சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
அ | தமிழ் எழுத்துகளுள் முதல் உயிர் எழுத்து ; சுட்டெழுத்து ; விகுதி ( அஃறிணைப் பன்மை , வியங்கோள் , எச்சம் ) ; ஆறாம் வேற்றுமைப்பன்மை உருபு ; சாரியை ; எட்டு என்னும் எண்ணின் குறி ; எதிர்மறை இடைச்சொல் ; அழகு ; கடவுள் ( சிவன் , திருமால் , பிரமன் ) . |
அஆ | விட்டிசைச்சொல் ; வியப்புக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு . |
அஃகம் | தானியம் ; விலைப்பொருள் ; ஊறுநீர் ; முறைமை . |
அஃகரம் | வெள்ளெருக்கு . |
அஃகல் | காண்க : அஃகுதல் . |
அஃகாமை | குறையாமை ; சுருங்காமை . |
அஃகான் | 'அ ' என்னும் முதல் எழுத்து ( அ - கான் , கான் எழுத்துச்சாரியை ) . |
அஃகு | ஊறுநீர் . |
அஃகுதல் | குறைதல் ; சுருங்குதல் ; நுணுகுதல் ; குவிதல் ; நெருங்குதல் ; வற்றுதல் ; கழிதல் . |
அஃகுல்லி | உக்காரி என்னும் சிற்றுண்டி ; பிட்டு . |
அஃகுள் | காண்க : அக்குள் . |
அஃகேனம் | ஆய்த எழுத்து , மூன்று புள்ளி ( ஃ ) வடிவினது , முள்ளில்லாப் பன்றி . |
அஃதான்று | ( அஃது - அன்று ) அதுவுமன்றி . |
அஃது | அஃறிணை ஒருமைச்சுட்டு ; அது ; அப்படி . |
அஃதை | அகதி , கதியிலி , திக்கற்றவர் , ஆதரவில்லாதவர் . |
அஃபோதம் | நிலாமுகிப்புள் , சகோரம் ; புறா . |
அஃறிணை | ( அல் - திணை ) உயர்திணையல்லாதவை ; பகுத்தறிவற்ற உயிர்களும் உயிரற்றனவும் ; மக்கள் , தேவர் , நரகர் அல்லாத மற்றப் பொருள்கள் . |
அக்கக்காய் | துண்டுதுண்டாய் . |
அக்கச்சி | அக்காள் , தமக்கை . |
அக்கசாலை | கம்மியர் தொழிற்சாலை , உலோகவேலை செய்யும் களம் , அணிகலன் ஆக்குமிடம் ; கம்பட்டசாலை , நாணயச்சாலை . |
அக்கசாலையர் | கம்மியர் , தட்டார் . |
அக்கட | அவ்விடம் . |
அக்கடா | ஓய்வைக் குறிக்கும் ஓர் இடைச்சொல் ; எதுபற்றியும் கவலையில்லாமை ; வியப்புக்குறிப்பு . |
அக்கடி | அலைவு ; பயணத்தொல்லை . |
அக்கணா | தான்றிமரம் . |
அக்கதம் | காண்க : அட்சதை . |
அக்கதை | காண்க : அட்சதை . |
அக்கந்து | தூற்றுகையில் தானியங்களின் பக்கத்தில் திரளும் பதர் . |
அக்கப்பறை | அலைந்து திரிகை . |
அக்கப்பாடு | நிலையழிவு ; குழப்பம் , அல்லோலகல்லோலம் ; பொருள் அழிவு ; மரக்கல அழிவு . |
அக்கப்போர் | அலப்புதல் ; வம்புப்பேச்சு ; கலகம் . |
அக்கம் | தானியம் ; பொன் ; கண் ; உருத்திராக்கம் ; பாம்பு ; கயிறு ; பக்கம் . |
அக்கம்பக்கம் | அண்டைஅயல் ; முன்னும் பின்னும் ; அண்மைச் சூழல் . |
அக்கமணி | உருத்திராக்கமணி . |
அக்கமாலை | உருத்திராக்கமாலை , செபமாலை . |
அக்கவடம் | உருத்திராக்கமாலை , செபமாலை . |
அக்கரகாரம் | மருந்துவேர் , மருந்துப்பூண்டு . |
அக்கராகாரம் | மருந்துவேர் , மருந்துப்பூண்டு . |
அக்கரம் | எழுத்து ; அழியாதது ; மாமரம் ; வெள்ளெருக்கு ; வாய்நோய் . |
அக்கரன் | அழிவில்லாதவன் ; எங்கும் நிறை பொருள் , கடவுள் . |
அக்கரை | எதிர்க்கரை , நீர்நிலையின் மறுகரை . |
அக்கரைச்சீமை | கடல் கடந்த நாடு . |
அக்கரைப்பச்சை | பொய்த்தோற்றம் . |
அக்களிப்பு | அகக்களிப்பு , மனமகிழ்ச்சி . |
அக்கறை | ஈடுபாடு ; கருத்து , கவனம் . |
அக்கன் | தமக்கை ; கருடன் ; பிறவிக்குருடன் ; நாய் . |
அக்கா | தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி . |
அக்காள் | தமக்கை , முன்பிறந்தாள் ; மூதேவி . |
அக்காணி | பருவுடல் . |
அக்காத்தான் | தான்றிமரம் . |
அக்காரடலை | சருக்கரைப் பொங்கல்வகை . |
அக்காரவடிசில் | சருக்கரைப் பொங்கல்வகை . |
அக்காரம் | சருக்கரை ; வெல்லம் ; கரும்பு ; சீலை ; மாமரம் . |
அக்காரை | ஒருவகைச் சிற்றுண்டி . |
அக்கானி | பதநீர் . |
அக்கி | அக்கினி ; வெப்பு ; அக்கினிக்கரப்பான் என்னும் நோய் ; கொப்புளம் ; பூச்சி வகையுள் ஒன்று ; கண் ; தேர் . |
அக்கிக்கல் | மாணிக்கத்துள் ஒன்று ; படிகவகையுள் ஒன்று . |
