சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆசியம் | வாய் ; முகம் ; சிரிப்பு ; முகத்திற்குரியது ; பரிகாசம் ; ஒன்பான் சுவையுள் ஒன்று . |
ஆசிரமம் | முனிவர் உறைவிடம் ; பன்னசாலை ; வாழ்க்கைநிலை . |
ஆசிரமி | ஆசிரமநிலையில் நிற்பவன் ; சன்னியாசி . |
ஆசிரயணம் | சார்ந்து நிற்கை . |
ஆசிரயம் | சார்ந்து நிற்கை . |
ஆசிரயித்தல் | சார்தல் . |
ஆசிரிதம் | சார்ந்திருக்கை . |
ஆசிரிதன் | சார்ந்திருப்பவன் . |
ஆசிரியக்கல் | தன்னைக் காத்துதவும்படி பிறனுக்கு எழுதிவைக்கும் கல்வெட்டு . |
ஆசிரியச்சீர் | காண்க : அகவல் உரிச்சீர் . |
ஆசிரியச் சுரிதகம் | அகவலால் ஆகிய சுரிதகம் என்னும் பாவுறுப்பு . |
ஆசிரியத்தளை | மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத் தொடுக்கும் செய்யுள் தளை . |
ஆசிரியத்தாழிசை | ஆசிரியப்பா இனத்துள் ஒன்று ; ஒத்த சீர்கொண்ட மூன்றடியுடைய தாய்த் தனித்தோ , மூன்று சேர்ந்தோ ஒரு பொருள்மேல் வருவது . |
ஆசிரியத்துறை | காண்க : அகவற்றுறை . |
ஆசிரியப்பா | காண்க : அகவற்பா . |
ஆசிரியப்பிரமாணம் | ஒருவன் தன்னைக் காப்பாற்றும்படி எழுதிக்கொடுக்கும் முறி . |
ஆசிரியம் | காண்க : அகவற்பா ; ஆசிரியக்கல் . |
ஆசிரியவசனம் | மேற்கோள் . |
ஆசிரியவிருத்தம் | காண்க : அகவல்விருத்தம் . |
ஆசிரியவுரிச்சீர் | காண்க : அகவல்உரிச்சீர் . |
ஆசிரியன் | குரு ; போதகாசிரியன் ; நூலாசிரியன் ; உரையாசிரியன் ; புலவன் . |
ஆசினி | ஈரப்பலா ; மரவயிரம் ; மரப்பொதுப்பெயர் ; மரவுரி ; வானம் ; சிறப்பு . |
ஆசாமிவாரிச் சிட்டா | இனவாரி வரிக்கணக்கு . |
ஆசார்யாபிடேகம் | குருவாதற்குச் செய்யப்படும் சடங்கு . |
ஆசாரக்கணக்கு | கோயிலில் ஆசாரங்களைக் குறித்து வைக்கும் புத்தகம் . |
ஆசாரக்கள்ளன் | ஒழுக்கம் உள்ளவன்போல் நடிப்பவன் . |
ஆசாரக்கள்ளி | ஒழுக்கமுடையாள்போல் நடிப்பவள் . |
ஆசாரங்கூட்டுதல் | தூய்மையாகச் செய்தல் . |
ஆசாரச்சாவடி | பொதுச்சாவடி ; கொலுமண்டம் . |
ஆசாரஞ்செய்தல் | ஒழுக்கத்தைக் கடைப் பிடித்தல் . |
ஆசாரப்பிழை | ஒழுக்கத்தவறு . |
ஆசாரபரன் | ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன் . |
ஆசாரபோசன் | பகட்டுத் தோற்றமுள்ளவன் . |
ஆசாரம் | சாத்திர முறைப்படி ஒழுகுகை ; நன்னடை ; காட்சி ; வியாபகம் ; சீலை ; படை ; அரசர்வாழ் கூடம் ; தூய்மை ; பெருமழை ; உறுதிப்பொருள் ; முறைமை . |
ஆசாரம்பண்ணுதல் | உபசாரஞ்செய்தல் . |
ஆசாரலிங்கம் | சிவலிங்க பேதங்களுள் ஒன்று . |
ஆசாரவாசல் | தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் . |
ஆசாரவாயில் | தலைவாசல் ; கோயிலின் நுழைவாயில் , கொலுமண்டப வாசல் . |
ஆசாரவீனன் | ஒழுக்கங்கெட்டவன் . |
ஆசாரவீனி | ஒழுக்கங்கெடடவள் . |
ஆசாரவீனை | ஒழுக்கங்கெடடவள் . |
ஆசாரவுபசாரம் | காண்க : ஆசாரோபசாரம் . |
