கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 26 ஜூன், 2012

சூளாமணி, -1-24

   அமரர்களின் வியப்பு


சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா
வாய வாயிர மாயிர மடுதிற லரிமா
ஏயெ னாமுனிங் கழித்தன னிவனெனத் தத்தம்
வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார்
718


அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ
டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்
பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி
யிழிந்த கங்கையி னருவியொத் திழிந்தவவ் விடத்தே
719


திவிட்டனின் சால்புடைமை


யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோ
னோத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி
யேத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்
போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன்
720


தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்
வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தா
னம்பி நாமினி நளிவரைத் தாழ்வார்கண் டல்லா
லிம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே
721


இதுமுதல் 10 செய்யுள்கள் ஒருதொடர் -திவிட்டநம்பிக்கு விசயன் குறிஞ்சிநில வனப்பினை எடுத்துக் கூறல்


ஆங்கண் மால்வரை யழகுகண் டரைசர்கள் பரவும்
வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலரச்
வீங்கி மாண்பின வினையன விவையென வினிதின்
வாங்கு நீரணி வளை வண்ண னுரைக்கிய வலித்தான்
722


புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
கள்ளி னுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழு
வுள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்
723


காளை வண்ணத்த களிவண்டு கதிவிய துகளாற்
றாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்று
ளாளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய
வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்
724


மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு
துன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ
இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே
மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய்
725


உவரி மாக்கட் னுரையென வொளிர்தரு மயிர
அவரை வார்புனத் தருந்திமே யருவிநீர் பருகி
இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தென விவையே
கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய்
726


வேறு


துள்ளிய ரும்புனற் றுளங்குபா றைக்கலத்
துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி
நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்
பிள்ளைநா ளம்பிறை பிழற்தல்போ லுங்களே
727


வழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
கழையும்வே யுங்கலந் திருண்டு காண் டற்கரு
முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின
திழையினம் பொன்னொளி யெரிப்பத்தோன் றுங்களே
728


பருவமோ வாமுகிற் படல மூடிக்கிடந்
திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழித்
தருவி யோ வாபுரண் டசும்புபற் றித்தட
வரையின்றாழ் வார்நிலம் வழங்கலா கார்களே
729


சூரலப் பித்தொடர்ந் தடர்துளங் கும்மரில்
வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்
ஊரலோ வாதனன் றுயிரையுண் டிடுதலால்
சாரலா காதன சாதிசா லப்பல
730


பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்
திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக்
குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்
பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே
731


அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன
உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன
இவைகள்கண் டய்சில வேழவீட் டம்பல
நவைகள்கண் டாயின நம்மலா தார்க்கெலாம்
732


குழல்கொடும் பிக்கணங் கூடியா டநகும்
எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின்
கடில்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம்
பொழில்கள்வெள்ள ளத்திடைப் புரளநூ றுங்களே
733


ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு
நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்
காக்கலா காகளி றாழவா ழும்புறந்
தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்துபொன் றுங்களே
734


இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல
மதியம்பா ரித்தன மணிக்கற் பாறையின்மிசை
நிதியம்பா ரித்தொளி நிழன்று துஞ் சன்னிலைக்
கதியின் வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே
735



வேறு


இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்
736


தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை
கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்
மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கு
மெல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே
737


திரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைகொண் மாலையாய்
738


வரைவாய் நிவத்த வடுமா வடுமா
விரைவாய் நிவந்து விரியா விரியா
புரைவா யசும்பு புலரா புலரா
இரவா யிருள்செ யிடமே யிடமே
739


இளையா ரிளையா ருடனாய் முலையின்
வளையார் வளையார் மனம்வேண் டுருவம்
விளையா விளையாட் டயருந் தொழிறான்
றளையார் தளையார் பொழிலின் றடமே
740


அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா
விளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்
வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ
இளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம்
741


தமரைத் திடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்
தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த்
தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம்
தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே
742


நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே
743


நகுமலரன நறவம் மவைசொரி வனநறவம்
தொகுமலரன துருக்கம் மவைதரு வனதுருக்கம்
மகமலரன வசோகம் மவைதருவ வசோகம்
பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர்
744


அணங்கமர் வனகோட லரிதவை பிறர்கோடல்
வணங்கிளர் வனதோன்றி வகைசுடர் வனதோன்றி
இணங்கிணர் வனவிஞ்சி யெரிபொன் புடையிஞ்சி
மணங்கமழ் வனமருதம் வரையயல் வனமருதம்
745


சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்
கேந்தி நின்றன விம்மலை யாரமே
வாய்ந்த பூம்புடை யும்மலர்க் கண்ணியு
மீந்த சாகைய விம்மலை யாரமே
746


இயங்கு கின்னர ரின்புறு நீரவே
தயங்கு கின்றன தானமந் தாரமே
பயங்கொள் வார்பயங் கொள்பவ வனைத்தையும்
தயங்கு கின்றன தானமந் தாரமே
747