அக்கிச்சூர் | கண்நோய் . |
அக்கிப்படலம் | கண்நோய் . |
அக்கியாதம் | காண்க : அஞ்ஞாதம் . |
அக்கியாதவாசம் | காண்க : அஞ்ஞாதவாசம் . |
அக்கியானம் | காண்க : அஞ்ஞானம் . |
அக்கியெழுதுதல் | அக்கிப்புண் ஆறும்பொருட்டுச் செங்காவிக் கல்லாலான குழம்பினால் சிங்கம் நாய் போன்ற உருவங்களை எழுதுதல் . |
அக்கிரகண்ணியன் | அவையில் முதல்வனாக மதிக்கத்தக்கவன் . |
அக்கிரகாரம் | பார்ப்பனர் கூடிவாழும் இடம் . |
அக்கிரசந்தானி | உயிர்களின் நன்மை தீமைகள் எழுதிவைக்கப்படும் எமனுடைய குறிப்பேடு . |
அக்கிரசம்பாவனை | முதல் மரியாதை ; முதல் வரவேற்பு . |
அக்கிரதாம்பூலம் | முதல் தாம்பூலம் . |
அக்கிரபூசனை | முதலில செய்யும் வழிபாடு . |
அக்கிரபூசை | முதலில செய்யும் வழிபாடு . |
அக்கிரசன் | முதலில் பிறந்தோன் , மூத்த தமையன் . |
அக்கிரசன்மன் | முதலில் பிறந்தோன் , மூத்த தமையன் . |
அக்கிரம் | நுனி ; உச்சி ; முதன்மை ; தொடக்கம் . |
அக்கிரமம் | முறையின்மை , வரம்புமீறிய செய்கை ; ஒழுங்கின்மை ; கொடுமை . |
அக்கிராசனம் | அவைத்தலைமை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
அக்குரு | விரல் ; கைந்நுனி . |
அக்குரோணி | பெரும்படையின் ஒரு கூறு ; 21,870 தேரும் , 21,870 யானையும் , 65 ,610 குதிரையும் , 1 ,09 ,350 காலாளும் கொண்ட படைத்தொகுப்பு . |
அக்குல்லி | காண்க : அஃகுல்லி . |
அக்குவடம் | சங்குமணிமாலை . |
அக்குள் | கக்கம் , கமுக்கட்டு , தோளின் பொருத்து உள்ளிடம் . |
அக்குளு | அக்குள் ; கூச்சம் . |
அக்குளுத்தல் | கூச்சமுண்டாக்குதல் . |
அக்கை | காண்க : அக்கா ( ள் ) . |
அக்கோ | வியப்பு இரக்கச் சொல் . |
அக்கோடம் | கடுக்காய் . |
அக்கோலம் | தேற்றாங்கொட்டை . |
அகக்கண் | உள்ளறிவு ; ஞானம் . |
அகக்கரணம் | உள்ளம் , மனம் . |
அகக்களி | மனமகிழ்ச்சி . |
அகக்காழ் | மரத்தின் உள்வயிரம் ; ஆண்மரம் . |
அகக்கூத்து | முக்குணம் சார்ந்த நடிப்பு . |
அகங்கரித்தல் | செருக்குக்கொள்ளுதல் . |
அகங்கரிப்பு | செருக்கு , அகங்காரம் . |
அங்காரக்கிரந்தி | ஆணவமறைப்பு ; தத்துவங்களைத் தான் எனக் கொள்ளும் உயிரின் தொடர்பு . |
அகங்காரம் | ' நான் ' என்னும் செருக்கு , ஆணவம் ; உட்கரணம் நான்கனுள் ஒன்று . |
அகங்காரி | செருக்குள்ளவன் ( ள்) . |
அகங்காழ் | காண்க : அகக்காழ் . |
அகங்கை | ( அகம் - கை ) உள்ளங்கை . |
அகச்சமயம் | சைவசமயத்தின் உட்பிரிவுகள் ; அவை : பாடாணவாத சைவம் , பேதவாத சைவம் , சிவசமவாத சைவம் , சிவசங்கிராந்தவாத சைவம் , ஈசுர அவிகாரவாத சைவம் , சிவாத்துவித சைவம் . |
அகச்சுட்டு | சொல்லின் முதனிலையாய்ப் பிரிவின்றி இணைந்து நிற்கும் சுட்டு . |
அகச்சுவை | அகப்பொருள் நெறிக்குரிய சுவை ; சத்துவம் முதலிய முக்குணம் வெளிப்பட நடிக்கும் நடிப்பு . |
அகசன் | கேது என்னும் கோள் . |
அகசியம் | ஏளனச்சிரிப்பு ; வேடிக்கை ; பகடி . |
அகசு | பொழுது ; பகல் ; இராப்பகல் கொண்டநாள் . |
அகசை | மலையில் பிறந்தவள் , பார்வதி . |
அகடச்சக்கரம் | வயிற்றைச் சுற்றிக் கட்டும் உதரபந்தனம் என்னும் அணி , இடுப்பணி , அரைப்பட்டிகை ; கொடுங்கோல் மன்னன் . |
அகடம் | பொல்லாங்கு ; அநீதி ; கபடம் . |
அகடியம் | பொல்லாங்கு ; அநீதி ; கபடம் . |
அகடவிகடம் | சிரிக்கவைக்கும் பேச்சு ; வேடிக்கை ; தட்டுமாற்று ; இரண்டகம் ; வஞ்சகம் ; தந்திரம் . |
அகடிதகடனாசாமர்த்தியம் | செய்யக்கூடாதனவற்றைச் செய்விக்கும் வன்மை . |
அகடிதம் | நிறைவேற்றற்கரியது . |
அகடு | உள் ; வயிறு ; நடு ; மேடு ; நடுவுநிலை ; பொல்லாங்கு . |
அகடூரி | வயிற்றால் ஊர்ந்து செல்வது , பாம்பு . |
அகண் | அண்மை , பக்கம் . |
அகண்டபரிபூரணம் | எங்கும் நிறைந்திருக்கை ; வேறுபாடின்றி எங்கும் நிறைந்திருக்கும் பரம் பொருள் . |
