198 | பிறைப்பிறப்பும் பிள்ளைகடம்பிறப்பினையு மெடுத்துரைப்பின் மறைபொருள்கள் வெளிப்பட்டாமன்னுந்தாங் கருதுபவால் குறையென்னை வான்வயிற்றாற்குண்டலமா கேசியித் தறையகத்துப் பிறப்புரைத்தாள்றத்துவமாக் கொள்வாமோ. |
199 | பின்னசந் தானமும் பிறிதில் சந் தானமு மின்னவென் றிரண்டுரைத்தெத்துணையோ பொழுதோதிச் சொன்னதன் பொருளெல்லாஞ்சுவடின்றி யறக்கெடுத்தற் கன்னதே யெனிலாதனாழிநாட் டாகாதோ. |
200 | எண்ணிலாப் பலகந்த மிடையறா வென்றுரைப்பிற் கண்ணுறா தொன்றுதலாற்கலப்பிலவா மாகவே திண்ணிதா மிடையறவுதீண்டுமேற் றிரண்டொன்றா அண்ணறான் முடிந்தறக்கே டரியதே போலுமால். |
201 | வாசனையி னாமெனினும் வழியதனின் முதலதொன் றாசனைத்து மில்லையே லறிந்துரைப்பு மரிதரோ பேசினைநீ உளதெனினும் பெருந்தாமத் துண்ணூல்போல் லோசனையி னெடியதோ ருயிருரைத்தா யாகாயோ. |
202 | பாதிரிப்பூப் புத்தோடு பாழ்ப்பினுந்தான் பல்வழியும் தாதுரித்தாங் கேடின்மை யென்பதுநுன் றத்துவமோ போதுரைத்த வோடுநீர் போலுடம்பு பொன்றிடினும் மூதுரைத்த வாசம்போன் முடிவுயிர்க்கே யாகாதோ. |
203 | சத்திதான் சென்றதே யென்றியே லைந்தன்றிப் பொத்திநீ யுரைக்கின்ற பொருளோடா றாகாவோ சத்திதா னதுவன்றி யைந்துமே யாயினும் பித்தியாய் முழுக்கேடு பேசினா யாகாயோ. |
204 | அலைபலவே யுரைத்தாளென்றருகிருந்தோர் கருதுதலுந் தலைவனூல் பொருணிகழ்ச்சிதங்கண்மேற் குற்றங்க ணிலைபெற வுரைத்தின்மைநிறுத்துவன்யா னென்றுதன் தலைவனீ பொருள்களேதானாட்ட லுறவினால். |
205 | கண்கொடுத்தான் றடிகொடுத்தான்கயப்புலிக்குத் தற்கொடுத்தான் பெண்கொடுத்தா னுடம்பினையும் பிளந்திட்டுப் பிறர்க்கீந்தான் மண்கொடுத்தான் மகக்கொடுத்தான்மன்னுந்தற் சேர்ந்தார்க்கு விண்கொடுத்தா னவன்கொடுத்த விரித்துரைப்பன் கேளென்றாள். |
206 | ஏதி லாரிடர் தீர்க்கு மெமவிறை சாத கம்மிவை யென்று தலைத்தலை யோகி னாணின் றொருபக லெல்லையுங் கோதை வார்குழற் குண்டல கேசியே. |
207 | நூலு நாரு மிசைத்தன வொத்தலா னீல கேசி நெடுங்க ணாள்சொல்லு மாலும் பேயு முடையவர் செய்கையே போலு நீ சொன்ன புத்தர் சரிதையை. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.