கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 10 ஏப்ரல், 2013

அகராதி-ஆ


சொல்
அருஞ்சொற்பொருள்
ஆக்கெளுத்தி கெளிற்று மீன்வகை ; கடல் கெளிற்றுவகை .
ஆக்கேபம் காண்க : ஆட்சேபம் .
ஆக்கை யாக்கை ; உடம்பு ; நார் .
ஆக்கையிலி காண்க : அனங்கன் .
ஆக்கொத்துமம் காண்க : சரக்கொன்றை .
ஆக்கொல்லி ஒரு புழு ; தில்லைமரம் .
ஆக்ஞை ஆணை .
ஆக்வானம் தேவதைகளை வேண்டி அழைக்கை .
ஆக மொத்தமாய் ; முழுவதும் ; அவ்வாறாக ; விகற்பப் பொருள் தரும் இடைச்சொல் ; நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணைச்சொல் ; செய்தி குறிக்கும் இடைச்சொல் ; முற்றோடு சேர்ந்து செயவென் எச்சப் பொருள் தரும் இடைச்சொல் ; ஓர் அசைச்சொல் .
ஆகக்கூடி ஆகவே ; மொத்தத்தில் .
ஆகக்கொள்ள ஆகையால் .
ஆகச்செய்தே ஆகவே .
ஆகசி திப்பிலி .
ஆகசு தவறு ; இழிந்தது ; பாவம் .
ஆகட்டு ஆகட்டும் என்னும் பொருளில் வரும் சொல் .
ஆகட்டும் ஆம் ; ஆகுக .
ஆகடியம் பரிகாசம் ; பொல்லாங்கு .
ஆகண்டலன் இந்திரன் .
ஆகத்தினெய் புருவநடு .
ஆகதம் கமகம் பத்தனுள் ஒன்று ; கந்தை ; பெருக்கிவந்த தொகை ; பொய் ; அடிக்கை ; வருகை .
ஆகதர் சமணர் .
ஆகதி அடையவேண்டியது .
ஆகந்துகசுரம் அருந்துகின்ற உணவு நிமித்த மாயல்லாமல் வேறு ஒட்டுவாரொட்டி முதலாய காரணங்களால் உண்டாகும் சுரவகை .
ஆக்கஞ்செப்பல் தன் நெஞ்சில் வருத்தம் மிகுகின்றபடியைப் பிறர்க்கு உரைக்கை .
ஆக்கணாங்கெளிறு கெளிற்று மீன்வகை .
ஆக்கதம் முதலை .
ஆக்கந்திதம் குதிரை நடைவகையுள் ஒன்று .
ஆக்கப்பாடு பேறு .
ஆக்கப்பெயர் காரணக் குறியினாலாவது இடு குறியினாலாவது இடையில் ஆக்கப்பட்ட பெயர் ; மரபுவழிப் பெயருக்கு மாறுபட்டது .
ஆக்கப்பெருக்கம் வருமானம் .
ஆக்கப்பொருள் ஆகுபெயர்ப் பொருள் .
ஆக்கம் காண்க : ஆக்கக்கிளவி ; அமைத்துக் கொள்ளுகை ; கைகூடுகை ; உண்டுபண்ணுகை ; படைப்பு ; செல்வம் ; பொன் ; பெருக்கம் ; இலாபம் ; ஈட்டம் ; கொடிப்படை ; திருமகள் ; மங்களகரம் ; வாழ்த்து .
ஆக்கமகள் திருமகள் .
ஆக்கர் படைக்கப்பட்ட தேவர் ; திரிந்து கொண்டே துணி முதலியவை விற்போன் ; துறப்பணம் .
ஆக்கரிவாள் அறுவாள்வகை ; தோட்டவேலைக்குதவும் கத்தி .
ஆக்கல் காண்க : ஆக்குதல் .
ஆக்கவினை வளர்ச்சிப்பணி ; ஆக்கத்தால் வரும் வினைச்சொல் .
ஆக்கவினைக்குறிப்பு ஆக்கச் சொல்லைக் கொண்டிருக்கும் வினைக்குறிப்புச் சொல் .
