கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

அகராதி-அ

அபலம் பயனின்மை ; வலியின்மை ; காய்ப்பு நின்ற மரம் ; இழப்பு ; திமிங்கிலம் ; கொழு .
அபலன் வலியற்றவன் .
அபலை பெண் ; துணையற்றவள் .
அபவர்க்கம் முத்தி , வீடுபேறு .
அபவருக்கம் முத்தி , வீடுபேறு .
அபவருத்தனம் அகற்றுதுல் ; சுருக்குதல் .
அபவாதம் பழிச்சொல் ; வீண்பழி .
அபவேட்டிதம் அபிநயவகை .
அபாக்கியம் பேறின்மை .
அபாங்கம் கடைக்கண் பார்வை ; நெற்றிக் குறி .
அபாண்டம் பொய்க்குற்றம் ; இடுநிந்தை .
அபாத்திரம் தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் .
அபாத்திரன் தகுதியற்றவன் ; பரிசுபெறத்தகாதவன் .
அபாம்பதி கடல் .
அபாமார்க்கம் நாயுருவி என்னும் பூடுவகை .
அபாயம் கேடு , ஆபத்து .
அபாரசக்தி அளவிலா ஆற்றல் .
அபாரணை உண்ணாமை .
அபாரம் அளவற்றது .
அபாவம் இன்மை ; ஓர் அளவை .
அபானம் கடுக்காய் மரம் ; மலவாய் .
அபானவாயு கீழ்நோக்கிச் செல்லும் காற்று .
அபானன் பத்து வாயுக்களுள் ஒன்று .
அபானியம் கடுக்காய் .
அபி அதட்டல் , கண்டித்தல் , கேள்வி , ஐயம் , அதிகம் முதலிய பொருள்களை உணர்த்தும் ஒரு வடமொழி முன்னொட்டு .
அபிகதம் அருகடைதல் .
அபிகாதம் அடித்தல் , வருத்தம் .
அபிகாயம் சூம்புகை ; காசநோய்வகை .
அபிசரன் தோழன் .
அபிசாதன் உயர்குலத்தோன் .
அபிசார ஓமம் இறப்பைக் கருதிச் செய்யும் வேள்வி .
அபிசாரகம் மந்திரத்தால் கொல்லல் .
அபிசாரம் தீங்கு விளையச் செபிக்கும் மந்திரம் ; சூனியம் வைத்தல் .
அபிசாரி வேசி ; விலைமகள் .
அபிசித்து பகல் முகூர்த்தம் பதினைந்தனுள் எட்டாவது .
அபிட்டம் பாதரசம் .
அபிடேகம் திருமுழுக்கு ; பட்டஞ்சூட்டும் சடங்கு ; திருமுடி .
அபிதா ஆபத்தில் முறையிட்டுக் கூறும் சொல் .
அபிதானம் பெயர் ; மறைவு .
அபிதேயம் செஞ்சொல்லால் சொல்லத்தக்கது .
அபிநயம் நடிப்பு .
அபிநயன் கூத்தன் .
அபிநயித்தல் நடித்தல் .
அபிநவம் புதியது .
அபிநிவேசம் கிளர்ச்சி ; உள்ளார்வம் ; விருப்பம் .
அபிப்பிராயம் நோக்கம் , கருத்து .
அபிமதம் விருப்பம் ; இணக்கம் .
அபிமந்திரித்தல் மந்திரங்களை உருவேற்றி நிலைக்கச் செய்தல் .
அபிமானபுத்திரன் வளர்ப்பு மகன் ; வைப்பாட்டி மகன் .
அபிமானம் தன்மதிப்பு ; உள்ளக்களிப்பு ; பற்று ; அறிவு ; கொலை .
அபிமானி பற்றுடையோன் .
அபிமானித்தல் மதித்தல் ; ஆதரித்தல் .
அபிமுகம் நேர்முகம் ; சன்னிதி .
அபிமுகி எதிர்நோக்கிய முகமுடையது ; நேர்முகமாயிருப்பது .
அபியுக்தன் அறிஞன் .
அபரசன் பின்பிறந்தோன் , இளவல் .
அபரஞ்சி புடமிட்ட பொன் .
அபரஞானம் நூலறிவு .
அபரபக்கம் தேய்பிறை .
அபரபட்சம் தேய்பிறை .
அபரம் பின் , முதுகு ; யானையின் பின்புறம் ; கவசம் ; பொய் ; மேற்கு ; நரகம் ; நீத்தார் கடன் ; அமரம் என்னும் படகைத் திருப்பும் தண்டு .
அபராங்கம் உடலின் பிற்பகுதி .
அபராசிதன் வெல்லப்படாதவன் ; சிவன் ; திருமால் ; ஒரு பல்லவ மன்னன் .
அபராணம் பிற்பகல் .
அபராதம் குற்றம் ; தண்டம் .
அபராதி குற்றவாளி .
அபராந்தம் மேனாடு ; பிற்பகல் .
அபராந்தர் மேனாட்டார் .
அபரான்னம் காண்க : அபராணம் .
அபரிச்சின்னம் பகுக்கப்படாமை ; அளவிட முடியாதது .
அபரிமிதம் அளவின்மை .
அபரியந்தம் மட்டில்லாமை , எல்லையற்றது .
அபரூபம் மூளி .
அபரோட்சஞானம் காட்சி அறிவு .
அபரோட்சம் காட்சி அறிவு .       
அபின்னம் வேறுபடாதது ; சிதைவின்மை .
அபின்னாசக்தி சிவத்தினின்றும் வேறுபடாத சக்தி .
அபினி காண்க : அபின் .
அபீட்டம் மிகுவிருப்பம் .
அபுத்திபூருவம் அறியாமல் நிகழ்ந்தது .
அபுதன் மூடன் .
அபூதம் இல்பொருள் .
அபூதவுவமை இல்பொருளுவமை .
அபூபம் அப்பவகை .
அபூர்வம் புதியது ; அரியது ; அருமை .
அபூருவம் புதியது ; அரியது ; அருமை .
அபேட்சகர் காண்க : வேட்பாளர் .
அபேட்சித்தல் விரும்புதல் .
அபேட்சிதம் விரும்பப்பட்டது .
அபேட்சை விருப்பம் , வேட்பு .
அபேதம் வேற்றுமையின்மை .
அபோச்சியம் உண்ணத்தகாதது .