அகண்டம் | துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் . |
அகண்டிதம் | துண்டிக்கப்படாதது ; பிளவுபடாதது ; முழுமை , முழுப் பொருள் ; பெரிய அகல்விளக்கு ; கடவுள் . |
அகண்டதீபம் | எப்பொழுதும் எரியும் விளக்கு , நந்தாவிளக்கு . |
அகண்டாகண்டன் | பரம்பொருள் ; எதற்கும் அஞ்சாதவன் . |
அக்கிலிப்பிக்கிலி | குழப்பம் . |
அக்கினி | தீ ; தீக்கடவுள் ; செங்கொடிவேலி ; நவச்சாரம் ; மூத்திரம் ; வெடியுப்பு . |
அக்கினிக்கட்டு | நெருப்புச் சுடாமல் செய்யும் வித்தை . |
அக்கினிக்கருப்பன் | நெருப்பிலிருந்து தோன்றியவன் , முருகன் . |
அக்கினிகாரியம் | ஓமத்தீ வளர்த்துச் செய்யும் சடங்கு . |
அக்கினிகோணம் | தென்கிழக்கு மூலை . |
அக்கினிகோத்திரம் | நாள்தோறும் செய்யும் தீவேள்வி . |
அக்கினிசகன் | அக்கினி நண்பன் , காற்று . |
அக்கினிசகாயன் | அக்கினி நண்பன் , காற்று . |
அக்கினிசாந்தி | வேள்வி , ஓமம் . |
அக்கினிட்டி | நெருப்பிடு கலம் . |
அக்கினிட்டோமம் | சோமவேள்வி ; தேவர் பொருட்டுச் சோமரசம் அளிக்கும் வேள்விவகை . |
அக்கினித்தம்பனம் | நெருப்புச்சுடாமல் செய்யும் வித்தை . |
அக்கினித்திராவகம் | தீப் போலப் பட்ட இடத்தை வேகச் செய்யும் ஒருவகை நீர்மப் பொருள் , நைட்ரிக் அமிலம் . |
அக்கினிதிசை | தென்கிழக்கு . |
அக்கினிதேவன் | தீக் கடவுள் . |
அக்கினிநட்சத்திரம் | கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி . |
அக்கினிநாள் | கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி . |
அக்கினிப்பிரவேசம் | தீப் பாய்தல் ; உடன்கட்டையேறுதல் . |
அக்கினிப்பிழம்பு | நெருப்புச்சுடர் , தீக்கொழுந்து , தீத்திரள் . |
அக்கினிபாதை | தீயால் விளையும் கேடு . |
அக்கினிமணி | காண்க : சூரியகாந்தக்கல் . |
அக்கினிமரம் | காட்டுப்பலா . |
அக்கினிமாந்தம் | ஒருவகை நோய் . |
அக்கினிமுகம் | சேங்கொட்டை . |
அக்கினிமூலை | காண்க : அக்கினிதிசை . |
அக்கீம் | முகம்மதிய மருத்துவன் . |
அக்கு | எலும்பு ; சங்குமணி ; எருதின் திமில் ; பலகறை ; கண் ; உருத்திராக்கம் ; உரிமை ; எட்டிமரம் . |
அக்குசை | சமணக் கைம்பெண் துறவி . |
அக்குத்தொக்கு | ஒட்டுப்பற்று , தொடர்பு . |
அக்குதார் | உரிமையாளன் . |
அகப்பாடு | உள்நிகழ்ச்சி ; நெருங்கியிருக்கை . |
அகப்பு | ஆழம் ; தாழ்வுப்பகுதி ; படுகுழி . |
அகப்புறக்கைக்கிளை | காமம் நிரம்பாத இளமையோளை ஒருவன் அடுத்து அவளுடைய குறிப்பறியாது மேலும் மேலும் பேசுவது . |
அகப்புறச்சமயம் | சைவசித்தாந்தத்திற்குப் புறம்பான மதங்கள் ; அவை : பாசுபதம் , மாவிரதம் , காபாலம் , வாமம் , வைரவம் , ஐக்கியவாத சைவம் . |
அகப்புறத்தலைவன் | கைக்கிளை , பெருந்திணை ஒழுக்கங்களுக்குரிய தலைவன் . |
அகப்புறத்திணை | காண்க : அகத்திணைப்புறம் . |
அகப்புறமுழவு | மத்திமமான வாத்தியம் ; எழுவகை முழவுகளுள் ஒன்று . அது தண்ணுமை , தக்கை , தகுணிச்சம் முதலாகப் பலவகைப் படும் . |
அகப்பூ | உள்ளத்தாமரை ; மனமகிழ்ச்சி . |
அகப்பூசை | உள்ளத்தால் நினைந்து வழிபடுகை . |
அகப்பை | குழிந்த கரண்டி , சட்டுவம் . |
அகப்பைக்கணை | அகப்பையின் காம்பு , அகப்பைப் பிடி . |
அகப்பைக்குறி | அகப்பையளவு ; நெல்லுக் குவியலின் மேலிடும் சாணிப்பால் குறி . |
அகப்பைக்கூடு | அகப்பைகளைச் செருகிவைக்கும் சட்டம் . |
அகப்பொருட்கோவை | அகப்பொருள் துறைகளைத் தொடர்புபடுத்திக் கூறும் கோவை நூல் . |
அகப்பொருள் | உட்பொருள் ; சிற்றின்பம் ; அகவொழுக்கமாகிய பொருள் ; வீட்டில் உள்ள பொருள் . |
அகம் | இருப்பிடம் ; பூமி ; மனை ; வீடு ; உள் ; மனம் ; அகப்பொருள் ; ' நான் ' என்னும் அகங்காரம் ; பாவம் ; அகம்பாவம் ; மார்பு ; ஏழாம் வேற்றுமையுருபு . |
அகம்படி | உள்ளிடம் ; மனம் ; அகத்தொண்டு ; ஒருவகைச் சாதி ; அடிவயிறு . |
அகம்படித்தொண்டு | அணுக்கத் தொண்டு . |
