கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 31 ஜூலை, 2012

நீலகேசி-39

326உய்யக் கொள்வ னெனச் சொல்லி யுள்ளத்தாற்
கையிற் காட்டல் கரவுள தாமெனிற்
பொய்சி தைத்ததென் சொல்லிப் பெயர்ந்துரை
பொய்யு ரைத்தில bனன்றல் பொருந்துமோ.


327கொல்வினை யஞ்சிப் புலால் குற்ற மென்பதை
நல்வினை யேயென நாட்டலு மாமென்னை
வில்லினை யேற்றிநும் மெய்ம்மை கொளீஇயது
சொல்லினை யாதலிற் சொல்வன் யானே.


328புத்தர்கட் பத்தியிற் போதி மரந்தொழிற்
புத்தர்கட் பத்தரை யேதொழு புத்தர்கட்
பத்தியை யாக்கு மதுவெனிற் (பற்றிய)
பத்தங் குடைசெருப் புந்தொழு பாவீ.


329ஆங்கவர் போல வருள்செய் பவர்களை
நீங்குமி னென்பது நீர்மை யெனினது
வீங்கிதற் கெய்தா விடினிலை போதிக்கும்
தீங்கே நுமர்செய்கை தேரமற் றென்றாள்.


330பல்லுடை யான்றன்னைப் பண்டுகண் டேத்தினுந்
தொல்லுரை கேட்டுறுப் பேதொழு தாலும்பி
னல்வினை யாமென்று நாட்டுதி யாய்விடிற்
கொல்வதுந் தின்பதுங் குற்றமற் றென்னாய்.


331ஏத்தின ரேத்துக வென்றிறை போல்வன
பாத்தில பைம்பொற் படிமைசெய் தாலவை
யேத்துநர் பெய்தவ ரெய்துவ நன்றெனில்
வீத்தவர் தின்பவர் வெவ்வினைப் பட்டார்.


332வெற்றுடம் புண்பதும் வேலின் விளிந்தவை
தெற்றென வுண்பதுந் தீமை தருமென்னை
யொற்றைநின் றாடுணை யூறு படுத்தவட்
குற்றமன் றோசென்று கூடுவ தேடா.


333பிடிப்பது பீலி பிறவுயி ரோம்பி
முடிப்ப தருளது போன்முடை தின்று
கடிப்ப தெலும்பதன் காரண மேனி
தடிப்பத லாலரு டானுனக் குண்டோ.


334ஆட்டொரு கான்மயிற் பீலி யுகமவை
ஈட்டுதல் போலுதிர்ந் துக்க விறைச்சியைக்
காட்டியுந் தின்னுங் கருத்திலை நீ தசை
வேட்டுநின் றேயழைத் தீவினை யாளோ.


335மானொடு மீனில மன்னு முடம்பட
லூனடு வாரிடு வாரை யொளித்தலிற்
றானடை யாவினை யாமென்ற றத்துவந்
தீனிடை நீபட்ட தீச்செய்கை யென்னோ.


336குறிக்கப் படாமையிற் கொல்வினை கூடான்
பறித்துத் தின்பானெனிற் பாவமாம் பூப்போற்
செறிக்கப் படுமுயிர் தீவினை பின்னு
நெறிக்கட் சென்றாறலைப் பாரொப்ப னேர்நீ.


337விலையறம் போலு மெனின்வினை யாக்க
நிலையுமீ றென்பது நேர்குவை யாயின்
வலையினின் வாழ்நர்க்கும் வைகலு மீந்தாற்
கொலையென்றும் வேண்டலன் றோகுண மில்லாய்.


338நும்பள்ளிக் கீபொரு ளாலுணர் வில்லவ
ரெம்பள்ளி தாஞ்சென் றெடுப்ப வெனினது
கம்பலை யாம்வினை யில்கறிக் கீபொருள்
செம்பக லேகொலை யாளரிற் சேரும்.


339நாவின்கண் வைத்த தசைபய னேயென
வேவினை நீயுமற் றின்பம· தாதலிற்
றேவன்கண் வைத்த சிரத்தை செயலன்று
தூவென வெவ்வினை யைத்துடைத் தாயால்.


340கன்றிய காமந்துய்ப் பான்முறைக் கன்னியை
யென்றுகொ லெய்துவ தோவெனுஞ் சிந்தையன்
முன்றினப் பட்ட முயன்முத லாயின
நின்றன வுந்தின நேர்ந்தனை நீயே.


341தூய்மையி லாமுடை சுக்கில சோணித
மாமது போன்மெனி னான்முலைப் பாலன்ன
தூய்மைய தன்றது சொல்லுவன் சோர்வில
வாம னுரைவையந் தன்னொடு மாறே.


342மேன்மக்க ணஞ்சொடு கள்வரைந் தாரது
போன்மக்க ளாரும் புலால்வரை யாரெனிற்
றான்மெய்க்க ணின்ற தவசிமற் றெங்குள
னூன்மெய்க்கொண் டுண்பவ னுன்னல தென்றாள்.


343பார்ப்பனி யோத்துநின் னோத்தும் பயமெனி
னீப்பவுங் கொள்பவு நேர்து மவையவை
தூப்பெனு மில்லன வேசொல்லி நிற்குமோர்
கூர்ப்பினை நீயென்றுங் கோளிலை யென்றாள்.


344தூவினி னுண்புழுத் துய்ப்பனென் னாமையிற்
றீவினை சேர்ந்திலன் றின்பவ னென்னினு
மோவெனு முன்விலை வாணிக ரென்றினர்
மேவினர் தாம்விலை யேவினை வேண்டார்.


345அடங்கிய வம்பு பறித்தன் முதலா
வுடங்குசெய் தார்வினை யொட்டல ரென்பாய்
மடங்கினர் வாழ்க வெனுமாற் றார்போற்
கடஞ்சொல்லித் தின்பதிங் கியார்கட் டயாவோ.


346தின்னு மனமுடைப் பேயெய்துந் தீவினை
மன்னு மிகவுடைத் தாய்வினைப் பட்டில்லா
ளென்னு முரைபெரி தேற்கு மிகழ்ச்சி
தன்னை வினைப்பட நீசொல்லி னாயால்.


347அறஞ் சொல்லக் கொள்ளு மறமென் றறிந்தாங்
கறஞ்சொல்லி னார்க்கற மாமென் றறியாய்
புறஞ்சொல்லி தன்று புலால்குற்ற மென்று
துறந்தொழிந் தாற்கொலை துன்னினர் யாரோ.


348அறந்தலை நின்றாங் கருளொடு கூடித்
துரந்தனள் யானென்னுஞ் சொல்லு முடையாய்
மறங்கொண்டி துண்டென்னை மன்னுயிர்க் காமே
சிறந்ததுண் டோவிது சிந்தித்துக் காணாய்.


349பேயொப்ப நின்று பிணங்கிக்கண் டார்க்கெனு
மாயத்தி னூனுண்ண மன்னு மருமையி
னாயொப்பச் சீறி நறுநுத லாளொடு
காயக் கிலேசத்திற் கட்டுரைக் கின்றான்.


350வெயிறெறவ் வுணங்கியும் வெள்ளிடைந் நனைந்துமூன்
டயிறலிற் பட்டினிகள் விட்டுமின்ன கட்டமாய்த்
துயிறுறந் திராப்பகற் றுன்பவெங் கடலினார்க்
கயிறெறுந் நெடுங்கணா யாவதில்லை யல்லதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;