அபோதம் அறியாமை .
அம் அழகு ; நீர் ; மேகம் ; விகுதி ; சாரியை .
அம்சம் கூறு ; உரிமைப்பங்கு ; அன்னப்பறவை .
அம்பகம் கண் ; எழச்சி ; கட்டளை ; செம்பு ; நடிப்புக் கூலி .
அம்பட்டச்சி நாவிதப்பெண் .
அம்பட்டத்தி நாவிதப்பெண் .
அம்பட்டன் நாவிதன் .
அம்படம் புழுக்கொல்லிச் செடி ; ஆடுதின்னாப்பாளை .
அம்படலம் அம்மி ; தேர் ; ஈயம் ; வெள்ளி ; மரக்கால் ; ஓடம் .
அம்பணத்தி துர்க்கை .
அம்பணம் நீர் ; மரக்கலம் ; பவளம் ; யாழ்வகை ; மரக்கால் ; துலாக்கோல் ; வாழைத்தண்டு .
அம்பணவர் பாணர் .
அம்பர் அவ்விடம் ; ஓர் ஊர் ; ஒருவகைப் பிசின் ; ஓர்க்கோலை .
அம்பரம் ஆடை ; வானம் ; கடல் ; துயிலிடம் ; திசை ; சித்திரை நாள் ; மஞ்சள் .
அம்பரவாணம் எட்டுக்கால் பறவை .
அம்பரைநாதம் அப்பிரகம் என்னும் கனிப் பொருள் .
அம்பல் சிலர் அறிந்து தம்முட் புறங்கூறல் ; பழிச்சொல் ; பூ அலர்தற்குச் சிறிது முன்னுள்ள நிலை .
அம்பலக்கூத்தன் சிவபிரான் .
அம்பலகாரன் ஊர்த்தலைவன் ; ஊர்ச் சபைத் தலைவன் ; கள்ளர் , வலையர் பட்டப்பெயர் .
அம்பலச்சாவடி ஊர்ப் பஞ்சாயத்து மண்டபம் .
அம்பலத்தாடி சிவபிரான் .
அம்பலத்தி தான்றி ; தில்லைமரம் .
அம்பலம் பலர்கூடும் வெளியிடம் ; ஊர்ச்சபை ; கழகம் ; தில்லையம்பலம் ; அமபலகாரன் .
அம்பலவாணன் சிதம்பரத்தில் கோயில்கொண்டிருக்கும் சிவபிரான் .
அம்பலவிருட்சம் தில்லைமரம் .
அம்பலி களி ; முட்டைவெள்ளை ; ஒரு வாச்சியம் .
அம்பறாத்தூணி அம்புக்கூடு .
அம்பாயம் மகப்பேற்றுவலி , பிரசவவேதனை .
அம்பா ஆடல் தைந் நீராடல் .
அம்பாள் தாய் ; பார்வதி .
அம்பாரம் நெற்குவியல் ; களஞ்சியம் .
அம்பாரி யானைமேல் அமைத்த இருக்கை .
அம்பால் தோட்டம் .
அம்பாலிகை தருமதேவதை ; பாண்டுவின் தாய் .
அம்பாவனம் சரபப் பறவை .
அம்பி தெப்பம் , தோணி ; மரக்கலம் ; தாம்பு ; இறைகூடை ; கள் ; காராம்பி ; ஓர் ஊர் ; தம்பி .
அம்பிகாபதி அம்பிகை கணவனாகிய சிவபிரான் , கம்பர் மகன் .
அம்பிகை பார்வதி ; தருமதேவதை ; துர்க்கை ; திருதராட்டிரன் தாய் ; தாய் ; அத்தை .
அம்பிகைதனயன் விநாயகன் .
அம்பிகைபாகன் சிவபிரான் .
அம்பு நீர் ; கடல் ; மேகம் ; விண் ; உலகம் ; மூங்கில் ; கணை ; எலுமிச்சை ; பாதிரி ; திப்பிலி ; வெட்டிவேர் ; வளையல் ; சரகாண்ட பாடாணம் .
அம்புக்கட்டு அம்புகளின் கட்டிய தொகுதி ; அம்பறாத்தூணி .
அம்புக்குதை அம்பின்நுனி .
அம்புக்கூடு அம்பறாத்தூணி .
அபியோகம் இடித்துரை ; போருக்கழைக்கை ; முறையீடு .
அபியோகி ஊறுசெய்ய ஊக்குவோன் ; குறை கூறுவோன் ; முறையீடு செய்வோன் ; வாதி .
அபிரட்சை முழுப் பாதுகாப்பு ; நிறைவான பாதுகாப்பு .
அபிராமம் அழகு .
அபிராமன் மனத்துக்கு இனியவன் .
அபிராமி அழகுள்ளவள் ; பார்வதி .
அபிருசி பெருவிருப்பம் .
அபிரூபன் மிக்க அழகுள்ளவன் .
அபிலாசம் விருப்பம் .
அபிலாசை விருப்பம் .
அபிவாதனம் பெரியோரிடம் தன்னை அறிவித்துத் தொழுகை .
அபிவியத்தி வெளிப்படுதல் .
அபிவிருத்தி மிகுதியாய்ப் பெருகுதல் , வளர்ச்சி .
அபின் கசகசாச் செடியின் பால் ; ஒரு மருந்து ; ஒரு போதைப் பொருள்
அம்மாமி அம்மான் மனைவி .
அம்மாய் காண்க : அம்மாச்சி .
அம்மாயி காண்க : அம்மாச்சி .
அம்மார் கப்பல் கயிறு .
அமார் கப்பல் கயிறு .
அம்மாள் தாய் .
அம்மாறு பெருங்கயிறு , வடம் .
அம்மான் தாயுடன் பிறந்தவன் ; அத்தை கணவன் ; பெண் கொடுத்தவன் ; தந்தை ; கடவுள் .
அம்புயாதம் காண்க : தாமரை ; நீர்க்கடம்பு .
அம்புசாதன் பிரமன் .
அம்புடம் ஆடுதின்னாப்பாளை .
அம்புதம் மேகம் ; கோரை ; தாமரை .
அம்புதி கடல் ; கால்வாய் .
அம்புநிதி கடல் .
அம்புப்புட்டில் காண்க : அம்புக்கூடு .
அம்புமுது ஒருவகை முத்து .