ஆக்கவும்மை சொல்லின் பொருள் பிறிதொன்று மாயிருத்தலைக் குறிப்பிடும் 'உம்' இடைச்சொல் ; பாலுமாயிற்று எனின் அதுவே மருந்துமாயிற்று என்பதைக் குறிப்பது போல்வது .
ஆக்கன் செயற்கையானது .
ஆக்காட்டுதல் வாயைத்திறத்தல் .
ஆக்கியரிவாள் வெற்றிலைக் காம்பறியும் கத்தி .
ஆக்கியாதம் சொல்லப்பட்டது ; அறிவிக்கப்பட்டது ; வினைச்சொல் .
ஆக்கியானம் கட்டுக்கதை ; வெளிப்படுத்துதல் ; பேசுதல் .
ஆக்கியோன் படைத்தோன் ; நூல்செய்தவன் .
ஆக்கிரகம் விடாப்பிடி ; கடுஞ்சினம் ; கைக்கொள்ளுகை ; கட்டாயம் ; அருளுகை .
ஆக்கிரகாயணி புது நெல்லைக்கொண்டு மிருகசீரிடப் பூரணையில் செய்யப்படும் ஒருவகை ஓமம் ; மார்கழி மாத மதிநிறை நாள் ; மிருக சீரிடம் .
ஆக்கிரகித்தல் பலவந்தமாயெடுத்தல் ; வெல்லல் .
ஆக்கிரந்திதம் குதிரை நடைவகை ஐந்தனுள் ஒன்றான விரைவு நடை .
ஆக்கிரமணம் வலிந்து கவர்கை .
ஆக்கிரமம் அடைதல் ; கடந்துபோதல் ; மேலெழுச்சி ; வீரம் .
ஆக்கிரமித்தல் வலிந்து கவர்தல் ; உள்ளே அடக்கிக்கொள்ளுதல் ; மேற்கொள்ளுதல் .
ஆக்கிராணப்பொடி மூக்குத்தூள் .
ஆக்கிராணம் மோந்துபார்க்கை ; மூக்கு ; மூக்கில் இடும் மருந்துப்பொடி .
ஆக்கிராணித்தல் மோத்தல் .
ஆக்கிராந்தம் கைக்கொள்ளப்பட்டது ; பாரமேற்றப்பட்டது ; மறைக்கப்பட்டது ; மேலிடப்பட்டது ; வெல்லப்பட்டது .
ஆக்கினாசக்கரம் சக்கரம்போல் எங்கும் சுழலும் அரசன் ஆணை .
ஆக்கினாசத்தி அரசனாணையின் வன்மை .
ஆக்கினாபங்கம் ஆணை மீறுகை .
ஆக்கினேயம் அக்கினிக்குரியது ; தென்கீழ்த்திசை ; காண்க : ஆக்கினேயாத்திரம் ; ஆக்கினேய புராணம் ; சிவாகமத்துள் ஒன்று ; திருநீறு .
ஆக்கினேயாத்திரம் அக்கினியைத் தேவதையாகக் கொண்ட அம்பு .
ஆக்கினை தண்டனை ; கட்டளை ; கட்டைவிரல் .
ஆக்கினைப்பத்திரம் அரசனது எழுத்து மூலமான கட்டளை .
ஆக்கு படைப்பு .
ஆக்குத்தாய் அநீதியாய் .
ஆக்குதல் செய்தல் ; படைத்தல் ; சமைத்தல் ; அமைத்துக்கொள்ளுதல் ; மாற்றுதல் ; உயர்த்துதல் .
ஆக்குப்புரை சமையற் பந்தல் .
ஆக்கும் போலும் .
ஆக்குரோசம் கடுஞ்சினம் .
ஆக்குவயம் பெயர் .