அகம்படிமை | அணுக்கத் தொண்டு . |
அகம்படியர் | உள்வேலைக்காரர் ; ஊழியம் செய்வோர் ; ஒருவகைச் சாதியார் . |
அகம்பன் | அசைவற்றவன் . |
அகம்பாடு | ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு . |
அகம்பாவம் | ' நான் ' என்னும் எண்ணம் ; உள்ளச்செருக்கு ; உள்ள நினைவு . |
அகம்பிரமம் | ' நானே பிரமம் ' எனக் கூறல் . |
அகம்பு | உள் . |
அகத்தடிமை | இறைவன் அருகிலிருந்து செய்யும் அணுக்கத் தொண்டு ; வீட்டுப் பணியாளர் . |
அகத்தடியாள் | வீட்டு வேலைக்காரி . |
அகத்தமிழ் | அகத்திணைபற்றிய இலக்கியம் . |
அகத்தாழம் | மாலைப்பொழுது . |
அகத்தான் | உள்ளிடத்தில் இருப்பவன் ; மனத்தில் தங்கி இருப்பவன் ; இல்வாழ்வான் ; உறவினன் ; முற்றுகைக்குட்பட்டவன் ; மதில்காத்து உள்ளிருப்பவன் . |
அகத்திடுதல் | செருகுதல் ; உள்ளிடுதல் ; கையால் உள்ளணைத்தல் . |
அகத்திணை | அகவொழுக்கம் , உள்ளொழுக்கம் ; கணவன் மனைவியரிடையே உள்ளத்தே நிகழும் இன்பவொழுக்கம் ; குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை எனப்படும் ஐந்திணை ஒழுக்கம் . |
அகத்திணைப்புறம் | இன்ப வாழ்க்கைக்கு மாறுபட்டது ; கைக்கிளை பெருந்திணை ஒழுக்கங்கள் . |
அகத்தியம் | கட்டாயம் ; அகத்தியர் செய்த ஓர் இலக்கண நூல் . |
அகத்தியல் | உள்ளத்து இயற்கை , மனப்பாங்கு . |
அகத்திருத்துவம் | செயலின்றி நிற்கும் கடவுள் தன்மை . |
அகத்தீடு | உளளீடு ; எண்ணம் ; அன்பு ; கையால் உள்ளணைக்கை ; உள்ளடக்குதல் . |
அகத்துரைப்போன் | கடவுள் ; மனச்சாட்சி . |
அகத்துவங்கொள்ளுதல் | அடிப்படைக்காகத் தோண்டுதல் . |
அகத்துழிஞை | கோட்டையின் அகத்து உள்ளாரைப் புறத்தார் வெல்லும் புறத்துறை . |
அகத்தொண்டர் | வீட்டுப்பணிபுரிவோர் . |
அகத்தோர் | உள்ளிருப்போர் ; ஊரார் ; ஒத்த உள்ளத்தராம் நண்பர் . |
அகதகாரன் | மருத்துவன் . |
அகதம் | அழிவற்றது ; குளிகை ; மருந்து ; இன்பம் . |
அகதன் | நோயிலி . |
அகதி | போக்கற்றவன் , கதியிலி ; வறியவன் ; தில்லைமரம் ; வேலமரம் . |
அகதேசி | உளளூரிலுள்ளவன் ; உள்நாட்டுப் பிச்சைவாங்கி . |
அகந்தை | காண்க : அகங்காரம் . |
அகநகர் | கோட்டைக்குள் அடங்கிய நகரப்பகுதி ; அந்தப்புரம் . |
அகநகை | உட்சிரிப்பு ; இகழ்ச்சிச் சிரிப்பு . |
அகநாடக உரு | அகக்கூத்திற்குரிய இசைப் பாட்டு வகை ; அவை : கந்தம் முதல் பிரபந்தம் ஈறாக இருபத்தெட்டு . |
அகநாடு | உள்நாடு ; மருதம் . |
அகநாழிகை | கருவறை ; உண்ணாழிகை . |
அகநிலை | உட்பட்டநிலை ; உள்ள நிலை ; உள்நகர் ; ஊர் ; நால்வகைத் தலைமைப் பண்களுள் ஒன்று . |
அகப்பகை | உட்பகை . |
அகப்பட்டி | சிறுதீங்கு செய்வோன் ; காவலின்றித் திரிவோன் . |
அகப்படுதல் | உட்படுதல் ; பிடிக்கப்படுதல் ; சிக்கிக்கொள்ளுதல் ; கிட்டுதல் . |
அகப்படை | அணுக்கப்படை , மூலப்படை . |
அகப்பணி | மனச்சிந்தனை ; வீட்டுவேலை . |
அகப்பத்தியம் | மனவடக்கம் ; இணைவிழைச்சு இல்லாமை . |
அகப்பரம் | வீட்டைச் சார்ந்த மேடை ; திண்ணை , வேதிகை . |
அகப்பரிசாரம் | வீட்டுவேலைக்காரர் ; அரண்மனைப் பணியாளர் . |
அகப்பரிவாரம் | வீட்டுவேலைக்காரர் ; அரண்மனைப் பணியாளர் . |
அகப்பற்று | ' நான் ' என்னும் உளப்பற்று மன விருப்பு . |
அகப்பா | கோட்டை உள்மதில் ; மதிலுள் மேடை ; அகழி ; அகத்திணைப் பாட்டு . |
அகப்பாட்டண்மையன் | மனமொத்த நண்பன் ; பிடிபடுந்தொலைவில் உள்ளவன் . |
அகப்பாட்டு | அகப்பொருள் பற்றிய பாட்டு ; அகநானூறு என்னும் நூல் . |
அகப்பாட்டுவண்ணம் | இறுதியடி முற்றுப் பெறாது இடையடி போன்று வரும் சந்தம் . |
அகப்பாட்டுறுப்பு | அகப்பொருட் பாடல்களுக் குரிய பன்னிரண்டு உறுப்புகள் ; அவை : திணை , கைகோள் , கூற்று , கேட்போர் , இடம் , காலம் , பயன் , முன்னம் , மெய்ப்பாடு , எச்சம் , பொருள்வகை , துறை . |
அகண்டாகாரஞானம் | முற்றறிவு . |
