கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வியாழன், 2 மே, 2013

அகராதி,-ஆ


சொல்
அருஞ்சொற்பொருள்
ஆரணி மாகாளி ; பார்வதி ; சிவசத்திபேதம் ; ஓர் ஊர் .
ஆரணியகன் காட்டில் வாழ்வோன் .
ஆரணியசஷ்டி மகப்பேற்றுக்காகப் பெண்டிர் ஆடிமாத வளர்பிறையில் நோற்கும் ஒரு நோன்பு .
ஆரத்தி ஆலத்தி ; தீபாராதனை .
ஆரதக்கறி மரக்கறி .
ஆரதம் சைவ உணவு .
ஆரதி காண்க : ஆரத்தி ; ஆலத்திப்பாட்டு .
ஆரதிகர்ப்பூரம் கருப்பூரவகை .
ஆரநாளம் காடி .
ஆரபடி பொருள் பொருளாக வீரன் தலைவனாக வரும் நாடக விருத்தி .
ஆரபி ஒரு பண் .
ஆரம் சந்தனமரம் ; ஒருவகை மணப்பொருள் ; சந்தனக்குழம்பு ; காண்க : கடம்பு ; தோட்டம் ; அஞ்சன பாடாணம் ; காண்க : காட்டாத்தி , ஆரக்கால் ; பித்தளை ; மணிவடம் ; பூமாலை ; முத்து ; பதக்கம் ; அணிகலன் ; பறவைக்கழுத்துவரி ; ஆடுமாடுகளின் கழுத்தில் தொங்கும் தசை ; காளிதம் ; கோணம் ; சனி ; செவ்வாய் .
ஆரம்பக்கொசு சமுத்திராப்பழம் .
ஆரம்பசூரன் தொடக்கத்தில் சுறுசுறுப்புக் காட்டுவோன் .
ஆரம்பம் தொடக்கம் ; முயற்சி ; பாயிரம் ; பெருமிதம் ; பதற்றம் ; கொலை .
ஆரம்பவாதம் முதற்காரணம் இல்லாமலே காரியம் தோன்றுமென்னும் கொள்கை .
ஆரம்பித்தல் தொடங்குதல் ; ஒலித்தல் .
ஆரல் நெருப்பு ; கார்த்திகைமீன் ; ஆரால்மீன் ; மதில் ; சுவர்மேல் மறைக்கப்படும் மறைப்பு ; செவ்வாய் .
ஆரவடம் முத்துவடம் .
ஆரவம் ஒலி ; பகை .
ஆரவமர காண்க : ஆறவமர .
ஆரவலர் காட்டாத்திப்பூ .
ஆரவாரம் பேரொலி ; பகட்டு ; துன்பம் .
ஆரவாரித்தல் மிக்கொலித்தல் .
ஆரவை கொந்தளிப்பு .
ஆரற்சுவர் மேலே மறைப்புடைய சுவர் .
ஆராக்கியம் அரசமரம் .
ஆராகரியம் அரசமரம் .
ஆராவரியம் அரசமரம் .
ஆராட்சி பழைய வரிவகை ; ஆள் நடமாட்டம் .
ஆராட்டுதல் தாலாட்டுதல் .
ஆராத்தியர் வீரசைவப் பார்ப்பனர் .
ஆராத்திரியர் வீரசைவப் பார்ப்பனர் .
ஆராத்தொட்டி மினிக்கி என்னும் மரம் .
ஆராதகர் அருச்சகர் .
ஆராதனம் பூசை ; சித்திக்கை ; உவப்பிக்கை ; சமைக்கை ; பெறுகை ; ஆவேசம் .
ஆராதனை பூசனை ; இறந்த சன்னியாசிகளுக்கு ஆண்டுதோறும் செய்யும் சடங்கு ; கிறித்தவர் கோயில் வழிபாடு .
ஆராதித்தல் பூசை செய்தல் ; உபசரித்தல் .
ஆராதூரி ஊதாரி ; அழிப்புக்காரன் .
ஆராப்பத்தியம் கடும்பத்தியம் ; அற்பம் .
ஆராமம் உபவனம் ; மலைச்சோலை ; தான்றி .
ஆராமை நிரம்பாமை ; பேரன்பு .
ஆராமைசோராமை தள்ளாமை .
ஆராய்ச்சி ஆய்வு ; பரிசீலனம் ; சோதனை ; தலையாரி .
ஆர்பதம் வண்டு ; உணவு ; நிழல் ; அரத்தை .
ஆர்பதன் உணவு .
ஆர்மதி கற்கடக ராசி ; நண்டு .
ஆர்மை கூர்மை ; மதில் .
ஆர்வம் அன்பு ; விருப்பு ; நெஞ்சு கருதின பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம் ; பக்தி ; ஏழு நரகத்துள் ஒன்று .
ஆர்வமொழி உள்ளத்து நிகழும் அன்பை மிகுதியாக வெளிப்படுத்தும் ஓரலங்காரம் .
ஆர்வலன் அன்புடையவன் ; கணவன் ; பரிசிலன் .
ஆர்வலித்தல் அன்புகூர்தல் .
ஆர்வு நிறைவு ; உண்ணுகை ; ஆசை .
ஆர்வை கோரைப்பாய் .
ஆர ஓர் உவமச்சொல் ; மிக .
ஆரக்கம் செஞ்சந்தனம் ; அகில் .
ஆரக்கழுத்தி கழுத்தில் தீயரேகையுள்ள பெண் .
ஆரக்கால் சக்கரத்தின் ஆரம் .
ஆரக்குவதம் சரக்கொன்றை .
ஆரகந்தி திப்பிலி .
ஆரகம் வகுக்குமெண் ; குருதி .
ஆரகன் அழிப்போன் ; கள்வன் ; கபடன் .
ஆரகுடம் பித்தளை .
ஆரகூடம் பித்தளை .
ஆரகோதம் காண்க : சரக்கொன்றை .
ஆரசகம் அகில்மரம் .
ஆரங்கம்பாக்கு பாக்குவகை .
ஆரஞ்சு கிச்சிலி .
ஆரண்ணியகம் வேதத்தின் ஒரு பகுதி .
ஆரணங்கு தெய்வப்பெண் ; பேரழகி .
ஆரணத்தான் வேதங்களை அருளிய பிரமன் .
ஆரணம் காண்க : ஆரண்ணியகம் ; வேதம் .
ஆரணவாணன் அந்தணன் .
ஆரணவுருவன் சிவபெருமான் .
ஆரணன் பிரமன் ; சிவன் ; திருமால் ; பார்ப்பான் .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆரோபித்தல் ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
ஆரோபிதம் ஏற்றப்பட்டது ; கற்பிக்கப்பட்ட குற்றம்
ஆல் அகற்சட்டி ; மரவகை ; நீர் ; வெள்ளம் ; கார்த்திகை ; நஞ்சு ; ஆமெனல் ; வியப்பு ; இரக்கம் ; தேற்றம் இவற்றைக் குறிக்கும் இடைச்சொல் ; ஓர் அசைநிலை ; மூன்றாம் வேற்றுமையுருபு ; தொழிற்பெயர் விகுதி ; எதிர்மறை வியங்கோள் விகுதி ; எதிர்கால வினையெச்ச விகுதி .
ஆல்வாட்டுதல் சிறிது காயச்செய்தல் .
ஆலவாட்டுதல் சிறிது காயச்செய்தல் .
ஆல்வு அகன்றது .
ஆலக்கச்சி அரிதாரம் .
ஆலக்கட்டி துரிசு .
ஆலக்கரண்டி அகன்ற கரண்டி .
ஆரிடம் வழுக்குநிலம் ; முனிவர் சம்பந்தமானது ; ஆவையும் காளையையும் அலங்கரித்து அவற்றிடையே மணமக்களை நிறுத்தி நீர்வார்த்துக் கொடுக்கும் மணம் ; ஆவும் ஆனேறும் பரிசமாகப் பெற்றுக்கொண்டு கன்னியைத் தீமுன்னர்க் கொடுக்கும் மணம் ; முனிவர் அருளிய நூல் ; ஆகமம் .
ஆரிடர் முனிவர் .
ஆரிடலிங்கம் முனிவர்களால் அமைக்கப்பெற்ற சிவலிங்கம் .
