கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 8 மே, 2013

அகராதி, இ

சொல்
அருஞ்சொற்பொருள்
இரதி இலந்தை ; காந்தன் ; விருப்பம் ; புணர்ச்சி ; மன்மதன் மனைவி ; பெண்யானை ; பித்தளை .
இரதிக்கிரீடை புணர்ச்சி .
இரதிகன் தேரோட்டுவோன் ; தேர்க்குரியவன் .
இரதிகாதலன் மன்மதன் .
இரத்தபோளம் ஒருவகை மணப்பண்டம் .
இரத்தம் உதிரம் ; சிவப்பு ; ஈரல் ; பவளம் ; குங்குமம் ; கொம்பரக்கு ; தாம்பிரம் .
இரத்தமடக்கி உதிரம் கட்டு மருந்து .
இரத்தமண்டலம் இரத்தம் பரவியிருக்கும் பகுதி ; செந்தாமரை .
இரத்தமண்டலி நச்சுப்பாம்பு வகை .
இரத்தமாரணம் காவிக்கல் .
இரத்தமேகம் காண்க : இரத்தவெட்டை .
இரத்தல் குறையிரத்தல் ; பிச்சை கேட்டல் ; வேண்டுதல் .
இரத்தவடி அம்மைநோய் .
இரத்தவழலை நச்சுப்பாம்புவகை .
இரத்தவள்ளி செவ்வள்ளி என்னும் வள்ளிக் கொடிவகை .
இரத்தவிந்து மாணிக்க வகையாகிய குருவிந்தம் .
இரத்தவிரியன் பாம்புவகை .
இரத்தவீசம் மாதுளை .
இரத்தவுதிரி மாட்டு நோய்வகை .
இரத்தவெட்டை இரத்தம் கலந்து மூத்திரம் வெளிப்படும் நோய்வகை .
இரத்தவோட்டம் இரத்தம் உடலெங்கும் செல்லுகை .
இரத்தாசயம் இதயம் .
இரத்தாட்சி அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தெட்டாம் ஆண்டு .
இரத்தாதிசாரம் சீதபேதிவகை .
இரத்தாம்பரம் செவ்வாடை ; மரவகை .
இரத்தி இத்தி ; மரவகை ; இலந்தை .
இரத்திரி இத்தி ; மரவகை ; இலந்தை .
இரத்தினகசிதம் மணி இழைக்கப்பட்டது .
இரத்தினகம்பளம் சித்திரக் கம்பளம் .
இரத்தினகம்பளி சித்திரக் கம்பளம் .
இரத்தினச்சுருக்கம் சில சொற்களால் பெரும் பொருளை விளக்குதல் :அழகுறச் சுருங்கியது .
இரத்தினசபை திருவாலங்காட்டில் நடராசர் எழுந்தருளியிருக்கும் மணியம்பலம் .
இரத்தினசிரசு 393 சிகரங்களையும் 50 மேல்நிலைக் கட்டுகளையுமுடைய கோயில் .
இரத்தினத்திரயம் சமண சமயத்தார் போற்றும் மும்மணிகள் ; அவை : நல்லிறவு , நற்காட்சி , நல்லொழுக்கம் .
இரத்தினதீவம் இலங்கை .
இரத்தினப்பிரத்தம் கைலாயத்தின் தாழ்வரை .
இரத்தினப்பிரபை ஏழு நரகத்துள் ஒன்று ; மகளிர் அணிவகையில் ஒன்று .
இரத்தினப்பரீட்சை அறுபத்து நான்கு கலையுள் மணிகளின் இயல்பறியும் வித்தை .
இரத்தினம் மணி ; அரத்தை .
இரத்தினமாலை மணிவடம் .
இரத்தினாகரம் மணிகளுக்கு இருப்பிடமானது ; கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடல் .
இரத்தினி பிடிமுழம் ; முன்கைப் பேரெலும்பு .
இரத்துதல் காண்க : இரற்றுதல் .
இரத்தை சத்திமூர்த்தங்களுள் ஒன்று ; மஞ்சிட்டிவேர் .