அகண்டாகாரம் | அளவுபடாத வடிவம் , பெருவடிவம் ; பெருவெளி . |
அகண்டி | ஓர் இசைக்கருவி . |
அகண்டிதன் | பிளவுபடா இயல்பினன் ; முழுமையன் , கடவுள் . |
அகணி | உள் ; உட்பட்டது ; நம்பத்தக்க நட்பினர் ; தெங்கு , பனை முதலியவற்றின் மட்டைகளின் அகவாயிலிருந்து உரிக்கும் நார் ; வயல் ; மருதநிலம் . |
அகணிப்பாய் | மூங்கிலாலான பாய் . |
அகவை | உட்பட்டது ; உட்பொருள் ; உள்ளிடம் ; உட்பட்ட வயது ; ஆண்டு ; பருவம் ; ஏழாம் வேற்றுமை உருபு . |
அகழ் | அகழி , மதில்சூழ் கிடங்கு , கிடங்கு ; குளம் . |
அகழ்தல் | தோண்டுதல் , கல்லுதல் ; உழுதல் . |
அகழான் | வயல் எலி . |
அகர்நிசம் | பகலும் இரவும் , நாளெல்லாம் . |
அகர்முகம் | வைகறை , விடியற்காலம் . |
அகரம் | ' அ ' என்னும் எழுத்து ( கரம் சாரியை ) ; மருதநிலத்தூர் ; பார்ப்பனர் சேர்ந்து வாழும் இடம் ; பாதரசம் . |
அகரமுதலி | காண்க : அகராதி . |
அகரமேற்றுதல் | அந்தணரைக் குடியேற்றுதல் . |
அகராதி | அகரம் முதலாக நெடுங்கணக்கு அடைவில் அமைக்கப்பெறும் சொற்கோவை ; சொற்களஞ்சியம் ; சொற்பொருட்களஞ்சியம் ; சொற்பொருள் விளக்கநூல் . |
அகராதிக்கிரமம் | அகரம் முதலாக வரும் முறைமை . |
அகராதிபடித்தவன் | மிகுந்த கல்வியாளன் ; பிறர் கருத்தைக் கேளாது தன் போக்கில் செல்லுபவன் . |
அகரு | அகில்மரம் . |
அகருதம் | வீற்றிருக்கை . |
அகல் | விளக்குத் தகழி ; சட்டி ; விரிவு ; ஓர் அளவு ; வெள்வேல் மரம் . |
அகல் | (வி) விலகு , நீங்கு . |
அகல்லியமாமிசம் | சமைக்கப்படாத இறைச்சி . |
அகல்வு | விரிவு , அகலம் ; நீக்கம் . |
அகலக்கட்டை | அகலம் குறைந்தது ; பரப்பில்லாதது . |
அகலக்கவி | நாற்கவியுள் ஒன்றான வித்தாரகவி ; விரித்துக் கவிபாடும் புலவன் . |
அகலக்கால்வைத்தல் | அளவுகடந்துபோதல் . |
அகலத்தேடுதல் | நீங்க வகைபார்த்தல் ; விரிவாய் ஆராய்தல் . |
அகலம் | விரிவு ; பரப்பு ; இடம் ; பூமி ; மார்பு ; விருத்தியுரை ; வித்தாரகவி ; பெருமை . |
அகலம்புகுதல் | மார்பிடத்தே தழுவுதல் ; அடைக்கலமாதல் . |
அகலவுரை | விரிவாக எழுதும் உரை , விருத்தியுரை . |
அகலறை | பாசறை ; மலைப்பக்கம் . |
அகலன் | நீங்கிவாழ்வோன் ; தீண்டாதவன் ; ஏழை ; கடவுள் ; பெருத்தவன் ; பெருமையுடையவன் . |
அகலாங்கு | நிலநடுக்கோட்டுக்கு இருபக்கமும் கிழக்குமேற்கில் செல்லும் சமதொலைக்கோடு . |
அகலிடம் | பூமி , நிலவுலகம் . |
அகலுதல் | நீங்குதல் , பிரிதல் ; கடத்தல் ; விரிதல் . |
அகலுள் | அகலம் ; ஊர் ; தெரு ; பூமி ; நாடு ; பெருமை . |
அகவடி | உள்ளங்கால் ; அடிச்சுவடு . |
அகவயிரம் | காண்க : அகக்காழ் . |
அகவர் | மங்கலப் பாடகர் , புகழ் பாடுவோர் , சூதர் ; நாட்டில் வாழ்வோர் ; வீட்டிலிருப்பவர் . |
அகவல் | அழைத்தல் , கூவுதல் ; மயிலின் குரல் ; இசைத்தல் ; பாடுதல் ; கூத்து ; கூத்தாடல் ; ஆசிரியப்பாவுக்குரிய ஓசை ; ஆசிரியப்பா . |
அகவல் உரிச்சீர் | ஈரசை கொண்டுவரும் நேர் நேர் , நிரை நேர் , நிரை நிரை , நேர் நிரை என்னும் சீர்வகை . |
அகவல் விருத்தம் | அறுசீரடி முதலாகப் பல சீரடி நான்கு கொண்ட பாவகை . |
அகவலன் | பாடும் பாணன் . |
அகவலைப்படுத்தல் | வலையில் அகப்படுத்தல் . |
அகவலோசை | ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை . |
அகவற்பா | ஒருவரை அழைத்துக் கூறும் முறையில் பாடப்படுவது ; நால்வகைப் பாக்களுள் ஒன்று , ஆசிரியப்பா . |
அகவற்றுறை | நான்கடி கொண்டதாய் முதல் ஈற்றடிகள் ஒத்து இடையடிகள் குறைவுபட்டு வருவது . |
அகவன் மகள் | பிறரை விளித்துப்பாடும் பெண் ; பாண்மகள் . |
அகவாட்டி | இல்லக்கிழத்தி , மனைவி . |
அகவாய் | உள்ளிடம் ; கதவுநிலை . |
அகவாயில் | உள்வாயில் ; மனம் . |
அகவாளன் | வீட்டுக்குரியோன் ; கணவன் ; தலைவன் . |
அகவிதழ் | உள் இதழ் ; அல்லி . |
அகவிரல் | விரலின் உட்பகுதி . |
அகவிருள் | உள்ளிருள் ; அறியாமை ; மெய்யறிவின்மை . |
