கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 6 மே, 2013

அகராதி, இ

சொல்
அருஞ்சொற்பொருள்
இயன்மொழிவாழ்த்து தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை ; ' இன்னார் இன்னது கொடுத்தார் ; அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை ; அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை .
இயனம் கள்ளிறக்குவோனது கருவிபெய்புட்டில் .
இயனெறி நல்லொழுக்கம் .
இயாகதம் சிற்றகத்தி .
இயாகம் கொன்றை ; பாண்டம் ; வேள்வி .
இயுசாவியம் கொன்றைமரம் .
இயேசு கிறிஸ்துநாதரின் பெயர் .
இயை அழகு ; புகழ் ; இசைப்பு ; வாழை .
இயை (வி) சேர் .
இயைத்தல் பொருத்துதல் .
இயைதல் பொருந்துதல் ; இணங்குதல் ; நிரம்புதல் ; ஒத்தல் .
இயைந்துரை பல பொருள்களின் வரையறைப் பட்ட தொகுதி .
இயைபிலிசைக்குறி இடைப்பிறவரலாக வரும் சொற்களை அடைக்கும் குறிகள் , வளைவுக் குறிகள் .
இயைபின்மை நீக்கம் தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன .
இயைபின்மை நீக்கல் தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன .
இயைபின்மையணி பொருள் தனக்குத் தானே உவமை என்று உரைக்கும் அணி .
இயைபு சேர்க்கை ; பொருத்தம் ; தொடர்ச்சி ; ' இது கேட்டபின் இது கேட்கத் தக்கது ' என்னும் யாப்பு ; இயைபுத் தொடை ; நூல் வனப்புள் ஒன்று .
இயைபுத்தொடை ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது .
இயைபுருவகம் பல பொருளையும் தம்முள் இயைபுடையனவாக வைத்து உருவகம் செய்வது ; உருவக அணியுள் ஒன்று .
இயைபுவண்ணம் இடையெழுத்துகள் மிகுந்து வரும் சந்தம் .
இயைபுவனப்பு ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் பதினொரு மெய்களை ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல் .
இயைபுளன் புகழாளன் .
இயைமே வாழைமரம் .
இயைய ஓர் உவம உருபு .
இயைவது தக்கது .
இயைவு இணக்கம் ; பொருத்தம் ; சேர்க்கை .
இர் முன்னிலைப் பன்மை விகுதி ; படர்க்கைப் பன்மை விகுதி ; கேளிர் ; பெண்டிர் .
இர இரவு ; இரத்தல் .
இரக்கக்குறிப்பு ஒன்றன் துயரம் முதலியன கண்டு இரங்கிக் கூறும் மொழி .
இயலசை நேரசை ; நிரையசை .
இயலடி இயற்சீரால் அமைந்து வரும் பாவடி .
இயலணி இயற்கையழகு .
இயலறிவு சொற்களின் பயிற்சி .
இயலாசிரியன் நாட்டிய நூல் கற்பிப்போன் .
இயலாமை கூடாமை .
இயலுதல் கூடியதாதல் ; நேர்தல் ; பொருந்துதல் ; தங்குதல் ; செய்யப்படுதல் ; அசைதல் ; நடத்தல் ; உலாவுதல் ; உடன்படுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; போட்டிபோடுதல் ; சித்திர முதலியன எழுதுதல் .
இயலொழுக்கம் நல்லொழுக்கம் .
இயவம் தவசவகை ; நெல் ; வாற்கோதுமை .
இயவன் தோற்கருவியாளன் ; வாச்சியக்காரன் ; கீழ்மகன் .
இயவனன் யவனன் ; கம்மாளன் ; ஓவியன் .
இயவானி ஓமம் .
இயவு வழி ; செலவு ; காடு ; ஊர் .
இயவுள் தலைமை ; எப்பொருட்கும் இறைவன் ; தெய்வம் ; புகழாளன் ; வழி ; பிள்ளை .
இயவை வழி ; காடு ; மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; துவரை .