ஆசாரி | மாத்துவ ஸ்ரீவைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் ; கம்மாளர் பட்டப்பெயர் ; குரு ; ஒழுக்கமுள்ளவன் . |
ஆசாரியசம்பாவனை | நல்ல காலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்கும் காணிக்கை . |
ஆசாரியப்பட்டம் | குருவாக அபிடேகமாகும் பொழுது தாங்கும் பட்டம் . |
ஆசாரியபக்தி | குருபக்தி . |
ஆசாரியபூசனை | குருக்களுக்குரிய காணிக்கை . |
ஆசாரியபோகம் | ஆசாரியன் அனுபவிக்கும் மானியம் . |
ஆசாரியன் | குரு ; சமயத்தலைவன் ; ஆசிரியன் . |
ஆசாரியன் திருவடியடைதல் | இறந்து நற்கதி அடைதல் . |
ஆசாரியாபிடேகம் | குருவாக அமர்த்தும் சடங்கு . |
ஆசாரோபசாரம் | மிக்க மரியாதை . |
ஆசாள் | குருபத்தினி ; தலைவி . |
ஆசான் | ஆசிரியன் ; புரோகிதன் ; மூத்தோன் ; வியாழன் ; அருகன் ; முருகக்கடவுள் ; பாலையாழ்த்திறவகை ; காந்தாரம் , சிகண்டி , தசாக்கரி , சுத்தகாந்தாரம் என்னும் நால்வகைப் பண்ணியல் . |
ஆசான்றிறம் | குரலுக்குரிய திறம் ; பாலையாழ்த்திறம் . |
ஆசானங்கை | காட்டாமணக்கு . |
ஆசானுபாகு | முழந்தாளளவு நீண்ட கையுடையோன் . |
ஆசானுவாகு | முழந்தாளளவு நீண்ட கையுடையோன் . |
ஆசி | வாழ்த்து ; வாழ்த்தணி ; ஒத்த தரை ; போர் . |
ஆசிக்கல் | காகச்சிலை . |
ஆசிகம் | முகம் . |
ஆசிடுதல் | பற்றாசு வைத்தல் ; நேரிசை வெண்பாவில் காணும் முதற்குறளின் இரண்டாம் அடி இறுதிச் சீர்க்கும் தனிச்சொல்லுக்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல் ; எதுகையில் ய , ர , ல , ழ என்னும் நான்கிலொன்றை ஆசாக இடுதல் . |
ஆசிடை | வாழத்து ; கூட்டம் ; ஆடை . |
ஆசிடையெதுகை | காண்க : ஆசெதுகை . |
ஆசிடைவெண்பா | நேரிசை வெண்பாவில் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் கூட்டப்பட்டு அசையுடன் வருவது . |
ஆசித்தல் | விரும்புதல் . |
ஆசிதகம் | இருத்தல் . |
ஆசிதம் | ஒருவண்டிப் பாரம் ; இருநூறு துலாங்கொண்ட பாரம் ; வாழுமிடம் ; நகரம் . |
ஆசிமொழி | வாழ்த்தணி . |
ஆசியக்காரன் | விகடம் செய்வோன் . |
ஆசியசீரகம் | கருஞ்சீரகம் . |
ஆசியநாடகம் | நகைச்சுவையுள்ள நாடகம் . |
ஆசாமிசோரி | ஆளைத் திருடுகை . |
ஆசாமிவாரி | இனவாரி . |
ஆசாமிவாரி இசாபு | அடங்கல் கணக்கு . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆசுவிகன் | காண்க : ஆசீவகன் . |
ஆசுவிமக்கள் | காண்க : ஆசுபொதுமக்கள் . |
ஆசுவினம் | ஐப்பசி , சாந்திரமாதத்துள் ஏழாவது . |
ஆசுவீசம் | ஐப்பசி , சாந்திரமாதத்துள் ஏழாவது . |
ஆசூ | நரக வாதை : அமஞ்சிவேலை . |
ஆசூசம் | தீட்டு . |
ஆசூரம் | காண்க : வெள்வெண்காயம் . |
ஆசெதுகை | ய் , ர் , ல் , ழ் என்னும் மெய்யெழுத்துகளுள் ஒன்று அடியெதுகை இடையே ஆசாக வருவது |
ஆசெறூண் | ஆசெல்தூண் , ஆதீண்டுகுற்றி . |
ஆசேகம் | நனைக்கை . |
ஆசேதம் | அரசன் ஆணையை மேற்கொண்டு தடைசெய்கை . |
