கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 3 ஏப்ரல், 2013

அகராதி-அ

அணிவடம் கழுத்தில் அணியும் மாலை .
அணிவிரல் மோதிர விரல் .
அணிவில் பேரேடு .
அண்மை அருகு , பக்கம் .
அண்வருதல் பக்கத்திலிருத்தல் .
அணக்குதல் வருத்தல் .
அணங்கயர்தல் விழாக் கொண்டாடுதல் .
அணங்காடல் வெறியாடல் ; தெய்வமேறியாடல் .
அணங்கியோன் வருத்தியவன் .
அணங்கு தீண்டி வருத்தும் தெய்வப்பெண் ; தெய்வப்பெண் ; பத்திரகாளி ; தேவர்க்காடும் கூத்து ; அழகு ; விருப்பம் ; மயக்க நோய் ; அச்சம் ; வருத்தம் ; கொலை ; கொல்லிப் பாவை ; பெண் ; வடிவு .
அணங்குடையாட்டி தெய்வ வெறிகொண்டு ஆடுபவள் .
அணங்குதல் கொல்லுதல் ; வருந்துதல் ; இறந்துபடுதல் ; அஞ்சுதல் ; விரும்புதல் ; ஒலித்தல் .
அணங்குதாக்கு தெய்வப்பெண் தீண்டுகை ; மோகினிப்பிசாசு பிடிக்கை .
அணத்தல் தலையெடுத்தல் , மேலோங்குதல் , மேல்நிமிர்தல் ; பொருந்துதல் .
அணம் காண்க : அண்ணம் .
அணர் மேல்வாய்ப்புறம் .
அணர்தல் மேல்நோக்கி எழுதல் .
அணரி காண்க : அணர் .
அணரிடுதல் கொக்கரித்தல் .
அணல் கீழ்வாய் ; தாடி ; அலைதாடி ; கழுத்து .
அணவரல் அண்ணாத்தல் , மேலே நோக்குதல் ; சேர்த்தல் ; மேலெடுத்தல் ; தூக்குதல் ; விரும்புதல் .
அணவல் அணவுதல் , சார்தல் , கிட்டல் , நெருங்குதல் ; புணர்தல் , சேர்தல் , இணைதல் .
அணவன் பொருந்தியவன் ; தக்கவன் .
அணவி பொருந்தியவள் .
அணவு நடுவு .
அணவு (வி) சார் என்னும் ஏவல் ; நடு ; பொருந்து , சேர் .
அணவுதல் கிட்டுதல் ; பொருந்தல் ; மேல் நோக்கிச் செல்லுதல் .
அணற்காளை தாடியையுடைய வீரன் .
அணன் காண்க : அணவன் .
அணாப்பல் ஏய்த்தல் , ஏமாற்றுதல் .
அணாப்புதல் ஏய்த்தல் , ஏமாற்றுதல் .
அணார் கழுத்து .
அணாவுதல் கிட்டுதல் , சேர்தல் .
அணி வரிசை ; ஒழுங்கு ; ஒப்பனை ; அழகு ; அணிகலன் ; முகம் ; படைவகுப்பு ; செய்யுளணி ; இனிமை ; அன்பு ; கூட்டம் ; அடுக்கு ; அண்மை ; ஓர் உவம உருபு .
அணி (வி) அணி என்னும் ஏவல் ; தரி , பூண் , அலங்கரி .
அணிகம் அணிகலம் ; அணிகலப் பெட்டி ; ஊர்தி ; சிவிகை .
அணிகயிறு குதிரையின் வாய்க்கயிறு .
அணிகலச்செப்பு ஆபரணப் பெட்டி ; ஒரு சமணநூற்பெயர் .
அணிகலம் நகை .
அணிகலன் நகை .
அணிஞ்சில் அழிஞ்சில் ; கொடிவேலி ; நொச்சி ; முள்ளி .
அணித்து அருகில் உள்ளது .
அணிதல் சூடல் ; சாத்துதல் ; புனைதல் ; அழகாதல் ; அலங்கரித்தல் ; உடுத்தல் ; பூணுதல் ; பொருந்துதல் ; படைவகுத்தல் ; சூழ்தல் .
அணிந்தம் கோபுரவாயிலின் முகப்புமேடை .
அணிந்துரை பாயிரம் , முகவுரை ; சிறப்புரை .
அணிநிலைமாடம் பல அடுக்கு மாடிவீடு .
அணிநுணா சீத்தா என்னும் மரம் .
அணிமலை திரண்ட மலை .
அணிமா சித்தி எட்டனுள் ஒன்றாகிய அணுப்போல் ஆகுதல் , பெரியதைச் சிறியதாக்குதல் .
அணிமுகம் அலங்காரமான வாயில் முகப்பு .
அணிமை அண்மை , பக்கம் ; நுட்பம் .
அணியம் படைவகுப்பு ; கப்பலின் முற்பக்கம் ; ஆயத்தம் .
அணியல் அணிதல் ; அழகுசெய்தல் ; மாலை ; வரிசை ; கழுத்தணி .
அணியவர் அழகினையுடையவர் ; அண்மையில் உள்ளவர் .
அணியன் நெருங்கினவன் .
அணியியல் அணியிலக்கணம் .
அணியொட்டிக்கால் தலைப்பக்கம் வேலைப்பாடமைந்த கோயில் கல்தூண் .
அணில் அணிற்பிள்ளை .
அணில்வரிக்கொடுங்காய் வெள்ளரிக்காய் .
அணில்வரியன் வெள்ளரி வகை ; வரிப்பலாப்பழம் ; ஒருவகைப் பட்டு .
அணிலம் காண்க : அணில் .
அணிவகுத்தல் படைவகுத்தல் .
அண்ணாமலை நெருங்க இயலாத மலை ; திருவண்ணாமலை .
அண்ணார் பகைவர் ; தமையர் .
அண்ணாவி கற்பிக்கும் ஆசிரியன் ; நட்டுவன் ; தமையன் ; புலவன் .
அண்ணி அண்ணன் மனைவி ; தாய் .
அண்ணித்தல் கிட்டுதல் ; பொருந்துதல் ; இனித்தல் ; அணுகியருள்புரிதல் .
அண்ணிப்பான் பக்கத்திலிருப்பவன் ; இனிமை செய்வான் .
அண்ணியன் பக்கத்தில் இருப்பவன் ; நெருங்கிய உறவினன் .
அண்ணுதல் அணுகுதல் ; பொருந்துதல் , சார்தல் , அடுத்தல் ; பற்றுதல் ; ஒதுங்குதல் .
அண்ணை அறிவிலி ; பேய் .
அண்பல் மேல்வாய்ப் பல் ; அடிப்பல் .
அண்பினார் அண்டினவர் .
அண்புதல் அண்ணுதல் ; கிட்டுதல் .
அண்முதல் அண்ணுதல் ; கிட்டுதல் 
அத்தனை அவ்வளவு .
அத்தாட்சி சான்று , சாட்சி ; அறிகுறி .
அத்தாணி காண்க : அத்தாணிமண்டபம் .
அத்தாணிச்சேவகம் அரசனுக்கோ தெய்வத்துக்கோ செய்யும் பணிவிடை .
அத்தாணிமண்டபம் அரசன் கொலுமண்டபம் ; அரசவை மண்டபம் ; திருஓலக்க மண்டபம் .
அத்தாயம் கடைசற் சக்கரத்தின் மிதிதடி ; அந்தரம் .
அத்தாழம் காண்க : அகத்தாழம் .
அத்தாளம் இரவு உணவு .
அத்தான் அக்காள் கணவன் ; அத்தை மகன் ; அம்மான் மகன் ; மனைவியின் முன்னோன் ; உடன்பிறந்தாள் கணவன் ; கணவன் .
