கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

சனி, 4 மே, 2013

அகராதி,-இ

சொல்
அருஞ்சொற்பொருள்
இடையறவு இடைவிடுதல் ; நடுவே தொடர்பு விட்டுப்போதல் .
இடையறாமை இடைக்காலத்து அழியாமை ; இடையீடின்றி இருத்தல் .
இடையறுத்தல் படை முதலியவற்றை ஊடறுத்துச் சென்று பரித்தல் .
இடையறுதல் நடுவே முடிந்துபோதல் ; தடைப்படுதல் .
இடையன் ஆடுமாடு மேய்ப்பவன் ; முல்லை நிலத்தவன் ; இடைச் சாதியான் .
இடையன்கால்வெள்ளி பரணி .
இடையாகெதுகை அடிதோறும் முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாம் எழுத்து ஒன்றே ஒன்றிவரத் தொடுப்பது .
இடையாட்டம் காரியம் , செயல் .
இடையாந்தரம் நடு ; இடைப்பட்ட காலம் அல்லது இடம் .
இடையாயார் மத்திமர் , நடுத்தரமானவர் .
இடையிட்டுமொழிதல் தவம் செய்வார்க்குரிய நியமங்கள் எட்டனுள் ஒன்று .
இடையிடுதல் இடையில் நிகழ்தல் ; இடையில் ஒழிதல் ; நடுவில் இடுதல் ; மறித்தல் .
இடையிடை ஊடேயூடே , நடுநடுவே .
இடையியற்சொல் உலக வழக்கினும் செய்யுள் வழக்கினும் தன் பொருளைத் தெற்றென விளக்கும் இடைச்சொல் .
இடையினம் காண்க : இடைக்கணம் .
இடையினமோனை இடையினத்துள் யகர வகரங்கள் ஒன்றற்கொன்று மோனையாக வருதல் .
இடையினவெதுகை இடையினத்துள் வந்த எழுத்தன்றி அவ்வினத்து வேறெழுத்து இரண்டாமெழத்தாய் நிற்கவரும் எதுகை .
இடையீட்டெதுகை ஒவ்வோரடி இடையிட்டு வரும் எதுகை .
இடையீடு இடையில் தோன்றுவது ; குறுக்கீடு ; வேறுபாடு ; சமாதானம் ; நடுவே விடுகை ; அரசாங்க உரிமையாயிருந்து பிறருக்கு மாற்றப்படும் நிலம் .
இடையுவா முழுமதி .
இடையூறு இடர் , துன்பம் .
இடையூறுகிளத்தல் அகப்பொருளில் தலைவி நாணிக் கண் புதைத்ததனால் உண்டான துன்பத்தைத் கூறுதல் .
இடையெடுத்தல் நிறுத்துப் பார்த்தல் ; உறுதிப்படுதல் .
இடையெண் முச்சீர் ஓரடியாய் வரும் அம்போதரங்க வகை .
இடையெழுஞ்சனி பூரநாள் .
இயையெழு வள்ளல்கள் இடைக்காலத்து வாழந்த கொடையாளிகள் ; அவராவார் ; அக்குரன் , சந்திமான் , அந்திமான் , சிசுபாலன் , வக்கிரன் , கன்னன் , சந்தன் .
இடையொடிவு முடிவு நெருங்குமுன்னே இடையில் அழிந்துபடுகை .
இடையொடு கடைமடக்கு ஓர் அணி .
இடையொத்து தாளவகை .
இடைவட்டை நடுவிலுள்ளது .
இடைவண்ணம் இசைவகை .
இடைவரி வரிவகை ; நிறைக்காக வாங்கும் வரி .
இடைவழக்காளி வாதி பிரதிவாதிகளுக்கு இடையில் தனி வழக்குக் கொண்டுவருவோன் .
இடைவழக்கு வழக்கின் நடுவே பிறரால் கொண்டுவரப்படும் விவகாரம் .
இடைவழி செல்லும் வழியின் நடுவிடம் ; பாதிவழி ; வெளிவாயிலையடுத்த இடைகழி .
இடைவிடாமல் ஓயாமல் ; எப்போதும் .
இடைவிடுதல் நடுவில் ஒழிதல் .
இடைவிலக்கல் நடுவிலே வந்து தடுத்தல் .
இடைவீடு நடுவில் விட்டுவிடுகை .
இடைவு தோல்வி ; நீக்கம் ; வெளி .
இடைவெட்டிலே தற்செயலாய் .
இடைநரை அங்கும் இங்கும் சிறிது மயிர் வெளுத்திருத்தல் .
இடைநாடி காண்க : இடைகலை .
இடைநாழிகை கோயிலில் அர்த்த மண்டப மகாமண்டபங்கட்கு இடைப்பட்ட இடம் .
இடைநிகராதல் நடுத்தரமான நிலையிலிருத்தல் .
இடைநிலை நடுவில் நிற்கை ; பெயர் வினைகளில் பகுதி விகுதிகளுக்கு இடையில் நிற்கும் ஓர் உறுப்பு ; எச்சம் முதலியன கொண்டு முடியும் சொற்களின் இடையில் ஏற்ற பிறசொல் வருகை .
