சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
இயன்மொழிவாழ்த்து | தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை ; ' இன்னார் இன்னது கொடுத்தார் ; அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை ; அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை . |
இயனம் | கள்ளிறக்குவோனது கருவிபெய்புட்டில் . |
இயனெறி | நல்லொழுக்கம் . |
இயாகதம் | சிற்றகத்தி . |
இயாகம் | கொன்றை ; பாண்டம் ; வேள்வி . |
இயுசாவியம் | கொன்றைமரம் . |
இயேசு | கிறிஸ்துநாதரின் பெயர் . |
இயை | அழகு ; புகழ் ; இசைப்பு ; வாழை . |
இயை | (வி) சேர் . |
இயைத்தல் | பொருத்துதல் . |
இயைதல் | பொருந்துதல் ; இணங்குதல் ; நிரம்புதல் ; ஒத்தல் . |
இயைந்துரை | பல பொருள்களின் வரையறைப் பட்ட தொகுதி . |
இயைபிலிசைக்குறி | இடைப்பிறவரலாக வரும் சொற்களை அடைக்கும் குறிகள் , வளைவுக் குறிகள் . |
இயைபின்மை நீக்கம் | தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன . |
இயைபின்மை நீக்கல் | தன்னோடு இயைபின்மை நீக்கும் அடைமொழி ; செஞ்ஞாயிறு என்றாற்போல்வன . |
இயைபின்மையணி | பொருள் தனக்குத் தானே உவமை என்று உரைக்கும் அணி . |
இயைபு | சேர்க்கை ; பொருத்தம் ; தொடர்ச்சி ; ' இது கேட்டபின் இது கேட்கத் தக்கது ' என்னும் யாப்பு ; இயைபுத் தொடை ; நூல் வனப்புள் ஒன்று . |
இயைபுத்தொடை | ஈற்றெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது . |
இயைபுருவகம் | பல பொருளையும் தம்முள் இயைபுடையனவாக வைத்து உருவகம் செய்வது ; உருவக அணியுள் ஒன்று . |
இயைபுவண்ணம் | இடையெழுத்துகள் மிகுந்து வரும் சந்தம் . |
இயைபுவனப்பு | ஞ் , ண் , ந் , ம் , ன் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் என்னும் பதினொரு மெய்களை ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல் . |
இயைபுளன் | புகழாளன் . |
இயைமே | வாழைமரம் . |
இயைய | ஓர் உவம உருபு . |
இயைவது | தக்கது . |
இயைவு | இணக்கம் ; பொருத்தம் ; சேர்க்கை . |
இர் | முன்னிலைப் பன்மை விகுதி ; படர்க்கைப் பன்மை விகுதி ; கேளிர் ; பெண்டிர் . |
இர | இரவு ; இரத்தல் . |
இரக்கக்குறிப்பு | ஒன்றன் துயரம் முதலியன கண்டு இரங்கிக் கூறும் மொழி . |
இயலசை | நேரசை ; நிரையசை . |
இயலடி | இயற்சீரால் அமைந்து வரும் பாவடி . |
இயலணி | இயற்கையழகு . |
இயலறிவு | சொற்களின் பயிற்சி . |
இயலாசிரியன் | நாட்டிய நூல் கற்பிப்போன் . |
இயலாமை | கூடாமை . |
இயலுதல் | கூடியதாதல் ; நேர்தல் ; பொருந்துதல் ; தங்குதல் ; செய்யப்படுதல் ; அசைதல் ; நடத்தல் ; உலாவுதல் ; உடன்படுதல் ; அணுகுதல் ; ஒத்தல் ; போட்டிபோடுதல் ; சித்திர முதலியன எழுதுதல் . |
இயலொழுக்கம் | நல்லொழுக்கம் . |
இயவம் | தவசவகை ; நெல் ; வாற்கோதுமை . |
இயவன் | தோற்கருவியாளன் ; வாச்சியக்காரன் ; கீழ்மகன் . |
இயவனன் | யவனன் ; கம்மாளன் ; ஓவியன் . |
இயவானி | ஓமம் . |
இயவு | வழி ; செலவு ; காடு ; ஊர் . |
இயவுள் | தலைமை ; எப்பொருட்கும் இறைவன் ; தெய்வம் ; புகழாளன் ; வழி ; பிள்ளை . |
இயவை | வழி ; காடு ; மலைநெல்வகை ; மூங்கிலரிசி ; துவரை . |
இயற்காட்சி | நற்காட்சி ; சரியாக உணர்கை ; நல்ல நம்பிக்கை . |
இயற்குணப் பெயர் | தொழிலை அன்றிப் பண்பே குறிக்கும் பெயர் . |
இயற்கை | இயல்பான தன்மை ; வழக்கம் ; இலக்கணம் ; நிலைமை ; கொள்கை . |
இயற்கை அறிவு | இயல்பாக அமைந்த அறிவு . |
இயற்கைக்குணம் | ஒன்றன் உடனாய் அமைந்த தன்மை . |