ஆசை | வேண்டலுறும் பொருட்கண் செல்லும் விருப்பம் ; விருப்பம் ; பொருளாசை ; காமவிச்சை ; அன்பு ; பேற்றில் நம்பிக்கை ; பொன் ; திசை ; பொன்னூமத்தை . |
ஆசைக்காரணர் | திக்குப் பாலகர் . |
ஆசைகாட்டுதல் | தன்வசமாகும் பொருட்டு இச்சை உண்டாக்குதல் . |
ஆசைநாயகி | அன்புக்குரியாள் ; வைப்பாட்டி . |
ஆசைப்படுதல் | விரும்புதல் . |
ஆசைப்பதம் | வசீகரப் பேச்சு . |
ஆசைப்பாடு | விருப்பம் . |
ஆசைப்பேச்சு | இச்சகம் ; வசமாக்கும் பேச்சு . |
ஆசைபிடித்தல் | இச்சை மிகுதல் . |
ஆசைபூட்டுதல் | ஆசையில் சிக்கச்செய்தல் . |
ஆசைமருந்து | தன்வசமாகக் கூட்டும் மருந்து . |
ஆசைவார்த்தை | நம்பிக்கை உண்டாகச் சொல்லும் சொல் . |
ஆசோதை | இளைப்பாறுகை ; வேலை முடிந்த பின் கொள்ளும் ஒய்வு . |
ஆசௌசம் | தீட்டு . |
ஆஞ்சனேயன் | அஞ்சனாதேவியின் மகனான அனுமான் . |
ஆஞ்சான் | மரக்கலப் பாயை இழுக்கும் கயிறு ; பாரந் தூக்கும் கயிறு ; இளமரத்தின் தண்டு ; தண்டனைக்குரிய கோதண்டம் . |
ஆஞ்சான்கயிறு | கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவும் கயிறு . |
ஆஞ்சான்பற்றி | மரக்கலக் கூம்பு . |
ஆஞ்சி | அச்சம் ; அலைவு ; கூத்து ; சோம்பு ; ஏலம் . |
ஆஞ்சிக்காஞ்சி | போர்க்களத்தில் இறந்த கணவனது வேல்வடுவைக் கண்டு மனைவி அஞ்சிய புறத்துறை ; போர்க்களத்தில் கணவனுடன் தீயில் மூழ்கும் மனைவியின் பெருமை கூறும் புறத்துறை . |
ஆஞ்சித்தாழை | மஞ்சள் நிறமுள்ள தாழைவகை . |
ஆஞ்சிரணம் | காட்டுத்துளசி . |
ஆஞ்சில் | சங்கஞ்செடி . |
ஆஞ்சிறிகம் | சங்கஞ்செடி . |
ஆஞ்ஞாசக்கரம் | அரசாணையாகிய சக்கரம் . |
ஆஞ்ஞாபனம் | கட்டளையிடுதல் . |
ஆஞ்ஞாபித்தல் | கட்டளையிடுதல் . |
ஆஞ்ஞை | கட்டளை ; ஆறாதாரங்களுள் ஒன்று . |
ஆஞா | தந்தை . |
ஆஞான் | தந்தை . |
ஆட்கடியன் | பாம்புவகை ; முதலை . |
ஆட்காசு | ஆள் உருவம் பொறித்த பழங்காசு வகை . |
ஆட்காட்டி | சுட்டுவிரல் ; பறவைவகை ; ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக் காட்டும் அடையாளப் பலகை . |
ஆட்கால் | சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை . |
ஆட்கூலி | ஒரு வேலைக்காரனுக்குரிய கூலி . |
ஆட்கொல்லி | கொலைஞன் ; பணம் ; தில்லை மரம் . |
ஆசீயம் | கருஞ்சீரகம் . |
ஆசீர்வசனம் | வாழ்த்துரை . |
ஆசீர்வதித்தல் | வாழ்த்துதல் . |
ஆசீர்வாதம் | வாழ்த்து . |
ஆசீல் | மதிப்பு . |
ஆசீல்கட்டுதல் | மதிப்பிடுதல் . |
ஆசீவகப்பள்ளி | ஆசீவகத் தவத்தோர் உறைவிடம் . |
ஆசீவகன் | சமணருள் ஒரு பிரிவினன் ; சமணத்துறவி . |
ஆசு | குற்றம் ; ஆணவமலம் ; புல்லிது ; நுட்பம் ; ஐயம் ; துன்பம் ; பற்றுக்கோடு ; வாளின் கைப்பிடி ; கவசம் ; கைக்கவசம் ; பற்றாசு ; நேரிசை வெண்பாவின் முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்கும் இடையில் கூட்டப்படும் அசை ; எதுகை இடையில் வரும் ய் , ர் , ல் , ழ் என்னும் ஒற்றுகள் ; நூலிழைக்கும் கருவிகளுள் ஒன்று ; இலக்கு ; விரைவு ; ஆசுகவி ; இடைக்கார்நெல்வகை ; அச்சு . |