இரண்டாம் உயிரெழுத்து ; குரலிசையின் எழுத்து ; பெற்றம் ; மரை ; எருமை இம்மூன்றன் பெண்பாற் பெயர் ; இடபம் ; ஆன்மா ; காண்க : ஆச்சா ; விதம் ; ஆகுகை ; ஆவது ; ஓர் இரக்கக்குறிப்பு ; வியப்புக்குறிப்பு ; இகழ்ச்சிக்குறிப்பு ; புழுக்கக்குறிப்பு ; நினைவுக்குறிப்பு ; ஈற்றில் வரும் வினாவிடைச்சொல் ; எதிர்மறையைக் குறிக்கும் சாரியை ; எதிர்மறை இடைநிலை ; பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதி ; உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதி ; தொடங்கி அல்லது வரையும் எனப் பொருள் தரும் ஒருவடமொழி இடைச்சொல் .
ஆஅ வியப்பு , இரக்கம் , அவலம் இவற்றின் குறிப்பு .
ஆக்கக்கிளவி ஆக்கம் உணர்த்தும் சொல் ; செயற்கையை உணர்த்தும் ஆயினான் ; ஆயினாள் முதலியனவாய் வழங்கும் சொல் .
ஆக்கங்கூறுதல் வாழ்த்துதல் .
ஆக்கச்சொல் காண்க : ஆக்கக்கிளவி .
சொல்
அருஞ்சொற்பொருள்
ஆகனிகம் மண்ணகழ் கருவி ; பன்றி ; பெருச்சாளி .
ஆகா வியப்புக்குறிப்பு ; உடன்பாட்டுக் குறிப்பு ; ஒரு கந்தருவன் .
ஆகாசக்கத்தரி காண்க : வெண்டை .
ஆகாசக்கப்பல் ஆகாயவிமானம் .
ஆகாசக்கரை மனோராச்சியம் .
ஆகாசக்கட்டு மனோராச்சியம் .
ஆகாசக்கல் விண்ணிற் பறக்கும் அணு .
ஆகாசக்கோட்டை மனோராச்சியம் .
ஆகாசகங்கை மந்தாகினி ; பால்வீதி மண்டலம் ; பனிநீர் ; சிறுநீர் .
ஆகாசகபாலி புரளிக்காரன் ; மிக வல்லவன் .
ஆகாசகமனம் அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று ; ஆகாயத்தே செல்லுதல் .
ஆகாசகரடம் புகைப்படை .
ஆகாசகருடன் கொல்லன்கோவை ; சீந்தில் ; பேயத்தி .
ஆகாசசாமி பறந்துசெல்லும் ஆற்றலுடையோன் ; பறக்கும் குதிரை .
ஆகாசகாமினி விண்ணிற் பறந்து செல்வதற்கு உதவும் மந்திரம் .
ஆகாசசபை காஞ்சிபுரத்து நடராச சபை .
ஆகாசத்தாமரை காணக ; ஆகாயத்தாமரை .
ஆகாசத்துவனி வானொலி , அசரீரி .
ஆகாசதீபம் உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு ; கார்த்திகைத் திருநாளின்போது சொக்கப்பனையின்மேல் வைக்கும் விளக்கு .
ஆகாசதுந்துமி தேவதுந்துபி .
ஆகாசப்பந்தல் கற்பனை உலகு .
ஆகாசப்பாலம் கற்பனை உலகு .
ஆகாசப்புரட்டன் பெருமோசக்காரன் .
ஆகாசபட்சி காண்க : சாதகபட்சி ; வானம்பாடி .
ஆகாசபலம் விண்வீழ்கொள்ளி .
ஆகாசம் ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் .
ஆகாயம் ஐம்பூதத்துள் ஒன்று , வானம் ; வளிமண்டலம் .
ஆகாசமண்டலம் வானவெளி ; நாட்டிய வகையுள் ஒன்று .
ஆகாசமார்க்கம் வானவழி .
ஆகாசலிங்கம் பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்தில் உள்ளது .
ஆகாசவல்லி சீந்தில் ; ஒரு பூண்டு .
ஆகாசவாணம் அந்தரத்தில் செல்லும் சீறுவாணம் .
ஆகாசவாணி வானொலி , அசரீரி .
ஆகாயவாணி வானொலி , அசரீரி .
ஆகாத்தியம் பாசாங்கு ; பொல்லாங்கு .
ஆகாத கெட்ட ; வெறுப்புக்குரிய .
ஆகாதிலை மரவகையுள் ஒன்று ; கொடியார் கூந்தல் .