அகவிலை | மலரின் உள்ளிதழ் ; தவசவிலை . |
அகவுதல் | அகவல் ; குரல் எழுப்புதல் ; ஒலித்தல் ; அழைத்தல் ; பாடுதல் ; ஆடல் . |
அகவுநர் | பாடுவோர் ; ஆடுவோர் . |
அகவுயிர் | உடம்பினுள் உயிர் . |
அகம்மியம் | ஒரு பேரெண் ; பத்துலட்சங்கோடி ; கோடாகோடி ; அணுகக்கூடாதது ; அறியக் கூடாதது . |
அகம்மியை | இழிகுலப்பெண் ; பொதுமகள் . |
அகமகிழ்ச்சி | உள்ளக்களிப்பு ; மனமகிழ்ச்சி . |
அகமடல் | அகவிதழ் ; பாளை . |
அகமணை | வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை . |
அகமணைத்தட்டு | வண்டியின் உட்பலகை ; படகின் உட்கட்டை . |
அகமதி | காண்க : அகந்தை . |
அகமம் | மரம் ; மலை . |
அகமருடணம் | பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம் . |
அகமருடம் | பாவ நீக்கத்தின் பொருட்டு நீருக்குள் நின்று உச்சரிக்கும் மந்திரம் . |
அகமலர்ச்சி | மனமகிழ்ச்சி , இன்பம் . |
அகமாட்சி | இல்லறத்திற்குரிய நற்பண்புகள் . |
அகமார்க்கம் | முக்குணம் பற்றிவரும் மெய்த் தொழிலாற் செய்யும் கூத்து ; மந்திரமுறை ; அருமையிற் பாடுதல் ; உள்வழி . |
அகமிசைக்கிவர்தல் | கோட்டைமதில்களின்மேல் ஏறிநின்று போர்புரிதல் . |
அகமுகமாதல் | உள்நோக்குதல் . |
அகமுடையாள் | வீட்டுக்குடையவள் ; மனைவி . |
அகமுடையான் | வீட்டுக்காரன் , கணவன் ; நிலமுடையவன் . |
அகமுணல் | தெளிதல் ; மனத்திற் கொள்ளல் . |
அகர்க்கணனம் | கலியுகாதி தொடங்கிக் குறித்த காலம்வரை கணித்தெடுத்த நாள்களின் எண்தொகை . |
அகர்ணம் | செவிடு ; பாம்பு . |
அகர்த்தவியம் | செய்யத்தகாதது . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
அகுவைக்கட்டி | அரையாப்பு . |
அகுளுதி | வேம்பு . |
அகூடகந்தம் | பெருங்காயம் . |
அகூபாரம் | ஆமை ; கடல் ; பாறையாலான மலை . |
அகை | கூறுபாடு ; வருத்தம் ; தளர்ச்சி ; தகை ; மலர் ; கிளை . |
அகை | (வி) வருத்து ; எரி ; தடு . |
அகைத்தல் | வருத்தல் ; முறித்தல் ; அறுத்தல் ; உயர்த்தல் ; அடித்தல் ஓட்டுதல் ; எழுதல் ; தழைத்தல் ; கிளைத்தல் . |
அகைதல் | எரிதல் ; ஒடிதல் ; வருந்துதல் ; தளிர்த்தல் ; மலர்தல் ; தாழ்தல் ; காலந்தாழ்த்தல் . |
அகைப்பு | அகைத்தல் ; எழுச்சி ; மதிப்பு ; இடை விட்டுச் செல்லுகை . |
அகைப்புவண்ணம் | இருபது வண்ணங்களுள் ஒன்று ; அறுத்தறுத்து ஒழுகும் நடையை உடையது ; விட்டுவிட்டுச் செல்லும் சந்தம் . |
அகைமம் | புல்லுருவி ; கருந்தாளிமரம் . |
அகையாறு | கிளையாறு . |
அகைவாய்க்கால் | கிளைவாய்க்கால் . |
அகோ | ஒரு வியப்புச் சொல் அழைப்பு , உடன்பாடு , புகழச்சி , இகழ்ச்சி , பொறாமை , துன்பம் , இரக்கம் , ஐயம் முதலிய பொருள்களுள் ஒன்றை உணர்த்தும் குறிப்புச்சொல் . |
அகோசரம் | அறியப்படாமை , புலன்களுக்குப்புலப்படாமை ; புலப்படாதது . |
அகோடம் | கமுகமரம் . |
அகோரம் | மிக்க கொடுமை ; வெப்பம் ; சிவன் ஐம்முகத்துள் ஒன்று ; ஞானம் . |
அகோராத்திரம் | இரவும் பகலும் , இராப்பகல் . |
அகோரை | இரண்டரை நாழிகைக் காலம் ; வெயில் மிகுந்த நாள் ; அஞ்சத்தக்கவன் . |
அகோவனம் | தரிசு . |
அங்கக்கிரியை | மெய் உறுப்புகளால் செய்யப்படும் நடிப்புத் தொழில் . |
அங்ககணிதம் | எண்கணக்கு . |
அங்கசங்கம் | பகட்டு ; புணர்ச்சி . |
அங்கசம் | குருதி ; மயிர் ; நோய் ; காமம் . |
அங்கசன் | மன்மதன் ; மகன் . |
அகழி | கோட்டையைச் சுற்றியுள்ள ஆழமான நீர்நிலை , மதில்சூழ் கிடங்கு ; ஓடை ; கயம் ; கேணி ; கிடங்கு ; வாயகன்ற பாண்டம் . |
அகளங்கம் | குற்றமின்மை ; தூய்மை . |
அகளங்கன் | மாசிலான் ; கடவுள் ; சோழன் . |
அகளம் | தாழி ; மிடா ; சாடி ; யாழின் பத்தர் ; நீர்ச்சால் ; களங்கமின்மை . |
அகளி | தாழி ; மிடா ; பாண்டம் . |
அகற்சி | அகலம் ; நீங்குதல் , பிரிவு ; துறவறம் . |
அகற்பவிபூதி | இயற்கையில் உண்டான திருநீறு . |