இரத்தோற்பலம் செங்குவளை ; செந்தாமரை .
இரதகம் இத்திமரம் .
இரதகுளிகை காண்க : இரசகுளிகை .
இரதசத்தமி மாசிமாதத்து வரும் வளர்பிறை ஏழாம் நாள் .
இரதசப்தமி மாசிமாதத்து வரும் வளர்பிறை ஏழாம் நாள் .
இரதபதம் புறா .
இரதபந்தம் சித்திரகவிவகை , தேர்போல அமையும் பாட்டு .
இரதபரீட்சை தேர் செலுத்தும் கலை , அறுபத்துநான்கு கலையுள் ஒன்று .
இரதம் புணர்ச்சி ; தேர் ; பல் ; சாறு ; அன்னரசம் ; சுவை ; இனிமை ; வாயூறு நீர் ; வண்டு ; பாதரசம் ; இரசலிங்கம் ; பாவனை ; அரைஞான் ; மாமரம் ; கால் ; உடல் ; வஞ்சிமரம் ; வாகனம் ; எழுதுவகை ; அனுராகம் ; நீர் ; ஏழு தாதுக்களுள் ஒன்று ; வலி ; நஞ்சு ; இத்தி .
இரதரேணு பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை .
இரதன் கண் ; கிளி .
இரதனம் அரைஞாண் .
இரதனை அரத்தை ; நா .
இரதாங்கம் தேர்க்கால் ; சக்கரவாகப் புள் .
இரதாரூடன் தேரூர்வோன் ; தேர் செலுத்துவோன் .
இரத்தநரம்பு இரத்தக் குழல் .
இரத்தப்பலம் ஆலமரம் ; ஆலம்பழம் .
இரத்தப்பழி கொலை ; கொலைக்குக் கொலை .
இரத்தப்பிரமேகம் காண்க : இரத்தவெட்டை .
இரத்தப்பிரவாகம் உதிரப் பெருக்கு .
இரத்தப்பிரியன் கொலை விருப்புடையோன் .
இரத்தப்புடையன் பாம்புவகை .
இரத்தப்பெருக்கு காண்க : இரத்தப்பிரவாகம் .
இரத்தபலி உதிர நைவேத்தியம் ; கொலை .
இரத்தபலை கோவைப்பழம் .
இரத்தபாரதம் சாதிலிங்கம் .
இரத்தபிண்டம் சீனமல்லிகை .
இரத்தபித்தம் உதிரம் கெட்டொழுகும் ஒரு நோய் ; ஆடாதோடை .
இரத்தபிந்து வயிரக் குற்றவகை ; இரத்த விந்து .
இரத்தபீனசம் மூக்கிலிருந்து இரத்தம் காணும் நோய் .
இரத்தபூடம் முள்ளிலவு .
       
சொல்
அருஞ்சொற்பொருள்
இரவுத்திரம் காண்க : இரௌத்திரம் .
இரவுத்திரியம் சிவதீக்கை .
இரவுபகல் இராக்காலமும் பகற்காலமும்
இரவுரவம் காண்க : இரௌரவம்
இரவெரி சோதி விருட்சம் , இரவில் ஒளிமயமாக விளங்குகின்ற ஒரு மரவகை .
இரவேசு தளிர் வெற்றிலை .
இரவை நுட்பமான பொருள் ; கோதுமைக் குறுநொய் ; வயிரம் ; துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு .
இரவைக்கு இராப்பொழுதுக்கு .
இரவைசல்லா மெல்லிய துணி .
இரவோன் இரவலன் ; சந்திரன் .
இரளி கொன்றை .
இரற்றுதல் அரற்றுதல் ; பேசலால் எழும் ஒலி ; ஒலித்தல் ; சத்தமிடுதல் .
இரா இரவு
இராக்கடைப்பெண்டிர் பொதுமகளிர்
இராக்கதம் எண்வகை மணங்களுள் ஒன்று , தலைமகளை வலிதிற் கொள்ளும் மணம் .
