கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

நீலகேசி-42



401ஆண்டில்லை யென்பன் னதுவுள்வழி யுண்டு மென்ப
னீண்டின்மை யுண்மை யிவையாக விசைத்து நின்றேன்
வேண்டி யனவே முடிப்பாய்விரி பொன்னெ யிலு
ளீண்டி யிமையோர் தொழுவானெம் மிறையு மென்னாய்.


402கொல்லேற்றின் கோடு குழக்கன்றது வாயி னக்கா
லில்லாகு மென்றி யிவையிங்ஙன முண்மை யின்மை
சொல்லேனு மல்லே னதுசொல்லுவன் யானு மன்னாய்
கொல்லேற தாகப் பொழுதேயுடன் கூறு கென்றான்.


403ஏறாய காலத் தெழினல்லது வத்து பேதங்
கூறாரெ ழாத குழக்கன்றினுக் கின்மை முன்னா
வீறாகி நிற்கும் முதலுண்மையிற் கின்மை யெங்கு
மாறியாது மில்லை கலைக்குண்மையு மற்றுமென்றாள்.


404கன்று முயலுங் கழுதைப்பெயர் பெற்ற னவுங்
குன்றுந் தலையுட் பெறப்பாடெய்தல் கோடு றுப்பா
வென்றும் மவற்றுக் கெழலில்லைநின் பேத மென்றாற்
சென்றுஞ் சிலவிற் சிலவின்மையு மாகு மென்றான்.


405இல்லாத கோட்டை யுளதாக வெடுத்து மென்று
சொல்லார்கள் பேதம் சொலவேண்டுவை யாயி னக்காற்
புல்லாது நில்லாப் பொருடங்களுக் குண்மைக் கின்மை
கல்லாது நீயுங் கழுதைக்கருள் செய்தி யென்றாள்.


406இல்லை வலக்கை யிடக்கைவகை யால தென்றுஞ்
சொல்லின் னதற்கு மதுவேயெனுஞ் சூழ்ச்சி மிக்கா
யொல்லை யிரண்டு முளவாக வுணர்ந்தனை நீ
நல்லை பெரிதும் மெனமொக்கல னக்க னனே.


407இக்கை வகையா லதுதானுள தாயி னக்காற்
றொக்க விரண்டும் முடனாதலிற் றூய்தொ ருபால்
பக்கம் மதுவும் படுபாழினிக் காலு மற்றாய்ச்
செக்கின்கணைபோன்றினிச் சென்றுருள் சேம மென்றாள்.


408கைகால் வகையால் பெறப்பாடிலை காலு மற்றாய்
மெய்தா மொழிய வவைபாறெய்தல் வேண்டு தலாற்
கொய்தார் நறும்பூங் குழலாய்குழ மண்ணர் களாச்
செய்தா யுலகிற் சிறுமானுயர் தம்மை யென்றான்.


409கால்கால் வகையா லுளகைகளுங் கையி னற்றாய்ப்
பாலாய் முடியு மவைபண்டை யியல்பி னாலே
யேலா திவைதா முளவெத்திறத் தானு மென்னி
னாலாவ தான முடிவி னாயொடு நண்டு மொத்தாய்..


410அல்லென் றுரைத்த வுரைதானுமெம் மாக மத்து
ளில்லென்ற வாறென் றிவையிங்ஙனம் வேண்டு கின்றாய்
சொல்லன்று நாயைந் நரிதானென்னச் சொல்லு கின்றா
னில்லென்ற வாறோ நரிதன்னையு மென்ற னனே.


411நாய்கொன் னரிகொல் லெனத்தோன்றுமுணர்வு நண்ணி
யாய்சொல் லிரண்டின் னுணர்ந்தல்லதுவன்மை யென்றாய்
நீசொல் லறியா யறிவார்நெறிநேடு கில்லாய்
பேய்சொல் லுபவே பலசொல்லிப்பிதற்ற லென்றாள்.


412பேரும் உணர்வும் பொருளில்லதற் கில்லை யென்றி
சார்வும் மகல்வுந் தலைப்பெய்தலோ டுள்ள மின்மை
நோ¢ங் கிவையு முணராமையிற் கென்ற னனாய்த்
தேரன் சிறிதே தெரிகோதையை நக்க னனே.