இயற்காட்சி நற்காட்சி ; சரியாக உணர்கை ; நல்ல நம்பிக்கை .
இயற்குணப் பெயர் தொழிலை அன்றிப் பண்பே குறிக்கும் பெயர் .
இயற்கை இயல்பான தன்மை ; வழக்கம் ; இலக்கணம் ; நிலைமை ; கொள்கை .
இயற்கை அறிவு இயல்பாக அமைந்த அறிவு .
இயற்கைக்குணம் ஒன்றன் உடனாய் அமைந்த தன்மை .
இயற்ககைப் புணர்ச்சி தலைவனும் தலைவியும் தெய்வத்தால் கூடும் முதற் கூட்டம் .
இயற்கைப் பொருள் தோன்றிய காலம் தொடங்கி ஒருநிலையவாகிய பொருள் .
இயற்கையளபெடை இசை ,விளி , பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை .
இயற்கையின்பம் இயற்கைப் புணர்ச்சியால் நேரும் இன்பம் ; இயற்கை தரும் இன்பம் .
இயற்கையுணர்வினனாதல் இறைவன் எண்குணங்களுள் ஒன்று .
இயற்சீர் அகவல் உரிச்சீர் .
இயற்சீர் வெண்டளை மாமுன் நிரையும் விளமுன் நேரும் வரும் தளை .
இயற்சொல் எல்லார்க்கும் பொருள் விளங்கும் சொல் .
இயற்படமொழிதல் இயல்பு பொருந்தச் சொல்லுதல் ; தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை .
இயற்பலகை சங்கப் பலகை .
இயற்பழித்தல் தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை .
இயற்பா இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா ; திவ்வியப் பிரபந்தத்துள் ஒரு பகுதி .
இயற்பெயர் வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப் பெயர் ; விரவுப் பெயர் , உயர்திணை அஃறிணைகளுக்குப் பொதுவாய் வரும் பெயர் .
இயற்றமிழ் செந்தமிழ் ; இலக்கியத் தமிழ் ; முத்தமிழுள் ஒன்று .
இயற்றல் செய்தல் ; முயற்சி .
இயற்றளை காண்க : இயற்சீர்வெண்டளை .
இயற்றி முயற்சி ; ஆற்றல் ; உதவி ; திறமை .
இயற்றியான் செய்தவன் .
இயற்று பாத்திரம்
இயற்றுதல் செய்தல் ; நடத்துதல் ; சம்பாதித்தல் ; தோற்றுவித்தல் ; நூல் செய்தல் .
இயற்றுதற்கருத்தா தொழில் புரிபவன் ; பயனிலைச் செயலை நேரே செய்யும் வினைமுதல் .
இயற்றும்வினை தன்வினை .
இயறல் முத்தி ; போதல் .
இயன்ஞானம் நல்லறிவு .
இயன்மகள் கலைமகள் .
இயன்மணம் இயற்கையான மணம் .       
சொல்
அருஞ்சொற்பொருள்
இரசக்களிம்பு புண் ஆற்றும் மருந்துவகை .
இரசக்கிணறு காண்க : இரசக்குழி .
இரசக்குடுக்கை பாதரசம் அடைக்கும் குப்பி .
இரசக்குழி பாதரசம் எடுக்கும் சுரங்கம் .
இரசகந்தாயம் வரி ; நிலக்கொழுமை .
இரசகம் பீர்க்கு .
இரசகருப்பூரம் ஒருவகை மருந்துச் சரக்கு .
இரசகன் வண்ணான் .
இரசகி வண்ணாத்தி .
இரசகுண்டு அலங்காரமாகத் தொங்கவிடும் இரசம் பூசிய கண்ணாடி உருண்டை .
இரசகுளிகை இரசத்தினால் செய்த மாத்திரை ; சித்தர் குளிகை .
இரசச்சுண்ணம் பூச்சுமருந்துவகை .
இரசசுத்தி ஈயம் .