ஆரிடை அரியவழி .
ஆரிப்படுகர் அரிதாய் ஏறி இறங்கும் வழி .
ஆரிய சிறிய ; மேலோரை விளிக்கும் சொல் .
ஆரியக்கூத்து கழைக்கூத்து .
ஆரியகுச்சரி மருத யாழ்த்திறவகை .
ஆரியச்சி ஆரியப்பெண் .
ஆரியசத்தை பௌத்தருக்குரிய மேலான உண்மைகள் .
ஆரியத்திரிவு காண்க : தற்பவம் .
ஆரியப்பாவை பாவைக்கூத்துவகை .
ஆரியப் பூமாலை அடங்காப் பெண் ; காத்தவராயன் மனைவி .
ஆரியபூமி காண்க : ஆரியாவர்த்தம் .
ஆரியம் கேழ்வரகு ; ஆரியாவர்த்தம் ; சமஸ்கிருதம் .
ஆரியமொழி வடமொழி .
ஆரியவராடி ஒரு பண் ; வராடிவகை .
ஆரியவாசியம் காண்க : ஓமம் .
ஆரியவேளர் கொல்லி செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று .
ஆரியவேளார் கொல்லி செவ்வழி யாழ்த்திறவகையுள் ஒன்று .
ஆரியன் ஆரிய வகுப்பினன் ; ஆரியாவர்த்தவாசி ; பெரியோன் ; ஆசாரியன் ; அறிவுடையோன் ; ஆசிரியன் ; ஐயனார் ; மிலேச்சன் ; ஆதித்தன் .
ஆரியாங்கனை இல்லறத்தினின்று துறவுபூண்ட சமணத் தவப்பெண் .
ஆரியாவர்த்தம் இமயத்துக்கும் விந்தத்துக்கும் இடையே ஆரியர் குடியேறிய இடம் .
ஆரியை பார்வதி ; துர்க்கை ; உயர்ந்தோள் ; ஆசாள் ; வடமொழி யாப்புவகை .
ஆரீதம் பச்சைப் புறா ; கரிக்குருவி ; ஆரீதரால் செய்யப்பட்ட ஸ்மிருதி .
ஆருகதம் சமணமதம் ; நாவல்மரம் .
ஆருகதன் சமணன் .
ஆருத்திரை திருவாதிரை .
ஆருப்பியம் வங்கமணல் .
ஆருபதம் பித்தளை .
ஆருயிர் மருந்து உணவு .
ஆருவம் நீர் .
ஆருழலைப்படுதல் வெப்பத்தால் தகிக்கப்படுதல் ; நீர்வேட்கையால் வருந்துதல் .
ஆரூடம் ஏறியது ; கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் .
ஆரூடன் ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் ; சீவன்முத்தன் .
ஆரூபம் ஒவ்வாமை ; நீங்காமை .
ஆரூர் திருவாரூர் .
ஆரூர்க்கால் கருப்பூரவகை .
ஆரூரன் சுந்தரமூர்த்தி நாயனார் .
ஆரேவதம் காண்க : சரக்கொன்றை .
ஆரை நீராரை ; காண்க : ஆத்தி ; கோட்டை மதில் ; புற்பாய் ; அச்சுமரம் ; தோல் வெட்டும் உளி ; ஆரக்கால் .
ஆரைக்காலி கோரைவகை .
ஆரைக்கீரை நீராரைக் கீரை .
ஆரைபற்றி உடும்பு .
ஆரொட்டி கூவைக்கிழங்கு .
ஆரோக்கியசாலை மருத்துவவிடுதி ; மருத்துவமனை .
ஆரோக்கியம் நோயின்மை ; நலம் .
ஆரோகணம் ஏறுகை ; கமகம் பத்தனுள் ஒன்று ; கற்படி ; தாழ்வாரம் ; வெளிப்போகை ; முன்வாயில் ; ஏணி .
ஆரோகணித்தல் எழும்புதல் ; ஏறுதல் .
ஆரோகம் வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; ஏறுகை ; உயர்ச்சி ; நீட்சி ; நிதம்பம் ; முளை .
ஆரோகி இசையின் வர்ணபேதங்களுள் ஒன்று .
ஆரோசை ஏற்றிப் பாடும் இசை .
ஆரோணம் மீக்கோள் .
ஆரோதமடித்தல் அருளால் கொடுஞ்செயலினின்றும் மனநெகிழ்தல்
ஆரோபணம் ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
ஆரோபம் ஒன்றன் மேல் மற்றொன்றன் தன்மையை ஏற்றிக் கூறுதல் .
ஆராய்ச்சிமணி முறை வேண்டுவோர் அசைக்கும்படி அரண்மனை வாயிலில் கட்டப்படும் மணி .
ஆராய்ச்சியார் கணக்குத் தணிக்கையாளர் ; கொலைத்தண்டனை நிறைவேற்றுவோர் ; நீதிமன்றத்தில் நாசர் உத்தியோகம் வகிப்பவர் .
ஆராய்ச்சியாளன் ஏதேனும் ஒரு பொருளைக் கூர்ந்து ஆராய்ப்பவன் .
ஆராய்தல் சோதித்தல் ; சூழ்தல் ; தேடுதல் ; சுருதி சேர்த்தல் .
ஆரார் பகைவர் .
ஆரால் மீன்வகை ; சேற்றாரால் .
ஆராவம் பேரொலி சத்தம் .
ஆராவமுதம் தெவிட்டாத அமிர்தம் .
ஆராவமுது காண்க : ஆராவமுதம் .
ஆரி அருமை ; மேன்மை ; அழகு ; சோழன் ; கதவு ; துர்க்கை ; பார்வதி ; பார்ப்பனி ; தோல்வி .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆலிகை அகலிகை .
ஆலிங்கணம் தழுவுகை .
ஆலிடம் தெருச்சிறகு .
ஆலித்தல் ஒலித்தல் .
ஆலிநாடன் திருமங்கையாழ்வார் .
ஆலிப்பு ஆரவாரம் .
ஆலிம் அறிந்தவன் .
ஆலியதம் காண்க : சிறுகுறிஞ்சா .
ஆல¦டம் இடக்கால் முந்துற்று வலக்கால் மண்டலிக்கும் வில்லோர் நிலை ; காலுக்குக் கால் பன்னிரண்டங்குலம் இடைவிட்டு மண்டலமாக இருக்கும் யோகாசனவகை .
ஆல¦னகம் துத்தநாகம் .
ஆலுதல் ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் .
ஆலூகம் காண்க : வில்வம் .
ஆலேகனம் எழுதுதல் ; சித்திரித்தல் .
ஆலேகனி எழுதுகோல் ; எழுத்தாணி .
ஆலேபனம் பூசுகை .
ஆலேபூலேயெனல் பொருளின்றிப் பேசுதற்குறிப்பு .
ஆலை கரும்பாலை ; கரும்பு ; கள் ; கூடம் ; யானைக்கூடம் ; நீராரை ; கருப்பஞ்சாறு ; ஒருவகைக் கிட்டித் தண்டனை .
ஆலைக்குழி கரும்பாலையில் சாறேற்கும் அடிக்கலம் .
ஆலைத்தொட்டி கருப்பஞ்சாறு காய்ச்சும் சால் .
ஆலைபாய்தல் ஆலையாட்டுதல் ; அலைவுறுதல் ; மனஞ் சுழலுதல் .
ஆலைமாலை தொந்தரை ; மயக்கம் .
ஆலோகம் பார்வை ; ஒளி .
ஆலக்கொடிச்சி காண்க : ஆலக்கச்சி .
ஆலகண்டன் கழுத்தில் நஞ்சுகொண்ட சிவன் .
ஆலகம் காண்க : ஆமலகம் .
ஆலகாலம் பாற்கடலில் தோன்றிய நஞ்சு ; நிலவாகை .
ஆலகாலி காளி .
ஆலகிரீடை காண்க : அலரி .
ஆலங்கட்டி கல்மழை .
ஆலாங்கட்டி கல்மழை .
ஆலங்காட்டாண்டி வரிக்கூத்துவகை .
ஆலச்சுவர் சார்புசுவர் ; ஆள்மட்டச் சுவர் .
