கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

வெள்ளி, 3 மே, 2013

அகராதி,-இ


சொல்
அருஞ்சொற்பொருள்
இக்கரை இந்தக் கரை ; இந்துப்பு .
இக்கவம் கரும்பு .
இக்கன் கரும்பு ; வில்லை உடையவனான மன்மதன் .
இக்கிடைஞ்சல் இடையூறு .
இக்கிரி முட்செடிவகை .
இக்கு இடை ; சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு ; ஆபத்து ; கரும்பு ; கள் ; கூட்டில் வைத்த தேன் ; ஒரு சாரியை .
இக்குக்கந்தை நீர்முள்ளி ; நெருஞ்சி ; நாணல் ; வெள்ளிருளிச் செடி .
இக்குக்கொட்டுதல் ஒலிக்குறிப்பினால் ஒன்றை அறிவித்தல் .
இக்குதம் கருப்பஞ்சாற்றுக் கடல் .
இக்குமுடிச்சு சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு .
இக்குரம் நீர்முள்ளி .
இக்குவாகு குந்துருக்கம் பிசின் ; சூரியகுலத்து முதலரசன் .
இக்குவிகாரம் சருக்கரை .
இக்குவில்லி கரும்பை வில்லாகவுடைய மன்மதன் .
இக்குவில்லோன் கரும்பை வில்லாகவுடைய மன்மதன் .
இக்கெனல் விரைவுக் குறிப்பு .
இக்கோ வியப்பு இரக்கச்சொல் .
இக முன்னிலை அசைச்சொல் .
இகசுக்கு காண்க : நீர்முள்ளி .
இகணை ஒரு மரம் .
இகத்தல் தாண்டுதல் ; கடத்தல் ; அடக்குதல் ; கைப்பற்றுதல் ; பிரிதல் ; பொறுத்தல் ; போதல் ; நீங்குதல் ; புடைத்தல் ; காழ்த்தல் ; நெருங்குதல் .
இகத்தாளம் பரிகாசம் , கிண்டல் .
இகந்துழி தூரமான இடம் .
இகந்துபடுதல் விதியைக் கடத்தல் .
இகபரம் இம்மை மறுமை .
இகபோகம் இவ்வுலக இன்பம் .
இகம் இம்மை .
இகமலர் விரிமலர் .
இகரக்குறுக்கம் குற்றியலிகரம் .
இகரம் 'இ'என்னும் எழுத்து .
இகல் பகை ; போர் ; வலிமை ; சிக்கு ; அளவு ; புலவி .
இகல ஒருவமைச் சொல் .
இகலன் பகைவன் ; படைவீரன் ; நரி ; கிழநரி .
இகலாட்டம் வாதாட்டம் ; போட்டி .
இகாலான் பகைவன் .
இகாலோன் பகைவன் .
இகலி காண்க : பெருமருந்து .
இகலியார் பகைவர் .
இகலுதல் மாறுபடுதல் ; போட்டிபோடுதல் ; ஒத்தல் .
இகலோகம் இவ்வுலகம் .
இகழ் இகழ்ச்சி .
இகழ்ச்சி அவமதிப்பு ; குற்றம் ; விழிப்பின்மை ; வெறுப்பு .
இகழ்ந்துரை இகழ்ச்சிச் சொல் .
இகழ்வார் அவமதிப்பவர் .
இகழ்வு நிந்தை .
இகழற்பாடு இகழப்படுகை .
இகழாஇகழ்ச்சி புகழ்வதுபோலப் பழித்துக் கூறும் அணி .
இகழுநர் எள்ளி நகையாடுபவர் ; பகைவர் .
இகளை வெண்ணெய் .
இகன்மகள் துர்க்கை .
இகன்றவர் பகைவர் .
இகனி காண்க : வெற்றிலை .
இகா முன்னிலையசை .
இகாமுத்திரபலபோகவிராகம் இம்மை மறுமை இனபங்களில் அவாவற்றிருத்தல் .
இகுசு காண்க : மூங்கில் .
இகுடி காண்க : காற்றோட்டி
இகுத்தல் கொல்லுதல் ; வீழ்த்துதல் ; தாழ்த்துதல் ; சொரிதல் ; ஓடச்செய்தல் ; அறைதல் ; வாத்தியம் வாசித்தல் ; அழைத்தல் ; கொடுத்தல் ; விரித்தல் ; ஒலித்தல் ; மறித்தல் ; தாண்டுதல் ; எறிதல் ; துன்புறுத்துதல் ; துடைத்தல் .
இகுதல் கரைந்து விழுதல் ; தாழ்ந்து விழுதல் .
இகுப்பம் திரட்சி ; தாழ்வு .
இகும் முன்னிலையசை .
இகுரி மரக்கலம் ; வழக்கு .
இகுவை வழி .
இகுள் இகுளை ; இடி ; ஆரால்மீன் .
இகுளி இடி ; கொன்றை .
இகுளை தோழி ; சுற்றம் ; நட்பு .
இகூஉ (வி) இகுத்து ,வீழ்த்தி .
இங்கண் இவ்விடம் .
இங்கம் குறிப்பு ; அங்கசேட்டை ; சங்கமப் பொருள் ; அறிவு .
இங்கலம் கரி .
இங்கிட்டு இங்கு .
இங்கித்தை இவ்விடத்தில் .
மூன்றாம் உயிரெழத்து ; பஞ்ச பட்சிகளுள் ஆந்தையைக் குறிக்கும் எழுத்து ; அண்மைச்சுட்டு ; இருதிணை முக்கூற்று ஒருமை விகுதி ; வினைமுதல் பொருள் விகுதி ; செயப்படுபொருள் விகுதி ; கருவிப்பொருள் விகுதி ; எதிர்கால முன்னிலை ஒருமை விகுதி ; ஏவல் ஒருமை விகுதி ; வியங்கோள் விகுதி ; வினையெச்ச விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; பகுதிப்பொருள் விகுதி .
இஃது இது ; அஃறிணை ஒருமை அண்மைச் சுட்டு
இக்கட்டு இடுக்கண் ; நெருக்கடி ; வெல்லக்கட்டி .
இக்கணம் இப்பொழுது .



