கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 24 ஜூன், 2012

நீலகேசி, -37

276பெண்பாலார் கண்டக்காற் பேதுறுவ ரெனவுரைப்பாய்
திண்பான்மை யவர்க்கழியச்சிதையுநின் றவமாயின்
மண்பாலா ரவருள்ளமாண்புளதா யுரையாரா
லெண்பாலும் படாதாகியிழுக்குநின் குணமந்தோ.


277இழுக்கினு மிழத்தியாலிடறினு மதுவேயால்
விழுக்கலமால் வினைபெரிதால்வினைக்கேடாந் தொழிறருமா
லொழுக்கிற்கு முரித்தன்றூணோரிடையூ றுடன்கொடுக்கும்
வழுக்கின்றித் தவஞ்செய்யின்மண்டையாற் பயனென்னோ.


278நிறந்தூய்தா நீரினால்வாய்தூய்தாம் பாகாற்
பறைந்துபோய் மெல்கோலாற்பல்லெலாந் தூயவாம்
புறந்தூய்மை செய்தக்கால்புரிவள்ளந் தூய்தாமே
லறந்தூய்மை கணிகையர்க்கேயாற்றவு முளதாமால்.


279சவருடைய மனைவாழ்க்கையெனப்போந்து தவம்புரிந்தாய்
பவருடைய விறகிறுத்துப்பலகலங்க ளொருப்படுத்துற்
றுவரோடு பல்கூறையுடன்புழுக்கி யொலித்திடு நீ
துவரடுதி பூவடுதிசோறடலே முனிந்தாயோ.


280வண்ணாரம் துன்னாரம் மச்சிகமே கச்சாரஞ்
சண்ணார மெனப்பிறவுந் தவத்துள் நீ கற்றனவா
லெண்ணார்ந்த காரங்க ளில்லகத்தே பயின்றாயே
லுண்ணாயே வயிறார வோர்ப்பொன்று மிலையேகாண்.


281சிறந்தாய்க்கீ துரைக்கலாஞ்சிந்தனையை முடிப்பதே
துறந்தார்க்குக் கடனாகிற்சோறலாற் பிறவேண்டா
லிறந்தார்க்கு மெதிரார்க்குமிவட்காலத் துள்ளார்வான்
பிறந்தார்க்கு மிதுவன்றிப்பிறிதொன்று சொல்லாயோ.


282உண்டியா லுடம்புளதாலுடம்பினா லுணர்வாமென்
றெண்டிசையும் பரந்திசைப்பவீதுனக்கே தெரியாதோ
தண்டியாய்க் கழியாதுதவஞ்செய்த லுறுதியேற்
பண்டியாற் போக்குநின்ப·றொடர்ப்பா டெனச்சொன்னாள்.


283அருளுடையா ளுரைப்பக்கேட்டாங்காரித் தவனுந்தன்
பொருளுடைமைத் தருக்கினும்புன்ஞானக் களிப்பினு
மருளுடையார் மதிப்பினுமாற்றந்தான் செயற்பொருட்டா
லிருளுடைந்த கூந்தலாளிட்டத்தை யெண்ணுவான்.


284தரணென்று நன்றென்றாடன்றன்மை யுருவென்றாள்
அரணென்னத் தெளிந்ததுதானாருகத மேமன்னு
முரணின்ற துண்மையான்மொக்கலனு முனிந்துரைப்பா
னிரணியனைப் போல்வந்திங்கிடர்ப்பட்டா யென்றானே.


285என்னாலும் வெலப்பட்டாரிருவருள ரிங்கவரைச்
சொன்னாலு மறிதிநீதுடிகடியு மிடையுடைய
கொன்னாணு நெடுவேற்கட்குண்டலமா கேசியு
மன்னாளுக் கறமுரைத்தவருக்கமா சந்திரனும்.


286என்றாளை முகநோக்கியிதுபெரிதும் பொய்த்தனைநீ
யொன்றாத கொள்கையாருலகினுள் யாவரையும்
வென்றாள்மள் றிவள்சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும்
நன்றாரம் பிறர்க்கீந்தான்றருமங் கொண்டென்றானாய்.


287வேதியரை முதலாகவெலப்பட்டா ரிவரிவரென்
றோதியாங் கவையவைதா மிவையிவையென் றுரைப்பக்கேட்
டாதிகா லாவணத்துளார்கதரை வென்றதனை
நீதியா லுரைத்தியேனின்னையான் வெல்லேனோ.