ஆலசம் சோம்பு .
ஆலசியம் சோம்பு ; தாமதம் ; கவனக்குறைவு .
ஆலத்தி காண்க : ஆரத்தி .
ஆலத்தியெடுத்தல் ஆலத்தி சுற்றுதல் .
ஆலத்திவழித்தல் ஆலத்தி சுற்றுதல் .
ஆலதரன் நஞ்சைக் கழுத்தில் தாங்கியிருபப்வனான சிவன் .
ஆலந்தை ஒரு சிறுமரம் .
ஆலம் நீர் ; கடல் ; மழை ; மரவகை ; ஆகாயம் ; அகலம் ; மலர் ; கலப்பை ; நஞ்சு ; கருமை ; உலகம் ; புன்கு ; மாவிலங்கம் ; ஈயம் ; துரிசு
ஆலம்பம் பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .
ஆலம்பனம் பற்றுக்கோடு ; தொடுகை ; கொல்லுகை .
ஆலம்பலிகிதம் எழுத்துக்கூட்டிலக்கணம் .
ஆலம்பி அரிதாரம் .
ஆலமர்கடவுள் கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் .
ஆலமர்செல்வன் கல்லால மரத்தின்கீழ் தென்முகக் கடவுளாய் வீற்றிரூக்கும் சிவன் .
ஆலமரம் மரவகை .
ஆலமுடையோன் துரிசு .
ஆலமுண்டோன் பாற்கடலில் தோன்றிய நஞ்சையுண்டவனாகிய சிவன் .
ஆலயம் தேவாலயம் ; தங்குமிடம் ; நகரம் ; யானைக்கூடம் .
ஆலயவிஞ்ஞானம் சாகும்வரை நிற்கும் உணர்ச்சி .
ஆவல் ஒலி ; மயிற்குரல் .
ஆலலம் திருமணத்தின்போது மணமகன் மணமகட்குக்கொடுக்கும் கூறைப் புடைவை .
ஆலவட்டம் பெருவிசிறி ; விசிறி .
ஆலவன் ஆலிலையில் பள்ளிகொள்ளும் திருமால் ; கடலில் தோன்றிய சந்திரன் .
ஆலவாய் பாம்பு ; மதுரை .
ஆலவாலம் மரத்தின்கீழ்ப் பாத்தி ; விளைநிலம் .
ஆலவிருட்சம் ஆலமரம் ; ஆதொண்டை .
ஆலா கடற்கரைப் பறவைவகை .
ஆலாகலம் காண்க : ஆலகாலம் .
ஆலாசியம் மதுரை ; ஆண்முதலை .
ஆலாட்டு சிறிது உலரவைத்தல் .
ஆலாட்டுதல் தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் .
ஆலவாட்டுதல் தானியங்களை இளவெயிலிலோ நிழலிலோ காய வைத்தல் .
ஆலாத்தி காண்க : ஆலத்தி .
ஆலாத்து கப்பலின் பெருங்கயிறு .
ஆலாதாடை அவுரி .
ஆலாப்பறத்தல் திண்டாடுதல் .
ஆலாபம் உரையாடல் .
ஆலாபனம் இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .
ஆலாபித்தல் இராகத்தை நீட்டித்துப் பாடுகை ; உரையாடுகை .
ஆலாபினி சுரபேதம் .
ஆலாலம் துரிஞ்சில் ; கடலில் பிறந்த நஞ்சு .
ஆலாவர்த்தம் காண்க : ஆலவட்டம் .
ஆலி மழைத்துளி ; ஆலங்கட்டி ; தலைப் பெயல் மழை ; காற்று ; பூதம் ; கள் .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆவரணம் மறைப்பு ; ஆடை ; சட்டை ; கோட்டை ; தடை ; பிராகாரம் ; அணி ; ஆணவமலம் ; கேடகம் ; ஈட்டி
ஆவரணமூர்த்தி கோயிலில் கருவறையைச் சுற்றி இருக்கும் பக்கத் தேவதைகள் , உட்சுற்று மாளிகைத் தேவதைகள் .
ஆவரணி பார்வதி .
ஆவரணீயம் மறைப்பது .
ஆவரி அம்பு .
ஆவரித்தல் மறைத்தல் .
ஆவல் ஆசை ; வளைவு .
ஆவல்லி சீந்திற்கொடி .
ஆவலங்கொட்டுதல் ஆர்த்து வாய்க்கொட்டுதல் .
ஆவலம் வாயினாலிடும் ஒலி ; கொல்லை ; கூறை ; படைமரம் என்னும் நெசவுக்கருவி .
ஆவலர் உற்றார் ; கணவர் ; காதலர் .
ஆவலாதி குறைகூறுகை ; அவதூறு .
ஆவலாதிக்காரன் போக்கிரி ; குறைகூறுவோன் ; முறையிடுவோன் .
ஆவலி காண்க : ஆவளி .
ஆவலித்தல் அழுதல் ; கொட்டாவிவிடுதல் ; செருக்குதல் .
ஆவலிப்பு செருக்கு .
ஆவளி வரிசை ; மரபுவழி ; உறுதியின்மை ; இரேகை ; வளி என்னும் சிறு காலஅளவு .
ஆவளிச்சேவகம் உறுதியற்ற வேலை .
ஆவளித்தல் ஒழுங்குபடுத்துதல் .
ஆவற்காலம் ஆபத்துண்டாங் காலம் ; இறுதிநாள் .
ஆவறியாவறியெனல் பேராசைக் குறிப்பு .
ஆவா இரக்க வியப்பு ஆனந்தக் குறிப்பு .
ஆவாகனம் அக்கினிக்குப் பலிகொடுத்தல் ; அழைத்தல் ; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைக்கை .
ஆவாகனமுத்திரை முத்திரை வகை ; வழிபாட்டுக் காலத்தில் கைகளினால் காட்டும் குறிப்பு .
ஆவாகித்தல் எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை அழைத்தல் .
ஆவாகை காண்க : நிலவாகை .
ஆவாசம் நகரம் ; மருதநிலத்தூர் .
ஆவாதம் காண்க : ஆகதம் ; கமகம் பத்தனுள் ஒன்று .
ஆவாபம் விதைப்பு ; பாத்தி ; பானவகை ; பாண்டசுத்தி ; வளையல் .
ஆவாபனம் நூல்சுற்றும் பரிவட்டம் ; நெய்பவர் தறி .
ஆவாய்கத்துதல் இல்லையென்று சொல்லித் திரிதல் .
ஆவாரம் மறைப்பு .
ஆவாரகம் மறைப்பு .
ஆவாரம்பூச்சம்பா சம்பாநெல்வகை .
ஆவாரைப் பஞ்சகம் ஆவாரஞ் செடியின் இலை , பூ , வித்து , பட்டை , வேர் என்பன .
ஆவாலம் மரத்தினடியிற் கோலிய பாத்தி ; வௌவால் .
ஆவாலை பாட்டுவகை .
ஆவாளஞ்சீவாளம் காண்க : ஆவச்சீவாளம் .
ஆலோகனம் பார்க்கை .
ஆலோசனை ஆய்வுரை ; சிந்திப்பு ; பார்வை ;
ஆலோசித்தல் சிந்தித்தல் ; ஆராய்தல் .
ஆலோபம் வருத்தம் .
ஆலோலம் நீரொலி ; புள்ளோச்சும் ஒலிக்குறிப்பு ; தடுமாற்றம் .
ஆலோலிதமுகம் ஆசையால் மலர்ந்த முகத்தோடு ஒருவனை அழைக்கும் அபிநயவகை .
ஆலோன் சந்திரன் .
ஆவ இரக்கக் குறிப்பு ; அபயக் குறிப்பு .
ஆவகம் எழுவகைக் காற்றுகளுள் ஒன்று .
ஆவச்சீவாளம் முழு நிலைமை .
ஆவசியகம் இன்றியமையாதது .
ஆவசியம் இன்றியமையாதது .
ஆவஞ்சி இடக்கை என்னும் தோற்கருவி .
ஆவட்டங்கொட்டுதல் இல்லையென்று சொல்லித் திரிதல் .
ஆவட்டைசோவட்டை சோர்வு .
ஆவடதர் தேவசாதியார்வகை .
