கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 30 அக்டோபர், 2013

பகுபத உறுப்புகள்

பகுபத உறுப்புகள்

பகுதிவிகுதியாகப் பிரிக்கப்படும் சொல்லில் பல உறுப்புகள் இருக்கும்.அவற்றைப் பகுபத உறுப்புகள் என்று கூறுவர்.

(.காவந்தனன்

இது ஒரு பகுபதம்இந்தச் சொல்லை,
வா+த்(ந்)+த்+அன்+அன்

என்று பிரிக்கலாம்இந்தச் சொல்லில் ஐந்து பிரிவுகள் உள்ளனஇவைஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர்கள் உள்ளனஇந்தப் பெயர்களைத் தான்பகுபத உறுப்புகள் என்று பொதுவாகக்கூறுகிறோம்.பகுதி,விகுதி,இடைநிலை,சாரியை,சந்தி,விகாரம்
என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.

· பகுதி
ஒரு பகுபதத்தின் முதலில் இருப்பது பகுதி எனப்படும்பகுபதத்தில் உள்ள பகுதிபொருள் உடையதாக இருக்கும்.

(.காவந்தனன்

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் வா என்பது பகுதி ஆகும்வா என்னும் பகுதிக்கு வா என்று அழைக்கும்பொருள் இருக்கிறதுஎனவே இது பகுதி ஆகும்.

· விகுதி

பகுபதத்தில் இறுதியில் இருக்கும் உறுப்பு விகுதி எனப்படும்விகுதி என்றால்இறுதி என்று பொருள்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இறுதியில் உள்ள அன் விகுதி ஆகும்.

· இடைநிலை

பகுபதத்தில் இடையில் இருக்கும் உறுப்பு இடைநிலை எனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இடையில் இருக்கும் உறுப்பாகிய த் இடைநிலை ஆகும்.

· சாரியை

பகுபதத்தில் இடைநிலைக்கும்விகுதிக்கும் இடையில் வருவது சாரியைஎனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் இருக்கும் அன் என்பதுசாரியை ஆகும்.

· சந்தி

பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வருவது சந்தி எனப்படும்.

வா+த்(ந்)+த்+அன்+அன்

இதில் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் உள்ள த்(ந்சந்தி ஆகும்.

· விகாரம்

பகுபத உறுப்புகளில் ஏற்படும் மாறுதல்கள் விகாரம் எனப்படும்விகாரம்என்றால் மாறுபாடு என்று பொருள்.
வா+த்(ந்)+த்+அன்+அன்



இதில் சந்தியாக இடம் பெற்றுள்ள த் என்னும் எழுத்து ந் ஆக மாறியுள்ளது.பகுதியாக இடம் பெற்றுள்ள வா என்னும் எழுத்து ‘’ என்று மாறியுள்ளது.இவ்வாறு மாறுபட்டு வருவது விகாரம் எனப்படும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;