கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

நற்றிணை-1


அழுந்துபட வீழ்ந்த“ எனத் தொடங்கும் பெரும்பதுமனார்
பாடல் (நற்றிணை - 2)


 பெரும்பதுமனார்
மீளிப் பெரும்பதுமனார் என்றும் இவர் 
வழங்கப்படுகிறார். பாலைத்திணை
யைச் சிறப்பாகப் பாடியவர். திருமண
த்துக்கு முன்னர், தலைவியின் சிலம்
பைக் கழற்றி நீக்கும் சிலம்புகழி 
நோன்பு என்னும் வழக்கம் இருந்ததை 
இவர் பாடலால் உணர்கிறோம்.

திணை : பாலை

கூற்று
உடன்போக்கில் செல்லும் தலைவனையும் 
தலைவியையும் இடைச்சுரத்தில் கண்டோர் 
தமக்குள் சொல்லிக் கொண்டது.

(உடன்போக்கு : தோழியின் தூண்டுதலால் 
தலைவியை மணந்து கொள்வதற்காகத் 
தலைவன் அவளைப் பிறர் அறியாமல்
அழைத்துச் செல்லுதல். சுரம் : பாலைவழி)
கண்டோர் கூறுவது : ‘பெரிய குன்றம் ; 
தழைத்த ஈச்ச மரங்கள் நிறைந்த காடு ; 
காற்றுச் சுழன்றடிக்கிறது. புலிக்குட்டிகள் 
வழிச் செல்வோரின் தலைகளை மோதிச்
சிதறிச் சிவந்த தலையும் குருதி படிந்த 
வாயுமாகக்காட்சி தருகின்றன. மாலைப் 
பொழுதில் அவை தாம் பதுங்கியுள்ள 
மரலின்     தூறுகளைப் பார்த்துக்
கொண்டிருக்கின்றன. வழிநெடுக 
இண்டங்
கொடிகளும் ஈங்கையும் பரவிக் கிடக்கின்றன. 
 இத்தகைய கொடிய பாலை வழியில், 
இரவில், இந்த இளம்பெண்ணை முன்னே 
 நடக்கவிட்டுப் பின்செல்லும் இந்தத் 
தலைவனின் உள்ளம் கொடியது; வேகக்
காற்றுடன் மழைபெய்யும் போது பாறை
களைப் புரட்டி விடுகின்ற இடியைவிட மிகக்
 கொடியது இவன் உள்ளம்.’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;