இயற்ககைப் புணர்ச்சி | தலைவனும் தலைவியும் தெய்வத்தால் கூடும் முதற் கூட்டம் . |
இயற்கைப் பொருள் | தோன்றிய காலம் தொடங்கி ஒருநிலையவாகிய பொருள் . |
இயற்கையளபெடை | இசை ,விளி , பண்டமாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை . |
இயற்கையின்பம் | இயற்கைப் புணர்ச்சியால் நேரும் இன்பம் ; இயற்கை தரும் இன்பம் . |
இயற்கையுணர்வினனாதல் | இறைவன் எண்குணங்களுள் ஒன்று . |
இயற்சீர் | அகவல் உரிச்சீர் . |
இயற்சீர் வெண்டளை | மாமுன் நிரையும் விளமுன் நேரும் வரும் தளை . |
இயற்சொல் | எல்லார்க்கும் பொருள் விளங்கும் சொல் . |
இயற்படமொழிதல் | இயல்பு பொருந்தச் சொல்லுதல் ; தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை . |
இயற்பலகை | சங்கப் பலகை . |
இயற்பழித்தல் | தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை . |
இயற்பா | இயல்பான ஓசையுடைய பாட்டு ; வெண்பா ; திவ்வியப் பிரபந்தத்துள் ஒரு பகுதி . |
இயற்பெயர் | வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப் பெயர் ; விரவுப் பெயர் , உயர்திணை அஃறிணைகளுக்குப் பொதுவாய் வரும் பெயர் . |
இயற்றமிழ் | செந்தமிழ் ; இலக்கியத் தமிழ் ; முத்தமிழுள் ஒன்று . |
இயற்றல் | செய்தல் ; முயற்சி . |
இயற்றளை | காண்க : இயற்சீர்வெண்டளை . |
இயற்றி | முயற்சி ; ஆற்றல் ; உதவி ; திறமை . |
இயற்றியான் | செய்தவன் . |
இயற்று | பாத்திரம் |
இயற்றுதல் | செய்தல் ; நடத்துதல் ; சம்பாதித்தல் ; தோற்றுவித்தல் ; நூல் செய்தல் . |
இயற்றுதற்கருத்தா | தொழில் புரிபவன் ; பயனிலைச் செயலை நேரே செய்யும் வினைமுதல் . |
இயற்றும்வினை | தன்வினை . |
இயறல் | முத்தி ; போதல் . |
இயன்ஞானம் | நல்லறிவு . |
இயன்மகள் | கலைமகள் . |
இயன்மணம் | இயற்கையான மணம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
இரசக்களிம்பு | புண் ஆற்றும் மருந்துவகை . |
இரசக்கிணறு | காண்க : இரசக்குழி . |
இரசக்குடுக்கை | பாதரசம் அடைக்கும் குப்பி . |
இரசக்குழி | பாதரசம் எடுக்கும் சுரங்கம் . |
இரசகந்தாயம் | வரி ; நிலக்கொழுமை . |
இரசகம் | பீர்க்கு . |
இரசகருப்பூரம் | ஒருவகை மருந்துச் சரக்கு . |
இரசகன் | வண்ணான் . |
இரசகி | வண்ணாத்தி . |
இரசகுண்டு | அலங்காரமாகத் தொங்கவிடும் இரசம் பூசிய கண்ணாடி உருண்டை . |
இரசகுளிகை | இரசத்தினால் செய்த மாத்திரை ; சித்தர் குளிகை . |
இரசச்சுண்ணம் | பூச்சுமருந்துவகை . |
இரசசுத்தி | ஈயம் . |
இரசதகிரி | வெள்ளிமலையாகத் தோற்றம் பெறும் கைலாயமலை . |
இரசதசபை | வெள்ளியம்பலம் , மதுரையிலுள்ள நடராச சபை . |
இரசதம் | வெள்ளி ; இராசதம் ; அரைப்பட்டிகை ; பாதரசம் ; நட்சத்திரம் ; யானைத் தந்தம் ; வெள்ளை ; முத்துமாலை ; வெண்மலை ; பொன் ; அரத்தம் . |
இரசதமணல் | வெள்ளி கலந்த மணல் . |
இரசதாது | பாதரசம் . |
இரசதாரை | அன்னரசம் செல்லும் குழாய் . |
இரசதாளி | ரஸ்தாளி , ஒருவகை வாழை . |
இரசநாதன் | காண்க : இரசதாது . |
இரசப்பிடிப்பு | முடக்குவாதம் . |
இரசப்புகை | பாதரசத்தின் ஆவி . |
இரசபலம் | இனிய நீரைக்கொண்ட காய்களையுடையது ; தென்னை . |
இரசபுட்பம் | காண்க : இரசகருப்பூரம் . |
இரசம் | சுவை ; செய்யுட்சுவை ; சாறு ; பாதரசம் ; மிளகு நீர் ; இன்பம் ; வாயூறு நீர் ; வாழைவகை ; மாமரம் . |
இரசமணி | நோய் முதலியவை நீங்கக் காப்பாக அணியப்படும் பாதரசங் கட்டிய மணி . |
இரசமுறித்தல் | பாதரசம் செய்தல் ; உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல் . |