இடைநிலைத்தீவகம் விளக்கணி வகை ; செய்யுளின் இடையில் வரும் ஒரு சொல் முன்பின் வரும் சொற்களோடு இயைந்து பொருள் தருவது .
இடைநிலைப்பாட்டு தாழிசை ; கலிப்பாவின் ஓர் உறுப்பு .
இடைநிலை மயக்கு சொல்லினகத்து வரும் மெய்யெழுத்துகள் ஒன்றோடு ஒன்று கூடும் கூட்டம் ; உடனிலை , வேற்றுநிலை என இருவகைத் தாம் .
இடைநிலை மெய்ம்மயக்கு சொல்லினகத்து வரும் மெய்யெழுத்துகள் ஒன்றோடு ஒன்று கூடும் கூட்டம் ; உடனிலை , வேற்றுநிலை என இருவகைத் தாம் .
இடைநிலை விளக்கு காண்க : இடைநிலைத் தீவகம் .
இடைநீரினிற்றல் நிலைக்குத்தாய் நீந்துதல் .
இடைநேரம் சிற்றுண்டி கொள்ளும் சமயம் ; ஒரு நிகழ்ச்சியின் இடையில் விடப்படும் ஓய்வு நேரம் .
இடைப்படி ஓர் அளவு .
இடைப்படுதல் மையமாதல் ; இடையில் நிகழ்தல் .
இடைப்படுதானம் மத்திமதானம் ; இடைத்தரமான கொடை .
இடைப்பழம் காய்க்குலையில் இடையிடையே பழுத்திருப்பது .
இடைப்பாட்டம் பழைய வரிவகை .
இடைப்பால் ஆடலரங்கிற்குரிய நிலம் .
இடைப்பிறவரல் எழுவாய் முதலியன கொண்டு முடியும் பெயர் வினைகளினிடையில் ஏற்ற பிறசொல் வருதல் .
இடைப்புணரளபெடை நடுவிரு சீர்க்கண்ணும் அளபெடை வருவது .
இடைப்புழுதி காய்ந்தும் காயாமலுமுள்ள புழுதிநிலம் .
இடைப்பூட்சி காண்க : இடைப்பாட்டம் .
இடைப்பூட்டு அரைக்கச்சு .
இடைப்போகம் இடைக்காலத்து விளைவு .
இடைபாடு அலுவல் ; வணிகம் முதலியவற்றின் நிமித்தமாக இருவரிடை நிகழும் செய்தி .
இடைமகன் இடையன் .
இடைமடக்கு பேச்சினடுவே தடுக்கை ; மடக்கணி வகை .
இடைமடுத்தல் இடைச்செருகுதல் , இடையிலே புகுத்துதல் .
இடைமருது திருவிடைமருதூர் .
இடைமிடைதல் நடுவே கலத்தல் .
இடைமுள் புண்ணிலே தோன்றும் மறுமுள் ; கரப்பான் வகை .
இடைமேடு இடையிடையே சிறிது மேடான பாகமுள்ள வயல் .
இடைமை காண்க : இடைக்கணம் .
இடையல் பின்னிடல் ; தாழல் ; ஒதுங்குதல் ; வருந்தல் .       

சொல்
அருஞ்சொற்பொருள்
இணையணை பலவான அணை .
இணையல் இணைதல் , சேர்தல் .
இணையளபெடை முதலிரு சீரினும் அளபெடை இயைந்து வரும் தொடை .
இணையாவினைக்கை ஒரு கையால் புரியும் அபிநயம் .
இணையியைபு ஓரடியின் ஈற்றுச் சீர் இரண்டும் இணைந்து வரும் தொடை .
இணையீரோதி கடையொத்த நெய்ப்பினையுடைய கூந்தல் .
இணையெதுகை ஓரடியின் முதலிரு சீரினும் எதுகை இயைந்து வரும் தொடை .
இணையெழுத்து போலியெழுத்து .
இணைவன் இணைந்திருப்பவன் .
இணைவிழைச்சி புணர்ச்சி .
இணைவிழைச்சு புணர்ச்சி .
இணைவு ஒன்றிப்பு ; கலப்பு ; புணர்ச்சி .
இத்தனை இவ்வளவு ; சில .
இத்தால் இதனால் .
இத்தி கல்லால மரம் ; கல்லித்தி மரம் ; பூனை .
இண்டிகன் சிறைச்சாலையின் வெளிப்புறம் காப்போன் ; சோதிடன் .
இண்டிடுக்கு சந்துபொந்து .
இண்டிறுக்கெனல் குறட்டைவிடுங் குறிப்பு .
இண்டு கொடிவகை ; தொட்டாற்சுருங்கி ; செடிவகை ; புலித்தொடக்கி .
இண்டை தாமரை ; மாலை வகை ; கொடி வகை ; புலிதொடக்கி ; தொட்டாற்சுருங்கி ; ஆதொண்டை .
இண்டைச்சுருக்கு மாலைவகை .