இராக்கதன் அரக்கன்
இராக்கதி அரக்கி ; சன்னக் கச்சோலம்
இராக்கதிர் சந்திரன் .
இரதித்தல் காண்க : இரசித்தல் .
இரதிபதி காண்க : இரதிகாதலன் .
இரதோற்சவம் தேர்த்திருவிழா .
இரந்திரம் துளை ; வெளி ; ஜன்மலக்கினம் ; இரகசியம் ; சுருங்கை .
இரந்துண்ணி பிச்சைக்காரன் .
இரந்தை காண்க : இலந்தை .
இரப்பாளன் பிச்சையெடுப்பவன் ; இரவலன் .
இரப்பாளி பிச்சையெடுப்பவன் ; இரவலன் .
இரப்பான் பிச்சையெடுப்பவன் ; இரவலன் .
இரப்பு வறுமை ; பிச்சை ; யாசிக்கை .
இரப்புணி காண்க : இரந்துண்ணி .
இரம்பக்கல் குருந்தக்கல் .
இரம்பம் கத்தூரி விலங்கு ; மரமறுக்கும் வாள் .
இரம்பிகம் மிளகு .
இரம்பிலம் மிளகு .
இரம்பை இரம்பம் ; கத்தூரி விலங்கு ; தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி .
இரம்மியம் மகிழ்ச்சி தருவது ; விரும்பத்தக்கது ; அழகிது .
இரமடம் பெருங்காயம் .
இரமணம் இன்புறச் செய்கை ; இன்பம் விளைப்பது ; கழுதை ; காமசேட்டை ; சுரதவிளையாட்டு .
இரமணன் கணவன் ; தலைவன் ; மன்மதன் .
இரமணியம் இன்பஞ்செய்வது ; சரச விளையாட்டு .
இரமணீயம் இன்பஞ்செய்வது ; அழகுள்ளது .
இரமதி காகம் ; காமி ; காலம் ; மன்மதன் .
இரமா திருமகள் ; இன்பந்தருபவள் .
இரமாப்பிரியம் தாமரை .
இரமாபதி திருமால் .
இரமித்தல் மகிழ்தல் ; புணர்தல் .
இரமியம் மனநிறைவு ; அழகு .
இரமியவருடம் உலகின் பகுதிகளுள் ஒன்று , ஒன்பான் கண்டத்துள் ஒன்று .
இரமை திருமகள் ; செல்வம் ; மனைவி .
இரலை கலைமான் ; புல்வாய் ; துத்தரி என்னும் ஊதுகொம்பு ; அசுவினி நாள் .
இரவச்சம் மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை .
இரவணம் ஒட்டகம் ; குயில் ; வண்டு ; கழுதைகத்துகை ; வெண்கலம் ; பரிகாசம் பண்ணுதல் ; வெப்பம் .
இரவதம் குயில் .
இரவம் ஒலி ; இருள்மரம் .
இரவரசு சந்திரன் .
இரவல் யாசகம் ; திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள் .
இரவலன் பரிசில் விரும்புவோன் ; யாசகன் .
இரவாளன் பரிசில் விரும்புவோன் ; யாசகன் .
இரவற்குடி குடிக் கூலியின்றிக் குடியிருக்கும் குடும்பம் ; அடுத்து வாழுங் குடும்பம் .
இரவற்சோறு பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு ; ஒட்டுண்ணிப் பிழைப்பு .
இரவறிவான் சேவற்கோழி .
இரவன் சந்திரன் .
இரவி சூரியன் ; மூக்கின் வலத்தொளை ; மலை ; எருக்கு ; வாணிகத் தொழில் .
இரவிக்கை முலைக்கச்சு ; மாதர் உடைவகை .
இரவிகன்னம் பூமிக்கும் சூரியனுக்குமுள்ள தொலைவு .
இரவிகாந்தம் சூரியகாந்தக்கல் ; தாமரை .
இரவிகுலம் சூரியமரபு .
இரவிகேந்திரம் அணித்தான பாதையில் வரும் சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தொலைவு .
இரவிநாள் இரேவதி நாள் .
