கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

அகராதி-அ

அச்சியர் ஆரியாங்கனைகள் ; சமணசமயத் தவப்பெண்டிர் .
அச்சிரம் முன்பனிக்காலம் .
அச்சு அடையாளம் ; உயிரெழுத்து ; வண்டியச்சு ; எந்திரவச்சு ; கட்டளைக்கருவி ; உடம்பு ; வலிமை ; அச்சம் ; துன்பம் .
அச்சுக்கட்டி ஆடையில் அச்சு வேலை செய்வோன் .
அச்சுக்கட்டு நெசவுக் கருவிவகை ; அச்சடித்தற்காகத் துணியை மடித்தல் ; வரம்பு கட்டிய வயல் .
அச்சுக்கட்டை அச்சுமரம் .
அச்சுக் கம்பி துப்பாக்கி மருந்து இடிக்கும் இருப்புக் கருவி ; துப்பாக்கி மருந்திடிக்கும் மரத்தண்டு .
அச்சுக்கூடம் காண்க : அச்சகம் .
அச்சுத்தாலி காசுமாலை ; வார்ப்புத் தாலி .
அச்சுத்திரட்டுதல் வண்டியச்சுச் செப்பஞ் செய்தல் .
அச்சுதம் கெடுதலின்மை ; அழிவற்றது ; அறுகும் அரிசியும் கூட்டி அணிவது ; அட்சதை .
அச்சுதன் அழிவில்லாதவன் , கடவுள் ; திருமால் ; அருகன் ; சிவன் ; முருகன் .
அங்கிநாள் கார்த்திகை நாள் ; அத்த நாள் .
அங்கிரி கால் ; மரவேர் ; மரம் .
அங்கீகரணம் காண்க : அங்கி(கீ)காரம் .
அங்கு அவ்விடம் .
அங்குசதாரி விநாயகன் .
அங்குசபாசதரன் விநாயகன் .
அங்குசபாசமேந்தி விநாயகன் .
அங்குசபாணி விநாயகன் ; காளி .
அங்குசம் யானையை அடக்கும் கருவியாகிய தோட்டி ; வாழை .
அங்குசரோசனம் கூகைக்கிழங்கின் மாவு .
அங்குசோலி அறுகம்புல் .
அங்குட்டம் பெருவிரல் ; பெருவிரலளவு ; குறளுரு .
அங்குடம் தாழக்கோல் , திறவுகோல் .
அங்குத்தை அவ்விடம் ; தாங்கள் என்னும் பொருளில் தம்பிரான்களை விளிக்கும் சொல் .
அங்குமிங்கும் பாடி இரண்டு கட்சியிலும் தொடர்பு கொண்டவன் , நம்ப இயலாதவன் .
அங்குரகம் கூடு ; பறவைகள் தங்குமிடம் .
அங்குரம் முளை ; தளிர் ; இரத்தம் ; மயிர் ; குப்பைமேனி ; நீர் ; நங்கூரம் .
அங்குரார்ப்பணம் பாலிகை தெளிக்கை , முளையிடுதல் ; தொடங்குகை .
அங்குரி விரல் .
அங்குரித்தல் முளைத்தல் ; வெளிப்படுதல் .
அங்குலம் கைவிரல் ; விரலகலம் , ஒரு விரற்கணு அளவு ; ஓரடியின் பன்னிரண்டில் ஒரு பங்கு , 2.5 சென்டிமீட்டர் .
அங்குலி விரல் ; யானைத்துதிக்கை நுனி ; மோதிரம் ; யானைக்குக் கட்டும் மணி ; ஐவிரலிச்செடி .
அங்குலிகம் விரலணி , மோதிரம் .
அங்குலியம் விரலணி , மோதிரம் .
அங்குஸ்தான் தையற்காரர் விரலிலே அணியும் கூடு , விரலுறை .
அங்கூடம் அம்பு ; கீரி ; அழகிய கூடம் .
அங்கூரம் காண்க : அங்குரம் .
அங்கே அங்கு .
அங்கை அகங்கை , உள்ளங்கை .
அங்கையில்வட்டு அடைதற்கு எளியது .
அங்கோலம் அழிஞ்சில்மரம் .
அங்ஙன் அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .
அங்ஙனம் அத்தன்மை ; அவ்விதம் ; அவ்விடம் .
அச்சகம் நூல்களை அச்சிடும் இடம் . அச்சுக்கூடம் .
அச்சகாரம் அச்சாரம் , ஆயத்தப் பணம் , முன்பணம் .
அச்சடி ஓலை முத்திரையிட்ட ஓலையாவணம் .
அச்சடித்தல் காகிதத்திலோ , துணி முதலியவற்றிலோ எழுத்துகளையும் பிறவற்றையும் பதிப்பித்தல் .
அச்சடியன் சாயப்புடைவை .
அச்சடையாளம் உடலுறுப்பு ஒப்புமை ; முத்திரையச்சு .
அச்சணம் அக்கணம் , அந்த நேரம் .
அச்சத்தி கத்தரிச்செடி .
அச்சத்திரி கத்தரிச்செடி .
அச்சந்தெளித்தல் அறுகும் அரிசியும் இடல் .
அச்சபரம் நாணல் .
அச்சபல்லம் கரடி .
அச்சம் பயம் ; மகளிர் நாற்குணத்துள் ஒன்று ; தகடு ; இலேசு ; அகத்திமரம் ; சரிசமானம் ; பளிங்கு .
அச்சமம் ஒருவகைப் புல் முயிற்றுப்புல் .
அச்சமாடல் அச்சமுண்டாகப பேசுதல் .
அச்சயன் அழிவில்லாதவன் , கடவுள் .
அச்சரம் நாக்கில் தோன்றும் ஒரு நோய் ; எழுத்து .
அச்சன் தந்தை ; கடவுள் .
அச்சனம் நெய்வார் கருவி வகையுள் ஒன்று ; வெள்ளுள்ளி .
அச்சாணி கடையாணி , ஊர்திகளின் இருசில் சக்கரம் கழலாமல் செருகப்படும் ஆணி .
அச்சாப்பொங்கா அச்சோ பெண்காள் என்பதன் மரூஉ ; மகளிர் ஆட்டவகை .
அச்சாரம் காண்க : அச்சகாரம் .
அச்சாறு ஊறுகாய் .
அச்சானம் அறியாமை .
அச்சானியம் தீக்குறி முதலியவற்றால் நேரும் மனக்கலக்கம் ; அமங்கல நினைவு .
அச்சி நாயர்குலப் பெண் ; தாசி ; ஒரு பெண்பால் விகுதி .
அச்சிநறுவிலி நறுவிலிமரம் .
அச்சியந்திரசாலை காண்க : அச்சகம் .
அங்கிடுதொடுப்பி கோள் சொல்பவன் .
அங்கிதம் உடல்மேலுள்ள தழும்பு ; அடையாளம் ; கணக்கிடப்பட்டது ; பாட்டுடைத்தலைவன் 
அசதியாடுதல் சிரித்துப்பேசுதல் ; வேடிக்கையாகப் பேசுதல் .
அசநவேதி சீரகம் .
அசப்பியம் அவைக்குப் பொருந்தாத பேச்சு .
அசப்பு பராக்கு ; அசதி .
அசபம் ' அசபா ' என்னும் ஒரு மந்திரம் .
அசபா ' அசபா ' என்னும் ஒரு மந்திரம் .
அசபாநலம் அசபையாகிய அக்கினி .
அசம் ஆடு ; மூவாண்டு பழகிய நெல் ; வெங்காயம் ; ஆன்மா ; பிறவாதது ; சந்தனம் .
அசம்பாதை படை செல்லும் வழி .
அசம்பாவிதம் நேரக்கூடாதது ; பொருத்தமற்றது .
அசம்பி காண்க : அசம்பை .
அசம்பிரேட்சிதம் ஆராய்ச்சியின்மை ; ஆராய்ந்துபாராமை .
அசம்பிரேட்சியம் ஆராய்ச்சியின்மை ; ஆராய்ந்துபாராமை .
அசம்பிரேட்சியகாரித்துவம் ஆராயாது செய்கை .
அசம்பை பயணிகளின் தோட்பை .
அசம்மதம் சம்மதமின்மை , உடன்படாமை .
அசம்மதி சம்மதமின்மை , உடன்படாமை .
அசமஞ்சன் தீயவன் .
அசமடம் ஓமம் .
அசமதாகம் ஓமம் .
அசமந்தம் மந்தகுணம் ; தொடர்பின்மை ; மலையத்தி .
அசமந்தன் சோம்பேறி .
அசமந்திபம் மலையத்தி .
அசமவாயி ஒற்றுமையில்லாதது .
அசமாருதம் அத்தி .
அசமோதம் காண்க : அசமடம் .
அசமோதகம் காண்க : அசமடம் .
அசமோதை ஓமம் ; இலவம்பிசின் .
அசர் அசறு ; தலைச்சுண்டு ; பொடுகு .
அசர்தல் தளர்ந்துபோதல் ; பிந்துதல் .
அசரம் இயங்காப்பொருள் ; அசைவில்லாதது ; நிலைத்திணை , நிலையியற்பொருள் .
அச்சுதை அழிவில்லாதவள் , பார்வதி .
அச்சுப்பலகை நெய்வார் பயன்படுத்தும் கருவி வகை .
அச்சுமரம் வண்டியில் உருள் கோக்கும் மரம் .
அச்சுரம் நெருஞ்சில் ; முருங்கை .
அச்சுருவாணி தேர் நடுவில் செறி கருவி .
அச்சுலக்கை துலாவைத் தாங்கும் கட்டை .
அச்சுறுகொழுந்தொடர் யானையின் கழுத்தில் இடும் இருப்பாணி தைத்த மரச்சட்டம் .
அச்சுறுதல் அஞ்சுதல் , பயப்படுதல் .
அச்சுறை உயிர் உறையும் உடல் .
அச்சை வேதவாக்கியம் .
அச்சோ ஒரு வியப்பு இரக்கச் சொல் ; குழந்தையை அணைத்தல் .
அசசோப்பருவம் தாய் குழந்தையை அணைக்க அழைக்கும் பருவம் .
அசக்கியம் இயலாதது , கூடாதது .
அசக்குதல் ஆட்டுதல் , அசைத்தல் .
