கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அகராதி, அ

அழகியவாணன் நெல்வகை .
அழகியன் அழகுடையவன் .
அழகியான் அழகுடையவன் .
அழகு வனப்பு ; நூல் வனப்புள் ஒன்று ; சுகம் ; சிறப்பு ; நற்குணம் ; கண்டசருக்கரை .
அழகுகாட்டுதல் உடை முதலியவற்றான் ஆயசிறப்பினைக் காண்பித்தல் ; கை கால்களால் பரிகசித்தல் .
அழகுகாமாலை காமாலைவகை .
அழகுகுளிசம் கழுத்தணிவகை .
அழகுசெண்டேறுதல் விளையாட்டுக்காகச் சாரி வருதல் ; அழகைக் காடடுதல் .
அழகுதுரைப்பெண் இந்திரபாடாணம் .
அழகுதேமல் தேமல்வகை .
அழகோலக்கம் தன் அழகு தோற்றக் கொலுவிருக்கை .
அழத்தியன் காண்க : பெருங்காயம் .
அழல் நெருப்பு ; தீக்கொழுந்து ; எரிவு ; வெப்பம் ; கோபம் ; நஞ்சு ; உறைப்பு ; கார்த்திகை மீன் ; கேட்டை ; செவ்வாய் ; கள்ளி ; எருக்கஞ் செடி ; கொடிவேலிச்செடி ; நரகம் .
அழல்சேர்குட்டம் கார்த்திகை பரணி .
அழல்தல் எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் .
அழலுதல் எரிதல் ஒளி வீசுதல் ; காந்துதல் ; உறைப்பாதல் ; கோபம் கொள்ளுதல் ; பொறாமை கொள்ளுதல் .
அழல்வண்ணன் நெருப்பு வண்ணத்தனாகிய சிவன் .
அழல்விதை நேர்வாளவித்து .
அழல்விரியன் காண்க : எரிவிரியன் .
அழல்விழித்தல் கோபத்தோடு நோக்குதல் .
அழலம்பூ தீம்பூமரம் .
அழலவன் அக்கினிதேவன் ; சூரியன் ; செவ்வாய் .
அழலாடி கையில் நெருப்புடன் ஆடும் சிவன் .
அழலி நெருப்பு .
அழலிக்கை எரிச்சல் ; பொறாமை .
அழலூட்டுதல் தீயுண்ணச் செய்தல் .
அழலேந்தி கையில் நெருப்போடு இருக்கும் சிவன் .
அழலை தொண்டைக் கரகரப்பு ; களைப்பு .
அழலோம்புதல் அக்கினிகாரியம் செய்தல் .
அழலோன் அக்கினிதேவன் .
அழவணம் காண்க : மருதோன்றி .
அழற்கடவுள் காண்க : அழலோன் .
அழற்கண்ணன் நெற்றியில் தீக்கண்ணையுடைய சிவன் .
அழற்கண்வந்தோன் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவன் ; முருகன் ; வீரபத்திரன் .
அழற்கதிர் சூரியன் .
அழற்கரத்தோன் நெருப்பைக் கையில் ஏந்தியிருக்கும் சிவபிரான் .
அழற்காமாலை காமாலை நோய்வகை .
அழற்காய் காண்க : மிளகு .
அழற்குட்டம் காண்க : கார்த்திகை .
அழற்சி உறைப்புச் சுவை ; எரிவு ; சினம் ; அழுக்காறு ; கால்நடைகளுக்குச் சுரம் உண்டாக்கும் ஒரு நோய் .
அழற்பால் எருக்கஞ்செடி .
அழற்பித்தம் பித்தநோய்வகை .
அழற்பிரவை நரகவகை .
அழற்புண் சிவந்து இரத்தம் வடியும் புண் .
அழற்புற்று வெள்ளை விழியில் எரிசதையை உண்டாக்கும் ஒரு நோய் .
அழற்றடம் தீக்காய் கலம் .
அழற்றி அழலச்செய்வது ; எரிவு ; அழுக்காறு ; சினம் .
அழற்றுதல் வெம்மை செய்தல் .
அழறு சேறு .
அழன் பிணம் ; பேய் .
அழனம் பிணம் ; வெம்மை ; தீ .
அழனாகம் ஒருவகை நச்சுப் பாம்பு .
அழனிறக்கடவுள் காண்க : அழல்வண்ணன் .
அழாஅல் அழுகை .
அவையர் சபையோர் .
அவையல் குற்றலரிசி ; திரள் ; அவல் .
அவையல்கிளவி சபையில் உரைக்கத் தகாத சொல் .
அவையலும் துவையலும் நெல் முதலியன குற்றப் பட்டுக் கிடக்கும் நிலை ; செயல் முற்றுப் பெறாமை .
அவையறிதல் சபையின் இயல்பை அறிதல் .
அவையாவரிசி கொழியல் அரிசி .
அவையிற்றின் அவற்றின் .
அழக்கு காண்க : ஆழாக்கு .
அழக்குடம் பிணக்குடம் .
அழக்கொடி பேய்ப்பெண் .
அழகங்காட்டுதல் காண்க : அழகுகாட்டுதல் .
அழகச்சு நாணயவகை .
அழகப்பன்காளை பெருமாள் மாடு .
அழகம் பெண்டிர் கூந்தல் .
அழகர் திருமாலிருஞ்சோலைத் திருமால் ; காண்க : வெள்ளெருக்கு .
அழகர்மலை அழகர் கோயில்கொண்டுள்ள மலை , திருமாலிருஞ்சோலை .
அழகன் திருமால் ; அழகுடையவன் ; சுந்தரன் .
அழகாரம் அழகான பேச்சு ; வீண்புகழ்ச்சிப் பேச்சு .
அழகி அழகுள்ளவள் .