சொல்
அருஞ்சொற்பொருள்
இசிப்பு இழுக்கை ; நரம்புவலி ; சிரிப்பு .
இசிபலம் காண்க : பேய்ப்புடல் .
இசிவு நரம்பிழுப்பு ; மகப்பேற்று வலி .
இசிவுநொப்பி சன்னியைத் தடுக்கும் மருந்து .
இசின் இறந்தகால இடைநிலை ; அசைநிலை .
இசுதாரு காண்க : கடம்பு .
இசுப்பு காண்க : இழுப்பு .
இசும்பு வழுக்கு ; ஏற்றவிறக்கங்கள் மிகுந்த கடுவழி ; நீர்க்கசிவு ; எட்கசிவு .
இசை இசைவு ; பொன் ; ஊதியம் ; ஓசை ; சொல் ; புகழ் ; இசைப்பாட்டு ; நரம்பிற்பிறக்கும் ஓசை ; இனிமை ; ஏந்திசை ; தூங்கிசை , ஒழுகிசை ; சீர் ; சுரம் ; வண்மை ; திசை .
இசைக்கரணம் இசைக்கருவியில் காட்டும் தொழில் .
இசைக்கருவி தோற்கருவி , துளைக்கருவி , நரம்புக்கருவி , மிடற்றுக்கருவி ; கஞ்சக்கருவி என ஐவகைப்படும் வாத்தியம் ; வாத்தியம் .
இசைக்கிளை ஆயத்தம் , எடுப்பு , உற்சாகம் , சஞ்சாரம் , இடாயம் என்னும் ஐவகை இசை .
இசைக்குரற் குருவி குயில் .
இசைக்குழல் குழற்கருவி ; ஊதுகுழல் .
இங்கிதக்களிப்பு காமக்குறிப்போடு கூடிய களிப்பு .
இங்கிதக்காரன் பிறன் குறிப்பறிந்து அதற்கிசைய நடப்பவன் .
இங்கிதகவி பாட்டுடைத் தலைவன் கருத்தை விளக்கும் பாடல் ; இனிமை தரும் கவிபாடுவோன் .
இங்கிதம் குறிப்பு ; கருத்து ; இனிமை ; சமயோசித நடை ; போகை ; புணர்ச்சி .
இங்கிரி கத்தூரி ; செடிவகை .
இங்கிற்றி காண்க : இங்குத்தி .
இங்கு இவ்விடம் ; பெருங்காயம் .
இங்குசக்கண்டன் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குசக்காண்டன் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குசக்கண்டான் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குசக்காண்டான் நீர்முள்ளி ; நெருஞ்சி .
இங்குடுமம் பெருங்காயம் .
இங்குத்தி ஒரு மரியாதைச் சொல் .
இங்குத்தை இவ்விடம் .
இங்குதல் தங்குதல் ; அழுந்துதல் .
இங்குதாரி ஒருவகை உலோகமண் .
இங்குதாழி பீதரோகிணி .
இங்குதி மரவகை .
இங்குராமம் காண்க : இங்குடுமம் .
இங்குலியம் சாதிலிங்கம் ; சிவப்பு .
இங்குளி காண்க : இங்குடுமம் .
இங்ஙன் இங்ஙனம் , இப்படி ; இவ்விடம் .
இங்ஙனம் இங்கு ; இவ்வாறு .
இச்சகம் முகமன் ; நேரில் புகழ்கை ; பெறக் கருதிய தொகை .
இச்சம் விருப்பம் ; பக்தியோடு புரியும் தொண்டு ; வினா ; அறியாமை ; பொய்கூறுகை .
இச்சாசத்தி விருப்பாற்றல் , சிவனுடைய ஐந்து சக்திகளுள் ஒன்று ; முதல்வன் ஆன்மாக்களுக்கு மலபந்தத்தை நீக்கிச் சிவத்தையளித்தற்கண் உள்ளதாகிய அருள் .
இச்சாப்பிராரத்தம் தனக்கே துன்பமென அறிந்திருந்தும் அதைச் செய்விக்கும் பிராரத்த கருமவகை .
இச்சாபத்தியம் மருந்துண்ணுங் காலத்தில் புணர்ச்சி தவிர்கை ; கடுகு , நல்லெண்ணெய் முதலியவற்றை நீக்கியுண்ணும் பத்தியம் .
இச்சாபோகம் விரும்பியபடி இன்பம் நுகர்தல் .
இச்சாரோகம் போகாதிக்கத்தால் வரும் நோய் .
இச்சி காண்க : கல்லிச்சி ; மரவகை ; பெண்பால் விகுதி .
இச்சிச்சிச்செனல் பறவை முதலியவற்றை வெருட்டும் ஒலிக்குறிப்பு .
இச்சித்தல் விரும்புதல் .
இச்சியல் கடுகுரோகிணி .
இச்சியால் இத்திமரம் .
இச்சில் இத்திமரம் .
இச்சியை கொடை ; வேள்வி ; பூசனை .
இச்சுக்கொட்டுதல் பறவை ஒலித்தல் ; ஒலிக்குறிப்பினால் மறுமொழி கூறுதல் .
இச்சை விருப்பம் ; பக்தியோடு புரியும் தொண்டு ; வினா ; அறியாமை .
இச்சைசெய்தி காண்க : திரோபவம் ; மறைப்பு ; மயக்கம் .
இச்சையடக்கம் ஆசையை அடக்கிக் கொள்ளுகை .
இசக்கி துர்க்கையின் மாற்றுரு ; ஊர்த் தெய்வம் .
இசக்கியம்மன் துர்க்கையின் மாற்றுரு ; ஊர்த் தெய்வம் .
இசக்குபிசக்கு முறைகேடு ; குழப்பம் .
இசகுபிசகு முறைகேடு ; குழப்பம் .
இசங்கு சங்கஞ்செடி .
இசங்குதல் போதல் .
இசடு பொருக்கு .
இசப்புதல் ஏமாற்றுதல் .
இசருகம் காண்க : தும்பை .
இசல்தல் மாறுபடுதல் ; வாதாடுதல் .
இசலுதல் மாறுபடுதல் ; வாதாடுதல் .
இசலாட்டம் காண்க : இகலாட்டம் .
இசலி பிணங்குபவள் .