இரசதகிரி வெள்ளிமலையாகத் தோற்றம் பெறும் கைலாயமலை .
இரசதசபை வெள்ளியம்பலம் , மதுரையிலுள்ள நடராச சபை .
இரசதம் வெள்ளி ; இராசதம் ; அரைப்பட்டிகை ; பாதரசம் ; நட்சத்திரம் ; யானைத் தந்தம் ; வெள்ளை ; முத்துமாலை ; வெண்மலை ; பொன் ; அரத்தம் .
இரசதமணல் வெள்ளி கலந்த மணல் .
இரசதாது பாதரசம் .
இரசதாரை அன்னரசம் செல்லும் குழாய் .
இரசதாளி ரஸ்தாளி , ஒருவகை வாழை .
இரசநாதன் காண்க : இரசதாது .
இரசப்பிடிப்பு முடக்குவாதம் .
இரசப்புகை பாதரசத்தின் ஆவி .
இரசபலம் இனிய நீரைக்கொண்ட காய்களையுடையது ; தென்னை .
இரசபுட்பம் காண்க : இரசகருப்பூரம் .
இரசம் சுவை ; செய்யுட்சுவை ; சாறு ; பாதரசம் ; மிளகு நீர் ; இன்பம் ; வாயூறு நீர் ; வாழைவகை ; மாமரம் .
இரசமணி நோய் முதலியவை நீங்கக் காப்பாக அணியப்படும் பாதரசங் கட்டிய மணி .
இரசமுறித்தல் பாதரசம் செய்தல் ; உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல் .
இரசலிங்கம் சாதிலிங்கம் ; சிவலிங்கவகை .
இரசவாதம் தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை .
இரசவாதி உலோகங்களைப் பேதிப்போன் , ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றுபவன் .
இரசவாழை பேயன்வாழை .
இரசவைப்பு இரசத்தால் ஆகிய மருந்து முதலியன .
இரசனம் பொன் ; வெள்ளி ; நஞ்சு ; பிசின் ; பழம் ; கழாயம் ; இலைச் சாறு ; ஒலி ; உணவு ; நேயம் ; பல் .
இரசனா அரத்தைவகை .
இரசனி இரவு ; மஞ்சள் ; அவுரி ; செம்பஞ்சு .
இரசனிமுகம் மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம் ; சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை .
இரசனை சுவை ; மலர் முதலியவற்றைத் தொடுக்கை ; படையின் அணிவகை ; பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி .
இரசாதலம் கீழேழ் உலகத்துள் ஒன்று .
இரசாதிபதி இரசப் பொருள்களுக்கு அதிகாரியான கோள் .
இரசாபாசம் சுவைக்கேடு ; சீர்கேடு .
இரசாயனநூல் வேதியியல் நூல் , இயைபியல் நூல் .
இரசாயனம் இரசவாதம் ; வேதியியல் , இயைபியல் ; காயசித்தி மருந்து ; நஞ்சு .
இரசாலம் மாமரம் ; கரும்பு ; பலா ; கோதுமை ; குந்துருப் பிசின் ; போளம் .
இரசாலை அறுகு ; சம்பாரத் தயிர் ; நா ; வெள்ளீறில் என்னும் மரவகை .
இரசிகம் குதிரை ; கயமைத் தன்மை ; யானை .
இரசிகன் சுவைஞன் ; காமுகன் .
இரசிகை காமுகி ; நா ; மாதர் இடையணி .
இரசித்தல் சுவைத்தல் ; இனித்தல் ; விரும்புதல் .
இரசிதநாள் வெள்ளிக்கிழமை .
இரசிதம் வெள்ளி ; பொன்னின் பூச்சு ; ஒலி ; முழக்கம் .
இரசுவம் குறுகிய அளவு ; குற்றெழுத்து .
இரசேந்திரியம் சுவையுணர் உறுப்பு , நாக்கு .
இரசை பங்கம்பாளை ; பூமி ; ஆனைவணங்கி ; தினை ; நா .