அயக்குதல் ஆட்டுதல் , அசைத்தல் .
அசகசாந்தரம் ஆட்டுக்கும் யானைக்கும் உள்ள வேறுபாடு .
அசகண்டா தைவேளை .
அசகம் மலையாடு .
அசகரம் மலைப்பாம்பு .
அசகாயசூரன் வேறு துணை வேண்டாது பகை வரை வெல்லும் வீரன் .
அசகியம் தாங்கக்கூடாதது ; தூய்மையின்மை ; அருவருப்பு .
அசங்கதம் இகழ்ச்சி ; ஒழுங்கின்மை ; பொருத்தமில்லாதது ; பொய் .
அசங்கதி பொருத்தமின்மை ; தொடர்பின்மையணி .
அசங்கதியாடுதல் எள்ளி நகையாடல் , பரிகசித்தல .
அசங்கம் பற்றின்மை .
அசங்கமம் இகழ்ச்சி ; ஒற்றுமையின்மை ; கூடுதலின்மை ; புலவி ; கோள்கள் சூரியனுக்கு எதிராக நிற்கை .
அசங்கன் பற்றற்றவன் , ஒட்டாதவன் ; அசடன் .
அசங்கியம் அருவருப்பு ; தூய்மையின்மை ; கணக்கில்லாதது , எண்ணிறந்தது .
அசங்கியாதம் எண்ணிக்கையற்றது .
அசங்குதல் அசைதல் ; நடுங்குதல் .
அசங்கை மதிப்பின்மை ; அச்சமின்மை ; ஐயமின்மை .
அசங்கையன் ஐயமில்லாதவன் .
அசசரம் காண்க : அச்சுரம் .
அசஞ்சலம் அசைவின்மை ; நெஞ்சுரம் .
அசஞ்சலன் அசைவற்றவன் , சலியாதவன் .
அசட்டன் கீழ்மகன் , இழிந்தோன் ; குற்ற முடையவன் .
அசட்டாட்டம் புறக்கணிப்பு .
அசட்டி ஓமம் .
அசட்டை மதியாமை , பராமுகம் , புறக்கணிப்பு .
அசடன் கீழ்மகன் , சோம்பேறி , மூடன் .
அசடு குற்றம் ; கீழ்மை ; மூடத்தன்மை ; பழுது ; உலோகம் முதலியவற்றில் பெயரும் பொருக்கு .
அசத்தல் அயர்த்தல் ; மறத்தல் .
அசதி சிரித்துப் பேசுதல் ; எள்ளி நகையாடல் ; சடுதி ; சோர்வு ; மறதி ; கற்பில்லாதவள் .
அசதிக்கிளவி கிண்டல்மொழி .       
அசாரவாசி அரசனது வாயில் காப்பவன் .
அசாவாமை தளராமை .
அசாவிடுதல் இளைப்பாறுதல் .
அசாவுதல் இளைப்படைதல் ; தளர்தல் .
அசாவேரி ஒரு பண் .
அசி படைக்கலம் ; அம்பு ; வாள் ; இகழ்ச்சி நகை , ஏளனம் ; ஆன்மா .
அசிகை நகைத்துப் பேசும் பேச்சு .
அசிங்கம் தகாத பேச்சு ; அழகற்றது ; ஒழுங்கற்றது .
அசித்தம் முடிக்கப்படாதது .
அசித்தல் உண்டல் ; அழித்தல் ; சிரித்தல் .
அசித்திரன் கள்வன் .
அசித்து அறிவற்ற பொருள் , சடப்பொருள் .
அசிதம் கருமை ; சனி ; ஒரு சிவாகமம் ; வெல்லக் கூடாதது ; சிரிப்பது ; மலர்வது .
அசிதன் வெல்லற்கு அரியோன் ; சிவன் ; திருமால் ; புத்தன் ; தந்தை ; சனி .
அசிதாரு ஒரு நரகம் .
அசிதை அவுரி ; சிவசத்தியின் நால்வகைப் பிரிவுகளுள் ஒன்று .
அசிந்தம் சிந்திக்கப்படாதது ; ஒரு பேரெண் ; இறப்பு .
அசிந்திதன் சிந்திக்கப்படாதவன் ; மனத்துக்கு எட்டாதவன் .
அசிந்தியம் சிந்தைக்கு எட்டாதது ஒரு பேரெண் .
அசிப்பு ஏளனச் சிரிப்பு .
அசிபத்திரகம் கரும்பு .
அசிபதம் தத்துவமசி என்னும் பேருரையின் மூன்றாம் சொல் .
அசிர்த்தல் காண்க : அயிர்த்தல் .
அசிரத்தை அக்கறையின்மை ; கவனிப்பு இல்லாமை ; ஊக்கமின்மை .
அசிரம் உடல் ; அற்பகாலம் ; காற்று ; தவளை ; முன்றில் ; தலையற்றது , முண்டம் ; தீ .
அசிரவணம் செவிடு , காதுமந்தம் .
அசிரன் அக்கினி ; சூரியன் : கவந்தன் .
அசினம் விலங்கின் தோல் ; மானின் தோல் ; தோலிருக்கை .
அசீதி எண்பது ; ஆனி புரட்டாசி மார்கழி பங்குனி மாதங்களின் பிறப்பு .
அசீரணம் செரியாமை ; பசியின்மை ; அழிவு படாதது .
அசீரியம் அழியாதது .
அசு மூச்சு ; உயிர்வளி ; துன்பம் .
அசுக்காட்டுதல் எள்ளல் , பரிகசித்தல் .
அசுகுசுத்தல் அருவருத்தல் ; ஐயுறுதல் .
அசுகுணி செடிப்பூச்சி வகையுள் ஒன்று ; காதில் வரும் கரப்பான் .
அசுகை அருவருப்பு ; ஐயம் .
அசுசி தூய்மையின்மை , அழுக்கு ; அருவருப்பு .
அசுணம் இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .
அசுணமா இசையறியும் ஒருவகைப் புள் ; கேகயப் புள் ; ஒருவகை விலங்கு .
அசராதி கொன்றை .
அசராது கொன்றை .
அசரீரி வானொலி , ஆகாயவாணி ; சரீரமில்லாதது .
அசருதல் காண்க : அயர்தல் .
அசரை அயிரைமீன் .
அசல் முதல் ; மூலம் ; முதற்படி ; உயர்ந்தது ; அருகு ; அயல் ; கொசு ; சீலை ; பூமி .
அசல்குறிப்பு நாளேடு ; தினசரிக் குறிப்பு .
அசலக்கால் தென்றல் .
அசலகன்னிகை மலைமகள் , உமாதேவி .
அசலம் அசைவின்மை ; அசையாநிலை ; அசையாதது ; பூமி ; மலை .
அசலலிங்கம் வழிபாட்டிற்குரிய கோபுரம் முதலியவை .
அசலன் அசைவில்லாதவன் , கடவுள் .
அசலிடுதல் எல்லை கடத்தல் .
அசலை அசையாதது ; உமாதேவி ; நிலம் ; மீன் வகை .
அசவல் அசறு ; சேறு ; கொசு .
அசவாகனன் ஆட்டை ஊர்தியாக உடையவன் , அக்கினிதேவன் .
அசற்காரியவாதம் உற்பத்திக்கு மூலம் இல்லாமலே காரியம் தோன்றும் என்னும் கொள்கை .
அசற்சரக்கு முதல் தரமான பண்டம் , கலப்பற்ற பண்டம் .
அசற்பிரதி மூலப்படி .
அசறு அசர் ; ஒருவகைச் செடிப்பூச்சி ; ஆட்டுச் சொறி ; சேறு .
அசறுபாய்தல் அசும்பொழுகுதல் ; பொசிந்து பரவுதல் .
அசன் பிறப்பிலி , கடவுள் .
அசனசாலை உணவுவிடுதி .
அசனம் சோறு ; உணவு ; பகுதி ; அளவு ; சிரிப்பு ; வேங்கைமரம் ; வெள்ளுள்ளி .
அசனவேதி சீரகம் ; உணவைச் செரிக்கச் செய்வது .
அசனி இடி ; வச்சிரப்படை ; சாம்பிராணி இலை ; தீச்சட்டி .
அசனிபாதம் இடியின் வீழ்ச்சி .
அசா தளர்ச்சி ; வருத்தம் துயர் .
அசாக்கிரதை விழிப்பின்மை , கவனக்குறைவு , சோம்பல் .
அசாகளத்தனம் ஆட்டின் கழுத்தில் தொங்கும் தசை .
அசாசி கருஞ்சீரகம் .
அசாணிமூலி வேலிப்பருத்தி .
அசாதசத்துரு பகைவரால் வெவ்லப்படாதவன் ; வம்புதும்பற்றவன் ; தருமபுத்திரன் ; புத்தர் காலத்திலிருந்த ஓர் அரசன் .
அசாதாரணம் பொதுவின்மை , சிறப்பு .
அசாயசூரன் காண்க : அசகாயசூரன் .
அசாரம் சாரமற்றது ; ஆமணக்கு ; அரசவை மண்டபம்
அஞ்சலர் பகைவர் .
அஞ்சலார் தபால்காரர் .
அஞ்சலி வணக்கம் , கும்பிடுகை ; வௌவால் ; காட்டுப்பலா ; ஆடுதின்னாப்பாளை ; சங்கங் குப்பி .
அஞ்சலிகை வௌவால் .
அஞ்சலித்தல் கைகூப்பித் தொழுதல் .
அசுரமணம் எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் .
அசுரமந்திரி காண்க : அசுரகுரு .
அசுரர் அவுணர் , நிசிசரர் , தேவர்களின் பகைவர் , இராக்கதர் ; பதினெண்கணத்துள் ஒரு பிரிவினர் .
அசுரவாத்தியம் முரசு முதலிய பேரொலி எழுப்பும் இசைக்கருவி .
அசுரவைத்தியம் அறுவைச் சிகிச்சை .
அசுரை இராசி ; இருள் ; பொதுமகள் ; அரக்கியர் .
அசுவகதி குதிரை நடை ; அவை : மல்லகதி , மயூரகதி , வானரகதி , சசகதி , சரகதி .
அசுவகந்தி அமுக்கிரா என்னும் ஒரு மருந்துச் செடி .
