கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

புதன், 14 டிசம்பர், 2011

பழமொழி நானூறு-3

'அரையனார்' என்னும் சொல்லால் இவரை அரச
குடியினர் என்று கூறலாம். முன்றுறை என்பது 
 கடல் மற்றும் ஆற்றின் கரைகளில், மக்கள் 
நீராடவும் மற்றும் படகு, வள்ளம் போன்றவற்றில் 
சென்று வரவும் வசதியாக அமைந்த துறைகளையே 
'முன்றுறை' என்பார்கள். கொற்கை முன்றுறை, 
கழார் முன்றுறை, காவிரி முன்றுறை, வையைக் 
கரையின் திருமருத முன்றுறை என்று பல 
முன்றுறைகளைப் பற்றி இலக்கியங்கள் குறிப்பிடு
கின்றன. இவற்றுள் ஒன்றைச் சேர்ந்த பகுதியில் 
பிறந்தவர் இவராகலாம்.

இந்நூலின் அமைப்பிலே பயின்று வரும் 
சொற்க
ளையும் கருத்துக்களையும், பழமொழிகளையும் 
கருத்திற் கொண்டால், இவரைத் தென்பாண்டி 
நாட்டின் சீர்மிகு பழம் புலவருள் ஒருவர் எனலாம். 
சமண சமயக்கோட்பாடுகளில் அழுத்தமான பற்றி
னர் என்றும் அறியலாம்.

முதலிரண்டு அடிகளில் தாம் சொல்லக் கருதுகின்ற 

உண்மையை அமைத்தும், செய்யுளின் இறுதியில் 
 அதற்கேற்றதும் அவ்வுண்மையை வலியுறுத்துவது
மான பழமொழியை அமைத்தும், இந்நூற் செய்யுட்
களை இவர் அமைத்துள்ளார். ஒரு சில செய்யுட்
களில் மட்டுமே இரண்டு பழமொழிகளைச் சேர்த்து
ள்ளார்.

'நானூறு' என்னும் தொகையமைப்பு புறநானூறு, 

அகநானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை 
நானூறு என்னும் தொகை நூல்களுள் நிலவும், 
நானூறு செய்யுட்கள் என்னும் தொகுப்பு மரபைத் 
தழுவியதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;