கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

அகராதி-அ

அனுசாரணை வீணையின் பக்க நரம்பு .
அனுசாரம் கோள் பின்னோக்கிச் செல்லும் கதி ; ஒத்தபடி .
அனுசாரி பின்பற்றுவோன் ; சீடன் .
அனுசிதம் தகாதது ; வாயிலெடுத்தல் ; பொய் ; கெடுதி .
அனுசுருதி ஒத்த சுருதி .
அனுசூதம் இடைவிடாதது .
அனுசூதன் விடாது தொடர்ந்திருப்பவன் .
அனுசை தங்கை .
அனுசைவர் சிவதீட்சை பெற்ற சத்திரியர் ; வைசியர் .
அனுஞ்ஞாலங்காரம் வேண்டலணி .
அனுஞ்ஞை அனுமதி .
அனிச்சை நாகமல்லி ; விருப்பின்மை .
அனிச்சைப் பிராரத்தம் விருப்பின்றி இன்ப துன்பம் நுகரும் பழவினை .
அனிசம் எப்பொழுதும் .
அனிஞ்சில் வில்வம் .
அனிட்டம் வெறுப்பானது .
அனித்தம் காண்க : அனிச்சம் ; சந்தனம் ; நிலையில்லாதது .
அனித்தியம் பொய் ; நிலையில்லாதது ; சந்தனம் .
அனிதம் கணக்கற்றது .
அனிருதம் பொய் ; அநித்தியம் ; உழவு .
அனிலச்சூலை வாதசூலை .
அனிலநாள் காண்க : சுவாதி .
அனிலம் காற்று ; வாதரோகம் ; பிறக்கை ; அச்சம் .
அனிலன் வாயுதேவன் ; பராணவாயு ; எட்டு வசுக்களுள் ஒருவன் .
அனிழம் காண்க : அனுடம் .
அனீகம் படை ; அக்குரோணியில் பத்தில் ஒரு பங்கு ; போர் .
அனீகனி தும்பை .
அனீகினி படை .
அனீச்சுரத்துவம் ஈசத்துவமின்மை .
அனீசுவரவாதி கடவுளில்லை என்போன் .
அனீசு காண்க : பெருஞ்சீரகம் ; நட்சத்திரச் சீரகம் .
அனு பிரதிச் செயல் ; பிரதி ; மோனையெழுத்து ; தொடர்ச்சி ; ஒழுங்கு ; அண்மை ; நோய் ; தாடை ; முகம் ; நாகணம் என்னும் மணப்பொருள் தரும் மரம் ; வடமொழி முன்னொட்டுகளுள் ஒன்று ; மஞ்சள் ; ஆயுதம் ; இறப்பு .
அனுக்கம் வருத்தம் ; அச்சம் ; பலவீனம் ; முணக்கம் ; கம்மித இசை ; பாலநோய் ; சந்தனம் .
அனுக்கல் ஒன்றோடு ஒன்று முட்டச் செய்தல் ; கெடுத்தல் ; வருத்துதல் .
அனுக்காட்டுதல் சிறிது தோன்றுதல் ; குறிப்புக் காட்டுதல் .
அனுக்கிரகம் அருள் ; ஐந்தொழிலுள் ஒன்று .
அனுக்கிரகித்தல் அருள்செய்தல் .
அனுக்கிரமணி பொருள் அட்டவணை ; நூற்பதிகம் .
அனுக்கிரமணிகை பொருள் அட்டவணை ; நூற்பதிகம் .
அனுக்கிரமம் ஒழுங்குமுறை .
அனுக்குசிரம் சிர அபிநயவகை .
அனுக்குதல் வருத்துதல் ; கெடுத்தல் ; யாழ்ப்பாணத்திலுள்ள கொக்கான் முதலிய விளையாட்டில் தொடக்கூடாததைத் தொடுதல் .
அனுக்கை அனுமதி .
அனுகதம் தொடர்ந்து வருவது .
அனுகம் காண்க : செஞ்சந்தனம் .
அனுகம்பம் இரக்கம் .
அனுகமனம் உடன்கட்டையேறுகை .
அனுகரணம் ஒன்றன் செயல்போலச் செய்கை .
அனுகரணவுபயவோசை இரட்டை ஒலிக் குறிப்பு .
அனுகரணவோசை ஒலிக்குறிப்பு .
அனுகரித்தல் ஒன்றனைப் போல் ஒழுகுதல் .
அனுகற்பம் மந்தையினின்று எடுத்த பசுவின் சாணத்தைக் கொண்டு முறைப்படி உண்டாக்கிய திருநீறு .
அனுகன் கணவன் ; பின்தொடர்வோன் ; வேலைக்காரன் ; காமுகன் .
அனுகாரம் ஒன்றைப்போலச் செய்கை .
அனுகுணம் ஏற்ப உள்ளது .
அனுகுணாலங்காரம் தன்குணமிகையணி .