இரசலிங்கம் | சாதிலிங்கம் ; சிவலிங்கவகை . |
இரசவாதம் | தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை . |
இரசவாதி | உலோகங்களைப் பேதிப்போன் , ஓர் உலோகத்தைப் பிறிதொன்றாக மாற்றுபவன் . |
இரசவாழை | பேயன்வாழை . |
இரசவைப்பு | இரசத்தால் ஆகிய மருந்து முதலியன . |
இரசனம் | பொன் ; வெள்ளி ; நஞ்சு ; பிசின் ; பழம் ; கழாயம் ; இலைச் சாறு ; ஒலி ; உணவு ; நேயம் ; பல் . |
இரசனா | அரத்தைவகை . |
இரசனி | இரவு ; மஞ்சள் ; அவுரி ; செம்பஞ்சு . |
இரசனிமுகம் | மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம் ; சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை . |
இரசனை | சுவை ; மலர் முதலியவற்றைத் தொடுக்கை ; படையின் அணிவகை ; பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி . |
இரசாதலம் | கீழேழ் உலகத்துள் ஒன்று . |
இரசாதிபதி | இரசப் பொருள்களுக்கு அதிகாரியான கோள் . |
இரசாபாசம் | சுவைக்கேடு ; சீர்கேடு . |
இரசாயனநூல் | வேதியியல் நூல் , இயைபியல் நூல் . |
இரசாயனம் | இரசவாதம் ; வேதியியல் , இயைபியல் ; காயசித்தி மருந்து ; நஞ்சு . |
இரசாலம் | மாமரம் ; கரும்பு ; பலா ; கோதுமை ; குந்துருப் பிசின் ; போளம் . |
இரசாலை | அறுகு ; சம்பாரத் தயிர் ; நா ; வெள்ளீறில் என்னும் மரவகை . |
இரசிகம் | குதிரை ; கயமைத் தன்மை ; யானை . |
இரசிகன் | சுவைஞன் ; காமுகன் . |
இரசிகை | காமுகி ; நா ; மாதர் இடையணி . |
இரசித்தல் | சுவைத்தல் ; இனித்தல் ; விரும்புதல் . |
இரசிதநாள் | வெள்ளிக்கிழமை . |
இரசிதம் | வெள்ளி ; பொன்னின் பூச்சு ; ஒலி ; முழக்கம் . |
இரசுவம் | குறுகிய அளவு ; குற்றெழுத்து . |
இரசேந்திரியம் | சுவையுணர் உறுப்பு , நாக்கு . |
இரசை | பங்கம்பாளை ; பூமி ; ஆனைவணங்கி ; தினை ; நா . |
இரக்கம் | அருள் ; மனவுருக்கம் ; மனவருத்தம் ; ஒலி ; ஈடுபாடு . |
இரக்கித்தல் | காண்க : இரட்சித்தல் . |
இரக்கை | காண்க : இரட்சை . |
இரகசியம் | கமுக்கம் , மறைபொருள் , அந்தரங்கம் . |
இரகிதம் | இட்டம் ; விடப்பட்டது ; நீக்கப் பட்டது . |
இரகுநாதன் | இரகு குலத்தில் சிறந்த இராமன் . |
இரகுவமிசம் | இரகுவின் வழிவந்தவர் ; ஒரு தமிழ் நூல் . |
இரங்கல் | அழுகை ; நெய்தல் ; உரிப்பொருள் ; ஒலி ; யாழ் நரம்போசை . |
இரங்கற்பா | ஒருவரின் மறைவு குறித்து வருந்திப் பாடும் பாட்டு , கையறுநிலை . |
இரங்குகெளிறு | கெளிற்று மீன்வகை . |
இரங்குசொல் | இழுமென இசைக்கும் சொல் . |
இரங்குதல் | வருந்துதல் ; அருளல் ; மனமழிதல் ; அழுதல் ; கழிவிரக்கம் கொள்ளல் ; ஒலித்தல் ; யாழொலித்தல் ; கூறுதல் ; ஈடுபடுதல் . |
இரங்கூன்மல்லி | ஒருவகைப் பூங்கொடி . |
இரங்கொலி | முறையீடு . |
இரங்கேசன் | அரங்கநாதன் ; திருவரங்கத்தில் கோயில்கொண்டிருக்கும் கடவுள் . |
இரச்சு | கயிறு . |
இரச்சுப்பொருத்தம் | பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று . |
இரச்சுலம் | கவண் . |
இரச்சுவம் | குற்றெழுத்து . |
இரச்சை | மலை மரவகை ; காப்புநாண் . |
இரசக்கட்டு | இறுகச் செய்த பாதரசம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
இரட்டை நாடி | மிகப் பருத்த உடம்பு . |
இரட்டைப் படை | இரட்டிப்பு ; இரட்டைப்பட்ட எண் . |
இரட்டைப் பாக்கு | இரு கண்ணுள்ள பாக்கு . |
இரட்டைப் பிள்ளை | ஒரே கருப்பத்தினின்றும் தனித்தனியாக ஒரு சமயத்துப் பிறந்த இருவர் ; இரட்டையாகக் கிளைக்கும் தென்னை அல்லது கமுகு . |