அழகிதழகிது மிக நன்று .
அழகியமணவாளன் திருவரங்கத்திலிருக்கும் மணமகனாகிய அரங்கநாதன் .
அழிகன்று விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு .
அழிகால் முதிர்ச்சியால் அழிக்க வேண்டியதான வெற்றிலைத் தோட்டம் .
அழிகாலி வீண்செலவு செய்வோன் .
அழிகிரந்தி கிரந்திநோய்வகை .
அழிகுட்டி காண்க : அழிகன்று .
அழிகுரன் தோற்றவன் .
அழிகை அழிவு ; சிதைவு .
அழிகொடிக்கால் காண்க : அழிகால் .
அழிச்சாட்டம் காண்க : அழிச்சாட்டியம் .
அழிச்சாட்டியக்காரன் தீம்புள்ளவன் ; பொய் வழக்கை எழுப்புவோன் .
அழிச்சாட்டியம் தீம்பு ; கேடு .
அழிசெய்தல் கெடுத்தல் .
அழிசெலவு தோட்டவிருத்தி முதலியவற்றிற்கு ஆகும் செலவு .
அழிஞ்சில் ஒரு மரம் .
அழிஞ்சு ஒரு மரம் .
அழிஞ்சுக்காடு பாலைநிலம் .
அழித்தல் செலவழித்தல் ; கெடுத்தல் ; கலைத்தல் ; குலைத்தல் ; உள்ளதை மாற்றுதல் ; மறப்பித்தல் ; தடவுதல் ; நீக்குதல் ; நிந்தித்தல் ; விடைகாணுதல் .
அழித்தழித்து திரும்பத்திரும்ப .
அழித்து மீட்டும் ; மாறுபாடாய் .
அழித்துச்சொல் இழித்துக்கூறல் .
அழித்துரை இழித்துரை .
அழிதகவு துன்பம் .
அழிதகன் தீநெறி நடப்போன் .
அழிதகை தகுதிக்கேடு .
அழிதல் நாசமாதல் ; சிதைவுறுதல் ; தவறுதல் ; நிலைகெடுதல் ; தோற்றல் ; மனம்உருகுதல் ; வருந்துதல் ; மனம் உடைதல் ; பெருகுதல் ; பரிவுகூர்தல் ; செலவாதல் .
அழிதலை தலையோடு .
அழிதூஉ அலி .
அழிந்தோரை நிறுத்தல் நிலைதாழ்ந்தாரை மீண்டும் நிலைபெறச் செய்தல் ; வேளாண் மாந்தர் இயல்புகளுள் ஒன்று .
அழிநோய் குட்டம் .
அழிப்படுத்தல் கதிரைக் கடாவிட்டு உழக்குதல் .
அழிப்பன் சங்கரிப்பவன் ; துன்புறுத்துபவன் .
அழிப்பாங்கதை விடுகதை .
அழிப்பாளன் தட்டான் .
அழிப்பாளி வீண்செலவு செய்வோன் .
அழிப்பு சங்காரம் ; குற்றம் .
அழிபசி மிக்க பசி .
அழிபடர் மிகுந்த துன்பம் .
அழிபடுதல் சிதைதல் ; செலவாதல் .
அழிபயல் தீநெறியில் நடக்கும் பையன் .
அழிபாடு அழிவு .
அழிபு கேடு ; தோல்வி .
அழிபுண் அழுகு இரணம் .
அழிபெயல் மிக்க மழை .
அழிம்பன் தீம்பு செய்பவன் .
அழிம்பு தீம்பு ; வெளிப்படையான பொய் ; அவதூறு ; நீதியற்ற வழக்கு .
அழிமதி கெடுமதி ; அழிமானம் .
அழிமேய்ச்சல் பயிர் முழுதும் அழியக் கால்நடைகளைத் தின்னும்படி விடுகை .
அழியமாறுதல் தன்நிலையை அழித்துவேறாதல் .
அழியல் மனக்கலக்கம் .
அழியாமுதல் நிலையான மூலநிதி ; கடவுள் .
அழியாமை அழிவின்மை ; மனம் கலங்காமை .
அழியாவியல்பு அருகன் எண்குணத்துள் ஒன்று .
அழியாவிளக்கு நந்தாவிளக்கு .
அழிவது கெடுதி .
அழிவழக்கு அக்கிரம விவகாரம் ; வீண்வாதம் ; இழிந்தோர் வழக்கு .
அழிவாய் சங்கமுக மணல்மேடு .
அழிவி கழிமுகம் .
அழிவு கேடு ; தீமை ; செலவு ; வறுமை ; வருத்தம் ; மனவுறுதியின்மை ; தோல்வி ; கழிமுகம் .
அழிவுகாலம் கெட்ட காலம் ; ஊழி .
அழிவுபாடு அழிவு .
அழுக்ககற்றி வண்ணான் காரநீர் .
அழுக்கடித்தல் அழுக்குப் போக்குதல் .
அழுக்கணவன் இலை தின்னும் புழு .
அழுக்கம் கவலை .
அழுக்கறுத்தல் பொறாமை கொள்ளுதல் .
அழுக்கறுதல் மாசு போதல் ; பொறாமை நீங்குதல் .
அழுகறுப்பான் பொறாமை கொள்பவன் .
அழுக்கன் ஈயாதவன் , உலோபி .
அழாந்தை அழானுக்குத் தந்தை .
அழி கேடு ; வைக்கோல் ; வைக்கோலிடும் கிராதி ; கிராதி ; வண்டு ; மிகுதி ; வருத்தம் ; கழிமுகம் ; இரக்கம் .
அழிகட்டு பொய்ச்சீட்டு ; வீண் போக்கு ; தடை ; மந்திரம் ; நஞ்சு முதலியவற்றிற்கு மாற்று .