ஆவணக்களம் பத்திரப் பதிவுச்சாலை .
ஆவணக்களரி பத்திரப் பதிவுச்சாலை .
ஆவணம் கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் .
ஆபணம் கடைவீதி ; தெரு ; உரிமை ; அடிமைத்தனம் ; உரிமைப்பத்திரம் ; காண்க : புனர்பூசம் ; பூந்தட்டு ; தேர் மொட்டுப் பொருந்திய பீடம் .
ஆவணமாக்கள் உறுதிமொழி வாங்குவோர் .
ஆவணி ஐந்தாம் மாதம் ; காண்க : அவிட்டம் .
ஆவணி அவிட்டம் ஆவணித்திங்கள் அவிட்டவோரையில் பார்ப்பனர் வேதவிதிப்படி பூணூல் அணியும் சடங்கு ; மதுரையில் முற்காலத்து நடந்த ஒரு திருவிழா .
ஆவணிமுழக்கம் ஆவணி மாதத்திலுண்டாகும் இடிமுழக்கம் .
ஆவது ஆகவேண்டியது ; விகற்பப் பொருள் தரும் ஓரிடைச்சொல் ; விவரம் பின்வருதலைக் குறிக்குஞ்சொல் ; எண்ணொடு வருஞ்சொல் .
ஆவதை திரும்பக் கூறுகை .
ஆவநாழி காண்க : அம்பறாத்தூணி .
ஆவநாழிகை காண்க : அம்பறாத்தூணி .
ஆவம் அம்பறாத்தூணி ; வில்நாண் ; குங்கும மரம் ; சாப்பிரா மரம் ; கபிலப்பொடி .
ஆவயின் அவ்விடத்தில் .
ஆவர் யாவர் .
ஆவர்த்தம் எழுவகைக் மேகங்களுள் நீர் பொழிவது ; தடவை ; சுழல் ; நீர்ச்சுழி ; சிந்தனை .
ஆவர்த்தனம் மறுமணம் ; காண்க : ஆவர்த்தம் .
ஆவர்த்தி தடவை .
ஆவர்த்தித்தல் முதல் மனைவி இறந்தபின் மறுமணம் செய்துகொள்ளுதல் .
ஆவரணச்சுவர் கோயில் திருமதில் .
ஆவரணசக்தி மாயை .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆவிருத்தியலங்காரம் பின்வருநிலையணி .
ஆவிருதம் மறைக்கப்பட்டது
ஆவிருதி ஆணவமலம் .
ஆவிருந்து நிகழ்காலம் காட்டும் ஓர் இடைநிலை .
ஆவிரை செடிவகை .
ஆவிலம் கலங்கல் நீர் .
ஆவிலியர் வேளாளர் ; வேடர் .
ஆவிவாங்குதல் உயிர் கவர்தல் ; வருத்துதல் .
ஆவிவிடுதல் சாதல் ; உயிர்விடத் துணிதல் .
ஆவினன்குடி முருகக் கடவுளின் படைவீடுகளுள் ஒன்றான பழனி .
ஆவு காண்க : குன்றி .
ஆவுடையார் சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் .
ஆவுடையாள் சத்தியைக் குறிக்கும் இலிங்க பீடம் .
ஆவுதல் விரும்புதல் .
ஆவுதி ஆகுதி ; ஓமத்தில் இடப்படும் உணவு .
ஆவுரிஞ்சி காண்க : ஆதீண்டுகுற்றி .
ஆவுரிஞ்சுதறி காண்க : ஆதீண்டுகுற்றி .
ஆவெனல் அழுகைக் குறிப்பு ; இரக்கக் குறிப்பு ; வாய்திறத்தற் குறிப்பு .
ஆவேகி காண்க : ஆடுதின்னாப்பாளை .
ஆவேசசமவாதம் காண்க : காபாலமதம் .
ஆவேசநீர் வெறியூட்டும் கள் முதலியன .
ஆவேசம் தெய்வமேறுகை ; பேய் ; கோபம் .
ஆவேசவாதி காபாலிக மதத்தான் ; உணர்ச்சி வயப்பட்டு விவாதிப்பவன் .
ஆவேசனம் உலோகவேலை செய்வோர் வீதி ; பணிக்கூடம் ; புகுகை ; ஆவேசிக்கை .
ஆவேசாவதாரம் ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு .
ஆவேசி காண்க : ஆவேகி .
ஆவேசித்தல் உட்புகுதல் ; தெய்வமேறுதல்
ஆவேதனம் அறிக்கை .
ஆவேலம் தம்பலம் .
ஆவேலி தொழுவம் .
ஆவேறு காளை , இடபம் .
ஆவோ வியப்பு இரக்கச் சொல் .
ஆழ்கடற்றுயின்றோன் திருமால் .
ஆழ்த்துதல் அமிழ்த்துதல் .
ஆழ்தல் மூழ்குதல் ; அழுந்துதல் ; விழுதல் ; பதிதல் ; சோம்புதல் ; ஆழமாதல் ; வருந்துதல் ; அகழ்தல் .
ஆழ்வள்ளி மரவள்ளி , கிழங்குவகை .
ஆழ்வார் பகவத் குணங்களில் ஆழந்து ஈடுபடுவோர் ; திருமாலடியார் பன்னிருவர் ; சமண பௌத்தப் பெரியோர் ; சுவாமி .
ஆழ்வார்கன்மி திருமால்கோயில் அருச்சகன் .
ஆழ்வார்திருநாள் திருநாள் தொடக்கத்துக்கு முன் நடைபெறும் ஆழவார் திருவிழா .
ஆழ்வான் சூரியன் .
ஆழ்வி தலைவன் ; தலைவி .
ஆழ்வு ஆழம் .
ஆழங்கால் பலகை தாங்கச் சுவரில் பதிக்கும் கட்டை ; அதிக ஆழமில்லாத நீர்நிலை .
ஆழங்காற்படுதல் அழுந்துதல் ; ஈடுபடுதல் .
ஆழம் ஆழந்திருக்கை ; ஆழந்த கருத்து .
ஆழம்பார்த்தல் ஆழத்தை அளந்தறிதல் ; ஒருவன் அறிவு முதலியவற்றைச் சோதித்தல் .
ஆழமுடைத்தாதல் நுண்பொருள் பொதிந்திருத்தல் ; நூலழகுகளுள் ஒன்று .
ஆழரம் அத்தி .
ஆழல் காண்க : கறையான் .
ஆழாக்கு அரைக்காற்படி .
ஆழாங்கு காண்க : ஆழங்கால் .
ஆழாடக்கிடங்கு தண்ணீர்விட்டான் கிழங்கு .
ஆவி உயிர்ப்பு ; நெட்டுயிர்ப்பு ; கொட்டாவி ; ஆன்மா ; மணம் ; வலிமை ; உயிரெழுத்து ; நீராவி ; பிட்டு ; புகை ; புகையிலை ; நறுமணம் ; பரிசுத்த ஆவி ; நீர்நிலை ; வேளிர் தலைவருள் ஒருவன் .
ஆவிகம் ஆட்டுமயிர்க் கம்பளம் .
ஆவிகாட்டுதல் நிவேதனஞ் செய்தல் .
ஆவிகை பற்றுக்கோடு .
ஆவிடை காண்க : ஆவுடையார் .
ஆவிடையார் காண்க : ஆவுடையார் .
ஆவித்தல் வாய்விடுதல் ; பெருமூச்சு விடுதல் ; கொட்டாவி விடுதல் ; வெளிவிடுதல் .
ஆவித்தைலம் நீராவியால் வடிக்கும் தைலம் .
ஆவிதம் காண்க : மரை ; திருகூசி .
ஆவிநீர் நீராவி குளிர்தலால் உண்டாகும் நீர் .
ஆவிபத்தம் பேராமுட்டிப் பூண்டு .
ஆவிபதம் பேராமுட்டிப் பூண்டு .
ஆவிபத்திரம் புகையிலை .
ஆவிபறிதல் நீராவி எழும்புதல் ; மரித்தல்
ஆவிபிடித்தல் நீராவியால் வேது கொள்ளுதல் .
ஆவிமா மரவகை .
ஆவியர் வேளாவியின் மரபினர் ; வேளாளர் ; வேடர் .