288எனக்கேட்டாங் கெடுத்துரைப்பானிந்திரர்க டொழப்படுவான்
றனக்காய தர்மமுமதர்மமுங் காலமுங்
கனப்பாட்டிற் காயமேயுயிருருவே புண்ணியமே
நினைக்குங்காற் பாவமேகட்டுவீ டெனநிறுத்தி.


289இப்பொருட்க ணிகழ்ச்சியு
மிவையிவையா மெனவிரித்துச்
செப்பினா னாதன்றன்
சிந்தைக் கெழுந்தவா
றப்பொருளு மந்நிகழ்வு
மவையவையா வறியாதை
வப்பிள வனமுலையார்
மணல்விளையாட் டதுவேபோல்.


290மொக்கலனு மிதுகூற முல்லைநா றிருங்குழலா
ணக்கனளா யிதுகூறு நாதன தியல்பறியா
யிக்கிரமத் திந்திர னிருடிகளைத் தேவியரைத்
தக்கதாத் தொழுதக்கா லவர்தலைவ ரெனலாமோ.


291எந்தலைவ ரியல்பொடுநூ
லின்னணமென் றறியாதாய்
சிந்தனைக்க ணாயினுந்
தீமையு முரைத்திலையாற்
றந்துரைத்த தலைவனூற்
றத்துவமா மாகவே
முந்துரைத்த பொருணிகழ்வு
பிழைப்பின்மை முடியாவோ.


292அத்தியைந் தெனினல்லவறுபொருளு மவையாகா
வுத்தியா வெடுத்தோதுமொன்பதனோ டொட்டலவாற்
குத்¢ய பல்குறையே யன்றியுமிப் பொருளெல்லாம்
பொத்தியுங் காட்டுவாய்பொருளியைவோ பெரிதென்றாள்.


293சலம்படவே யுரைத்தனைநீதருமத்திற் செல்லுதுமென்
றிலம்படுமே லியக்கில்லையென்பதெம் முரையென்போம்
கலஞ்செல்லுங் கடலதனைக்காற்றேபோ லுந்தாதாம்
பலம்படு முரைநினக்குப்மாம்புண்ட பாலேபோல்.


294அல்லதற்க மப்படியேயாமென்ற லதுகொள்ளாய்
செல்லவுஞ் செலுத்தவுநில்லவு நிறுத்தவுஞ்
சொல்லியவாய் தேய்க்குறுவாய்சொல்லிக்கொள் வலியதனால்
பல்லொடும் படத்தேய்த்தாற்பயம்பெரிதும் படுமன்றோ.


295கடனிலமா காயமேயமையாவோ விவையிரண்டு
முடனில்லை யாயினுமூனமிங் கெவனென்பாய்
மடனுடையை நீபெரிதுமன்னுயிர்க்கும் புற்கலக்கு
மிடனெல்லா வுலகி னெல்லையும் புறப்படுமோ.


296பலசொல்லிக் குறையென்னைப்பஞ்சமா கந்தமே
யலகில்லாப் பெரும்பரப்பினாகாய நினக்கில்லை
நிலைசெலவிற் கிவை வேண்டாநின்பொருளு மிவையல்லா
வுலகெல்லை யுரைப்பான்புக்குணர்வினையே வருத்துதியால்.


297காலநீ வேண்டாயாய்க்கணிகமுங் கற்பமும்
சாலமும் புனைந்துரைத்தி சமழ்ப்பென்னு மிலையாகிப்
பாலமா பண்டிதனே பழநோன்பி யிவனென்பாய்
மாலுமிங் குடையையோமயக்குவதொன் றுண்டனையோ.


298இக்கோட்க ளெழனோக்கியிவையிவையோ யாமென்றா
லக்கோட்க ளெழனோக்கியவையவையாக் கண்டிருந்
தெக்கோளு மில்லென்பாயாண்டெண்ணி யேத்துதியான்
மெய்க்கோளா லென்றியான்மிகைதெருட்டுந் திறங்காணேன்.


299கருத்தினாற் பெற்றாமோ கண்கூடாக் கண்டோமோ
பொருத்தனையென் றுரைக்கின்றாயுறுநோயைத் தீர்ப்பதோர்
மருத்துநூ லில்லையான்மயங்கியே சொல்லாது
திருத்தியநின் னுணர்வின்மைதெருட்டிக்கா ணெனச் சொன்னாள்.


300பொறியுணர்வின் புலமாயபுற்கலமே யுயிரறியு
மறிவினா லறியாதேயாமாகா தெனவுரைப்பாய்
நெறியென்னை யிந்திரன்றன்நெடுநகரக் கவன்றேவி
குறியளோ நெடியளோநூலொழிப்பாய் கூறிக்காண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;