அத்தி அத்திமரம் ; எலும்பு ; யானை ; கொலை ; கடல் ; திப்பிலி ; பாதி ; உள்ளது ; தமக்கை ; கண்ணில் ஓடும் ஒரு நாடி ; பெண்பால் விகுதி ; ஆசை ; இரவலன் .
அத்தி செய் என் ஏவல் ; பாதிசெய் .
அத்திக்கனி கரிசாலை ; வெருகமரம் .
அத்திகாயம் காண்க : பஞ்சாஸ்திகாயம் .
அத்திகோலம் அழிஞ்சில் .
அத்திசஞ்சயம் தகனத்தின்பின் புண்ணிய தீர்த்தத்தில் போடும்படி எலும்பு திரட்டுகை .
அத்திசுரம் எலும்பைப்பற்றின காய்ச்சல் .
அத்தித்திப்பிலி யானைத்திப்பிலி .
அத்திநாத்தி ' உண்டு இல்லை ' என்னும் சமணசமயக் கொள்கை .
அத்திபஞ்சரம் எலும்புக்கூடு , முழு எலும்பு .
அத்திபாரம் காண்க : அத்திவாரம் .
அத்திபேதி ஒரு மருந்து , யானையின் பேதி மருந்து .
அத்திம்பேர் அத்தை கணவன் ; தமக்கை கணவன் .
அத்திமண்டூகி முத்துச்சிப்பி .
அத்தியக்கம் காண்டல் அளவை .
அத்தியக்கன் தலைவன் ; மேற்பார்வைக்காரன் ; அதிகாரி .
அணிவிளக்குதல் அலங்கரித்தல் , ஒப்பனை செய்தல் .
அணு உயிர் ; நுட்பம் ; சிறுமை ; நுண்ணியது ; நுண்பொருள் ; பொடி ; மிகச்சிறியது ; நுண்ணுடம்பு .
அணுக்கச்சேவகம் அரசர் முதலியோரை அடுத்திருந்து புரியும் தொண்டு .
அணுக்கத்தொண்டன் அடுத்திருந்து பணிசெய்யும் அடியான் ; அந்தரங்கப் பணியாளன் .
அணுக்கம் அணிமை , பக்கம் .
அணுக்கன் அண்மையில் இருப்பவன் ; நெருங்கிப்பழகுவோன் ; அந்தரங்கமானவன் ; தொண்டன் ; நண்பன் ; குடை .
அணுக்கன் திருவாயில் கருவறை வாயில் ; தன்னை அடைந்தாரைச் சிவன் அருகிருக்கச்செய்யும் வாயில் .
அணுக்கு காண்க : அணுக்கம் .
அணுகம் நுண்ணியது ; செஞ்சந்தனம் .
அணுகலர் பகைவர் .
அணுகார் பகைவர் .
அணுகுதல் கிட்டுதல் , நெருங்குதல் .
அணுசதாசிவர் சாதாக்கிய தத்துவத்தில் இன்பம் துய்க்கும் ஆன்மாக்கள் .
அணுத்துவம் அணுத்தண்மை ; சிறுமை .
அணுமை அணிமை , பக்கம் ; கருதல் அளவை .
அணுரூபி கடவுள் ; ஆன்மா .
அணுவலி ஆன்மசக்தி .
அணை படுக்கை ; மெத்தை ; கரை , வரம்பு ; அணைக்கட்டு ; பாலம் ; முட்டு ; தறி ; இருக்கை ; தலையணை .
அணை (வி) புணர் என்னும் ஏவல் ; சேர் .
அணைக்கட்டு செய்கரை ; நீரைத் தடுத்து அமைக்கும் கரை ; நீர்த்தேக்கம் .
அணைக்கல் அணையிலுள்ள குத்துக்கல் .
அணைக்கை அணைத்தல் .
அணைகயிறு பசுவைப் பால் கறக்கப் பின்னங்கால்களைக் கட்டும் கயிறு , கறவைகளின் கால்பிணை கயிறு .
அணைகோலுதல் நீர்ப்பெருக்கைத் தடுக்க அணைபோடுதல் ; முன்னெச்சரிக்கையாய் இருத்தல் .
அணைசு குழல் வாத்தியத்தின் முகப்பில் அமைப்பது .
அணைத்தல் சேர்த்தல் , தழுவுதல் , அவித்தல் .
அணைதல் சார்தல் ; சேர்தல் ; அடைதல் ; புணர்தல் ; பொருந்துதல் ; அவிதல் .
அணைதறி யாணை கட்டும் தூண் .
அணைப்பு தழுவுகை ; ஓர் உழவுச்சால் அளவு .
அணைப்புத்தூரம் ஓர் உழவுச்சால் தூரம் .
அணைமரம் கன்று இழந்த பசுவைக் கறத்தற்கு அணைக்கும் கணைமரம் .
அணையல் காண்க : அணைதல் .
அணையாடை பிள்ளைக்கு இடும் துணிப்படுக்கை ; ஏணைத் துகில் , தொட்டிலுக்கான துணி .
அணையார் பகைவர் .
அணைவு சேர்கை , தழுவுகை .
அணோக்கம் மரம் .
அத்தக அதற்கு ஏற்ப ; அத்தன்மையதாக ; அழகு பொருந்த .
அத்தகடகம் கைவளை .
அத்தகம் ஆமணக்கு ; கருஞ்சீரகம் ; கணக்கன் .
அத்தகிரி ( சூரியன் மறையும் இடமான ) மேற்குமலை .
அத்தகோரம் நெல்லி .
அத்தங்கார் அத்தைமகள் .
அத்தப்பிரகரம் அரைச்சாமம் , ஒரு நாளில் பதினாறில் ஒரு பங்கு கொண்ட நேரம் ; ஓர் யாமம் .
அத்தப்பிரகரன் துணைக்கோள்களுள் ஒன்று , புதன்கோளைச் சார்ந்தது .
அத்தம் கண்ணாடி ; பொன் ; பொருள் ; சொற்பொருள் ; பாதி ; வழி ; அருநெறி ; மேற்குமலை ; கை ; காடு ; அத்த நாள் ; சிவப்பு ; ஆண்டு .
அத்தமனம் மறைவு ; சூரியன் மறையுங்காலம் .
அத்தமித்தல் மறைதல் , படுதல் ; உட்புகுதல் ; அற்றுப்போதல் , இல்லாமற்போதல் .
அத்தர் கடவுளர் ; முனிவர் ; காடுறை மாந்தர் ; பூக்களிலிருந்து எடுக்கும் நறுமணத் தைலம் .
அத்தவாளம் போர்வை ; மேலாடை ; முன்றானை ; காடு .
அத்தன் தகப்பன் ; தலைவன் ; கடவுள் ; மூத்தோன் ; குரு ; உயர்ந்தோன் ; செல்வன் 
அத்திரி கழுதை ; கோவேறு கழுதை ; வானம் ; மலை ; ஒட்டகம் ; குதிரை ; அம்பு ; உலைத்துருத்தி ; வீண் .
அத்திரு அரசமரம் .
அத்திலை செருப்படைக்கொடி .
அத்திவாரம் அடிப்படை ; அடியுரம் .
அத்தினி நால்வகைப் பெண்டிருள் ஒருத்தி ; பெண்யானை .
அத்து இசைப்பு ; சிவப்பு ; செவ்வை ; துவர் ; அரைஞாண் ; அரைப்பட்டிகை ; தைப்பு ; அசைச்சொல் , ஒரு சாரியை .
அத்து (வி) தை ; ஒட்டு ; ஒத்து .
அத்துகம் ஆமணக்கு .
அத்துகமானி அரசமரம் .
அத்துணை அவ்வளவு .
அத்துதல் அடைதல் ; இசைத்தல் ; பொருத்தல் ; ஒருநிலைப்படுத்துதல் .
அத்துமம் அரத்தை .
அத்துமானி காண்க : அத்துகமானி .