ஆவிர்தம் சுழற்சி .
ஆவிர்ப்பவித்தல் வெளிப்படுதல் .
ஆவிர்ப்பாவம் வெளிப்படுகை .
ஆவிர்ப்பூதம் தோன்றியது ; வெளிப்பட்டது .
ஆவிரம் இடையரூர் ; நரகவகை .
ஆவிருத்தி தடவை ; திரும்பத் திரும்ப ஓதுகை .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆளொட்டி காவற்கட்டு .
ஆளொதுங்கி காவற்கட்டு .
ஆளோட்டி வேலை வாங்குவோன் .
ஆளோடி வீட்டின் முன்புறத்தில் கட்டப்பட்ட தளவரிசை இட்ட தரை ; தடாகத்தில் ஆள்கள் நடப்பதற்குக் கட்டிய வழி .
ஆழித்தொட்டான் ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன் .
ஆழிமால்வரை சக்கரவாளகிரி .
ஆழிமுரசோன் கடலை முரசாகவுடைய மன்மதன் .
ஆழிமூழையாய் மிக விரைவாய் .
ஆழியான் திருமால் ; அரசன் .
ஆழியிழைத்தல் கூடலிழைத்தல் , வட்டமாக இடப்படும் விரற்குறி .
ஆழிவலியான்மணி மிளகு .
ஆழிவித்து முத்து .
ஆழிவிரல் மோதிரவிரல் .
ஆழும்பாழுமாய் சீர்கேடாய் ; வீணாக .
ஆள் ஆண்மகன் ; திறமையுடையோன் ; வீரன் ; காலாள் ; கணவன் ; தொண்டன் ; ஆட்செய்கை ; வளர்ந்த ஆள் ; ஆள்மட்டம் ; அரசு ; தொட்டால் வாடி ; பெண்பாற் பெயர் விகுதி ; பெண்பால் வினைமுற்று விகுதி .
ஆள்காட்டிவேலை ஏமாற்று வேலை .
ஆள்கை ஆளுதல் .
ஆள்திட்டம் ஓர் ஆளுக்குரிய அளவு ; ஓர் ஆளின் உடலடையாளம் .
ஆள்மட்டச்சுவர் கைப்பிடிச் சுவர் ; மதிற்சுவர் .
ஆள்மட்டம் ஒரு மனிதனின் உயரவளவு .
ஆள்மாகாணம் ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம் ; மக்கட்கட்டு .
ஆள்மாறாட்டம் வேற்றாளாகத் தன்னைக் காட்டி வஞ்சிக்கை .
ஆள்வணங்கி அரசமரம் ; காண்க : தொட்டாற் சுருங்கி ; கல்லித்தி ; மாமரம் ; ஆத்தி .
ஆள்வரி தலைவரி .
ஆள்வார் சுவாமி .
ஆள்வாரம் பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு .
ஆள்வாரி காண்க : ஆளோடி ; குளத்து மதிலின் உட்புறமாகவுள்ள மக்கள் நடமாடும் வழி .
ஆள்வாரிநிலம் கோட்டை உள்மதிற்புறமாக ஆள்கள் சுற்றிவருதற்குச் செய்த வழி .
ஆள்வாரில்லா மாடு பட்டிமாடு .
ஆள்வாரிலி மாடு பட்டிமாடு .
ஆள்விடுதல் தூதனுப்புதல் .
ஆள்வினை முயற்சி ; மகிழ்ச்சி .
ஆள்வினை வேள்வி விருந்து புறந்தருகை .
ஆள்வீதம் ஒவ்வோர் ஆளுக்குங் கொடுக்கும் அளவு ; ஆள் விழுக்காடு .
ஆளகம் சுரைக்கொடி .
ஆளடிமை அடியான்(ள்) .
ஆளத்தி ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை .
ஆளம் ஆலாபனம் , இசை விரித்துப்பாடுகை .
ஆளமஞ்சி கூலியின்றி வாங்கும் வேலை .
ஆளரவம் மனித நடமாட்டத்தால் உண்டாகுஞ் சந்தடி .
ஆளரி ஆண் சிங்கம் ; நரசிங்கமூர்த்தி .
ஆளல் ஆளுதல் ; மீன்வகை .
ஆளறுதி தனிமை .
ஆளன் ஆளுபவன் ; கணவன் ; அடிமை ; ஊரில் பரம்பரையாகப் பாகவுரிமை உள்ளவன் .
ஆளாதல் அடிமையாதல் ; பூப்படைதல் ; பெருமையடைதல் .
ஆளாபம் காண்க : ஆலாபனம் .
ஆளாழம் ஒரு முழு மனிதனின் அளவுள்ள ஆழம் .
ஆளானம் யானை கட்டுந் தறி .
ஆளி ஆள்வோன் ; செடிவகை ; கிளிஞ்சில் வகை ; யானையாளி ; சிங்கம் ; கீரைவகை ; சிறுமூட்டை ; வழுக்கல் ; வைப்பகம் ; தூய்மையான கருத்து ; பாங்கி ; பாலம் ; பயனின்மை ; ஒழுங்கு .
ஆளிட்டான் காசு பழைய நாணயவகை .
ஆளிடுதல் பதிலாளை அமர்த்துதல் .
ஆளியூர்தி துர்க்கை .
ஆளிவிதை சிறு சணல்வித்து .
ஆளிவிரை சிறு சணல்வித்து .
ஆளுகை ஆட்சி ; ஆளுதல் .
ஆளுங்கணத்தார் ஊர்ச்சபை அதகாரிகள் .
ஆளுங்கணம் ஊரையாளும் சபை .
ஆளுடையதேவர் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் .
ஆளுடைய நம்பி சுந்தரமூர்த்தி நாயனார் .
ஆளுடைய பிள்ளையார் திருஞானசம்பந்தர் .
ஆளுடையவரசு திருநாவுக்கரசு நாயனார் .
ஆளுடையான் அடிமை கொண்டவன் ; ஆளுதலையுடையான் ; சுவாமி .
ஆளெழுத்துச் சேலை சித்திரம் எழுதிய சேலை வகை .
ஆளெனல் நாயின் கதறல் குறிப்பு .
ஆளை காண்க : அறுகு .
ஆளையடிச்சான் புளியமரம் .
ஆழாத்தல் ஈடுபடுதல் .
ஆழாரம் பழைய காலத்து வழங்கிய ஒருவகை வட்டமான புதைகுழி .
ஆழி சக்கரப்படை ; ஆணைச்சக்கரம் ; கட்டளை ; வட்டம் ; மோதிரம் ; சக்கரம் ; குயவன் திகிரி ; யானைக் கைந்நுனி ; கடல் ; கடற்கரை ; காண்க : ஆளி ; குன்றி ; கணவனைப் பிரிந்த மகளிர் இழைக்கும் கூடற்சுழி .
ஆழிக்கொடி பவளம் .
ஆழிக்கடல்விழுது கடலின் பேராழத்தை அறிய உதவும் கயிறு .
ஆழித்தல் ஆழமாய்த் தோண்டுதல் .
ஆழித்தீ வடவையனல் .
ஆழித்தேர் சக்கரப்படை வடிவான திருவாரூர்த் தேர் .
ஆழிதிருத்துதல் கூடலிழைத்தல் .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆற்றுப்பித்தல் ஆற்றோரம் .
ஆற்றுப்புரவு ஆறறுநீரால் பயிரிடப்படும் நிலம் .
ஆற்றுப்பூத்தான் காண்க : பூனைக்காலி .
ஆற்றுப்பூவரசு மரவகை .
ஆற்றுப்பொடி ஆற்றிலுள்ள சிறுமீன் .
ஆற்றுமரி நீருமரிச்செடி ; காண்க : ஆற்றுக்கொடி .
ஆற்றுமல்லிகை நீர்ப்பூடுவகை .
ஆற்றுமுள்ளங்கி முள்ளங்கிவகை .
ஆற்றுமுள்ளி காண்க : கண்டங்கத்தரி : கழுதை முள்ளி .
ஆற்றுமேலழகி பூடுவகை .
ஆற்றுல்லம் உல்ல மீன்வகை .