இரட்டைப் பூட்டு | இருமுறை பூட்டும் பூட்டு ; பாதுகாப்புக்காக இடும் இருவேறு பூட்டு . |
இரட்டைப் பூரான் | சதங்கைப் பூரான் . |
இரட்டை மணி | அணிவகை . |
இரட்டைமணிமாலை | பிரபந்தவகை ; வெண்பா , கலித்துறை இரண்டும் மாறிமாறி இருபது பாடல்கள் அந்தாதியாய் வரும் சிறுநூல்வகை . |
இரட்டையர் | இரட்டைப் பிள்ளைகள் ; நகுல சகதேவர் ; இரட்டைப் புலவர்களான இளஞ்சூரியர் முதுசூரியர் என்ற புலவர் . |
இரட்டையாட்சி | இருதிறத்தார் பகுத்துக் கொண்டு செய்யும் அரசாட்சி . |
இரட்டையேணி | கவை ஏணி ; ஒன்றன்மேல் ஒன்று வைத்துக் கட்டப்பட்ட ஏணி . |
இரட்டைவரி | ஒரே நிலத்துக்காக அரசினருக்கும் ஊராட்சி நிறுவனங்களுக்கும் செலுத்தும் வரி . |
இரட்டை விருத்தம் | பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் . |
இரண்டகம் | இருமனம் , துரோகம் . |
இரண்டறக்கலத்தல் | இருபொருன் பேதமின்றி ஒன்றாதல் ; ஆன்மா இறைவனுடன் ஐக்கியமாதல் ; முத்தியடைதல் . |
இரண்டாகுதல் | இரு துண்டாதல் . |
இரண்டாங்கட்டு | வீட்டின் இரண்டாம் பகுதி . |
இரண்டாங்காலம் | கோயிலில் அந்திக்காப்புக்கும் அர்த்தசாமத்திற்கும் நடுவில் நடக்கும் பூசை . |
இரண்டாட்டுதல் | இருநெறிப்படுதல் . |
இரண்டாந்தரம் | முக்கியம் அல்லாதது ; நடுத்தரம் ; இடைவேளை உணவு . |
இரண்டாநிலம் | மேன்மாடம் . |
இரண்டாம் பாட்டன் | பாட்டனின் தந்தை . |
இரண்டாம்போகம் | இரண்டாம் முறைப் பயிர் விளைவு . |
இரண்டிகை | காண்க : இண்டை . |
இரசோகுணம் | இராசதகுணம் , முக்குணத்துள் ஒன்று ; மத்திமமான அறிவு . |
இரசோபலம் | இருள் ; முத்து . |
இரசோனகம் | வெள்ளுள்ளி . |
இரஞ்சகம் | துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து ; துப்பாக்கிக் காது ; மகிழ்ச்சி தருவது . |
இரஞ்சகன் | இயக்குகிறவன் ; சாயமூட்டுகிறவன் ; விருப்பம்வரச் செய்கிறவன் . |
இரஞ்சனம் | மகிழ்ச்சி தருவது ; செஞ்சாந்து . |
இரஞ்சனி | மஞ்சிட்டை ; கவுள் ; அவுரி ; கம்பில்லம் . |
இரஞ்சிதம் | இன்பமானது ; சித்திரிக்கப்பட்டது . |
இரட்சகம் | இரட்சிப்பு ; மீட்பு ; காத்தல் . |
இரட்சகன் | காப்பாற்றுபவன் ; உய்விப்பவன் . |
இரட்சணம் | காண்க : இரட்சகம் . |
இரட்சணியசேனை | கிறித்தவ சபையில் ஒரு பிரிவு . |
இரட்சணியம் | காப்பு ; மீட்பு . |
இரட்சனை | காண்க : இரட்சகம் . |
இரட்சாபந்தனம் | காப்புக்கட்டல் ; மந்திராட்சரயந்திரக் காப்பு . |
இரட்சாபோகம் | பாதுகாவல் வரி . |
இரட்சாமூர்த்தி | காப்புக் கடவுள் , திருமால் . |
இரட்சித்தல் | காத்தல் ; மீட்குதல் . |
இரட்சிப்பு | காப்பாற்றுகை ; உய்வு ; மீட்பு . |
இரட்சை | காப்பு ; காப்பாக இடுவது ; திருநீறு . |
இரட்டகத்துத்தி | கத்தூரிவெண்டை . |
இரட்டர் | இராட்டிரகூட அரசர் . |
இரட்டல் | இரண்டாதல் ; அசைத்தல் ; மாறி மாறி ஒலித்தல் ; யாழ் நரம்போசை . |
இரட்டாங்காலி | இரட்டையாகக் கிளைக்கும் மரம் . |
இரட்டி | இருமடங்கு ; இணைக்கை . |
இரட்டித்தல் | இருமடங்காக்குதல் ; திரும்பச் செய்தல் ; ஒன்று இரண்டாதல் ; மீளவருதல் ; மாறுபடுதல் ; இகழ்தல் . |
இரட்டித்துச் சொல்லுதல் | மீட்டுங் கூறுதல் ; இரு பொருள்படச் சொல்லுதல் . |
இரட்டிப்பு | இருமடங்கு . |
இரட்டு | இரட்டையாயிருக்கை ; ஒருவகை முருட்டுத்துணி ; ஒலி . |
இரட்டுதல் | இரட்டித்தல் ; மாறியொலித்தல் ; ஒலித்தல் ; அசைதல் ; வீசுதல் ; கொட்டுதல் ; தெளித்தல் . |
இரட்டுமி | பறைவகை . |
இரட்டுறக்காண்டல் | ஐயக் காட்சி ; ஒன்றை இருவேறு பொருளாகப் பார்க்கும் பார்வை . |