அம்புமுதுபாடன் ஒருவகை முத்து .
அம்புமுதுவரை ஒருவகை முத்து .
அம்புயன் காண்க : அம்புசாதன் .
அம்புயை திருமகள் .
அம்புரம் கீழ்வாயிற்படி .
அம்புராசி கடல் ; அம்புத்திரள் .
அம்புரோகிணி தாமரை .
அம்புலி சந்திரன் ; அம்புலிப் பருவம் ; சோளக்கூழ் .
அம்புலிப் பருவம் குழந்தையுடன் விளையாட வருமாறு சந்திரனை அழைக்கும் நிலை ; பிள்ளைத்தமிழ் உறுப்புகளுள் ஒன்று .
அம்புலிமணி காண்க : சந்திரகாந்தக்கல் .
அம்புலியம்மான் சந்திரன் .
அம்புவாகம் மேகம் .
அம்புவாசினி எலுமிச்சை ; பாதிரி .
அம்புவி பூமி .
அம்புளி இனிய புளிப்பு .
அம்பேல் விளையாட்டில் தடை நிகழ்த்தப் பிள்ளைகள் கூறும் சொல் .
அம்பை பார்வதி ; வெட்டிவேர் ; கொக்கு மந்தாரை .
அம்போசன் சந்திரன் .
அம்போதரங்கம் அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா உறுப்புகளுள் ஒன்று ; நீர்த்திரைபோல் நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடியுமாய்க் குறைந்து வருவது ; ஒத்தாழிசைக் கலிப்பா வகை .
அம்போதரம் மேகம் ; கடல் .
அம்போதி கடல் ; பாட்டின் உட்பொருள் .
அம்போருகத்தாள் திருமகள் .
அம்போருகம் தாமரை .
அம்போருகன் பிரமன் .
அம்ம கேட்டல் பொருளைத் தழுவிவரும் ஓர் இடைச்சொல் ; ஒரு வியப்புச் சொல் ; ஓர் உரையசைச் சொல் .
அம்மகோ ஓர் இரக்கக் குறிப்புச் சொல் .
அம்மங்கார் ஆசாரியன் மனைவி ; அம்மான் மகள் .
அம்மட்டு அவ்வளவு .
அம்மண்டார் தாய்மாமன் .
அம்மணக்கட்டை ஆடை கட்டாத ஆள் .
அம்மணக்குண்டி ஆடை கட்டாத ஆள் .
அம்மணத்தர் சமணர் .
அம்மணத்தோண்டி காண்க : அம்மணக்கட்டை .
அம்மணம் ஆடையில்லாமை ; இடை ; விபசாரம் ; தகாத பேச்சு .
அம்மணி பெண்ணைக் குறிக்கும் மரியாதைச் சொல் .
அம்மந்தி அம்மான் மனைவி .
அம்மம் முலை ; குழந்தை உணவு .
அம்மன் அம்மை ; தேவதை .
அம்மன்கட்டு கூகைக்கட்டு .
அம்மன்கொடை அம்மனுக்காகச் செய்யப்படும் ஊர்த் திருவிழா .
அம்மன்கொண்டாடி மாரியம்மன் கோயில் பூசாரி .
அம்மனே ஒரு வியப்புக் குறிப்பு .
அம்மனை தாய் ; தலைவி ; அம்மானை விளையாட்டு ; அம்மானையாடும் கருவி .
அம்மனைப்பாட்டு அம்மானை ஆட்டத்தில் மகளிர் பாடும் பாட்டு .
அம்மனைமடக்கு கலித்தாழிசையால் வினாவிடையாக மகளிர் இருவர் இருபொருள்படக் கூறுவதாக இயற்றும் பாட்டு .
அம்மனையோ ஓர் அவலக் குறிப்பு .
அம்மனோ ஓர் அவலக் குறிப்பு .
அம்மா தாய் ; தாய்போல் மதிக்கப்படுபவள் ; வியப்பு இரக்கக் குறிப்பு ; ஓர் உவப்புக் குறிப்பு ; ஓர் அசைச்சொல் .
அம்மாச்சன் தாய்மாமன் .
அம்மாச்சி தாயைப் பெற்ற பாட்டி .
அம்மாஞ்சி அம்மான் சேய் என்பதன் மரூஉ ; அம்மான் மகன் ; மூடன் .
அம்மாஞ்சிமதனி அம்மான் மகனின் மனைவி .
அம்மாட்டி கொட்டிக்கிழங்கு .
அம்மாடி வியப்பு இரக்க இளைப்பாறுதற் குறிப்பு .
அம்மாத்தாள் காண்க : அம்மாச்சி .
அம்மாத்திரம் அவ்வளவு .
அம்புசம் காண்க : தாமரை : நீர்க்கடம்பு .
அம்புயம் காண்க : தாமரை : நீர்க்கடம்பு .
அம்புசாதம் காண்க : தாமரை ; நீர்க்கடம்பு .       
அமர்த்துதல் அமைதியாய் இருக்கச் செய்தல் ; அடக்குதல் ; திட்டப்படுத்துதல் ; நிலைநிறுத்துதல் ; பெருமிதம்பட நடித்தல் .
அமர்தல் உட்காருதல் ; இளைப்பாறல் ; அடங்குதல் ; பொருந்தல் ; விரும்புதல் .
அமர்வு இருப்பிடம் .
அமரகம் போர்க்களம் .
அமரத்துவம் அழியாமை .
அமரநாயகம் தண்டத் தலைமை ; தண்டத் தலைவனுக்கு விடப்படும் நிலம் .
அமரபக்கம் காண்க : அபரபக்கம் .
அமரம் அபரம் ; கண்ணோய் ; படகைத் திருப்பும்தண்டு ; ஆயிரம் காலாளை ஆளுகை ; அமரகோசம் .
அமரமாதர் தெய்வப்பெண்டிர் .
அமரர் பகைவர் ; வானோர் .
அமரர்கோன் தேவர்களின் அரசன் , இந்திரன் .
அமரர்பதி அமரர்கோன் ; தேவருலகம் .
அமரல் பொலிவு ; பீடு ; மிகுதி ; நெருக்கம் .
அமரன் தேவன் ; போர்செய்வோன் .
அமராங்கனை தெய்வப்பெண் .
அமராசயம் இரைப்பை ; கருப்பை .
அமராஞ்சனம் சந்தனம் .