ஆற்றுவரி ஆற்றை முன்னிலைப்படுத்திப் பாடும் ஒருவகை வரிப்பாடல் .
ஆற்றுவாய்முகம் ஆறு கடலொடு கலக்குமிடம் .
ஆற்றுவாளை ஏரி வாளைமீன் .
ஆற்றுவைப்பு ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் .
ஆற்றொழுக்கு ஆற்றின் நீரோட்டம் ; இடையறவுபடாத நடை ; சூத்திர நிலையுள் ஒன்று .
ஆறக்கட்டுதல் பேய்க்கோளை மேற்செல்ல வொட்டாமல் தடுத்தல் .
ஆறகோரம் கொன்றை .
ஆறங்கம் வேதாங்கம் ஆறு ; அவை : சிட்சை , கற்பம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோபிசிதம் , சோதிடம் என்பன ; அரசர்க்குரிய படை , குடி , கூழ் , அமைச்சு , நட்பு , அரண் என்னும் ஆறுறுப்பு .
ஆறத்தணிய காண்க : ஆறவமர .
ஆறதீகம் கல்நார் .
ஆறப்போடுதல் காலந்தாழ்த்தல் .
ஆறல்பீறல் பயனற்றது .
ஆறலை வழிப்பறி .
ஆறலைத்தல் வழிப்பறி செய்தல் .
ஆளோலை அடிமைப்பத்திரம் .
ஆற்கந்திதம் குதிரை நடைவகை .
ஆற்பணம் விருப்பம் ; உரியதாகக் கொடுத்தல் .
ஆற்பதம் பற்றுக்கோடு .
ஆற்பனேபதம் வடமொழி வினைவகை .
ஆற்போடம் காக்கணம் .
ஆற்போதம் எருக்கு ; விஷ்ணுகிராந்தி ; காட்டு மல்லிகை .
ஆற்ற மிக ; முற்ற .
ஆற்றங்கரைத்தேவை வரிவகை .
ஆற்றங்கால் காண்க : காட்டுப்பூவரசு .
ஆற்றடம்பு அடம்புவகை .
ஆற்றமாட்டாமை முடியாமை ; தாங்க முடியாமை .
ஆற்றரசு காண்க : ஆற்றுப்பூவரசு .
ஆற்றல் சக்தி ; முயற்சி ; மிகுதி ; கடைப்பிடி ; பொறை ; ஆண்மை ; வெற்றி ; வாய்மை ; அறிவு ; இன்னசொல் இன்னபொருள் உணர்த்தும் என்னும் நியதி ; சாகசம் .
ஆற்றலரி காண்க : கோடைச்சவுக்கு ; பூடுவகை ; முதலைப் பூண்டு ; காண்க : சேங்கொட்டை மரம் .
ஆற்றறுத்தல் இடையிற் கைவிடுதல் ; வலியழித்தல் .
ஆற்றாச்சண்டி வறுமையால் விடாது பிச்சை கேட்பவன் .
ஆற்றாமை தாங்கமுடியாமை ; தளர்ச்சி ; மாட்டாமை ; கவலை .
ஆற்றான் வலிமையற்றவன் ; வறிஞன் .
ஆற்றிக்கொடுத்தல் சூட்டைக் குறைத்துக் கொடுத்தல் ; துணையாக உதவுதல் .
ஆற்றிடைக்குறை ஆற்றினிடையேயுள்ள திட்டு .
ஆற்றித்தேற்றுதல் சமாதானப்படுத்துதல் .
ஆற்றிலுப்பை மரவகை .
ஆற்றிறால் இறால் மீன்வகை .
ஆற்றின்வித்து கற்பூர சிலாசத்து .
ஆற்றுக்கால் ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய் .
ஆற்றுக்காலாட்டியார் மருதநிலப் பெண்டிர் .
ஆற்றுக்காலேரி ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் நீரால் நிரம்பும் ஏரி .
ஆற்றுக்கால் பாய்ச்சல் ஆற்றிலிருந்து வரும் நீர்ப்பாய்ச்சல் .
ஆற்றுக்குலை ஆற்றின் கரை ; வரிவகை .
ஆற்றுக்கெண்டை ஒருவகைச் சிறுமீன் .
ஆற்றுக்கொடி பேய்க்கொம்மட்டி .
ஆற்றுச்சஞ்சலை காண்க : மலைவட்டை .
ஆற்றுச்சவுக்கு காண்க : கோடைச்சவுக்கு ; செடிவகை .
ஆற்றுச்செருப்படி பூடுவகை .
ஆற்றுணா கட்டுச்சோறு ; வழியுணவு .
ஆற்றுத்தும்மட்டி காண்க : ஆற்றுக்கொடி .
ஆற்றுத்துவரை செடிவகை .
ஆற்றுதல் வலியடைதல் ; கூடியதாதல் ; போதியதாதல் ; உய்தல் ; உவமையாதல் ; செய்தல் ; தேடுதல் ; உதவுதல் ; நடத்துதல் ; கூட்டுதல் ; சுமத்தல் ; பசி முதலியன தணித்தல் ; துன்பம் முதலியன தணித்தல் ; சூடு தணித்தல் ; ஈரமுலர்த்துதல் ; நூல் முறுக்காற்றுதல் ; நீக்குதல் .
ஆற்றுநீர் செயல்புரிபவர் ; உதவி செய்வார் ; வன்மையுடையார் .
ஆற்றுநெட்டி காண்க : நீர்ச்சுண்டி .
ஆற்றுப்பச்சை நாகப்பச்சைக்கல் .
ஆற்றுப்படுகை ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ; ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் .
ஆற்றுப்படுத்தல் வழிச்செலுத்துதல் ; போக்குதல் .
ஆற்றுப்படை பரிசில் பெற்றான் ஒருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடப்படும நூல்வகை .
ஆற்றுப்பாசி நீர்ப்பூடுவகை .
ஆற்றுப்பாட்டம் வரிவகை .
ஆற்றுப்பாய்ச்சல் காண்க : ஆற்றுக்கால் பாய்ச்சல் .
ஆற்றுப்பாய்ச்சி ஆற்றில் கப்பல் செலுத்துவோன் .
ஆற்றுப்பாலை மரவகை .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆன் பெற்றம் , எருமை , மரை இவற்றின் பெண் ; காளை ; அவ்விடம் ; மூன்றனுருபு ; ஆண்பாற் பெயர் வினைகளின் விகுதி ஒரு சாரியை .
ஆன்காவலன் வைசியன் .
ஆன்பொருந்தம் ஆன்பொருநை ஆறு , தாமிரபரணியாறு .
ஆன்மசுத்தி பத்துச் செயலுள் ஒன்று ; ஐந்து சுத்தியுள் ஒன்று ; தாந்திரிக பஞ்ச சுத்தியுள் ஒன்று .
ஆன்மஞானம் ஆன்மாவைப் பற்றிய அறிவு : ஆன்மாவின் அறிவு .
ஆன்மதத்துவம் காண்க : அசுத்ததத்துவம் .
ஆன்மதரிசனம் தன்னையுணரும் அறிவு ; பத்துச் செயலுள் ஒன்று
ஆன்மபூ மன்மதன் ; பிரமன் .
ஆன்மபோதம் உயிருணர்வு .
ஆன்மமந்திரம் காண்க : அசபா .
ஆன்மயோனி காண்க : ஆன்மபூ .
ஆன்மரூபம் பத்துச் செயலுள் ஒன்று .
ஆன்மலாபம் ஆத்மாவின் பேறு .
ஆன்மவீரன் விறலோன் : மைத்துனன் : புதல்வன் : கற்றோன் .
ஆன்மா உயிர் ; முயற்சி ; ஊக்கம் ; மணம் ; அறிவு ; உடல் ; பரமான்மா ; வாயு ; இயல்பு ; சூரியன் : நெருப்பு .
ஆன்மாச்சிரயம் தன்னைப் பற்றுதல் என்னும் குற்றம் .
ஆன்மாதீனன் ஆன்மவீரன் : பிராணாதாரன் .
ஆன்மார்த்தபூசை தன் மனமொன்றிய வழிபாடு .
ஆன்மார்த்தம் தற்பொருட்டு .
ஆன்மெழுக்கு பசுவின் சாணம் .