இரவிமது வெள்ளி .
இரவிமைந்தர் அசுவினிதேவர் .
இரவில்திரிவோன் அரக்கன் .
இரவிவாரம் ஞாயிற்றுக்கிழமை .
இரவிவிக்கேபம் கிரகணத்தில் சூரியன் சாய்வு வழியில் இருத்தல் .
இரவு இராத்திரி ; மஞ்சள் ; இருள்மரம் ; இரத்தல் ; இரக்கம் ; பன்றிவாகை .
இரவுக்குறி இரவிலே தலைவனும் தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம் .       
சொல்
அருஞ்சொற்பொருள்
இராசசிங்கம் அரசரேறு .
இராசசின்னம் அரசர் சின்னம் ; அரசனுக்குரிய முடி , குடை , முரசு , கொடி முதலிய உறுப்புகள் .
இராசசூயம் வெற்றி வேந்தனால் செய்யப்படும் வேள்வி ; தாமரை .
இராசசேகரன் அரசர் தலைவன் .
இராசசேவை அரசனுக்குச் செய்யும் பணி ; அரசனை நேரிற்காணல் .
இராசத்துவம் அரசன் தன்மை .
இராசத்துவாரம் அரண்மனை வாயில் ; அரசவை .
இராசதண்டம் அரசனால் விதிக்கப்படும் தண்டனை .
இராசதண்டனை அரசனால் விதிக்கப்படும் தண்டனை .
இராசதந்தம் முன்வாய்ப் பல்
இராசதந்திரம் அரசியல் ; அரசியல் நூல் .
இராசதபுராணம் பிரமனைத் துதிக்கும் புராணத்தொகுதி ; அவையாவன ; பிரமம் , பிரமாண்டம் , பிரம வைவர்த்தம் , மார்க்கண்டேயம் , பவிடியம் , வாமனம் .
இராசதம் காண்க : இரசோகுணம் ; அரச பதவி .
இராசதாலம் கமுகு .
இராசதானம் தலைநகர் ;
இராசதானி தலைநகர் ; மாநிலம் .
இராசதுரோகம் அரசர்க்கு எதிராகச் செய்யும் செயல் .
இராசநாகம் நாகப்பாம்புவகை .
இராசநீதி அரசன் அறநெறி .
இராசநோக்கம் அரசன் மனப்போக்கு ; அரசன்கருணை .
இராசநோக்காடு கடைசியான மகப்பேற்று வலி .
இராசப்பிரதிநிதி அரசனுக்குப் பதிலாள் .
இராசபக்தி அரசரிடம் வைக்கும் உண்மை அன்பு .
இராசபஞ்சகம் இராச பயம் .
இராசபட்டம் இராசாதிகாரம் ; ஒருவகைத் தலைப்பாகை ; முடிசூட்டு .
இராசபத்திரம் அரசனுடைய ஆணை .
இராசபத்தினி அரசி , அரசன் மனைவி .
இராக்கிடைப்பெண்டிர் காண்க : இராக்கடைப்பெண்டிர் .
இராக்கினி அரசன் மனைவி ; அரசி .
இராக்குருடு மாலைக்கண் .
இராகங்கலத்தல் ஒரு பண் மற்றொன்றோடு சேர்தல் .
இராகதத்துவம் அராக தத்துவம் ; சுத்தாசுத்த தத்துவங்களுள் ஒன்று .
இராகப்புள் கின்னரப் பறவை .
இராகம் பண் ; ஆசை ; இராக தத்துவம் ; நிறம் ; சிவப்பு ; கீதம் .
இராகம்விராகம் விருப்பு வெறுப்பு , வேண்டுதல் வேண்டாமை .
இராகமாலிகை ஒரு பாடலில் பல பண்களும் தொடர்ந்துவரப் பாடும் பண்தொகுதி .
இராகமெடுத்தல் ஆலாபனஞ் செய்தல் .
இராகவம் திமிங்கிலத்தை விழுங்கவல்ல பெரிய மீன் .
இராகவர்த்தனி முப்பத்திரண்டாவது மேளகர்த்தா .
