கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 26 ஜூன், 2012

நீலகேசி, -38

301மெய்யளவிற் றுயிரென்றுமெய்யகத் தடக்குரைத்தல்
பொய்யளவைக் குடங்குடத்திற்புகலருமை போலென்பாய்
மெய்யளவ்¢ன் மெய்யுணர்வைமெய்யகத் தடக்குரைத்தி
யையனையே யடங்கானென்றதுவாதன் வண்ணக்கால்.


302அருவாத லாலடங்குமுணர்வுதா னங்கென்னிற்
பெருவாத மங்கில்லைபெற்றியொன் றறியாத
திருவாள னுரைவண்ணந்தீட்டொட்டுக் கலப்பியாப்
புருவாய வுடம்பினோடுணர்வினுக் குளதாமோ.


303யாப்புண்டா லுழப்பதவ்வுயிரென்றேற் கதுவன்று
போய்ப்பிண்டத் துழப்புழப்பப்புலம்புவ தென்செயலென்பா
யேப்புண்பட் டான்படநோயேதிலர்க்காய்ச் சோமாகிச்
சாப்புண்பட் டேனென்றுசாற்றுவதுன் றத்துவமோ.


304உழப்புழப்பச் செய்கையானுறுதுயருற் றேனென்றல்
பிழைப்பதுவாக் கருதாதேபெருவழியு ளிடறுதியா
லுழப்பறிவு குறிசெய்கையொருவனவே யெனச்சொன்னார்க்
கிழிக்குவதிங் கில்லாமையிதனாலே யறியனென்றாள்.


305அருவாயில் யாப்பில்லையன்றாயிற் குறைபடூஉ
மிருவாறின் கூட்டமுந்தீதென்ப தெம்மிடமே
மருவாதா யுரைத்ததனைமனங்கொள்ளா யதுவன்றிப்
பொருவாறொன் றுரைத்தாலுமொருவாறு முணராயால்.


306அறிவெழுந் தவலிக்குமென்பதூஉ மதுவெழப்
பிறிதொன்று பேதுறுமங்கென்பதூஉம் பெரும்பேதாய்
குறிகொண்டா ருரையன்றாற்குற்றமே கொளலுறுவாய்
பொறிகொண்டு காற்றினையும்போகாமற் சிமிழாயோ.


307பிறன்சுமவான் றானடவான்பெருவினையு முய்க்கில்லா
வறஞ்செய்தா னமருலகிற்செல்லும்வா யரிதென்று
புறம்புறம்பே சொல்லியெம்பொருணிகழ்ச்சி யறியாயாற்
கறங்குகளி மல்லனவுங்காற்றெறியத் திரியாவோ.


308மகனேயாய்ப் பிறப்பினு மாதுயரங் கேடில்லை
யவனாகா னாயினு மறஞ் செய்த லவமாகு
மெவனாகு மென்றெம திட்டமே யுரைத்தியா
னகைநாணி நீநின்னை நன்பகலே மறைக்கின்றாய்.


309வீயுடம்பிட் டுயிர்சென்று வினையுடம்பு முளகாகத்
தாயுடம்பி னகத்துடம்பு தான்வைத்த தின்றியே
நீயுடம்பு பெற்றவா றுரையென்பாய் நிழல்போலும்
டேயுடம்பு பிறிதுடம்பிற் புகல்பேதாய் காணாயோ.


310எப்பொருளு மொன்றொன்றிற்கிடங்கொடுத்த விரும்புண்ணீர்
புககிடங்கொண் டடங்குதலேபோலவும் தந்தைதாய்
சுக்கிலமுஞ் சோணிதமுந்தழீஇச்சுதையு ணெய்யனைத்தா
யொத்துடம்பி னகத்தடங்கியுடன்பெருக மெனவுரைத்தாள்.


311செய்வினைதா னிற்பவே பயனெய்து மென்பதூஉ
மவ்வினை யறக்கெட்டா லதுவிளையு மென்பதூஉ
மிவ்விரண்டும் வேண்டுத லெமக்கில்லை யெடுத்துரைப்பி
னைவினையி னிலைதோற்ற நாசந்தா னாட்டுங்கால்.