ஆசுக்காயம் | நரிவெங்காயம் . |
ஆசுகம் | காற்று ; அம்பு ; பறவை . |
ஆசுகவி | கொடுத்த பொருளை அடுத்த பொழுதில் பாடும் பாட்டு ; ஆசுகவி பாடும் புலவன் . |
ஆசுகன் | காற்று ; சூரியன் . |
ஆசுகி | பறவை . |
ஆசுசுக்கணி | நெருப்பு . |
ஆசுணம் | காண்க : அசோகம் ; அரசு . |
ஆசுபத்திராமரம் | மரவகை . |
ஆசுபொதுமக்கள் | சமணருள் ஒரு சாரார் . |
ஆசுமணை | நெய்தற் கருவிகளுள் ஒன்று . |
ஆசுரம் | அசுர சம்பந்தமானது காண்க : அசுரம் ; தலைமகட்குப் பொன் சூட்டிச் சுற்றத்தார்க்கும் வேண்டுவன கொடுத்துக் கொள்ளும் மணம் ; கேழ்வரகு ; வெள்ளைப்பூண்டு ; இஞ்சி ; நாளிகம் முதலிய கருவிகளால் செய்யப்படும் போர் . |
ஆசுரவைத்தியம் | அறுவை மருத்துவம் . |
ஆசுராப்பண்டிகை | மொகரம் பண்டிகை . |
ஆசுரி | அசுரப்பெண் . |
ஆசுவடிமக்கள் | காண்க : ஆசுபொதுமக்கள் . |
ஆசுவம் | குதிரைக்கூட்டம் ; குதிரை இழுக்குந்தேர் ; குதிரை சம்பந்தமுடையது ; ஆசீவகர் உணவு . |
ஆசுவயம் | விரைவு ; வேதநுட்பம் . |
ஆசுவயுசி | ஒரு வேள்வி ; ஐப்பசி மாத முழுநிலா . |
ஆசுவாசம் | இளைப்பாறுகை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆட்டைத்திவசம் | முதலாண்டு நினைவுநாள் , தலைத்திவசம் . |
ஆட்சேபம் | தடை , மறுத்துக் கூறுதல் . |
ஆட்சேபனை | தடை , மறுத்துக் கூறுதல் . |
ஆட்சேபித்தல் | தடைசெய்தல் , மறுத்தல் . |
ஆட்சேவகம் | ஒருவன் தன் உடம்பால் செய்யும் ஊழியம் ; ஊழியம் . |
ஆட்சை | கிழமை . |
ஆட்டக்கச்சேரி | சதிர் . |
ஆட்டகம் | திருமஞ்சன சாலை , குளியல் அறை . |
ஆட்டத்துவெளி | குதிரையை ஓடவிடுகின்ற வெளியிடம் ; குதிரைப் பந்தயத் திடல் . |
ஆட்டபாட்டம் | ஆடல்பாடல் ; ஆர்ப்பாட்டம் . |
ஆட்டம் | அசைவு ; அலைவு ; சஞ்சாரம் ; விளையாட்டு ; விளையாட்டில் தொடங்குமுறை ; கூத்தாட்டு ; சூது ; அதிகாரம் ; ஓர் உவம உருபு . |
ஆட்டமடித்தல் | விளையாட்டில் வெல்லுதல் ; கிட்டிப்புள் விளையாட்டு . |
ஆட்டமெடுத்தல் | விளையாட்டில் வெல்லுதல் ; வழிதேடுதல் . |
ஆட்டாங்கள்ளி | காண்க : திருகுகள்ளி . |
ஆட்டாங்கொடி | சோமக்கொடி . |
ஆட்டாங்கொறுக்கு | மலைத்துவரை . |
ஆட்டாங்கோரை | கோரைவகை . |
ஆட்டாண்டு | ஒவ்வோராண்டும் . |
ஆட்டாம்பிழுக்கை | ஆட்டின் மலம் . |
ஆட்டாள் | ஆட்டிடையன் . |
ஆட்டாளி | செயலாளன் . |
ஆட்டி | பெண் ; மனைவி ; பெண்பால் விகுதி . |
ஆட்டிடையன் | ஆடுமேய்க்கும் இடையன் . |
ஆட்டிறைச்சி | ஆட்டுக்கறி . |
ஆட்டினி | காட்டுப்பூவரசு . |
ஆட்டீற்று | ஆண்டுதோறும் ஈனுகை . |
ஆட்டு | கூத்து ; விளையாட்டு . |
ஆட்டுக்கசாலை | ஆட்டுக்கிடை . |
ஆட்டுக்கடா | ஆணாடு . |
ஆட்டுக்கல் | அரைக்குங் கல்லுரல் ; ஆட்டுரோசனை . |
ஆட்டுக்காதுக்கள்ளி | காண்க : ஆட்டுச்செவிக்கள்ளி . |