அழிகடை அறக்கெட்டது .
அழிகண்டி இவறலன் , உலோபி .
அழிகரப்பான் படர்தாமரை நோய் .
அழிகரு கரு அழிவு .       
அழைப்புத்தூரம் கூப்பிடு அளவான 1000 கஜ தூரம் ( 914 மீ . ) .
அழைப்புப்பத்திரம் அழைப்புக் கடிதம் ; கிறித்தவசபைக்குக் குருவாகும்படி அழைக்கும் பத்திரம் .
அழையுறுத்தல் கூவுதல் .
அள் அள்ளப்படுவது ; செறிவு ; வன்மை ; வண்டி வில்லைத் தாங்கும் கட்டை ; பற்றிரும்பு ; கூர்மை ; பூட்டு ; நீர்முள்ளி ; அள்ளுமாந்தம் ; காது ; பெண்பால் விகுதி .
அள் (வி) அள்ளு ; நெருங்கு .
அள்வழுப்பு காதுகுறும்பி .
அள்ளல் நெருக்கம் ; சேறு ; இசைக்கரணங்கள் எட்டனுள் ஒன்று ; எழுநரகத்துள் ஒன்று ; அள்ளுதல் ; கொய்தல் ; சேர்த்தெடுத்தல் .
அள்ளாடித்தள்ளாடி தளர்ந்த நடையாய் .
அள்ளாடுதல் செறிதல் ; தளர்தல் .
அள்ளாத்தி மீன்வகை .
அள்ளாயமானியம் அள்ளு சுதந்தரம் .
அள்ளி வெண்ணெய் .
அள்ளிக்குத்துதல் செடி முதலியவற்றின்மேல் நீர் தெளித்தல் ; கஞ்சி முதலியவற்றைச் சிறுகக் கொடுத்தல் .
அள்ளிக்கொட்டுதல் பரவுதல் ; மிகச் சம்பாதித்தல் ; மிகக் கொடுத்தல் .
அள்ளிக்கொண்டுபோதல் வேகமாய் ஓடுதல் ; நோய் கடுமையாகக் கொள்ளை கொள்ளுதல் .
அள்ளித்துள்ளுதல் மிகச் செருக்குதல் .
அள்ளியிறைத்தல் அளவிற்குமேல் செலவிடுதல் .
அள்ளிருள் கும்மிருட்டு ; செறிந்த இருட்டு .
அள்ளிவிடுதல் மிகுதியாகக் கொடுத்தல் .
அள்ளு காது ; கன்னம் ; கூர்மை ; பற்றிரும்பு ; நெருக்கம் ; ஒரு நோய் ; அளவு கூலியாகக் கையால் அள்ளிக்கொள்ளும் தானியம் ; விலா எலும்பு .
அள்ளுக்கட்டுதல் பெட்டி முதலியவற்றை இறும்புத் தகட்டால் இறுக்குதல் ; பலப்படுத்துதல் .
அள்ளுக்காசு கூடைக்காரரிடமிருந்து வசூலிக்கும் பணம் .
அள்ளுகொண்டை மகளிர் மயிர் முடிவகை .
அள்ளுகொள்ளை பெருங்கொள்ளை .
அள்ளுச்சீடை சிறு சீடைவகை .
அள்ளுதல் செறிதல் ; கையால் முகத்தல் ; திரளாய் எடுத்தல் ; வாரிக்கொண்டு போதல் ; எற்றுதல் ; நுகர்தல் .
அழுக்காமை காண்க : அழுங்காமை .
அழுக்காறாமை பொறாமை கொள்ளாமை .
அழுக்காறு பிறர் ஆக்கம் பொறாமை ; மனத்தழுக்கு .
அழுக்கு மாசு ; மனமாசு ; பொறாமை ; ஆணவ முதலிய பாசம் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடை ; மலசலாதிகள் ; பிள்ளைப்பேற்றின் பின் வடியும் ஊனீர் ; ஆமைவகை .
அழுக்குத்தேமல் அழுக்கினால் உடலில் தோன்றும் புள்ளிகள் .
அழுக்குமூட்டை பழைய வழக்க ஒழுக்கங்களைப் பின்பற்றுபவன் ; வெளுத்தற்குரிய மாசுபடிந்த ஆடைகள் .
அழுக்கெடுத்தல் பற்றிய மாசுகளைப் போக்குதல் ; அழுக்குத் துணிகளைப் பெற்றுச் செல்லுதல் .
அழுகண் கண்ணோய் வகை .
அழுகண்ணி பூண்டுவகை .
அழுகல் பதனழிந்தது ; தூய்மையில்லாதது .
அழுகள்ளன் பாசாங்கு செய்வோன் .
அழுகற்சரக்கு அழுகின பண்டம் ; அழுகுதற்குரிய பண்டம் ; அழுகக்கூடிய சரக்குகளுக்கு விதிக்கும் வரி .
அழுகற்சிரங்கு நீர்கசியும் சிரங்கு .
அழுகற்புண் அழுகின இரணம் .
அழுகற்றூற்றல் விடாத சிறுமழை .
அழுகிச்சேதம் வெள்ளத்தால் உண்டாகும் பயிர்ச் சேதத்திற்குச் செய்யும் வரிக்குறைப்பு .
அழுகுகால் நீர்ப்பெருக்கால் அழுகிய நெற்பயிர் .
அழுகுசப்பாணி காண்க : அழுகுசர்ப்பம் ; அழுகு சர்ப்பம் நக்குதலால் உண்டாகும் நோய் .
அழுகுசர்ப்பம் ஒரு நச்சுயிரி .
அழுகுசிறை அவிந்து சாகத்தக்க சிறை .
அழுகுணி அழுகிற குணம் உள்ளவன் ; சொறி சிரங்கு வகை .
அழுகுதல் பதனழிதல் .