அத்துலாக்கி கருஞ்சீரகம் .
அத்துவசுத்தி தீக்கை நிகழ்ச்சியில் ஆசாரியன் அத்துவாக்களில் எஞ்சியிருந்த மூலவினைகளை எல்லாம் போக்குகை .
அத்துவம் காண்க : அத்துவா .
அத்துவயம் இரண்டன்மை .
அத்துவரியு வேள்விப் புரோகிதன் ; செயலில் தலைமை வகிப்பவன் .
அத்துவலிங்கம் தத்துவ வடிவமான இலிங்கம் .
அத்துவா கதியடைவிக்கும் வழி ; வழி ; மந்திராத்துவா , பதாத்துவா , வர்ணாத்துவா , புவனாத்துவா , தத்துவாத்துவா , கலாத்துவா என்னும் ஆறு அத்துவாக்கள் ; இரண்டு ஒன்றாயிருப்பது ; ஒன்றிப்பு ; சிவப்பு .
அத்துவாக்காயம் காண்க : அத்துலாக்கி .
அத்துவாந்தம் காலை மாலை வெளிச்சம் .
அத்துவானம் பாழ்ங்காடு ; பாழிடம் ; செவ்வானம் .
அத்துவிதம் இருவிதம் ஆகாமை ; இரண்டற்றது ; பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்று எண்ணும் மதம் .
அத்துவைதம் இருவிதம் ஆகாமை ; இரண்டற்றது ; பரமான்மாவும் சீவான்மாவும் ஒன்று எண்ணும் மதம் .
அத்துவைதி அத்துவைத் மதத்தைச் சார்ந்தவன் ; ஏகாத்மவாதி .
அத்தூரம் மரமஞ்சள் .
அத்தேயம் களவு செய்ய நினையாமை ; திருடாமை .
அத்தை தந்தையுடன் பிறந்தாள் ; மனைவியின் தாய் ; மாமி ; கணவனின் தாய் ; தலைவி ; குருவின் மனைவி ; தாய் ; கற்றாழை ; முன்னிலை அசைச்சொல் .
அத்தைப்பாட்டி பாட்டனுடன் பிறந்தாள் .
அத்தொய்தன் ஒப்பற்றவன் .
அத்தோ வியப்பு இரக்கச்சொல் .
அத்தோதயம் ஒரு சிறப்பு நாள் , அறுபது ஆண்டிற்கு ஒருமுறை தை மாதத்து ஞாயிற்றுக்கிழமையில் வரும் அமாவாசையில் சூரியன் மகரராசியிலும் , சந்திரன் திருவோண நாளிலும் ஒன்றாய்த் தோன்றும் நாள் .
அதக்குதல் கசக்குதல் ; குதப்புதல் ; கெடுத்தல் ; அடக்குதல் .
அதகம் மருந்து ; சுக்கு .
அதகன் வலிமையுள்ளவன் .
அதங்கம் ஈயம் .
அதட்டம் அரவுயிர்ப்பு ; பாம்பின் நச்சுப்பல் , பாம்பின் கீழ்வாய்ப் பல் .
அதட்டு வெருட்டும் உரத்தசொல் .
அதட்டுதல் அதட்டல் ; உறுக்குதல் ; வெருட்டுதல் ; ஒலித்து உரப்புதல் ; கண்டித்தல் .
அதடம் செங்குத்து .
அதப்பு வணக்கம் ; மரியாதை ; செருக்கு .
அதம் இறங்குதல் , தாழ்வு ; பள்ளம் ; பாதலம் ; கேடு ; அழிவு ; அத்திமரம் .
அதம்புதல் காண்க : அதட்டுதல் .
அதமதானம் கடைப்படுதானம் ; கைம்மாறு ; அச்சம் முதலியவற்றின் ஏதுவாகச் செய்யப்படுவது .
அதமம் கடைத்தரம் ; கடைப்பட்டது ; இழிந்தது .
அதமருணிகன் கடன்பட்டவன் .
அதமன் தாழ்ந்தவன் ; கடையானவன் .
அதமாங்கம் கால் .
அத்தியசணம் மீதூண் ; அளவுகடந்து உண்ணல் .
அத்தியட்சன் காண்க : அத்தியக்கன் .
அத்தியந்தம் ஓர் எண் ; மிகவும் ; அளவில் மிக்கது ; அறவே .
அத்தியந்தாபாவம் முழுதுமின்மை .
அத்தியயம் அத்தியாயம் ; அழிவு ; குற்றம் ; ஒரு பொருளின் மாறுபாட்டை ஐயத்துடன் நோக்குதல் ; மீறுதல் .
அத்தியயனம் வேதம் ஓதல் , படித்தல் .
அத்தியவசாயம் மனப்போக்கு ; பொருள் துணிவு ; உறுதி .
அத்தியற்புதம் பெருவியப்பு .
அத்தியாகாரம் மிகை ஊண் ; அவாய்நிலையால் வருவித்த சொல் ; தருக்கம் .
அத்தியாசம் ஆரோபம் , ஏறுதல் ; ஒன்றன் குணத்தை மற்றொன்றன்மேல் ஏற்றுதல் ; மாறுபாட்டுணர்வு .
அத்தியாசனம் ஈமச்சடங்கில் ஒரு பகுதி .
அத்தியாசை மிகுந்த விருப்பம் .
அத்தியாத்துமம் பரமாத்மா .
அத்தியாத்துமிகம் தன்னால் வரும் துன்பம் ; கடவுட்கு அடுத்தது .
அத்தியாபகன் வேதமுரைப்போன் ; உபாத்தியாயன் , ஆசிரியன் .
அத்தியாபனம் ஓதுவித்தல் , படிப்பித்தல் .
அத்தியாயம் நூலின் கூறுபாடு , நூற்பிரிவு ; இலக்கியச் செய்யுட்பகுதி ; வேதம் .
அத்தியாரோகணம் ஏறுதல் .
அத்தியாரோபம் மாறுபாட்டு உணர்ச்சி ; ஒன்றன் இயல்பை ஒன்றன்மேல் ஏற்றுதல் .
அத்தியாவசியகம் இன்றியமையாதது .
அத்தியாவசியம் இன்றியமையாதது .
அத்தியாவாகனிகம் கணவன் வீட்டுக்குச்செல்லுங்கால் பெண் பெறும் சீர்ப்பொருள் .
அத்தியான்மிகம் ஆன்மாவுக்குரியது ; சைவாகமங்களுள் ஒரு பகுதி ; ஆன்மா பிறரால் அடையும் துன்பம் .
அத்திரசத்திரம் அம்பும் வாளும் ; கைவிடும் படையும் கைவிடாப் படையும் .
அத்திரம் அம்பு ; கழுதை ; குதிரை ; மலை ; நிலையற்றது ; கைவிடும் படை ; கடுக்காய்ப்பூ .
அத்திராசம் அச்சமின்மை .       
அதிசாரணம் காண்க : மாவிலிங்கம் .
அதிசாரம் வயிற்றுப்போக்கு ; கோள்களின் மீறிய நடை ; அதிமதுரம் ; கல்லுப்பு .
அதிட்டம் நற்பேறு ; பார்க்கப்படாதது நல்வினைப்பயன் ; நல்லனுபோகம் ; இன்ப துன்பங்களுக்குக் காரணமானது ; மிளகு .
அதிட்டாத்திரு தலைமை தாங்குபவன் ; ஆளும் தலைவன் .
அதிட்டாதா தலைமை தாங்குபவன் ; ஆளும் தலைவன் .
அதிட்டானம் நிலைக்களம் ; நிலைபெறும் இடம் .
அதிட்டித்தல் ஆவாகனமாதல் ; நிலைக்களமாகக் கொள்ளுதல் .
அதிதல்சிலேட்டுமம் ஒருவகைச் சிலேட்டுமநோய் .