இராகவன் இரகு வம்சத்தில் தோன்றியவனான இராமன் .
இராகவி ஆனைநெருஞ்சி .
இராகவிண்ணாடகம் சரக்கொன்றை .
இராகவிராகம் வேண்டுதல் வேண்டாமை .
இராகவேகம் ஆசை மிகுகை .
இராகாதனம் யோகாசனவகை .
இராகி பற்றாசு ; கேழ்வரகு .
இராகினி வெற்றிலை
இராகு ஒன்பது கோள்களுள் ஒன்று ; கரும்பாம்பு ; கோமேதகம் .
இராகுகாலம் இராகுவுக்குரிய வேளை ; ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகையளவு கொண்டுவரும் தீய நேரம் .
இராகுமண்டலம் பூமியின் சாயை .
இராகூச்சிட்டம் வெண்காயவகை .
இராச்சியபரிபாலனம் நாட்டை ஆளுகை ; அரசாட்சி .
இராச்சியபாரம் அரசாளும் பொறுப்பு .
இராச்சியம் அரசாளும் நாடு ; உலகு ; ஆளுகை .
இராச்சியலட்சுமி அரசச் செல்வம் .
இராச்சொல்லாதது ஊசி ; வசம்பு ; பாம்பு .
இராச்சொல்லாதவன் அம்பட்டன் .
இராசக்கிருகம் அரண்மனை .
இராசகரம் அரண்மனை ; அரசாங்கம்
இராசகற்பனை அரசனின் ஆணை .
இராசகன்னி அரசிளம்பெண் ,இளவரசி .
இராசகனி எலுமிச்சம்பழம்
இராசகாரியம் அரசியல் ; அரசர்க்குச் செய்யும் ஊழியம் ; மேலான செயல் .
இராசகீயம் அரசனுக்குரியது ; அரசாங்கத்தொடர்புடையது .
இராசகீரி வெண்கீரி .
இராசகுஞ்சரம் அரசுவா ; அரசர் தலைவன் .
இராசகுமாரன் அரசன் புதல்வன் ; இளவரசன் .
இராசகுலம் அரச குடும்பம் .
இராசகேசரி சோழ மன்னர்களுள் சிலர் கொண்டிருந்த பட்டப் பெயர் ; சோழர்காலத்து அளவு கருவி .
இராசகோலம் அரசன் திருவோலக்க உடை .
இராசகோழை காசநோய்வகை .
இராசசக்கரம் அரசாணை .
இராசசபை அரசவை .
இராசசம் காண்க : இரசோகுணம் .
இராசசாரசம் மயில் .       
சொல்
அருஞ்சொற்பொருள்
இராசவட்டம் அரசியற் செய்தி ; இராசதோரணை .
இராசவத்தனம் வைடூரியவகை .
இராசவமிசம் அரசர் குலம் .
இராசவர்க்கம் அரச மரபு ; அரச குலத்தார் .
இராசவரிசை அரசர்க்குச் செய்யும் சிறப்பு .
இராசவல்லபன் அரசனிடத்துச் செல்வாக்குள்ளவன் .
இராசவள்ளி கொடிவகை ; வள்ளிவகை .
இராசவாகனம் அரசன் ஊர்தி ; சிவிகை ; கோவேறு கழுதை .
இராசவாய்க்கால் தலைமையான நீர்க்கால் .
இராசவாழை குலை ஒன்றுக்கு ஆயிரம் காய்கள் காய்க்கும் வாழைவகை .
இராசவிசுவாசம் அரச பக்தி .
இராசவிரணம் காண்க : இராசபிளவை .
இராசவிருட்சம் கொன்றைமரம் .
இராசவீதி அரசர் உலாவருவதற்குரிய பெருந்தெரு .
இராசவைத்தியம் பத்தியம் இல்லாத மருத்துவம் .
இராசன் அரசன் ; சந்திரன் ; தலைவன் ; இந்திரன் ; இயக்கன் .
இராசனை வெள்ளைப்பூண்டு .