அமராடல் போர்புரிதல் .
அமராபகை விண்ணாறு , வான்கங்கை .
அமராபதி இந்திரனின் தலைநகர் .
அமராபுரம் இந்திரனின் தலைநகர் .
அமரார் பகைவர் .
அம்மான்பச்சரிசி செங்கழுநீர் ; செடிவகை .
அம்மானார் அம்மானை ஆட்டம் ; அம்மானை நூல் .
அம்மானை ஒருவித மகளிர் விளையாட்டு ; அம்மனை ; ஒருவகைப் பாடல் ; அம்மானைப் பருவம் ; கலம்பகவுறுப்புள் ஒன்று .
அம்மானைப்பருவம் பெண்பால் பிள்ளைத் தமிழ்ப் பருவங்களுள் ஒன்று ; சிறுமியர் கூடி அம்மானை விளையாடும் நிலை .
அம்மானை வரி மகளிர் அம்மானையாடும்போது பாடும் பாட்டு .
அம்மி அரைகல் .
அம்மிக்கல் அரைகல் ; அம்மிக்குழவி .
அம்மிக்குழவி அம்மியில் அரைக்கப் பயன்படும் நீண்ட திரள்கல் .
அம்மிமிதித்தல் திருமணத்தில் மணமகள் அம்மிமேல் கால்வைத்தல் .
அம்மியம் கள் ; காளம் என்னும் சிறு சின்னம் .
அம்மிரம் மாமரம் .
அம்மிலம் புளிப்பு ; புளியமரம் ; புளிவஞ்சி .
அம்மிலிகை புளி .
அம்முக்கள்ளன் வஞ்சகன் .
அம்முதல் வெளிக்காட்டாது ஒளித்தல் ; அமுக்குதல் ; மேகம் மந்தாரமாதல் .
அம்மெனல் நீர்ததும்பல் குறிப்பு ; ஓர் ஒலிக் குறிப்பு .
அம்மேயோ ஒரு துன்பக் குறிப்பு .
அம்மை தாய் ; பாட்டி ; பார்வதி ; தருமதேவதை ; சமணசமயத் தவப்பெண் ; நோய்வகை ; அழகு ; அமைதி ; வருபிறப்பு ; கடுக்காய் ; நூல்வனப்புள் ஒன்று ; மேலுலகம் .
அம்மைகுத்தல் அம்மைநோய் வாராது தடுக்கும் அம்மைப்பாலை உடலில் குத்திச் சேர்க்கை .
அம்மைப்பால் அம்மை குத்துதற்குரிய பால் .
அம்மைமுத்து வைசூரிக் கொப்புளம் .
அம்மையப்பன் தாயும் தந்தையும் ; சிவனும் சக்தியும் இணைந்த வடிவம் , உமாபதி .
அம்மையார் முதியவள் ; பெண்களைக் குறிக்கும் மரியாதைச் சொல் .
அம்மையார் கூந்தல் பூண்டுவகை .
அம்மையோ ஒரு வியப்புச் சொல் .
அம்மைவடு அம்மைத் தழும்பு .
அம்மைவார்த்தல் அம்மை போடுதல் .
அம்மைவிளையாடுதல் அம்மை போடுதல் .
அம்மோ இரக்கக் குறிப்புச்சொல் .
அமங்கலம் மங்கலம் அல்லாதது , இழவு .
அமங்கலி கைம்பெண் .
அமங்கலை கைம்பெண் .
அமஞ்சி கூலியில்லா வேலை .
அமிஞ்சி கூலியில்லா வேலை .
அமஞ்சியாள் கூலியில்லாமல் வேலைசெய்பவன் .
அமட்டு அதட்டு ; ஏய்ப்பு .
அமட்டுதல் சிக்கவைத்தல் ; அச்சுறுத்தல் ; மயக்குதல் .
அமடு சிக்குதல் .
அமண் சமணசமயம் ; சமணர் ; அரையில் ஆடையின்மை ; வரிக்கூத்து வகை .
அமண்டம் காண்க : ஆமணக்கு .
அமண்பாழி சமணர் பள்ளி .
அமணம் சமணசமயம் ; அரையில் ஆடையின்மை ; இருபதினாயிரம் கொட்டைப்பாக்கு .
அமணர் சமணர் .
அமணானைப்படுதல் காமவேறுபாடு அடைதல் .
அமதி அமிழ்து ; காலம் ; சந்திரன் .
அமந்தி நாட்டுவாதுமை .
அமயம் பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் .
அமையம் பொழுது ; ஏற்ற சமயம் ; உரிய காலம் .
அமர் விருப்பம் ; கோட்டை ; போர் ; போர்க்களம் ; மூர்க்கம் .
அமர் (வி) பொருந்து ; போராடு ; மாறுபடு .
அமர்க்களம் போர்க்களம் ; ஆரவாரம் .
அமர்த்தல் அமரச்செய்தல் ; ஏற்படுத்தல் ; மாறுபடுதல் ; பொருதல் .
அமர்த்தன் திறமையற்றவன் .       
அமாவசியை சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் .
அமாவாசை சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் .
அமாவாசைக்கண்டம் நோய்மிக்கார்க்கு அமாவாசையன்று உண்டாகும் கேடு .
அமாவாசைக்கருக்கல் அமாவாசை இருட்டு .
அமானத்து ஒப்படைத்த பொருள் ; வைப்புநிதி .
அமானத்துச்சிட்டா பொதுக்குறிப்பேடு .
அமானம் அளவின்மை .
அமானி பொறுப்பு ; புறம்போக்குநிலம் ; புளியாரைப்பூண்டு .
அமிசகம் நாள் ; பங்கு .
அமிசகன் பங்காளி .
அமிசம் பங்கு ; தாயபாகம் ; பின்னம் ; அன்னப் பறவை ; புயம் ; செல்வாக்கு ; பெருவாழ்வு .
அமிசு அணு ; சூரியன் ; பிரபை .
அமிசுகம் இலை ; ஒளி ; மெல்லிய ஆடை .
அமிசை அமைப்பு ; தலையெழுத்து , ஊழ்வினை .
அமித்திரன் பகைவன் ; ஒரு முனிவன் .
அமிதம் அளவின்மை .
அமிதவாதி முனைப்பாளன் , தீவிரவாதி .
அமிர்தக்கொடி சீந்தில் .