இரக்கம் அருள் ; மனவுருக்கம் ; மனவருத்தம் ; ஒலி ; ஈடுபாடு .
இரக்கித்தல் காண்க : இரட்சித்தல் .
இரக்கை காண்க : இரட்சை .
இரகசியம் கமுக்கம் , மறைபொருள் , அந்தரங்கம் .
இரகிதம் இட்டம் ; விடப்பட்டது ; நீக்கப் பட்டது .
இரகுநாதன் இரகு குலத்தில் சிறந்த இராமன் .
இரகுவமிசம் இரகுவின் வழிவந்தவர் ; ஒரு தமிழ் நூல் .
இரங்கல் அழுகை ; நெய்தல் ; உரிப்பொருள் ; ஒலி ; யாழ் நரம்போசை .
இரங்கற்பா ஒருவரின் மறைவு குறித்து வருந்திப் பாடும் பாட்டு , கையறுநிலை .
இரங்குகெளிறு கெளிற்று மீன்வகை .
இரங்குசொல் இழுமென இசைக்கும் சொல் .
இரங்குதல் வருந்துதல் ; அருளல் ; மனமழிதல் ; அழுதல் ; கழிவிரக்கம் கொள்ளல் ; ஒலித்தல் ; யாழொலித்தல் ; கூறுதல் ; ஈடுபடுதல் .
இரங்கூன்மல்லி ஒருவகைப் பூங்கொடி .
இரங்கொலி முறையீடு .
இரங்கேசன் அரங்கநாதன் ; திருவரங்கத்தில் கோயில்கொண்டிருக்கும் கடவுள் .
இரச்சு கயிறு .
இரச்சுப்பொருத்தம் பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று .
இரச்சுலம் கவண் .
இரச்சுவம் குற்றெழுத்து .
இரச்சை மலை மரவகை ; காப்புநாண் .
இரசக்கட்டு இறுகச் செய்த பாதரசம் .
        
சொல்
அருஞ்சொற்பொருள்
இரட்டை நாடி மிகப் பருத்த உடம்பு .
இரட்டைப் படை இரட்டிப்பு ; இரட்டைப்பட்ட எண் .
இரட்டைப் பாக்கு இரு கண்ணுள்ள பாக்கு .
இரட்டைப் பிள்ளை ஒரே கருப்பத்தினின்றும் தனித்தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர் ; இரட்டையாகக் கிளைக்கும் தென்னை அல்லது கமுகு .
இரட்டைப் பூட்டு இருமுறை பூட்டும் பூட்டு ; பாதுகாப்புக்காக இடும் இருவேறு பூட்டு .
இரட்டைப் பூரான் சதங்கைப் பூரான் .
இரட்டை மணி அணிவகை .
இரட்டைமணிமாலை பிரபந்தவகை ; வெண்பா , கலித்துறை இரண்டும் மாறிமாறி இருபது பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறுநூல்வகை .
இரட்டையர் இரட்டைப் பிள்ளைகள் ; நகுல சகதேவர் ; இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர் .
இரட்டையாட்சி இருதிறத்தார் பகுத்துக் கொண்டு செய்யும் அரசாட்சி .
இரட்டையேணி கவை ஏணி ; ஒன்றன்மேல் ஒன்று வைத்துக் கட்டப்பட்ட ஏணி .
இரட்டைவரி ஒரே நிலத்துக்காக அரசினருக்கும் ஊராட்சி நிறுவனங்களுக்கும் செலுத்தும் வரி .
இரட்டை விருத்தம் பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் .
இரண்டகம் இருமனம் , துரோகம் .
இரண்டறக்கலத்தல் இருபொருன் பேதமின்றி ஒன்றாதல் ; ஆன்மா இறைவனுடன் ஐக்கியமாதல் ; முத்தியடைதல் .
இரண்டாகுதல் இரு துண்டாதல் .
இரண்டாங்கட்டு வீட்டின் இரண்டாம் பகுதி .