ஆகாதே அல்லவா ? .
ஆகந்துகம் இடையில் வந்தேறியது .
ஆகந்துகமலம் ஆன்மாவிடத்து இயல்பாகவன்றி இடையே தோன்றும் மாயை கன்மங்களாகிய இரண்டு மலங்கள் .
ஆகப்பாடு மொத்தம் .
ஆகம் உடல் ; மனம் ; மார்பு ; சுரை .
ஆகம்பிதசிரம் சிர அபிநயவகை .
ஆகம்பிடதம் மேலும் கீழுமாகத் தலையசைத்தல் ; சம்மதிக்குறி காட்டும் முகம் .
ஆகம்பிதமுகம் சம்மதித்தற்கு அறிகுறியாக மேல்கீழாகத் தலையாட்டுகை .
ஆகமங்களோதினோன் சிவபிரான் .
ஆகமசாத்திரம் சைவ வைணவ சாக்த சமணசமய நூல்கள் .
ஆகமப்பிரமாணம் காட்சியினாலும் அனுமானத்தினாலும் அறியப்படாத பொருளையும் அறிவிக்கும் உண்மையுரையாகிய சாத்திரம் .
ஆகமம் வேதசாத்திரங்கள் ; முதல்வன் வாக்கு ; வருகை ; தோன்றல் விகாரத்தால் வரும் எழுத்து .
ஆகமமலைவு ஆகமவிதிக்கு முரண் ; சாத்திரப் பிரமாணத்திற்கு மாறாக வருவது .
ஆகமவளவை காண்க : ஆகமப்பிரமாணம் .
ஆகமனம் வருகை .
ஆகமாந்தம் ஆகமங்களில் முடிவாகக் கொள்ளப்படும் சைவசித்தாந்தம் .
ஆகரம் இரத்தினச் சுரங்கம் ; உறைவிடம் ; அடிநிலை ; கூட்டம் ; காலாங்கபாடாணம் .
ஆகரன் குடியிருப்போன் ; கிண்டுவோன் ; சுந்தரமூர்த்தி நாயனார் .
ஆகரி ஒரு பண் ; திப்பிலி ; சிறுகட்டுக்கொடி .
ஆகரித்தல் தருவித்தல் .
ஆகருடணம் இழுக்கை ; அழைக்கை ; அறுபத்து நான்கு கலைகளுள் ஒன்று .
ஆகருடம் விற்பழக்கம் ; சூதாடுகை ; சூதாடுபலகை ; கவறு ; இழுக்கை .
ஆகவனம் பிணிக்கை ; விரும்புகை ; எண்பெருக்கல் .
ஆகலாகல் காண்க : ஆகவாக .
ஆகலூழ் ஆகூழ் ; நல்வினைப் பயன் .
ஆகவபூமி போர்க்களம் .
ஆகவம் போர் ; வேள்வி .
ஆகவனம் பலி .
ஆகவனீயம் வேதாக்கினிவகை மூன்றனுள் ஒன்று .
ஆகவாக உடம்படாமை ஆதாரமின்மைகளைக் குறிக்கும் அசைநிலை .
ஆகவியன் போர்வீரன் .
ஆகவும் ஆகுக .
ஆகவே ஆதலால் .
ஆகளமாய் இடைவிடாது .
ஆகளரசம் அபின் ; பாதரசம் .
ஆகளவாய் இருக்கும் அளவுக்கு .
ஆகன்மாறு ஆகையால் .
ஆகனாமி அவரை .       

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆகிருதி உருவம் ; உடல் ; அடிதோறும் ஒற்று நீங்கிய இருபத்திரண்டு உயிரெழுத்துக் கொண்டதும் நான்கு அடியை உடையதுமாய் வரும் சந்தம் .
ஆகிருநந்தனம் காண்க : ஆகிரந்தம் .
ஆகிருநனந்தம் காண்க : ஆகிரந்தம் .
ஆகிலியர் ஆகாதொழிக .
ஆகிவருதல் நன்றாகக் கூடிவருதல் .
ஆகின்று ஆகாநின்றது , அமைந்தது ; ஆயிற்று .