அமிர்தகலை சந்திரகலை .
அமிர்தகிரணன் சந்திரன் .
அமிர்தசஞ்சீவி உயிர்தரும் ஒரு மூலிகை .
அமிர்தசஞ்சீவினி உயிர்தரும் ஒரு மூலிகை .
அமிர்தம் உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் .
அமிருதம் உணவு ; ஆவின்பால் ; நெய் ; மோர் ; நீர் ; மழை ; தேவருணவு ; வேள்விப் பொருள்களில் மிஞ்சியவை ; இரவாது வந்த பொருள் ; நஞ்சு போக்கும் மருந்து ; இனிமை ; அழிவின்மை ; வீடுபேறு ; நஞ்சு ; பாதரசம் .
அமிர்தயோகம் நற்செயல்களுக்கு ஏற்ற வாரமும் நட்சத்திரமும் கூடிய நேரம் .
அமிர்தர் அமுதமுண்பவர் ; தேவர் .
அமிர்தவல்லி சீந்திற்கொடி .
அமிர்தன் தன்வந்திரி என்னும் ஒரு தேவமருத்துவன் .
அமிர்து காண்க : அமிர்(ரு)தம் .
அமிழ்து காண்க : அமிர்(ரு)தம் .
அமிர்தை பார்வதி ; யோகினிகளுள் ஒருத்தி ; நெல்லி ; வெள்ளைப் பூண்டு ; அமிர்தக் கடுக்காய் ; திப்பிலி ; துளசி ; கள் ; சீந்தில் .
அமிழ்த்தல் ஆழச்செய்தல் .
அமிழ்தம் காண்க : அமிர்(ரு)தம் .
அமிழ்தல் ஆழ்தல் ; தோய்தல் .
அமினா காண்க : அமீனா .
அமீர் முகமதியச் செல்வன் ; முகமதியத் தலைவன் .
அமீன் பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் .
அமீனா பணம் வசூல் செய்யும் ஓர் அலுவலன் ; உரிமையியல் நீதிமன்றக் கட்டளைகளை நிறைவேற்றுகின்ற ஓர் அலுவலன் ; அந்தரங்க அலுவலன் .
அமராவதி காண்க : அமராபதி ; பொறுமைக் குணமுடையவள் .
அமரி அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை .
அமுரி அமிழ்தம் ; இந்திரனுலகம் ; தெய்வப்பெண் ; துர்க்கை ; சிறுநீர் ; நஞ்சு ; கற்றாழை .
அமரிக்கை அமைதி .
அமரிதம் கடுக்காய் .
அமரியம் குருந்தம் ; சண்பகம் .
அமரியள் விரும்பியவள் .
அமரியுப்பு சிறுநீர் உப்பு .
அமுரியுப்பு சிறுநீர் உப்பு .
அமரியோன் போர்வீரன் .
அமரிறை இந்திரன் .
அமரேசன் இந்திரன் ; வியாழன் .
அமரை அமராவதி ; துர்க்கை ; கருப்பை ; கொப்பூழ்க்கொடி ; அறுகம்புல் ; தூண் ; சீந்தில் .
அமரோர் தேவர் .
அமல் நிறைவு ; அதிகாரம் ; விசாரணை .
அமல்செய்தல் அதிகாரம் செலுத்துதல் ; நடை முறைக்குக் கொண்டுவரல் .
அமல்தல் நெருங்குதல் ; பரவுதல் ; மிகுதியாதல் .
அமல்தார் வரிப்பணம் வாங்கும் அரசாங்க ஊழியன் .
அமில்தார் வரிப்பணம் வாங்கும் அரசாங்க ஊழியன் .
அமலகம் காண்க : ஆமலகம்
அமலகமலம் கோசலம் , பசுவின் சிறுநீர் .
அமலம் மாசற்றது ; அழுக்கின்மை ; அழகு ; வெண்மை ; அப்பிரகம் ; மரமஞ்சள் ; நெல்லி .
அமலர் மாசற்றவர் ; கடவுள் ; நெல்லிமுள்ளி .
அமலன் குற்றமற்றவன் , கடவுள் .
அமலுதல் மிகுதல் ; நெருங்கல் ; பொருந்தல் .
அமலை ஆரவாரம் ; சோற்றுத்திரளை ; கடுக்காய் ; நெல்லிமரம் ; பூவந்திமரம் ; கட்டி ; கொப்பூழ்க்கொடி ; போரில்பட்ட அரசனை நெருங்கி வீரர் திரண்டு பாடும் பாட்டு ; மாசற்றவள் ; பெண்தெய்வம் .
அமலைதாரம் அரிதாரம் .
அமளி ஆரவாரம் ; கட்டில் ; படுக்கை அறை ; மிகுதி .
அமளிகுமளி பேராரவாரம் .
அமளிபண்ணுதல் கலகம் விளைத்தல் .
அமளை ஒருவகைப் பூண்டு ; கடுகுரோகிணி ; மரவகை .
அமளைக்கண்ணி கொள்ளு என்னும் தவசவகை .
அமன் பன்னிரு சூரியர்களுள் ஒருவன் , அரியமன் .
அமனி தெரு .
அமாத்தியன் அமைச்சன் ; ஆலோசனை சொல்வோன் ; அருகில் இருப்போன் .
அமார்க்கம் வழியல்லாதது ; சமயநெறி அல்லாதது .
அமாவசி சூரியனும் சந்திரனும் கூடும் நாள் ; இடைபிங்கலைகளில் சந்தியைப் பிராணண் கூடும் காலம் 
அய்யவி காண்க : ஐயவி .
அய்யன் காண்க : ஐயன் .
அய்யா காண்க : ஐயா .
அயக்களங்கு இரும்புத்துரு .
அயக்கம் நோயின்மை .
அயக்கல் அசக்கல் .
அமுத்தம் நெல்லி ; வச்சநாபி ; கையாயுதம் .
அமுதகடிகை நற்செயல்களுக்குரிய நாழிகை .
அமுதகதிரோன் சந்திரன் .
அமுதகம் அமிர்தம் ; பாற்கடல் ; கொங்கை ; நீர் .
அமுதகிரணன் காண்க : அமிர்தகிரணன் .
அமுதகுண்டம் இரப்போர் கலம் .
அமுதகுண்டை இரப்போர் கலம் .
அமுதகுலர் இடையர் ; சான்றோர் .