இரண்டாங்காலம் கோயிலில் அந்திக்காப்புக்கும் அர்த்தசாமத்திற்கும் நடுவில் நடக்கும் பூசை .
இரண்டாட்டுதல் இருநெறிப்படுதல் .
இரண்டாந்தரம் முக்கியம் அல்லாதது ; நடுத்தரம் ; இடைவேளை உணவு .
இரண்டாநிலம் மேன்மாடம் .
இரண்டாம் பாட்டன் பாட்டனின் தந்தை .
இரண்டாம்போகம் இரண்டாம் முறைப் பயிர் விளைவு .
இரண்டிகை காண்க : இண்டை .
இரசோகுணம் இராசதகுணம் , முக்குணத்துள் ஒன்று ; மத்திமமான அறிவு .
இரசோபலம் இருள் ; முத்து .
இரசோனகம் வெள்ளுள்ளி .
இரஞ்சகம் துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து ; துப்பாக்கிக் காது ; மகிழ்ச்சி தருவது .
இரஞ்சகன் இயக்குகிறவன் ; சாயமூட்டுகிறவன் ; விருப்பம்வரச் செய்கிறவன் .
இரஞ்சனம் மகிழ்ச்சி தருவது ; செஞ்சாந்து .
இரஞ்சனி மஞ்சிட்டை ; கவுள் ; அவுரி ; கம்பில்லம் .
இரஞ்சிதம் இன்பமானது ; சித்திரிக்கப்பட்டது .
இரட்சகம் இரட்சிப்பு ; மீட்பு ; காத்தல் .
இரட்சகன் காப்பாற்றுபவன் ; உய்விப்பவன் .
இரட்சணம் காண்க : இரட்சகம் .
இரட்சணியசேனை கிறித்தவ சபையில் ஒரு பிரிவு .
இரட்சணியம் காப்பு ; மீட்பு .
இரட்சனை காண்க : இரட்சகம் .
இரட்சாபந்தனம் காப்புக்கட்டல் ; மந்திராட்சரயந்திரக் காப்பு .
இரட்சாபோகம் பாதுகாவல் வரி .
இரட்சாமூர்த்தி காப்புக் கடவுள் , திருமால் .
இரட்சித்தல் காத்தல் ; மீட்குதல் .
இரட்சிப்பு காப்பாற்றுகை ; உய்வு ; மீட்பு .
இரட்சை காப்பு ; காப்பாக இடுவது ; திருநீறு .
இரட்டகத்துத்தி கத்தூரிவெண்டை .
இரட்டர் இராட்டிரகூட அரசர் .
இரட்டல் இரண்டாதல் ; அசைத்தல் ; மாறி மாறி ஒலித்தல் ; யாழ் நரம்போசை .
இரட்டாங்காலி இரட்டையாகக் கிளைக்கும் மரம் .
இரட்டி இருமடங்கு ; இணைக்கை .
இரட்டித்தல் இருமடங்காக்குதல் ; திரும்பச் செய்தல் ; ஒன்று இரண்டாதல் ; மீளவருதல் ; மாறுபடுதல் ; இகழ்தல் .
இரட்டித்துச் சொல்லுதல் மீட்டுங் கூறுதல் ; இரு பொருள்படச் சொல்லுதல் .
இரட்டிப்பு இருமடங்கு .
இரட்டு இரட்டையாயிருக்கை ; ஒருவகை முருட்டுத்துணி ; ஒலி .
இரட்டுதல் இரட்டித்தல் ; மாறியொலித்தல் ; ஒலித்தல் ; அசைதல் ; வீசுதல் ; கொட்டுதல் ; தெளித்தல் .
இரட்டுமி பறைவகை .
இரட்டுறக்காண்டல் ஐயக் காட்சி ; ஒன்றை இருவேறு பொருளாகப் பார்க்கும் பார்வை .
இரட்டுறமொழிதல் ஓர் உத்தி ; இருபொருள் படச் சொல்லல் .
இரட்டுறல் சிலேடை ; இருபொருள்படுகை .