அசுவத்தம் அரசமரம் ; அத்திமரம் .
அசுவத்தை நெட்டிலிங்கம் ; நெடுநாரை .
அசுவதாட்டி குதிரையின் வேகம் ; தங்குதடையின்மை .
அசுவதாட்டியாதல் பேச்சு முதலியன தட்டுத் தடையில்லாமை .
அசுவதி காண்க : அசுவினி .
அசுவம் குதிரை ; தூய்மையற்றது ; அமுக்கிராக் கிழங்கு .
அசுவமேதம் குதிரையைக்கொண்டு நடத்தும் ஒரு வேள்வி .
அசுவவாரியர் குதிரையைச் செலுத்துவோர் .
அசுவாமணக்கு சிறுபூளை ; நடைவழியில் முளைக்கும் ஒருவகைப் பூடு .
அசுவினி இருபத்தேழு விண்மீன்களுள் முதலாவது .
அசுவினிதேவர் இரட்டையராயிருக்கும் தேவ மருத்துவர் .
அசுவுணி செடிப்பூச்சிவகை .
அசுழம் நாய் .
அசூயை பொறாமை ; அவதூறு .
அசூர் சமுகம் , முன்னிலை .
அசேடம் மிச்சம் இல்லாமை ; முழுவதும் .
அசேதனம் அறிவின்மை ; அறிவில்லாதது .
அசை செய்யுள் உறுப்புகளுள் ஒன்று ; இசைப் பிரிவு ; ஆடுமாடுகள் மீட்டு மெல்லும் இரை ; அசைநிலை ; செயலறவு ; சுவடித்தூக்கு ; தொங்கு தூக்கு .
அசை (வி) அசை என்னும் ஏவல் ; ஆட்டு ; தூக்கு ; மெல்லப்போ .
அசைகொம்பு கட்டுகொம்பு .
அசைச்சீர் ஓரசைச் சீர் .
அசைச்சொல் சார்ந்து வரும் இடைச்சொல் .
அசைத்தல் ஆட்டுதல் ; கட்டுதல் ; சொல்லுதல் ; இயக்குதல் ; வருத்துதல் .
அசைதல் ஆடுதல் ; உலாவுதல் ; இயங்குதல் ; கலங்குதல் ; வருந்தல் ; பிணித்தல் ; கிளைத்தல் ; சோம்புதல் ; இருத்தல் ; இளைப்பாறுதல் ; தளர்தல் ; ஓய்தல் .
அசைதன்னியம் அறிவில்லாதது ; ஞானக்குருடு .
அசைநிலை காண்க : அசைச்சொல் .
அசைநிலையளபெடை அசைகொள்வதற்காக அமைத்த அளபெடை .
அசைப்பு அசைத்தல் ; சொல் ; இறுமாப்பு .
அசைபோடல் ஆடுமாடு முதலியவை விழுங்கிய இரையை மீட்டு மெல்லுதல் ; மீட்டும் நினைத்தல் ; மெல்ல மெல்ல நடத்தல் .
அசையடி கலிப்பாவின் உறுப்புகளுள் ஒன்றான அம்போதரங்கம் .
அசையாப்பொருள் நிலையியற் பொருள் , தாவரம் .
அசையாமணி ஆராய்ச்சி மணி , முக்கியமான வேளைகளில் அடிக்கும் மணி .
அசையும்பொருள் இயங்கியற் பொருள் , சங்கமம் .
அசைவு ஆட்டம் ; சலனம் , அசைதல் ; சஞ்சலம் ; சோர்வு , தளர்வு ; வருத்தம் ; உண்கை .
அசைவுசெய்தல் உண்ணுதல் .
அசோகம் அசோக மரம் , பிண்டி மரம் , நெட்டிலிங்கம் ; மன்மதன் ஐங்கணையுள் ஒன்று ; மருது ; வாழை துயரமின்மை .
அசோகன் அருகன் ; மன்மதன் ; துயரற்றவன் ; ஒரு மன்னன் .
அசோகு காண்க : அசோகம் .
அசோண்டி குறட்டை .
அஞ்சதி காற்று .
அஞ்சப்படுதல் மதிக்கப்படுதல் .
அஞ்சம் அன்னப்பறவை ; அசபா மந்திரம் ; ஒருவகைச் சன்னியாசம் .
அஞ்சல் அஞ்சுதல் , கலங்கல் , மருளல் ; தோல்வி ; தபால் .
அஞ்சலகம் தபால் நிலையம் .
அசுணன் வெள்ளை வெங்காயம் .
அசுத்ததத்துவம் தத்துவவகை மூன்றனுள் ஒன்று .
அசுத்தப்பிரபஞ்சம் கலாதத்துவம் முதல் பிருதிவிதத்துவம் ஈறாகிய தத்துவம் .
அசுத்தமாயை அசுத்தப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமான மாயை .
அசுத்தி தூய்மையின்மை , அழுக்கு ; ஆணவமலம் .
அசுத்தை அழுக்குடையவள் .
அசுப்பு சடுதி , விரைவு .
அசுபக்கிரகம் தீக்கோள் .
அசுபகக்கிரியை இறந்தார்க்குச் செய்யும் சடங்கு .
அசும்பு கிணறு ; சேறு ; நீர்ப்பொசிவு ; சிறுதிவலை ; வழுக்குநிலம் ; அசைவு ; ஒளிக்கசிவு ; பற்று ; குற்றம் ; களை .
அசும்புதல் நீர் ஊறுதல் .
அசுமம் இடியேறு ; கல் ; தீத்தட்டிக்கல் ; முகில் ; மணமற்ற மலர் .
அசுமாற்றம் சாடை ; ஐயம் .
அசுமானகிரி மேற்கட்டி ; பந்தலின் மேலே கட்டப்படும் துணி விதானம் முதலியன .
அசுரகுரு அசுரர்களின் ஆசிரியனான சுக்கிரன் .
அசுரசந்தி அந்திப்பொழுது ; இரணிய வேளை .
அசுரநாள் மூலநாள் .
அசுரம் எண்வகை மணங்களுள் வில்லேற்றுதல் , ஏறு தழுவுதல் முதலிய வீரச்செயல் புரிந்து செய்துகொள்ளும் மணம் 
அட்சம் உருத்திராக்கம் ; கண் ; பூகோள இடக்கணக்கு .
அட்சய அறுபதாண்டுக் கணக்கில் இறுதி ஆண்டு .
அட்சயதூணி அம்பு குறைவின்றி இருக்கும் உறை ; அருச்சுனன் அம்புக் கூடு .
அட்சயபாத்திரம் இரக்கும் கலன் ; அள்ள அள்ளக் குறையாத உணவுக்கலம் .
அட்சயம் கேடின்மை , அழியாத் தன்மை .
அட்சயன் அழிவற்றவன் , அமரன் , கடவுள் .
அட்சரகணிதம் இயற்கணிதம் ; எண்களுக்கப் பதிலாகக் குறியீடுகளை வழங்கும் கணக்கு முறை .
அட்சரசுத்தி எழுத்துத் திருத்தம் ; ஒலிப்புத் திருத்தம் .
அட்சரதேவி கலைமகள் .
அட்சரம் காண்க : அக்கரம் .
அட்சரன் காண்க : அக்கரன் .
அட்சராப்பியாசம் எழுத்துப் பயில்விக்கும் சடங்கு ; கல்வி கற்கத் தொடங்கல் .
அட்சராரம்பம் எழுத்துப் பயில்விக்கும் சடங்கு ; கல்வி கற்கத் தொடங்கல் .
அட்சாம்சம் பூகோள இடக்கணக்கைப் பற்றிய பகுதி .
அட்சி கண் ; கண்ணுடையாள் .
அட்டக்கரி மிகவும் கறுப்பு .
அட்டக்கறுப்பு மிகவும் கறுப்பு .
அட்டகம் எட்டன் கூட்டம் , எட்டன் தொகுதி கொண்டது ; சிற்றிலக்கியங்களுள் ஒன்று .
அட்டகருமக்கரு மாயவித்தைக் கூட்டுச்சரக்குகள் .
அட்டகாசம் பெருஞ்சிரிப்பு ; ஆரவாரம் ; ஆர்ப்பாட்டம் .
அட்டகிரி எட்டுமலைகள் ; அவை : இமயம் , மந்தரம் கயிலை , விந்தம் , நிடதம் , ஏமகூடம் , நீலம் , கந்தமாதனம் .
அஞ்சலினவர் பாஞ்சராத்திர மதத்தவர் .
அஞ்சளித்தல் ஆதரவு தருதல் , அடைக்கலங் கொடுத்தல் .
அஞ்சற்குளச்சி நச்சுப்பொருள்வகையுள் ஒன்று ; குங்கம பாடாணம் .
அஞ்சறைப்பெட்டி ஐந்து அறைகளை உடைய பெட்டி ; கறிப்பொருள் வைக்கும் அறைப் பெட்டி .
அஞ்சன் மன்மதன் ; திருமால் ; உயர்ந்தோன் ; பரமான்மா .
அஞ்சனக்கலிக்கம் மறைபொருளைக் காட்டும் மந்திர மை .
அஞ்சனக்காரன் மந்திரக்காரன் ; மந்திர மையிடுவோன் .
அஞ்சனத்திரயம் மறைபொருளைக் காட்டும் ஆற்றல் வாய்ந்த பூதாஞ்சனம் , சோராஞ்சனம் , பாதாளஞ்சனம் என்னும் மூவகை மைகள் .
அஞ்சனதார் காண்க : அஞ்சனாதார் .
அஞ்சனம் மை ; கண்ணுக்கிடும் மை ; கறுப்பு ; இருள் ; ஆணவமலம் ; திசையானை எட்டனுள் மேற்றிசையானை .
அஞ்சனவண்ணன் கருநிறத்தன் ; திருமால் .
அஞ்சனவித்தை மறைந்த பொருளை மையிட்டுக் காண்பிப்பது .
அஞ்சனவெற்பு திருவேங்கடமலை .
அஞ்சனா விளைச்சல் மதிப்பீடு .
அஞ்சனாதார் விளைச்சலை மதிப்பிடுபவர் .
அஞ்சனாவதி வடகீழ்த்திசை யானைக்குப் பெண்யானை .