வேறு


பொன்விரிந் தனைய பூங் கோங்கும் வேங்கையு
முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல
மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்
வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே
748


நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்
பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ
தழற்பொதிந் தெனத்துகி றரித்த காஞ்சியர்
குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே
749


மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
தாவில்பூந் துகளொடு ததைந்து தோன்றுவ
பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்
பாவுசெந் துகிலுடைப் பள்ளி போலுமே
750


வேறு


அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று
நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி
எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே
751


இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை
தணந்தொளி விடாத வெண்டாமரை ததைந் தனையதொன்றே
752


காரிருட் குவளிக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்
கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தல்
பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெயிற் றமர நோக்கிற்
சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம்
753


வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை
யேரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்
காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்
754


மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைத்துகீ ழிருண்ட தாழ்வர்
ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம்
நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி
மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே
755


ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து
நாவின்வீற் றிருந்த நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார்
காவிவீற் றிருந்த கண்ணார் கந்தர்வ மகளிர் கண்டாய்
பாவிவீற் றிருந்த பண்ணி னமுதினாற் படைக்கப் பட்டார்
756


அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்
விலங் கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாடமாடம்
இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிடங்கள் கண்டாய்
நலங்கிளர் பசும்பொற் கோயி னகுகின்ற நகர மெல்லாம்
757


போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிர்த னாரோ
டாய்நிழற் றுளும்பு வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்
சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய
பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்கு மண் டபங்க ளெல்லாம்
758


எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்
முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய
கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற்
செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம்
759


தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்
வம்பவாங் குழலி னேங்க மணியரை யரங்க மாக
உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக
நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய்
760


பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலங்குழை யிலங்கு சோதிக்
கன்னவில் வயிரத் திண்டோ ட் கடல்வண்ண னுவப்பக் காட்டி
மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்
இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார்
761



பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்
மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்
காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி
யோசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான்
762


வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளொயிற் றரங்கச் சீயங்
கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து
குலிகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப
ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய்
763

 இதுமுதல் 6 செய்யுட்கள் ஒரு தொடர் விசயன் திவிட்டனின் ஆற்றலை வியந்து பாராட்டுதல்

வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிச்
கம்பமா வுலகந் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்
நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்
வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ 764

ஆங்குநீ முனிந்த போழ்தி னரிது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றே
னோங்குநீண் மலையின் றாழ்வா ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன் 765

குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லா
மன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி
வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றா
யின்றைக்கொண் டுலக மெல்லா மினிதுகண் படுக்கு மன்றே 766

அரசரின் முதற் கடமை

உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்
வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கை மேற் படைக்கப் பட்ட
அரசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி லுண்டோ 767

யாக்கையால் எய்தும் பயன்

கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லா
ரற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயில்
பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னா 768

இறவாது நிற்போர் இவர் எனல்

மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயி
லன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலா
மென்னையான் கொடுத்தும் வையத் திடுக்கணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார் 769

ஒருவனுடைய இருவேறு யாக்கைகள்

ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பின் யாத்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றினூழ் காத்து வந்து
மருவிய வுருவ மிங்கே மறைந்துபோ மற்ற யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே 770

வேறு - விசய திவிட்டர்கள் குறிஞ்சி நிலங்கடந்து பாலைநிலம் எய்துதல்

என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்
சென்றொர் வெங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுநிலங் காய்த்தினான் 771

இதுமுதல் 8 செய்யுட்கள் ஒருதொடர், விசயன் பாலைநிலத்தின் தன்மையை எடுத்தியம்பல்

ஆங்கவ் வெங்கடஞ் சேர்ந்த பினையகா
ணீங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென
ஏங்கு நீர்ககடல் வண்ணனுக் கின்னணம்
வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான் 772

முழையு டைந்தழல் காலு முரம்பயற்
கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
மழையு டைந்துகு நீரென வாய்மடுத்
துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம் 773

மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழ
லொக்க வோடி யுறைத்தலி னான்மிசை
உக்க நெற்பொரி யுற்றொரு சாரெலாம்
தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே 774

ஏங்கு செங்கதி ரோனெ றிப்பநிழல்
வேங்கொ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்
பாங்க லார்மனை போலப் பறைந்தரோ
ஓங்கி நின்றுல வுற்றன வோமையே 775

அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழ
லுற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம் 776

பைத்த லைப்பட நாக மழன்றுதம்
பொய்த்த ளைத்தலை போதரக் கார்செய்வான்
கைத்த லம்முகிற் கின்றன காந்தளென்
றத்த லைச்சிலை மானயர் வெய்துமே 777

விசையி னோடு வெண் டேர்செலக் கண்டுநீர்
தசையி னோடிய நவ்வி யிருங்குழா
மிசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய
வசையின் மேன்மகன் போல வருந்துமே 778

துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்துமு னைப்புலங் கூட்டுணுங்
கடிய நீர்மையர் கானகங் காக்குநி
னடிய ரல்லதல் லாரவ ணில்லையே 779