அமுதங்கம் காண்க : சதுரக்கள்ளி .
அமுதசம்பூதன் சந்திரன் .
அமுதசருக்கரை சீந்திற்கிழங்கிலிருந்து செய்த சருக்கரை .
அமுதசாரணி வெள்வேல மரம் .
அமுதசுரபி எடுக்க எடுக்கக் குறையாது உணவு தரும் கலன் ; மணிமேகலை கையிலிருந்த ஓர் உணவுப் பாண்டம் ; பிச்சைப் பாண்டம் .
அமுததரம் மஞ்சிட்டிச் செடி .
அமுததாரணை உணவின்றி நிட்டையிலிருக்கும் மௌனயோகிக்கு ஆதரவாகத் தலையினுள்ளிருந்து பெறும் அமிர்த ஒழுக்கு .
அமுதப்பார்வை இனிய நோக்கு .
அமுதபுட்பம் சிறுகுறிஞ்சாக்கொடி .
அமுதம் அமிர்தம் ; சோறு ; நீர் ; சுவை ; உப்பு ; தயிர் ; பூமிச்சருக்கரை ; காட்டுக்கொஞ்சி ; விந்து ; திரிபலை ; திரிகடுகம் ; வீடுபேறு .
அமுதர் அழிவில்லாதவர் ; கடவுள் ; தேவர் ; இடையர் .
அமுதவல்லி அமிர்தவல்லி ; திருமாலின் மகள் ; சீந்தில் .
அமுதவெழுத்து மங்கல வெழுத்து ; அ , இ , உ , எ , க் , ச் , த் , ந் , ப் , ம் , வ் என்பன . காப்பியத்தின் முதற்செய்யுள் முதன் மொழியிலும் தசாங்கத்தயலிலும் வருதற்குரிய நல் எழுத்து .
அமுதவேணி கங்கையாற்றைத் தலையில் கொண்டிருக்கும் சிவன் .
அமுதன் அழிவில்லாதவன் , கடவுள் .
அமுதாசனர் தேவர் .
அமுதாரி பூனைக்காலி .
அமுது அமிர்தம் ; படையல் ; அமுத கடிகை ; நிலாக்கதிர் .
அமுதுகுத்துதல் உறைமோர் ஊற்றுதல் .
அமுதுசெய்தல் உண்ணுதல் .
அமுதுபடி அரிசி .
அமுதுபடைத்தல் உணவு பரிமாறுதல் .
அமுதுமண்டபம் கோயில் மடைப்பள்ளி .
அமுதூட்டுதல் பிள்ளைக்கு ஏழாமாதத்தில் சோறூட்டுதல் .
அமூர்த்தம் உருவமின்மை , அருவநிலை .
அமூர்த்தன் வடிவம் இல்லாத சிவன் .
அமூர்த்தி வடிவம் இல்லாத சிவன் .
அமூலம் காரணம் இல்லாதது .
அமேத்திய நாறி ஒரு பூண்டு ; ஒரு மரம் ; பீநாறிச் சங்கு .
அமேத்தியம் மலம் ; மூங்கில் .
அமேயம் அளவிட முடியாதவன் .
அமை அமைவு ; அழகு ; தினவு ; மூங்கில் ; நாணல் ; அமாவாசை ; சந்திரனுடைய பதினாறாங்கலை .
அமை (வி) அமர்த்து ; பொருத்து .
அமைச்சன் மந்திரி ; வியாழன் .
அமைச்சு அமைச்சன் ; அமைச்சு இயல் .
அமைத்தல் படைத்தல் ; பதித்தல் ; சேர்த்தல் ; சமைத்தல் .
அமைதல் உண்டாதல் ; தகுதியாதல் ; பொருந்தல் ; அடங்குதல் ; நிறைதல் ; உடன்படுதல் ; முடிதல் .
அமைதி பொருத்தம் ; தன்மை ; நிறைவு ; காலம் ; செய்கை ; அடக்கம் ; சாந்தம் ; மாட்சிமை ; உறைவிடம் .
அமைப்பு நியமிப்பு ; விதி ; ஊழ்வினை ; நிறுவனம் .
அமையம் காண்க : அம(மை)யம் ; இலாமிச்சை .
அமைவடக்கம் பண்பட்ட ஒழுக்கம் .
அமைவரல் மனங்கொளல் .
அமைவன் முனிவன் ; அருகன் ; கடவுள் .
அமைவு அமைதி ; ஒப்பு .
அமோகப்படை மருள் அகற்றும் படை .
அமோகபாணம் குறிதவறாத அம்பு .
அமோகம் மோகமின்மை ; மிகுதி ; குறிதவறாமை ; ஒரு வாயு .
அமோகன் மயக்கம் அற்றவன் .
அமோகி மயக்கம் அற்றவன் .
அய்யங்கார் காண்க : ஐயங்கார் .
அய்யர் காண்க : ஐயர் .
அமுக்கடி மந்தாரம் , மூட்டமாயிருத்தல் ; மக்கள் நெருக்கம் .
அமுக்கன் மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் .
அமுக்கி மறைவாகக் காரியம் செய்வோன் , கபடன் ; உறக்கத்தில் அமுக்கும் ஆவி எனப்படும் ஒரு நோய் .
அமுக்கிரா அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி .
அமுக்கிரி அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி .
அமுக்குரா அமுக்கனங்கிழங்கு ; ஒரு செடி .
அமுக்குதல் அழுத்துதல் ; அமிழ்த்துதல் ; ஒடுக்குதல் .
அமுங்குதல் அழுந்துதல் ; அமர்தல் ; நெரிபடுதல் .
அமுசம் சிறு செருப்படைப் பூண்டு ; அன்னப் பறவை .
அமுசு ஒட்டடை .       
அயிந்திரதிசை கிழக்கு .
அயிந்திரம் காண்க : ஐந்திரம் .
அயிநார் ஈளை .
அயிர் ஐய உணர்வு ; நுண்மை ; நுண்மணல் ; கண்டசருக்கரை ; புகைக்கும் மணப்பொருள்வகை ; யானைக்காஞ்சொறி ; சிறுநீர் .
அயிர்த்தல் ஐயமுறுதல் ; மறைத்தல் .
அயிர்த்துரைத்தல் தலைமகளுடைய கண்சிவப்பு முதலியவற்றைத் தோழி கண்டு ஐயங்கொள்வதைக் கூறும் அகத்துறை .