இசலிப்புழுக்குதல் கலகப்படுதல் .
இசவில் காண்க : கொன்றை .
இசாபு கணக்கு .
இசி உரிக்கை ; ஒடிக்கை ; சிரிப்பு .
இசிகப்படை ஒருவகை அம்பு .
இசிகர் காண்க : கடுகு .
இசித்தல் நரம்பிழுத்தல் ; நோவுண்டாதல் ; இழுத்தல் ; முறித்தல் ; உரித்தல் ; சிரித்தல் .       

சொல்
அருஞ்சொற்பொருள்
இசைவுகுவைவு பொருத்தமின்மை ; காரியத் தவறு .
இசைவுகேடு பொருத்தமின்மை ; காரியத் தவறு .
இசைவுதீட்டு உடன்படிக்கைப் பத்திரம் .
இசைவுபிறழ்வு ஒழுங்கின்மை ; இசைவுகேடு .
இஞ்சக்கம் பரிதானம் , கையூட்டு , இலஞ்சம் .
இஞ்சம் வெண்காந்தள் .
இஞ்சாகம் இறால்மீன் .
இஞ்சி கோட்டை ; பூடுவகை ; கொற்றான் .
இஞ்சிச்சுரகம் இஞ்சிச் சாற்றாலாய கழாயம் .
இஞ்சித்தேறு இங்சித்துண்டு .
இஞ்சிப்பாகு இஞ்சி இளகவகை .
இஞ்சிப்பாவை இஞ்சிக்கிழங்கு .
இஞ்சிமாங்காய் இஞ்சிவகை .
இஞ்சிவேர்ப்புல் காண்க : சுக்குநாறிப்புல் .
இஞ்சுசாரை வெல்லம் .
இஞ்சுதல் சுவறுதல் ; சுண்டுதல் ; இறுகுதல் ; வற்றுதல் .
இஞ்சை துன்பம் ; கொலை .
இட்டகந்தம் நறுமணம் .
இட்டகாமியம் மனம் மிக விரும்பியது ; விரும்பியதைப் பெறும்பொருட்டுச் செய்யும் செயல் .
இட்டங்கட்டுதல் இராசிநிலை வரைதல் .
இட்டசட்டம் தன்னிச்சை .
இட்டசித்தி விரும்பியதை அடைகை .
இட்டடுக்கி காதணிவகை .
இட்டடை இட்டிடை ; துன்பம் .
இட்டடைச்சொல் தீச்சொல் .
இட்டதெய்வம் வழிபடு கடவுள் .
இட்டதேவதை வழிபடு கடவுள் .
இட்டபோகம் விரும்பினபடி நுகர்தல் .
இட்டம் விருப்பம் ; அன்பு ; நட்பு ; கோள் நிலையாலாகும் பலாபலன் ; துருவத்திற்கும் இராசியின் அங்கத்திற்கும் இடையேயுள்ள வேறுபாடு ; யாகம் ; யோகம் .
இட்டம்பண்ணுதல் அடிமைத்தனத்தை விலக்குதல் .
இட்டலி சிற்றுண்டிவகை .
இட்டலிக்கொப்பரை இட்டலி அவிக்கும் பாத்திரம் .
இட்டலிங்கம் மாணவனுக்கு ஆசிரியனால் கொடுக்கப்படும் அன்றாட வழிபாட்டிற்குரிய ஆன்மார்த்த லிங்கம் .
இட்டவழக்கு சொன்னது சட்டமாயிருக்கை .
இட்டவை வழி .
இட்டளப்படுதல் சிறிய இடத்தில் திரண்டு தேங்குதல் .
இசைகடன் நேர்த்திக்கடன் .
இசைகாரர் பாடுவோர் ; பாணர் .
இசைகுடிமானம் நாட்டுக்கோட்டைச் செட்டியார் கலியாணத்தில் எழுதப்படும் சாட்சிப் பத்திரம் .
இசைகேடு இகழ் ; இசைபாடுதலில் தவறு ; சீர் கெட்ட நிலை ; எக்கச்சக்கம் ; தவறான நிலை ; ஒழுங்கின்மை ; பொருத்தமின்மை ; கெடுதி .
இசைச்சுவை குரல் முதலிய ஏழிசைக்குரிய சுவைகள் : பால் , தேன் ; கிழான் , நெய் , ஏலம் , வாழை , மாதுளங்கனி .
இசைத்தமிழ் முத்தமிழுள் ஒன்று .
இசைத்தல் யாழ் முதலியன ஒலித்தல் ; சொல்லுதல் ; அறிவித்தல் ; உண்டுபண்ணுதல் ; கட்டுதல் ; ஒத்தல் ; மிகக் கொடுத்தல் ; புணர்தல் .
இசைதல் பொருந்துதல் ; ஒத்துச்சேர்த்தல் ; உடன்படுதல் ; கிடைத்தல் ; இயலுதல் .
இசைநாள் உத்திரட்டாதி ; பூரட்டாதி .
இசைநிறை செய்யுளில் இசை நிறைத்தற்கு வருஞ் சொல் ; அவை : ஒடு ; தெய்ய முதலியன .
இசைநிறையசைச்சொல் செய்யுளோசை நிறைத்தற்பொருட்டு வரும் அசைச்சொற்கள் ; அவை : ஏ , ஓ , உம் , அம்ம , அரோ , குரை என்பன .
இசைநூபுரம் வீரன் அணியும் கழல் .
இசைநூல் இசைக்கலை .
இசைப்பா இசையோடு சேர்ந்த பாக்களில் ஒருவகை ; நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இயற்பா ஒழிந்த ஏனையவை ; திருவிசைப்பா (ஒன்பதாந் திருமுறை) .
இசைப்பாட்டு பண்ணுடன் பாடும் பாட்டு .
இசைப்பாடு கீர்த்தி மிகுதி .
இசைப்பாணர் பாணருள் ஒருவகையார் .
இசைப்பு சொல் ; யாழ் முதலியன வாசிக்கை ; இசைவு ; பொருத்துகை .
இசைப்புள் அன்றிற்பறவை ; குயில் .
இசைப்பொறி செவி .
இசைபேதம் காண்க : இசைகேடு .
இசைமகள் கலைமகள் .
இசைமடந்தை கலைமகள் .