ஆன்வல்லவர் முல்லைநில மாக்கள் .
ஆன்வல்லோர் முல்லைநில மாக்கள் .
ஆன்ற மாட்சிமைப்பட்ட ; பரந்த ; அடங்கிய ; இல்லாமற்போன .
ஆன்றமைதல் அடங்கியமைதல் .
ஆன்றல் அகலம் : நீங்கல் : மாட்சிமை : மிகுதி .
ஆன்றவர் அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .
ஆன்றார் அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .
ஆன்றோர் அறிஞர் ; தேவர் : பெரியோர் : பண்புள்ளோர் .
ஆன்று நிறைந்து : விரிந்து ; நீங்கி .
ஆன்றோள் மாண்புடையாள் .
ஆன்னிகம் நாட்கடன் .
ஆன அந்த ; ஆகிய .
ஆனகதுந்துபி முரசுவகை ; வாசுதேவர் .
ஆனகம் படகம் ; துந்துபி ; தேவதாரு ; சுரை ; கற்பகம் ; மேகமுழக்கம் .
ஆனஞ்சு பஞ்சகவ்வியம் ; பசுவின் பால் ; தயிர் ; நெய் ; சிறுநீர் , சாணம் சேர்ந்த கலவை .
ஆனத்தவாயு வாதநோய்வகை .
ஆனத்தேர் விடத்தேர்ச்செடி .
ஆனதம் சமணரது கற்பலோகங்களுள் ஒன்று .
ஆனது எழுவாய்ச் சொல்லுருபு .
ஆனதும்பி மீன்வகை .
ஆனந்த அறுபதாண்டுக் கணக்கில் நாற்பத்தெட்டாம் ஆண்டு .
ஆனந்தக்கண்ணீர் மகிழ்ச்சி மிகுதியால் வரும் கண்ணீர் .
ஆனந்தக்கரப்பான் ஒருவகைப் கரப்பான் நோய் .
ஆனந்தகரந்தம் மருக்கொழுந்து .
ஆனந்தகரம் மகிழ்ச்சி தருவது .
ஆறவமர அமைதியாய் , நிதானமாக .
ஆறவிடுதல் காணக : ஆறப்போடுதல்
ஆறறிவுயிர் ஐம்பொறியுணர்வோடு மனவுணர்வுடைய மக்கள் .
ஆறன்மட்டம் தாளவகை .
ஆறாட்டம் நோயுற்றோர் படும் துயரம் .
ஆறாட்டு தீர்த்தவாரித் திருவிழா .
ஆறாடி நிலைகெட்டவன் .
ஆறாடுதல் தீர்த்தவாரி மூழ்குதல் .
ஆறாதாரம் உடம்பினுள் தத்துவவழி கூறும் ஆறிடம் ; மூலாதாரம் ; சுவாதித்திட்டானம் ; மணிபூரகம் , அனாகதம் , விசுத்தி , ஆஞ்ஞை .
ஆறாதூறு காண்க : அவதூறு .
ஆறாமீன் கார்த்திகை .
ஆறாமீனறவோட்டு கார்த்திகையில் சூரியன் புகும் காலம் .
ஆறாயிரப்படி ஆறாயிரம் கிரந்தம் கொண்ட உரைநூல் ; திருவாய்மொழி விரிவுரைகளுள் முந்தியது .
ஆறாரைச்சக்கரம் மிறைக்கவியுள் ஒன்று .
ஆறியகற்பு அறக்கற்பு .
ஆறிலொன்று அரசனுக்குரிய ஆறிலொரு பாகம் .
ஆறு நதி ; வழி ; பக்கம் ; சமயம் ; அறம் ; சூழச்சி ; விதம் ; இயல்பு ; ஓர் எண்ணிக்கை ; தலைக்கடை .
ஆறுகட்டி ஆறு பற்களுக்குமேல் முளையாத மாடு ; சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம் .
ஆறுகட்டுதல் ஆற்றில் அணை கட்டுதல் ; ஆற்றிற்குக் கரையிடுதல் .
ஆறுகாட்டி வழிகாட்டி .
ஆறுசூடி கங்கையைத் தலையில் அணிந்துள்ள சிவன் .
ஆறுதல் தணிதல் ; சூடு தணிதல் ; அமைதியாதல் ; புண் காய்தல் ; அடங்குதல் ; மனவமைதி .
ஆறுபரியான் இராகு ; கேது .
ஆறுமணிப்பூ மாலையில் மலரும் மலைப்பூ வகை .
ஆறுமாசக் கடன்காரன் ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் .
ஆறுமாசமூட்டைக்காரன் ஆறுமாதத் தவணைக்குக் கடனாகப் பண்டங்களை விற்கும் வணிகன் .
ஆறுமாதக்காடி மிகப் புளிக்க வைத்த காடி மருந்து .
ஆறெழுத்து ஆறெழுத்து மந்திரம் ; 'நமக்குமாராய' என்னும் முருகக் கடவுள் மந்திரம் .
ஆறெறிபறை வழிப்பறி செய்வோர் கொட்டும் பறை .
ஆறை ஆற்றூர் .


சொல்
அருஞ்சொற்பொருள்
ஆனந்தரியம் இவை ஆராய்ந்தபின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு .
ஆனந்தவருவி இன்பத்தால் வரும் கண்ணீர்ப் பெருக்கு .
ஆனந்தவல்லி பார்வதி ; தைத்திரிய உபநிடதத்தின் ஒரு பாகம் .
ஆனந்தவுவமை மிகவும் இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம் .
ஆனந்தவோமம் ஒருவர் இறந்த பத்தாம் நாளில் தீட்டுக் கழியச் செய்யும் சடங்கு .
ஆனந்தன் சிவன் ; அருகன் .
ஆனந்தான்மவாதி ஆன்மா ஆனந்தமடைவதே வீடுபேறென்று வாதிப்பவன் .
ஆனந்தி பார்வதி ; தாமிரபரணியாறு ; மகிழ்ச்சியுடையவன் ; அரத்தை .
ஆனந்தித்தல் மகிழ்வடைதல் .
ஆனந்தை உமாதேவி ; குறிஞ்சி யாழ்த்திறத்துள் ஒன்று ; காண்க : கொட்டைக்கரந்தை .
ஆனம் எழுத்துச்சாரியை ; கள் ; தெப்பம் ; மரக்கலம் .
ஆனமட்டும் கூடியவரை .
ஆனயம் கொண்டுவருகை ; பூணூல்சடங்கு .
ஆனயனம் கொண்டுவருகை ; பூணூல்சடங்கு .
ஆனர்த்தகம் போர் ; நாடகசாலை ; ஒரு நாடு .
ஆனவர் இடையர் .
ஆனவன் நண்பன் ; எழுவாய் வேற்றுமைச் சொல்லுருபு .
ஆனவாள் கோயிற் காரியங்களை நடத்தி வைக்கும் அரசாங்க அலுவலன் .
ஆனனம் முகம் .
ஆனா நீங்காத ; கெடாத ; அடங்காத ; அளவு கடந்த ; மஞ்சள்நாறி .
ஆனாகம் நீட்சி ; வயிற்றுப்பொருமல் நோய் .
ஆனாங்குருவி குருவிவகை .
ஆனாமை நீங்காமை ; தணியாமை ; கெடாமை ; உத்தராடம் .
ஆனாயகலை கண்ணறைத்தசை .
ஆனாயம் வாயுக்கண்ணறை .
ஆனாயன் மாட்டிடையன் .
ஆனால் ஆயின் ; ஆகையால் .
ஆனாலும் ஆயினும் .
ஆனி மூன்றாம் மாதம் ; காண்க : மூலம் ; உத்தராடம் ; ஆன்பொருநை ; கேடு ; இந்துப்பு .
ஆனிக்கருந்தலை ஆனிமாதக் கடைசி .
ஆனித்தூக்கம் ஆனிமாதத்தில் கடலின் அமைதி .
ஆனியம் நாள் ; நட்சத்திரம் ; பருவம் ; பொழுது ; நாட்படி ; கருஞ்சீரகம் .
ஆனிரை பசுக்கூட்டம் .
ஆனிலன் வாயு புதல்வனாகிய அனுமான் ; பீமன் .
