கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 8 ஆகஸ்ட், 2012

நீலகேசி-43

426பேர்த்தினவண் வார லில்லாப்பிறவியாந் தான மென்னிற்
றீர்த்திவண் வார லின்மைசேர்விடக் குண்மை யாமோ
கூர்த்தலில் வினையி னின்மைகூறுவ னென்றி யாயி
னார்த்துள னவனே யாயினண்ணுமே வினையு மென்றான்.


427பிறப்பதை வீடு மென்னேனவ்விடம் பேர்ப்பின் றென்னே
னுறத்தகு வினைக டாமுமுண்மையா லொட்டு மென்னேன்
மறத்தலில் யோக பாவமாசதா மீட்டு மென்ப
திறப்பவும் வேண்டு கின்றேற்கெய்தல நின்சொ லென்றாள்.


428பிறக்குந்தன் ஞானத் தாலும்பின்னுந்தன் னுண்மை யாலும்
புறப்பொருள் கொண்டு நின்றுபுல்லிய சிந்தை யாலுஞ்
சிறப்புடை வீடி தென்றுசெப்புநீ தீவி னையைத்
துறக்குமா றில்லை நல்லாய்சொல்லுநீ வல்ல தென்றான்.


429நன்றியில் கார ணங்கணாட்டிநீ காட்டி னவ்வு
மொன்றுநா னொட்டல் செல்லேன்யோடுகொடு பாவ நின்றாற்
குன்றினிற் கூர்ங்கை நாட்டாற்கூடுநோ யாதிற் குண்டோ
வொன்றுநீ யுணர மாட்டாயொழிகநின் னுரையு மென்றாள்.


430கருவிதா னொன்று மின்றிக்கடையிலாப் பொருளை யெல்லா
மருவிய ஞானந் தன்னாலறியுமெம் மிறைவ னென்பாய்
கருவிதா னகத்தி னாயகடையிலா ஞான மன்றோ
மருவியார்க் கமிர்த மொப்பாய்மாற்றந்தா விதனுக் கென்றான்.


431வினையுமவ் வினையி னாயவிகலஞா னங்க டாமு
மினையவே கருவி யென்றாலிங்குநின் னுள்ளம் வையாய்
முனைவனாய் மூர்த்தி யல்லான்மூடுமே மாசு மென்பாய்
கனைகட லென்லை காணுங்காக்கையொத் தாங்கொ லென்றாள்.


432கொண்டதன் கரணந் தானுமில்லையேற் கூற்று மில்லை
மண்டினர் வினவு வார்க்குமலைச்சிலம் பனைய னென்றா
லுண்டுதன் கரணந் தானுமுரைக்குநர்க் குறுவ னென்னிற்
பண்டுசெய் நல்வி னையைப்பகவனே யென்று மென்றான்.


433தனுவெனுங் கருவி தன்னாற்றன்னடைந் தார்க டன்னை
வினவின வுணர்ந்து சொல்லும்வினையினுக் கின்ன துண்டோ
சினவினுந் தேர வொன்றுசெப்புவன் செல்க தீயுட்
கனவினு நின்ன னாரைக்காணல னாக வென்றாள்.


434முறையினா லறிய லன்னேன் மூத்தலே யிளமை சாக்கா
டுறையல வொருவன் கண்ணே யுடனவை யாக வொட்டி
னிறைவனா ருணர்வு தானுமின்மைமே லெழலும் வேண்டி
யறைதுநா மன்ன மன்னா யன்னண மாக வென்றான்.


435சீலவான் றெய்வ யாக்கைதிண்ணிதா வெய்தி நின்றார்
காலமூன் றானு முய்த்துக்காட்டலுங் காண்டு மன்றோ
ஞாலமூன் றானு மிக்கஞானவா னான நாதன்
போலுமென் றோர்தல் செல்லாய்போர்த்தனை யகமு மென்றாள்.


436நாளெல்லா மாகி நின்றநன்பொரு டம்மை யெல்லாங்
கோளெல்லாந் தானொ ருங்கேகொள்ளுமே லீர்ங்கு வள்ளைத்
தாளெல்லாந் தானொ ருங்கேதானுநல் லானோர் நல்ல
வாளினா லேறு முண்டேல்வாய்க்குநின் னுரையு மென்றான்.


437நீருநீர் தோறு முவ்வாநலையிற்றே திங்க ளென்று
மூரினூர் தோறு மொவ்வாவொளியிற்றே ஞாயி றென்றும்
யாரின்யார் கேட்ட றீவாரன்னனே யண்ண லென்றார்
தேரனீ சொன்ன தன்னம்சேரல வாக வென்றாள்.


