காலையில் கடவுளை வணங்குக!
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
நாள் அந்தி, கோல் தின்று கண் கழீஇத், தெய்வத்தைத்
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி. 9
தான் அறியுமாற்றால் தொழுது எழுக! அல்கு அந்தி
நின்று தொழுதல் பழி. 9
நாள் அந்தி - சிறுகாலையில்
கண் கழீஇ - கண் கழுவி
கண் கழீஇ - கண் கழுவி
விடியற்காலையில் பல் சுத்தம் செய்து, கண் கழுவி கடவுளை வணங்கித் தொழ வேண்டும். பின் நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொடங்க வேண்டும். மாலையில் கடவுளை வணங்குதல் குற்றமாகும்.
நீராட வேண்டிய சமயங்கள்
(பஃறொடை வெண்பா)
தேவர் வழிபாடு, தீக் கனா, வாலாமை,
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்! 10
உண்டது கான்றல், மயிர் களைதல், ஊண் பொழுது,
வைகு துயிலோடு, இணைவிழைச்சு, கீழ் மக்கள்
மெய் உறல், ஏனை மயல் உறல், - ஈர்-ஐந்தும்
ஐயுறாது, ஆடுக, நீர்! 10
தீக்கனா - தீய கனவைக் கண்டபோது
நீர் ஆடுக - நீராடல் செய்க
நீர் ஆடுக - நீராடல் செய்க
தெய்வத்தை வழிபடும்போதும், தீய கனவைக் கண்டபோதும், தூய்மை குன்றிய காலத்தும், வாந்தி எடுத்த போதும், மயிர் களைந்த போதும், உண்ணும் பொழுதும், பொழுதேற உறங்கிய விடத்தும், புணர்ச்சியான காலத்திலும், கீழ் மக்கள் தீண்டிய போதும், மலசலங் கழித்த காலத்தும் நீராட வேண்டும்.
பழைமையோர் கண்ட முறைமை
இன்னிசை வெண்பா
உடுத்து அலால் நீர் ஆடார்; ஒன்று உடுத்து உண்ணார்;
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே
முந்தையோர் கண்ட முறை. 11
உடுத்த ஆடை நீருள் பிழியார்; விழுத்தக்கார்
ஒன்று உடுத்து என்றும் அவை புகார்; - என்பதே
முந்தையோர் கண்ட முறை. 11
விழுத்தக்கார் - சிறப்பு பொருந்தியவர்
அவைபுகார் - அவையின்கண் செல்லார்
அவைபுகார் - அவையின்கண் செல்லார்
நீராடும் போது ஓர் ஆடையும், உண்ணும் போது இரண்டு ஆடையும் அணியாமல் இருக்கக் கூடாது. நீரில் ஆடையை பிழியமாட்டார். ஒரு ஆடை உடுத்தி அவையின்கண் செல்லக்கூடாது. இது பழையோர் கண்ட முறைமையாகும்.
செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
தலை உரைத்த எண்ணெயால் எவ் உறுப்பும் தீண்டார்;
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து. 12
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார்; செருப்பு,
குறை எனினும், கொள்ளார், இரந்து. 12
மாசுணியும் - அழுக்காடையும்
கொள்ளார் - காலில் அணிய மாட்டார்
கொள்ளார் - காலில் அணிய மாட்டார்
தலையில் தேய்த்த எண்ணெயினால் யாதொரு உறுப்பையும் தீண்டக்கூடாது. பிறர் உடுத்திய ஆடையும், பிறர் தொட்ட செருப்பும் அணிந்து கொள்ள கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.