அழுகுபுண்குட்டம் குட்டநோய் வகை .
அழுகுமூலம் மூலநோய் வகை .
அழுகை காண்க : அவலம் .
அழுங்கல் துன்பம் ; கேடு ; நோய் ; அச்சம் ; சோம்பல் ; இரக்கம் ; ஆரவாரம் ; யாழின் நரம்போசை .
அழுங்காமை கடல் ஆமைவகை .
அழுங்கு விலங்குவகை ; கற்றாழை ; பாலை யாழ்த்திறவகை .
அழுங்குதல் வருந்துதல் ; துன்பப்படுதல் ; அஞ்சுதல் ; உரு அழிதல் ; கெடுதல் ; சோம்புதல் ; தவிர்த்தல் ; ஒலித்தல் ; அழுதல் .
அழுங்குப்பிடி விடாப்பிடி .
அழுங்குவித்தல் விலக்குதல் ; துன்புறுத்துதல் .
அழுத்தக்காரன் பொருள் இறுக்கமுடையவன் ; அழுக்கன் .
அழுத்தம் இறுக்கம் ; கடினம் ; உறுதி ; பிடிவாதம் ; உலோபம் ; ஆழ்ந்து அறியும் குணம் .
அழுத்து அழுத்துகை ; பதிவு .
அழுத்துதல் அழுந்தச் செய்தல் ; பதித்தல் ; அமிழ்த்துதல் ; எய்தல் ; வற்புறுத்துதல் ; உறுதியாக்குதல் .
அழுந்து நீராழம் ; வெற்றிலை நடும் வரம்பு .
அழுந்துதல் அழுக்குண்ணுதல் ; உறுதியாகப்பற்றுதல் ; உறுதியாதல் ; பதிதல் ; அமிழ்தல் ; அனுபவப்படுதல் ; வருந்துதல் .
அழுந்துபடுதல் தொன்றுதொட்டு வருதல் .
அழுந்தை அழுந்தூர் .
அழுப்பு சோறு .
அழுப்புகம் தேவலோகம் .
அழும்பு தீம்பு .
அழும்புதல் செறியக் கலத்தல் .
அழுவம் பரப்பு ; நாடு ; துர்க்கம் ; காடு ; போர் ; முரசு ; குழி ; ஆழம் ; கடல் ; மிகுதி ; பெருமை ; நடு ; நடுக்கம் .
அழுவிளிப்பூசல் ஒப்பாரி வைத்தழும் பேரொலி .
அழுவை யானை .
அழைத்தல் கூப்பிடுதல் ; பெயரிட்டுக் கூப்பிடுதல் ; வரச்செய்தல் ; கதறுதல் .
அழைப்பு கூப்பிடுகை ; பொருள் புணரா ஓசை .
அழைப்புச்சுருள் திருமணத்துக்கு அழைக்கும் போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாமபூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு .
அளத்தல் அளவிடுதல் ; வரையறுத்தல் ; பிரமாணம் கொண்டு அறிதல் ; கொடுத்தல் ; கலத்தல் ; எட்டுதல் : கருதுதல் ; அளவளாவுதல் ; வீண்பேச்சுப் பேசுதல் .
அளத்தி நெய்தல்நிலப் பெண் ; உப்பு அமைப்போனின் பெண் .
அளத்தியம் சவர்க்காரம் ; நீலபாடாணம் .
அளத்துநிலம் களர்நிலம் .
அளத்துப்பச்சை கடற்கரையையடுத்துக் காணும் மருக்கொழுந்துச் சக்களத்தி என்னும் பூண்டு .
அளத்துப்புல் காண்க : முயிற்றுப்புல் .
அளத்துப்பூளை செடிவகை .
அளப்பம் அளக்கை ; வழி ; ஊழ் ; அலப்பு .
அளப்பளத்தல் அலப்புதல் ; முறுமுறுத்தல் .
அளப்பறிதல் உட்கருத்தைத் தந்திரமாய் அறிதல் , ஒருவனுடைய எண்ணத்தை ஆராய்ந்து அறிதல் .
அளப்பன் வீணாகப் பேசுவோன் .
அளப்பு அளக்கை ; எல்லை ; ஆராய்ந்து அறிகை ; அலப்புகை ; முறுமுறுக்கை ; ஆலோசனை .
அளப்புக்கு முடக்கொற்றான் கொடி .
அளபு அளவு ; அளபெடை .
அளபெடுத்தல் எழுத்து மாத்திரை மிக்கு ஒலித்தல் .
அளபெடை பாட்டில் ஓசை மிகுந்து ஒலிக்கும் அளவு .
அளபெடைவண்ணம் அளபெடை பயின்றுவரும் சந்தம் .
அளம் உப்பளம் ; நெய்தனிலம் ; கடல் ; களர் நிலம் ; செறிவு .
அளம்படுதல் வருந்துதல் .
அளம்பல் வெடங்குறுணிமரம் .
அளம்பற்றுதல் உப்புப்பூத்தல் .
அளமம் பொன் .
அளர் நீர் ; மஞ்சள் ; உவர் .
அளர்க்கம் காண்க : தூதுவளை .
அளர்நிலம் களர்நிலம் .
அளவநிலம் களர்நிலம் .
அளர்ப்பூளை காண்க : அளத்துப்பச்சை .
அளவடி நாற்சீரான் வரும் அடி .
அளவடிவிருத்தம் கலிவிருத்தம் .
அளவப்பொட்டல் காண்க : அளர்நிலம் .
அளவம் ஒருவனைப்போல் நடித்துப் பரிகசித்தல் .
அளவர் உப்பமைப்போர் ; உழுது பயிரிடுவோர் வகையினர் ; மதிப்பிடுவோர் .
அளவழிச்சந்தம் நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை .
அளவழித்தாண்டகம் இருபத்தேழெழுத்து முதலாக வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை
அளவளப்பு அளவளாவுகை .
அளவளாவு மனக்கலப்பு .
அளவளாவுதல் கலந்து பேசுதல் .
அளவறுத்தல் அளந்தறிதல் ; வரையறுத்தல் .
அளவன் தானியம் அளப்போன் ; உப்பமைப்போன் ; சோரபாடாணம் .
அளவாக்குதல் மட்டமாக்குதல் .
அளவி அளவு .
அளவிடுதல் ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் .
அளவிடை ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் .
அளவியல் பாவின் அடிவரையறை .
அளவியற்சந்தம் நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள்வகை .
அளவியற்றாண்டகம் இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வழக்கு .
அளவில் மட்டில் .
அளவிறத்தல் எண்ணிலவாதல் ; அளவு கடத்தல் .
அளவினார் நேர்வாளம் ; சிறுமரவகை .
அளவு பரிமாணம் ; தருக்க அளவை ; தாளத்தில் மூன்று மாத்திரைக் காலம் ; மாத்திரை ; நில அளவு ; சமயம் ; தன்மை ; ஞானம் ; மட்டும் ; தொடங்கி .
அளவுக்கல் நீரேற்றம் காட்டும் கல் ; எல்லைக்கல் .
அளவுகருவி பொருள்களை அளவிட்டு அறியப்பயன்படும் கருவி .
அள்ளுமாந்தம் குழந்தைகளுக்கு உண்டாகும் ஒருவகை நோய் .
அள்ளூறுதல் வாயூறுதல் .
அள்ளெடுக்கிறவன் ஒவ்வோர் அளவிலும் ஒவ்வொரு பிடி பெற்றுக்கொண்டு நெல் அளப்பவன் .
அள்ளெடுத்தல் கையால் வாருதல்
அள்ளை பேய் ; விலாப்புறம் .
அள்ளைப்புறம் வீட்டின் ஒரு பகுதி .
அளக்கர் கடல் ; நிலம் ; சேறு ; உப்பளம் ; நீள் வழி ; கார்த்திகை நாள் .
அளக்கல் அளத்தல் .
அளக்காய் காண்க : வெள்ளெருக்கு .
அளகத்தி கூந்தலுடையவள் .
அளகபந்தி கூந்தலின் ஒழுங்கு .
அளகபாரம் கூந்தல் தொகுதி .
அளகம் பெண்மயிர் ; மயிர்க்குழற்சி ; பன்றிமுள் ; மழைநீர் ; நீர் ; காண்க : வெள்ளெருக்கு .
அளகளப்பு காண்க : அளவளப்பு ; சேர்க்கை .
அளகவல்லி மயிர்மாட்டி .
அளகாதிபதி அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் .
அளகாதிபன் அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் .
அளகாபதி அளகைநகர்த் தலைவனாகிய குபேரன் .
அளகாபுரி குபேரனின் நகரம் ; தஞ்சாவூர் .
அளகு கோட்டான் , கோழி , மயில் இவற்றின் பெண் ; சேவல் ; கார்த்திகை நாள் .
அளகேசன் குபேரன் .
அளகை அளகாபுரி ; தஞ்சை ; எட்டிற்கு மேலும் பத்திற்குக் கீழுமான வயதுடைய பெண் .
அளகையாளி காண்க : அளகேசன் .       
அற்பசங்கை சிறுநீருக்குப் போகை .
அற்பசி காண்க : ஐப்பசி ; அசுவினி .
அற்பத்தனம் இழிகுணம் .
அற்பத்திரம் துளசி ; திருநீற்றுப்பச்சை .
அற்பபத்திரம் துளசி ; திருநீற்றுப்பச்சை .
அற்பதுமம் செந்தாமரை .
அற்பபதுமம் செந்தாமரை .
அற்பம் சிறுமை ; இழிவு ; இலேசு ; நாய் ; பஞ்சு ; புகை .
அற்பமாரி சிறுகீரை .
அற்பமாரிடம் சிறுகீரை .
அற்பர் கீழ்மக்கள் .
அளவுபடி முத்திரைப் படி .
அளவுபடுத்தல் வரையறை செய்தல் .
அளவுபடை சிறுசேனை .
அளவுவர்க்கம் ஒரு பழைய வரி .
அளவெடுத்தல் ஒன்றன் நீளம் அகலம் முதலியவற்றை அளந்தறிதல் .
அளவெண் நாற்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க உறுப்புவகை .
அளவை அளவு ; அளவுகருவி ; தருக்க அளவை ; எல்லை ; சமயம் ; நாள் ; தன்மை ; அறிகுறி .
அளவைக்கால் மரக்கால் என்னும் முகத்தலளவைக் கருவி .
அளவைநூல் தருக்கநூல் .
அளவையாகுபெயர் எண்ணல் , எடுத்தல் , முகத்தல் , நீட்டல் என்னும் அளவைப் பெயர் அவ்வவ் அளவுகொண்ட பொருளுக்கு ஆகிவருவது .
அளவை வடிவம் உருவத்தைக் காட்டுதற்கு வரைந்த படம் .
அளவைவாதி பிரமாண வாதம் செய்பவன் .
அளவொழுகு ஊரின் நிலபுலங்களின் அளவுகளைப் பதிவு செய்த புத்தகம் .
அளறு குழைசேறு ; குழம்பு ; காவிக்கல் ; நீர் ; நரகம் .
அளறுதல் சிதறி வெடித்தல் ; நெரிதல் ; பிளத்தல் .
அளறுபடுதல் சேறாதல் ; நிலைகலங்குதல் .
அளாய்குளாய் பரபரப்பான செய்கை .
அளாவன் கலப்பு .