இணக்கம் இசைப்பு ; பொருத்தம் ; நட்பு ; சம்மதம் ; திருத்தம் .
இணக்கு இசைவு ; உடன்பாடு .
இணக்குதல் உடன்படுத்தல் .
இணக்குப்பார்வை பார்வை விலங்கு .
இணக்கோலை உடன்படிக்கைப் பத்திரம் .
இணகு உவமை .
இணங்கர் ஒப்பு .
இணங்கல் உடன்படுதல் ; பொருந்தல் ; செட்டிமார் வழக்கில் 'எட்டு' என்னும் எண் .
இணங்கலர் பகைவர் .
இணங்கன் நண்பன் ; வெடியுப்பு .
இணங்கார் காண்க : இணங்கலர் .
இணங்கி தோழி .
இணங்கு இணக்கம் ; ஒப்பு ; பேய் ; நண்பினன்(ள்) .
இணங்குதல் உடன்படுதல் ; மனம் பொருந்துதல் .
இணர் பூங்கொத்து ; பூ ; பூவிதழ் ; பூந்தாது ; சுடர் ; குலை ; ஒழுங்கு ; தொடர்ச்சி ; கிச்சிலி மரம் ; மாமரம் .
இணர்தல் நெருங்குதல் ; விரிதல் .
இணரோங்குதல் வழிவழியாக உயர்தல் .
இணாட்டு மீன் செதிள் ; ஓலைத்துண்டு .
இணாப்புதல் ஏய்த்தல் , ஏமாற்றுதல் .
இணி எல்லை ; ஏணி ; கண்ணாறு .
இணுக்கு கைப்பிடியளவு ; வளார் ; கிளை முதலியவற்றின் இடைச்சந்து ; அழுக்கு .
இணக்குதல் இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் .
இணங்குதல் இசித்தல் ; பறித்தல் ; கிளையிலுள்ள தளிர் முதலியவற்றை உருவிப் பறித்தல் .
இணை இசைவு ; ஒப்பு ; இரட்டை ; உதவி ; கூந்தல் ; எல்லை ; இணைத் தொடை .
இணை (வி) சேர் ; கூட்டு .
இணைக்கயல் இரண்டு கொண்டைமீன்களின் வடிவாக உள்ளது ; எட்டு மங்கலங்களுள் ஒன்று ; மச்சரேகை .
இணைக்கல்லை இரண்டு இலைகளால் தைக்கப்பட்ட உண்கலம் .
இணைக்குறள் ஆசிரியப்பா ஈற்றடியும் முதலடியும் அளவடியாக இடையடிகள் பல குறளடியானும் சிந்தடியானும் வரும் அகவற்பாட்டு .
இணைக்கை இரண்டு கைகளால் புரியும் அபிநயம் .
இணைக்கொடைப் பொருள் திருமணக் காலத்தில் மணமக்களுக்கு உற்றார் , நண்பர் முதலியோர் கொடுக்கும் பொருள் .
இணைக்கோணத்தடை மூக்கிரட்டை இலை' எனப் பொருள்படும் ஒரு குறிப்புமொழி .
இணைக்கோணம் மூக்கிரட்டை .
இணைத்தகோதை இதழ்பறித்துக் கட்டின மாலை .
இணைத்தல் சேர்த்தல் ; கட்டுதல் ; தொடுத்தல் .
இணைத்தொடை அளவடியுள் முதலிரு சீர்க்கண்ணும் மோனை முதலாயின வரத் தொடுப்பது .
இணைத சேர்தல் ; ஒத்தல் ; இசைதல் .
இணைப்படம் இரண்டுபுறமும் ஒத்த படம் .
இணைப்பு இசைப்பு ; சேர்ப்பு ; ஒப்பு .
இணைபிரியாமை விட்டுப்பிரியாதிருக்கை .
இணைமட்டப்பலகை இரட்டைக்கோடு காட்டும் கருவி .
இணைமணிமாலை பிரபந்த வகை ; வெண்பா அகவல் இணைந்தோ , வெண்பா கட்டளைக் கலித்துறை இணைந்தோ நூறு பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறு நூல்வகை .
இணைமுரண் ஓரடியின் முதலிரு சீரும் முரண்பட இணைந்து வரும் தொடை .
இணைமோனை ஓரடியின் முதலிரு சீரினும் மோனை இயைந்து வரும் தொடை .
இணையசை நிரையசை .
இணையடிகால் முட்டுக்கால் , மாட்டுக் குற்றவகை .
இணையடித்தல் முட்டுக்கால் தட்டுதல் .
இடைவெட்டு இடையிலே பெற்ற பொருள் ; நடுவிலே வந்த பொருள் .
இடைவெட்டுப் பணம் மாற்று முத்திரை விழுந்த பணம் ; வேறு வழியாகக் கிடைத்த இலாபம் .
இடைவெட்டுப் பேச்சு நிந்தனை ; பரிகாச வார்த்தை .
இடைவெளி நடுவெளி ; வெளிப்பரப்பு ; பிளப்பு .
இண்டஞ்செடி செடிவகை .
இண்டம்பொடி சவ்வரிசி நொய் .