இராசா அரசன் ; ஒரு தெலுங்கச் சாதி .
இராசாக்கினை அரசன் ஆணை ; அரசதண்டனை .
இராசாங்கம் அரசுக்குரிய உறுப்புகள் ; அரசாட்சி .
இராசாணி அரசி .
இராசாத்தி அரசி .
இராசாதனம் முருக்கு ; முரள் ; அரியணை ; கிங்கிணிப்பாலை .
இராசாதிகாரம் அரசனுக்குரிய அதிகாரம் .
இராசாமந்திரி ஒரு விளையாட்டு .
இராசாவர்த்தம் காண்க : இராசவத்தனம் .
இராசாளி பறவைவகை ; வல்லூறு ; பைரி ; பறவைமாநாகம் .
இராசாளியார் கள்ளர்குலப் பட்டப்பெயருள் ஒன்று .
இராசான்னம் ஒருவகை உயர்ந்த நெல்
இராசி வரிசை ; கூட்டம் ; குவியல் ; இனம் ; மொத்தம் ; அதிட்டம் ; மேட முதலிய இராசி ; சுபாவம் ; பொருத்தம் ; இராசிக் கணக்கு ; சமாதானம் ; இராசி 12 ; மேடம் , இடபம் , மிதுனம் , கற்கடகம் , சிம்மம் , கன்னி , துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் .
இராசிக்கணக்கு அசல்தொகை , காலம் ஆகியவற்றை இராசிமுறையில் பெருக்கியும் வகுத்தும் கணக்கிடும் கணக்குவகை .
இராசிக்காரன் அதிட்டமுள்ளவன் , நற்பேறு உடையான் .
இராசிகட்டுதல் தவச விளைவு முன்மதிப் பளவுக்கு வருதல் .
இராசிகம் இயற்கணிதம் ; அமிசம் ; அரசனால் வருவது ; ஓர் இராசி ; குவியல் ; நரம்பு ; வரி .
இராசிகாணுதல் கண்டுமுதற்கணக்குக் கட்டுதல் ; காண்க : இராசிகட்டுதல் .
இராசிகூடுதல் காண்க : இராசிகாணுதல் .
இராசிகை வயல் ; இரேகை ; ஒழுங்கு ; கேழ்வரகு .
இராசிசக்கரம் இராசி மண்டலம் ; இராசிகளை எழுதியடைத்த சக்கரம் .
இராசிநாமா உடன்படிக்கைப் பத்திரம் ; உத்தியோகத்தினின்று விலகிக் கொள்வதற்காக எழுதும் பத்திரம் .
இராசிப்படுதல் மனம்பொருந்துதல் .
இராசிப்பணம் தனித்தனி எண்ணாமல் மொத்த அளவில் எண்ணும் பணம் .
இராசிப்பிரிவு கோள்கள் இராசியைக் கடக்கை .
இராசிப்பொருத்தம் திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று .
இராசபதவி அரசனிலை .
இராசபாட்டை போக்குவரத்துக்குரிய பெருவழி .
இராசபாதை போக்குவரத்துக்குரிய பெருவழி .
இராசபாவம் அரசத் தன்மை .
இராசபிளவை முதுகிலுண்டாகும் பெரும் புண் .
இராசபுத்தி கூர்த்த அறிவு ; தனிச் சிறப்பான அறிவு .
இராசபுத்திரன் அரசன் மகன் , கோமகன் .
இராசபோகம் அரசன் நுகர்தற்குரிய இன்பம் ; அரசர்க்குரிய பாதுகாவல் வரி .
இராசமகிஷி அரசன் மனைவி .
இராசமண்டலம் அரசர் கூட்டம் .
இராசமணி நெல்வகை .
இராசமாநகரம் அரசன் வாழும் பேரூர் ; தலைநகரம் .
இராசமாநாகம் கருவழலைப் பாம்பு .
இராசமாமந்தம் ஒருவகைப் பாம்பு .
இராசமார்க்கம் காண்க : இராசபாட்டை .
இராசமாளிகை அரசன் அரண்மனை .