அளாவுதல் கையால் அளைதல் ; துழாவுதல் ; கலத்தல் ; சென்று பொறுந்துதல் ; கலந்து பேசுதல் .
அளி அன்பு ; அருள் ; ஆசை ; வரவேற்பு ; எளிமை ; குளிர்ச்சி ; கொடை ; காய் ; வண்டு ; தேன் ; வண்டுகொல்லி ; கருந்தேனீ ; மாட்டுக்காடி ; தேள் ; கிராதி ; மரவுரிமரம் .
அளி (வி) கொடு ; காப்பாற்று .
அளிகம் நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு .
அளீகம் நெற்றி ; பொய் ; நெல்லி ; வெறுப்பு .
அளித்தல் காத்தல் ; கொடுத்தல் ; படைத்தல் ; ஈனுதல் ; அருள்செய்தல் ; விருப்பம் உண்டாக்குதல் ; சோர்வை நீக்குதல் ; செறித்தல் ; சொல்லுதல் .
அளித்து அளிசெய்யத்தக்கது .
அளிது அளிசெய்யத்தக்கது .
அளிந்தம் கோபுரவாயில் திண்ணை .
அளிந்தார் அன்புடையோர் .
அளிப்பாய்ச்சுதல் கிராதியிடுதல் .
அளிம்பகம் குயில் ; தவளை ; இருப்பை ; தாமரைப் பூந்தாது .
அளியர் காண்க : மைத்துனர் ; இரங்கத்தக்கவர் .
அளியன் அன்புமிக்கவன் ; காக்கப்படத்தக்கவன் .
அளிலாமயம் வாதநோய் .
அளுக்குதல் குலைதல் ; அஞ்சுவித்தல் .
அளுங்கு காண்க : அழுங்கு .
அளேசுவெப்பம் அதிவிடய வேர் .
அளேசுவெப்பு அதிவிடய வேர் .
அளேரியம் வெங்காயம் .
அளேறுகம் காண்க : தூதுவளை .
அளை தயிர் ; மோர் ; வெண்ணெய் ; புற்று ; பொந்து ; குகை ; ஏழாம்வேற்றுமையுருபு .
அளை (வி) துழாவு ; கல ; தழுவு .
அளைச்சல் வயிற்றுளைச்சல் ; சீதபேதி .
அளைதல் துழாவுதல் ; கலத்தல் ; சூடுதல் ; தழுவுதல் ; கூடியிருத்தல் ; அனுபவித்தல் ; வயிறு வலித்தல் .
அளைமறிபாப்பு பாட்டின் ஈறறில் நின்ற சொல் இடையிலும் முதலிலும் சென்று பொருள் கொள்ளப்படும் முறை .
அளையெடுத்தல் வளை தோண்டுதல் ; புரை வைத்தல் .
அளைவு சோறு முதலியன குழைகை ; கலப்பு .
அற்கத்தி காண்க : திப்பிலி .
அற்கம் அடக்கம் ; வெண்துளசி ; பொருள் விலை ; பூசைவிதி .
அற்களம் கதவின் தாழ் ; பேரவை .
அற்கன் அருக்கன் ; சூரியன் .
அற்காமை நிலையாமை .
அற்கி காண்க : ஓரிலைத்தாமரை .
அற்குதல் நிலைபெறுதல் ; தங்குதல் .
அற்சிரம் காண்க : அச்சிரம் .
அற்சிரை காண்க : அச்சிரம் .
அற்பக்கியன் சிற்றறிவுடையவன் .
அற்பகதன் வாழை .
அற்பகந்தம் காண்க : செந்தாமரை .
அற்பகேசி காண்க : வசம்பு .
அளவுகாரன் நெல் முதலியன அளப்பவன் .
அளவுகூடை குறித்த அளவுள்ள தானியம் அளக்கும் கூடை .
அளவுகோல் அளக்கும் தடி .
அளவுதல் கலப்புறுதல் ; கலத்தல் ; உசாவுதல் .
அளவுநாழி முத்திரைப் படி .       
அறச்செட்டு கடுஞ்செட்டு .
அறச்செல்வி தருமதேவதை ; உமாதேவி .
அறச்சோலை கோயினுட்சோலை .
அறசம் கத்தரி .
அறசோகணக்கு காட்டுக்கருணை ; கருணைக்கிழங்கு .
அறத்தவிசு நீதிபதியின் இருக்கை .
அறத்தளி அந்தப்புரம் .
அறத்தின்செல்வி காண்க : அறச்செல்வி .
அறத்தின்சேய் தருமன் .
அறத்தின்மூர்த்தி தருமதேவதை ; பார்வதி ; திருமால் .
அறத்துணைவி தருமபத்தினி .
அறத்துப்பால் திருக்குறள் , நாலடியார் நூல்களின் முப்பால்களுள் முதலானதும் அறத்தைப் பற்றிக் கூறுவதுமான பகுதி .
அறத்துறுப்பு அறத்தினது கூறு ; அவை : ஐயப்படாமை , விருப்பின்மை , வெறுப்பின்மை , மயக்கமின்மை , பழியை நீக்கல் , அழிந்தோரை நிறுத்தல் , அறம் விளக்கல் , பேரன்புடைமை .
அறத்துறை அறவழி .
அறத்தைக்காப்போன் ஐயனார் .
அறத்தொடுநிலை களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை .
அறத்தொடுநிற்றல் களவினைத் தலைவி முதலானோர் தமர்க்கு முறையே அறிவுறுத்துகை .
அறதேயன் அறங்களை நடத்துவோன் .
அறநிலை பிரமமணம் ; அறங்களைப் பாதுகாத்தற்குரிய நிலையம் .
அறநிலைப்பொருள் நெறிப்படி அரசன் பெறும் இறைப்பொருள் .
அற்பரம் மக்கட் படுக்கை .