இண்டர் இடையர் ; சுற்றம் ; சண்டாளர் .
இண்டனம் விளையாட்டு ; புணர்ச்சி ; ஊர்தி .

சொல்
அருஞ்சொற்பொருள்
இந்தப்படிக்கு காண்க : இப்படிக்கு .
இந்தம் புளியமரம் ; விறகு .
இந்தம்வரம் காண்க : இந்தீவரம் .
இந்தளங்குறிஞ்சி ஒரு பண் .
இந்தளம் மருத யாழ்த்திறவகை ; தூபமுட்டி , கும்மட்டிச் சட்டி .
இந்தனம் விறகு ; புகை .
இந்தனோடை மேலாடை .
இந்தா 'இதோ' , 'இங்கே வா' என்னும் குறிப்பு மொழி இதை வாங்கிக் கொள் ' என்னும் குறிப்பு மொழி .
இந்தி பூனை ; திருமகள் ; இந்திய மொழிகளுள் ஒன்று ; இந்தியத் தேசிய மொழி .
இந்திகை அபரநாதசத்திகள் ஐந்தனுள் ஒன்று .
இந்திகோபம் ஈயம் .
இந்திடம் இவ்விடம் .
இந்தியம் காண்க : இந்திரியம் .
இந்தியன் இந்திய நாட்டைச் சேர்ந்தவன் .
இந்தியா பரதகண்டம் .
இந்திரகணம் செய்யுட் கணத்துள் ஒன்று ; முதற் செய்யுளின் முதற் சீரைத் தேமாங்காய் வாய்பாடாகப் பாடுவது .
இந்திரகம் சபாமண்டபம் .
இந்திரகாந்தச் சேலை புடைவைவகை .
இந்திரகெந்தம் காண்க : இந்திரசுகந்தம் .
இந்திரகோடணை இந்திரவிழா .
இந்திரகோபம் தம்பலப்பூச்சி .
இந்திரசாபம் இந்திரனுடைய வில் ; வானவில் .
இந்திரசாலம் மாயவித்தை ; அற்புதங்களைக் காட்டும் கண்கட்டு வித்தை ; ஏய்ப்பு .
இந்திரசாலி அழிஞ்சில் ; இந்திரசால வித்தைக்காரன் .
இத்திநடையம் நத்தை .
இத்தியாதி இவை முதலானவை .
இத்துணை இவ்வளவு .
இத்துமம் வசந்தம் ; விறகு ; ஒருவகைச் சுள்ளி ; காமம் .
இத்து காமாட்சிப்புல் .
இத்துரா காமாட்சிப்புல் .
இத்துவரம் எருது .
இத்துவரன் கயவன் , தீயோன் , வழிச்செல்வோன் ; வறியன் .
இத்தை முன்னிலை அசைச்சொல் ; இதனை .
இதக்கை பனங்காயின் தலையிலுள்ள தோடு ; செவுள் .
இதசத்துரு வெளிநட்புக் காட்டும் பகைவன் .
இதஞ்சொல்லுதல் புத்தி கூறுதல் .
இதடி பெண்ணெருமை ; நீர் .
இதண் காவற்பரண் .
இதணம் காவற்பரண் .
இதம் இன்பமானது ; நன்மை ; இதயம் ; இது ; ஞானம் .
இதமித்தல் இதஞ்செய்தல் ; பற்றுச்செய்தல் .
இதமியம் இன்பம் ; இதப்படுதல் ; இனிமை ; மனநிறைவு .
இதயகமலம் உள்ளத்தாமரை .
இதயபதுமம் உள்ளத்தாமரை .
இதயம் இருதயம் ; மனம் ; மார்பு ; நஞ்சு .
இதயவாசனை அணிவகை .
இதரம் வேறு ; பகை ; கீழ்மை .
இதரவிதரம் உவமைகளுள்ள இரண்டு வாக்கியங்களுள் முதலாவதன் உபமேய உபமானங்கள் முறையே இரண்டாவதன் உபமான உபமேயங்களாகத் தொடர்ந்து வருமாறு இரண்டு வாக்கியமாகச் சொல்லப்படும் ஒருவகையணி .
இதரன் அன்னியன் ; பாமரன் ; கீழ்மகன் .
இதரேதரம் காண்க : இதரவிதரம் .
இதரேதராச்சிரயம் அன்னியோன்னியாச்சிரயம் , ஒன்றனை ஒன்று பற்றிநிற்றல் என்னும் குற்றம் .
இதல் கவுதாரி ; காடை ; சிவல் .
இதலை கொப்பூழ் .
இதவிய நன்மையான .
இதவு இதம் ; நன்மை .
இதழ் பூவின் தோடு ; உதடு ; கண்ணிமை ; பனையேடு ; மாலை ; பாளை ; சாதிபத்திரி ; கதவின் இலை ; புத்தகத்தின் தாள் ; ஓரிதழ்த் தாமரை .
இதழ்குவிதல் மலர் கூம்புதல் ; இமைகூடுதல் ; மேலுதடும் கீழுதடும் குவிந்து நிற்றல் .