இசைமணி வீரகண்டை .
இசைமறை சாமவேதம் .
இசைமுட்டி காண்க : செருந்தி .
இசைமூடி கிரந்திநாயகம் என்னும் செடி .
இசைமை புகழ் ; ஒலி .
இசையறிபறவை காண்க : அசுணம் .
இசையறுத்தல் ஓசை வேறுபடப் பிரித்தல் .
இசையின்செல்வி புகழமகள் .
இசையெச்சம் வாக்கியத்தில் சொற்கள் எஞ்சிய பொருளுணர்த்தி வருவது .
இசையெடுத்தல் பாடுதல் .
இசையோர் கந்தருவர் .
இசையோலை ஒப்பந்த ஒலை .
இசையோன் இசைகாரன் .
இசைவல்லோர் கந்தருவர் ; பாடகர் .
இசைவாணர் இசைவல்லோர் ; பாடகர் .
இசைவு பொருந்துகை ; தகுதி ; உடன்பாடு ; ஏற்றது ; ஓட்டம் .
சொல்
அருஞ்சொற்பொருள்
இட்டுப்பிரித்தல் அண்மையில் தலைவன் பிரிதல் .
இட்டுப்பிரிவு அண்மை இடத்தில் தலைவன் பிரியும் பிரிவு .
இடடுப்பிறத்தல் ஒரு செயலுக்காகப் பிறத்தல் .
இட்டுரைத்தல் சிறப்பித்துச் சொல்லுதல் .
இட்டுவட்டி அன்னவட்டி .
இட்டுவருதல் அழைத்து வருதல் ; கொடுத்து விட்டு வருதல் .
இட்டுறுதி கண்டிப்பு ; ஆபத்துக்கால உதவி .
இட்டேற்றம் பொய்யாகச் குற்றஞ் சாட்டுகை ; கொடுமை .
இட்டேறி வயல்களின் இடையே செல்லும் வரப்புப் பாதை ; வண்டிப் பாதை .
இட்டேறுதல் கூடியதாதல் ; போதியதாதல் .
இட்டோடு ஒற்றுமையின்மை .
இடக்கயம் கொடி .
இடக்கர் அவையில் சொல்லத்தகாத சொல் ; குடம் ; மீதூர்கை .
இடக்கரடக்கல் பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக் கூறல் ; தகுதி வழக்குள் ஒன்று .
இடக்கரடக்கு பலர்முன் கூறத்தகாத சொற்களை மறைத்துக் கூறல் ; தகுதி வழக்குள் ஒன்று .
இடக்கரிசை செய்யுட் குற்றத்துள் ஒன்று .
இடக்கல் தோண்டுதல் ; அகழ்தல் .
இடக்கன் தாறுமாறு செய்பவன் .
இடக்கியம் தேர்க்கொடி .
இடக்கு சொல்லத்தகாத சொல் ; வீண்வாதம் ; முரண்செயல் .
இடக்குதல் விழுதல் .
இடக்குமடக்கு தாறுமாறு ; தொல்லை .
இடக்குமுடக்கு தாறுமாறு ; தொல்லை .
இடக்கை இடப்பக்கத்திலுள்ள கை ; இடக்கையால் கொட்டும் ஒரு தோற்கருவி ; பெருமுரசுவகை .
இடகண் இடப்பக்கத்தவன் .
இடகலை காண்க : இடகலை .
இடங்கசாலை அக்கசாலை .
இடங்கட்டுக்கொம்பு மாட்டுக்குற்றவகை .
இடங்கணம் வெண்காரம் .
இடங்கணி சங்கிலி ; காண்க : இடங்கணிப்பொறி ; உளி .
இடங்கணிப்பொறி கோட்டை மதிலில் வைக்கப்படும் இயந்திரங்களுள் ஒன்று .
இடங்கம் உளி ; இரத்தினம் நிறுக்கப் பயன்படுவதும் 24 இரத்தி கொண்டதுமான நிறைகல் ; மண்தோண்டும் படை ; வாளினுறை ; கணைக்கால் ; பொரிகாரம் ; கோபம் ; செருக்கு ; கற்சாணை .
இடங்கர் கயவர் ; முதலைவகை ; நீர்ச்சால் ; குடம் ; சிறுவழி .
இடங்கரம் மகளிர் சூதகத்தால் உண்டாகும் தீட்டு .
இடங்கழி எல்லை கடக்கை ; காமமிகுதி ; மீதூர்கை ; மரப்பாத்திரம் ; இராகவேகம் ; ஒருபடியளவு .
இடங்கழியர் காமுகர் ; கயவர் .
இடங்காரம் மத்தளத்தின் இடப்பக்கம் ; வில்லின் நாணோசை .
இடங்கெட்டவன் அலைபவன் ; தீயன் .
இடங்கேடு வறுமை ; தாறுமாறு ; நாடு கடத்துகை ; எக்கச்சக்கம் .
இடங்கை இடக்கை .
இடங்கொடுத்தல் கண்டிப்பின்றி நடக்கவிடுதல் ; பிடிகொடுத்தல் .
இடங்கொள்ளுதல் பரவுதல் ; இடம்பற்றுதல் ; வாழுமிடமாகக் கொள்ளுதல் .
இடங்கோலுதல் ஊன்ற இடஞ்செய்துகொள்ளுதல் ; ஆயத்தம் பண்ணுதல் .
இடச்சுற்று இடப்புறமாகச் செல்லும் வளைவு ; இடஞ்செல்லுகை .
இடசாரி இடப்பக்கமாக வரும் நடை .
இடஞ்சுழி இடப்பக்கம் நோக்கியிருக்கும் சுழி .
இடத்தகைவு எதிர்வழக்காடுவோனைக் குறிப்பிட்ட இடம்விட்டுப் போகாமல் வழக்காடுவோன் அரசாணை சொல்லித் தடுக்கை .
இடத்தல் பிளவுபடுதல் ; உரிதல் ; தோண்டுதல் ; பிளத்தல் ; பெயர்த்தல் ; குத்தியெடுத்தல் ; உரித்தல் .
இடத்துமாடு நுகத்தின் இடப்பக்கத்தில் பூட்டப்படும் மாடு .
இடத்தை நுகத்தின் இடப்பக்கத்தில் பூட்டப்படும் மாடு .