இரட்டுறமொழிதல் | ஓர் உத்தி ; இருபொருள் படச் சொல்லல் . |
இரட்டுறல் | சிலேடை ; இருபொருள்படுகை . |
இரட்டுறுதல் | இருபொருள்படுதல் ; ஐயுறுதல் ; மாறுபடுதல் . |
இரட்டை | இணை ; கணவன் மனைவியர் ; இரட்டைப் பிள்ளைகள் ; இரண்டு ஒன்றானது ; இரட்டை எண் ; அரையாடை மேலாடைகள் ; துப்பட்டி ; மிதுனராசி ; ஆனி மாதம் ; வேதம் ஓதும் முறைகளுள் ஒன்று ; முத்துவகை . |
இரட்டைக்கத்தி | இரண்டு அலகுள்ள கத்தி . |
இரட்டைக்கதவு | இரண்டு பிரிவாயுள்ள கதவு . |
இரட்டைக்கிளவி | ஒலிக்குறிப்பில் வரும் இரட்டை மொழி ; இரட்டையாக நின்றே பொருள் உணர்த்துஞ் சொல் , விறுவிறுப்பு என்றாற்போல் வருவது . |
இரட்டைக்குச்சி | சிலம்ப வித்தைவகை . |
இரட்டைக் குண்டட்டிகை | கழுத்தணிவகை . |
இரட்டைக் குறுக்கு | மாட்டுக் குற்றவகை . |
இரட்டைக்கை | காண்க : இணைக்கை . |
இரட்டைச்சிரட்டை | இரட்டைக் கொட்டாங்கச்சி . |
இரட்டைச் சின்னம் | இரட்டையான ஊதுகுழல் வகை . |
இரட்டைச் சுழி | இரு சுழி ; ஐகாரவொலியைக்குறிக்கும் ' ¬ ' என்னும் சுழி . |
இரட்டைச்சொல் | இரட்டையாக வரும் குறிப்புச் சொல் . |
இரட்டைத் தவிசு | இருவர் இருத்தற்குரிய இருக்கை . |
இரட்டைத் தாளம் | தாளவகை . |
இரட்டைத்தொடை | ஓரடி முழுவதும் ஒரு சொல்லே வரத் தொடுப்பது . |
இரட்டை நாகபந்தம் | சித்திரகவிவகை . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
இரணவஞ்சம் | போகபூமியுள் ஒன்று . |
இரணவாதம் | நோய்வகை . |
இரணவீரன் | போர்வீரன் ; அங்காளம்மை கோயிலின் பரிவார தெய்வம் . |
இரணவைத்தியம் | அறுவை மருத்துவம் |
இரணவைத்தியன் | அறுவை மருத்துவன் . |
இரணிய கர்ப்பதானம் | பொற்பசுவின் வயிற்றினுள் புகுந்து வெளிவந்து அப் பசுவையே கொடையாக அளித்தல் . |
இரணியகர்ப்பம் | ஒரு வேள்வி ; பொன்னால் செய்த பசு வயிற்றினூடாகப் புகுந்து வெளிவரும் சடங்கு . |
இரணியகர்ப்பமதம் | பிரமாவே முதற்கடவுள் என்னும் சமயம் . |
இரணியகர்ப்பர் | பிராணனே ஆத்துமா என்னும் சார்வாகருள் ஒருசாரார் . |
இரணியகர்ப்பன் | பொன்முட்டையிலிருந்து பிறந்தவன் , பிரமன் . |
இரணியகன் | பொன்னுடையவன் . |
இரணியசிராத்தம் | பொன் கொடுத்துச் செய்யும் சிராத்தம் . |
இரணியதானம் | பொன்னைக் கொடையாகக் கொடுக்கை . |
இரணியநேரம் | அந்திநேரம் . |
இரணியம் | பொன் ; பணம் . |
இரணியமரம் | மரவகை . |
இரணியவேளை | காண்க : இரணியநேரம் . |
இரத்தக்கட்டி | புண்கட்டிவகை . |
இரத்தக்கட்டு | உதிரம் சுரக்கை . |
இரத்தக் கண்ணன் | கோபக் கண்ணுடையவன் . |
இரத்தக்கலப்பு | நெருங்கிய உறவு . |
இரத்தக்கவிச்சு | உதிர நாற்றம் . |
இரத்தக்கழிச்சல் | பேதிவகை . |
இரத்தக்கனப்பு | இரத்தக் கொழுப்பு . |
இரத்தக்காணிக்கை | போரில் இறந்த வீரரின் மைந்தர்க்குக் கொடுக்கும் மானியம் . |
இரத்தக்கிராணி | காண்க : இரத்தக்கழிச்சல் . |
இரத்தக்கொதி | துக்கம் முதலியவற்றால் உண்டாகும் இரத்தக் கொதிப்பு ; காமக் கிளர்ச்சி . |
இரத்தக்கொழுப்பு | இரத்த நிறைவு ; மதம் ; செருக்கு . |
இரத்தக்கோமாரி | மாட்டுக்கு வரும் இரத்தக்கழிச்சல் நோய் . |
இரத்தகம் | குசும்பாப்பூ ; சிவப்புச் சீலை . |
இரத்தகமலம் | செந்தாமரை . |
இரத்தகுமுதம் | செவ்வாம்பல் ; செந்தாமரை . |
இரத்தகைரவம் | செவ்வாம்பல் . |
இரத்தச்சிலந்தி | புண்கட்டிவகை . |
இரத்தச்சுரப்பு | இரத்த மிகுதி ; இரத்தவூறல் ; செருக்கு . |
இரத்தைச்சுருட்டை | சுருட்டைப் பாம்புவகை . |
இரத்தசந்தனம் | செஞ்சந்தனம் . |