இராசமானியம் அரசனால் விடப்பட்ட இறையிலி நிலம் .
இராசமுடி அரசன் முடி ; தெய்வச்சிலைகளுக்குச்சாத்தும் சாயக்கொண்டை .
இராசமுத்திரை அரசன் இலச்சினை , அரசனின் அடையாளக்குறி .
இராசமோடி அரச மிடுக்கு .
இராசயுகம் பாலை .
இராசயோகம் அரசனாவதற்குரிய கோள்நிலை ; அரசனுக்குரிய இன்ப வாழ்வு ; யோகநிலை வகையுள் ஒன்று .
இராசராசன் மன்னர்மன்னன் , பேரரசன் , சக்கரவர்த்தி ; குபேரன் ; இராசராசசோழன் .
இராசராசேச்சரம் இராசராசன் கட்டிய சிவன்கோயில் , தஞ்சாவூர்ப் பெரியகோயில் .
இராசராசசேச்சுவரி உமை வடிவங்களுள் ஒன்று .
இராசரிகம் அரசாட்சி .
இராசரிஷி அரசனாயிருந்து முனிவனானவன் .
இராசருகம் அகில் ; வெள்ளைத் தும்பை .
இராசலட்சணம் அரசனுக்குரிய உடற்குறி .
இராசலட்சுமி எட்டு லட்சுமிகளுள் ஒருத்தி , அரசுரிமையாகிய செல்வம் ; அரசருடைய ஆளுகையைத் துலங்கச் செய்பவள் .
இராசவசித்துவம் அரசனை வசமாக்கல் .
இராசவசியம் அரசனை வசமாக்கல்
சொல்
அருஞ்சொற்பொருள்
இராமராச்சியம் இராமனுடைய அரசாங்கம் போன்ற சிறந்த அரசாங்கம் ; நல்லரசாட்சி .
இராமலிங்கம் இராமனால் வழிபடப்பட்ட இராமேச்சரத்துச் சிவபிரான் ; ஆறு படி கொண்ட மரக்கால் .
இராமவாசகம் தவறாத வாக்கு .
இராமன் சநதிரன் ; பரசுராமன் ; தசரதராமன் ; பலராமன் .
இராமன்சம்பா சம்பாவகை .
இராமாயணம் இதிகாசங்களுள் ஒன்று ; திருமால் அவதாரமான இராமனது வரலாற்றைக் கூறும் நூல் .
இராசியெழுத்து குறியீட்டெழுத்துவகை .
இராசிலம் சாரைப்பாம்பு .
இராசிவட்டம் காண்க : இராசிமண்டலம்
இராசீகம் அரசனால் வருவது .
இராசீவம் தாமரை ; வரைக்கெண்டை ; மான்வகை .
இராசை திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநயினார்கோயில் என்னும் தலம் .
இராசோத்துங்கன் அரசருள் சிறந்தவன் .
இராட்சச அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தொன்பதாம் ஆண்டு .
இராட்சசம் காண்க : இராக்கதம்
இராட்சசன் அரக்கன்
இராட்டிரம் நாடு ; நகரிலுள்ள மக்கள் ; உற்பாதம் .
இராட்டினஞ்சுற்றுதல் நூல் நூற்றல் ; சுழல் தேரைச் சுற்றுதல் .
இராட்டினத்தொட்டி இராட்டினம்போலச் சுழலும் தொட்டி .
இராட்டினம் நூற்கும் பொறி ; நீரிறைக்கும் கருவி ; நூல் சுற்றும் கருவி ; பஞ்சரைக்கும் கருவி ; ஏறி விளையாடும் சுழல்தேர் .
இராட்டினவாழை வாழைவகை .
இராட்டினவூஞ்சல் சுழலும் ஊசல் .
இராட்டு இராட்டினம் ; தேன்கூடு .
இராடம் வெண்காயம் ; கழுதை ; இலாடம் ; பெருங்காயம் .
இராணம் இலை ; மயிலின் தோகை .
இராணி அரசி
இராணிவாசம் அரசியின் அந்தப்புரம் .
இராணுவம் படை .