ஆகு கவரி ; கொப்பூழ் ; எலி ; பெருச்சாளி ; பன்றி ; கள்ளன் ; சாமரம் .
ஆகுகன் பெருச்சாளி ஊர்தியனாகிய விநாயகன் .
ஆகுஞ்சனம் சுருக்குகை .
ஆகுதல் ஆதல் .
ஆகுதி அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .
ஆவுதி அக்கினியில் மந்திர பூர்வமாகச் செய்யும் ஓமம் ; பலி ; ஒருவகைப் பறை .
ஆகுபுக்கு பூனை .
ஆகுபெயர் ஒன்றன் பெயராயிருந்தும் அதனோடு தொடர்புடைய மற்றொன்றற்குத் தொன்றுதொட்டு ஆகிவரும் பெயர் .
ஆகுயர்த்தோன் பெருச்சாளி உருப்பொறித்த கொடியுடையவனான கணபதி .
ஆகுரதன் காண்க : ஆகுகன் .
ஆகுலச்சொல் ஆரவாரப்பேச்சு .
ஆகுலம் மனக்கலக்கம் ; ஆரவாரம் .
ஆகுலி காண்க : சிற்றரத்தை ; ஆவிரைவகை .
ஆகுலித்தல் துன்புறுதல் .
ஆகுவாகனன் காண்க : ஆகுகன் .
ஆகுளி ஒருவகைச் சிறுபறை .
ஆகுனி வாதநோய்வகை .
ஆகூழ் நல்வினை ; ஆக்கத்திற்குக் காரணமான வினை ; முன்னேற்றத்திற்குக் காரணமான வினை .
ஆகேடகம் வேட்டை .
ஆகேடம் வேட்டை .
ஆகேருகம் தண்ணீர்விட்டான் கொடி .
ஆகேவகமுள்ளி காட்டுமுள்ளி .
ஆகேறு காண்க : சரக்கொன்றை .
ஆகை ஆதல் ; உயருதல் ; நிகழுகை .
ஆகைச்சுட்டி ஆகையால் .
ஆகையர் முடிவு ; கூட்டிவந்த மொத்தத் தொகை .
ஆகையால் ஆதலால் .
ஆகோசனம் கோரோசனை .
ஆகோள் போரில் பகைவரின் பசுக்களைக் கவர்ந்துகொள்ளுகை .
ஆங்க அங்ஙனே எனப் பொருள்படும் உரையசை ; வினையுவம வாய்பாடுகளுள் ஒன்று .
ஆங்கண் அவ்விடத்து .
ஆங்கனம் அவ்விதம் .
ஆங்காங்கு அங்கங்கு .
ஆங்காரம் பற்று ; காண்க : அகங்காரம் ; செருக்கு ; கரித்திரள் .
ஆங்காரி அகங்காரம் உள்ளவன்(ள்) .
ஆங்காரித்தல் காண்க : அகங்கரித்தல் .
ஆங்காலம் நற்காலம் .
ஆங்கிலம் ஆங்கிலமொழி .
ஆங்கீரச அறுபதாண்டுக் கணக்கில் ஆறாம் ஆண்டு .
ஆங்கு அவ்விடம் ; அக்காலத்தில் ; அப்படி ; ஓர் உவம உருபு ; ஏழன் உருபு ; ஓர் அசைநிலை .
ஆங்குதல் போதியதாதல் .
ஆங்ஙனம் காண்க : அங்ஙனம் .
ஆச்சமரம் சங்கஞ்செடி .
ஆச்சமாதிகம் மலைவெற்றிலை .
ஆச்சரியம் வியப்பு .
ஆச்சல் பாய்ச்சல் ; வண்டிப் பாதையில் உண்டாகும் பள்ளம் .
ஆச்சன் காண்க : அச்சன் .
ஆகாமியம் அதிக்கிரமம் ; மூவகைக் கன்மங்களுள் ஒன்று ; இப்பிறப்பில் செய்யும் புண்ணிய பாவங்கள் .
ஆகாயக்கக்கரி கக்கரிவகை .
ஆகாயகங்கை மந்தாகினி .
ஆகாயகணம் செய்யுள் கணத்துள் ஒன்று ; கருவிளங்காய்ச் சீராய் அமைவது .