இரத்தசந்தியகம் | செந்தாமரை . |
இரத்தசம்பந்தம் | காண்க : இரத்தக்கலப்பு . |
இரத்தசாகம் | செங்கீரை . |
இரத்தசாட்சி | சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுகை ; சத்தியத்தின் பொருட்டுக் கொல்லப்படுபவன் . |
இரத்தசாரம் | கருங்காலி . |
இரத்தசூறை | மீன்வகை . |
இரத்ததிருட்டி | சன்னிவகை . |
இரத்தந்ததும்புதல் | முகம் சிவந்து காட்டுதல் ; கோபத்தால் முகம் சிவத்தல் . |
இரண்டு | ' இரண்டு ' என்னும் எண் ; சில ; உகர எழுத்து ; மலசலம் . |
இரண்டுக்குப் போதல் | மலங்கழித்தல் . |
இரண்டுக்குற்றது | இதுவோ , அதுவோ என்னும் நிலை . |
இரண்டுங்கெட்டநேரம் | அந்திப்பொழுது . |
இரண்டுடை | இருவேறு வகையான ஆடை ; மாற்று உடை ; ' கருவேல் வெள்வேல் ' என்னும் உடைமரங்கள் . |
இரண்டுபடுதல் | வேறுபடுதல் ; ஒற்றுமையின்மை ; ஐயுறுதல் . |
இரண்டுவவு | மதி மறைவும் மதி நிறைவும் . |
இரண்டெட்டில் | விரைவில் . |
இரண்டை | கைம்பெண் . |
இரண்டொன்று | சில . |
இரணகள்ளி | கள்ளிவகை . |
இரணகளம் | போர்க்களம் ; பெருங்குழப்பம் . |
இரணகாளம் | போரை நிறுத்த ஊதும் எக்காளம் . |
இரணகெம்பீரம் | போரில் ஆரவாரித்தல் . |
இரணங்கொடுத்தல் | அடித்தல் . |
இரணங்கொல்லி | ஆடுதின்னாப்பாளை ; தும்பை . |
இரணசங்கம் | போர் வென்று ஊதும் சங்கு ; வெற்றுச் சங்கு . |
இரணசன்னி | புண்களால் உண்டாகும் சன்னி . |
இரணசிகிச்சை | காண்க : இரணவைத்தியம் . |
இரணசுக்கிரன் | கண்ணோய்வகை . |
இரணசூரன் | போர்வீரன் . |
இரணத்தொடை | காண்க : முரண்தொடை . |
இரணதூரியம் | காண்க : இரணபேரி . |
இரணபத்திரகாளி | துர்க்கை , போரில் வெற்றி தரும் கொற்றவை . |
இரணபாதகம் | கொலை ; நம்பிக்கைத் துரோகம் . |
இரணபாதகன் | கொலைத்தொழிற் கொடியோன் . |
இரணபேரி | போர்ப்பறை . |
இரணபேரிகை | போர்ப்பறை . |
இரணம் | கடன் ; போர் ; புண் ; பொன் ; மாணிக்கம் ; சுக்கிலம் ; பலகறை . |
இரணரங்கம் | போர்க்களம் . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
இரதி | இலந்தை ; காந்தன் ; விருப்பம் ; புணர்ச்சி ; மன்மதன் மனைவி ; பெண்யானை ; பித்தளை . |
இரதிக்கிரீடை | புணர்ச்சி . |
இரதிகன் | தேரோட்டுவோன் ; தேர்க்குரியவன் . |
இரதிகாதலன் | மன்மதன் . |
இரத்தபோளம் | ஒருவகை மணப்பண்டம் . |
இரத்தம் | உதிரம் ; சிவப்பு ; ஈரல் ; பவளம் ; குங்குமம் ; கொம்பரக்கு ; தாம்பிரம் . |
இரத்தமடக்கி | உதிரம் கட்டு மருந்து . |
இரத்தமண்டலம் | இரத்தம் பரவியிருக்கும் பகுதி ; செந்தாமரை . |
இரத்தமண்டலி | நச்சுப்பாம்பு வகை . |
இரத்தமாரணம் | காவிக்கல் . |
இரத்தமேகம் | காண்க : இரத்தவெட்டை . |
இரத்தல் | குறையிரத்தல் ; பிச்சை கேட்டல் ; வேண்டுதல் . |
இரத்தவடி | அம்மைநோய் . |
இரத்தவழலை | நச்சுப்பாம்புவகை . |
இரத்தவள்ளி | செவ்வள்ளி என்னும் வள்ளிக் கொடிவகை . |
இரத்தவிந்து | மாணிக்க வகையாகிய குருவிந்தம் . |
இரத்தவிரியன் | பாம்புவகை . |
இரத்தவீசம் | மாதுளை . |
இரத்தவுதிரி | மாட்டு நோய்வகை . |
இரத்தவெட்டை | இரத்தம் கலந்து மூத்திரம் வெளிப்படும் நோய்வகை . |
இரத்தவோட்டம் | இரத்தம் உடலெங்கும் செல்லுகை . |
இரத்தாசயம் | இதயம் . |
இரத்தாட்சி | அறுபதாண்டுக் கணக்கில் ஐம்பத்தெட்டாம் ஆண்டு . |
இரத்தாதிசாரம் | சீதபேதிவகை . |
இரத்தாம்பரம் | செவ்வாடை ; மரவகை . |
இரத்தி | இத்தி ; மரவகை ; இலந்தை . |
இரத்திரி | இத்தி ; மரவகை ; இலந்தை . |
இரத்தினகசிதம் | மணி இழைக்கப்பட்டது . |
இரத்தினகம்பளம் | சித்திரக் கம்பளம் . |