இட்டளம் நெருக்கம் ; வருத்தம் ; தளர்வு ; பொன் .
இட்டளர் மனவருத்தமுள்ளவர் .
இட்டறுதி குறித்த எல்லை ; இக்கட்டான நிலை ; வறுமை .
இட்டறை யானையை வீழ்த்தும் குழி .
இட்டன் விருப்பமானவன் ; நண்பன் ; தலைவன் .
இட்டாதெய்வம் காண்க : இட்டதெய்வம் .
இட்டி ஈட்டி ; வேள்வி ; சங்கிரகச் செய்யுள் ; கொடை ; பூசை ; இச்சை ; செங்கல் .
இட்டிகை செங்கல் ; இடுக்குவழி ; கூட்டுமெழுகு .
இட்டிகைவாய்ச்சி செங்கற்களை செதுக்கும் கருவி .
இட்டிடை சிறுகிய இடை ; அற்பம் ; இடையூறு ; கடைசற் கருவியின் ஓருறுப்பு .
இட்டிடைஞ்சல் துன்பம் ; வறுமை .
இட்டிது சிறிது ; அண்மை .
இட்டிமை சிறுமை ; ஒடுக்கம் .
இட்டிய சிறிய .
இட்டியம் யாக சம்பந்தம் ; வேள்வி .
இட்டீடு விவாதம் .
இட்டீடுகொள்ளுதல் வார்த்தையிட்டு வார்த்தை கொள்ளுதல் .
இட்டீறு செருக்கால் செய்யும் செயல் .
இட்டு தொடங்கி ; காரணமாக ; ஓர் அசை ; சிறுமை .
இட்டுக்கட்டிப் பேசுதல் இல்லாததைக் கற்பித்துப் பேசுதல் .
இட்டுக்கட்டுதல் இல்லாததை ஏற்றிச் சொல்லுதல் ; கற்பனை செய்தல் .
இட்டுக்கொடுத்தல் ஏற்றிக் கொடுத்தல் ; புலாலுணவு படைத்தல் .
இட்டுக்கொண்டுபோதல் கூட்டிக்கொண்டு செல்லுதல் .
இட்டுக்கொண்டுவருதல் உடன் அழைத்து வருதல் .
இட்டுநீர் தாரை வார்க்கும் நீர் .
சொல்
அருஞ்சொற்பொருள்
இடறல் கால் தடுக்குகை ; தடை ; பழி ; தண்டனை .
இடறு தடை ; துன்பம் .
இடறுகட்டை தடையாயிருப்பது .
இடறுதல் கால் தடுக்குதல் ; துன்பப்படுதல் ; மீறுதல் ; ஊறுபடுத்துதல் ; தடுத்தல் .
இடன் அகலம் ; நல்ல நேரம் ; இடப்பக்கம் இருப்பவன் .
இடனறிதல் அரசன் வினை செய்தற்குரிய இடத்தைத் தெரிதல் .
இடனெறிந்தொழுகல் வணிகர் குணங்களுள் ஒன்று ; இருக்கும் இடம் நோக்கி அதற்கிசைய நடத்தல் .
இடா இறைகூடை ; ஓர் அளவு .
இடாகினி காளியேவல் செய்வோள் ; சுடுகாட்டில் பிணங்களைத் தினனும் பேய் .
இடாகு புள்ளி ; குறி .
இடாகுபோடுதல் கால்நடைகளுக்குச் சூடு போடுதல் .
இடாசுதல் நெருக்குதல் ; மோதுதல் ; மேற்படுதல் ; இகழ்தல் .
இடாடிமம் காண்க : தாதுமாதுளை .
இடாதனம் யோகாசனவகை .
இடாப்பு அட்டவணை .
இடாப்புதல் காலை அகலவைத்தல் .
இடாம்பிகன் பகட்டுக்காரன் .
இடாமிடம் ஒழுங்கற்ற பேச்சு .
இடாமுடாங்கு ஒழுங்கின்மை .
இடாயம் இசைத்துறை ஐந்தனுள் ஒன்று .
இடார் இறைகூடை ; எலிப்பொறி .
இடந்தலைப்பாடு இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த இடத்தில் இரண்டாமுறை தலைவனும் தலைவியும் எதிர்ப்படுதல் .
இடநாகம் அடைகாக்கும் நல்லபாம்பு .
இடநாள் உரோகிணி , மகம் , விசாகம் , திருவோணம் முதலாக மும்மூன்று நட்சத்திரங்கள் .
இடநிலைப்பாலை பண்வகை .
இடப்படி ஓர் அடிவைப்பு .
இடப்பு பெயர்த்த மண்கட்டி ; பிளப்பு .
இடப்புக்கால் அகலவைத்த கால் .
இடப்பெயர் இடத்தைக் குறிக்கும் பெயர்ச்சொல் .
இடப்பொருள் ஏழாம் வேற்றுமைப்பொருள் .
இடபக்கொடியோன் காளைக் கொடியையுடைய சிவன் .
இடபகிரி அழகர்மலை .
இடபதீபம் கோயில் மூர்த்தியின் முன்பு எடுக்கும் அலங்கார தீபவகை .
இடபம் ஏறு ; பொலிகாளை ; நந்தி ; இரண்டாம் இராசி ; வைகாசி ; மதயானை ; முக்கியப் பொருள் ; ஏழு சுரத்துளொன்று ; செவித்துறை ; ஒரு பூண்டு .
இடபவாகனன் சிவன் .
இடபவீதி மீனம் , மேடம் , கன்னி , துலாம் என்னும் இராசிகளடங்கிய சூரியன் இயங்கும் நெறி .
இடபன் இடபசாதி மானுடன் ; உருத்திரர்களுள் ஒருவர் .
இடபி பூனைக்காலி ; ஆண்வடிவப் பெண் ; கைம்மை .
இடம் தானம் ; வாய்ப்பு ; வீடு ; காரணம் ; வானம் ; விரிவு ; இடப்பக்கம் ; அளவு ; ஆடையின் அகலமுழம் ; பொழுது ; ஏற்ற சமயம் ; செல்வம் ; வலிமை ; மூவகையிடம் ; படுக்கை ; தூரம் ; ஏழனுருபு ; இராசி .