இரட்டுறுதல் இருபொருள்படுதல் ; ஐயுறுதல் ; மாறுபடுதல் .
இரட்டை இணை ; கணவன் மனைவியர் ; இரட்டைப் பிள்ளைகள் ; இரண்டு ஒன்றானது ; இரட்டை எண் ; அரையாடை மேலாடைகள் ; துப்பட்டி ; மிதுனராசி ; ஆனி மாதம் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; முத்துவகை .
இரட்டைக்கத்தி இரண்டு அலகுள்ள கத்தி .
இரட்டைக்கதவு இரண்டு பிரிவாயுள்ள கதவு .
இரட்டைக்கிளவி ஒலிக்குறிப்பில் வரும் இரட்டை மொழி ; இரட்டையாக நின்றே பொருள் உணர்த்துஞ் சொல் , விறுவிறுப்பு என்றாற்போல் வருவது .
இரட்டைக்குச்சி சிலம்ப வித்தைவகை .
இரட்டைக் குண்டட்டிகை கழுத்தணிவகை .
இரட்டைக் குறுக்கு மாட்டுக் குற்றவகை .
இரட்டைக்கை காண்க : இணைக்கை .
இரட்டைச்சிரட்டை இரட்டைக் கொட்டாங்கச்சி .
இரட்டைச் சின்னம் இரட்டையான ஊதுகுழல் வகை .
இரட்டைச் சுழி இரு சுழி ; ஐகாரவொலியைக்குறிக்கும் ' ¬ ' என்னும் சுழி .
இரட்டைச்சொல் இரட்டையாக வரும் குறிப்புச் சொல் .
இரட்டைத் தவிசு இருவர் இருத்தற்குரிய இருக்கை .
இரட்டைத் தாளம் தாளவகை .
இரட்டைத்தொடை ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது .
இரட்டை நாகபந்தம் சித்திரகவிவகை .       
சொல்
அருஞ்சொற்பொருள்
இரணவஞ்சம் போகபூமியுள் ஒன்று .
இரணவாதம் நோய்வகை .
இரணவீரன் போர்வீரன் ; அங்காளம்மை கோயிலின் பரிவார தெய்வம் .
இரணவைத்தியம் அறுவை மருத்துவம்
இரணவைத்தியன் அறுவை மருத்துவன் .
இரணிய கர்ப்பதானம் பொற்பசுவின் வயிற்றினுள் புகுந்து வெளிவந்து அப் பசுவையே கொடையாக அளித்தல் .
இரணியகர்ப்பம் ஒரு வேள்வி ; பொன்னால் செய்த பசு வயிற்றினூடாகப் புகுந்து வெளிவரும் சடங்கு .
இரணியகர்ப்பமதம் பிரமாவே முதற்கடவுள் என்னும் சமயம் .
இரணியகர்ப்பர் பிராணனே ஆத்துமா என்னும் சார்வாகருள் ஒருசாரார் .
இரணியகர்ப்பன் பொன்முட்டையிலிருந்து பிறந்தவன் , பிரமன் .
இரணியகன் பொன்னுடையவன் .
இரணியசிராத்தம் பொன் கொடுத்துச் செய்யும் சிராத்தம் .
இரணியதானம் பொன்னைக் கொடையாகக் கொடுக்கை .
இரணியநேரம் அந்திநேரம் .
இரணியம் பொன் ; பணம் .
இரணியமரம் மரவகை .
இரணியவேளை காண்க : இரணியநேரம் .
இரத்தக்கட்டி புண்கட்டிவகை .
இரத்தக்கட்டு உதிரம் சுரக்கை .
இரத்தக் கண்ணன் கோபக் கண்ணுடையவன் .
இரத்தக்கலப்பு நெருங்கிய உறவு .
இரத்தக்கவிச்சு உதிர நாற்றம் .
இரத்தக்கழிச்சல் பேதிவகை .
இரத்தக்கனப்பு இரத்தக் கொழுப்பு .
இரத்தக்காணிக்கை போரில் இறந்த வீரரின் மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம் .