இரத்தினகம்பளி | சித்திரக் கம்பளம் . |
இரத்தினச்சுருக்கம் | சில சொற்களால் பெரும் பொருளை விளக்குதல் :அழகுறச் சுருங்கியது . |
இரத்தினசபை | திருவாலங்காட்டில் நடராசர் எழுந்தருளியிருக்கும் மணியம்பலம் . |
இரத்தினசிரசு | 393 சிகரங்களையும் 50 மேல்நிலைக் கட்டுகளையுமுடைய கோயில் . |
இரத்தினத்திரயம் | சமண சமயத்தார் போற்றும் மும்மணிகள் ; அவை : நல்லிறவு , நற்காட்சி , நல்லொழுக்கம் . |
இரத்தினதீவம் | இலங்கை . |
இரத்தினப்பிரத்தம் | கைலாயத்தின் தாழ்வரை . |
இரத்தினப்பிரபை | ஏழு நரகத்துள் ஒன்று ; மகளிர் அணிவகையில் ஒன்று . |
இரத்தினப்பரீட்சை | அறுபத்து நான்கு கலையுள் மணிகளின் இயல்பறியும் வித்தை . |
இரத்தினம் | மணி ; அரத்தை . |
இரத்தினமாலை | மணிவடம் . |
இரத்தினாகரம் | மணிகளுக்கு இருப்பிடமானது ; கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடல் . |
இரத்தினி | பிடிமுழம் ; முன்கைப் பேரெலும்பு . |
இரத்துதல் | காண்க : இரற்றுதல் . |
இரத்தை | சத்திமூர்த்தங்களுள் ஒன்று ; மஞ்சிட்டிவேர் . |
இரத்தோற்பலம் | செங்குவளை ; செந்தாமரை . |
இரதகம் | இத்திமரம் . |
இரதகுளிகை | காண்க : இரசகுளிகை . |
இரதசத்தமி | மாசிமாதத்து வரும் வளர்பிறை ஏழாம் நாள் . |
இரதசப்தமி | மாசிமாதத்து வரும் வளர்பிறை ஏழாம் நாள் . |
இரதபதம் | புறா . |
இரதபந்தம் | சித்திரகவிவகை , தேர்போல அமையும் பாட்டு . |
இரதபரீட்சை | தேர் செலுத்தும் கலை , அறுபத்துநான்கு கலையுள் ஒன்று . |
இரதம் | புணர்ச்சி ; தேர் ; பல் ; சாறு ; அன்னரசம் ; சுவை ; இனிமை ; வாயூறு நீர் ; வண்டு ; பாதரசம் ; இரசலிங்கம் ; பாவனை ; அரைஞான் ; மாமரம் ; கால் ; உடல் ; வஞ்சிமரம் ; வாகனம் ; எழுதுவகை ; அனுராகம் ; நீர் ; ஏழு தாதுக்களுள் ஒன்று ; வலி ; நஞ்சு ; இத்தி . |
இரதரேணு | பரமாணு நான்கு கொண்ட நீட்டலளவை . |
இரதன் | கண் ; கிளி . |
இரதனம் | அரைஞாண் . |
இரதனை | அரத்தை ; நா . |
இரதாங்கம் | தேர்க்கால் ; சக்கரவாகப் புள் . |
இரதாரூடன் | தேரூர்வோன் ; தேர் செலுத்துவோன் . |
இரத்தநரம்பு | இரத்தக் குழல் . |
இரத்தப்பலம் | ஆலமரம் ; ஆலம்பழம் . |
இரத்தப்பழி | கொலை ; கொலைக்குக் கொலை . |
இரத்தப்பிரமேகம் | காண்க : இரத்தவெட்டை . |
இரத்தப்பிரவாகம் | உதிரப் பெருக்கு . |
இரத்தப்பிரியன் | கொலை விருப்புடையோன் . |
இரத்தப்புடையன் | பாம்புவகை . |
இரத்தப்பெருக்கு | காண்க : இரத்தப்பிரவாகம் . |
இரத்தபலி | உதிர நைவேத்தியம் ; கொலை . |
இரத்தபலை | கோவைப்பழம் . |
இரத்தபாரதம் | சாதிலிங்கம் . |
இரத்தபிண்டம் | சீனமல்லிகை . |
இரத்தபித்தம் | உதிரம் கெட்டொழுகும் ஒரு நோய் ; ஆடாதோடை . |
இரத்தபிந்து | வயிரக் குற்றவகை ; இரத்த விந்து . |
இரத்தபீனசம் | மூக்கிலிருந்து இரத்தம் காணும் நோய் . |
இரத்தபூடம் | முள்ளிலவு . |
சொல்
|
அருஞ்சொற்பொருள்
|
இரவுத்திரம் | காண்க : இரௌத்திரம் . |
இரவுத்திரியம் | சிவதீக்கை . |
இரவுபகல் | இராக்காலமும் பகற்காலமும் |
இரவுரவம் | காண்க : இரௌரவம் |
இரவெரி | சோதி விருட்சம் , இரவில் ஒளிமயமாக விளங்குகின்ற ஒரு மரவகை . |
இரவேசு | தளிர் வெற்றிலை . |
இரவை | நுட்பமான பொருள் ; கோதுமைக் குறுநொய் ; வயிரம் ; துப்பாக்கியில் இடும் ஈயக்குண்டு . |
இரவைக்கு | இராப்பொழுதுக்கு . |
இரவைசல்லா | மெல்லிய துணி . |
இரவோன் | இரவலன் ; சந்திரன் . |
இரளி | கொன்றை . |
இரற்றுதல் | அரற்றுதல் ; பேசலால் எழும் ஒலி ; ஒலித்தல் ; சத்தமிடுதல் . |