ஆட்டுக்கால் | காண்க : பூமருது ; ஆட்டுக்கால் அடம்பு . |
ஆட்டுக்காலடம்பு | அடப்பங்கொடி . |
ஆட்டுக்கிடாய் | காண்க : ஆட்டுக்கடா . |
ஆட்டுக்கிடை | ஆடுகளைக் கூட்டுமிடம் . |
ஆட்டுக்கிறை | காண்க : ஆட்டுவரி . |
ஆட்டுக்கொம்பவரை | அவரைவகை . |
ஆட்டுக்கொம்பொதி | ஆட்டுக்கொம்பு போன்ற காயையுடைய ஒரு மரம் . |
ஆட்டுச்சக்கரணி | மஞ்சள் அலரி . |
ஆட்டுச்சதை | காண்க : ஆடுசதை . |
ஆட்டுச்செவிக்கள்ளி | கள்ளிவகை . |
ஆட்டுச்செவிப்பதம் | தேங்காயின் வழுக்கைப் பதம் . |
ஆட்டுகம் | காண்க : ஆடாதோடை . |
ஆட்டுத்துழாய் | காட்டுத்துளசி . |
ஆட்டுத்தொட்டி | காண்க : ஆட்டுக்கிடை . |
ஆட்டுதப்பி | ஆடு அசையிடுமிரை . |
ஆட்டுதல் | அசைத்தல் ; துரத்துதல் ; அலைத்தல் ; வெல்லுதல் ; ஆடச்செய்தல் ; நீராட்டுதல் ; அரைத்தல் . |
ஆட்டுப்பட்டி | காண்க : ஆட்டுக்கிடை . |
ஆட்டுப்பலகை | செக்கின்கீழுள்ள சுற்றுமரம் . |
ஆட்டுமந்தை | ஆட்டின் கூட்டம் ; ஆடு கூடுமிடம் . |
ஆட்டுமயிர்ச்சரக்கு | கம்பளித்துணி . |
ஆட்டுமுட்டி | அதிமதுரம் . |
ஆட்டுரல் | ஆட்டுக்கல் . |
ஆட்டுலா | காண்க : ஆட்டுக்காலடம்பு . |
ஆட்டுவரி | ஆட்டுக்கு விதிக்கப்படும் தீர்வை . |
ஆட்டுவாகனன் | ஆட்டை ஊர்தியாகவுடைய அக்கினிதேவன் . |
ஆட்டுவாணிகன் | ஆட்டு வியாபாரி ; ஆட்டிறைச்சி விற்போன் . |
ஆட்டுவாணியன் | ஆட்டு வியாபாரி ; ஆட்டிறைச்சி விற்போன் . |
ஆட்டுவிப்போன் | நட்டுவன் . |
ஆட்டூரவேம்பு | மலைவேம்பு . |
ஆட்டை | விளையாட்டில் தொடங்குமுறை ; ஆண்டு . |
ஆட்டைக்காணிக்கை | பழங்கால வரிகளுள் ஒன்று . |
ஆட்டைக்கோள் | ஆண்டுதோறும் செலுத்த வேண்டும் தொகை . |
ஆட்டைச்சம்மாதம் | வரிவகை . |
ஆட்டைத்திதி | முதலாண்டு நினைவுநாள் , தலைத்திவசம் . |
ஆட்கொள்ளுதல் | அடிமை கொள்ளுதல் . |
ஆட்சி | உரிமை ; ஆளுகை ; அதிகாரம் ; ஆன்றோர் வழக்கு ; அனுபவம் ; தாயமுறையில் வந்த உரிமை ; மக்கள் அணையலாகாதெனக் கட்டளையிடப்பட்ட இடம் ; கோள்நிலை ; கிழமை . |
ஆட்சிவீடு | கோள்களின் சொந்த வீடு . |
ஆட்சித்தானம் | கோள்களின் சொந்த வீடு . |
ஆட்சிப்படுதல் | உரிமையாதல் . |
ஆட்சிராசி | ஒரு கோளுக்குச் சொந்தமான வீடு . |
ஆட்சுமை | ஓராள் தூக்கும் பாரம் . |
ஆட்செய்தல் | தொண்டுசெய்தல் . |
ஆட்சேபசமாதானம் | தடைவிடை . |
ஆட்சேபணம் | தடை , மறுத்துக் கூறுதல் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆடிப்பால் | ஆடிமாதப் பிறப்பில் செய்யும் விருந்தில் பயன்படுத்தும் தேங்காய்ப் பாலுணவு . |
ஆடிப்பூரம் | ஆடிமாதத்துப் பூரநாளில் நிகழும் அம்மன் திருவிழா . |
ஆடிப்பெருக்கு | பதினெட்டாம் பெருக்கு ; ஆடிமாதத்தில் காவேரிப் பெருக்கினைக் குறித்து எடுக்கப்படும் கொண்டாட்டம் . |
ஆடிப்போதல் | கட்டுக்குலைந்துபோதல் . |
ஆடியகூத்தன் | தில்லைமரம் . |
ஆடியறவெட்டை | ஆடிமாதத்தில் உண்டாகும் பொருள்முடை . |