அயிர்ப்பு ஐயமுறுதல் ; மறைத்தல் ; குறிஞ்சியாழ்த் திறவகை .
அயிரம் கண்டசருக்கரை .
அயிராணி இந்திராணி ; பார்வதி .
அயிராபதம் இந்திரன் யானை ; கயிலாயத்திலுள்ள ஒரு யானை ; பட்டத்து யானை .
அயிராவதம் இந்திரன் யானை ; கயிலாயத்திலுள்ள ஒரு யானை ; பட்டத்து யானை .
அயிராவதன் இந்திரன் ; சூரியனுடைய தேரைச் செலுத்தும் நாகருள் ஒருவன் .
அயிரி நெட்டிலைப் புல் ; மீன்முள்ளரியும் கத்தி .
அயக்காந்தச் சிந்தூரம் இறும்பும் கந்தகமும் சேர்ந்த சிந்தூரம் .
அயக்காந்தம் ஒரு மருந்து ; ஊசிக்காந்தம் .
அயகம் சிறுகுறிஞ்சாக்கொடி ; வசம்பு .
அயச்சிந்தூரம் இரும்புச் சிந்தூரம் .
அயசு இரும்பு ; எஃகு ; வழுக்குநிலம் .
அயசுபடில் வெள்ளீயமணல் .
அயணம் செலவு ; பயணம் .
அயபற்பம் இரும்புத்தூள் .
அயம் ஐயம் ; நீர் ; சுனை ; குளம் ; சேறு ; நிலம் ; அயசு ; சிறுபூலா ; அலரிச்செடி ; ஆடு ; குதிரை ; முயல் ; விழா ; பாகம் ; நல்வினை ; இறும்பு ; அரப்பொடி .
அயமகம் காண்க : அசுவமேதம் .
அயமரம் அலரிமரம் .
அயமி வெண்கடுகு .
அயமுகம் ஓர் இருக்கைவகை .
அயமேதம் காண்க : அசுவமேதம் .
அயர் வாட்டம் .
அயர்ச்சி மறதி ; சோர்வு , வருத்தம் ; வெறுப்பு .
அயர்த்தல் மறத்தல் .
அயர்தல் அயர்ச்சி ; செலுத்துதல் ; விரும்புதல் ; வழிபடுதல் ; விளையாடுதல் .
அயர்தி சோர்வு ; மறதி .
அயர்ப்பு சோர்வு ; மறதி .
அயர்வு சோர்வு ; மறதி .
அயல் இடம் ; அருகு ; வெளியிடம் ; காரம் .
அயலகம் அடுத்த வீடு .
அயலவன் பக்கத்தான் ; அன்னியன் .
அயலார்காட்சி நேர்நின்று பார்த்தவர்களின் காட்சி .
அயலான் காண்க : அயலவன் ; பகைவன் .
அயலி வெண்கடுகு .
அயலுரை இயைபில்லாத பேச்சு ; அயலார் ஒருப் பட்டவுரை .
அயவணம் ஒட்டகம் .
அயவாகனன் ஆட்டை ஊர்தியாகவுடையவன் , அக்கினிதேவன் .
அயவாரி வசம்பு .
அயவி காண்க : சிற்றரத்தை .
அயவெள்ளை இரும்புத்தூள் .
அயற்படுதல் நீங்கிப்போதல் .
அயறு புண்வழலை ; புண்ணீர் கசிந்து பரவுதல் .
அயன் பிரமன் ; மகேச்சுரன் ; அருகன் ; தசரதன் ; தந்தை ; அரசுநிலம் .
அயன்சமா அரசாங்கம் வசூலிக்க வேண்டிய மொத்த வரி ; பிற வரிகள் நீங்கிய தனி நிலவரி .
அயன்சமாபந்தி ஆண்டு நிலவரித் தணிக்கை .
அயன்தரம் நிலத்தின் முதல் மதிப்பு .
அயன்தீர்வை நிலவரி .
அயன்நிலம் அரசாங்கத்தாருக்கு நேராக வரி செலுத்துதற்குரிய நிலம் .
அயன்மணம் எண்வகை மணங்களுள் ஒன்று ; காண்க : பிரசாபத்தியம் .
அயன்மை அன்னியம் .
அயனகாலம் கோள்களிடையே நிகழும் காலம் .
அயனப்பிறப்பு உத்தராயண தட்சணாயணங்களின் தொடக்கம் .
அயனம் வரலாறு ; ஆண்டில் பாதி சூரியன் நிலநடுக்கோட்டுக்கு வடக்கிலாவது தெற்கிலாவது போகும் காலம் ; ஆண்டுப்பிறப்பு ; வழி ; வீடு .
அயனாள் உரோகிணிநாள் ; பிரமன் பிறந்தநாள் ; பிரமன் வாழ்நாள் .
அயா தளர்ச்சி .
அயாசகம் கேளாது கிடைக்கும் பிச்சை .
அயாசிதபிச்சை இருந்த இடத்திலேயே வந்த உணவை வாங்கிப் புசிக்கும் பிச்சை .
அயாவுதல் வருந்துதல் .
அயாவுயிர்த்தல் வருத்தம் தீர்தல் ; இளைப்பாற்றுதல் ; நெட்டுயிர்த்தல் ; கொப்புளித்தல் .
அயிக்கம் ஐக்கியம் , ஒன்றாந்தன்மை .
அயிக்கியம் ஐக்கியம் , ஒன்றாந்தன்மை .
அயிகம் ஊமத்தை .
அயிங்கிதை கொல்லாமை ; வருத்தாமை .
அயிச்சுரியம் காண்க : ஐசுவரியம் .
அயிச்சுவரியம் காண்க : ஐசுவரியம் .
அயிச்சொரியம் காண்க : ஐசுவரியம் .
அயிஞ்சி காண்க : நிலப்பனை .
அயிணம் மான்தோல் .
அயித்திரம் கருங்காணம் . 
அருத்த நாரீசன் பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் .
அர்த்த நாரீசுரன் பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் .
அருத்த நாரீசுரன் பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் .
அர்த்தமண்டபம் கருவறையை அடுத்த மண்டபம் .
அருத்தமண்டபம் கருவறையை அடுத்த மண்டபம் .