இடம்பகம் பேய் .
இடம்படுதல் விரிவாதல் ; பரந்து இருத்தல் ; மிகுதியாதல் .
இடம்பண்ணுதல் பூசை , உணவு முதலியவற்றிற்கென்று இடத்தைத் தூய்மைசெய்தல் .
இடம்பம் பகட்டு ; தற்பெருமை .
இடம்பாடு விரிவு ; பருமை ; செல்வம் .
இடம்பார்த்தல் இடந்தேடுதல் ; சமயமறிதல் .
இடம்புதல் ஒதுங்குதல் , விலகுதல் .
இடம்புரி இடப்புறம் சுழியுள்ள சங்கு ; இடப்பக்கம் திரிந்த கயிறு ; பூடுவகை .
இடம்பூணி காண்க : இடத்துமாடு .
இடம்பெறவிருத்தல் ஓலக்கமிருத்தல் .
இடமயக்கம் ஒரு திணைக்குரிய உரிப் பொருளைப் பிறிதொரு திணைக்குரியதாகக் கூறும் இடமலைவு .
இடமலைவு ஓரிடத்துப் பொருளை மற்றோரிடத்திலுள்ளதாகச் சொல்லும் வழு .
இடமற்ற பிள்ளை நற்பேறற்ற பிள்ளை .
இடமானம் பரப்பு ; மாளிகை ; பறைவகை .
இடமிடைஞ்சல் நெருக்கடி .
இடமுடங்கு நெருக்கடி .
இடர் துன்பம் , வருத்தம் ; வறுமை .
இடர்ப்படுதல் வருத்தமுறுதல் ; நலிந்துகொள்ளுதல் .
இடர்ப்பாடு இடர்ப்படுதல் ; துன்புறுகை .
இடர்ப்பில்லம் கண்நோய்வகை .
இடரெட்டு நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை ; விட்டில் ; கிளி ; யானை ; வேற்றரசு ; தன்னரசு ; இழப்பு , பெரும் வெயில் , காற்று இவற்றால் வருவது .
இடலம் விரிவு , அகலம் .
இடலை மரவகை ; துன்பம் .
இடவகம் மா பனைகளின் பிசின் ; இலவங்கம் .
இடவகை வீடு , இல்லம் .
இடவயின் இடத்து .
இடவழு தன்மை முதலிய மூவகையிடங்களைப் பிறழக் கூறுகை .
இடவன் மண்ணாங்கட்டி ; நுகத்தின் இடப்பக்கத்து மாடு ; கூட்டெருது ; பிளக்கப்பட்ட பொருள் .
இடவாகுபெயர் இடப்பெயர் அவ்விடத்துள்ள பொருளுக்கு ஆவது .
இடவிய பரந்துள்ள ; வேகமாக ; சார்ந்த .
இடவியது அகலமுள்ளது ; விரைவுள்ளது .
இடவை வழி ; பாதை .
இடவோட்டம் இராகுகேதுக்களின் இடப்பக்கமாகச் செல்லும் போக்கு .
இடவோட்டு நாள் காண்க : இடநாள் .
இடற்சம் செம்போத்து .
இடது இடப்புறமான .

சொல்
அருஞ்சொற்பொருள்
இடியாப்பம் சிற்றுண்டிவகை .
இடியம்பு காண்க : இடிகொம்பு .
இடியல் பிட்டு .
இடியேறு பேரிடி .
இடிவு அழிவு ; இடிந்து விழுகை .
இடுக்கடி துன்பம் .
இடுக்கண் மலர்ந்த நோக்கமின்றி மையல் நோக்கம்பட வரும் இரக்கம் ; துன்பம் ; வறுமை .
இடுக்கணழியாமை துன்பக் காலத்து மனங்கலங்காமை .
இடுக்கணி இடுக்கான இடம் .
இடுக்கம் ஒடுக்கம் ; துன்பம் ; நெருக்கம் ; வறுமை .
இடுக்கல் சந்து .
இடுக்காஞ்சட்டி விளக்குத் தகழி .
இடுக்கி குறடு ; எலிப்பொறி ; கடும்பற்றுள்ளன் ; நண்டு முதலியவற்றின் கவ்வும் உறுப்பு .
இடுக்கிச்சட்டம் கம்பிச்சட்டம் .
இடுக்கிடை நெருக்கம் .
இடுக்கு முடுக்கு : மூலை ; இடுக்கிக் கொள்ளக்கூடிய இடம் ; கவ்வும் உறுப்பு ; சங்கடம் ; இவறல் .
இடுக்குத்தடி கள்ளூறும்படி பாளையை நெருக்கிப் பிடிக்கவைக்கும் இரட்டைத் தடி .
இடுக்குத் திருத்துழாய் திருமால் கோயிலில் மரியாதையாகத் திருவடிநிலையினிடையில் வைத்துக் கொடுக்கும் துளசி .
இடுக்குதல் கவ்வுதல் ; அணைத்தல் ; நெருக்குதல் .
இடுக்குப்பனை கள்ளும் பதநீரும் உண்டாக்கும் பனை .
இடுக்குப்பிள்ளை கைக்குழந்தை .
இடுக்குப்பொட்டணி கக்கப்பாளம் , கக்கத்தில் இடுக்கிச் செல்லத்தக்க பொருள் .
இடுக்குமரம் கடவை மரம் , வேலித்திறப்பில் தாண்டிச் செல்லக்கூடிய தடைமரம் ; செக்குவகை .
இடுக்குமுடுக்கு மூலைமுடுக்கு ; முட்டுச்சந்து ; சங்கடம் .
இடுக்குவழி சந்து வழி , மிகக் குறுகலான பாதை .
இடுக்குவாசல் சிறு நுழைவாசல் , திட்டிவாசல் .
இடுக்குவார் கைப்பிள்ளை காண்க : எடுப்பார் கைப்பிள்ளை .
இடுகடை பிச்சையிடும் வீட்டுவாயில் .
இடுகளி அதிமதுரத் தழை முதலியவற்றை யானைக்கு இடுதலால் அதற்கு உண்டாகும் மதம் .
இடுகறல் விறகு .
இடுகாடு பிணம் புதைக்கும் இடம் ; சுடுகாடு ,
இடுகால் பீர்க்கு .