இரத்தக்கிராணி காண்க : இரத்தக்கழிச்சல் .
இரத்தக்கொதி துக்கம் முதலியவற்றால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு ; காமக் கிளர்ச்சி .
இரத்தக்கொழுப்பு இரத்த நிறைவு ; மதம் ; செருக்கு .
இரத்தக்கோமாரி மாட்டுக்கு வரும் இரத்தக்கழிச்சல் நோய் .
இரத்தகம் குசும்பாப்பூ ; சிவப்புச் சீலை .
இரத்தகமலம் செந்தாமரை .
இரத்தகுமுதம் செவ்வாம்பல் ; செந்தாமரை .
இரத்தகைரவம் செவ்வாம்பல் .
இரத்தச்சிலந்தி புண்கட்டிவகை .
இரத்தச்சுரப்பு இரத்த மிகுதி ; இரத்தவூறல் ; செருக்கு .
இரத்தைச்சுருட்டை சுருட்டைப் பாம்புவகை .
இரத்தசந்தனம் செஞ்சந்தனம் .
இரத்தசந்தியகம் செந்தாமரை .
இரத்தசம்பந்தம் காண்க : இரத்தக்கலப்பு .
இரத்தசாகம் செங்கீரை .
இரத்தசாட்சி சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை ; சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுபவன் .
இரத்தசாரம் கருங்காலி .
இரத்தசூறை மீன்வகை .
இரத்ததிருட்டி சன்னிவகை .
இரத்தந்ததும்புதல் முகம் சிவந்து காட்டுதல் ; கோபத்தால் முகம் சிவத்தல் .
இரண்டு ' இரண்டு ' என்னும் எண் ; சில ; உகர எழுத்து ; மலசலம் .
இரண்டுக்குப் போதல் மலங்கழித்தல் .
இரண்டுக்குற்றது இதுவோ , அதுவோ என்னும் நிலை .
இரண்டுங்கெட்டநேரம் அந்திப்பொழுது .
இரண்டுடை இருவேறு வகையான ஆடை ; மாற்று உடை ; ' கருவேல் வெள்வேல் ' என்னும் உடைமரங்கள் .
இரண்டுபடுதல் வேறுபடுதல் ; ஒற்றுமையின்மை ; ஐயுறுதல் .
இரண்டுவவு மதி மறைவும் மதி நிறைவும் .
இரண்டெட்டில் விரைவில் .
இரண்டை கைம்பெண் .
இரண்டொன்று சில .
இரணகள்ளி கள்ளிவகை .
இரணகளம் போர்க்களம் ; பெருங்குழப்பம் .
இரணகாளம் போரை நிறுத்த ஊதும் எக்காளம் .
இரணகெம்பீரம் போரில் ஆரவாரித்தல் .
இரணங்கொடுத்தல் அடித்தல் .
இரணங்கொல்லி ஆடுதின்னாப்பாளை ; தும்பை .
இரணசங்கம் போர் வென்று ஊதும் சங்கு ; வெற்றுச் சங்கு .
இரணசன்னி புண்களால் உண்டாகும் சன்னி .
இரணசிகிச்சை காண்க : இரணவைத்தியம் .
இரணசுக்கிரன் கண்ணோய்வகை .
இரணசூரன் போர்வீரன் .
இரணத்தொடை காண்க : முரண்தொடை .
இரணதூரியம் காண்க : இரணபேரி .
இரணபத்திரகாளி துர்க்கை , போரில் வெற்றி தரும் கொற்றவை .
இரணபாதகம் கொலை ; நம்பிக்கைத் துரோகம் .
இரணபாதகன் கொலைத்தொழிற் கொடியோன் .
இரணபேரி போர்ப்பறை .
இரணபேரிகை போர்ப்பறை .
இரணம் கடன் ; போர் ; புண் ; பொன் ; மாணிக்கம் ; சுக்கிலம் ; பலகறை .
இரணரங்கம் போர்க்களம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;