வா யொருப்படுத்திங்கீதுநுனக் குரைத்தாரைப்
பொருக்கநீ சொல்லென்னப்புத்தனார் முதன்மாணி
முருக்குவாய்சென் றவனாம்மொக்கல னெனச்சொன்னான்.


மொக்கல வாதம்
267
நீவருத லொழியென்றுநிறைபதும புரத்துக்கே
மாதிரந்தா னெறியாகமனம்போலச் சென்றெய்தி
மூதுரையுங் காரணமுமுழுதெழுதி யழகிதாய்ப்
போதுகளும் பொன்மணலும்புனைந்தினிய பொலிவிற்றாய்.


268கொடிமகரக் கோபுரமும்நெடுமதிலுங் குடிஞைகளும்
தொடிமகரத் தூணிரையுஞ்சொலற்கரிதாய்ச் சுவர்க்கத்தின்
படிமகரப் படிமையதப்பள்ளிகண் டளியள்போய்க்
கடிமகரக் கடல்கடந்துகலந்தந்த நலமென்றாள்.


269ஒழுக்கமுங் கல்விகளுமுரைத்தனவே யொப்பனகள்
இழுக்கில்லாப் பெருந்தவத்திலிங்கிகளைத் தான்கண்டு
முழுத்தாள தாய்ப்பள்ளிமுற்றத்தோ ரரைமரத்தின்
குழுக்கொம்பர் பிடித்தொருகாற்குஞ்சித்து நின்றுதான்.


270துன்னஞ்செய் தாடையைத்துவர்தோய்த்துக் கொட்டியும்
பொன்னஞ்செய் புத்தங்கப்புகையூட்டிக் கைசெய்து
தன்னமு மளித்தாயதலைசொறியு மிடையிலையா
லென்னவற்றி னாம்பயனையெனக்கறிய வுரையென்றாள்.


271ஆங்கவ ளதுவுரைப்பவதற்குரிய மறுமாற்றந்
தாங்களு மரைக்கில்லார் தலைசாய்த்தங் கிருந்தார்
மூங்கைமையான் மொழிகொண்டேன்மொக்கலநற் றேரயான்
பாங்கினால் வினவுவன்படிறின்றி யுரையென்றாள்.


272வீடிற்கே யெனின் ஞானம்வேண்டாதே முடியுமாற்
பீடிற்கே யெனினின்னிற்பெருஞ்செல்வர் திருந்தினார்
மூடிற்றின் பயனென்னையெனவினவ மொக்கலன
மூடிற்றுஞ் சிறிதுளதாலுருவறிதற் கெனமொழிந்தான்.


273படைப்பெளிதாற் கேடறிதாற்பலகள்வர் நவையாரா
லுடைக்கியைந்த வொலியற்றாலூன்றருவார்க் குணர்த்துமால்
விடக்கமர்ந்த வுள்ளத்தாய்வேடமு மறிவிக்குந்
தொடர்ப்பாடும் பெரிதன்றாற்றொட்டைந் பூணியோ.


274பொன்கொண்டா ராயினும் போர்வைபூச் செனிற்புலையன்
வன்கண்மை யாற்செய்தவஞ்சமே யெனவளைப்பர்
தன்றன்மை யாகியதான்பழிப்பார் தாமுளரோ
வெண்கண்டு வந்திங்கணிதுகொண்டா யெனச்சொன்னாள்.


275உண்ணன்மை தவமென்றங்குறுப்பெல்லா மறைக்கின்றாய்
திண்ணென்ற மனமிலைநீசிறைபலவுஞ் செய்தலால்
பெண்ணென்றும் பிறவென்றுந்தானோக்கிப் பெரும்பேதாய்
கண்ணன்றோ வுள்ளத்தைக்கலக்குவன வவைகாவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;