இதழ்விள்ளல் பேசல் ; மலர்தல் ; வாய்திறத்தல் .
இதழலர்தல் பேச வாய்திறத்தல் .
இதழி கொன்றை .
இதள் பாதரசம் .
இதளை கொப்பூழ் .
இதன் நன்மையுள்ளவன் .
இதா இங்கே பார் .
இதோ இங்கே பார் .
இதாகிதம் (இதம்-அகிதம்) நன்மை தீமை .
இதாசனி சுகாசனத்தில் இருப்பவன் .
இதி இறுதி ; பேய் ; உறுதி ; ஒளி .
இதிகாசம் பழங்காலத்துச் சரித்திரம் ; இராமாயண பாரதங்கள் போன்றவை ; ஐதிகப் பிரமாணம் ; அறிவு ; எடுத்துக்காட்டு ; மேற்கோள் .
இது அஃறிணை ஒருமை அண்மைச் சுட்டுப் பெயர் ; இந்த .
இதை கப்பற்பாய் ; காராமணி ; கலப்பை ; புதுக்கொல்லை .
இதோபதேசம் நல்லறிவூட்டல் ; ஒரு நூல் .
இதோள் இவ்விடம் .
இதோளி இவ்விடம் .
இந்த அண்மைப் பொருளைச் சுட்டுஞ் சொல் .

சொல்
அருஞ்சொற்பொருள்
இந்திரன்மைந்தன் சயந்தன் ; அருச்சுனன் ; வாலி .
இந்திரன்திசை கீழ்த்திசை .
இந்திரன் நாள் கேட்டை .
இந்திரனூர் பொன்னாங்காணி .
இந்திரா திருமகள் .
இந்திராக்கம் குதிரைச் செவியின் அடியில் காணப்படும் சுழிவகை .
இந்திராணம் நொச்சி .
இந்திராணி இந்திரன் மனைவி ; ஏழு மாதருள் ஒருத்தி ; நொச்சி ; சுரதவகை .
இந்திராணிகாணி பொன்னாங்காணி .
இந்திராபதி திருமால் .
இந்திரி கிழக்கு ; செடிவகை ; நன்னாரி .
இந்திரியக் காட்சி ஆன்மா , பொறி பூதங்களுடனே கூடி வேறுபாடின்றித் தெளிவாய் அறியும் அறிவு .
இந்திரியக்கொடி சுண்டி .
இந்திரியகிராமம் ஐம்பொறிக் கூட்டம் .
இந்திரியகோசரம் புலனுக் கெட்டியது .
இந்திரியஞானம் காண்க : இந்திரியக் காட்சி .
இந்திரியநிக்கிரகம் பொறியடக்கம் .
இந்திரியநுகர்ச்சி ஐம்புல நுகர்ச்சி .
இந்திரியம் பொறி ; சுக்கிலம் .
இந்திரியவம் வெட்பாலையரிசி .
இந்திரியவொழுக்கு சுக்கிலம் தானே வெளிப்படும் நோய் .
இந்திரேபம் வெட்பாலை என்னும் மரவகை .
இந்திரேயம் பாவட்டைச் செடி .
இந்திரை திருமகள் ; கடாரை ; நாரத்தை ; அரிதாரம் .
இந்திரைக்கு மூத்தாள் இலக்குமியின் தமக்கை , மூதேவி .
இந்தீவரம் கருங்குவளை ; கருநெய்தல் .
இந்து சந்திரன் ; கருப்பூரமரம் ; மிருகசீரிடம் ; இந்துப்பு ; சிந்துநதி ; இந்து மதத்தான் ; கௌரி பாடாணம் ; எட்டி ; கரடி ; கரி .
இந்துகமலம் வெண்டாமரைப்பூ .
இந்துகாந்தம் காண்க : சந்திரகாந்தக்கல் .
இந்துகை காண்க : இந்திகை .
இந்துசிகாமணி பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவன் , சிவன் .
இந்துசேகரன் பிறைச்சந்திரனைத் தலையில் சூடியவன் , சிவன் .
இந்துதேசம் இந்திய நாடு , பரத கண்டம் .
இந்துப்பு மருந்து உப்புவகை .
இந்துமதி பூரணை ; ' அசன் ' என்னும் அரசனுடைய மனைவி ; விதர்ப்பராசன் சகோதரி ; சந்திரமதி .
இந்துமராம் கடம்பு .
இந்துரத்தினம் முத்து .
இந்துரம் எலி .
இந்துரவிகூட்டம் சந்திர சூரியர் ஒருங்கிணையும் நாள் , அமாவாசை .
இந்துரேகை சந்திரகலை .
இந்துலேகை சந்திரகலை .
இந்திரசித்து இந்திரனை வென்றவன் ; இராவணனுடைய மூத்த மகன் ; கருடன் ; கிருட்டிணன் .
இந்திரசிறப்பு வைசுவதேவம் , மதிய உணவிற்கு முன் இந்திரன் முதலிய தேவர்களுக்குப் பார்ப்பனர் செய்யும் நற்செயல் .
இந்திரசுகந்தம் நன்னாரி .