அஞ்சனி காயாமரம் ; நாணற்புல் .
அஞ்சனை அனுமன் தாய் ; வடதிசை யானைக்குப் பெண்யானை .
அஞ்சாமை பயப்படாமை , திண்மை .
அஞ்சாரப்பெட்டி காண்க : அஞ்சறைப்பெட்டி .
அஞ்சி தபால் ; அதியமான் நெடுமான் அஞ்சி ; தலைவன் .
அஞ்சிக்கை அச்சம் .
அஞ்சிகம் கண் , விழி , நாணயம் .
அஞ்சித்தல் பூசை புரிதல் ; அடைதல் .
அஞ்சிதம் உண்டாதல் ; தலை சாய்த்தல் ; நல்லறிவு ; பூசித்தல் ; பொருந்தல் ; வணக்கம் .
அஞ்சிதமுகம் வருத்தம் பொறாது இருதோள் மீது தலை சாய்த்தல் .
அஞ்சில் அழகிய தகட்டு வடிவான பொன் அணிகலன் .
அஞ்சிலோதி அழகிய சிலவாகிய கூந்தல் .
அஞ்சு ஐந்து ; அச்சம் ; ஒளி .
அஞ்சுகம் கிளி .
அஞ்சுதகுதல் அச்சமுண்டாதல் .
அஞ்சுதல் பயப்படுதல் .
அஞ்சுபதம் காண்க : அஞ்செழுத்து .
அஞ்சுபயம் குடிகளுக்கு அரசனாலும் , அவன் உறவினராலும் பகைவராலும் திருடராலும் , விலங்கு முதலிய உயிர்களாலும் உண்டாகும் ஐவகை அச்சம் ,
அஞ்சுமாலி சூரியன் .
அஞ்சுமான் சூரியன் .
அஞ்சுருவாணி காண்க : அச்சாணி .
அஞ்சுவர்ணத்தோன் துத்தநாகம் ; ஐந்துவகையான நிறங்கொண்டவன் .
அஞ்செவி அகஞ்செவி , உட்செவி ; அழகியகாது .
அஞ்செழுத்து பஞ்சாக்கரம் , ' நமசிவாய ' என்னும் ஐந்தெழுத்து மந்திரம் .
அஞ்ஞதை அறியாமை .
அஞ்ஞன் அறிவில்லாதவன் .
அஞ்ஞாதசுகிருதம் தன்னை அறியாமல் வந்த புணணியம் .
அஞ்ஞாதம் பிறர் அறியாமை , மறைவு , அறியப்படாதது .
அஞ்ஞாதவாசம் பிறிர் அறியாமல் மறைந்து வாழ்தல் .
அஞ்ஞானம் அறிவின்மை ; ஆணவமலம் .
அஞ்ஞானி அறிவிலி .
அஞ்ஞை அன்னை , தாய் , அறிவில்லான் .
அஞர் துன்பம் ; நோய் ; சோம்பல் ; வழுக்கு நிலம் ; அறிவிலார் .
அஞல் கொசு ; மின்மினி ; நுளம்பு .
அஞலம் கொசு ; மின்மினி ; நுளம்பு .
அஞன் காண்க : அஞ்ஞன் .
அட்கெனல் கடிய ஓசைக் குறிப்பு .
அட்சதை அக்கதை ; மங்கலவரிசி , அறுகரிசி ; வாழ்த்தப் பயன்படும் மஞ்சளரிசி .       
அட்டு பனாட்டு , பனைவெல்லம் ; சமைக்கப்பட்டது .
அட்டுதல் அழித்தல் ; குற்றுதல் ; இடுதல் ; அள்ளுதல் ; எடுத்தல் ; வடிதல் ; வடித்தல் ; சமைத்தல் ; வார்த்தல் ; சொரிதல் ; சுவைத்தல் ; செலுத்துதல் ; தான சாசனம் அளித்தல் .
அட்டுப்பு காய்ச்சப்பட்ட உப்பு .
அட்டும் ' வரட்டும் ' என்றாற்போல வரும் ஒரு வியங்கோள் விகுதி .
அட்டூழியம் தகாதசெய்கை ; தீம்பு , கொடுமை .
அட்டை நீர்வாழ் உயிர்களுள் ஒன்று ; செருப்பினடி ; காகித அட்டை ; மிகுகனமுள்ள தாள் ; புத்தக மேலுறை .
அட்டையாடல் உடல் துண்டிக்கப்பட்டாலும் அட்டைபோல வீரனின் உடல் வீரச் செயல் காட்டி ஆடுதல் .
அட்டோலகம் உல்லாசம் ; பகட்டு .
அடக்கம் மனமொழிமெய்கள் அடங்குகை ; கீழ்ப்படிவு ; பணிவு ; அடங்கிய பொருள் ; மறை பொருள் ; கொள்முதல் ; பிணம் அடக்கம் செய்தல் .
அடக்கம்பண்ணுதல் உள்ளடக்கி வைத்தல் , மறைத்தல் சேமஞ்செய்தல் ; புதைத்தல் ; பிணம் முதலியவற்றைப் புதைத்தல் .
அடக்கல் மறைத்தல் ; கீழ்ப்படுத்துதல் ; உட்படுத்துதல் ; ஒடுக்கல் ; பணியச் செய்தல் .
அடக்கியல்வாரம் சிலவகைக் கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் என்னும் உறுப்பு .
அடக்குமுறை அடக்கியாளும் முறை ; கண்டித்து அடக்குகை .
அடகு இலை ; இலைக்கறி , கீரை ; ஈட்டுப் பொருள் ; கொதுவை ; மகளிர் விளையாட்டு வகை .
அடங்கல் எல்லாம் முழுதும் ; தங்குமிடம் ; பயிர்செய்கைக் கணக்கு ; செய்யத்தக்கது .
அடங்கல்முறை முதல் ஏழு தேவாரத் திருமுறைகளைக் கொண்ட நூல் ; சம்பந்தர் , அப்பர் , சுந்தரர் என்னும் மூவர் பாடிய பக்திப்பாடல்கள் .
அடங்கலன் அடங்காதவன் ; பகைவன் ; மனமடக்க மற்றவன் .
அட்டமி எட்டாம் நாள் .
அட்டமூர்த்தம் சிவனின் எட்டுவகை வடிவம் ; அவை : நிலம் , நீர் , தீ , காற்று , வான் , சூரியன் , சந்திரன் , இயமானன் .
அட்டயோகம் எட்டுவகை யோகநிலை ; அவை இயமம் , நியமம் , ஆதனம் , பிராணாயாமம் , பிரத்தியாகாரம் , தாரணை , தியானம் , சமாதி .
அட்டரக்கு உருக்கிய அரக்கு .
அட்டல் அழித்தல் ; காய்ச்சுதல் ; வார்த்தல் .
அட்டலக்குமி எட்டு இலக்குமி ; அவர்களாவார் ; தனலக்குமி , தானியலக்குமி , தைரியலக்குமி , சௌரியலக்குமி , வித்தியாலக்குமி , கீர்த்திலக்குமி , விசயலக்குமி , இராச்சியலககுமி .
அட்டலோககற்பம் பொன் , வெள்ளி , செம்பு , இரும்பு , வெண்கலம் , தரா , வங்கம் , துத்தநாகம் என்னும் எட்டு உலோகங்கள் சேர்ந்த கலவைப் பொடி .
அட்டவசுக்கள் தேவதைகளுள் ஒரு பிரிவினரான எட்டு வசுக்கள் ; அவர்களாவார் ; அனலன் , அனிலன் , ஆபன் , சோமன் , தரன் , துருவன் , துருவன் பிரத்தியூடன் , பிரபாசன் .
அட்டவணை வரிசைக் குறிப்பு , தொகுத்துச் சேர்க்கப்பட்டது , பொருட்குறிப்பு .
அட்டவணைக்கணக்கன் அட்டவணைக்காரன் , பேரேடு எழுதும் கணக்கன் .
அட்டவணைச்சாலை கணக்குவேலை பார்க்கும் இடம் .
அட்டவணைப்பிள்ளை காண்க : அட்டவணைக் கணக்கன் .
அட்டவிஞ்சதி இருபத்தெட்டு .
அட்டவிகாரம் காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் , இடும்பை , அசூயை என்னும் எண்வகைத் தீக்குணங்கள் .
அட்டவீரட்டம் சிவபெருமான் வீரம் வெளிப்படுத்திய எட்டு இடங்கள் ; அவை : கண்டியூர் , கடவூர் , அதிகை , வழுவூர் , பறியலூர் , கோவலூர் , குறுக்கை , விற்குடி .
அட்டவெற்றி வெட்சி , கரந்தை , வஞ்சி , காஞ்சி , நொச்சி , உழிஞை , தும்பை , வாகை எனப்படும் எண்வகைப் போர் வெற்றி .
அட்டன் எண்வகை மூர்த்தியான சிவபெருமான் .
அட்டனம் சக்கராயுதம் .
அட்டாக்கரம் திருமாலை வழிபடும் ' ஓம் நமோ நாராயண ' என்னும் எட்டெழுத்து மந்திரம் .
அட்டாங்கம் எண்வகை உறுப்பு ; அவை : இருகால் , இருகை , இருதோள் , மார்பு , நெற்றி .
அட்டாணி கோட்டை மதில்மேல் மண்டபம் .
அட்டாதுட்டி மிக்க துடுக்குத்தனம் ; அடாவடி , தாறுமாறு ; குறும்பு .
அட்டாலகம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாளகம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாலம் கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டலிகை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டளிகை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாலை கோட்டை மதில்மேலுள்ள காவற்கூடம் ; மேல்மாடி மேல்வீடு .
அட்டாவதானம் ஒரே வேளையில் எட்டுச் செயல்களில் கவனம் செலுத்துகை .
அட்டாவதானி ஒரே சமயத்தில் எண்வகை நினைவாற்றல் உள்ளவன் .
அட்டாளை ஒரு மரம் .
அட்டி அதிமதுரம் ; செஞ்சந்தனம் ; எட்டி ; பருப்பு ; தாமதம் ; தடை ; கப்பலின் பின்பக்கம் ; பீப்பாயின் மேல் கீழ்ப் பக்கம் .
அட்டி (வி) இட்டு , தடைந்து .