ஆடு | வெற்றி ; விலங்குவகை ; மேடராசி ; கூத்து ; கூர்மை ; கொல்லுகை ; சமைக்கை ; காய்ச்சுகை . |
ஆடுகால் | ஏற்றத்தில் துலாத்தாங்கு மரம் . |
ஆடுகொப்பு | மகளிர் காதணிவகை . |
ஆடுகொம்பு | கட்டுகொம்பு . |
ஆடுசதை | முழங்காலின் கீழ்த்தசை . |
ஆடுஞ்சரக்கு | வெப்பத்தால் காற்றாய்ப் போகும் இரசம் முதலிய பொருள்கள் ; மருந்துச் சரக்கு . |
ஆடுதல் | அசைதல் ; கூத்தாடுதல் ; விளையாடுதல் ; நீராடுதல் ; பொருதல் ; சஞ்சரித்தல் ; முயலுதல் ; பிறத்தல் ; சொல்லுதல் ; செய்தல் ; அனுபவித்தல் ; புணர்தல் ; பூசுதல் ; அளைதல் ; தடுமாறுதல் ; எந்திர முதலியவற்றில் அரைபடுதல் ; விழுதல் ; செருக்குதல் . |
ஆடுதலி | அதிகாரியோடுகூட இருக்கும் ஊழியன் . |
ஆடுதின்னாப்பாளை | புழுக்கொல்லிப் பூண்டு . |
ஆடுதீண்டாப்பாளை | புழுக்கொல்லிப் பூண்டு . |
ஆடுதுடை | சதைப்பற்றுள்ள தொடைப் பகுதி . |
ஆடுதோடா | காண்க : ஆடாதோடை . |
ஆடுநர் | கூத்தர் . |
ஆடும்பாத்திரம் | நாட்டியப் பெண் . |
ஆட்டைப்பாழ் | ஆண்டு முழுவதும் தரிசு கிடந்த நிலம் . |
ஆட்டைவட்டம் | ஆண்டுதோறும் . |
ஆட்டைவட்டன் | ஆண்டுதோறும் . |
ஆட்டைவாரியர் | ஊராட்சியை ஆண்டுதோறும் மேற்பார்வையிடும் சபையார் . |
ஆட்டைவிழா | ஆண்டுத் திருவிழா . |
ஆட்டோசை | ஆட்டுக்குரலையொத்த தாரவிசையின் ஓசை . |
ஆட்படுத்தல் | அடிமைகொள்ளுதல் . |
ஆட்படுத்துதல் | காண்க : ஆட்படுத்தல் ; வளர்த்து ஆளாக்குதல் ; முன்னுக்குக் கொண்டு வருதல் . |
ஆட்படுதல் | அடிமையாதல் ; உயர்நிலை அடைதல் ; உடல்நலமுறுதல் . |
ஆட்பலி | நரபலி ; தெய்வத்தின் பொருட்டு மனிதனைப் பலியாகக் கொடுக்கை . |
ஆட்பழக்கம் | மனிதப் பழக்கம் . |
ஆட்பார்த்தல் | வேற்றாள் வராமல் நோக்குதல் ; ஆள்தேடுதல் . |
ஆட்பாலவன் | அடியான் . |
ஆட்பிடியன் | முதலை . |
ஆட்பிரமாணம் | ஆள்மட்ட அளவு . |
ஆடகக்குடோரி | மயிலடிக்குருந்து . |
ஆடகச்சயிலம் | மேருமலை . |
ஆடகத்தி | குங்குமபாடாணம் . |
ஆடகம் | காண்க : துவரை ; நால்வகைப் பொன்னுள் ஒன்று , சிறந்த பொன் , உலோகக்கட்டி ; சிறுநாகப்பூ ; ஐந்து பிரத்தங்கொண்ட நிறை ; நானாழி . |
ஆடகன் | பொன்னிறமுடைய இரணியகசிபு . |
ஆடகி | காண்க : துவரை . |
ஆடகை | காண்க : துவரை . |
ஆடகூடம் | செம்புமலை . |
ஆடங்கம் | துன்பம் ; தாமதம் . |
ஆடம் | ஓரளவு ; காண்க : ஆமணக்கு . |
ஆடம்பரம் | பகட்டுத் தோற்றம் ; பல்லிய முழக்கம் ; யானையின் பிளிற்றொலி ; ஆவேசம் . |
ஆடமணக்கு | காண்க : ஆமணக்கு . |
ஆடமாகிதம் | பெருங்காஞ்சொறி . |
ஆடல் | அசைகை ; கூத்து ; துன்பம் ; செய்கை ; ஆளுகை ; விளையாட்டு ; புணர்ச்சி ; சொல்லுகை ; நீராடல் ; போர் ; வெற்றி . |
ஆடல்கொடுத்தல் | இடங்கொடுத்தல் ; துன்பம் அனுபவித்தல் . |
ஆடலிடம் | அரங்கம் . |
ஆடலை | பூவாத மரம் ; அரசு . |
ஆடவர்பருவம் | பாலன் ; காளை , குமாரன் , ஆடவன் , மூத்தோன் , முதியோன் . |