அற்பருத்தம் வாழை .
அற்பாசனம் மூத்திரம் பெய்கை .
அற்பாசமனம் மூத்திரம் பெய்கை .
அற்பாயு குறைந்த வாழ்நாள் .
அற்பாயுசு குறைந்த வாழ்நாள் .
அற்பாயுள் குறைந்த வாழ்நாள் .
அற்புத்தளை அன்புப் பிணைப்பு .
அற்புதக்கண் அபிநயக் கண்வகை .
அற்புதம் ஒன்பான் சுவையுள் ஒன்று ; வியப்பு ; அறிவு ; அழகு ; சூனியம் ; ஆயிரங்கோடி ; சிதம்பரம் ; தசைக்கணு .
அற்புதமூர்த்தி கடவுள் .
அற்புதவாதம் இசிவுநோய்வகை .
அற்புதவாயு இசிவுநோய்வகை .
அற்புதன் கடவுள் ; கம்மாளன் ; புதியது புனைவோன் ; கண்ணாளன் .
அற்றகாரியம் தீர்ந்த பொருள் ; முடிந்த வேலை .
அற்றகுற்றம் இழப்பு .
அற்றப்படுதல் கவனத்தின் இடையறவுபடுதல் ; இல்லாமையாதல் .
அற்றபேச்சு முடிவான பேச்சு .
அற்றம் அழிவு ; துன்பம் ; இறுதி ; சோர்வு ; வறுமை ; இடைவிடுகை ; அவகாசம் ; அவமானம் ; அறுதி ; விலகுகை ; சுற்று ; மறைக்கத்தக்கது ; நாய் ; பொய் ; உண்மை .
அற்றவன் பற்றற்றவன் ; பொருளற்றவன் .
அற்றார் பொருள் இல்லாதவர் ; முனிவர் .
அற்று அத் தன்மையது ; அதுபோன்றது ; ஓர் உவம உருபு ; ஒரு சாரியை .
அற்றுப்போதல் முழுதும் ஒழிதல் ; இடைமுறிதல் ; முழுதும் கைவருதல் .
அற்றூரம் காண்க : மரமஞ்சள் .
அற்றேல் அப்படியானால் .
அற்றை அந்நாட்குரிய ; அன்றன்றைக்குரிய ; அற்பமான .
அற்றைக்கூலி நாட்கூலி .
அற்றைக்கொத்து நாள்தோறும் தானியமாகக் கொடுக்கும் கூலி .
அற்றைநாள் அன்று ; அந்த நாள் .
அற்றைப்படி நாள்தோறும் உணவுக்காக அளிக்கும் பண்டம் அல்லது பணம் .
அற்றைப்பரிசம் விலைமாதர் அன்றன்று பெறும் கூலி .
அற்றைப்பிழைப்பு அன்றன்று செய்யும் சீவனம் ; அன்றாடங்காய்ச்சி .
அற முழுவதும் ; மிகவும் ; தெளிவாக ; செவ்வையாக .
அறக்கட்டளை நிலைபெற்ற அறச்செயல்கள் நடப்பதற்காக ஒதுக்கப்பெறும் மானியம் முதலியன .
அறக்கடவுள் யமன் ; தருமதேவதை .
அறக்கடை பாவம் .
அறக்கப்பறக்க விழுந்து விழுந்து ; விரைவாக .
அறக்கப்பாலை திருநாமப்பாலை .
அறக்கருணை அனுக்கிரக ரூபமான அருள் .
அறக்கழிவு அறநெறிக்கு மாறுபட்ட செயல் .
அறக்களவழி வேளாண் தொழிலைக் கூறும் புறத்துறை .
அறக்களவேள்வி வேள்விச்செயல் .
அறக்கற்பு அமைதிநிலை பொருந்திய கற்பு .
அறக்காடு சுடுகாடு .
அறக்குளாமீன் சூரைமீன் .
அறக்கூர்மை மிக்க கூர் .
அறக்கூழ்ச்சாலை அன்னசத்திரம் ; கஞ்சிமடம் .
அறக்கொடி பார்வதி ; உமை .
அறக்கொடிபாகன் சிவன் .
அறங்கடை பாவம் .
அறன்கடை பாவம் .
அறங்காவல் கோயில் சைத்தியம் முதலாயின காக்கும் தொழில் ; நற்பொறுப்பு .
அறங்கூறவையம் நீதிமன்றம் .
அறச்சாலாபோகம் அறச்சாலைகளுக்கு விட்ட மானியம் .
அறச்சாலை தருமசாலை .       
அறவுபதை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் சூழ்ச்சி நான்கனுள் ஒன்று ; தருமநெறியைக் கூறி ஆராய்தல் .
அறவுரை நீதிநெறி உரைத்தல் ; நீதிமொழி .
அறவுளி உடல் நலம்பெறச் செய்யும் மந்திரம் .
அறவூதுதல் புடமிடுதல் .
அறவை உதவியற்ற நிலை ; தீமை ; அறநெறி .
அறவைச்சிறை கடுஞ்சிறை .
அறவைச்சோறு உறவற்றவர்க்கு அளிக்கும் உணவு .
அறவைத்தல் காண்க : அறவூதுதல் .
அறவைத்தூரியம் உறவற்றவர்க்கு அளிக்கும் உடை .
அறவைப்பிணஞ்சுடுதல் உறவற்ற பிணத்துக்கு ஈமக்கடன் செய்தல் .
அறவைப்பு புடம்வைக்கை .
அறவோர்பள்ளி சமண பௌத்த ஆலயம் .
அறவோலை இனாம் சாசணம் .
அறவோன் அறநெறியாளன் ; புத்தன் .
அறளை நச்சுத் தொந்தரை ; ஒரு நோய் .