வேறு- விசய திவிட்டர்கள் பாலை கடந்து நாட்டின்கண் ஏகுதல்

அங்கவெங்க டங்கடந்த லங்குதாரி லங்குபூண்
சிங்கம் வென்ற செங்கண்மாலொ டம்பொன்மாலை வெண்கடாத்
திங்கள் வண்ணன் வெங்கண்யானை வேந்துசேர்ந்த நாடுசார்ந்
திங்கணின்ன இன்னகாணெ னப்புகழ்ந்தி யம்பினான் 780

முல்லை நிலத்தின் மாண்பு

மாலும்வாரி திங்கண்மூன்றும் வந்தறாத மாண்பினா
லாலுமாவ றானைநம்ம டிகளாளு நாட்டகம்
காலமாண்பி னன்றியுங் கார்கவின்ற நீரவே
போலுமாண்பி னேர்கலந்து பொங்குநீர புறணியே 781

கொண்டல்வாடை யென்னுங் கூத்தன் யாத்தகூத்தின் மாட்சியால்
விண்டமா மலர்ப்பொதும்ப ரங்கமா விரும்புநீர்
வண்டுபாட வல்லியென்னு மாதராடு நாடகங்
கண்டுகொன்றை பொன்சொரிந்த காந்தள்கை மறித்தவே 782

கைமலர்த்த காந்தளுங் கரியநீர்க் கருவிளை
மைம்மலர்த் தடங்கணேர் வகுத்தலர்ந்த வட்டமு
மொய்மலர்ப் பொதும்பின்மேன் முறுவலித்த முல்லையும்
கொய்மலர்க் குழற்றிரட்சி கொண்டு காய்த்த கொறையும் 783

தொண்டைவாய் நிறங்கொளக் கனிந்துதூங்கு கின்றவும்
வண்டுபாய வார்கொடி மருங்குலாய் வளர்ந்தவுங்
கண்டபாலெ லாங்கலந்து கண்கவற்று மாதலால்
விண்டுமாலை மாதராரின் மேவுநீர கானமே 784

தண்ணிலாவி ரிந்தமுல்லை தாதுசேர் தளிர்மிடைந்
தெண்ணிலாய சாயலம் மிடாமணற் பிறங்கன்மேற்
பண்ணிலாய வண்டுபாடு பாங்கரோடு பாங்கணிந்து
வெண்ணிலா விரிந்தவெல்லை போலுமிங்கொர் பாலெலாம் 785

தேனவாவி மூசுகின்ற தேம்பிறழ்பூ தாங்கலந்து
கானநாவல் கொம்பினிற் கனிந்துகா லசைந்தவற்
றேனைமாடு வண்டிருந் திருண்டகான மிங்கிதற்
கூனமா யிருட்பிழம் புறங்குகின்ற தொக்குமே 786

வாயிதழ் திறங்கொளக் கனிந்த தொண்டை வந்தொசிந்து
தூயிதழ்த் துணர்துதைந்து தோன்றுகின்ற தோன்றியின்
பாயிதழ்ப் பரப்பின்மே லரத்தகோப மூர்ந்தயற்
சேயிதழ்ப் பொலிந்தகாடு செக்கர்வான மொக்குமே 787

ஆடிணர்க் கொடிப்பட ரகிற்பொழுதும் பயற்பொலிந்த
கூடிணர்க் குழாநிலைக் கொழுமலர்க் குமிழ்மிசைக்
கோடிணர்க் குலைக்கொசிந்த கொன்றைவிண்ட தாதுசோர்ந்
தோடிணர்ச் சுடர்ப்பொனுக்க கானமொக்கு மூங்கெலாம் 788

பார்மகிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மிசைப் பயின்றெழுந்
தேர்கலந்து பாசிலைப் பரப்பினூ டிரைத்தரோ
கார்மகிழ்ந்த கார்மயிற் கலாபமொய்த்த கானக
நீர்மகிழ்ந்த நீர்க்கட னிரந்ததொக்கு நீரதே 789

ஏறுகொண்ட கோவல ரேந்து தன்ன வக்குரன்
மாறுகொண்ட கோடியர் மணிமுழா முழங்கலிற்
றாறுகொண்ட தோகைமஞ்ஞை யாடல்கண்டு கண்மகிழ்ந்து
சாறுகொண்டு மான்கணத் தயங்குநீர சாரெலாம் 790

கார்மணந்த கானயாறு கல்லலைத் திழிந்தொலிக்கு
நீர்மணந்த நீள்கரை நிரைத்தெழுந்த நாணல்சூழ்
வார்மணற் பிறங்கன்மாலை வல்லிவிண்ட தாதணிந்து
தார்மணந்த வாரமார்ப யாகசாலை போலுமே 791

கரவைகன்று வாய்மிகுந்த வமிழ்தினோடு கண்ணகன்
புறவின்மாம ரைம்முலைப் பொழிந்தபா றெகிழ்ந்தெழப்
பறவையுண்டு பாடவும் பால்பரந்த பூமியி
னறவுவிண்ட நாகுமுல்லை வாய்திறந்து நக்கவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;