இந்திரஞாலம் காண்க : இந்திரசாலம் ; வஞ்சகச் சொல் ; சூரபதுமன் தேர் .
இந்திரதந்திரம் காண்க : இந்திரசாலம் .
இந்திரதரு மருது .
இந்திரதனு காண்க : இந்திரவில் .
இந்திரதிசை கிழக்கு .
இந்திரதிருவன் இந்திரனைப்போல் செல்வம் உடையவன் .
இந்திரநகரி திருத்தணிகை ; தேவலோகம் .
இந்திரநாள் கேட்டை நாள் .
இந்திரநீலம் சிறந்த நீலமணி .
இந்திரப்பிரியம் பொதியமலைச் சந்தனம் .
இந்திரபதம் (வி) துறக்கம் ; இந்திரனாயிருக்கும் நிலை .
இந்திரபம் வெட்பாலை .
இந்திரபுட்பம் வெண்தோன்றி .
இந்திரபுட்பி வெண்தோன்றி .
இந்திரபுரி இந்திரன் தலைநகராகிய அமராவதி .
இந்திரபுரோகிதன் தேவகுருவாகிய வியாழன் .
இந்திரம் மேன்மையானது ; இந்திரியம் ; இந்திர பதவி .
இந்திரர் தேவர் .
இந்திரலோகம் துறக்கம் ; பரமபதம் .
இந்திரவணி சங்கநிதி , பதுமநிதி .
இந்திரவம் காண்க : இந்தீவரம் .
இந்திரவர்ணப்பட்டு பட்டுப்புடைவைவகை .
இந்திரவல்லி பிரண்டை ; முடக்கொற்றான் ; கொற்றான் .
இந்திரவாசம் நெய்தல் .
இந்திரவாமம் நெய்தல் .
இந்திரவாருணி பேய்க்கொம்மட்டி .
இந்திரவிகாரம் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த ஒரு பௌத்தப் பள்ளி .
இந்திரவில் வானவில் .
இந்திரவிழவு இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள் ; காவிரிபூம்பட்டினத்தில் முன்னாளில் நிகழ்ந்த ஒரு பெருவிழா .
இந்திரவிழா இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள் ; காவிரிபூம்பட்டினத்தில் முன்னாளில் நிகழ்ந்த ஒரு பெருவிழா .
இந்திரன் தேவேந்திரன் ; தலைவன் ; கேட்டை ; மிருகசீரிடம் ; அந்தரான்மா ; சூரியன் .

சொல்
அருஞ்சொற்பொருள்
இபுதார் நோன்புக்குப் பின் செய்யும் பாரணை .
இபுனு வழித்தோன்றல் .
இம்பர் இவ்விடம் இவ்வுலகம் ; பின் .
இம்பரர் இவ்வுலகத்தவர் .
இம்பரார் இவ்வுலகத்தவர் .
இம்பரும்பர் இவ்வுலகில் தேவராக மதிக்கப் படுபவர் , பூசுரர் .
இம்பல் பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி .
இம்பி கருந்தினை .
இம்பில் பண்டைக் காலத்து விளையாட்டு வகை .
இம்புறாவேர் சாயவேர் .
இம்பூறல் சாயவேர் .
இம்மட்டும் இதுவரையும் .
இம்மடி யானை .
இம்மி மத்தங்காய்ப் புல்லரிசி ; அணு ; ஒரு சிற்றெண் ; ஒரு சிறு நிறை ; பொய்ம்மை ; புலன் .
இம்மிக்கணக்கு கீழ்வாயிலக்கக் கணக்கு .
இம்மியளவு தேர்த்துகள் எட்டு மடங்கு கொண்ட ஓர் அளவு .
இம்மெனல் விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; ' இம் ' என்னும் ஒலிக்குறிப்பு .
இம்மை இப்பிறப்பு ; இவ்வுலக வாழ்வு .
இமகரன் குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் .
இமகிரணன் குளிர்ந்த கதிர்களையுடையவனாகிய சந்திரன் .
இமகிரி இமயமலை .
இமசலம் பனிநீர் .
இமசானு இமயமலை , இமயமலையின் மேற்பரப்பு .
இமப்பிரபை மிகக் குளிர்ச்சியாயுள்ள ஒரு நரகம் .
இமம் பனி ; சந்தனம் ; சீதளம் .
இமயம் இமயமலை ; மந்தரமலை ; மேருமலை ; பொன் .
இமயவதி இமவான் மகள் , பார்வதி .
இமயவரம்பன் இமயமலை எல்லைவரை வெற்றி கொண்டு அரசாண்டவன் ; ஒரு சேரமன்னன் .
இமயவல்லி காண்க : இமயவதி .
இமயவில் மேருமலையாகிய வில் .
இமயவில்லி மேருமலையை வில்லாகவுடையவன் , சிவன் .
இமலம் மரமஞ்சள் .
இமவந்தம் இமயமலை .
இமவாலுகை பச்சைக் கருப்பூரம் .
இமவான் இமயமலை ; இமயமலையரசன் .
இமழி யானை .
இமாசலம் காண்க : இமவந்தம் .