அறன் வேள்வி முதல்வன் ; அறக்கடவுள் .
அறனில்பால் தீவினை .
அறனிலாளன் அறவுணர்வு அற்றவன் .
அறனையம் காட்டுக்கருணை .
அறனோம்படை தருமம் பாதுகாக்கை ; தருமம் பாதுகாக்கும் இடம் ; தருமம் போதிக்குமிடம் .
அறாக்கட்டை மூடன் ; கஞ்சன் .
அறாட்டுப்பறாட்டு காண்க : அராட்டுப்பிராட்டு ; போதியதும் போதாததுமானது .
அறாம்பை காண்க : அறாமை .
அறாமி கொடுமை இயல்பு உள்ளது ; இடக்குப் பண்ணுகிற குதிரை .
அறாமை கவிழ்தும்பைப் பூண்டு .
அறாயிரம் ஆறாயிரம் .
அறாவட்டி அதிக வட்டி ; கடுவட்டி .
அறாவிலை அளவுக்கு மேற்பட்ட விலை .
அறாவுதல் அடித்தல் .
அறி அறிவு .
அறிக்கை அறிவிப்பு ; குற்றத்தை ஒப்புக்கொள்கை ; பயிற்றுகை .
அறிக்கைப்பத்திரம் எழுத்து மூலமான விளம்பரம் ; வரலாறு குறிக்கும் பத்திரிகை .
அறிக்கைபண்ணுதல் விளம்பரப்படுத்துதல் ; குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் .
அறிக்கையிடுதல் விளம்பரப்படுத்துதல் ; குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் .
அறிக்கைவாசித்தல் திருமண விளம்பரம் செய்தல் ; பள்ளி நிறுவனம் , சங்கம் போன்ற அமைப்புகளின் நடவடிக்கையைக் கூட்டத்தில் படித்தல்
அறிகண்ணி எருக்கங்கிழங்கு .
அறிகரி நேர்சாட்சி .
அறிகருவி உணர்வுப்பொறி .
அறிகுறி அடையாளம் .
அறிசலம் நெஞ்சறிந்த குற்றம் .
அறிசா ஒருவகை மீன் .
அறிஞன் அறிவுடையோன் ; புலவன் , முனிவன் ; புத்தன் ; புதன் .
அறிதல் உணர்தல் ; நினைத்தல் ; மதித்தல் ; பயிலுதல் ; அனுபவித்தல் ; உறுதிசெய்தல் ; புதிதாய்க் கண்டுபிடித்தல் .
அறிதுயில் யோகநித்திரை ; தூங்காமல் தூங்கும் நிலை .
அறநிலையறம் நால்வகைக் குலத்தாரும் தத்தம் நெறியில் பிழையாது அரசன் பாதுகாக்கை .
அறநிலையின்பம் ஒத்த கன்னியை மணந்து இல்லறத்தினின்று நுகரும் இன்பம் .
அறநீர் அருநீர் ; நீரின் அளவு குறைந்த நிலை ; தவணைப்படி பாசனத்துக்கு விடப்படும் நீர் .
அறநூல் நீதி கூறும் நூல் .
அறநெறி அறவழி .
அறப்பரிகாரம் துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை .
அறப்பரிசாரம் துறந்தோர் முதலியவர்க்குச் செய்யும் பணிவிடை .
அறப்பாடல் கேடு விளைக்கும் சொற்பயிலும் பாட்டு .
அறப்பாடுபடுதல் பாடுபட்டு வேலை செய்தல் .
அறப்பார்த்தல் தீர ஆராய்தல் ; அழிக்க வழி தேடுதல் .
அறப்புறங்காவல் அறத்திற்கு விடப்பட்ட நிலங்களைப் பாதுகாக்கை .
அறப்புறம் பாவம் ; அறத்துக்கு விடப்பட்ட இறையிலி நிலம் ; அறச்சாலை ; வேதம் ஓதும் பள்ளி .
அறப்போர் அறவழியில் செய்யும் கிளர்ச்சி .
அறம் தருமம் ; புண்ணியம் ; அறச்சாலை ; தரும தேவதை ; யமன் ; தகுதியானது ; சமயம் ; ஞானம் ; நோன்பு ; இதம் ; இன்பம் ; தீப்பயன் உண்டாக்கும் சொல் .
அறம்பகர்ந்தோன் புத்தன் .
அறம்பாடுதல் தீச்சொற்பட்டுத் தீப்பயன் உண்டாகப் பாடுதல் ; வசைக்கவி பாடுதல் .
அறல் அறுகை ; அறுத்துச் செல்லும் நீர் ; அரித்தோடுகை ; நீர் ; சிறுதூறு ; நுண்மணல் ; கருமணல் ; நீர்த்திரை ; மயிர் நெறிப்பு ; கொற்றான் ; திருமணம் ; விழா .
அறவன் தருமவான் ; கடவுள் ; புத்தன் ; முனிவன் ; அறத்தைக் கூறுவோன் ; பார்ப்பனன் .
அறவாணன் கடவுள் .
அறவாய்போதல் காண்க : அறுவாய்போதல் .
அறவாழி தருமசக்கரம் ; அறக்கடல் .
அறவாளன் தருமவான் ;
அறவி அறம் ; புண்ணியத்தோடு கூடியது ; பெண்துறவி ; பொதுவிடம் .
அறவிடுதல் முற்றும் நீக்குதல் ; விற்றல் .
அறவிய அறத்தோடுகூடிய .
அறவியங்கிழவோன் புத்தன் .
அறவியான் அறத்தில் நிற்பவன் .
அறவிலை முழுமையும் விலைப்படுதல் .
அறவிலை வாணிகன் பொருளை விலையாகக் கொடுத்து அறம் கொள்வோன் .
அறவினை நற்செயல் .
அறவு ஒழிகை .       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;