ஆடவல்லான் | நடராசப்பெருமான் ; இராசராசன் ஆட்சியில் எடுத்தல் , முகத்தல் அளவைகட்கு இட்ட பெயர் . |
ஆடவலபெருமான் | திருவாரூரில் கோயில் கொண்ட சிவபெருமான் . |
ஆடவள் | பெண் . |
ஆடவன் | ஆண்மகன் ; இளைஞன் ; நான்காம் பருவத்தினன் . |
ஆடவை | நடனசபை ; மிதுனராசி . |
ஆடற்கூத்தியர் | அகக்கூத்தாடும் கணிகையர் . |
ஆடற்றரு | கூத்துப்பாட்டு வகை . |
ஆடனூல் | நாட்டிய நூல் . |
ஆடா | கால்களில் கட்டியைப் போல் உண்டாகும் குதிரைநோய் . |
ஆடாகாவிகம் | மரவுரி . |
ஆடாதிருக்கை | ஆடுவாலன் திருக்கை ; அசையாதிருத்தல் . |
ஆடாதோடை | ஒரு மருந்துச் செடி . |
ஆடி | கூத்தாடுபவன் ; கண்ணாடி ; பளிங்கு ; நான்காம் மாதம் ; உத்தராட நாள் பகலில் பன்னிரண்டு நாழிகைக்குமேல் இரண்டு நாழிகை கொண்ட முகூர்த்தம் ; நாரை ; ஆணிவகை . |
ஆடிக்கரு | ஆடி மாதத்து நீருண்ட மேகம் . |
ஆடிக்கழைத்தல் | மணத்துக்குப் பின் முதல் ஆடி மாதத்தில் பெண்ணைப் பிறந்த வீட்டுக்கு அழைத்தல் . |
ஆடிக்கால் | வெற்றிலைக்கொடி படரும் நோக்கோடு வயலில் ஆடி மாதத்தில் நடும் அகத்தி . |
ஆடிக்குறுவை | நெல்வகை . |
ஆடிக்கோடை | ஆடிமாதத்தில் அறுவடையாகும் நெல் . |
ஆடிச்சி | கழைக்கூத்தாடிப் பெண் . |
ஆடிடம் | விளையாடுமிடம் . |
ஆடிப்பட்டம் | விதையிடுதற்குரிய பருவம் . |
ஆடிப்பண்டிகை | ஆடிமாதப் பிறப்புக் கொண்டாட்டம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
ஆண்டலைக்கொடி | முருகக்கடவுளின் சேவற்கொடி ; ஆண்மகன் தலையும் பறவையின் உடலுமாக எழுதின பறவைக்கொடி . |
ஆண்டலைப்புள் | ஆண்மகன் தலைபோன்ற வடிவங்கொண்ட பறவை . |
ஆண்டலையடுப்பு | ஆண்டலைப்பறவை வடிவமாகச் செய்து பறக்கவிடும் மதிற்பொறி . |
ஆண்டவரசு | திருநாவுக்கரசு நாயனார் . |
ஆண்டவன் | உடையவன் ; கடவுள் . |
ஆண்டளப்பான் | வியாழன் . |
ஆண்டார் | உடையோர் ; தேவர் ; அடியார் . |
ஆண்டாள் | சூடிக்கொடுத்த நாச்சியார் . |
ஆண்டாள்மல்லிகை | மல்லிகைவகை . |
ஆண்டான் | ஆண்டவன் . |
ஆண்டான்வெட்டு | பழைய நாணயவகை . |
ஆண்டி | பண்டாரம் ; பரதேசி ; ஏழை ; வரிக்கூத்துவகை . |
ஆண்டிச்சி | ஆண்டியின் பெண்பாற் பெயர் . |
ஆண்டிசமாதி | சன்னியாசியாய் இறந்தவரது சமாதியில் பூசை செய்வதற்கென்று இனாமாக விடப்பட்ட நிலம் . |
ஆண்டித்தாரர் | ' தாரா ' என்னும் பறவைவகை . |
ஆண்டு | அகவை ; அவ்விடம் . |
ஆண்டுகள்ளடவு | ஆண்டு வருமானம் . |
ஆண்டுமாறி | ஒரு வசைச்சொல் . |
ஆண்டுமூஞ்சி | ஒரு வசைச்சொல் . |
ஆண்டுமூய்தல் | விருத்தியறுதல் . |
ஆண்டுவருதல் | பயன்பாட்டுக்குப் போதியதாதல் ; பயன்படுத்தி வருதல் . |
ஆண்டெழுத்துத்தேவை | பழைய வரிவகையுள் ஒன்று . |
ஆண்டை | தலைவன் ; அவ்விடம் ; அவ்வுலகம் ; தேட்கொடுக்கி ; அழிஞ்சில் . |
ஆண்டைச்சிகை | ஆண்டுப் பாக்கிக் கணக்கு . |
ஆண்டையர் | மனிதர் . |
ஆண்டொழில் | வீரச்செய்கை . |