இடுகிடை சிற்றிடை ; சிறுவழி .
இடுகு ஒடுக்கம் .
இடுகுதல் ஒடுங்குதல் ; சிறுகுதல் ; சுருங்குதல் .
இடுகுறி இடுகுறிப்பெயர் ; பெற்றோர் இடும் பெயர் ; முற்காலத்தில் நெல்லைச் சேமித்துவைக்கும்படியாக ஒருவரிடம் ஒப்புவிக்கும் பத்திரம் .
இடுகுறிப்பெயர் காரணம் பற்றாது வழங்கி வரும் பெயர் .
இடாரேற்றுதல் எலிப்பொறியைத் தயார் செய்து வைத்தல் .
இடால் கத்தி .
இடாவு காணக : இடைகலை .
இடாவேணி அளவிடப்படாத எல்லை .
இடி தாக்குகை ; மா ; சிற்றுண்டி ; பொடி ; இடியேறு ; பேரொலி கழறுஞ்சொல் ; குத்து நோவு ; அக்கினி ; உறுதிச்சொல் ; ஆட்டுக்கடா .
இடிக்கடை காண்க : இடுக்கடி .
இடிக்கொடியோன் இடியைக் கொடியாகவுடைய இந்திரன் .
இடிக்கொள்ளு காட்டுக்கொள் .
இடிகம் காண்க : பெருமருந்து .
இடிகரை ஆறு முதலியவற்றின் அழிந்த கரை .
இடிகொம்பு கழியில் அடித்துள்ள அதிர்வேட்டுக் குழாய் .
இடிச்சக்கை பலாப்பிஞ்சு .
இடிச்சொல் உறுதிச்சொல் .
இடிசல் நொறுங்கின தானியம் ; அழிவு ; நொய்யரிசி .
இடிசாந்து இடித்துத் துவைத்த சுண்ணாம்பு .
இடிசாபம் கெடுகாலம் ; நிந்தை .
இடிசாமம் கெடுகாலம் ; நிந்தை .
இடிஞ்சில் காண்க : இடுக்காஞ்சட்டி .
இடித்தடு பிட்டு .
இடித்தல் முழங்குதல் ; இடியிடித்தல் ; நோதல் ; தாக்கிப்படுதல் ; மோதுதல் ; கோபித்தல் ; தூளாக்குதல் ; தகர்த்தல் ; நசுக்குதல் ; தாக்குதல் ; முட்டுதல் ; கழறிச் சொல்லுதல் ; கொல்லுதல் ; தோண்டுதல் ; கெடுத்தல் .
இடித்துக்கூறல் உறுதிச் சொல்லுரைத்தல் .
இடித்துரை கழறிக் கூறுஞ்சொல் , உறுதிச் சொல் .
இடிதல் தகர்தல் ; உடைதல் ; சரிதல் ; கரையழிதல் ; திகைத்தல் ; முனை முரிதல் ; வருந்துதல் .
இடிதலைநோய் நோய்வகை .
இடிதாங்கி கட்டடத்தின்மீது இடி விழாதபடி காக்கவைக்கும் காந்தக்கம்பி .
இடிப்பணி குறிப்புரை .
இடிப்பு இடி ; ஒலி ; வீரமுழக்கம் .
இடிபடுதல் நெருக்கப்படுதல் ; தாக்கப்படுதல் ; நொறுங்குதல் ; வெடிபடுதல் ; துன்பப்படுதல் .
இடிபூரா வெள்ளைச் சருக்கரை .
இடிம்பம் கைக்குழந்தை ; பெருந்துன்பம் ; மண்ணீரல் ; பறவை முட்டை ; ஆமணக்கு .
இடிம்பு அவமதிப்பு ; இழிவு .
இடிமரம் உலக்கை ; அவல் இடிக்கும் ஏற்றவுலக்கை .
இடிமருந்து சூரணமருந்து .
இடிமாந்தம் பொய்யான குற்றச்சாட்டு .
இடிமீன் மீன்வகை .
இடிமுழக்கம் இடியொலி .
இடிமேலிடி மாட்டுக்குற்றம் ; துன்பத்திற்கு மேல் துன்பம் .
இடியப்பம் சிற்றுண்டிவகை .
சொல்
அருஞ்சொற்பொருள்
இடைச்சொல் பெயர்வினைகளைச் சார்ந்து வழங்கும் சொல் .
இடைச்சொற்பகாப்பதம் நால்வகைப் பகாப்பதங்களுள் ஒன்று ; மற்று , ஏ , ஓ என்பனபோல வருவது .
இடைச்சோழகம் தென்றல் வீசும் பருவத்தின் இடைக்காலம் .
இடைசுருங்குபறை துடி , உடுக்கை .
இடைசூரி அரும்பு வளையம் ; உருத்திராக்கம் முதலியவற்றின் இடையில் கோக்கும் மணி .
இடைஞ்சல் நெருக்கம் ; தடை ; இடையூறு .
இடைத்தட்டு இடைக்கொள்ளை .
இடைத்தரம் நடுத்தரம் .
இடைத்தீனி சிற்றுண்டி .
இடைத்தொடர்க் குற்றுகரம் இடையின வொற்றைத் தொடர்ந்து வரும் குற்றியலுகரம் .
இடைதல் சோர்தல் ; மனந்தளர்தல் ; பின்வாங்குதல் ; விலகுதல் ; தாழ்தல் ; பூமி ; சீலை .
இடைதெரிதல் செவ்வியறிதல் , தக்க சமய மறிதல் .
இடுநெறி புதியநெறி .
இடுப்பு இடை ; அரை ; ஒக்கலை ; மறைவுறுப்பு .
இடுப்புக்கட்டுதல் சண்டை பிடிக்க முந்துதல் .
இடுப்புவலி இடுப்பு நோவு ; மகப்பேற்றின் போது உண்டாகும் வலி .
இடுபலம் பேய்ப்புடல் .
இடுபெயர் இடுகுறிப்பெயர் ;
இடுபொருள் பிறர் வரவிட்ட பொருள் .
இடும்பர் ஒருவகைச் சாதியார் ; இராக்கதர் ; செருக்கர் ; துயர் செய்வோர் .