இமாசலை பார்வதி .
இமாம் பள்ளிவாசலில் தொழுகையை நடத்துபவர் .
இமாலயம் பனிக்கு இருப்பிடமான இமயமலை .
இமிர்தல் ஒலித்தல் ; ஊதுதல் ; மொய்த்தல் .
இமில் எருத்தின் திமில் ; கொண்டை .
இமிலை ஓர் இசைக்கருவி .
இமிழ் ஒலி ; பந்தம் ; கயிறு ; இனிமை ; இசை .
இமிழ்த்தல் ஒலித்தல் ; கட்டுதல் ; சிமிட்டுதல் .
இமிழ்தல் ஒலித்தல் ; யாழொலித்தல் ; தழைத்தல் ; கட்டுதல் ; மிகுதல் .
இமிழி இசை .
இந்துலோகம் வெள்ளி .
இந்துவி இந்திமொழி .
இந்துவோடிரவிகூட்டம் காண்க : இந்துரவி கூட்டம் .
இந்துள் நெல்லிமரம் .
இந்துளி நெல்லிமரம் .
இந்துளம் கடப்பமரம் ; நெல்லிமரம் .
இந்துறு இலந்தை .
இந்துஸ்தானம் நருமதை நதிக்கு வடபாலுள்ள இந்தியப் பகுதி , வட இந்தியா .
இந்தோ இதோ .
இந்தோளம் மாலைப் பண்வகை ; ஊசல் .
இப்படி இவ்விதம் ; தண்டத் தீர்வை .
இப்படிக்கு இங்ஙனம் .
இப்பந்தி கலப்புச் சாதி ; சங்கடம் ; பேடி ; மூடன் .
இப்பர் வணிகசாதி வகையார் ; கோவைசியர் .
இப்பாடு இவ்விடம் .
இப்பால் இவ்விடம் ; பின்பு .
இப்பி சிப்பி ; கிளிஞ்சல் ; சங்கு .
இப்பியை வெள்ளைக் குங்கிலியம் ; பெண்யானை .
இப்பிவெள்ளி கிளிஞ்சிலை வெள்ளி என்றெண்ணும் மயக்கவுணர்ச்சி .
இப்புறம் இவ்விடம் .
இப்பேர்ப்பட்ட இத்தன்மையதான .
இப்பை காண்க : இருப்பை .
இப்பொழுது இந்நேரம் .
இப்போது இந்நேரம் .
இப்போதே இந்த நொடியிலே .
இபங்கம் புளிமா .
இபம் மரக்கொம்பு ; யானை .
இபாரி சிங்கம் .

சொல்
அருஞ்சொற்பொருள்
இயல்புவழக்கு எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பில் அமைந்ததோ அப் பெயராலேயே அப் பொருளைக் கூறுகை .
இயல்பு விளி பெயர் ஈறு திரியாது நிற்கும் விளிவேற்றுமை .
இயல்புளி முறைப்படி .
இயல்பூதி வில்வம் ; நாய்வேளை .
இயல்வாகை பெருங்கொன்றை .
இயல்வாணர் புலவர் .
இயல்வு இயல்பு ; பெறுகைக்குத் தக்க வழி .
இயக்கர்கோமான் இயக்கர்களின் அரசன் , குபேரன் .
இயக்கர்வேந்தன் இயக்கர்களின் அரசன் , குபேரன் .
இயக்கன் இயக்க கணத்தான் ; குபேரன் ; தலைமையாக நின்று நடத்துபவன் .
இயக்கி யட்சப் பெண் ; கந்தருவப் பெண் ; குபேரன் மனைவி ; தருமதேவதை .
இயக்கினி கண்டங்கத்தரி .
இயக்குதல் செலுத்துதல் ; தொழிற்படுத்துதல் ; பழக்குதல் ; ஒலிப்பித்தல் ; நடத்திவருதல் ; போக்குதல் .
இயங்காத்திணை தானாக இடம்விட்டுப் பெயர இயலாத நிலைத்திணைப் பொருள் .
இயங்கியற்பொருள் இடம்விட்டு இடம்செல்லும் உயிர்ப்பொருள் ; சரப்பொருள் .
இயங்கு செல்லுகை ; முட்செடி வகை .
இயங்குதல் அசைதல் ; போதல் ; உலாவுதல் ; ஒளிசெய்தல் .
இயங்குதிசை மூச்சு இயங்கும் மூக்குத்துளை .
இயங்குதிணை காண்க : இயங்கியற்பொருள் .
இயங்குநர் வழிப்போவோர் .
இயங்குபடையரவம் பகையரணை முற்றுதற்கு எழுந்த படையின் செலவால் உண்டாகும் ஆரவாரத்தைக் கூறும் புறுத்துறை .
இயசுரு யசுர்வேதம் .
இயத்தல் கடத்தல் ; நிகழ்தல் .
இயந்தா யானைப் பாகன் ; சாரதி .
இயந்திரம் ஆலை ; தேர் ; மதிலுறுப்பு ; சக்கரம் ; பாண்டவகை ; வலை .