அகற்பன் | ஒப்பில்லாதவன் . |
அகற்றம் | அகலம் ; விரிவு . |
அகற்றல் | நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் . |
அகற்றுதல் | நீக்குதல் ; துரத்துதல் ; அகலப்பண்ணுதல் , விரிவாக்கல் . |
அகறல் | அகலல் ; கடத்தல் ; நீங்குதல் ; விரிதல் ; அகலம் . |
அகன்மணி | அகன்ற மணி ; உயர்ந்த முத்து ; தெய்வமணி . |
அகன்றிசைப்பு | யாப்பு முறையிலிருந்து மாறி ஒலிக்கும் குற்றம் . |
அகன்றில் | ஆணன்றில் , ஆண் கிரவுஞ்சம் . |
அகன்னம் | காதற்றது ; செவிடு . |
அகனைந்திணை | குறிஞ்சி , முல்லை , மருதம் , நெய்தல் , பாலை என்னும் ஐந்து திணை . |
அகாடி | குதிரையின் முன்னங்காற் கயிறு . |
அகாத்தியம் | பொல்லாங்கு , வஞ்சனை ; பாசாங்கு ; உண்ணத்தகாதது . |
அகாதம் | ஆழம் ; மிகுந்த பள்ளம் ; நீந்துபுனல் ; தொளை ; வஞ்சகம் . |
அகாமவினை | தன்னிச்சையின்றி நிகழும் செயல் ; தன்னறிவின்றிச் செய்யும் செயல் . |
அகாரணம் | காரணமின்மை ; தற்செயல் . |
அகாரம் | ’அ’ என்னும் எழுத்து ( காரம் சாரியை ) ; வீடு . |
அகாரி | கடவுள் ; இடி ; இந்திரன் . |
அகாரியம் | காரியமல்லாதது ; தகாத செய்கை . |
அகாலம் | காலமல்லாத காலம் , முறைமை அல்லாத காலம் , பருவமின்மை ; பஞ்சகாலம் . |
அகாலமிருந்து | அகால மரணம் ; இளமைச்சாவு ; அநியாய மரணம் . |
அகி | இரும்பு ; பாம்பு ; கதிரவன் ; பகைவன் ; இராகு ; வச்சிரப்படை ; தீ ; ஈயம் . |
அகிஞ்சனன் | வறியவன் . |
அகிஞ்சை | காண்க : அகிம்சை . |
அகிதம் | இதமின்மை ; நன்மையல்லாதது , தீமை ; இடையூறு . |
அகிதலம் | பாதாளம் ; நாகலோகம் . |
அகிதன் | பகைவன் . |
அகிம்சை | கொல்லாமை ; பிற உயிருக்குத் தீங்கு செய்யாமை , வருத்தாமை . |
அகிருத்தியம் | அக்கிரமம் , தவறான செய்கை . |
அகில் | ஒரு வாசனை மரம் ; ஒரு மணப்பொருள் ; புகைக்கப்படும் பொருள்களுள் ஒன்று . |
அகிலம் | உலகம் , பூமி ; எல்லாம் ; முழுமை . |
அகிலாண்டகோடி | எண்ணுக்கு அடங்காத கணக்கற்ற உலகங்கள் . |
அகிலாண்டம் | எல்லா உலகும் . |
அகிலாண்டநாயகி | உலகம் முழுதுடையாள் , பார்வதி . |
அகிலாண்டவல்லி | உலகம் முழுதுடையாள் , பார்வதி . |
அகிற்கூட்டு | சந்தனம் , கருப்பூரம் , காசுக்கட்டி , தேன் , ஏலம் சேர்ந்த கலவை ; கூந்தலின் ஈரம் போக்கி மணமூட்டுவது ; கூந்தலை உலர்த்தப் பயன்படுவது . |
அகுசலவேதனை | துன்ப உணர்ச்சி . |
அகுட்டம் | மிளகு . |
அகுடம் | கடுகுரோகிணிப்பூண்டு . |
அகுணம் | குணமின்மை ; குற்றம் ; அழகின்மை ; தீக்குணம் . |
அகுணி | தீயோன் ; உறுப்புக்குறையுடையோன் . |
அகுதார் | உரிமையாளி . |
அகுதி | காண்க : அகதி . |
அகுரு | அகில்மரம் ; வெட்டிவேர் ; எளிதானது ; குருவல்லாதவன் . |
அங்கவடி | குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி . |
அங்கம் | உறுப்பு ; உடம்பு ; எலும்பு ; கட்டில் ; பாவனை ; அடையாளம் ; வேதாங்கம் அரசாங்கம் ; நாடக உறுப்பு ; அறமே பொருளாக வரும் நாடகம் ; ஒரு நாடு ; ஒரு மொழி . |
அங்கமணி | மகளுக்குக் கொடுக்கும் சீர்ப்பொருள் , சீதனம் . |
அங்கமாலை | எலும்பு மாலை ; உடலுறுப்புகளை முறையாக எடுத்து விளக்கும் ஒரு நூல் ; அடிமுதல் முடி , முடிமுதல் அடியாகப் பாடப்படும் நூல்வகை . |
அங்கயற்கண்ணம்மை | அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் ; மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை . |
அங்கயற்கண்ணி | அழகிய கயல்மீன் போன்ற கண்ணுடையாள் ; மதுரையில் கோயில் கொண்டுள்ள மீனாட்சியம்மை . |
அங்கயோகம் | எண்வகை யோகத்துள் ஒன்று . |
அங்கர் | அங்க நாட்டினர் . |
அங்கர்கோமான் | அங்கநாட்டுக்குத் தலைவன் ; கன்னன் . |
அங்கரக்கன் | மெய்காவலன் . |
அங்கரக்கா | மெய்ச்சட்டை ; நீண்ட சட்டை . |
அங்கரட்சணி | போர்க்கவசம் . |
அங்கலாய்த்தல் | கலங்குதல் ; புலம்புதல் ; துயருறுதல் ; இச்சித்தல் பொறாமைப்படுதல் . |