இடும்பன் செருக்குள்ளவன் ; ஓர் அரக்கன் ; முருகக் கடவுளின் கணத் தலைவன் .
இடும்பி செருக்குடையவள் ; ஓர் அரக்கி .
இடும்பு அகந்தை ; கொடுஞ்செயல் ; குறும்பு .
இடும்பை துன்பம் ; தீமை ; நோய் ; வறுமை ; அச்சம் .
இடுமம் குயவன் சக்கரத்தை பூமியில் பொருத்துதற்கு இடும் மண்கட்டி .
இடுமயிர் சவுரிமயிர் .
இடுமருந்து ஒருவரைத் தன்வயமாக்கும் மருந்து ; வசிய மருந்து .
இடுமுள் வேலியாக இடும் முள் .
இடுமோலி ஒருவகை மரம் .
இடுலி பெண்ணாமை .
இடுவந்தி குற்றம் செய்யாதவர்மேல் குறறத்தைச் சுமத்துதல் .
இடுவல் இடுக்கு ; வழி .
இடுவை சந்து .
இடை நடு ; மத்திய காலம் ; அரை ; மத்திய தரத்தார் ; இடைச்சாதி ; இடையெழுத்து ; இடைச்சொல் ; இடம் ; இடப்பக்கம் ; வழி ; தொடர்பு ; சமயம் ; காரணம் ; நீட்டல் அளவையுள் ஒன்று ; துன்பம் ; இடையீடு ; தடுக்கை ; தச நாடியுள் ஒன்று ; பூமி ; எடை ; நூறு பலம் ; பொழுது ; நடுவுநிலை ; வேறுபாடு ; துறக்கம் ; பசு ; வாக்கு ; ஏழனுருபு .
இடைக்கச்சு அரைக்கச்சை .
இடைக்கச்சை அரைக்கச்சை .
இடைக்கட்டு அரைக்கச்சு ; ஓர் அணிகலன் ; இடைகழி ; வீட்டின் நடுக்கட்டு ; சமன் செய்வதற்குரிய நிறை .
இடைக்கணம் இடையினவெழுத்துகள் .
இடைக்கருவி 'சல்லி ' என்னும் தோற்கருவி ; மத்தளத்திற்கும் உடுக்கைக்கும் இடைத்தரமான ஒலியுள்ளது .
இடைக்கலம் மட்பாண்டம் .
இடைக்கார் நெல்வகை .
இடைக்காற்பீலி பரதவ மகளிர் அணியும் கால்விரல் அணிவகை .
இடைக்கிடப்பு இடைப்பிறவரல் .
இடைக்கிடை ஊடேயூடே , நடுநடுவே , ஒன்றைவிட்டு ஒன்று ; நிறைக்கு நிறை .
இடைக்குலநாதன் இடையர்களின் தலைவன் ; கண்ணன் .
இடைக்குழி இடை எலும்பு இரண்டுக்கும் இடையிலுள்ள பள்ளம் .
இடைக்குறை தனிச்சொல்லின் இடைநின்ற எழுத்துக் குறைந்து வரும் செயயுள் விகாரம் ; ஆற்றிடைக் குறை .
இடைக்கொள்ளை ஊடுதட்டு ; நடுக்கொள்ளை ; கொள்ளைநோயால் வரும் அழிவு .
இடைகலை தச நாடியுள் ஒன்று ; இட மூக்கால் வரும் மூச்சு ; சந்திரகலை .
இடைகழி இடைக்கட்டு ; வெளிவாயிலை அடுத்த உள்ளிடப் பாதை .
இடைச்சம்பவம் தற்செயல் .
இடைச்சரி தோள்வளை .
இடைச்சன் இடையிலே பிறந்தவன் ; இரண்டாம் பிள்ளை .
இடைச்சனி பூரநாள் .
இடைச்சி முல்லைநிலப் பெண் ; இடைச் சாதிப் பெண் ; இடுப்புடையவள் .
இடைச்சியார் இடைச்சியின்மேல் காமம் பற்றிச் பாடும் கலம்பக உறுப்பு .
இடைச்சீலை திரைச்சீலை .
இடைச்சுரிகை உடைவாள் .
இடைச்சுவர் இரண்டு சுவர்களுக்கு மத்தியில் உள்ள சுவர் ; இடையூறு .
இடைச்செருகல் ஒருவருடைய செய்யுள் நூலின் பிறர் வாக்கைப் புகுத்தல் ; ஒருவருடைய படைப்பை இடையிடையே மாற்றியமைத்தல் .
இடைச்செறி குறங்குசெறி' என்னும் அணி வகை ; துணைமோதிரம் .
இடைச்சேரி இடையர் குடியிருப்பு .
இடுகுறிமரபு இடுகுறியாகத் தொன்றுதொட்டு வரும் பெயர் .
இடுகுறியாக்கம் இடுகுறியாக ஒருவன் கொடுத்த அல்லது ஆக்கிக்கொண்ட பெயர் .
இடுகை ஈகை , கொடை .
இடுங்கலம் கொள்கலம் , குதிர் .
இடுங்கற்குன்றம் செய்குன்று .
இடுங்குதல் உள்ளொடுங்குதல் ; சுருங்குதல் .
இடுசிவப்பு செயற்கைச் சிவப்பு .
இடுதங்கம் புடமிட்ட தங்கம் ; இழைப்புத் தங்கம் .
இடுதண்டம் அபராதம் .
இடுதல் வைத்தல் ; போகடுதல் ; பரிமாறுதல் ; கொடுத்தல் ; சொரிதல் ; குத்துதல் ; அணிவித்தல் ; உவமித்தல் ; குறியிடுதல் ; ஏற்றிச்சொல்லுதல் ; சித்திரமெழுதுதல் ; உண்டாக்குதல் ; முட்டையிடுதல் ; கைவிடுதல் ; புதைத்தல் ; பணிகாரம் முதலியன உருவாக்குதல் ; தொடுத்துவிடுதல் ; செய்தல் ; தொடங்குதல் ; வெட்டுதல் ; ஒரு துணைவினை .
இடுதி அம்புக் கூடு .
இடுதிரை திரைச்சீலை .
இடுதேளிடுதல் பொய்க்காரணங் காட்டிக் கலங்கப்பண்ணுதல் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;