இயந்திரமயில் மயிற்பொறி .
இயந்திரி இத்திமரம் .
இயந்திரித்தல் எந்திரம் அமைத்தல் ; எந்திரத்தில் ஆட்டுதல் .
இயந்தை மருத யாழ்த்திறம் ; செவ்வழி யாழ்த்திறவகை .
இயபரம் இம்மை மறுமை , இகபரம் .
இயம் சொல் ; ஒலி ; வாத்தியம் ; மிருதாரசிங்கி எனும் மூலிகை ; ஈ .
இயம்பல் சொல் ; பழமொழி .
இயம்புணர் தூம்பு நெடுவங்கியம் என்னும் இசைக்கருவி .
இயம்புதல் ஒலித்தல் ; வாச்சியம் ஒலித்தல் ; சொல்லுதல் ; துதித்தல் ; கூப்பிடுதல் .
இயமகணம் யமகிங்கரர் , யமனின் தூதர் .
இயமகம் யமகம் ; ஓரெழுத்து முதல் பத்தெழுத்தீறாய் ஓரடிபோல நான்கடியும்வரப் பாடுவது .
இயமகிங்கரர் காண்க : இயமகணம் .
இயமங்கியர் பரசுராமர் .
இயமதூதி பாம்பினது நச்சுப்பற்களுள் ஒன்றாகிய யமதூதன் .
இயமபடர் யமதூதர் .
இயமம் யோகத்திற்குரிய எட்டுறுப்புகளுள் ஒன்று ; கொலை , களவு முதலியவற்றை நீக்கிப் புலனடக்குதல் ; தடை .
இயமரம் பறைவகை .
இயமன் யமன் , கூற்றுவன் .
இயமனூர்தி எருமைக்கடா .
இயமான் காண்க : இயமானன் .
இயமானகணம் இந்திரகணம் ; மூன்று நேரசையால் வரும் சீர் .
இயமானன் வேள்வித் தலைவன் ; குடும்பத் தலைவன் ; இந்திரன் ; ஆன்மா ; உயிர் .
இயர் வியங்கோள் விகுதி .
இயல் தன்மை ; தகுதி ; சுகுமாரதை ; ஒழுக்கம் ; உழுவலன்பு ; செலவு ; ஒப்பு ; இயற்றமிழ் ; இலக்கணம் ; நூல் ; நூலின் பகுதி ; திவ்வியப் பிரபந்தத்தைக் குழுவாக நின்று ஓதுகை ; மாறுபாடு ; சாயல் ; பெருமை .
இயல்பளவை சொல்லின் , பொருளைச் சந்தர்ப்பத்தினால் துணிந்து உணர்கை .
இயல்பாயிருத்தல் இயற்கையாய் உள்ளபடி அமைந்திருத்தல் ; செல்வாக்கோடு இருத்தல் .
இயல்பு தன்மை ; இலக்கணம் ; ஒழுக்கம் ; நற்குணம் ; நேர்மை ; முறை ; வரலாறு ; பிரமாணம் பத்தனுள் ஒன்று .
இயல்புகணம் உயிர்க்கணம் மென்கணம் இடைக்கணங்கள் .
இயல்புநயம் ஒற்றுமை முதலிய நயங்கள் நான்கனுள் ஒன்று .
இயல்புபுணர்ச்சி மாறுபாடின்றிச் சொற்கள் ஒன்றோடொன்று இயைந்து நிற்றல் .
இமிழிசை இயமரம் ; ஒருவகைப் பறை .
இமை கண்ணிமை ; கண்ணிமைக்கை ; கண்ணிமைப் பொழுது ; கரடி ; மயில் .
இமைக்குரு இமையில் உண்டாகும் சிறுகட்டி .
இமைகொட்டுதல் இமைத்தல் , கண்ணிதழ் சேர்தல் .
இமைத்தல் இமைகொட்டுதல் ; ஒளிவிடுதல் ; சுருங்குதல் ; தூங்குதல் .
இமைப்பளவு கண்ணிமைப்பொழுது .
இமைப்பிலர் காண்க : இமையவர் .
இமைப்பு இமைப்பளவு ; விளக்கம் .
இமைப்பொழுது கண் இமைக்கும் நேரம் , கணப்பொழுது .
இமைபிறத்தல் இமைத்தல் .
இமைபொருந்துதல் உறங்குதல் .
இமையம் காண்க : இமயம் .
இமையவர் தேவர் .
இமையாடுதல் கண்கொட்டுதல் .
இமையார் காண்க : இமையவர் .
இமையோர் காண்க : இமையவர் .
இமையிலி கருடன் .
இயக்கசத்துவம் பத்துச் சத்துவங்களுள் இயக்கசாதிப் பெண்ணின் சத்துவம் .
இயக்கம் இயங்குகை ; குறிப்பு ; வழி ; இசைப் பாட்டுவகை ; சுருதி ; பெருமை ; மலசலங்கள் ; வடதிசை ; கிளர்ச்சி ; பரப்புகை .
இயக்கர் கந்தருவர் , பதினெண் கணத்துள் ஒரு கணத்தார் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;