அட்டிகை மகளிர் கழுத்தணிவகை .
அட்டிப்பேறு தான சாசனத்தால் கொடுக்கப் பட்ட உரிமை .
அட்டிமை ஓமம் ; சீரகம் .
அட்டியல் காண்க : அட்டிகை .
அட்டில் சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை .
அட்டிற்சாலை சமையலறை , அடுக்களை , மடைப்பள்ளி , வேள்விச் சாலை .
அட்டகுணம் காண்க : எண்குணம் .
அட்டசித்தி காண்க : அட்டமாசித்தி .
அட்டணங்கால் காண்க : அட்டணைக்கால் .
அட்டணை குறுக்கு , மடித்தல் .
அட்டணைக்கால் மடித்த கால் ; குறுக்காக மடக்கி வைக்கும் கால் ; கால்மேலிடும் கால் .
அட்டதாது எண்வகை உலோகம் .
அட்டதிக்கயம் எட்டுத் திக்கு யானை .
அட்டதிக்கு எண்திசை ; அவை : கிழக்கு , தென்கிழக்கு , தெற்கு , தென்மேற்கு , மேற்கு , வடமேற்கு , வடக்கு , வடகிழக்கு .
அட்டதிக்குப்பாலகர் எட்டுத்திக்குக் காவலர் ; அவராவார் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் .
அட்டநேமிநாதர் பொன்னெயில் வட்டத்தில் இருக்கும் சமணப் பெரியோர் .
அட்டபந்தம் கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
அட்டபந்தனம் கற்சிலைகளைப் பீடத்துடன் அசைவின்றி இருக்கப் பயன்படும் கூட்டுச் சாந்து ; தீங்கு வாராமல் தடுக்கத் திக்குத் தேவதைகளை மந்திரத்தால் எட்டுத் திசைகளிலும் நிறுத்துகை .
அட்டபரிசம் எட்டுவகைத் தொடுகை முறை ; அவை : தட்டல் , பற்றல் , தடவல் , தீண்டல் , குத்தல் , வெட்டல் , கட்டல் , ஊன்றல் .
அட்டபாதம் எண்காற் பறவை .
அட்டபுட்பம் எட்டுவகைப் பூ ; அவை : புன்னை , வெள்ளெருக்கு , சண்பகம் , நந்தியாவட்டம் , குலளை , பாதிரி , அலரி , செந்தாமரை .
அட்டம் எட்டு ; குறுக்கு ; அருகிடம் ; அண்மை ; பக்கம் ; மேல்வீடு ; நேர் ; சாதிக்காய் ; பகை .
அட்டமங்கலம் எட்டுவகை மங்கலப் பொருள் ; அவை : கவரி , நிறைகுடம் , கண்ணாடி , தோட்டி , முரசு , விளக்கு , கொடி , இணைக்கயல் , நூல்வகைகளுள் ஒன்று .
அட்டமம் எட்டாவது .
அட்டமாசித்தி எண்வகைச் சித்திகள் ; அவை : அணிமா , மகிமா , கரிமா , இலகிமா , பிராத்தி , பிராகாமியம் , ஈசத்துவம் , வசித்துவம் .
அடலார் பகைவர் ; போர்வீரர் .
அடலி அடுக்களை வேலை பார்க்கும் ஏவற் பெண் .
அடலை சாம்பல் ; திருநீறு ; துன்பம் ; சுடுபாடு ; போர் ; போர்க்களம் .
அடலைமுடலை வீண்பேச்சு .
அடவாதி பிடிவாதக்காரன் ; தீராப் பகையுள்ளவன் .
அடவி காடு ; சோலை ; நந்தவனம் ; திரள் , கூட்டம் தொகுதி .
அடவிக்கொல் காண்க : கோரோசனை .
அடவிச்சொல் காண்க : கோரோசனை .
அடவியில்திருடி சதுரக்கள்ளி .
அடா இகழ்ச்சி வியப்புகளின் குறிப்பு .
அடாசு மட்கின பொருள் .
அடாசுதல் விலகுதல் ; திணித்தல் .
அடாணா ஒரு பண்வகை .
அடாத்தியம் அடாதது ; பொருந்தாதது ; முறையற்றது .
அடாதது தகாதது , பொருந்தாதது ; சமைக்கப்படாதது .
அடாது தகாதது , பொருந்தாதது ; சமைக்கப்படாதது .
அடாதுடி தீம்பு , தீச்செயல் .
அடாநிந்தை ஆதாரமற்ற பழிச்சொல் ; பொறுக்கக்கூடாத பழிச்சொல் .
அடாநெறி தகாத வழி .
அடாப்பழி தகாத நிந்தை .
அடார் விலங்குகளை அகப்படுத்தும் பொறி ; ஒருவகைப் பொறி ; தரிசு .
அடார்வெளி தரிசுநிலம் .
அடாவடி கொடுஞ்செயல் .
அடாவந்தி அநியாயம் , இட்டேற்றம் , துன்பம் .
அடாற்காரம் வலாற்காரம் .
அடி பாதம் ; காற்சுவடு ; முதல் ; கடவுள் ; பாட்டின் அடி ; அடிப்பீடம் ; அண்மை ; மரபு வழி ; அளவு ; கீழ் ; மகடூஉ முன்னிலை .
அடி (வி) அடி என் ஏவல் ; புடை ; தாக்கு ; வீசு ; மோது ; கொல்லு .
அடிக்கட்டை வெட்டிய மரத்தின் அடி ; பாய் மரத்தின் அடிப்பகுதி .
அடிக்கடி பலமுறை ; திரும்பத்திரும்ப ; மறுபடியும் மறுபடியும் ; அடிபெயர்க்குந்தோறும் .
அடிக்கணை கணைக்கால் .
அடிக்கயில் தேங்காயின் அடிப்பாகம் .
அடிக்கலம் சிலம்பு , காலணி ; கப்பல் தளம் .
அடிக்கழஞ்சுபெறுதல் பெருமதிப்புப் பெறுதல் .
அடிக்கீழ் அடியுறை மாக்கள் ; வணக்கமொழி ; ஆதரவின்கீழ் .
அடிக்குச்சி குச்சியின் அடிப்பகுதி அளவுகோல் .
அடிக்குடி அடிமைக்குலம் ; அடிச்சேரி ; பணியாளர் இருப்பிடம் ; வேடர் இருக்கும் ஊர் ; நகர்ப்புறம் ; சிற்றூர் .
அடிக்குல் அடிமைக்குலம் ; அடிச்சேரி ; பணியாளர் இருப்பிடம் ; வேடர் இருக்கும் ஊர் ; நகர்ப்புறம் ; சிற்றூர் .
அடிக்குள் உடனே ; அருகில் .
அடிக்கொருகால் அடிக்கடி .
அடிக்கொள்ளுதல் தோன்றுதல் ; தொடங்குதல் .
அடிக்கோல் காண்க : அடிக்குச்சி .
அடிகள் கடவுள் ; தலைவி ; மூத்தோன் ; பெரியோர் பெயருடன் வழங்கும் மொழி ; முனிவர் ; சுவாமி ; குரு ; பெருமாட்டி .
அடிகாரன் உணவுக்காகக் கால்நடைகளைக் கொல்பவன் ; சிலம்பம் வீசுவோன் .
அடிகாற்று பெருங்காற்று , சண்டமாருதம் .
அடிகோலுதல் தொடங்குதல் ; முயலுதல் ; அடிப்படையிடுதல் .
அடிச்சால் உழவின் முதற்சால் .
அடிச்சி அடியவள் ; அடிமைப்பெண் , குற்றேவல் மகள் ; வேலைக்காரி .
அடங்கலும் அனைத்தும் , முழுதும் ; எல்லோரும் .
அடங்காப்பிடாரி எவர்க்கும் அடங்காதவள் .
அடங்காவாரிதி கடலுப்பு ; மூத்திரம் .
அடங்குதல் அமைதல் ; நெருங்குதல் ; கிடத்தல் ; கீழ்ப்படிதல் ; சுருங்குதல் ; நின்றுபோதல் ; படிதல் ; மறைதல் ; புலன் ஒடுங்குதல் ; உறங்குதல் ; சினையாதல் .
அடசுதல் செறிதல் ; சிறிது விலகுதல் .
அடஞ்சாதித்தல் வன்மங்கொள்ளுதல் .
அடடா வியப்புக்குறிப்பு ; இகழ்ச்சிக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு .
அடத்தி வாசி , வட்டமாகக் கழிக்கும் காசு ; தரகு ; மொத்த வணிகம் .
அடதாளம் ஏழுவகைத் தாளங்களுள் ஒன்று .
அடப்பங்கொடி கொடிவகை .
அடப்பம் காண்க : அடைப்பம் .
அடப்பம்விதை வாதுமைப பருப்பு .
அடப்பன் பரவர் பட்டப்பெயர் .
அடப்பனார் பரவர் பட்டப்பெயர் .
அடம் ஈனம் ; சஞ்சாரம் ; பொல்லாங்கு ; பிடிவாதம் ; கொட்டைப்பாசி .
அடம்பு அடப்பங்கொடி ; கடம்பு ; கொன்றை .
அடயோகம் நால்வகை யோகங்களுள் ஒன்று .
அடர் தகடு ; தகட்டு வடிவம் ; நெருக்குகை ; செறிவு , நெருக்கம் ; பூவிதழ் .
அடர்த்தல் நெருக்குதல் ; அமுக்குதல் வருத்துதல் ; போர் புரிதல் ; தாக்குதல் ; கொல்லுதல் ; கெடுத்தல் .
அடர்த்தி நெருக்கம் , செறிவு .
அடர்தல் மிகுதல் ; செறிதல் ; நெருங்கல் ; வருந்தல் ; பொருதல் ; துன்புறுதல் ; தட்டி உருவாக்குதல் .
அடர்ப்பம் காண்க : அடர்த்தி .
அடர்பு காண்க : அடர்த்தி .
அடர்வு காண்க : அடர்த்தி .
அடர்மை நொய்ம்மை .
அடரடிபடரடி பெருங்குழப்பம் .
அடல் வலிமை ; வெற்றி ; போர் ; கொலை ; பகை ; மீன்வகை .
அடலம் மாறாமை ; விகாரமடையாமை . 