அதிதனச்செல்வன் குபேரன் .
அதிதனு பொன் .
அதிதாரம் இலந்தைமரம் .
அதிதானம் கொடை ; பெருங்கொடை .
அதிதி விருந்து ; விருந்தினர் ; புதியவன் ; தேவரை ஈன்றாள் .
அதிதிசேவை விருந்தோம்பல் , விருந்தினரைப் போற்றுதல் .
அதிதிநாள் காண்க : புனர்பூசம் .
அதிதிபூசை விருந்தோம்பல் ; பரதேசிக்கு அன்னமிடல் .
அதர் வழி ; முறைமை ; புழுதி ; நுண்மணல் ; ஆட்டின் கழுத்திலே தொங்கும் உறுப்பு .
அதர்கோள் வழிப்பறி .
அதர்ப்படுதல் வழியில் தோன்றுதல் ; நெறிப்படுதல் .
அதர்மணிகன் வாங்கின கடனைத் தராதவன் ; கடன் வாங்கிக் கெட்டவன் .
அதர்மம் அறமல்லாதது , பாவம் .
அதர்வணம் நான்காம் வேதம் .
அதர்வம் நான்காம் வேதம் .
அதர்வை வழி ; கொடிவகை .
அதரம் உதடு ; இழிவு ; கீழ் ; கீழுதடு ; மஞ்சள் .
அதரிகொள்ளுதல் கதிரைக் கடாவிட்டு உழக்குதல் ; பகையழித்தல் .
அதரிடைச்செலவு வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை .
அதரிதிரித்தல் காண்க : அதரிகொள்ளுதல் .
அதலகுதலம் கலகம் , குழப்பம் .
அதலம் கீழ் ஏழு உலகங்களுள் முதலாவது ; பள்ளம் ; பின்பு .
அதலன் கடவுள் , இறை .
அதவம் அத்திமரம் ; நெய்த்துடுப்பு .
அதவா அல்லாமல் ; அல்லது .
அதவு காண்க : அதவம் .
அதவுதல் எதிர்த்து நெருக்குதல் ; கொல்லுதல் .
அதவை கீழ்மகன் , அற்பன் .
அதழ் பூவிதழ் .
அதள் தோல் , மரப்பட்டை .
அதளி அமளி , குழப்பம் .
அதளை ஒருவகைப் பெரும் பாத்திரம் ; புளியுருண்டை ; வயல்வெளிக் காவற்குடிசை ; நிலப்பீர்க்கு .
அதற்கொண்டு அக்காலம் தொடங்கி , அதுமுதலாக .
அதனப்பிரசங்கி காண்க : அதிகப்பிரசங்கி .
அதான்று அதுவல்லாமலும் .
அதி வலைச்சாதி ; மிகுதிப்பொருளைத் தரும் ஓர் இடைச்சொல் ; அதிகம் ; அப்பால் ; மேன்மை ; சிறப்பு முதலிய பொருள் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு .
அதிக்கண்டம் செய்யுட்சீர் .
அதிக்கிரமம் நெறிதவறல் ; கடத்தல் ; தப்பிப் போதல் ; மேற்படுதல் ; மீறுதல் .
அதிக்கிராந்தம் கடந்தது .
அதிகண்டம் இறப்புத் துன்பம் ; யோகம் இருபத்தேழனுள் ஒன்று .
அதிகநாரி காண்க : கொடிவேலி .
அதிகப்படி அளவுக்குமேல் .
அதிகப்பிரசங்கம் அளவுக்குமீறிய பேச்சு ; தன் மேம்பாட்டுரை .
அதிகப்பிரசங்கி அடங்காதவன் , அகங்காரி .
அதிகம் இலாபம் ; மிகுதி ; பொலிவு ; ஏற்றம் ; மேன்மை ; படை ; குருக்கத்தி .
அதிகரணம் நிலைக்களம் , ஆதாரம் ; நூற்பொருட் கூறுபாடு .
அதிகரித்தல் மிகுதிப்படுதல் ; மேற்படல் ; பெருகுதல் ; அதிகாரம் செய்தல் ; கற்றல் .
அதிகன் மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் .
அதியன் மேலானவன் ; மேம்பட்டவன் ; மகான் ; பெரியோன் ; பரம்பொருள் ; கடையெழு வள்ளல்களுள் ஒருவன் .
அதிகாசம் பெருநகை .
அதிகாந்தம் மணிவகை ; செவ்வானம் .
அதிகாரம் அதிகரித்தல் ; தலைமை ; தொடக்கம் ; நூற்பிரிவு ; அலுவல் ; ஒழுங்கு ; ஆட்சி ; ஆளுந்தன்மை .
அதிகாரமுறை நூற்பிரிவின் முறைவைப்பு .
அதிகாரன் மகேசுரன் ; அதிகாரி .
அதிகாரி தலைவன் ; கண்காணிப்பவன் ; தொடர்புடையவன் ; நூல் செய்வித்தோன் ; பக்குவன் ; உரியவன் ; நூல் கேட்டற்குரியோன் .
அதிகாலங்காரம் பெருமையணி .
அதிகாலை விடியற்காலம் .
அதிகுணன் சிறந்த குணமுள்ளவன் ; கடவுள் ; அருகன் .
அதிங்கம் காண்க : அதிமதுரம் .
அதிசயம் புதுமை , வியப்பு ; அலங்காரம் ; மிகுதி ; மேம்பாடு ; சிறப்பு .
அதிசயமொழி வியப்புச்சொல் .
அதிசயன் அருகன் .
அதிசயித்தல் வியப்புறுதல் .
அதிசயோத்தி உயர்த்திக் கூறுதல் ; உயர்வு நவிற்சியணி .
அதிசரம் நெட்டுயிர்ப்பு .
அதமாதமம் மிகவும் கடைப்பட்டது .
அதமாதமன் மிகக் கீழானவன் .       
அதிராத்திரம் வேள்வி இருபத்தொன்றனுள் ஒன்று ; சோமவேள்வி வகை .
அதிராயம் வியப்பு .
அதிரித்தம் அதிகமானது .
அதிருசயன் கடவுள் .
அதிருசியம் காணப்படாதது ; அறுபத்து நான்கு கலையுள் தன்னைக் காணாமல் மறைக்கும் வித்தை .
அதிருத்தி மனநிறைவின்மை .
அதிருப்தி மனநிறைவின்மை .
அதிரேகம் மிகுதி ; மாறுபாடு ; வியப்பு ; மேன்மை , மேம்பாடு .
அதிரேகமாயை பெருமயக்கம் .
அதிரோகம் எலும்புருக்கிநோய் , சயரோகம் ; இளைப்பிருமல் , ஈளைநோய் .
அதிலுத்தன் பிறர் பொருளில் மிக்க விருப்பமுடையவன் .
அதிலோகம் உலோகம் , இரசகருப்பூரம் .
அதிலோபம் தன் பொருளைப் பிறர்க்குக் கொடுக்க விரும்பாமை ; மிக்க பொருளாசை .
அதிவருணாச்சிரமி வருணாசிரமங்களைக் கடந்த ஆத்மஞானி .
அதிவன்னாச்சிரமி வருணாசிரமங்களைக் கடந்த ஆத்மஞானி .
அதிவாசம் சிராத்தத்திற்கு முதல்நாள் கடைப்பிடிக்கும் நோன்பு ; ஆரம்பச் சடங்கினுள் ஒன்று ; மிக்க மணம் .
அதிவாதம் புனைந்துரை .
அதிவிடயம் ஒரு மருந்துச் செடி .
அதிவிடை ஒரு மருந்துச் செடி .
அதிவிடையம் ஒரு மருந்துச் செடி .
அதிவியாத்தி இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம் .
அதிவியாப்தி இலக்கணம் இல்லாததற்கும் இலக்கணம் சொல்லும் குற்றம் .