ஆண்டோன் | தலைவன் ; தேவன் ; மானிடன் . |
ஆண்தண்டு | வலக்காதின் தண்டு . |
ஆண்பனை | காயாப் பனை . |
ஆண்தருப்பை | புல்வகை . |
ஆண்பாடு | ஆண்மக்களின் முயற்சி . |
ஆண்பாத்தி | உப்புப்பாத்திவகை . |
ஆண்பால் | ஆண்சாதி ; ஐம்பாலுள் ஒன்று . |
ஆண்பாலெழுத்து | அ , இ , உ , எ , ஒ , என்னும் குற்றெழுத்துகள் . |
ஆண்பாற் பிள்ளைக்கவி | காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் . |
ஆண்பாற் பிள்ளைத்தமிழ் | காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் . |
ஆண்பாற் பிள்ளைப்பாட்டு | காப்பு , செங்கீரை , தால் , சப்பாணி , முத்தம் , வாரானை , அம்புலி , சிற்றில் , சிறுபறை , சிறுதேர் என்னும் பத்துப் பருவங்களில் ஓர் ஆண்மகனின் குழந்தைமைச் செயல்களை விளக்கும் பிரபந்தம் . |
ஆண்பிள்ளை | ஆண்குழந்தை ; ஆண்மகன் ; கணவன் ; வீரன் ; கெட்டிக்காரன் . |
ஆண்பெண் | ஆணும் பெண்ணும் ; கணவன் மனைவி . |
ஆண்மக்கட்பருவம் | காளைப் பருவம் . |
ஆடுமறிகூலி | ஆட்டுக்கிடை வைக்கத் தருங் கூலி |
ஆடுமாடு | கால்நடை . |
ஆடுமாலை | உல்லாசமுள்ள குமரிப்பெண் . |
ஆடூஉ | ஆண்மகன் . |
ஆடூஉக்குணம் | ஆண்மகனுக்குரிய பண்புகள் ; அவை : அறிவு ; நிறை ; ஓர்ப்பு , கடைப்பிடி . |
ஆடூஉமுன்னிலை | ஆண்பாலரை முன்னிலைப் படுத்திக் கூறுகை . |
ஆடூஉவறிசொல் | ஆண்பாற்கிளவி . |
ஆடூர்ந்தோன் | முருகன் ; அங்கியங்கடவுள் . |
ஆடெழும்புநேரம் | காலைப் பத்து நாழிகை . |
ஆடை | உடை ; சித்திரை நாள் ; கண்படலம் ; பால் முதலியவற்றின்மேல் எழும் ஏடு ; பனங்கிழங்கின் உள்ளிருக்கும் தோல் . |
ஆடைக்காதி | கோங்கிலவு . |
ஆடைக்குங்கோடைக்கும் | எல்லாப் பருவத்தும் . |
ஆடைக்குறி | வண்ணாரிடுந் துணிக்குறி . |
ஆடைத்தயிர் | ஏடெடாத தயிர் . |
ஆடைமேல் | கழுத்து . |
ஆடையொட்டி | பூண்டுவகை ; சீலைப்பேன் . |
ஆடையொட்டிநீர் | சுக்கிலம் . |
ஆடைவீசுதல் | மகிழ்ச்சிக் குறியாக ஆடையைமேலே வீசுதல் . |
ஆடோபம் | செருக்கு ; வீக்கம் . |
ஆண் | ஆண்பாற் பொது ; வீரியம் ; தலைமை ; வீரன் ; காண்க : ஆண்மரம் . |
ஆண்கடன் | ஆண்மக்கள் கடமை . |
ஆண்கிரகம் | செவ்வாய் ; வியாழன் ; சூரியன் . |
ஆண்குமஞ்சான் | காண்க : குங்கிலியம் . |
ஆண்குறிஞ்சான் | காண்க : குங்கிலியம் . |
ஆண்குறி | ஆடவர் குறி . |
ஆண்கை | ஆண்பாற் செயல்காட்டும் அபிநயக் கை . |
ஆண்சந்ததி | ஆண்மகவு . |
ஆண்சரக்கு | கல்லுப்பு ; வெடியுப்பு . |
ஆண்சாவி | துளையில்லாத திறவுகோல் . |
ஆண்சிரட்டை | தேங்காயின் அடிப்பாதி ஓடு . |
ஆண்செருப்படை | செருப்படைவகை . |
ஆண்சோடனை | ஆண்கூத்துக்குச் செய்யும் ஒப்பனை . |
ஆண்டகை | ஆண்தன்மை ; பெருமையிற் சிறந்தவன் . |
ஆண்டகைமை | வீரம் . |
ஆண்டலை | கோழி ; ஆண்மகன் தலைபோன்ற தலையுடைய ஒரு பறவை ; பூவாது காய்க்கும் மரம் . |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.