அர்த்தரதன் போர்புரிந்து பின்னடையும் தேர்வீரன் .
அர்த்தராத்திரி நள்ளிரவு .
அருத்தராத்திரி நள்ளிரவு .
அர்த்தவாதம் பயனைச் சொல்லல் ; புகழ்தல் .
அர்த்தாங்கீகாரம் பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை .
அருத்தாங்கீகாரம் பாதிக்கு ஒப்புதளித்தல் ; இருதிறத்தாருள் ஒருசாரார் மட்டும் உடன்படுகை .
அர்த்தாபத்தி ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெறுதல் .
அருத்தாபத்தி ஓர் அளவை , சொல்லியது கொண்டு சொல்லப்படாத பொருளைப் பெருதல் .
அர்த்தித்தல் இரத்தல் ; இரண்டு சமபாகங்களாகப் பிரித்தல் .
அர்ப்பணம் உரிமைப்படுத்துதல் ; காணிக்கை செலுத்துகை ; படைத்தல் .
அர்ப்பித்தல் உரியதாக்குதல் .
அர்ப்பிதம் உரியதாக்கப்பட்டது .
அர காண்க : அரா .
அரக்கம் நன்னாரி ; அகில் ; அவலரக்கு ; குருதி ; பாதுகாப்பு .
அரக்கன் இராக்கதன் ; சூடு போடுதற்குரிய மாடு .
அரக்காம்பல் செவ்வாம்பல் .
அரக்கி இராக்கதப் பெண் ; நஞ்சு .
அரக்கிலச்சினை அரக்காலிடும் முத்திரை .
அரக்கு செம்மெழுகு ; சிவப்பு ; சாதிலிங்கம் ; சாராயம் ; கஞ்சி ; எள்ளின் காயில் காணும் ஒருவகை நோய் .
அரக்குக்காந்தம் ஒருவகைத் காந்தக்கல் .
அரக்குச்சாயம் துணிகளுக்கு ஊட்டும் கருஞ்சிவப்புச் சாயம் .
அரக்குத்தைலம் கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் ஒருவகைத் தைலம் .
அரக்குதல் தேயத்தல் ; அழுத்தல் ; வருத்துதல் ; சிதைத்தல் ; முழுதும் உண்ணுதல் ; இருப்பு விட்டுப் பெயர்த்தல் .
அரக்குநீர் சாதிலிங்கம் கலந்த நீர் ; ஆலத்திநீர் ; குருதி .
அரக்குமஞ்சள் கருஞ்சிவப்பு மஞ்சள் ; பூசு மஞ்சள் .
அரகர 'சிவசிவ' எனப் பொருள்படும் ஓரடுக்கு மொழி .
அயிரியம் காண்க : நெட்டி .
அயிரை நொய்ம்மீன் ; நுண்மணல் ; சேர நாட்டில் உள்ள மலை ; சேரநாட்டு ஆறு .
அயில் இரும்பு ; கூர்மை ; அறுவை செய்யும் கத்தி ; வேல் ; கலப்பை ; கோரை ; விரை ; முசுமுசுக்கை ; அழகு ; உண்ணல் .
அயில்தல் உண்ணுதல் .
அயிலவன் வேற்படை உடையவன் , முருகக் கடவுள் .
அயிலான் வேற்படை உடையவன் , முருகக் கடவுள் .
அயிலுழவன் வீரன் .
அயிற்பெண்டு வரிக்கூத்துவகை .
அயின்றாள் அன்னை .
அயினி உணவு ; நீராகாரம் .
அயினிநீர் மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த ஆலத்திநீர் .
அயுக்தம் தகுதியின்மை .
அயுத்தம் தகுதியின்மை .
அயுக்தி பொருத்தமின்மை .
அயுத்தி பொருத்தமின்மை .
அயுதம் பதினாயிரம் ; பிரிவின்மை .
அயோக்கியதை தகுதிக்குறைவு ; தீயநடை .
அயோக்கியம் தகுதியின்மை .
அயோக்கியன் நாணயம் அற்றவன் .
அயோசனம் பிரிவு .
அயோமலம் பானை ; இரும்புக்கிட்டம் .
அயோற்கம் அரப்பொடி , இரும்புத்தூள் .
அயோனிசன் யோனியில் பிறவாதவன் .
அர்க்கபந்து தாமரை .
அர்க்கம் தேவருக்கு அல்லது பெரியோருக்கு வணக்கத்தோடு கொடுக்கும் பொருள் ; எருக்கு ; நீர்க்காக்கை ; பொன் ; செம்பு ; பளிங்கு விலைப்பொருள் ; பூகோளத்தில் குறுக்குக்கோடு , அகலாங்கு .
அர்க்காதிபன் செல்வன் .
அர்க்கியம் தேவர்களுக்கும் அதிதிகளுக்கும் நீரால் செய்யும் ஒருவகை வரவேற்பு .
அர்ச்சகன் பூசாரி ; அத்தியயனபட்டர் .
அர்ச்சனியம் வணக்கம் .
அர்ச்சனை ஆராதனை ; வழிபாடு .
அர்ச்சித்தல் பூசித்தல் ; வழிபடுதல் ; ஒருவருக்காகக் கடவுள் திருப்பெயர் கூறி மலர் முதலியன இடுகை .
அர்ச்சிதன் பூசிக்கப்படுவோன் .
அர்ச்சியசிட்டர் பூசிக்கத்தக்கவர் ; தூயவர் .
அர்ச்சுனம் காண்க : மருது .
அர்ச்சை வழிபாட்டுக்குரிய தெய்வத்திருமேனி .
அர்த்தசந்திரபாணம் பிறைவடிவான அம்பு .
அர்த்தசந்திரம் அணிவகுப்புகளுள் ஒன்று ; திருவாசியின் மேல்வளைவு .
அர்த்தசந்திரன் பாதிச்சந்திரன் ; நகக்குறி ; ஒருவகை நெற்றிக்குறி .
அர்த்தசாத்திரம் பொருள் நூல் .
அருத்தசாத்திரம் பொருள் நூல் .
அர்த்தசாமம் நடு இரவு .
அருத்தசாமம் நடு இரவு .
அர்த்ததாயம் வாரிசாகப் பெறும் பங்குப் பொருள் .
அர்த்த நாரீசன் பாதி உடம்பு பெண் வடிவமான சிவன் , உமையொருபாகன் .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;