இராணுவமோடி அணிவகுப்பு .
இராத்திரி இரவு ; மஞ்சள் .
இராத்திரிகாசம் வெள்ளாம்பல் .
இராத்திரிவேதம் சேவல் .
இராதம் கடைக்கொள்ளி .
இராதாரி சங்கத்தின் அனுமதிச் சீட்டு .
இராதினி சல்லகிமரம் ; ஓர் ஆறு ; வச்சிரப்படை ; மின்னல் ; இடி .
இராதை கண்ணன் காதலித்த கோபிகைகளுள் ஒருத்தி ; விசாகம் ; விஷ்ணுகிராந்தி ; நெல்லி ; மின்னல் ; கன்னனின் செவிலித்தாய் .
இராந்து இடுப்பு
இராந்துண்டு இலந்தை .
இராப்பண் இராக்காலத்தில் பாடுதற்குரிய பண்கள் .
இராப்பத்து திருமால் கோயில்களில் ஏகாதசியை ஒட்டி இரவில் நடைபெறும் சாற்றுமுறை விழா .
இராப்பாடி விடியுமுன் இரவில் வீட்டுக்கு வீடுவந்து பாடுபவன் .
இராப்பாடிக்குருவி இரவில் பாடும் குருவிவகை .
இராப்பாலை மரவகை .
இராப்பிச்சை சந்திப்பிச்சை ; முன்னிரவில் வரும் பிச்சைக்காரன்
இராப்பிரமாணம் கோளின் மறைவிலிருந்து உதயம் வரையுள்ள பொழுதின் அளவு .
இராப்பூ இரவில் மலரும் மலர்கள் ; ஆம்பல் முதலியன .
இராப்போசனம் இராச் சாப்பாடு ; கிறித்தவசபைச் சடங்குகளுள் ஒன்று .
இராமக்கன் சிச்சிலுப்பை வகை .
இராமகன் சிச்சிலுப்பை வகை .
இராமக்கிரி குறிஞ்சிப் பண்வகை .
இராமக்கோவை கற்கோவை என்னும் கொடிவகை .
இராமக்கோழி நீர்க்கோழி .
இராமகவி ஒரு பண் .
இராமசீத்தா மரவகை .
இராமசேது இராமர் அணை .
இராமடங்கா ஒருவகைப் பொன் நாணயம்
இராமடம் பெருங்காயம் .
இராமதுளசி துளசிவகை .
இராமதூதன் அனுமன் .
இராமநவமி சித்திரை மாதத்து வளர்பிறையில் வரும் நவமி திதி ; இராமன் பிறந்த நாள் .
இராமநாதன் இராமமேச்சரத்தில் இராமனால் வழிபடப்பட்ட லிங்கம் .
இராமநாதன்சம்பா சம்பா நெல்வகை .
இராமப்பிரியா ஒரு பண் .
இராமபாணம் இராமர் அம்பு ; ஏட்டுச் சுவடிகளைத் துளைத்துக் கெடுக்கும் ஒரு பூச்சி ; பாச்சைவகை ; மல்லிகைவகை ; ஒருவகை மருந்து .
இராமம் அழகு ; விரும்பத்தக்கது ; வெண்மான் ; வெண்மை ; கருமை .
இராமமுழியன் கடல்மீன்வகை .
இராசிப்பொன் கலப்பற்ற பொன் .
இராசிபண்ணுதல் சமாதானம் செய்தல் .
இராசிபுடம் இராசிகளில் கோள் நிற்கும் நிலையைச் சரிவரப் பார்க்கை .
இராசிமண்டலம் கோள்கள் செல்லும் வீதி .
இராசியடி பொலியடித் தவசம் ; அளந்த பின் கிடக்கும் களநெல்
இராசியத்தானம் மறைவிடம் .
இராசியதிபதிப்பொருத்தம் திருமணப் பொருத்தம் பத்தனுள் ஒன்று .
இராசியம் மறைவு ; பெண்குறி ; தாமரை .
இராசியளத்தல் குவித்த தவசத்தை அளத்தல்       

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;