அடிப்பிச்சை முதலில் பெறும் பிச்சை ; பிச்சைக்குப் போவோர் கலத்தில் இட்டுக்கொள்ளும் பொருள் ; சிறு மூலதனம் .
அடிப்பிடித்தல் அடிச்சுவட்டைக்கண்டுபிடித்தல் ; முதலிலிருந்து தொடங்குதல் ; பின்தொடர்தல் ; காலைப் பிடித்து வேண்டுதல் ; குறிப்பறிதல் ; துப்பறிதல் ; கறி முதலியன பாண்டத்தில் பற்றுதல் .
அடிப்பிரதட்சிணம் அடியடியாய்ச் சென்று கோயிலை வலம்வருகை .
அடிப்புக்கூலி கதிரடிக்கும் கூலி .
அடிப்போடுதல் தொடங்குதல் .
அடிபடுதல் தாக்குண்ணுதல் , அடிக்கப்படுதல் ; நீக்கப்படுதல் ; பழைமையாதல் ; வழங்குதல் , எட்டுதல் .
அடிபணிதல் காலில் விழுந்து வணங்குதல் , தண்டனிடுதல் .
அடிபறிதல் வேரோடு பெயர்தல் .
அடிபாடு மாடு முதலியவற்றின் உழைப்பு .
அடிபார்த்தல் நிழலை அளந்து பொழுது காணல் ; ஏற்றசமயம் நோக்குதல் .
அடிபிடி சண்டை .
அடிபிழைத்தல் நெறிதவறி நடத்தல் ; பெரியவர்களுககுத் தவறு செய்தல் .
அடிபிறக்கிடுதல் பின்வாங்குதல் ; புறங்காட்டுதல் , தோல்வியுறல் .
அடிபுதையரணம் செருப்பு , மிதியடி .
அடிபெயர்த்தல் காலை நகர்த்தி வைத்தல் ; விலகுதல் .
அடிமடக்கு பொருள் வேறுபட்டோ படாமலோ செய்யுளின் அடி மீண்டும்மீண்டும் வருதல் .
அடிமடி உள்மடி ; ஆடையின் உள்மடிப்பு .
அடிமடை முதல்மடை .
அடிசிற்சாலை அன்னசத்திரம் ; மடைப்பள்ளி .
அடிசிற்பள்ளி அன்னசத்திரம் ; மடைப்பள்ளி .
அடிசிற்றளி அன்னசத்திரம் ; மடைப் பள்ளி .
அடிசிற்புறம் உணவுக்காக விடப்பட்ட இறையிலி நிலம் .
அடிஞானம் முத்திக்குரிய ஞானம் ; சிவஞானம் .
அடித்தடம் காண்க : அடிச்சுவடு .
அடித்தல் புடைத்தல் ; தாக்குதல் ; ஆணி முதலியன அறைதல் ; முத்திரையிடல் ; தண்டித்தல் ; வீசுதல் ; சிறகடித்தல் ; துடித்தல் ; விளையாடுதல் .
அடித்தலம் கீழிடம் ; கால் ; அடிப்படை .
அடித்தழும்பு அடிபட்ட தழும்பு ; காற்சுவடு .
அடித்தளம் அடிமட்டம் ; அடிவரிசை ; கீழ்ப்படை ; பின்னணி .
அடித்தாறு அடிச்சுவடு ; காலடி இரேகை .
அடித்தி காண்க : அடிச்சி ; வணிகப் பேராளர் .
அடித்திப்பை ஆதாரம் .
அடித்திவியாபாரம் மொத்த வணிகம் .
அடித்துக்கொண்டு போதல் வாரிக்கொண்டு போதல் ; கொள்ளையிட்டுப் போதல் .
அடித்துக்கொள்ளுதல் அறைந்துகொள்ளுதல் ; சண்டையிடுதல் .
அடித்துகளாற்றல் காலைத் தூய்மைசெய்தல் ; விருந்தோம்பும் முறையில் ஒன்று ; கால் அலம்ப நீர் உதவுதல் .
அடித்தூறு மரத்தின் அடிக்கட்டை ; மரத்தின் வேர்ப்பகுதி .
அடித்தொடை தொடையின் மேற்பாகம் ; தொடையின் பின்புறம் .
அடித்தொழில் குற்றேவல் .
அடித்தொழும்பு குற்றேவல் ; பாதப்பணிவிடை .
அடித்தோழி தலைமைத்தோழி .
அடிதடி சண்டை ; அடிக்குங்கோல் .
அடிதண்டம்பிடிதண்டம் முழுமையாக வசப்பட்ட பொருள் .
அடிதண்டா மண்வெட்டி ; கதவை இறுக்கும் நீண்ட தாழ் .
அடிதலை கீழ்மேல் ; அடிமுடி ; வரலாறு .
அடிதாளம் கைகளால் போடும் தாளம் .
அடிதாறு அடிச்சுவடு .
அடிதோறும் அடிக்கடி ; ஒவ்வோர் அடியிலும் .
அடிநகர்தல் இடம்விட்டுப் பெயர்தல் .
அடிநா நாவின் அடி ; உள்நாக்கு .
அடிநாய் பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி .
அடிநாயேன் பெரியோர்முன் தன்னைத் தாழ்த்திக் கூறும் சொல் ; ஒரு வகை வணக்கமொழி .
அடிநாள் முதல்நாள் ; ஆதிகாலம் ; தொடக்கம் .
அடிநிலை மரவடி என்னும் பாதக்குறடு , காலணி ; அடிப்படை .
அடிநீறு பாததூளி , காலில் படிந்த துகள் .
அடிப்பட்ட சான்றோர் வழிவழிப் பெரியோர் ; பண்டைப் புலவர் .
அடிப்பட்ட வழக்கு பழைய வழக்கம் .
அடிப்படுத்துதல் கீழ்ப்படுத்துதல் ; பழக்குதல் ; நிலைபெறச் செய்தல் .
அடிப்படுதல் அடிச்சுவடு படுதல் ; கீழ்ப்படுதல் ; பழகுதல் ; அடிமைப்படுதல் .
அடிப்படை ஆதாரம் ; மூலம் ; அடியிற்கிடப்பது ; அடித்தளம் ; படையில் தலைமையாக உள்ள பகுதி .
அடிப்பணி காண்க : அடித்தொழும்பு .
அடிப்பதறுதல் கால் நடுங்குதல் ; நிலை தவறுதல் ; மனங்கலங்குதல் .
அடிப்பந்தி முதற்பந்தி ; உண்போரின் முதல் வரிசை .
அடிப்பலம் மூலவலிமை .
அடிப்பலன் முதற்பயன் .
அடிப்பற்றுதல் தீய்ந்துபோதல் ; பாண்டத்தின் அடியில் பிடித்தல் ; திருவடியைப் பற்றுதல் .
அடிப்பாடு பழக்கம் ; பாதை ; அடிச்சுவடு ; அடிப்பட்ட வழி ; வழக்கு ; உறுதிநிலை ; வரன்முறை ; வரலாறு ; திருவடியில் ஈடுபாடு .
அடிப்பாய்தல் தாவிக் குதித்தல் .
அடிப்பாரம் அடிக்கனம் ; அடிப்படை ; சிரங்கின் வீக்கம் .
அடிச்சிரட்டை தேங்காயின் அடிக்கொட்டாங் கச்சி .
அடிச்சீப்பு வாழைக்குலையின் முதல் சீப்பு .
அடிச்சுவடு அடித்தடம் ; காலடிச் சுவடு , காலடியின் அடையாளம் .
அடிச்சூடு பாதத்தில் உறைக்கும் வெப்பம் ; உட்சூடு .
அடிச்சேரி அடிமைகள் குடியிருப்பிடம் ; அயலூர் ; நகரவெல்லையில் இருக்கும் ஊர் ; ஊர்ப்பணியாளர் குடியிருப்பு .
அடிசாய்தல் நிலைகுலைதல் ; அடியின் நிழல் சாய்தல் .
அடிசில் உணவு , சோறு .       
அடியாள் குற்றேவல் செய்வோன்(ள்) ; எதரியை அடிப்பதற்காகக் கூலிக்கு அமர்த்தப்படும் ஆள் .
அடியான் தொண்டன் ; ஏவலாளன் ; பண்ணையாள் .
அடியிடுதல் தொடங்குதல் ; அடியெடுத்து வைத்தல் , கால்வைத்தல் ; கூடை முதலியன முடைதற்கு அடியமைத்தல் .
அடியியைபுதொடை செய்யுளின் அடிதோறும் இறுதி ஒன்றிவரத் தொடுப்பது .
அடியிலேயுறைதல் வழிபடுதல் ; எண்ணெய் முதலியவற்றின் கசடு கீழ்ப்பகுதியில் தங்கிக் கெட்டிப்படுதல் .
அடியீடு அடியிட்டு நடத்தல் ; தொடக்கம் .
அடியுணி அடிபட்டவன் .
அடியுரம் முன்பு இட்ட எரு ; மரத்தைச் சுற்றியிடும் எரு ; ஆற்றல் ; முந்தையோர் சொத்து .
அடியுறை பாதகாணிக்கை ; வழிபட்டுறைகை ; ஒரு வணக்கமொழி ; தொண்டன் .
அடியெடுத்தல் அப்பாற்போதல் ; அடிவைத்தல் .
அடியெதுகை அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .
அடியேன் அடியவனாகிய நான் என்னும் பொருளில் வரும் ஒரு வணக்கமொழி .
அடியொட்டி காலடியை எடுக்கவொட்டாமல் பிடிப்பது ; காலில் தைக்கும்படி நட்டுவைக்கும் கருவி .
அடியொத்த காலம் தன் நிழல் தன் அடியிலேயேவிழும் பொழுது , நடுப்பகல் .
அடியொற்றுதல் பின்பற்றுதல் .
அடியோடு முழுவதும் .
அடிவட்டம் காலடி அளவு ; நாகசுரத்தின் அடிப்பூண் .
அடிவயிறு கீழ்வயிறு .
அடிவரலாறு காரணம் ; பழைய வரலாறு ; குலமுறை .
அடிவரவு பாட்டின் முதற்குறிப்பு .
அடிவருடல் கால்பிடித்தல் .
அடிவரையறை அடியெல்லை ; அடிக்கணக்கு .