ஆனிலை பசுக்கொட்டில் ; கருவூர்ச் சிவாலயம் .
ஆனிலையுலகம் காண்க : ஆனுலகு .
ஆனீர் கோமூத்திரம் .
ஆனுகூலியம் அனுகூலமுடைமை .
ஆனுதல் நீங்குதல் .
ஆனும் ஆயினும் ; ஆவது .
ஆனுலகு கோலோகம் .
ஆனெய் பசுவின் நெய் .
ஆனேறு எருது .
ஆனை யானை ; காண்க : அத்தி : ஆத்தி .
ஆனைக்கசடன் நெல்வகை .
ஆனைக்கண் அளிந்த பழத்தில் விழும் கறுப்புப் புள்ளி .
ஆனைக்கரடு ஆனையறுகு படர்ந்த கரட்டு நிலம் .
ஆனைக்கள்ளிமுளையான் பூடுவகை .
ஆனைக்கற்றலை கடல்மீன்வகை .
ஆனைக்கற்றாழை ஒருவகை நீண்ட கற்றாழை .
ஆனைக்காசு நாணயவகை .
ஆனைக்காயம் காண்க : ஆனைப்பெருங்காயம் .
ஆனைக்காரன் யானைப்பாகன் .
ஆனைக்காரை காண்க : ஒதிமரம் .
ஆனைக்கால் பெருங்கால் ; பெரிய நீர்த்தூம்பு .
ஆனைக்குப்பு சதுரங்க விளையாட்டு .
ஆனைக்குரு மரவகை .
ஆனைக்குருகு அன்றில் .
ஆனைக்குழி யானை பிடிக்குமிடம் .
ஆனைக்குன்றிமணி காண்க : மஞ்சாடிமரம் .
ஆனந்தக்களிப்பு பெருமகிழச்சி ; மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாடல் .
ஆனந்தகானம் காசி .
ஆனந்தகுறுவை நெல்வகை .
ஆனந்ததாண்டவம் நடராசர் புரியும் நடனம் .
ஆனந்ததீர்த்தர் மத்துவாசாரியார் .
ஆனந்தநித்திரை யோகநித்திரை .
ஆனந்தநிருத்தம் காண்க : ஆனந்ததாண்டவம் .
ஆனந்தப்பையுள் கணவன் இறப்ப மனைவி வருந்தும் புறத்துறை .
ஆனந்தபரவசம் மகிழ்ச்சியால் தன்னை மறக்கை .
ஆனந்தபைரவம் சிந்தூரவகை .
ஆனந்தபைரவி ஒரு பண் .
ஆனந்தம் பேரின்பம் ; சாக்காடு ; பாக் குற்றங்களுள் ஒருவகை ; அரத்தை .
ஆனந்தமயகோசம் உயிருக்குள்ளே ஐந்து உறையுளுள் ஒன்று .
ஆனந்தமயம் இன்பம் நிறைந்தது ; காண்க : ஆனந்தமயகோசம் .
ஆனந்தமூலி கஞ்சா .

சொல்
அருஞ்சொற்பொருள்
ஆனைச்சிலந்தி புண்கட்டி வகை .
ஆனைச்சீரகம் காண்க : பெருஞ்சீரகம் .
ஆனைச்சுண்டை மலைச்சுண்டை என்னும் சுண்டைவகை .
ஆனைச்செவியடி பூடுவகை .
ஆனைச்சேவகன் யானை வீரன் ; யானைப் படைத் தலைவன் .
ஆனைச்சொறி பெருஞ்சொறிசிரங்கு .
ஆனைசேனை மிகுதி .
ஆனைத்தடிச்சல் படர்கொடிவகை ; காண்க : புளிநறளை .
ஆனைத்தடிப்பு ஒரு பூடு .
ஆனைத்தாள் மதகு .
ஆனைத்திசை வடதிசை .
ஆனைத்திப்பிலி கொடிவகை .
ஆனைத்தீ பெரும்பசியை விளைப்பதொரு நோய் .
ஆனைத்தீநோய் பெரும்பசியை விளைப்பதொரு நோய் .
ஆனைத்தும்பிக்கை துதிக்கை ; காண்க : ஆனைத்தூம்பு .
ஆனைத்தும்பை பெருந்தும்பை .
ஆனைத்தூம்பு யானை வடிவாயமைந்த நீர் விழுங் குழாய் .
ஆனைத்தெல்லு படர்கொடி வகை ;
ஆனைத்தேர் விடத்தேர் .
ஆனைத்தொழில் பெருஞ்செயல் .
ஆனைத்தோட்டி அங்குசம் .
ஆனைந்து காண்க : ஆனஞ்சு .
ஆனைநார் மரவகை .
ஆனைநெருஞ்சி பெருநெருஞ்சி .
ஆனைப்படுவன் வெப்புநோய்வகை .
ஆனைப்பார்வை கீழ்நோக்கிய பார்வை .
ஆனைப்பிச்சான் ஒரு பூடு .
ஆனைப்புல் காண்க : ஆனைக்கோரை .
ஆனைப்புளி பப்பரப்புளி .
ஆனைப்பெருங்காயம் ஒருவகைப் பெருங்காயக் கலவை .
ஆனைப்பேன் கத்தரிச் செடியில் உண்டாகும் ஒருவகைப் பூச்சி .
ஆனைமஞ்சள் ஒரு பூடு .
ஆனைமயிர்க்காப்பு யானையின் வால்மயிரால் செய்தணியும் காப்பு .
ஆனைமீக்குவம் கருமருது .
ஆனைமீன் பெருமீன்வகை .
ஆனைமுகன் விநாயகன் ; ஓர் அசுரன் .
ஆனையச்சு ஒருவகைப் பொற்காசு .
ஆனையடி சதுரங்க ஆட்டத்தில் யானை செல்லும் கதி .
ஆனையடிச் செங்கல் வட்டமான செங்கல் .
ஆனையடியப்பளம் கலியாணத்தில் பயன்படுத்தப்படும் பெரிய அப்பளம் .
ஆனையர்க்குளா கடல்மீன்வகை .
ஆனையரசாணி மணமேடையில் வைக்கப்படும் யானை முதலிய உருவங்கள் .
ஆனையறுகு அறுகுவகை .
ஆனையறையும் புள் காண்க : ஆனையிறாஞ்சிப்புள் .
ஆனையாடுதல் குழந்தைகள் உடம்பை ஆட்டுதல் .
ஆனையாள் யானைவீரன் .
ஆனையிலத்தி யானையின் மலம் .
ஆனையிறாஞ்சிப்புள் ஒரு பெரும்பறவை .
ஆனையுண்குருகு ஒரு பெரும்பறவை .
ஆனையுண்ட விளங்கனி விளாம்பழத்தில் தோன்றும் ஒரு நோய் .
ஆனையுரித்தோன் சிவன் .
ஆனையூர்தி இந்திரன் ; ஐயனார் .
ஆனையேற்றம் ஆனைமேலேறி நடத்தும் தொழில் .
ஆனையோசை உழைப்பண் .
ஆனைவசம்பு அரத்தை .
ஆனைவணங்கி காண்க : தேட்கொடுக்கி : பெருநெருஞ்சி .
ஆனைவாயன்கற்றலை ஆனைக்கற்றலைமீன் ; பொருவாக்கற்றலைமீன் .
ஆனைவாழை நீண்ட குலைகொண்ட ஒருவித வாழை ; குளங்கோவை நெல் .
ஆனைவேக்கட்டான் நெல்வகை .
ஆனோன் காண்க : ஆனவன் .
ஆனைக்கூடம் யானை கட்டுமிடம் ; பழைய வரிவகை .
ஆனைக்கெளுத்தி மீன்வகை .
ஆனைக்கொம்பன் ஆறுமாதத்தில் விளையும் ஒருவகை நெல் ; வாழைவகை .
ஆனைக்கொம்பு யானைத் தந்தம் .
ஆனைக்கோடன்சுரை சுரைவகை .
ஆனைக்கோரை கோரைவகை .
ஆனைச்சப்பரம் அம்பாரி .
ஆனைச்சாத்தான் காண்க : கரிக்குருவி .
ஆனைச்சிரங்கு ஒருவகைப் பெரும்புண் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;