158 | ஊறி யாவது முணராயுறல்வகை யிதுவென வுரைத்தி கூறு வேனெனக் கூறாய்குரன்முர சனையதோர் குணத்தை செற லுள்ளமு மில்லையாய்த்திருமலர் மிசையடி யிடுதி தேறு மாறென்னை நின்னைத்தேவர்தந் தேவர்க்குந் தேவா. |
159 | கண்ணி னாலொன்றும் காணாய்காணவு முளபொரு ளொருங்கே பெண்ணு மல்லவுஞ் சாராய்பிரிதலில் போ¢ன்ப முடையை யுண்ணல் யாவது மிலையாயொளிதிக ழுருவம· துனதா லெண்ணில் யார்நினை யுணர்வா ரிறைவர்தம் மிறைவர்க்கு மிறைவா. |
160 | சொற்றி யாவதுங் கேளாய்சுதநயந் துணிவுமங் குரைத்தி கற்றி யாவது மிலையாய்க்கடையில்பல் பொருளுணர் வுடையை பற்றி யாவது மிலையாய்ப்பரந்தவெண் செல்வமு முடையை முற்ற யார்நினை யுணர்வார்முனைவர்தம் முனைவர்க்கு முனைவா. |
161 | அன்மை யாரவர் தாந்தாமறிந்தன வுரைத்த பொய்யாக்கி நின்மெ யாகிய ஞானநிகழ்ச்சி நீவிரித் துரைத்த சொன்மை யாரிடை தெரிந்தார்தொடர்வினை முழுவதுஞ் சுடுநின் றன்மை யார்பிற ரறிவார்தலைவர்தம் தலைவர்க்குந் தலைவா. |
162 | ஆதி யந்தளப் பரிய அருகந்த பகவர்த மறஞ்சால் சேதி யம்புக்க வர்தந்திருந்தடி களைப்பெருந் துதிசேர் போதி யிற்பணிந் திருந்தாள்புன்னெறி தாம்பல வவற்றுள் யாதுகொ றான்மு னென்னாலடர்க்கற் பாலது வென்றாள். |
163 | ஊன்றின்ற லிழுக்கென்னானுயிரினையு முளதென்னா னோன்றலையு நோன்பென்னானோக்குடைய கணிகையரே போன்றிருந்து பொதியறுக்கும்புத்தன்றன் புன்னெறியை யான்சென்ற· தடிப்படுப்பறைக்கரும மிதுவென்றாள். |
164 | மண்டலத்தி னோக்குவாள்யடுத்ததன தவதியால் கண்டனடான் காம்பிலிக்காவலன் கடைமுகத்தோர் தண்ட¨¡ய பொழில்நாவற்சாகைநட் டுரைபெறாக் குண்டலகே சிப்பெயரைக்குறியாக வேகொண்டாள். |
165 | தருமத்திற் றிரிவில்லாடயாச்செய்தற் பொருட்டாக நிருமித்த வகையினதாநெடுநகரை வலஞ்செய்து திருமுத்தப் பீடிகைக்கட்சித்தரையுஞ் சிந்தித்தோர் பெருமுத்தப் பெண்ணுருவங்கொண் டியைந்த பெற்றியளாய். |
166 | அந்தரமே யாறாச்சென்றழனுதிவே லரசர்கட் கிந்திரனே போன்றிருந்தவிறைமகன திடமெய்திக் கந்திருவ மகளேன் யான்காவலனைக் காண்குறுவேன் வந்திருந்த துரைவிரைந்து வாயிலோ யெனச்சொன்னாள். |
167 | கருங்களிறுங் களிமாவுங் கந்தோடு பந்தியவே நெருங்குபுபோய் நீருண்ணாதேர்பண்ணா நெடுங்கடைக்குப் பெரும்படையுஞ் சாராதிப் பெண்பாவி மரநட்டிங் கிருந்ததன் றிறத்தினாலெனக்கரிது புகலென்றான். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.