413ஆத்தன் னுரைத்த பொருடன்னையவ் வாக மத்தாற்
சாத்தன் பயின்றா லறியாவிடுந் தன்மை யுண்டோ
வீர்த்திங் குரைத்த பலதம்முளொன் றின்ன தென்னா
யோத்தின் வகையாற் பெயரோடுணர் வின்மைக் கென்றாள்


414ஒன்றி னியற்கை யொருவான்பொருட் கில்லை யென்றே
யென்று முரைத்தி யிரும்பெய்திய வெம்மை யந்நீர்
சென்றும் மறுகித் தீக்குணஞ் சேர்ந்த தற்றேற்
குன்றும் பிறவோ வினிநீண்ட கோளு மென்றான்.


415கொண்ட வுடம்போடுயிர் தானுடன் கூடி நின்றாற்
கண்டு முணர்ந்து மவையாவதென் கல்வி யில்லா
யுண்டங்க ணின்ற வுயிர்க்காக வுரைப்ப தொக்கும்
பிண்டந் நிகழ்ச்சி பிழைப்பாகு நினக்கு மென்றாள்.


416மெச்சி யிடத்தாற் பிறிதின்மை விளம்பு கின்றாய்
பிச்சை முதலாப் பெரிதாவறஞ் செய்த வன்றா
னச்செல் கதியுள் ளமரன்னெனப் பாடு மின்றே
விச்செய்கை யெல்லா மிகழ்வாம்பிற வென்ற னனே.


417ஊனத்தை யின்றி வழங்காவுழல் கின்ற போழ்து
மானத்தி னீங்கி வதங்காத்து வருந்தும் போழ்தும்
வானத்த தாய பொழுதுமன் னுயிர தென்றா
டானத்தி னுண்மை யிதுதத்துவ மாக்கொ ளென்றாள்.


418காலம் பிறிதிற் பொருளில்லெனக் காட்டு கின்றாய்
ஞால மறியத் தவஞ்செய்தவ னல்லு யிர்தா
னேலங்கொள் கோதா யெதிர்காலத்தி னின்மை யாமேற்
சீலங்கள் காத்தல் வருத்தஞ்சிதை வாக வென்றான்.


419ஆற்ற வருந்தித் தவஞ்செய்து மரிய காத்துந்
நோற்றும் பெரிதுந் நுணுகாநின்ற பொழுதி னானும்
மேற்ற முடைய விமையானெனப் பட்ட போழ்துஞ்
சாற்றி னுயிர்தன் பொழுதே யுண்மை தங்கு மென்றாள்.


420நூறா னிரும்பாய் நிகழாமை நொடிதி யாங்கே
பாறான் றயிரா மெனநின்று பயிற்று தியான்
மாறா னுடையா ருரையொக்குநின் மாற்ற மென்னாத்
தேறார் தெருண்டா ரெனச் சொல்லினன் றேர னும்மே.


421தத்தந் நிமித்தந் தலைப்பெய்துதங் காரி யம்மா
யொத்த பொருள்க ணிகழ்வாக்க முரைத்து நின்றேன்
பித்தனி னோப்பப் பிறிதிற்பிறி தாமென் பனோ
வித்தின் வழியா னுரைநீயும்வெள் யானை யென்றாள்.


422கூடா பொருள்கள் பிறிதின்குணத் துண்மை யென்பாய்
பாடாஅலப் புட்பத் தனவாகிய பண்பு நாற்றம்
மோடாவ தெய்திற் றெனவையமுரைக் கின்ற த·தா
னாடாது சொன்னா யதனன்மை யொழிக வென்றான்.


423போதுக்க வாசம் புதுவோட்டைப் பொருந்தினாலும்
மேதக்க நாற்ற மிதுபூவின தென்ப மிக்கார்
தாதுக்க நின்று மவைபோக்குந் ததாக தற்கென்
றேதுக்கள் காட்டி முடித்தாளிணை யில்ல நல்லாள்.


424வீட்டிட மென்று நின்னால்வேண்டவும் பட்ட தன்னை
நாட்டுவ னதுவு நாயிற்கென்றுநன் றென்றி யாயிற்
சூட்டடு நரகந் தானுஞ்சுடர்ந்தநற் சுவர்க்கந் தானும்
பூட்டின முரைத்த வக்காற்போந்ததங் கென்னை யென்றான்.


425கதியின வகைய வாறுங்கந்தபிண் டங்கள் சொன்னான்
பதியின வென்ன நின்றாய்பாக்கனாய் காட்டு தீயால்
விதியினின் விளையட் டார்தம்வீட்டிட மின்ன தென்றாற்
கதுவென்னை யென்னச் சொன்னாலாகம மல்ல தாமோ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;