அதிவிருஷ்டி பெருமழை ; அளவுக்கு மிஞ்சிய மழை .
அதிவிருட்டி பெருமழை ; அளவுக்கு மிஞ்சிய மழை .
அதிவினயம் அதிகக் கீழ்ப்படிவு , மிகு வணக்கம் .
அதீதகாலம் இறந்தகாலம் .
அதீதம் எட்டாதது ; கடந்தது ; கடவுள் தன்மைகளுள் ஒன்று .
அதீதன் கடந்தவன் ; பாசத்தினின்று விடுவிக்கப்பட்டவன் ; மேலோன் ; முனிவன் ; ஞானி .
அதீந்திரியம் புலனுக்கு எட்டாதது .
அதீனம் உரிமை ; சார்பு ; வசம் .
அது அஃது ; அஃறிணை ஒருமைச் சுட்டுப்பெயர் ; ஆறாம் வேற்றுமை ஒறுமையுருபு .
அதுக்கல் அடித்தல் ; அடைசுதல் ; கடித்தல் ; வாயிலடக்குதல் ; அடைத்தல் ; பிசைதல் .
அதுங்குதல் அமுங்குதல் ; ஒதுங்குதல் ; குழிதல் .
அதும்புதல் மொய்த்தல் .
அதுலம் உவமையின்மை ; ஓர் எண் .
அதுலன் உவமையில்லான் , ஒப்பில்லாதவன் , கடவுள் ; அசைவின்மை .
அதிதெய்வம் மேலான தெய்வம் , ஆளும்தெய்வம் .
அதிதேசம் ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது .
அதிதேசித்தல் ஒன்றற்குரியதை மற்றொன்றற்கு ஏற்றிக்கூறுதல் ; ஒப்புமைகாட்டி உணர்த்துவது .
அதிதேவதை அதிகார தேவதை ; குலதெய்வம் , உரிய தெய்வம் .
அதிபதி அரசன் , தலைவன் ; சண்பகம் .
அதிபம் வேம்பு .
அதிபலை காண்க : பேராமுட்டி ; விசுவாமித்திரர் இராமனுக்குக் கற்பித்த மந்திரம் .
அதிபறிச்சம் காண்க : வாலுளுவை .
அதிபன் தலைவன் ; எப்பொருட்கும் இறைவன் ; அரசன் .
அதிபாதகம் மிகுகொடுஞ்செயல் .
அதிபாதகன் பெருந்தீங்கு புரிவோன் .
அதிபாரகன் மிகு வல்லுநன் .
அதிபாவம் பெரும்பாவம் .
அதிபானம் மதுபானம் .
அதிபூதம் பிரகிருதி மாயை ; பரமாத்மா ; மேலான பொருள் .
அதிமதுரம் மிகு இனிமை ; ஒரு மருந்துச் சரக்கு ; வெண்குன்றி .
அதிமலம் மாவிலிங்கமரம் .
அதிமிதம் அளவில் மிக்கது , அளவு கடந்தது .
அதிமுத்தம் குருக்கத்தி .
அதிமுத்தி சாயுச்சிய முத்தி .
அதிமேற்றிராணியார் கிறித்தவக் கண்காணியாருள் முதன்மையானவர் .
அதியர் அதியமான்வழித் தோன்றியவர் .
அதியரையன் மீன்வலைஞர் தலைவன் .
அதியாச்சிரமம் ஆசிரமங்களைக் கடந்த நிலை .
அதியாமம் முயற்புல் ; அறுகம்புல் .
அதியோகம் நற்கோள் நிலையுள் ஒன்று .
அதிர் ஒலி ; நடுக்கம் , அச்சம் .
அதிர்ச்சி ஆரவாரம் ; குமுறல் ; நடுங்குதல் .
அதிர்த்தல் அதட்டல் ; சொல்லுதல் ; முழங்குதல் ; கலங்குதல் .
அதிர்தல் முழங்கல் ; கலங்கல் ; நடுங்கல் ; தளர்தல் ; குமுறுதல் ; எதிரொலித்தல் .
அதிர்ப்பு அச்சம் , நடுக்கம் ; ஆரவாரம் ; தாக்கி ஒலிக்கை ; எதிரொலி .
அதிர்வு நடுக்கம் , அதிர்ச்சி .
அதிர்வெடி மிகுந்த ஒலியையுடைய வெடி ; குழாய்வெடி ; சிறுபீரங்கி .
அதிர்வேட்டு காண்க : அதிர்வெடி .
அதிரசம் மிக்க இனிமை ; பணியாரை வகையுள் ஒன்று ; உப்பு ; ஒரு பானம் .
அதிரடி பெருங்கலகம் ; மிரட்டு ; அளவுக்குமிஞ்சியது .
அதிரதன் கணக்கற்ற தேர்வீரரை எதிர்த்துப் போரிடும் வன்மையுடையவன் .
அதிரல் மிகுதூறு , விரிதூறு , காட்டு மல்லிகை ; மோசிமல்லிகை ; புனலிக்கொடி ; காண்க : அதிர்தல் .
அதிராகம் கந்தகம் .       
அந்தரீயம் உள்ளாடை ; அரையில் கட்டும் வேட்டி .
அந்தரேணம் நடுவிடம் .
அந்தலை முடிவு ; சந்திப்பு ; மேடு ; பேறு .
அந்தளகத்தாளார் கவசம் தரித்த வீரர் .
அந்தளகம் கவசம் ; பல்லக்கு .
அந்தளம் கவசம் ; பல்லக்கு .
அந்தளி தேவர்கோயில் .
அந்தகாரி அந்தகாசுரன் ; அல்லது யமனுக்குப் பகைவன் , சிவன் .
அந்தகாலம் இறுதிக்காலம் , முடிவுகாலம் .
அந்தகோ இரக்கச்சொல் .
அந்தகோரம் காண்க : நெல்லி .
அந்தகோலம் காண்க : நெல்லி .
அந்தண்மை அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு .
அந்தணமை அழகிய அருள் ; பார்ப்பனத்தன்மை , அந்தணர் இயல்பு .
அந்தணத்துவம் அந்தணனாகும் தன்மை .
அந்தணநாபி நஞ்சு போக்கும் மருந்து .
அந்தணர்வாக்கு வேதம் .
அந்தணன் வேதத்தின் அந்தத்தை அறிபவன் ; அழகிய தட்பத்தினையுடையவன் , செந்தண்மையுடையவன் ; பெரியோன் ; முனிவன் ; கடவுள் ; பார்ப்பான் ; சனி ; வியாழன் .
அந்தணாளன் அழகிய அருளுடையவன் ; முனிவன் ; பார்ப்பான் .
அந்ததரம் சித்தாந்தம் .
அந்தந்த அந்த அந்த ; ஒவ்வொன்றினுடைய .
அந்தப்புரம் அரசியிருக்கை , அரசன் மனைவி இருக்குமிடம் ; அரண்மனையில் பெண்கள் தங்குமிடம் ; பெண்டிர் தங்குமிடம் .
அந்தம் அழகு ; கடை ; கத்தூரி ; குருடு ; முடிவு ; சாவு ; எல்லை ; அறியாமை .
அந்தமந்தம் உறுப்புக்கேடு ; செப்பமின்மை ; அழகின்மை .
அந்தர் உள் ; மறைவு ; கீழ்மக்கள் ; தலைகீழாய்ப்பாயும் செயல் ; நூற்றுப்பன்னிரண்டு ராத்தல் கொண்ட நிறுத்தல் அளவை (ஆங்கிலம்) .
அந்தர்க்கதம் மறைந்திருக்கை ; உள்ளானது .
அந்தர்த்தானம் மறைவிடம் ; மறைகை ; மறைவு .
அந்தர்பூதம் உள்ளிருப்பது , உள்ளடங்கியது .
அந்தர்முகம் உள்நோக்குகை .