ஆகாயகமனம் அறுபத்துநாலு கலையுள் வானத்தில் நடந்துசெல்லும் வித்தை .
ஆகாயச்சக்கரம் சித்திரகவிவகை .
ஆகாயச்சொல் எதிரில் இல்லாதான் ஒருவனை முன்னிலைப்படுத்திக் கூறும் பேச்சு .
ஆகாயசாரிகள் வானத்தில் திரிவோர் , சாரணர் .
ஆகாயசூலை குதிரை நோய்வகை .
ஆகாயத்தாமரை பூண்டுவகை ; குளிர்தாமரை ; இல்பொருள் ; கொட்டைப்பாசி .
ஆகாயப்பிரவேசம் காண்க : ஆகாயகமனம் .
ஆகாயப்பூ காண்க : ஆகாயத்தாமரை .
ஆகாயப்பூரிதம் பேய்முசுட்டை .
ஆகாயமாஞ்சி காண்க : சிறுசடாமாஞ்சில் .
ஆகாயவாசிகள் பதினெண் கணத்துள் ஒரு சாரார் .
ஆகாரசமிதை வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி .
ஆகாரசன்னை நால்வகை முரசுகளுள் ஒன்று .
ஆகாரம் உருவம் ; உடம்பு ; ' ஆ ' என்னும் எழுத்து ; உணவு ; நெய் ; குறிப்பு .
ஆகாரி உயிர் ; பூனை .
ஆகிய பண்புருபு .
ஆகிரந்தம் புன்கமரம் .
ஆகிரிநாட்டை பண்வகை ; காண்க : ஆகரி .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆச்சியம் நெய் ; எள்ளத்தக்கது ; கட்டணம் ; தேவதாருவின் பிசின் .
ஆச்சியாடு மற்ற ஆட்டு மந்தையிலிருந்து இரந்து பெறப்பட்ட ஆடு .
ஆச்சிரமம் காண்க : ஆசிரமம் .
ஆச்சிராமம் காண்க : ஆசிரமம் .
ஆச்சிரமி நால்வகை ஆசிரமங்களுள் ஒன்றில் இருப்பவன் .
ஆச்சிரயம் பகை வெல்லுதற்குப் பலமுள்ளான் ஒருவனை அடைகை ; பாதுகாப்பு ; கொளு கொம்பு ; புகலிடம் .
ஆச்சிரயாசித்தம் பட்சத்தில் இல்லாத ஏதுவைக் கூறும் ஏதுப்போலி .
ஆச்சிரவம் சூள் ; கீழ்ப்படிகை ; வருத்தம் ; கன்மத்தொடர்ச்சி ; ஆன்மா பொறிவழிச் சேறல் .
ஆச்சிலை கோமேதகம் .
ஆச்சு ஆயிற்று , முடிந்தது ; ஒருவகை உரையசை .
ஆச்சுக்காசி மஞ்சட்கோங்கு .
ஆச்சுரிதகம் சிரிப்பு ; நகக்குறிவகை .
ஆச்சுவாசம் சாக்காடு ; அத்தியாயம் .
ஆசங்கித்தல் ஐயுறுதல் ; மறுத்தல் .
ஆசங்கை ஐயம் ; மறுப்பு .
ஆசட்சு கண் ; பண்டிதன் .
ஆசடை நீளவாட்டத்தில் அமைக்கும் வீட்டின் முகட்டுத் தூலம் .
ஆசத்தி விருப்பம் , பற்று .
ஆசந்தி சவம் கொண்டுபோகும் பாடை ; பெரிய வெள்ளிக்கிழமையன்று சிலுவையில் அமைந்த இயேசுநாதர் திருவுருவத்தை ஊர்வலம் செய்விக்கை ; சிறுகட்டில் ; பிரம்பாலான இருக்கை .
ஆசந்திரதாரம் சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ளவரை .
ஆசந்திரார்க்கம் சந்திர சூரியர்கள் உள்ளவரை .
ஆசம் சிரிப்பு .
ஆசமனம் காண்க : ஆசமித்தல் .
ஆசமனீயம் ஆசமனநீர் .