அடிவாரம் மலைச்சாரல் ; மலையின் அடிப்பகுதி .
அடிவானம் திசைமுடிவு , கீழ்வானம் ; அடிப்படை .
அடிவிரிதல் அடிப்பகுதி விரிசல் காணல் ; பாண்டத்தினடி பழுதாதல் .
அடிவிள்ளுதல் அடிப்பகுதி விரிசல் காணல் ; பாண்டத்தினடி பழுதாதல் .
அடிவினை ஆடை வெளுத்தல் ; சூழ்வினை ; மாறாட்டம் ; கறுவு .
அடிவீழ்ச்சி அடிசாய்தல் , வணக்கம் .
அடிவீழ்தல் தண்டனிடுதல் , காலில் விழுந்து வணங்கல் .
அடிவெண்குருத்து இறகினடி ; பாங்குருத்து , இளங்குருத்து .
அடிவைத்தல் காலடி வைத்தல் ; தொடங்குதல் ; நடக்கப் பழகுதல் ; தலையிடல் .
அடு (வி) சமை , தீயிற் பாகமாக்கு ; சேர் .
அடுக்கடுக்காய் வரிசை ; வரிசையாய் .
அடுக்கம் ஒன்றன்மேல் ஒன்றாய் அமைந்தது ; குவிக்கை ; செறிவு ; படுக்கை ; மலைப்பக்கம் , பக்கமலை ; வரிசை ; மரநெருக்கம் ; சோலை .
அடுக்கல் அடுக்கு ; அடுக்கப்பட்டது ; ஒன்றன் மேல் ஒன்றாய் வைத்தல் ; மலை ; பாறை ; படுக்கை ; குவித்தல் ; தொகுத்தல் .
அடுக்கலிடுதல் நெல் முதலியவற்றை இரண்டாம் முறை குற்றுதல் .
அடுக்களை சமையலறை , மடைப்பள்ளி .
அடுக்களைகாணுதல் திருமணத்தை யடுத்துத் தாய் தன் மகளின் இல்லத்திற்கு முதன் முறையாகச் செல்லுகை .
அடுக்கு அடுக்கப்பட்டது ; ஒழுங்கு ; வரிசை ; அடுக்குச் சொல் .
அடுக்குக்குலைதல் நிலையழிதல் .
அடுக்குத்தொடர் ஒரேசொல் அடுக்கி வருவது .
அடுக்குதல் அடுக்கல் ; ஒன்றன்மேல் ஒன்றாகவைத்தல் ; வரிசைப்பட வைத்தல் .
அடுக்குப்பாத்திரம் ஒன்றனுள் ஒன்றாய்ச் செருகப்பட்ட பாண்ட அடுக்கு .
அடுக்குமெத்தை ஒன்றன்மேல் ஒன்றாய் உள்ள பல மாடிக் கட்டடம் ; அடுக்கடுக்காய் உள்ள பஞ்சணை .
அடுகலம் சமையற் பாண்டம் .
அடிமடையன் முழுமூடன் .
அடிமண் கீழ்மண் ; காலடியில் ஒட்டிய மண் .
அடிமணை ஆதாரம் : அடிமணைத்தட்டு ; படகின் உட்பலகை ; வண்டியினுள் பொருத்திய பலகை ; கால்வைக்கும் பலகை .
அடிமயக்கு அடிகள் தடுமாறுதல் ; பாவடிகள் முன்பின்னாதல் .
அடிமரம் கிளைக்கும் வேருக்கும் இடைப்பட்ட மரத்தின் பாகம் ; பாய்மரத்தின் அடிப்பாகம் .
அடிமறிமண்டிலம் அகவற்பா வகையுள் ஒன்று ; எல்லா அடிகளும் ஒத்து முன்பின் மாற்றினும் பொருள் பொருத்தமுற அமையும் ஆசிரியப்பா .
அடிமறிமாற்று பொருள்கோள் எட்டனுள் ஒன்று ; செய்யுளடிகளைப் பொருளுக்கு ஏற்றபடி கொண்டுகூட்டுவது .
அடிமனை சுற்றுச் சுவர் ; கட்டடத்தின் முதன்மைச் சுவர் .
அடிமாடு கொல்லுதற்குரிய மாடு .
அடிமாண்டுபோதல் அறவே ஒழிதல் , முற்றும் அழிதல் .
அடிமுட்டாள் காண்க : அடிமடையன் .
அடிமுடி ஆதியந்தம் ; கீழ்மேல் ; கால்முதல் தலைவரை ; வரலாறு .
அடிமுண்டம் வெட்டிய மரத்தின் அடிப்பாகம் ; பயனற்றவன்(ள்) .
அடிமுந்தி அடிமுன்றானை .
அடிமை தொண்டுபடும் தன்மை ; அடிமையாள் ; தொண்டன் .
அடிமைப்படல் அடிமையாதல் .
அடிமைபூணல் அடிமையாதல் .
அடிமையோலை அடிமைப் பத்திரம் .
அடிமோனைத்தொடை அடிகள்தோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .
அடியடியாக ஒவ்வோர் அடியாக ; தலைமுறை தலைமுறையாக .
அடியந்திரம் திருமணம் முதலிய சிறப்பு நிகழ்ச்சிகள் .
அடியல் கதிரடிக்கை ; சொரிகை ; தொடர்கை .
அடியவன் அடிமை ; தொண்டன் .
அடியளபெடைத்தொடை அடிகள்தோறும் முதலில் அளபெடைவரத் தொடுப்பது .
அடியறிதல் முதற்காரணம் தெரிதல் .
அடியறுக்கி மட்கலம் அறுக்கும் கருவி .
அடியறுத்தல் அடியோடு களைதல் , முற்றும் நீக்குதல் .
அடியனாதி தொன்மைக்காலம் , தொன்று தொட்டுள்ளது .
அடியாகுஎதுகை காண்க : அடியெதுகை .
அடியாட்டி அடியாள் , அடிமை வேலை செய்பவள் . 
அடைசுபலகை செருகுபலகை , கதவுநிலைகளின்மேல் வைக்கும் சூரியப்பலகை .
அடைசொல் காண்க : அடைமொழி ; சொல்லின் இறுதிநிலையாகிய விகுதி .
அடைத்த குரல் கம்மிய குரல் .
அடைத்தது இட்ட கட்டளை .
அடைத்தல் சேர்த்தல் ; தடுத்தல் ; பூட்டல் ; அடைக்கப்படுதல் ; மறைத்தல் ; சாத்துதல் ; சிறைவைத்தல் , காவல் செய்தல் ; வேலியடைத்தல் .
அடைத்து முழுவதும் .
அடைத்துப் பெய்தல் மேக மூட்டமாய் விடாது பெய்தல் .
அடைதல் சேருதல் ; பெறுதல் ; கூடுதல் ; ஒதுங்குதல் ; அடுத்தல் ; சரண்புகுதல் .
அடைதூண் தயிர்கடை தறி , மத்தைக் கோத்துக் கயிறிட்டுக் கடையப் பயன்படுத்தும் சிறுதூண் .
அடைந்தோர் அடைக்கலம் புகுந்தவர் ; சுற்றத்தார் .
அடைநிலை கலிப்பாவின் உறுப்பாகிய தனிச்சொல் .
அடைநேர்தல் மகளைக் கொடுத்தற்கு ஒருப்படுதல் .
அடைப்பகம் நாற்புறமும் காப்புள்ள இடம் ; சிறைச்சாலை .
அடைப்பம் அம்பட்டனின் ஆயுத உறை ; வெற்றிலை பாக்குப் பை .
அடைப்பன் தடுக்கும் பொருள் ; மூடி ; மாடுகளுக்குத் தொண்டையில் உண்டாகும் ஒரு வகை நோய் .
அடைப்பான் தடுக்கும் பொருள் ; மூடி ; மாடுகளுக்குத் தொண்டையில் உண்டாகும் ஒரு வகை நோய் .
அடைப்பு மறைப்பு ; வேலி ; படற்கதவு ; குத்தகை .
அடைப்புக்குறிகள் சொல் , எண் முதலியவற்றின் இருபக்கமும் இடும் வளைவுக் குறியீடுகள் .
அடைப்புண்ணுதல் ஒன்றனுள் அடங்குதல் .
அடைப்பை வெற்றிலைப் பை .
அடைப்பைக்காரன் வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன் ; வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன் .
அடைப்பையான் வெற்றிலைப் பை வைத்திருக்கும் ஏவலாளன் ; வெற்றிலையை மடித்துக் கொடுக்கும் ஊழியக்காரன் .
அடைபுடை இராப்பகல் ; அக்கம்பக்கம் .
அடைமண் கலப்பையில் ஒட்டும் மண் ; வண்டல் மண் .
அடுகலன் சமையற் பாண்டம் .
அடுகளம் போர்க்களம் , சண்டை செய்யுமிடம் .
அடுகிடைபடுகிடை நினைத்தது பெறுமளவும் நீங்காது படுத்துக்கிடக்கை ; நோய்வாய்ப்படுகை .
அடுகுவளம் உணவு ; அடுக்கிவைக்கப்பட்ட உணவுப்பெட்டி .
அடுகை காண்க : அடுதல் .
அடுகைமனை காண்க : அடுக்களை .
அடுங்குன்றம் யானை .
அடுசில் காண்க : அடிசில் .
அடுசிலைக்காரம் செந்நாயுருவி .
அடுத்தடுத்து ஒன்றன்மேல் ஒன்றாய் ; அடிக்கடி .
அடுத்தணித்தாக அண்மையாக .
அடுத்தல் கிட்டல் ; சேர்தல் ; மேன்மேல் வருதல் ; சார்தல் ; ஏற்றதாதல் ; அடைதல் ; பொருத்தல் .
அடுத்துமுயல்தல் இடைவிடாது முயலுதல் .
அடுத்துவரலுவமை உவமைக்கு உவமை கூறல் .
அடுத்தூண் வாழ்வுக்கு விடப்பட்ட நிலம் .
அடுத்தேறு மிகை .
அடுதல் கொல்லுதல் ; தீயிற் பாகமாக்குதல் ; சமைத்தல் ; வருத்துதல் ; போராடுதல் ; வெல்லுதல் ; காய்ச்சுதல் ; குற்றுதல் ; உருக்குதல் .