அந்தர்வேதி நடுவேயுள்ள சமபூமி .
அந்தரங்கம் மனம் ; உள்ளானது ; உட்கருத்து ; கமுக்கம் , இரகசியம் ; ஆலோசனை .
அந்தரங்கன் மிகவும் விரும்பப்பட்டவன் ; உற்ற நண்பன் ; நம்பத்தகுந்தவன் .
அந்தரத்தாமரை ஆகாயத்தாமரை .
அந்தரத்தானம் ஆகாயநிலை .
அந்தரதுந்துபி ஓர் இசைக்கருவி ; தேவ வாத்தியம் .
அந்தரதுந்துமி ஓர் இசைக்கருவி ; தேவ வாத்தியம் .
அந்தரநாதன் வானுலகத் தலைவன் , இந்திரன் .
அந்தரப்பல்லியம் காண்க : அந்தரதுந்துபி .
அந்தரம் வானம் ; உள் ; வெளி ; இடை ; நடு ; நடுவுநிலை ; அளவு ; இருள் ; தனிமை ; முடிவு ; வேறுபாடு ; தீமை ; தேவர்கோயில் .
அந்தரர் தேவர் .
அந்தரவல்லி கொல்லங்கொவ்வை ; கருடன் கிழங்கு .
அந்தரவாசம் ஒரு மருந்துப் பூடு .
அந்தரவாசி ஆகாயகமனம் செய்பவன் ; வானுலகில் வாழ்பவன் .
அந்தராத்துமா உயிர்களுக்கு உயிராய் இருப்பவன் ; மனத்துள் இருக்கும் கடவுள் .
அந்தராயம் தீமை , இடையூறு , துன்பம் .
அந்தராளம் நடு ; இடைக்காலம் ; இடையிடம் ; மூலத்தானத்தை அடுத்த மண்டபம் .
அந்தரான்மா காண்க : அந்தராத்துமா .
அந்தரி பார்வதி ; கொற்றவை ; ஆகாயவாணி ; தோற்கருவிவகை .
அந்தரிட்சம் வானம் ; நற்கதி .
அந்தரித்தல் நிலைகெடுதல் ; மனந்தடுமாறல் ; தனித்திருத்தல் ; உதவியற்றிருத்தல் ; இரண்டு அளவுகளைக் கழிப்பதால் வரும் மிச்சம் .
அந்தரிதம் கழித்தலால் உண்டாகும் மிச்சம் .
அந்தரிப்பு உதவியின்மை .
அந்தரியம் காண்க : அந்தக்கரணம் .
அந்தரியாகபூசை மனத்தால் செய்யும் பூசை , உட்பூசை .
அந்தரியாகம் மனத்தால் செய்யும் பூசை , உட்பூசை .
அந்தரியாமி உள்ளே நின்று நடத்துவோன் ; கடவுள் ; உயிர் .
அந்தரியாமித்துவம் ஆன்மாவோடு கலந்திருத்தல் ; உள் இருக்குந்தன்மை .
அந்தரீபம் தீவு .
அதுலிதம் ஒப்பாக்கப்படாதது ; நிறுக்கப்படாதது ; அசைவின்மை .
அதேந்து அஃது என்ன என்று அருளொடு கேட்கும் குறிப்பு ; அஞ்சாதே எனப் பொருள்படும் ஒரு மொழி .
அதைத்தல் தாக்கிமீளல் ; வீங்குதல் ; செருக்குதல் .
அதைப்பு தாக்கிமீளுகை ; வீக்கம் ; நீர்க்கோப்பு .
அதைரியம் ஊக்கமின்மை , திட்பமின்மை .
அதோ சேய்மைச்சுட்டு ; படர்க்கைச்சுட்டு ; சுட்டிக் கவனிக்கச்செய்தற் குறிப்பு ; கீழ் .
அதோகதி இறங்குகை ; தாழ்நிலை ; பள்ளம் ; நரகம் .
அதோமாயை காண்க : அசுத்தமாயை .
அதோமுகம் கீழ்நோக்கிய முகம் ; தலைகீழான நிலை ; ஆற்றுநீர்க் கழிமுகம் .
அதோளி அவ்விடம் .
அந் இன்மை ; எதிர்மறை காட்டும் ஒரு வடமொழி முன்னொட்டு .
அந்தக்கரணம் உட்கருவி ; அவை : மனம் , புத்தி , சித்தம் ,அகங்காரம் .
அந்தக்கேடு அழகின்மை ; சீர்கேடு .
அந்தக்கேணி மறைகிணறு , கரப்புநீர்க்கேணி .
அந்தகம் ஆமணக்கு ; ஒரு சன்னிநோய் .
அந்தகன் அழிப்போன் ; குருடன் ; சனி ; யமன் ; புல்லுருவி ; சவர்க்காரம் .
அந்தகாரம் இருள் ; அறியாமை ; மனவிருள் .       
அந்தியேட்டி இறுதிச்சடங்கு , இறுதிக்கடன் .
அந்தியேட்டிக் குருக்கள் இறுதிச் சடங்கைச் செய்விக்கும் புரோகிதன் .
அந்திரக்கண்மணி நீலக்கல் .
அந்திரக்கொடிச்சி கந்தகம் .
அந்திரம் சிறுகுடல் .
அந்திரர் ஆந்திரநாட்டவர் .
அந்திரவசனம் கொட்டைப்பாக்கு .
அந்திரன் தேவன் ; வேடன் ; கடவுள் .
அந்திரி பார்வதி ; காளி .
அந்தில் இடம் ; அவ்விடம் ; ஓர் அசைச்சொல் ; இரண்டு ; வெண்கடுகு .
அந்திவண்ணன் மாலைவானம் போன்ற நிறமுடையவன் , சிவன் .
அந்து நெற்பூச்சி ; பாதகிண்கிணி ; யானைக்காற் சங்கிலி ; கிணறு ; தொகை ; பூச்சிவகை ; முடிவு ; அப்படி .
அந்துக்கண்ணி பீடை நிரம்பிய கண்ணாள் .
அந்துகம் யானைச்சங்கிலி ; பாதகிண்கிணி .
அந்துப்போதிகை யானையைக் கட்டுங் குறுந்தறி .
அந்துவாசம் கொட்டைப்பாசி .
அந்தூல்பல்லக்கு பல்லக்கு வகை .
அந்தேசம் கதியின்மை .
அந்தேசாலம் தேற்றாமரம் .
அந்தேவாசி மாணாக்கன் .
அந்தை ஒரு நிறைவகை .
அந்தோ அதோ ; வியப்பு , இரக்கக் குறிப்புச்சொல் .
அந்தோர் காண்க : நெல்லி .
அநந்தசொரூபி எண்ணிலா உருவுடையான் , கடவுள் .
அநபாயம் அழிவின்மை .
அநபாயன் அழிவில்லாதவன் ; சிவன் ; ஒரு சோழன் .
அநவத்தானம் தவறான நிலை .
அநவத்திதம் நிலையற்றது .
அநாகாலம் பஞ்சகாலம் .
அநாசாரிதம் பற்றுக்கோடற்றது .
அந்தன் யமன் ; சனி ; அழகன் ; குருடன் ; அறிவிலான் ; கடுக்காய் .
அந்தா ஒரு வியப்புச் சொல் ; அதோ .
அந்தாக அப்படியே யாகுக .
அந்தாதி முதலும் முடிவும் ; கடவுள் ; முதல் பாட்டின் இறுதி அசை , சொல் , தொடர் , அடி ஆகியவற்றுள் ஏதேனுமொன்றை அடுத்த பாட்டின் முதலாகக் கொண்டு பாடப்படும் செய்யுள் நூல் .
அந்தாதிஉவமை ஓர் அடியின் இறுதிச்சொல்லை அடுத்த அடியின் முதலாகக்கொண்டு உவமைபெறக் கூறும் அணி .