ஆசமித்தல் வலக்குடங்கையால் மந்திர பூர்வமாக நீரை மும்முறை உட்கொள்ளுதல் .
ஆசயம் உறைவிடம் ; உடலின் உட்பை ; மனம் ; கருத்து ; உழை ; பலா .
ஆசர் ஆயத்தம் ; நேர்வந்திருத்தலைக் குறிக்கும் சொல் .
ஆசர்ப்பட்டி வருகைப் பதிவேடு .
ஆசரணம் பழக்கம் ; வழக்கம் ; அனுட்டானம் .
ஆசரணை காண்க : ஆசரணம் ; தூய்மை .
ஆசரித்தல் அனுட்டித்தல் ; கைக்கொள்ளுதல் ; வழிபடுதல் .
ஆசல் மதிப்பு .
ஆசலம் மக்க சஞ்சலம் ; குற்றமும் துன்பமும் .
ஆசலை ஆடாதோடை .
ஆசவம் கள் .
ஆசவுசம் தீட்டு .
ஆசற குறையற .
ஆசறுதல் குற்றமின்மை ; முடிதல் .
ஆசறுதி கடைசி .
ஆசறுதிப்பல் கடைவாய்ப் பல் .
ஆசன்னம் அண்மையானது .
ஆசனக்கிருமி மலப்புழுவகை .
ஆசனக்குளிகை மலவாய்வழியாய்ச் செலுத்தும் மாத்திரை .
ஆசனந்திருத்துதல் பெரியோர்க்கு இருக்கை அமைத்தல் .
ஆசனபவுத்திரம் பகந்தரம் , மலவாயில் புரைவைத்த புண் .
ஆசனம் பீடம் முதலிய தவிசு ; இருக்கைநிலை ; மலவாய் ; உரிய காலம் வரும்வரை பகைமேற் செல்லாதிருக்கை .
ஆசனவாய் மலவாய் .
ஆசனவெடிப்பு நோய்வகை .
ஆசனி பலாவகை ; பெருங்காயம் .
ஆசாசி சீந்தில் .
ஆசாசித்தல் வாழ்த்துதல் .
ஆசாட்டம் தெளிவற்ற தோற்றம் .
ஆசாடபூதி தோற்றத்திற்கு ஏற்ற பண்பற்றவன் ; துரோகி ; வஞ்சகன் .
ஆசாடம் முருக்கு ; ஆடிமாதம் ; மரக்கொம்பு ; தவசியின் கைக்கோல் .
ஆசாபங்கம் விரும்பியது பெறாமை .
ஆசாபந்தம் நம்பிக்கை ; சிலந்திவலை .
ஆசாபாசம் ஆசையாகிய பற்று .
ஆசாபைசாசம் ஆசையாகிய பேய் .
ஆசாம்பரன் திசைகளையே ஆடையாகக் கொண்டவன் , சிவன் .
ஆசாமி ஆள் .
ஆசாமிக்களவு ஆளைத் திருடுகை .
ஆச்சனை முழுதும் செலவழிக்கை .
ஆச்சா சாலமரம் ; கள்ளி .
ஆச்சாசினி சாலமரம் ; கள்ளி .
ஆச்சாசோபிகம் பெருங்கிலுகிலுப்பை .
ஆச்சாட்டு சிற்றீரம் .
ஆச்சாட்டுப்பயிர் சிற்றீரமுள்ள நிலத்துப்பயிர் .
ஆச்சாதம் உறை ; சீலை ; மூடி ; மேலாடை .
ஆச்சாதனபலம் பருத்திக்கொட்டை .
ஆச்சாதனபலை பருத்திக்கொட்டை .
ஆச்சாதனம் ஆணவமலம் ; அஞ்ஞானம் ; மறைப்பு ; ஆடை .
ஆச்சாள் தாய் .
ஆச்சான் ஆசாரியன் .
ஆச்சி தாய் ; பாட்டி ; மூத்த தமக்கை ; சிறப்பு வாய்ந்த பெண்டிரைக் குறிக்குஞ் சொல் ; குரு பத்தினி .
ஆச்சிபூச்சி விளையாட்டுவகை .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;