312பைம்பொன்செய் குடமழித்து;பன்மணிசேர் முடிசெய்தாற்
செம்பொன்னா னிலையுதலுஞ்சிதைவாக்க மவைபெறலு
நம்பான்றிங் கிவைபோலநரர்தேவ ருயிர்களையும்
வம்பென்று கருதனீவைகலும்யா முரையாமோ.


313கொன்ற பாவமுண் டாயின் குறட்கண்ணும்
ஒன்று மேயென் றுரைப்பனெப் பாரியார்
பொன்றினும் புத்த ரேநீவி¡; சொல்லின
சென்று சேர்தலைச் சித்தம தின்மையால்.


314சொன்ன சூனைத் துறந்தவற் றட்டன
பின்னை யுண்டல் பிழைப்புடைத் தென்றியா
னன்னு தல்லைத் துறந்தவ ளட்டது
தன்னை யுண்டுந் தவசியை யல்லையோ


315கொன்ற பாவங் கெடுகெனக் கையிட்டு
நின்ற தென்பது நீயுரைப் பாயெனி
னன்று துன்னின தாதன்மை யாற்சொன்னாய்
சென்றும் வந்துந் தியானம் புகலென்றாள்.


316இன்ப துன்ப மிருவினைக் காரிய
மென்ப வர்க்கென்னை யேதமுண் டென்றியேற்
பின்பு பேணுந் தவத்தினி னாகிய
துன்ப வர்க்குந் துதாங்கனத் தொன்றுமே.


317செய்த தீவினை சென்றின்ப மாக்குமென்
றி·து ரைப்பவ ரீங்கில்லை யாயினும்
பொய்கள் சொல்லிப் புலைமக னேயெம்மை
வைதல் காரண மாநின்று வைதியோ.


318இந்திரி யங்களை வென்றற் பொருட்டென
வந்து டம்பு வருத்தல் பழுதென்பாய்
தந்து ரைத்த தலைமழி யாதிய
சிந்த னைக்கிவை செய்வதெ னோசொல்லாய்.


319புனைவு வேண்டலர் போக நுகர்விலர்
நினைவிற் கேயிடை கோளென நேர்தலா
லினைய வும்மல மேறினு மென்செய
மனைய தான்மக்கள் யாக்கையின் வண்ணமே.


320பாவந் துய்த்துமென் றோமல்ல துய்ப்பினு
மாவ தின்மைக் கரசுரைத் தாயன்றோ
வோவ லின்பந் தருமெ னுயிரென்பாய்
தேவ னாகித் திரிந்துதான் காட்டிக்காண்.


321அழிவு காலத் தறத்தொடர்ப் பாடெலா
மொழியல் வேண்டுமென் றொற்றுமை தாங்கொளீஇ
வழியுங் காட்டுமம் மாண்புடை யார்கண்மேற்
பழியிங் கிட்டுரைத் தாற்பய னென்னையோ.


322சிந்த னையினுந் தீவினை யாமென்பார்க்
கைந்திற் காம மமையுமென் றீரென்பாய்
சுந்த மாகச் சுவடறு வீரென
வந்தி தோறும் புடைக்க வமையுமோ.


323பெண்ம கள்ளிர் பிறகிட வுண்பவர்
கண்ணி னாலில்லுட் கந்தியைக் காணினு
முண்ண லம்மெனும் மோத்துடை யார்களைத்
திண்ண தாவைது தீவினை கோடியோ.


324பிள்ளை பெண்ணலி யாயினும் மாண்வயிற்
றுள்ள தேயென் றொழுக்கங் கொடுத்தியாற்
பிள்ளை பெண்ணலி யன்மையை யாதினா
லுள்ளங் கொண்டிழ வூசி யுரைப்பதே.


325மோனம் பொய்யஞ்சிக் கொண்டவன் மெய்யுரைக்
கூனந் தோன்றி லுரைத்தன னென்றியேற்
றானம் யாவர்க்குஞ் செய்வது நன்றனென்பா
யீன மென்னோ தெருச்சுமக் கிற்றியோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;