அடுநறா காய்ச்சிய சாராயம் .
அடுப்பங்கரை அடுப்பின் பக்கம் ; அடுக்களை .
அடுப்பாங்கரை அடுப்பின் பக்கம் ; அடுக்களை .
அடுப்பம் கனம் ; நெருங்கிய உறவு .
அடுப்பு சேர்க்கை ; பரணி நாள் ; நெருப்பு எரியும் அடுப்பு .
அடுப்பூதி சமையல் செய்பவன்(ள்) .
அடும்பு அடம்பு ; அடப்பங்கொடி .
அடை இலை ; வெற்றிலை ; கனம் ; அப்பம் ; கரை ; முளை ; வழி ; பண்பு ; பொருந்துகை ; அடைகாக்கை ; அடைக்கலம் ; அடுத்து நிற்பது ; பொருளுணர்த்தும் சொல்லை அடுத்து நின்று சிறப்பிக்கும் சொல் .
அடைக்கலக்குருவி சிட்டுக்குருவி .
அடைக்கலங்குருவி சிட்டுக்குருவி .
அடைக்கலாங்குருவி சிட்டுக்குருவி .
அடைக்கப்புடைக்க விரைவாக .
அடைக்கலம் புகலிடம் ; கையடை ; அடைக்கலப் பொருள் .
அடைக்கலம்புகல் சரணம்புகல் ; அடிமையாதல் .
அடைக்காய் பாக்கு ; தாம்பூலம் .
அடைகட்டுதல் நீரைத் தடுக்க வரம்பு உண்டாக்குதல் ; வண்டி நகராதபடி சக்கரத்தின்முன் தடை வைத்தல் ; ஊர்திகளின் சக்கரத்தைத்தூக்க முட்டுக்கொடுத்தல் .
அடைகடல் கடற்கரை .
அடைகரை கரைப்பக்கம் .
அடைகல் பட்டடைக்கல் ; அடிப்படைக் கல் ; மதகு அடைக்கும் கல் .
அடைகாத்தல் கோழி முதலியவை குஞ்சு பொரிக்க முட்டையை அணைத்துக் காத்தல் , பறவைகள் அவயம் காத்தல் .
அடைகாய் காண்க : அடைக்காய் .
அடைகிடத்தல் காண்க : அடைகாத்தல் ; தங்கியிருத்தல் .
அடைகுடி சார்ந்த குடும்பம் ; பயிரிடும் குடி .
அடைகுத்துதல் அடைமானம் வைத்தல் .
அடைகுளம் வாய்க்கால் இல்லாத குளம் ; நீர் தேங்கிக் கிடக்கும் குளம் .
அடைகுறடு கம்மியர் பட்டடை ; பற்றுக்குறடு .
அடைகொள்ளுதல் ஒற்றியாகப் பெறுதல் ; அடைக்கலப் பொருளைக் காக்க ஒருப்படுதல் .
அடைகொளி அடையைப் பெற்ற பெயர் , அடைச்சொல்லைக்கொண்டு நிற்கும் சொல் .
அடைகோழி அடைகாக்கும் கோழி .
அடைச்சுதல் செருகுதல் ; மலர்சூட்டல் ; உடுத்துக் கொள்ளுதல் ; பொத்துதல் ; அடைவித்தல் .
அடைசல் பொருள் நெருக்கம் ; காண்க : அடைசுதல் .
அடைசாரல் பருவகாலத்து அடைமழை .
அடைசீலை பாளச்சீலை .
அடைசுதல் ஒதுங்குதல் ; கிட்டுதல் ; செருகுதல் ; நெருங்குதல் ; பொருந்துதல் ; நிறைவாதல் ; ஒதுக்குதல் ; கதுப்புக்குள் வைத்துக்கொள்தல் .       
அண்டப்பித்தி காண்க : அண்டகடாகம் .
அண்டப்புத்தேள் விராட்புருடன் , உலகங்களின் உருவமான பரப்பிரமம் .
அண்டப்புரட்டன் பெருமோசக்காரன் .
அண்டப்புளுகன் பெரும்பொய்யன் .
அண்டபகிரண்டம் உலகமும் அதன் புறத்தேயுள்ள ஏனைய உலகங்களும் .
அண்டபிண்டம் பிரமாண்டமும் தேகமும் , உலகமும் உடம்பும் .
அண்டபேரண்டப் பட்சி காண்க : அண்டரண்டப்பட்சி .
அண்டம் வானம் ; முட்டை ; பீசம் , வித்து ; உலகம் ; வானம் ; மேலுலகம் .
அண்டமுகடு உலகத்தின் உச்சி ; வானத்தின் உச்சி .
அண்டயோனி முட்டையிற் பிறப்பது ; சூரியன் .
அண்டர் தேவர் ; இடையர் ; பகைவர் .
அண்டர்பிரான் தேவர்தலைவன் ; சிவன் ; திருமால் .
அண்டரண்டப்பட்சி பெரும்பறவை ; கழுகு .
அண்டரண்டம் தேவருலகு ; ஒருவகைப் பறவை .
அண்டல் காண்க : அண்டுதல் .
அண்டலர் பகைவர் .
அண்டலார் பகைவர் .
அண்டவாணன் ஆகாயவாசி ; தேவன் ; கடவுள் .
அண்டவாதம் விரைவாதம் ; ஒரு நோய் .
அண்டவாயு விரைவாதம் ; ஒரு நோய் .
அண்டவிருத்தி பீசநோய் வகை .
அண்டன் கடவுள் .
அண்டா பெரும் பாண்டம் .
அண்டாகாரம் முட்டைவடிவம் .
அண்டார் காண்க : அண்டல(லா)ர் .
அண்டிக்கொட்டை முந்திரிக்கொட்டை .
அண்டிகம் செந்நாய் .
அண்டிதள்ளுகை ஒரு நோய் .
அண்டுதள்ளுகை ஒரு நோய் .
அண்டில் மாடு முதலியவற்றின் கண்ணில் பற்றும் ஒரு பூச்சி .
அண்டினவன் நம்பிச் சேர்ந்தவன் .
அண்டுதல் நெருங்குதல் ; பொருந்துதல் ; ஒதுங்குதல் .
அண்டை அண்மையிடம் , பக்கம் ; முட்டு ; வரம்பு .
அண்டைகொள்ளுதல் பக்கத்துணை கொள்ளுதல் .
அண்டைபோடுதல் ஒட்டுப்போடுதல் .
அண்டையயல் அக்கம்பக்கம் .
அண்டைவெட்டுதல் வரப்பு வெட்டுதல் .
அண்ணணி மிகவும் நெருக்கம் .
அண்ணந்தாள் மாடு முதலியவற்றின் கழுததுக்கும் காலுக்கும் பூட்டும் கயிறு ; தண்டனைவகை ; கழுத்தைப் பிணைக்குங்கயிறு .
அண்ணாந்தாள் மாடு முதலியவற்றின் கழுததுக்கும் காலுக்கும் பூட்டும் கயிறு ; தண்டனைவகை ; கழுத்தைப் பிணைக்குங்கயிறு .
அண்ணம் மேல்வாய் ; மேல்வாய்ப்புறம் ; உள்நாக்கு ; கீழ்வாய்ப்புறம் .
அண்ணல் பெருமை ; பெருமையுடையவர் , பெருமையிற் சிறந்தவர் ; அடிகள் ; தலைமை ; தலைவன் ; தமையன் ; அரசன் ; கடவுள் ; முல்லைநிலத் தலைவன் .
அண்ணன் முன்பிறந்தவன் , மூத்தோன் , தமையன் .
அண்ணா உள்நாக்கு ; அண்ணன் என்பதன் விளி ; அண்ணாமலை .
அண்ணாக்கு உள்நாக்கு .
அண்ணாத்தல் வாய்திறத்தல் ; தலைதூக்கல் , தலையெடுத்தல் ; மேல்நோக்குதல் .
அடைமதிற்படுதல் முற்றுகையிடப்படுதல் .
அடைமழை விடாமழை .
அடைமாங்காய் மாங்காய் வற்றல் ; மாங்காய் ஊறுகாய் .
அடைமானம் ஈடு ; வழிவகை ; உவமை .
அடைமொழி ஒன்றன் சிறப்பை உணர்த்த அடுத்து வரும் சொல் ; சிறப்புச் சொல் .
அடைய சேர ; முழுவதும் , எல்லாம் .
அடையலர் பகைவர் .
அடையாண்கிளவி அடையாளச் சொல் .
அடையார் பகைவர் .
அடையாள் வேலையாள் .
அடையாளம் சின்னம் ; அறிகுறி ; முத்திரை ; குறிப்பு ; மாதிரி .
அடையுண்ணுதல் அடைபடுதல் .
அடையெழுதுதல் கணக்கில் தாக்கல் செய்தல் .
அடையோலை அடைமானப் பத்திரம் .
அடைவு ஈடு ; முறை ; தகுதி ; வரிசைமுறை ; அட்டவணை ; வழி ; துணை ; புகலிடம் ; வரலாறு ; எல்லாம் .
அடைவுகேடு முறைகேடு .
அடைவுபடுதல் ஒழுங்காதல் .
அடைவே முறையே ; நெடுக .
அண் மேல் ; வேட்டைநாயின் உருவுகயிறு ; தடியில் வெட்டிய வரை .
அண்டகடாகம் அண்ட கோளத்தின் மேல் ஓடு ; நிலவுருண்டையின் ஓடு .
அண்டகபாலம் அண்ட கோளத்தின் மேல் ஓடு ; நிலவுருண்டையின் ஓடு .
அண்டகம் குப்பைமேனி .
அண்டகூடம் காண்க : அண்டகோளகை .
அண்டகோசம் காண்க : அண்டகடாகம் .
அண்டகோளகை உலகவுருண்டை .
அண்டகோளம் உலகவுருண்டை .
அண்டங்காக்கை உடல் முழுமையும் கருநிறமுடைய காகம் , காக்கையில் ஒருவகை ; உலகத்தைக் காத்தல் .
அண்டச்சுவர் காண்க : அண்டகடாகம் .
அண்டசம் முட்டையிலிருந்து பிறப்பன , முட்டையில் பிறக்கும் உயிர்கள் .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;