அந்தாதித்தல் அந்தாதியாகத் தொடுத்தல் .
அந்தாதித்தொடை அடிதோறும் இறுதிக்கண் உள்ள சீரோ அசையோ எழுத்தோ அடுத்த அடிக்கு முதலாக வரத் தொடுப்பது .
அந்தாமம் பரமபதம் .
அந்தாலே அங்கே .
அந்தாளி ஒரு பண் ; குறிஞ்சியாழ்த் திறவகை .
அந்தாளிக்குறிஞ்சி ஒரு பண் ; குறிஞ்சியாழ்த் திறவகை .
அந்தாளிபாடை ஒரு பண் ; பாலையாழ்த் திறவகை .
அந்தி பகலும் இரவும் கூடும் நேரம் ; மாலைக்காலம் ; சந்தியாவந்தனம் , காலை மாலை வழிபாடு ; இரவு ; செவ்வானம் ; முடிவுகாலம் ; தில்லைமரம் ; சந்திப்பு ; முச்சந்தி ; பாலையாழ்த் திறவகை ; ஓர் அசைச்சொல் .
அந்தி (வி) பொருந்து என்னும் ஏவல் .
அந்திக்கடை மாலைக்கடை .
அந்திக்காப்பு தீங்கு அண்டாவண்ணம் குழந்தைகளுக்கு மாலைக்காலத்தில் செய்யப்படும் காப்பு ; மாலைக்காலத்தில் கடவுளுக்குச் செய்யும் சடங்கு .
அந்திக்காலம் மாலைவேளை ; இறுதிக்காலம் .
அந்திக்கோன் காண்க : அந்திகாவலன் .
அந்திகம் அயல் .
அந்திகாசிரயம் நிலையியற்பொருள் , தாவரம் .
அந்திகாவலன் சந்திரன் ; மாலையில் திரியும் காவல்தெய்வம் .
அந்திகூப்புதல் சந்தியாவந்தனம் செய்தல் .
அந்திகை கபடம் ; சித்தம் ; இரவு ; பெண் ; அக்காள் ; அடுப்பு .
அந்திசந்தி காலைமாலை .
அந்தித்தல் சந்தித்தல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; முடித்துவைத்தல் ; முடிவுசெய்தல் .
அந்திநட்சத்திரம் மாலை வெள்ளி .
அந்திப்பூ காண்க : அந்திமந்தாரை .
அந்திபகல் இராப்பகல் .
அந்திமகாலம் இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் .
அந்தியகாலம் இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் .
அந்திமதசை இறக்குந்தறுவாய் ; முடிவுகாலம் .
அந்திமந்தாரம் மாலையில் பூக்கும் பூச்செடி வகை .
அந்திமந்தாரை மாலையில் பூக்கும் பூச்செடி வகை .
அந்திமல்லி மாலையில் பூக்கும் பூச்செடி வகை .
அந்திமல்லிகை மாலையில் பூக்கும் பூச்செடி வகை .
அந்நிமலர்ந்தான் மாலையில் பூக்கும் பூச்செடி வகை .
அந்திமாலை மாலைப்பொழுது ; மாலைக்கண் ; கண்ணோய் வகை .
அந்தியக்கிரியை இறுதிச்சடங்கு .
அந்தியகருமம் இறுதிச்சடங்கு
அந்தியன் கடைக்குலத்தான் , புலையன் .
அந்திசன் கடைக்குலத்தான் , புலையன் .
அந்தியதீபம் கடைநிலை விளக்கு என்னும் அணி .
அந்தியம் மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் .
அந்தியன் மரணகாலம் ; முடிவுகாலம் ; கடைப்பட்டது ; ஒரு பேரெண் .
அந்தியுழவு கோடையில் அந்தி நேரத்தில் உழுகை . 
அப்பளக்காரம் உறைப்பும் உவர்ப்பும் கூடிய ஒரு பொருள் .
அப்பளம் அப்பவருக்கத்துள் ஒன்று , ஒருவகைப் பணியாரம் .
அப்பன் தகப்பன் ; பெரிய தகப்பன் ; வள்ளல் ; ஓர் அன்புரை .
அப்பாட்டன் தந்தையின் பாட்டன் , முப்பாட்டன் .
அப்பாத்தாள் தந்தையயைப் பெற்ற பாட்டி .
அப்பாத்தை தமக்கை .
அப்பாயி தந்தையின் தாய் ; பையன் ; பேதை .
அப்பால் அதன்மேல் ; அப்பக்கம் .
அப்பாவி பேதை .
அப்பி தமக்கை ; தலைவி ; அருமை குறித்தற்கு வழங்கும் சொல் .
அப்பிகை காண்க : ஐப்பசி .
அப்பிச்சன் தகப்பன் .
அப்பியங்கம் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் .
அப்பியங்கனம் எண்ணெய் தேய்த்துக் கொள்ளுதல் .
அப்பியசித்தல் பழகல் .
அப்பியந்தம் தாமதம் ; பின்போடுதல் .
அப்பியந்தரம் இடையூறு .
அப்பியம் தேவர்க்கிடப்படும் உணவுவகை .
அப்பியாகதன் பழக்கமுள்ள விருந்தினன் .
அப்பியாகமம் அடித்தல் ; எழும்புதல் ; கொலை ; சந்தித்தல் ; பகை ; போர் ; வந்துசேர்தல் .
அப்பியாகமனம் சந்தித்தல் ; எதிர்வருதல் .
அப்பியாகாரம் களவு .
அப்பியாசம் பயிற்சி , பழக்கம் .
அப்பியாசி பயில்பவன் .
அப்பியாசித்தல் பழகல் .
அப்பிரகம் ஒருவகைக் கனிப்பொருள் , மைக்கா .
அப்பிரகாசம் விளக்கமின்மை ; அசித்து ; இருள் .
அப்பிரசித்தம் வெளிப்படையாகாதது , அறியப்படாதது .
அப்பிரதட்சிணம் இடம்வருதல் , வலப்பக்கத்திலிருந்து இடப்பக்கமாக வருதல் .
அப்பிரதாபம் எளிமை ; மங்கல் .
அப்பிரதானம் முதன்மையல்லாதது .
அப்பிரபுத்தன் கூர்ந்துணர்வில்லாதவன் .
அப்பிரம் மேகம் ; தேவருலகம் ; வானம் .
அப்பிரமாணம் பிரமாணமல்லாதது , ஆதாரமற்றது ; பொய்ச்சத்தியம் ; எல்லைக்குட்படாதது .
அநாசாரியன் ஆசிரியனல்லாதவன் .
அநாத்துமா அத்துமாவல்லாத பொருள் .
அநாதபம் குளிர்மை ; நிழல் ; வெயிலின்மை .
அநாதரட்சகர் திக்கற்றோரைக் காப்பவர் ; கடவுள் .
அநாதன் கடவுள் ; திக்கற்றவன் .
அநாதிமலமுத்தர் இயல்பாகவே பற்றுகளினின்று நீங்கியவர் .
அநாமதேயம் பெயரில்லாதது .
அநாமதேயன் நன்கு அறியப்படாதவன் .
அநாமிகை மோதிரவிரல் .
அநாயகம் அரசின்மை , தலைமையின்மை .
அநிகம் படை .
அநித்தம் நிலையின்மை ; சிவசத்திபேதம் .
அநித்தியம் நிலையாமை ; நிலையற்றது ; பொய் .
அநிதம் அளவுகடந்தது .
அநிமிடன் இமையா நாட்டத்தவன் , தேவன் .
அநியாயம் நீதியின்மை , முறையின்மை ; வீண் .
அநிர்வசனம் மாயை ; சரியாக மெய்ப்பிக்க முடியாதது .
அநிர்வசனீயம் மாயை ; சரியாக மெய்ப்பிக்க முடியாதது .