438அளவிலாப் பல்பொ ருள்கட்காகுபண் பாகி நின்ற
வுளவெலாப் பொதுக்கு ணத்தானொருங்குகோ ளீயுமென்னிற்
பிளவெலா மாகு மன்றேபெற்றிதா மொத்த லில்லேற்
கொளவெலா ஞானந் தானுங்கொள்ளுமா றெவன்கொ லென்றான்.


439ஒன்றல்லாப் பலபொ ருளுமொத்தொவ்வாப் பெற்றி யாலே
நின்றுகோட் செய்யு மென்றானீடிய குற்ற மாகா
தென்றலா லின்ன தன்மையிறைவன தறிவு மெய்ம்மை
யின்றெலாங் கேட்டு மோராயேடனீ யென்று சொன்னாள்.


440எல்லையில் பொருள்க டம்மை எல்லையி லறிவி னாலே
யெல்லையின் றறியு மெங்க ளெல்லையி லறிவ னென்பாய்
எல்லையில் பொருள்க டம்மை யெல்லையின் றறியி னின்ற
வெல்லையி லறிவு தானு மெங்ஙன மெய்து மென்றான்.


441துளக்கில்லாப் பலபொ ருளுந்தொக்கதன் றன்மை யெல்லாம்
விளக்குமே ஞாயி றொப்பவென்பது மேலுஞ் சொன்னேற்
களக்கிவர் தன்ன மன்னாயாத்தன தறிவு மென்றென்
றிளக்கிநீ யின்னு ம·தேசொல்லுதி யேழை யென்றாள்.


442ஓதலி லுணர்வு மின்றேலூறவற் குண்டு மாகு
மோதலி லுணர்வு முண்டேலொன்றுமே பலவும் வேண்டா
மோதலி லுணர்பொ ரூடாமுள்ளவும் மில்ல வும்மே
லேதமா மில்பொ ருண்மேனிகழ்ச்சிதா னிறைவற் கென்றான்.


443சென்றவக் குணங்க டாமுஞ்செல்லுமக் குணங்க டாமு
மன்றையக் குணங்க டாமுமப்பொருட் டன்மை யாலே
நின்றதன் ஞானந் தன்னானிருமல னுணரு மென்றாற்
பொன்றின வெதிர்வ வென்றல்பொருள்களுக் கில்லை யென்றாள்.


444பிறவிதா னொன்று மில்லான்பெரியனே யென்று நின்றான்
மறவிதா னில்லை யோனிமன்னுநான் கென்னு மில்லா
னறவியா யுந்த நூலுள் ளாத்தனா மாயி னக்காற்
புறவினிற் புரளுங் கல்லும்புண்ணிய னாக வென்றான்.


445பிறத்தலே தலைமை யாயிற்பிள்ளைக ளல்ல தென்னை
யறக்கெட றான தென்னிலட்டக வித்து வெந்தாம்
புறப்படும் போர்வை யாலேற்புண்டொழு நோய ராகச்
சிறப்புடை யண்ண றன்னைக்கல்லெனச் சொல்லு வாய்க்கே.


446அடைவிலா யோனி யானாயாருமொப் பாரு மின்றிக்
கடையிலா ஞான மெய்திக்கணங்கணான் மூன்றுஞ் சூழ்ந்து
புடையெலாம் போற்றி யேத்தப்பொன்னெயிற் பிண்டி மூன்று
குடையினா னிறைவ னென்றாற்குற்றமிங் கென்னை யென்றாள்.


447கோதியிட் டுள்ள தெல்லாங்குண்டல கேசி யென்பா
ளாதிசா லாவ ணத்துளார்கதர் தம்மை வென்ற
வீதியீ தென்று சொல்லிவீழ்ந்தனை நீயு மென்றா
ணீதியாற் சொல்லி வென்றநீலமா கேசி நல்லாள்.


448பேதைக ளுரைப்பன வேசொல்லிப்பெரிதலப் பாட்டினைநீ
பேதைமற் றிவன்பெரி தெனப்படும்கருத்துடை மிகுதியினாய்
தாதையைத் தலைவனைத் தத்துவதரிசியைத் தவநெறியி
னீதியை யருளிய நிருமலன்றகைநினக் குரைப்ப னென்றாள்.


449பகைபசி பிணியொடு பரிவின பலகெட
முகைமலர் தளிரொடு முறிமரம் வெறிசெய
மிசைநிலம் விளைவெய்த விழைவொடு மகிழ்வன
திசைதொறு மிவைபிற சுகதன செலவே.


450குழுவன பிரிவன குறைவில நிலையின
எழுவன விழுவன விறுதியி லியல்பின
வழுவலில் பொருள்களை மலர்கையின் மணியென
முழுவது முணருமெ முனைவர னறிவே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;