இரா | இரவு |
இராக்கடைப்பெண்டிர் | பொதுமகளிர் |
இராக்கதம் | எண்வகை மணங்களுள் ஒன்று , தலைமகளை வலிதிற் கொள்ளும் மணம் . |
இராக்கதன் | அரக்கன் |
இராக்கதி | அரக்கி ; சன்னக் கச்சோலம் |
இராக்கதிர் | சந்திரன் . |
இரதித்தல் | காண்க : இரசித்தல் . |
இரதிபதி | காண்க : இரதிகாதலன் . |
இரதோற்சவம் | தேர்த்திருவிழா . |
இரந்திரம் | துளை ; வெளி ; ஜன்மலக்கினம் ; இரகசியம் ; சுருங்கை . |
இரந்துண்ணி | பிச்சைக்காரன் . |
இரந்தை | காண்க : இலந்தை . |
இரப்பாளன் | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
இரப்பாளி | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
இரப்பான் | பிச்சையெடுப்பவன் ; இரவலன் . |
இரப்பு | வறுமை ; பிச்சை ; யாசிக்கை . |
இரப்புணி | காண்க : இரந்துண்ணி . |
இரம்பக்கல் | குருந்தக்கல் . |
இரம்பம் | கத்தூரி விலங்கு ; மரமறுக்கும் வாள் . |
இரம்பிகம் | மிளகு . |
இரம்பிலம் | மிளகு . |
இரம்பை | இரம்பம் ; கத்தூரி விலங்கு ; தேவருலகப் பெண்டிருள் ஒருத்தி . |
இரம்மியம் | மகிழ்ச்சி தருவது ; விரும்பத்தக்கது ; அழகிது . |
இரமடம் | பெருங்காயம் . |
இரமணம் | இன்புறச் செய்கை ; இன்பம் விளைப்பது ; கழுதை ; காமசேட்டை ; சுரதவிளையாட்டு . |
இரமணன் | கணவன் ; தலைவன் ; மன்மதன் . |
இரமணியம் | இன்பஞ்செய்வது ; சரச விளையாட்டு . |
இரமணீயம் | இன்பஞ்செய்வது ; அழகுள்ளது . |
இரமதி | காகம் ; காமி ; காலம் ; மன்மதன் . |
இரமா | திருமகள் ; இன்பந்தருபவள் . |
இரமாப்பிரியம் | தாமரை . |
இரமாபதி | திருமால் . |
இரமித்தல் | மகிழ்தல் ; புணர்தல் . |
இரமியம் | மனநிறைவு ; அழகு . |
இரமியவருடம் | உலகின் பகுதிகளுள் ஒன்று , ஒன்பான் கண்டத்துள் ஒன்று . |
இரமை | திருமகள் ; செல்வம் ; மனைவி . |
இரலை | கலைமான் ; புல்வாய் ; துத்தரி என்னும் ஊதுகொம்பு ; அசுவினி நாள் . |
இரவச்சம் | மானந்தீரவரும் இரத்தலுக்கு அஞ்சுகை . |
இரவணம் | ஒட்டகம் ; குயில் ; வண்டு ; கழுதைகத்துகை ; வெண்கலம் ; பரிகாசம் பண்ணுதல் ; வெப்பம் . |
இரவதம் | குயில் . |
இரவம் | ஒலி ; இருள்மரம் . |
இரவரசு | சந்திரன் . |
இரவல் | யாசகம் ; திருப்பித் தருவதாகக் கொண்ட பொருள் . |
இரவலன் | பரிசில் விரும்புவோன் ; யாசகன் . |
இரவாளன் | பரிசில் விரும்புவோன் ; யாசகன் . |
இரவற்குடி | குடிக் கூலியின்றிக் குடியிருக்கும் குடும்பம் ; அடுத்து வாழுங் குடும்பம் . |
இரவற்சோறு | பிறரைச் சார்ந்து பிழைக்கும் பிழைப்பு ; ஒட்டுண்ணிப் பிழைப்பு . |
இரவறிவான் | சேவற்கோழி . |
இரவன் | சந்திரன் . |
இரவி | சூரியன் ; மூக்கின் வலத்தொளை ; மலை ; எருக்கு ; வாணிகத் தொழில் . |
இரவிக்கை | முலைக்கச்சு ; மாதர் உடைவகை . |
இரவிகன்னம் | பூமிக்கும் சூரியனுக்குமுள்ள தொலைவு . |
இரவிகாந்தம் | சூரியகாந்தக்கல் ; தாமரை . |
இரவிகுலம் | சூரியமரபு . |
இரவிகேந்திரம் | அணித்தான பாதையில் வரும் சூரியனுக்கும் கோளுக்கும் உள்ள தொலைவு . |
இரவிநாள் | இரேவதி நாள் . |
இரவிமது | வெள்ளி . |
இரவிமைந்தர் | அசுவினிதேவர் . |
இரவில்திரிவோன் | அரக்கன் . |
இரவிவாரம் | ஞாயிற்றுக்கிழமை . |
இரவிவிக்கேபம் | கிரகணத்தில் சூரியன் சாய்வு வழியில் இருத்தல் . |
இரவு | இராத்திரி ; மஞ்சள் ; இருள்மரம் ; இரத்தல் ; இரக்கம் ; பன்றிவாகை . |
இரவுக்குறி | இரவிலே தலைவனும் தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம் . |
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.