அங்கலாய்ப்பு | கலக்கம் ; புலப்பம் ; அருவருப்பு ; பேராசை . |
அங்கலி | விரல் ; முலை . |
அங்கலிங்கம் | வீரசைவர்கள் மார்பில் அணியும் லிங்கம் . |
அங்கவத்திரம் | மேலாடை . |
அங்கவிட்சேபம் | அபிநயம் ; சாடை , குறி . |
அங்கவீனம் | உறுப்புக்குறை . |
அங்கன் | மகன் . |
அங்கனம் | அங்ஙனம் . |
அங்கனி | கற்றாழை ; படரும் முட்செடி . |
அங்கனை | பெண் . |
அங்காகமம் | சமண வேதாகமம் மூன்றனுள் ஒன்று . |
அங்காங்கிபாவம் | உறுப்பு உறுப்பிகளின் தொடர்பு . |
அங்காடி | கடை ; கடைத்தெரு ; சந்தை . |
அங்காடிக்கூலி | கடை ; சந்தைகளிலிருந்து பெறும் வரி . |
அங்காடிபாரித்தல் | மனக்கோட்டை கட்டுதல் . |
அங்காத்தல் | வாயைத் திறத்தல் ; கொட்டாவி விடல் . |
அங்காமினி | காண்க : ஆகாசகாமினி . |
அங்காரகம் | கரி ; உடலிற் பூசும் மணப்பொருள் ; மேலே பூசும் வாசனைக் குழம்பு . |
அங்காரகன் | செவ்வாய் ; நெருப்பு ; செந்நீர் முத்து . |
அங்காரம் | நெருப்பு ; கரி ; மாத்துவர் நெற்றியில் இடும் கரிக்கோடு . |
அங்காரவல்லி | சிறுதேக்கு . |
அங்காரன் | செவ்வாய் . |
அங்காரி | வெண்காரம் . |
அங்காரிகை | கரும்பு ; நன்னாரி . |
அங்காளம்மை | காளி ; ஓர் ஊர்த்தேவதை . |
அங்காளி | காளி ; ஓர் ஊர்த்தேவதை . |
அங்கி | அக்கினிதேவன் ; நெருப்பு ; கார்த்திகை நாள் ; அத்த நாள் ; சட்டை ; அங்கத்தையுடையது . |
அங்கிகரித்தல் | சம்மதித்தல் , உடன்படுதல் , ஏற்றுக்கொள்ளுதல் . |
அங்கீகரித்தல் | சம்மதித்தல் , உடன்படுதல் , ஏற்றுக்கொள்ளுதல் . |
அங்கிகாரம் | சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு . |
அங்கீகாரம் | சம்மதம் , ஏற்றுக்கொள்ளுகை , உடன்பாடு . |
அங்கிகை | கச்சு ; இரவிக்கை . |
அங்கிசகம் | அன்னப் பறவை . |
அங்கிசம் | மரபு , வமிசம் ; கூறு , பங்கு ; தாயபாகம் ; தோட்பட்டை ; உபநிடதம் முப்பத்திரண்டனுள் ஒன்று . |
அங்கிட்டு | அவ்விடத்தில் . |
அங்கிட்டோமம் | காண்க : அக்கினிட்டோமம் . |
அங்கிடுதத்தி | நாடோடி ; நிலைகெட்டவன் . |
அங்கிடுதுடுப்பன் | நாடோடி ; நிலைகெட்டவன் . |
அங்கசாலை | குடிகள் செலுத்தும் வரிவகை . |
அங்கசாலைக்காரன் | ஊர்ப்பணிபுரிவோன் . |
அங்கசேட்டை | உடம்பின் இயக்கம் ; கை மெய் காட்டுதல் ; கோரணி ; குறும்பு . |
அங்கண் | அவ்விடம் ; அழகிய இடம் ; கண்ணோட்டம் . |
அங்கணம் | சேறு ; முற்றம் ; இருதூண் நடுவிடம் ; சாக்கடை ; மதகு ; நீர்த்தாரை . |
அங்கணன் | கடவுள் ; சிவன் ; திருமால் ; அருகன் . |
அங்கணாளன் | கண்ணோட்டமுடையவன் ; கடவுள் . |
அங்கணி | அழகிய கண்ணையுடையவள் ; பார்வதி ; கற்றாழை . |
அங்கத்தவர் | அவையின் உறுப்பினர் . |
அங்கத்தி | காண்க : அங்குத்தை . |
அங்கதச்செய்யுள் | வசைப்பாட்டு . |
அங்கதப்பாட்டு | வசைப்பாட்டு . |
அங்கதம் | பாம்பு ; தோளணி ; பழிச்சொல் ; யானையுணவு ; வசைப்பாட்டு ; மார்பு . |
அங்கதர் | வசைகூறுவோர் . |
அங்கதி | கொடை ; தீ ; நோய் ; பார்ப்பான் ; வாயு ; தீக்கடவுள் . |
அங்கதேவதை | பெருந்தெய்வத்திற்குப் பணி செய்யும் சிறுதெய்வம் . |
அங்கதை | தென்திசை யானைக்குப் பெண்யானை . |
அங்கநியாசம் | உடம்பின் ஒவ்வோர் உறுப்பையும் தொட்டு மந்திரம் ஓதுகை . |
அங்கநூல் | வேத விளக்கமான துணைநூல் , வேதாங்கம் ; அங்காகமம் . |
அங்கப்பால் | முலைப்பால் . |
அங்கப்பிரதக்கிணம் | உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் . |
அங்கப்பிரதட்சிணம் | உருண்டு கோயிலை வலம் வரல் ; உடலுறுப்புகள் தரையில் படியுமாறு புரண்டு கோயிலை வலம் வரல் . |
அங்கப்பிராயச்சித்தம் | உடலின் தூய்மைக்காகச் செய்யும் ஒரு கழுவாய் . |
அங்கபடி | குதிரைமேல் சேணத்தோடு இடப்படும் காலூன்று படி , குதிரைமேல் ஏற உதவும் படி . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.