கலைக்கழகம்-தமிழ்

தயவு செய்து எங்களுடைய கலைக்கழகத்தினையும் அதன் மற்றைய பகுதி தொடர்தளங்களையும் யாரும் சொந்தம் அல்லது உரிமை கொண்டாடவேண்டாம் உ தாரணம் http://www.similarsites.com/site/dhushyanthy.blogspot.in ,kalaikalakam-tamil .blogspot.uk kalaikalakam-tamil blogspot.in kalaikalakam-tamil.blogspot.ca இவர்கள் யாவரும் பொய்யானவர்கள் இவர்கள் எங்களுடைய கலைக்கழகத்திற்கு உரிமையானவர்கள் அல்ல இதற்கு பிறகும் இதனைப்போல யாராவது உரிமை கொண்டாடினாலோ அல்லது ஏதாவது எங்களுடைய தளங்களுக்கு தடைகள்,ஊறுகள்,தீமைகள் செய்தாலோ அவர்கள் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் அத்துடன் இத்தளம் ஜேர்மனியில் இருந்து வெளிவருகிறது அன்புடன் கலைக்கழகங்களின் நிர்வாகி

கலைக்கழகம் -தமிழ்

கலைக்கழகம் -தமிழ்

திங்கள், 18 ஜூன், 2012

நீலகேசி, -31

188ஊடுபுக் குயிரடுந் துயரந்தா னொழிக்கின்றான்.
வீடுபெற் றிறந்தனனேல் விளிகவன தருள்பாவி
யோடுகிற் றிலனொன்றுந் தாதையையே யுழப்பித்தோ
னாடைபற் றெனவுரைத்த வவன்போன்றா னாகாதோ.


189அங்கிருவ ருளரன்றோ வறப்போக்கிப் போவாரென்
றிங்கிருந்து நீயஙரைத்தா லிவனருள்யார் தெளிகிற்பார்
அங்கிருவ ருளரெனினு மவரின் முன் னவையீரே
நங்கரும முலைப்பித்து நாம்போது மெனநக்காள்.


190முன்கொன்றான் றன்றாயைமுழுமெய்யும் போர்த்திருந்து
தின்கின்றான் பிணம்வீடுந்தெருட்டுங்காற் சூனியமே
யென்கின்றா னிவன்போல்வாரிறைவரில் லெனவுரைப்பாய்
தன்கன்று சாக்கறப்பான்றயாப்பிறிதிற் குடையவனோ.


191கண்ணொடுகா திவையிலள்கரந்தன முலையிரண்டு
முன்னும்வா யுதட்டோடுமூக்கில ளுறுநோய்த்தி
பெண்ணழகிற் கிவள்பிறராற்பேசவும் படுவாளோ
எண்ணுங்கா லென்பேதையெனவுரைக்கு மவனொத்தாள்.


192பருவரலொன் றிலன்றாயைப்பழுப்பறித்தான் தலைவனிவள்
கருவரைமேற் றன்கணவன்காலனையுங் கவிழ்த்திட்டாள்
இருவரையும் போல்வாரிவ்விருநிலத்தின் மேலெங்கும்
பெருவழியார் பேரருளார்பிறர்யாரே யெனநக்காள்.


193ஒண்ணுதலா யுன்றலைவனொழிவின்றி யுணர்கலான்
கண்முதலா வுரையவிக்கருவியிற் கண்டுகேட்
டெண்ணியு முணர்தலாவிலைசுமக்கு மொருவன்போ
னுண்ணுணர்வு தனக்கில்லானுரைத்ததுதா னூலாமோ.


194ஐங்கந்த மெனல்பிழைப்பா மறிவினின்வே றாதலாற்
சிங்குந்தன் குறியுழப்புச்செய்கையென் றிவைமூன்று
மிங்கொன்று முருவினோடிரண்டென்னாய் மிகவுரைத்தாய்
சங்கந்தா மல்லவேற்றத்துவமுந் தலைப்பட்டாய்.


195முன்னைத்தன் முழுக்கேடுமுழுக்கேட்டின் வழித்தோன்றும்
பின்னைத்தன் பிறிதறிவும்பெயர்த்துரைத்தல் பெரும்பேதாய்
என்னொக்கு மெனினெருநலிற்புகுந்தா னிடையிராத்
தன்னைத்தந் தெனைக்கொண்டுதான்சென்றா னெனலன்றோ.


196கள்ளனுந் தானேயாய்க்கையாப்புண் டவனேபோ
லுள்ளந்தா னின்றவற்றை யுணர்ந்தவற்றோ டறக்கெட்டிங்
கெள்ளனைத்து மில்லென்றாலிறப்பறித லெவனாகுந்
தெள்ளியாய் தெளிந்திருந்துசிந்தித்துக் காணாயோ.


197கோன்பட்டான் குந்தத்தாற்கத்துண்டா னேனாதி
தான்பட்டான் றளவீரன்தப்பியோ டவனருகே
யான்பட்டே னென்பவன் போல்யாத்திருந்தே சொல்லுதியால்
தான்பட்டான் பட்டார்க்குத் தன்பாட்டை யுரைக்குமோ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

#160;