அனுகூலசத்துரு அடுத்துக் கெடுக்கும் பகை .
அனுகூலம் உதவி ; காரியசித்தி ; நன்மை .
அனுகூலன் இதமாக நடப்பவன் ; உதவுவோன் .
அனுகூலி அனுகூலமாயிருப்பவன் (ள்) .
அனுகூலித்தல் பயன்படுதல் ; குணமாதல் ; உதவிசெய்தல் .
அனுச்சை அனுமதி .
அனுசங்கம் சம்பந்தம் .
அனுசந்தானம் சிந்திக்கை ; இடையறாது ஓதுகை .
அனுசந்தித்தல் சிந்தித்தல் ; சொல்லுதல் .
அனுசயம் பெரும்பகை ; வழக்காடுகை ; கழிவிரக்கம் ; அனுபந்தம் .
அனுசரணம் சார்ந்தொழுகுதல் .
அனுசரணை சார்ந்தொழுகுகை ; உதவி .
அனுசரித்தல் பின்பற்றுதல் ; ஆமோதித்தல் ; வழிபடுதல் ; கொண்டாடுதல் .
அனுசரிப்பு பின்பற்றுகை ; இணக்கம் .
அனுசன் தம்பி .
அனுசாகை கிளைக்குள் கிளை .
அனுசாசனம் அறவுரை ; அறிவுரை .
அனிகம் சிவிகை ; படை ; கூட்டம் .
அனிச்சம் மோந்தால் வாடும் பூவகை
 
அனுமதி சம்மதம் ; சதுர்த்தசியோடு கூடிய முழுமதி ; முழுமதி .
அனுமதை ஒருவகைப் புல் .
அனுமந்தச்சம்பா சம்பா நெல்வகை .
அனுமந்தன் அனுமான் .
அனுமரணம் உடன்கட்டையேறுதல் .
அனுமனித்தல் கனைத்தல் .
அனுமாசக்காய் காண்க : பொன்னாங்காணி .
அனுமானப்பிரமாணம் கருதலளவை .
அனுமானபலன் நியாய விசாரணையில் ஐயத்தால் கிடைக்கும் நன்மை .
அனுமானம் கருதலளவை , ஐயம் .
அனுமானித்தல் அனுமானப் பிரமாணத்தால் அறிதல் ; உத்தேசித்தல் ; ஐயப்படுதல் ; கனைத்தல் .
அனுமானிதம் குதிரைக் கனைப்பு .
அனுமித்தல் அனுமானித்தறிதல் .
அனுமிதி அனுமானத்தால் உண்டாகும் அறிவு .
அனுமேயம் அனுமானத்தால் அறியத்தக்கது .
அனுமோனை இனவெழுத்தால் வரும் மோனைத்தொடை .
அனுயாத்திரை கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை .
அனுயோகம் வினா .
அனுரதம் ஆசையாயிருத்தல்
அனுரதி அன்பு ; மதிப்பு .
அனுராகம் அன்பு ; காமப்பற்று .
அனுராகமாலை பிரபந்த வகை .
அனுரூபம் ஏற்றது .
அனுவசனம் ஒத்த வாக்கியம் .
அனுட்டணம் வெப்பமின்மை ; சோம்பல் .
அனுட்டயம் அனுட்டிக்கப்படுவது .
அனுட்டாதா அனுட்டிக்கிறவன் ; தொழில் முயன்று செய்வோன் .
அனுட்டானம் ஒழுக்கம் ; வழக்கம் ; சந்தியாவந்தனம் .
அனுட்டானித்தல் ஒழுகுதல் ; ஆசரித்தல் ; கைக்கொள்ளுதல் ; பின்பற்றுதல் .
அனுட்டித்தல் ஒழுகுதல் ; ஆசரித்தல் ; கைக்கொள்ளுதல் ; பின்பற்றுதல் .
அனுட்டுப்பு ஒரு வடமொழிச் சந்தம் .
அனுடம் பதினேழாம் நாள்மீன் .
அனுத்தமம் தனக்குமேல் இல்லாதது .
அனுத்துருதபஞ்சமம் குறிஞ்சியாழ்த் திறவகை .
அனுதபித்தல் கழிந்ததற்கு இரங்குதல் ; பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை .
அனுதாத்தம் படுத்தலோசை .
அனுதாபம் இரக்கம் ; கழிவிரக்கம் ; பிறர் இன்ப துன்பங்களில் அவரோடு ஒன்றுகை .
அனுதாரம் காப்பு .
அனுதானம் தாளவகை .
அனுதினம் நாள்தோறும் .
அனுதினாதினம் நாள்தோறும் .
அனுநாசிகம் மெல்லெழுத்து .
அனுநாதம் எதிரொலி .
அனுப்படி கையிருப்பு ; காரியங்கள் ; கடந்த ஆண்டுவருவாய் .