அநிருத்தம் மெய்ப்பிக்கப்படாதது .
அநிருத்தன் தடையற்றவன் ; அடங்காதவன் ; மன்மதன் மகன் ; ஒற்றன் .
அநிருதம் மாயை ; பொய் .
அநிலாசனம் காற்றை உண்ணுதல் ; நோன்பு .
அநிவாரிதம் தடுக்கப்படாதது .
அநீதம் நியாயமின்மை .
அநீதி நியாயமின்மை .
அப்சரசு அப்ஸரஸ் , தெய்வப் பெண்டிருள் ஒரு வகையார் .
அப்தபூர்த்தி ஆண்டுநிறைவு .
அப்தம் ஆண்டு .
அப்தா வாரம் .
அப்ப காண்க : அப்படா .
அப்பச்சி தந்தை ; சிற்றப்பன் ; பாட்டன் ; சிற்றுண்டி .
அப்பட்டம் கலப்பற்றது ; வெளிப்படையானது ; உள்ளது உள்ளபடியே .
அப்படா ஒரு வியப்புக் குறிப்புச் சொல் .
அப்படி அவ்வாறு .
அப்பணை கட்டளை ; பிணை ; ஆதாரம் .
அப்பத்தாள் அக்காள் ; தந்தையின் தாய் .
அப்பதி கடல் .
அப்பம் சிற்றுண்டி ; அடை .
அப்பர் ஆண் ஆடு ; ஆண்குரங்கு ; திருநாவுக்கரசு நாயனார் ; வயது முதிர்ந்தோர் ; உயர்ந்தோர் .
அப்பல் காண்க : அப்புதல் .
அப்பழுக்கு தூய்மையின்மை ; குற்றம் 
அப இன்மை ; எதிர்மறை முதலிய பொருள்களைத் தரும் ஒரு வடமொழி முன்னொட்டு .
அபக்கியாதி இகழ்ச்சி ; பழி .
அபக்குவம் முதிர்ச்சியின்மை ; பக்குவப்படாமை .
அபக்குவி முதிர்ச்சியில்லாதவன் ; பக்குவமடையாதவன் .
அபகடம் வஞ்சகம் .
அவகடம் வஞ்சகம் .
அபகம் இறப்பு .
அபகமம் புறப்பட்டுப் போதல் ; மறைந்து போதல் ; சாதல் .
அபகரணம் தீயொழுக்கம் .
அபகரித்தல் கவர்தல் .
அபகாரம் தீமை ; கவர்கை .
அபகாரி தீமைசெய்வோன் .
அபகீர்த்தி இகழ்ச்சி .
அபங்கம் கோளகபாடாணம் ; மராத்தியப் பக்திப் பாடல் .
அபங்கன் குறைவில்லாதவன் .
அபங்குரன் திண்ணியன் .
அபசகுனம் சகுனத்தடை ; தீக்குறி .
அபசப்தம் வழூஉமொழி ; வெற்றுரை .
அபசயம் வலிந்து கவர்தல் ; தோல்வி ; கேடு .
அபசரணம் பின்னிடுகை ; புறப்பாடு .
அபசரிதம் தீயொழுக்கம் .
அபசவ்வியம் இடப்பக்கம் ; வலப்பக்கம் ; மாறுபாடு .
அபசாரம் மரியாதைக்குறைவு .
அபசாரி காண்க : அபிசாரி .
அபசித்தாந்தம் போலி முடிவு ; தோல்வி நிலையுள் ஒன்று .
அபசுமாரம் கால்கை வலிப்பு ; வெறுக்கத்தக்கது .
அபட்கை பாம்பின் கீழ்வாய் நச்சுப்பல் .
அபட்சணம் பட்டினி , நோன்பு .
அபட்சம் வெறுப்பு ; பட்சமின்மை .
அபட்சியம் உண்ணத்தகாதது .
அபத்தம் வழு ; பொய் ; நிலையாமை ; மோசம் .
அபத்தியசத்துரு நண்டு .
அபத்தியம் பத்தியத்தவறு ; பிள்ளை ; மனித இனம் .
அபதானம் பெருஞ்செயல் .
அபதேசம் புகழ் ; நிமித்தம் ; சாக்குப்போக்கு ; குறி ; இடம் .
அபதேவதை கேடு விளைக்கும் சிறுதெய்வம் ; பிசாசு .
அபநயனம் கடனிறுக்கை ; கைப்பற்றுதல் ; அழித்தல் ; குருட்டுக்கண் .
அபமிருத்தியு காண்க : அகாலமிருத்து .
அபமிருத்து காண்க : அகாலமிருத்து .
அபயதானம் அடைக்கலம் தருதல் .
அபயம் அடைக்கலம் ; அச்சமின்மை ; அருள் ; ஓலம் .
அபயமிடுதல் அடைக்கலம் தரும்படி கூவுதல் ; முறையீடு .
அபயமுத்திரை அடைக்கலமளித்தலைக் காட்டும் கைக்குறி .
அபயர் வீரர் .
அபயவத்தம் இணைக்கைவகை .
அபயவாக்கு அஞ்சல் என்னும் சொல் , ஆறுதல் உரை .
அபயன் அச்சமற்றவன் ; சோழன் ; அருகன் ; கடுக்காய் வகை .
அபயாத்தம் அடைக்கலம் அருளும் கை ; அச்சந்தீரக் காட்டும் கை .
அபரக்கிரியை பிணச்சடங்கு ; நீத்தார்கடன் .
அபரகாத்திரம் கால் ; பின்கால் .
அப்பிரமாணிக்கம் ஆதாரமற்றது , உண்மைக்கு மாறுபட்டது .
அப்பிரமேயம் அளக்கமுடியாதது ; ஒரு பேரெண் .
அப்பிரமேயன் கடவுள் .
அப்பிரமை கீழ்த்திசைப் பெண்யானை .
அப்பிரயோசனம் பயனின்மை .
அப்பிராகிருதம் இயற்கைக்கு மாறுபட்டது .
அப்பிராணி பேதை ; ஆற்றலற்றவன் .
அப்பிராப்பியம் அடைதற்கரியது ; அடையத்தகாதது .
அப்பிராமணன் பிராமணனல்லாதவன் ; போலிப்பிராமணன் .
அப்பிரியம் வெறுப்பு ; வெறுப்பான செயல் .
அப்பிரீதி வெறுப்பு ; வெறுப்பான செயல் .
அப்பு நீர் ; கடல் ; பாதிரி என்னும் மரவகை ; துடை ; கடன் ; தந்தை ; வேலைக்காரன் ; முட்டாள் ; பூராடநாள் ; விளி .
அப்பு (வி) கனக்கப் பூசு .
அப்புக்கட்டு அம்புகளின் கூடு .
அப்புதல் ஒற்றுதல் ; பூசுதல் ; திணித்தல் ; தாக்குதல் .
அப்புது யானையைப் பாகர் அதட்டுகையில் கூறும் ஒரு குறிப்புச்சொல் .
அப்புலிங்கம் திருவானைக்காவிலுள்ள இலிங்கம் ; நீர்த்திரள் .
அப்புறப்படல் குறித்த இடத்துற்கு அப்பாற்போதல் ; வெளியேறுதல் .
அப்புறப்படுத்துதல் இடம் மாற்றுதல் ; வெளியேற்றுதல் .
அப்புறம் அந்தப் பக்கம் ; அதன்பின் .
அப்பூச்சி ஒளித்து நின்று திடீரென்று தோன்றி மகிழ்விக்கும் விளையாட்டு .
அப்பை அப்பைக்கோவை , கொடிவகை ; சரக்கொன்றை ; சிறுமீன் வகை .
அப்பொழுது அக்காலத்தில் .
அப்போது அக்காலத்தில் .
அப்போதைக்கப்போது அவ்வக்காலத்தில் ; உடனுக்குடனே .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;