அனுப்படிபாக்கி கையிருப்பு .
அனுப்படியிறக்குதல் பழைய பாக்கியைக் புதுக்கணக்கிற்குக் கொண்டுவருதல் .
அனுப்பிரவேசம் தொடர்ந்து புகுகை .
அனுப்பிராசம் வழியெதுகை .
அனுப்புதல் போகச்செய்தல் ; வழிவிடுதல் .
அனுபந்தசதுட்டயம் இலக்கியத்தின் இன்றியமையா நாற்கூறுகள் ; அவை : பொருள் , தொடர்பு , பயன் , அதிகாரி .
அனுபந்தம் உறவின்முறை ; நூலின்பின் சேர்க்கப்படும் துணைச்செய்தி ; பிற்சேர்க்கை ; தடை ; உதவி .
அனுபந்தன் தீமைக்கு உடன்படுபவன் .
அனுபத்தி பொருத்தமின்மை .
அனுபந்தி விக்கல் ; தாகம் .
அனுபமம் நிகரில்லாதது ; மிகச் சிறந்தது .
அனுபமன் ஒப்பில்லாதவன் .
அனுபமை ஒப்பில்லாதது ; தென்மேற்றிசைப் பெண்யானை ; மிகச் சிறந்தது .
அனுபல்லவி கீர்த்தனத்தில் பல்லவியை அடுத்து வரும் இரண்டாம் உறுப்பு .
அனுபவக்காட்சி நேராகக் கண்டறியும் அறிவு .
அனுபவசாலி பட்டறிவு மிக்கவன் .
அனுபவம் நுகர்ச்சி ; பட்டறிவு .
அனுபவி இன்பமாய் வாழ்பவன் ; ஆன்மஞானி .
அனுபவித்தல் துய்த்தல் ; உரிமையாகக் கையாளுதல் , இன்ப நுகர்தல் ; அனுபவபூர்வமாய் அறிதல் .
அனுபவை பார்வதி .
அனுபாடணம் கூறியது கூறல் .
அனுபாதம் சரணங்களில் ஒன்று ; கணக்குவகை .
அனுபாலனம் பாதுகாப்பு .
அனுபாவம் கருத்தை விளக்கும் நடிப்பு ; திட எண்ணம் ; உயர்வு .
அனுபானம் மருந்துக்குத் துணையானது .
அனுபூதி பட்டறிவு .
அனுபூதிமான் ஞானி .
அனுபோகம் இன்பநுகர்ச்சி ; கையாட்சி ; பழக்கம் ; நுகர வேண்டிய தீவினைப் பயன் .
அனுபோகி சுகானுபவம் உடையவன் .
அனுமக்கொடியோன் அனுமன் உருவம் பொறித்த கொடியையுடைய அருச்சுனன் .
அனுமதம் வீணைவகை .       
அனுவட்டம் ஒருவகை உருண்டை முத்து .
அனுவதித்தல் திரும்பச்சொல்லுதல் .
அனுவாதித்தல் திரும்பச்சொல்லுதல் .
அனுவயித்தல் காண்க : அன்னுவயித்தல் .
அனுவர்த்தனம் காண்க : அனுசரிப்பு .
அனுவர்த்தித்தல் காண்க : அனுசரித்தல் .
அனுவழி புதன் .
அனுவாகம் வேதத்தின் உட்பகுப்பு .
அனுவாதம் முன்னர்ப் பெறப்பட்டதொன்றனைப் பின்னரும் எடுத்தோதுகை .
அனுவாதவொற்றி மறுஒற்றி .
அனுவாதிசுவரம் இணக்கமுள்ள இசையொலி .
அனுவிருத்தி தொடர்ச்சி ; கூடவிருக்கை .
அனுவுரு ஒத்த உருவம் .
அனுவெழுத்து மோனையெழுத்து .
அனூபம் சதுப்புநிலம் ; படுகை நிலம் ; எருமைக்கடா .
அனூரு முடவன் ; சூரியன் ; புதன் .
அனேகம் பல ; காலம் .
அனேகமாய் பெரும்பாலும் ; பலபடியாக .
அனேகன் ஆன்மா .
அனேகாந்தவாதி ஆருகதன் .
அனேகாந்திகம் பலவிதம் ; காண்க : அனைகாந்திகம் .
அனேகான்மவாதம் ஆன்மாக்கள் பல உண்டு என்னும் கொள்கை .
அனை அன்னை ; அந்த ; ஒருவகை மீன் .
அனைக்கியம் ஒற்றுமையின்மை .
அனைகாந்திகம் ஏதுப்போலிகளுள் ஒன்று ; பல முடிவுடையது .
அனைத்து அவ்வளவு ; அத்தன்மையது ; எல்லாம் .
அனைத்தும் எல்லாம் .
அனைய அத்தன்மையான ; ஒத்த .
அனையன் அன்னவன் .
அனைவரும் எல்லாரும் .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;